Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை -8

நெஞ்சை கொய்த வதுகை -8

அத்தியாயம்-8

  ஜனனி லேசாய் நடுங்கியபடி காரில் சம்ருதி மடியில் படுத்திருக்க, சம்ருதி ஜனனியின் தலை கோதினாள்.

  வசந்த் ஜன்னல் பக்கம் திரும்பியவன் வாய் மட்டும் ஓயாது, நேத்து என்னால பிரச்சனைன்னு சொன்ன. இன்னிக்கு நீயா தான் தண்ணீல விழுந்த. ஆனா இதுக்கும் என் மேல் பழிப்போடாத. கடைசி இருபது நிமிஷம் அப்சட், மத்தபடி இன்னிக்கு நீ நல்லா சந்தோஷமா இருந்த. யோசித்து பாரு ஜனனி.
 
   இப்படி இரண்டு நாள்ல டெய்லி முகம் தூக்கிட்டு இருந்தா எப்படி? சூடா சூப் குடிக்கிறியா?” என்று கேட்டு தங்கையை தாங்கினான்.

  “நான் ரூமுக்கு போயிட்டு சூப் ஆர்டர் பண்ணிடறேன்.” என்று முடித்து கொண்டாள் ஜனனி.‌

   விகர்த்தனன் கண்ணாடி வழியாக ஜனனியை ஏறிட்டான்.‌ சம்ருதியை பார்த்து “வசந்த் சொல்லறது நியாயம் தானே ஜனனி. கால் ஸ்லிப் ஆகலைன்னா இந்த நாள் இனிய நினைவுகளை தானே சுமந்திருக்கும்” என்று தன் பங்கிற்கு உரைத்திட ஜனனி பதில் பேசவில்லை.

அமைதியான பயணமாக கழிய, ஹோட்டல் வந்ததும் வரிசையாக இறங்கினார்கள்.

இலக்கியன் காரை விட்டு விட்டு விகர்த்தனனை காண, “சார் ஏதும் பிரச்சனையில்லையே” என்று கேட்டதற்கு, “பிரச்சனை வரவே கூடாதுன்னு நாம தடுக்க முடியாது இலக்கியன். பிரச்சனை வந்தா எப்படி தீர்க்கறதுன்னு யோசிக்கணும். நான் ஆல்ரெடி சில விஷயங்கள் யோசித்து தான் வச்சிருக்கேன்.‌ எனிவே தேங்க்ஸ்” என்று கைகுலுக்க, “நான் ஜஸ்ட் டிரைவர் சார். நீங்க சொன்னதை செய்வேன். வர்றேன் சார்” என்று நன்றியுணர்வோடு கடந்தான்.

ஜனனியை சம்ருதியும் வசந்தும் அழைத்து சென்றதில் தனியாக, விகர்த்தனன், லிப்டில் வந்து சேர்ந்தவன் கால்கள் ஜனனியை தேடி தான் வந்தது.

வசந்த் தங்கைக்காக போனில் சூப்பை, ஆர்டர் செய்திருந்தான்.‌ சம்ருதி விகர்த்தனன் வந்ததும் அறையை விட்டு வெளியேறினாள்.

நீரில் அவன் தீண்டிய கணமெல்லாம், அவன் அருகாமையை நேசித்து விட்டதால் அவள் அவனை தவிர்க்க நினைத்தாள்.

ஜனனி மற்றும் விகர்த்தனன் மட்டும் அறையில் பேசினார்கள்.

சூப் வந்ததும் வசந்த் கொண்டு வர, “யோசிம்மா… அட்லீஸ்ட் இங்க இருக்குற வரை நேரத்தை இனிமையா செலவு பண்ணுவோம்.” என்று கூறியவன் வசந்தை கண்டு, “உங்கண்ணா வசந்த் சூப் எல்லாம் ஆர்டர் பண்ணிருக்கான். முதல்ல குடி.” என்று நகர்த்தினான்.‌

‘என்னை விட என் தங்கச்சியிடம் நல்லா பழகறான்.‌ பேசாம இவனுக்கு தங்கையா இவ பிறந்திருக்கலாம். நான் சிங்கிள் சைல்டா இருந்திருக்கணும். இந்நேரம் இவளுக்கு கல்யாணம் அதுயிதுன்னு யோசிக்காம அப்பா எனக்கும் சம்ருதிக்கும் கல்யாணம் கட்டி தர யோசித்திருப்பாங்க.’ என்று எல்லா முதல் குழந்தைகள் யோசிப்பது போல தன் சிப்லிங் பிறக்காமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்திற்குள் சென்று வந்தான்.

பாவம் தங்கையாவது விகர்த்தனனோடு அண்ணன் முறையில் பழகுகின்றாள். தனக்காகனவளாக தன் திட்டம் போட்ட சம்ருதி எந்தவிதமான மனநிலையில் பழகுகின்றாளென்று நினைக்க தவறினான்.

 சூப் குடித்த கையோடு, "சாரி சம்ரு. என்னால எல்லாரும் பேயறைந்து போல இருக்கிங்க. ஹாப்பியா டைம் ஸ்பெண்ட் பண்ணின நேரங்கள் அதிகம். அதை நினைச்சிட்டு தூங்குங்க. நான் இப்ப கொஞ்சம் பரவாயில்லை‌" என்று கூறி அனுப்பினாள். 

அதன் பிறகே வசந்த் நிம்மதியானான்.
விகர்த்தனனோ இமை மூடி ”தட்ஸ் குட். டேக் ரெஸ்ட்” என்று புறப்பட்டவன், சம்ருதியை பார்த்து, “குட் நைட். நீயும் லைட்ட பயந்திருக்க, ரொம்ப யோசிக்காம தூங்கு. ஐ ஹோப் நீ எந்த காரணத்துக்காக இங்க வந்தியோ அதை இன்னிக்கு நினைச்சிப் பார்க்க கூட முடியாத அளவுக்கு நேரம் மகிழ்ச்சியா போயிருக்கும். சோ நீ வந்த நோக்கத்தில் உனக்கு இன்னிக்கு சாதகமான சூழலா மாறியதுன்னு நம்பறேன். ஸ்வீட் ட்ரீம்ஸ்.” என்றான்.

கதவு மூடும் நேரம், கிடைத்த தருணத்திலும் அவன் அவ்வாறு உரைத்திட, “நிஜம் தான் எனக்கு இன்னிக்கு எல்லாம் லவ் பெயிலர் என்ற எண்ணமே வரலை. சொல்லப்போனா காதலிச்சது எல்லாம் என்றைக்கோ போன ஜென்மம் மாதிரி இருக்கு. தேங்க்யூ… கடல்ல எல்லை தாண்டி பழக்கமோ. தைரியமா ஸ்விம் பண்ணினிங்க. ஜனனியை யோசிக்காம ஸ்விம்மிங் சூட் இல்லாம குதிச்சு காப்பாத்தினிங்க” என்று பாராட்டை தந்தாள்‌.

விகர்த்தனன் அளவான சிரிப்பை வழங்கி, “சிம்பிள்… கடல்ல எல்லை தாண்டி நீச்சல் அடிச்சி பழக்கம். யோசிக்காம குதிச்சதுக்கு அது மட்டுமே காரணம். அதோட… கடல்ல மட்டும் இல்லை கனவுலயும் வரலாம். நல்லா தூங்கு. நாளைக்கும் வெளியே போகலாம் தானே?” என்று பயந்துவிட்டாளா?, நாளை வருவாளா? என்று அறிந்திடும் ஆவலில் கேட்டான்.‌

“கனவுல வந்திங்கன்னா சொல்லி விடறேன். இப்ப நோ ஐடியா” என்று சிரித்து தோளைக் குலுக்கினாள்.

வசந்த் இன்னும் விகர்த்தனன் தன் மாமன் மகளோடு உரையாடியிருக்க, “என்ன தூங்கலையா?” என்று வந்தான். இன்று தான் தன் இருப்பையே நினைவூட்டிக் கொண்டான் அவன்.

“வீட்டுக்கு போன் பண்ணினா ஜாலியா பேச சொல்லிருக்கேன். பீல் பண்ண கூடாதுல” என்று கூறவும் வசந்த் “பாஸ் அதை நல்லா சொல்லுங்க” என்று ஏற்றிவிட்டான்.

“ஓகே வசந்த் குட் நைட்.” என்று அறைக்கு செல்லும் போது தோளில் கையை போட்டு அழைத்து வர, சம்ருதி கதவை தாழிட்டாள்‌.

‘சம்ரு கதவை மூடிட்டா இனி தூங்கணும்.’ என்றவன் ‘குட் நைட் பாஸ்.” என்று சல்யூட் அடித்த இரவு வணக்கத்தை வழங்கினான்.

அறைக்கு வந்த விகர்த்தனன் உடைமாற்றி இராவாடையுடன் மெத்தையில் வீழ்ந்தான்.

மதி முழுவதும் மனம் முழுவதும் சம்ருதி நினைவுகள் தாக்கிட, தந்தை அம்பலவாணுக்கு அழைத்தான்.

“அப்பா” என்று அழைத்ததும், மறுபக்கம், யாருடா அந்த பொண்ணு?” என்ற வார்த்தை தான் முதலில் கேட்டார்.

“நீங்க தூங்கலையா? உடனே போனை எடுத்துட்டிங்க” என்று ஆச்சரியப்பட்டான்‌.

எப்படியும் தங்கியிருக்கும் இடத்தில் போனை அணைத்துவிட்டு உறங்கியிருப்பார் என்று நினைத்திருக்க தந்தை உடனே தன் அழைப்பை ஏறறுவிட்டாரே.

எப்படியும் மகன் அழைப்பானென்ற ஆவலுடன் அம்பலவாணன் காத்திருந்தார் என்பதே உண்மை.

“ஏன்டா இத்தனை வருஷத்துல எந்த பொண்ணுக் கூடவும் போட்டோ எடுத்திருக்கியா? இன்னிக்கு நேத்துன்னு ஒரு பொண்ணு போட்டோவா இருக்குன்னா விஷயமில்லாமலா?” என்று சிரித்தார்.

“ஓ… நீங்க முடிவே பண்ணிட்டிங்களா?” என்று நகைத்தான்.

அம்பலவாணனோ “நீ முடிவு பண்ணாம உன் கூட ஒரு பொண்ணை நெருங்கி நிற்க விடுவியா?” என்று பதில் வினாவையே தொடுத்தார்.

தந்தையின் பேராவல் பிற்காலத்தில் சம்ருதி பதிலால் மாறினால்? அதனால் உடனடியாக, “அப்பா… ஒரு தாக்கத்தை அந்த பொண்ணு சம்ருதி விதைச்சிருக்கா. அது உண்மை தான். அதுக்காக நீங்க ஓவரா இமேஜின் பண்ணாதிங்க. அந்த பொண்ணு உங்க கற்பனையில் இடியை இறக்கலாம். ஏன்னா பதில் தெரியாதவரை உங்க பையன் சிங்கிள் சிங்கம்” என்று கூறினான்.

‘சம்ருதி… இந்த பெயர் இதுக்கு முன்ன கேட்டது மாதிரி இருக்கே?’ என்று நினைத்தாலும், “பதில் உனக்கு சாதகமா வரும் டா. உன்னை பிடிக்காம போகுமா? இந்த ட்ரிப் முடிவுல நீ மேரேஜ் அனவுன்ஸ் பண்ணுவ‌. ஆல் தி பெஸ்ட். நான் அந்த ஈஸ்வரனிடம் வேண்டிக்கறேன்” என்றதும், “என்னவோ பண்ணுங்க இப்ப தூங்கறேன்” என்று உரைத்து போனை அணைத்து மெத்தையில் படுக்க, நீச்சலடித்த தேகம் உடனடியாக உறக்கத்தை தழுவியது.

உறக்கத்தை தொலைத்தவள் சம்ருதி மட்டுமே.‌

இன்று நடந்தவை எல்லாம் நினைத்து பார்த்தவளுக்குள் சின்ன பூகம்பம். இதயம் முழுவதும் அவன் ஒருவன் நிறைந்து வழிந்திருந்தான்.

விகர்த்தனனுடன் நட்பும் பேச்சும் வேறொரு பந்தமாக ஜீராவாய் மனதினுள் இறங்க, அந்த உறவுக்கு காதலென்று பெயரை வைக்க மனம் அஞ்சியது.

சூடுபட்ட பூனையாக அவள் தவித்தாலும், அவனுடனான பேச்சும், அவனுடன் பழகிய தருணமும், எண்ணியெண்ணி மகிழ்ந்தாள்.

அதுவும் மீனுடன் அவன் பேசியவை, தண்ணீரில் அவன் இவள் பாதுகாப்புக்காக கையை பிடித்து நின்றதெல்லாம், இன்னும் அவன் தீண்டிய வெப்பத்தை அவள் உடலில் தாக்கியது.

மயக்கத்தில் உறங்கும் மாதுவாக, இரவு உறங்கினாள்.

அதிகாலை எழுந்துப் போது ரம்மியமாக இருந்தது.

விகர்த்தனன் பேச்சு குரல் என்றதும் வேகமாய் போர்வையை வீசிவிட்டு, எழுந்து ஓடிவந்தாள்.

தலை களைந்து, இரவாடையுடன், எட்டி பார்க்க, ஜனனி கண்கள் விரிந்தது. முன்னழகில் சரிப்படுத்தி வந்தாலும், விகர்த்தனன் முன் வந்ததும் விகர்த்தனன் திரும்பி பாராது, “வசந்த் இன்னும் குளிச்சிட்டு வர்றன்னு ஓடினான். இன்னும் வரலை” என்றதும் தான் குளிக்காதது நினைவு வரவும் சம்ருதி அறைக்குள் முடங்கினாள்‌.

ஜனனியோ தலையாட்டி ‘அதுசரி சம்ருதி ஓடிட்டா’ என்று சிரிக்க மட்டுமே முடிந்தது.

“அண்ணா உங்களோட பேசினா நேரம் போறதே தெரியலை.” என்று பாராட்டி டா, ”அப்படி தான் பழகறவங்க சொல்லுறாங்க. பார்ப்போம்” என்று மாய புன்னகை வீசினான்.

பதினைந்து நிமிடத்தில் வந்தவளிடம் இன்று மசாஜ் செய்யுமிடம் காண போவதாகவும், அவர்களையும் அழைத்தான். 

சம்ருதி விழிகள் விரிந்திட, “ஜனனி நீ மசாஜ் போய் பாரு, நேத்து கடல்ல தடுக்கி விழுந்ததை கூட மறந்துடுவ. அப்படியொரு ரிலாக்ஸ் கிடைக்கும்.

ஏ சம்ரு நீயும் ரிலாக்ஸ் பண்ண வந்த. ட்ரை இட்.” என்று கூறவும் முதலில் கோபமானவள், “நீங்களே போறப்ப நான் போக மாட்டேனா என்ன?” என்று ஜம்பமாய் உரைத்தாள்.

“தட்ஸ் இட். வசந்த் சம்ரு ஒத்துக்க மாட்டானு புலம்பின. இங்க வந்துப் பாரு.” என்றதும் வாசலில் நின்றிருந்த வசந்த் ஓடிவந்து, “சம்ரு உனக்கு ஓகேவா?” என்று குதிக்காத குறையாக கூறவும், விகர்த்தனன் சென்றால் நானும செல்வேன் என்று அடம் பிடித்தது.

ஆனால் இது போட்டியான மனப்பான்மை. அவன் ஆண் சென்றால், நான் பெண் செல்லக்கூடாதா? என்ற போட்டி.

விகர்த்தனன் பார்வையை மீறும் பொருட்டு, “ஜஸ்ட் மைண்ட் ரிலாக்ஸிற்கு தானே? நானும் வருவேன். ஜனனியும் வருவா.” என்று அழுத்தமாய் கூற, விகர்த்தனன் கள்ளச்சிரிப்பில் “போலாமா?” என்று தலையாட்ட, திகிலுடன் தலையசைப்பால் ஆமோதித்தாள்.

உள்ளுக்குள் உள்ளமெல்லாம் கார் பயணத்தில் பயம் இருந்தாலும், இலக்கியனை விடுத்து செல்ஃப் விகர்த்தனனே காரோட்ட, வசந்த் பேச்சிற்கு மௌவுனம் சாதித்தபடி அவ்விடம் வந்து நின்றான்.‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

நேத்து அத்தியாயம் போடலை

மன்னிக்கவும் லேசான தலைவலி. இன்று பரவாயில்வைன்னு எழுத வந்துட்டேன்.‌

.

12 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை -8”

  1. M. Sarathi Rio

    நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 8)

    ஐ திங்க்… இவங்க ரெண்டு பேரும் போகிற வேகத்தைப் பார்த்தா, சிங்கப்பூரை விட்டு போகறதுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் காதலை உணர்றதோட, காதலையும் தெரிவிச்சிடுவாங்க போலவே.

    தவிர, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணு, வசந்த் வாயில மண்ணுன்னு அவனுக்கும் பெருசா நா தத் தை போட்டுவாங்களோ…!
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Vikarthanan manasula loveiruku athanala tha samru va ethirpathu ethana panran avalum ulla vachitu but inum atha unarama avan poga edathuku poga manasu unthuthu vikar kuda iruka ninaikura samru. inga irunthu kelambum pothu samru vikarthanan love solidanum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *