Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை-9

நெஞ்சை கொய்த வதுகை-9

அத்தியாயம்-9

  க்ராப் டாப், டெனி ஜீன் ஷார்ட்ஸ் அணிந்த இரு பெண்களுடன், ஷார்ட்ஸ் டீஷர்ட்ஸ் என்று இரு ஆண்கள் வந்திறங்குமிடம் சிங்கப்பூரில் மதிக்கதக்க ஒரு ஸ்பா இருக்குமிடமே.

  “பாஸ் இந்த ஸ்பா என்ட்ரன்ஸே செமையா இருக்கு இங்க போகலாம்” “அங்க போகலாம்” என்று வசந்த் கை காட்டி கூறியதெல்லாம், “வசந்த் நாம போறயிடம் பாதுகாப்பா இருக்கணும். இதுல லேடீஸ் வேற வர்றாங்க‌. முன்ன பின்ன தெரியாத இடத்துல அழைச்சுட்டு போக முடியுமா?

  சில இடத்துலே ஸ்பா என்று போட்டிருந்தாலும் வேற மாதிரி ஏடாகூடமா நடக்குற விஷயமும் இருக்கு. அதனால் லெடீஸ் சேப்டி முக்கியம். தெரிந்த இடமா கூட்டிட்டு போறேன்.” என்று விகர்த்தனன் விளக்கமளித்தான்.‌

  “ஏன் நீங்க கூட தெரியாத நபர். நீங்க தப்பான இடத்துல அழைச்சுட்டு போக மாட்டிங்களா? முதல்ல உங்களை எப்படி நம்பறது?” என்று சம்ருதி சிரித்தபடி விளையாட்டாய் தான் கேட்டாள்.

  ஜனனியோ, “சம்ரு ஏன்‌ இப்படி பேசற, அண்ணா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று முன் மொழிய, வசந்தோ, ‘Nima product’ தொழிலிலேயே எவ்ளோ சுத்தம். நீ என்ன பாஸை சந்தேகப்படற?” என்று விகர்த்தனனுக்கு ஆதரவாய் பேசினான்.

சம்ருதி சிரித்தபடி கூறியதை கேட்டவன் அதே நிதானத்துடன் “நீ என்னை நம்பலைன்னா. என் கூட வசந்தையோ ஜனனியையோ பேசவிடமாட்ட ‘Sam’.

  முதல் நாளே நன்றி சொல்லி என்னை அவாய்ட் பண்ணிருப்ப. எனிவே இப்பவும் ரொம்ப நம்பாத.” என்று அவனும் வார்த்தையால் பூடகமாக பேசினான்.‌

   விகர்த்தனன் அழைத்து வந்திருந்த ஸ்பா இருபாலரும் செய்துக் கொள்ளும் இடமாக இருந்தது. பெரும்பாலும் தம்பதிகள் வந்து செல்வது பார்த்தாலே தெரிந்தது.

   பெண்களுக்கு தனிப்பிரிவில் பெயரை கொடுத்து டோக்கன் நம்பரை வாங்கும் முன், ”சம்ருதி… ஸ்பாக்கு ஆண் பெண் இரண்டு ஓர்க்கர் இருக்காங்க. நீங்க யாரை செலக்ட் பண்ண போறிங்க” என்று கேட்டான்.
அவன் கேட்ட தோரணையே சிறு கள்ளச்சிரிப்பு‌ வழிந்தது.

   ஜனனியோ முந்திக்கொண்டு “ஆண்கள் வேண்டாவே வேண்டாம்‌. கேர்ள்ஸ் போதும்” என்றதும் சம்ருதியும், “ஜனனி சொல்லறதே ஓகே.” என்றாள்.

  அவளிடம் கேட்டுவிட்டு மலாய் மொழியில் இரு பெண்களுக்கும் பெண்களையே மஸாஜ் செய்ய அனுப்பிட உரைத்தான்.
 
   அடுத்து வசந்திடும் கேட்டதும், தங்கை சம்ருதி இருப்பதால் “பாய்ஸ் ஓகே பாஸ்.” என்றான்.

“என்ன வசந்த் பிரிஞ்சி போறிங்க. நான் எனக்கு கேர்ள்ஸ் தான் கேட்டிருக்கேன்.” என்று விகர்த்தனன்‌ உரைத்திட, ‘சம்ருதி கையை பிசைந்து தன்னை கட்டுப்படுத்தினாள். விகர்த்தனனை போகக்கூடாதென்று கூறவும் இயலாது. அவன் போனா உனக்கென்ன? என்ற மனதிடமும் தவித்து நின்றாள். இந்த இடைப்பட்ட நேரத்தில் “பாஸ் மலாய் மொழில சொல்லறப்ப எனக்கும் கேர்ள்ஸே ஸ்பா பண்ண சொல்லிடுங்க. ப்ளீஸ் பாஸ்” என்று கோரிக்கை வைத்தான் வசந்த்.

   தனித்தனியாக இரண்டு பிரிவாய் பிரிந்தார்கள்.

   ஜனனி சம்ருதி ஒரு அறைக்கு செல்ல, வசந்த் விகர்த்தனன் மற்றொரு அறைக்கு சென்றார்கள்.

  விகர்த்தனன் தன் டீஷர்ட்டை கழட்டிவிட்டு, படிக்கட்டு தேகத்துடன் வந்திட, வசந்த் “ஒர்க்கவுட் எல்லாம் செய்விங்களா பாஸ்.” என்று ஆச்சரியப்பட்டான்.‌

“டெய்லி இரண்டு மணி நேரம் உடலை கவனிச்சிக்க நேரம் எடுத்துப்பேன். ஏன் வசந்த் நீங்க இதுக்கு நேரம் செலவழிக்க மாட்டிங்களா?” என்றான்.

   “எங்க பாஸ்.. சம்ருதி அப்பவுக்கு நகை பிஸினஸ். அவருக்கு மூன்று கிளை இருக்கு. அதனால் நான் வெளியே வேலை போக முடியாது. மாமாவோட நகைக்கடையில ஒரு கிளைக்கு மேனேஜர். சொந்த கடையா இருந்தா உங்களை மாதிரி நானும் ஹாயா எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணலாம். இதோ ரிலாக்ஸுக்காக சிங்கப்பூர் வந்திருக்கிங்க. ஆனா எனக்கு காலையில் எழுந்து கடைக்கு ஓடணுமே.” என்றான்.

  “வசந்த்… நான் காலையில் ஃபைவ் டூ செவன் எக்ஸர்சைன் பண்ணுவேன். நீங்க அந்த நேரம் வேலைக்கு கிளம்புவீங்களா?” என்று ஆச்சரியமாய் கேட்க, என்னது ‘5-7 ஆஹ்’? அடப்பாவமே நான் நல்லா தூங்கற டைமாச்சே’ என்று தொண்டையை விழுங்கி மழுப்பலாய் சிரித்தான்.

   இங்கு மறுபக்கம் ஸ்பா நிறுவனம், அவர்கள் கொடுத்த ஆடையோடு ஜனனி சம்ருதி படுத்திருக்க உடலில் நீண்ட குப்பியில் உள்ள விதவிதமான லோஷன் ஆயில் என்று க்ரீம் என்று கடைப்பரப்பி எடுத்து வந்தனர்.

ஒன்று மாற்றி ஒன்றை தேய்க்க செய்திட, சற்று நேரத்திலேயே உறக்கம் போல கிறக்கம் உண்டானது.

   கண்ணுக்கு கீழ், முகம் தாடை, நெற்றி, கைகால், முதுகு என்று எல்லா விதமான இடங்களில் பஞ்சு போன்ற கைகளால் மஸாஜ் ஆரம்பமானது. தீயை குப்பியில் செலுத்தி குட்டி குட்டி யாக உடல்பகுதியில் வைத்தனர்.

  ஹாட் ஸ்டோன் மஸாஜ், டிஸ்யூ மஸாஜ், கப்பிங் தெரப்பி, ட்ரிகர் தெரெபி, தாய் மஸாஜ், ஸோன் தெரப்பி என்று எண்ணிலடங்கா பயன்கள் கொண்டவையை செய்யும் பொழுது, முதலில் விகர்த்தனனை ஒரு பெண் தொட்டு தழுவுவதாக எண்ணியெண்ணியே மூளை சூடேறியவள், பெண்களின் தேர்ந்தெடுத்த திறமைகள் பணிகளில் மட்டும் கவனம் பதிந்திருக்க, விகர்த்தனனும் இப்படி தான் பீல் பண்ணுவார்.‌ மற்றபடி தப்புத் தப்பா யோசிக்க கூடாது, என்று முறுவல் கூடியது.
 
மீண்டும் மீண்டும் மனமோ இவ்வாறு எண்ணிட, மூளையோ ஏன் அவனை வேறு பெண்கள் வேறு எண்ணத்தோடு தீண்டக்கூடாதா? அவன் மீது ஏன் இத்தனை அக்கறை? வசந்த் பற்றி எண்ணவில்லை? அவன் உன் அத்தை மகன். என்று எடுத்துரைக்க, ‘விகர்த்தனன் மீது தோன்றும் இந்த ரீசன் தான் என்னனு தெரியலை.’ என்று நெற்றி சுருக்கினாள். மஸாஜ் பெண்மணியோ மீண்டும் நெற்றிக்கு கைகளை கொண்டு செல்ல, ‘உங்கள் விரலில் மேஜிக் இருக்கு’ என்று உரைத்தாள்.

  தமிழ் ஓரளவு புரிய ‘நன்றியுரைந்தாள் அப்பெண்மணி.

  கிட்டதட்ட இருபதுக்கும் மேற்பட்ட வித்தைக்கு பின் தியானத்தில் இருந்து எழுவது போல இருந்தது.

நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. கடைசியாக நீராட செல்லவும் வெதுவெதுப்பான நீரில் நீராடவும் ஒரு‌மணி நேரம் அதிகமானது.

   மீண்டும் நால்வர் ஸ்பா முடிவுற்று சந்திக்கும் நேரம் உணவு நேரத்தை தாண்டியது. ஸ்ட்ரீட் உணவில், விகர்த்தனன் சுவைக்க, கையேந்தி பவனாக அங்கும் சேரில் அமர்ந்து சுவைத்தனர்.

  அவரவர் அனுபவத்தை பகிர முடியாது நன்றாக இருந்ததா என்று மட்டும் ஸ்பாவை பற்றி கேட்டு கொண்டனர்.‌

  ”வொர்க் டென்ஷன், எந்த டென்ஷன் என்றாலும் இப்படி போனா நல்லா தான் இருக்கு” என்று சம்ருதி வாயை விட்டாள்.

  “அப்ப ஸ்பா தப்பில்லை தானே?” என்று விகர்த்தனன் கூற, ‘அவள் முதலிலிருந்தே தன்‌மீது இதனால் கோபத்தில் சுற்றியதை நினைவு கூர்ந்து கூறினான்.‌

   உதடு கோணித்து திரும்பிக் கொண்டவளை சிறுப்பிள்ளையென ரசித்தான்.‌

  அதன் பின் ஹோட்டலுக்கு சென்றிட முடிவெடுத்தனர். இன்னமும் ‘மெர்லயன்’ முன் ஒரு புகைப்படமும் எடுக்காததால் அங்கு சில புகைப்படம் எடுத்துவிட்டு ஷாப்பிங் செய்ய முடிவெடுத்தார்கள்.

‘மெர்லயன்’ என்பது சிங்கத்தின் தலையும், மீனின் உடலையும் கொண்ட சின்னம். இது சிங்கப்பூரின் அடையாள சின்னமாகவே திகழ்கின்றது.

   செல்ஃபி ஸ்டிக் மூலமாக விகர்த்தனன் எடுக்க அவனருகே சம்ருதி, ஜனனி, வசந்த் என்று வரிசையாக நின்றார்கள். 

    அடிக்கடி சம்ருதியின் கள்ளப் பார்வை விகர்த்தனனை தழுவியது.

   அதன் பின் வசந்த் பெர்ஃப்யூம் வாங்க ஆர்வமானான்.
      விதவிதமான பரிசுகளை வாங்கி குவிக்கும் மும்முரத்தில் பெண்கள் இருக்க, விகர்த்தனனோ கையை பேண்ட் பேக்கெட்டில் விடுத்து, ஒய்யாரமாய் வேடிக்கை பார்த்தான்.

   அரை மணி நேரம் கழித்து சம்ருதி அவனை நோட்டமிட்டவளாக, “அதென்ன எதுவும் வாங்காம போற வர்ற பொண்ணுங்களை வாட்ச் பண்ணிட்டு இருக்கிங்க?” என்று கடித்து குதறாத குறையாக கேட்டாள்.

    “ஹலோ… ஹலோ.. உங்களுக்கு உங்க அப்பா அம்மா அத்தை மாமா அத்தை பையன் அத்தை பொண்ணு, இப்படி வாங்கிட்டு போக மெம்பர்ஸ் இருக்காங்க. எனக்கு அப்பா மட்டும் தான்‌ இருக்கார். அவருக்கு என்ன வாங்கணும்னு ஆல்ரெடி யோசித்து வச்சிட்டேன். இனி யாருக்காக வாங்க?” என்று கை விரித்தான்.

    அவன் சொன்ன தினுசிற்கு ‘ஏன்டா நான் இல்லையா?’ என்று கேட்குமளவிற்கு உரிமைக் கொண்ட மனமாக தவித்தாள்.

   ஆனால் மெதுவாக எச்சிலை விழுங்கி, ”அதுக்குன்னு போற வர்ற பொண்ணுங்களை பார்க்கறிங்க?” என்றாள்.

   “ஹல்லோ…. இங்க வந்ததே ரசிக்க தான்.‌ ரசிக்கறதுன்னா கடலையும் ஊரையும் மட்டுமா ரசிக்க முடியும். இந்த ஊர் பொண்ணுங்களையும் தான்.‌ நம்மூர் பொண்ணுங்களை பார்த்து போரடிக்கு. இங்க பாரு சப்பை மூக்கு மொழுமொழு கன்னம் எங்க திரும்பினாலும் ஷார்ட் ஷார்ட்டா டிரஸ்‌.” என்றவன் பேச்சில் சம்ருதி பார்வை தன்னுடலை கவனித்தாள்.

  ‘இவனுக்கு என் டிரஸ் எல்லாம் கண்ணுக்கு தெரியாது’ என்று கோபத்தோடு நடந்தாள்.

   ”Sham உன் டிரஸ் கூட நல்லாயிருக்கு.” என்று வர்ணித்தான்.

  “அதென்ன ‘கூட’ போய்யா” என்று வெடுக்கென நடக்க, அவளது நடையை ரசித்தவாறு பின் தொடர்ந்தான்.‌

    இப்படியே நேரம் போக திரும்பவும் ஹோட்டலுக்கு திரும்பினார்கள். இரவாடையுடன் புத்துணர்ச்சி அடைந்தும் பின், இம்முறை விகர்த்தனன் அவனது அறைக்கு மூவரையும் அழைத்து அவனே உணவுகளை ஆர்டர் செய்தான்.‌

   அவனிருந்த அறையை சுற்றிப்பார்த்தனர். ‘ஹோம் தியேட்டர் கொண்ட அறை வெகுவாக மூவரையும் ஈர்த்தது. அவனது ஹாலில் பெரிய மீன் தொட்டி இருந்தது.

     “வாவ் சொர்க்கத்தை ரூம்லயே வச்சிக்கிட்டு வெளியே தேடறிங்க” என்று வசந்த் வாய் விட்டே உரைத்தான்.

  “சொர்க்கம்னு நீங்க எதை மீன் பண்ணறிங்க வசந்த். இருக்குற இடத்தையா? கிடையவே கிடையாது. நம்ம அமைச்சுக்கற சூழ்நிலை. என்னை பொறுத்தவரை எங்கப்பாவோட துவக்க நிலையில் என்னை விட்டாலும் நான் சொர்க்கமா அமைச்சிப்பேன்.” என்று பதிலுரைத்தான்.
   
   “காசு இருக்கும் போது வேதாந்தம் பேசுவிங்க பாஸ், காசு இல்லாதவனுக்கு எல்லாம் நீங்க வாழறதே சொர்க்கம்” என்று உரைத்தான் வசந்த்.

“அப்ப உங்களுக்கு ஒரு செட்டில்மெண்ட் தந்துட்டா நீங்க சொர்க்கத்தை உருவாக்கிப்பிங்களா? மொத்தமா ஒதுங்குவிங்க?” என்றவன் பதில் வினாவினான். வசந்த் இந்த வார்த்தையில் வேறெங்கோ சிந்தனை ஓடியது.

   ஜனனியோ ‘சம்ரு என்ன சொல்வாளென்று காத்திருக்க அவளோ உணவை தான் விழுங்கினாள்.

    உணவில் கூட விகர்த்தனன் சாப்பிடுவதை தேர்ந்தெடுத்து ருசித்தாள்.

    அதேநேரம், விகர்ந்தனன் போன் மின்னி மின்னி ஒளிர, அதனை பார்த்தவன் அவசரமாய் அப்பெயரை துண்டித்து சைலண்டில் போட்டு விட்டு தன் கால் சட்டையில் வைத்தான்.

   “பேசுங்க பாஸ்” என்று வசந்த் கூற, “அப்பறமா பேசிக்கிறேன்.” உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணறது எனக்கு முக்கியம். ஏன்னா…‌ நீங்க என்‌ ஸ்பெஷல் கெஸ்ட் இல்லையா?” என்றான்.‌ விருந்தோம்பல் முதன்மையானது என்பதாக பதில் கொடுத்தான்.

   “பாஸ்..‌ கேட்க மறந்துட்டேன். நீங்க உங்க கேமிராவுல எடுத்த வீடியோ பிக்சர் எங்களுக்கு அனுப்பவேயில்லை.” என்று விசாரித்தான். அவனுக்கு அவன் சாகசத்தை ஸ்டேடஸ் வைத்தது போதாமல், இந்த புகைப்படமும் தேவைப்பட்டது. சம்ருதி அப்பாவான தனது மாமாவிடம் சம்ருதியை எப்படி பார்த்துக் கொள்வதாக பெருமை காட்ட எண்ணினான்.
 
  “ஓ சாரி வசந்த் யஸ்டர்டே தூங்கிட்டேன். நாளைக்கு மார்னிங் அனுப்பிடறேன்.  மெயில் ஐடி சொல்லுங்க” என்றதும் சம்ருதி மடமடவென அவளது ஐடியை தந்தாள்.

   வசந்த் தனக்கு வேலை மிச்சமென்று நினைத்திருக்க, கூடுதலாக ஒருமணி நேரம் பேசி அவரவர் அறைக்கு சென்றார்கள்.

  ”ஏன் வசந்த் இப்ப மட்டும் ஸ்பால சந்திச்சு பொண்ணு மாதிரி ஒருத்தி வந்து மஸாஜ் செய்து தூங்க வச்சா எப்படியிருக்கும்?” என்று வேண்டுமென்றே சம்ருதி காதில் விழும் அளவிற்கு கேட்டு வைத்தான்.

  ”நீங்க வேற சார். வேறலெவல் பீலிங். என்னை விட்டா நான் தினமும் அங்க ஸ்டே பண்ணிடுவேன்” என்று வசந்த் கூற, சம்ருதி கதவு படாரென்று சாற்றினாள்.

   வசந்த் சென்றதும் கதவை அடைத்து, போனை எடுத்தான் விகர்த்தனன்.

  “எதுக்கு தான் இத்தனை தடவை கால் பண்ணிட்டு இருக்காங்க. அதுவும் மாத்தி மாத்தி” என்று அந்த நம்பருக்கு அழைத்து பேச ஆரம்பித்தான்.

    எதிர்தரப்பில் விடாமல் பேச, ‘என்‌ “நெஞ்சை கொய்த வதுகை*யா அவளை பார்க்கறேன். எனக்கு பிடிச்சிருக்கு காதலிக்கறேன். உனக்கென்ன?” என்று மட்டும் பேச, மறுபக்கம் பேசியதை அரை மணி நேரத்திற்கு மேலாக மௌனம் காத்தவன், “எனக்கு தெரியும்டா. அன்னைக்கே சொன்னியே. அதெல்லாம் நான் பார்த்துப்பேன்” என்று முடிவாய் கூறினான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

15 thoughts on “நெஞ்சை கொய்த வதுகை-9”

  1. Kalidevi

    Samru ku irukura possessive kandipa ponnungaluku irukurathu thane ena love solli iruntha ok sollala inum apadi irunthum ithu cute ah iruku rendu perkume. but vikar etho plan panni vanthu irukana ena therilaye etho twist koduka poranga sisy

  2. M. Sarathi Rio

    நெஞ்சை கொய்த வதுகை …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    இந்த வசந்த் கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாம இப்படி பேசறதாலத்தான், சம்ருதி
    ஆரம்பத்துல இருந்தே அவனை பிடிக்கலையோ….? இதுல
    பணம் இருந்துட்டா போதும் சொர்க்கமே கையில கிடைச்ச மாதிரிங்கிற ரேஞ்சுக்கே பேசுறான். பின்னாடி, இந்த எண்ணமே மாமன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்ங்கிற அவனோட ஆசைக்கு ஆப்பை வைக்கிறதோட, அதுக்கு விலையையும் நிர்ணயம் செய்யப் போகுதோ என்னமோ….?

    அது சரி, இந்த விகர்த்தனன் யாரு கிட்ட இப்படி மூடு மந்திரமா பேசுறான்…? ஒருவேளை, கிருஷ்ணனோ…?
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    சூப்பர். .. சம்ருதிக்கு இப்போவே பொஸஸிவ்னஸ் வந்துருச்சு. . விகர்தனன் நல்லவனா கெட்டவனான்னு தெரியலயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *