Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-5

பிரம்மனின் கிறுக்கல்கள்-5

அத்தியாயம்-5

     ஆத்விக் ஆக்ரேஷமாய் கத்தவும் பாவனா தான் பயத்தில் வீறிட்டு அழுதாள்.

    ஆத்விக் அதன் பின்னே தன்னை தவிர குழந்தையும் இருப்பதை எண்ணி குரலை தணிவாய் மாற்றினான்.

     முதலில் குழந்தையை சமாதானம் செய்து பாட்டு பாடிக் கொண்டிருக்கும் வண்ண பெண் பொம்மையை பேட்டரி போட்டு மகிழ்வித்து முடித்து அழுகையை திசை திருப்பியப் பின் அன்பாளனிபம் வந்தான்.

    “உங்களுக்கு எத்தனை முறை அப்பா சொல்லறது. சந்தனா போட்டோ எங்க?” என்றான்.

      “இங்க பாருடா ஒருத்தியை கட்டிட்டு வந்தப்பின்னும் முதல் திருமணமானவளோட போட்டோ ஹால்ல தொங்கினா இப்ப உனக்கு பொண்ணு கொடுத்தவங்க மனசு என்ன நிலையில துடிக்கும் தெரியுமா. நீயும் மருமகளும் வேண்டுமின்னா அறைக்குள் நடிச்சிக்குங்க. இப்படி போட்டோ எடுக்காம என்னை காயப்படுத்தாதே” என்றார்.

     தானும் யஷ்தவியும் நடிப்பதை கண்டறிந்த விதத்தில் முகம் தொங்கி அமைதியானான். கூடுதலாக சித்ரா பாலகுமார் கவலையோடு ஒரு வித எதிர்பார்ப்பில் தன்னை பார்ப்பது கவலை தர அமைதியானான்.

      போதாத குறைக்கு அமைதியாக மாறி யஷ்தவி பரிமாற சாப்பிட அமர்ந்து விட்டான்.

     பாவனாவை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டே தோசையை சாப்பிட, மூன்று பெரியவர்களுக்கும் மாறி மாறி முகத்தை பார்த்தனர்.

     சாப்பிட்டவன் இதுவரை உயிர்பிக்காத டிவியை உயிர்பித்தான்.

     அமைதியாய் தந்தை தன்னை கவனிப்பது புரிய அறைக்குள் அடைந்தான். அடுத்த கனம் யஷ்தவி அந்த ரூமுக்கு போனா அதுக்கு வேற ஏதாவது பீல் பண்ணி பேசுவாங்களோ?! என்று பாவனாவை அறைக்குள் படுக்க வைத்து விட்டு வெளிவர அதே நேரம் யஷ்தவி உள் நுழையை யஷ்தவி மூக்கு ஆத்விக் நெஞ்சில் பட்டு மோதியது. “ஸப்பா” என்று தேய்க்க “சாரிங்க வந்து” என்று தடுமாற பாதி கதவை மூடியபடி, “என்னால அங்க போக முடியாது. என்ன செய்ய?” என்றாள் மென்குரலில்.

     “நானும் அதை கேட்க தான் வந்தேன்” என்றதும் யஷ்தவி கையை கட்டி யோசனையில் மூழ்கினாள்.

     ஆத்விக்கோ தயங்கியபடி “தப்பா நினைக்கலைனா இங்கயே இருங்க. அங்க உங்கப்பா அம்மாவும் இந்த கல்யாணத்தை ரொம்ப எதிர்பார்த்து கட்டி வச்சாங்க. எங்கப்பாவோடு சேர்த்து அவங்களையும் கஷ்டப்படுத்தறது ஒரு மாதிரி ஹர்ட்டிங்கா இருக்கு. நீங்க தான் சடனா பதில் சொல்லணும்.” என்று நின்றான்.

      “வேற வழி” என்று என்னவோ இயல்பாய் இந்த அறையில் உறங்க வருவது போல கிச்சனை சுத்தம் செய்து சேலையில் கையை துடைத்து கொண்டு சென்று கதவை தாழிட்டாள்.

     பாலகுமாரோ மகிழ்ச்சி அடைந்தவராய் அன்பாளனுக்கு நன்றி நவில சித்ராவோ “இல்லைங்க அவங்க நடிக்கிறாங்க. உடனே மாறவும் வாய்ப்பில்லை. நண்பர்களா ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா உதவி செய்து நம்மை முட்டாளக்க பார்க்கறாங்க.” என்று கண்ணீரை துடைத்தார்.

    அன்பாளனுக்கு இதனை சரிசெய்யும் கடமை அவரை வாட்டியது. இரவெல்லாம் யோசனையில் கழித்தார்.

       ஆத்விக் அவனின் அறையில் சந்தனாவை தாண்டி வேறொரு பெண்ணை படுக்கயறையில் விட்டதிலேயே ஆத்விக் மனம் முள்ளாய் குத்தியது.

      யஷ்தவியோ அங்கிருந்த போர்வையை எடுத்து கீழே படுத்து கொண்டாள்.

    ஆத்விக்கோ நிம்மதியாய் குழந்தையை அரவணைத்து படுத்து கொண்டான்.

     அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து பாலை காய்ச்ச துவங்கினாள்.
   
     சித்ராவோ குழந்தையை வாங்கிக்கொண்டு சமைக்க எளிதாக்க, முயன்றாள்.

    அன்னை பார்க்கும் பார்வையிலேயே தன்னை கண்டு கொண்டாளென யஷ்தவி அறிந்தாள்.
    ஆனாலும் இது தான் நிதர்சனம். வெவ்வேறு பாதையில் செல்போரை நிறுத்தி ஒரே கோட்டுக்குள் பயணிக்க கூறினால்? விளைவு வேறாக தானே அமையும்.

    ஆத்விக் எழுந்து வந்தவன் அலுவலகம் கிளம்பினான்.

    அவனின் தேவைகளை டிபன் பாக்ஸில் பதிவிரதையாய் கட்டி கொடுத்தாள்.

     புதிதான கணவன் மனைவி இவர்கள் என்றால் நம்ப இயலாது. அத்தகையா குடும்பமாக நன்றாக நடித்தனர். ஆனால் பாவனாவிடம் நடிக்கவில்லை. யஷ்தவி அன்னையாக, ஆத்விக் தந்தையாக வாழ ஆரம்பித்தனர். அதனால் இருவரின் புரிதல் நண்பராய் தெளிவாய் இருக்க, பார்க்கும் விழிக்கு தம்பதியாராய் நிறைவான குழந்தையோடு வலம் வருவதாய் திகழ்ந்தனர்.

     அன்பாளானனோ மென்னநடையிட்டு எழுந்தவர் யஷ்தவி கொடுத்த காபியை சுவைத்தார்.

    கொஞ்ச நேரத்தில் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்தார்.

      யஷ்தவி உடனே ஆத்விக்கிற்கு அழைக்க, அவனோ “இப்ப எங்க இருக்கிங்க” என்றான்.

    “மாமா தான் ஏதோ மலர் மருத்துவமனை பெயர் சொன்னார். அவரோட ஸ்கூல் பிரெண்ட் கூட அங்க ஒர்க் பண்ணறாராம்.” என்றதும் தான் ஆத்விக் நிம்மதியாய் “ஓகே ஓகே வந்திடறேன். அதுவரை கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றான்.

     யஷ்தவியோ சரியென்று தாய் தந்தையரோடு நின்றிருந்தாள்.

    “இங்க நடக்குற கூத்துக்கு நாங்களுமே ஹாஸ்பிடலில் படுக்க வேண்டியது தான். ஏதோ மக வாழ்க்கை நல்லபடியா மறுமணம் செய்து கொடுத்திட்டோம்னு நிம்மதியா இருந்தா, இப்படி இங்க வந்து கமுக்கமா ஆளுக்கு ஒரு அறையில போய் உங்க வேலையை பார்க்கறிங்க. இதுக்கு தான் அவரிடம் பேசணும்னு தனியா போய் இரண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டிங்க.” என்று சித்ரா வெளியே யஷ்தவியை திட்ட, அந்த நேரம் வேகமாய் வந்து நின்ற ஆத்விக் கேட்டு விட்டான்.

    ஆனாலும் தன்னை எதுவும் கூறமாட்டார்களென நிம்மதியாய் தந்தையின் சிகிச்சை பிரிவின் கதவில் எட்டி பார்த்து தவிப்பாய் யஜஷ்தவியிடம் பேச முயன்றான்.

    அவளாகவே “காலையிலருந்தே அவர் யாரிடமும் பேசலை. ஹால்ல உங்க திருமண புகைப்படம் கண்டதுலருந்து அவரா சஞ்சலப்பட்டு மனசுக்குள்ள வருந்திருப்பார் போல” என்று தயக்கமாய் கூறினாள்.

      “நினைச்சேன்.” என்றவன் அங்கிருந்த இருக்கையில் அவளிடமிருந்து ஒருவர் அமர இடைவெளியிட்டு அமர்ந்தான்.

      பாவனா கீழேயிறங்கி ஓடவே முயன்றாள். யஷ்தவி அவளை அணைத்து சமாளித்து கொண்டிருந்தாள்.

    ஆத்விக்கோ “நீங்க வேண்டுமின்னா பாவனா தூக்கிட்டு வீட்டுக்கு போங்க. நான் பார்த்துப்பேன்.” என்றான்.

      “டாக்டர் நல்லபடியா சொன்னதும் போகறேன்” என்றாள் யஷ்தவி.

     ஆத்விக்கிற்கும் அப்படி கூறிட வேண்டுமென்று இறைவனை வேண்டி துதித்தான்.

    சந்தனாவை திருமணம் செய்த போது ஒதுக்கினாலும், அவனுக்காக அவன் நலனுக்காக ஏங்குவோரில் தந்து மட்டுமே தனக்கு இருப்பதால், மனமானது தந்தைக்காக வேண்டுதலை வைத்தது. ‘அவரை நல்லபடியாக நடமாட வை இறைவா’ என்று ஆயிரம் முறைக்கு மேலாக மருத்துவமனையில் சேர்ந்ததை அறிந்ததிலிருந்து வேண்டிவிட்டான்.

      அருளானனை மாலையில் தான் அபாயகட்டத்தை தாண்டியதாக டாக்டர் சித்திக் கூறினார். 

       ஆத்விக் முகம் அதன் பிறகே தெளிந்தது. யஷ்தவியோ பாவனாவை அணைத்து கொண்டு, ”நான் போய் வீட்ல குழந்தைக்கு ஆகாரம் கொடுத்துட்டு குளிப்பாட்டி டீ எடுத்துட்டு வர்றேன். கூடவே இரவு உணவை எடுத்துட்டு வந்துடுவேன். அநேகமா டாக்டர் ஒருத்தரை தங்க சொன்னார்.” என்று உரைத்தாள்.

      அவனுமே தலையசைத்தான். ஆனால் அவன் உடையோ அலுவலகதுதிலிருந்து அப்படியே வந்ததில் பாலகுமாரோ “மாப்பிள்ளை நீங்க வேண்டுமின்னா உடைமாற்றி சாப்பிட்டு வந்துடுங்க. அதுவரை சம்மந்தியை நான் பார்த்துப்பேன்” என்றார்.

     அவனுக்கும் அது சரியென்று பட்டது. யஷ்தவியோடு வண்டியில என்று இடித்தது. சரி தற்போது தலையசைத்து கீழே சென்றதும் யஷ்தவியை ஆட்டோவில் அனுப்பிடலாமென சரியென்று யஷ்தவியை அழைத்து லிப்டில் வந்தான்.

   சித்ராவோ கூடவே வர பைக்கில் ஏறி அமரும் சூழ்நிலை வந்தது. என்னவொரு நிம்மதி நடுவே பாவனா அமர வைத்து விட்டாள் யஷ்தவி.

    ஆத்விக்கிற்குமே பாவனா இடையை கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டதும் புதுவிதமான தந்தை நேசம் மலர்ந்தது. அவளை வீட்டுக்கு அழைத்து வரும் முன் இனி தினமும் முன்னிருக்கையில் அமர வைத்து அவளை மகிழ வைக்க வேண்டும் என்று உதித்தது.

   யஷ்தவி மடமடவென சப்பாத்தி தக்காளி தொக்கு செய்து ஆத்விக்கை சாப்பிட  வைத்தாள். தண்ணீர் பாட்டிலை கொடுக்க நன்றி கூறி பெற்று கொண்டான்.

    இங்கு அன்பாளனோ சித்ரா பாலகுமாரை அழைத்து, எனக்கு சின்னதா நெஞ்சு எரிச்சலும் கேஸ்ட்ரிக் ட்ரிபிளும் தான். இங்க வந்து கொஞ்ச நேரத்துலயே சரியாகிடுச்சு. ஆனா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் இங்கயே இருக்கேன். என் மகனை என் மருமக யஷ்தவியோட வாழ வச்சிட்டு தான் என்னோட திருநெல்வேலி மண்ணுல காலடி எடுத்து வைப்பேன்” என்றார்.

     சித்ராவோ பாலக்குமாரும் மகளின் வாழ்வு மெல்ல மெல்ல மலரட்டும் என்று வேண்டியது. தற்போது சித்ரா கீழே சென்றதால் ஒரே பைக்கில் பயணம் கொண்டதால், அன்பாளன் உடல்நலம் குன்றியவரால் மகன் மனம் மாற வாய்ப்புண்டு என்று இதயம் பலகீனம் என்ற நாடகத்தையே திரும்ப தொடர முடிவெடுத்தார்கள்.

  நாடகங்கத்தின் நிழல் நிஜமாக மாறுமா என்பது காலம் அறியும்.

-கிறுக்கல்கள் தொடரும்.
  -பிரவீணா தங்கராஜ்.
    

1 thought on “பிரம்மனின் கிறுக்கல்கள்-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *