Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-21

56 / 100 SEO Score

அத்தியாயம்-21

 

“சுமையுள்ளவர்களே, என்னிடத்தில் வாருங்கள்.” -மத்தேயு

 

“கர்த்தர் என் அடைக்கலம்.” -சங்கீதம்

 

அந்த இரவு முழுவதும் சாராவுக்கு தூக்கம் இருந்ததா, இல்லையா?

என்ன உணர்வில் இருந்தாள்? என்று கூட அவளுக்கே தெரியவில்லை.

அவள் விழித்த போது, அறை அமைதியாக இருந்தது. புதிய வீடு பழக்கமற்றதாக இருந்தாலும் நிம்மதியுற்றவளாக திகழ்ந்தாள்.

 

அவள் இடுப்பை சுற்றி இருந்த சார்லஸின் கையால் முகம் சிவந்தது. மெதுவாக அவன் முகத்தை பார்த்தாள். குழந்தை மாதிரி தூங்கிக்கொண்டிருந்தான் சார்லஸ்.

‘டாக்டர் சாரே…’ என்று மனசுக்குள்ளே சிரித்தாள். அவள் அவன் கையை மெதுவாக விலக்க முயற்சித்தாள். அவன் தூக்கத்தில் இருந்தாலும் இன்னும் இறுக்கமாய் பிடித்தான். “ஹ்ம்…” என்று தூக்கத்திலேயே அவன் சிணுங்கினான்.

 

சாரா சிரிக்க முடியாது வெட்கப்பட்டு அப்படியே நின்றாள்.

“எங்க போற…” என்று

கண் திறக்காமலே கேட்டான்.

“நான்… நான்… சாயா போட்டு வரும்” அவள் தடுமாறினாள்.

அவன் கண்களை மெதுவாக திறந்தான்.

அவளை பார்த்ததும்… ஒரு சின்ன சிரிப்பு. “இவ்வளவு சீக்கிரமா சாயா எதுக்கு கூடவே தூங்கேன்.”

“காலை ஆயிடுச்சு.. இன்னும் உறக்கம் வருமோ?” அவள் கண் கூட உயர்த்தவில்லை.

“நீ பக்கத்துல இருந்தா என்னவோ பண்ணுது” என்றான்.

 

“அதுக்காக… சாயா கூட இல்லாம எப்படி. நான் சாயா போட்டு வந்து நிற்கும்” என்றதும், “எனிக்கா சாயா வேண்டாம். இ.. சாரா வேணும்.” என்று மலையாளம் கலந்து பேச, “டாக்டர் சாரே… விடுங்க… விளையாடியது போதும்” என்றாள் சாரா.

 

“விடணுமா? அப்ப ஒரு கண்டிஷன்…” என அவன் கையை விடாமல் கேட்டான். அவள் குழப்பமாய் பார்த்தாள்.

“ஒரு லிட்டில் கிஸ் குடு. அப்புறம் விடுறேன்.” என்றான்.

“அய்யடா… அதெல்லாம் கொடுக்க இயலா. எனிக்கு வெட்கம் வரும்.” என சிணுங்கினாள்.

“நேத்து முழுக்க கோ-ஆப்ரேட் பண்ணின. இப்ப மார்னிங் போனஸ் மாதிரி கேட்டா தரமாட்டியா?” என்றதும் வெட்கமும் நாணமும் போட்டி போட்டு தன்னால கட்டுப்படுத்த முடியாமல் நெளிந்தாள்.

 

“சரி… நீ தரமாட்டேங்கற. நான் தர்றேன்.” என்று இழுத்து வைத்து முத்தமிட்டான்.

 

“டாக்டர் சாரே… நிங்கள் ப்ரஷ் பண்ணாமல் சாயா குடிச்சி.. ஓகே… இப்ப… இப்ப.. இப்படி..” என்று முழுமையாக கூறத் தயங்கினாள்.

 

“ஓ… மார்னிங் கிஸ் எந்து வேலை செய்யும் தெரியுமோ? ஹஸ்பண்ட் ஒய்ஃப் நன்னா கெமிஸ்ட்ரி உருவாகும். சேச்சிக்கு இதெல்லாம் தெரியாதா” என்று கழுத்தில் வாசம் பிடித்தான்.

 

“ஆ.. அதெல்லாம் எனிக்கு தெரியும். நிங்கள் தான் உங்க பேஷண்ட் ஜோஸப்பை காண போனோம்னு சொல்லி. இப்ப நன்னா என்னை கொஞ்சிட்டு இருக்கு.” என்றாள்.

 

ஜோஸப் பெயரை கேட்டதும் சார்லஸ் சீரியஸாக மாறினான்.

 

“உப்ஸ்.. சாரா.. நான் உடனே குளிச்சிட்டு கிளம்பறேன். நீ சாயாவும், ரெடிமேட் இடியாப்பம் இருக்கும். அதை ஹாட் வாட்டர்ல போட்டு எடுத்து தா. தேங்காய் பால் முடிந்தா அறைச்சிடு.” என்று போர்வையை எடுத்து மடித்து வைத்தான்.

 

சாராவும் அவள் சமையலை கவனிக்க உடனே சென்றாள்.

 

அவசரம் அவசரமாய் சார்லஸ் ஜோஸப் இருக்கும் ஆஸ்பிடலுக்கு செல்ல தயாரானான். ஐய்யப்பன் கூட போன் செய்து அழைத்திருந்தார்.

 

ஐய்யப்பன் அழைத்ததும் சார்லஸ் முகம் மாறியது.  மூன்றாவது இடியாப்பம் சுவைக்கும் பொழுது, சாரா நான்காவது இடியாப்பத்தை வைக்க நெருங்க, மறுப்பாய் கையை வைத்து தடுத்து, “போதும் சாரா” என்று எழுந்துவிட்டான்.

 

போன் அணைத்ததும், ‘என்னாச்சு டாக்டர் சாரே.’ என்று பார்க்க, “ஜோஸப்புக்கு பீபி அதிகஆகுதாம்” என்று கூறிட, சாரா அங்கேயே நின்றாள்.

 

“நான் இப்போவே கிளம்புறேன். ஆல்ரெடி ஐய்யப்பன் ஐவி சப்போர்ட்ல தான் ஜோசப் மெயின்டெயின்ல இருப்பதா சொல்லறார்.” என்றதும், அறையில் ஒரு நொடி சப்தமில்லாமல்,

சாரா அவனை பார்த்தாள்.

 

“ஜோசப்…?” அவள் குரல் மெதுவா குலுங்கியது. அவளுக்கு ஜோஸப்பை பார்க்க ஆவலியிருந்தது. அதனால் சார்லஸிடம் கேட்டு ஹாஸ்பிடல் வர கூட சார்லஸிடம் கேட்க நினைத்தாள். இன்று சார்லஸை பார்க்கவோ ஜோஸப்பை பற்றி கேட்கவோ கஷ்டமாக இருந்தது.

 

சார்லஸ் ஆழமாக மூச்சு விட்டான்.

மருத்துவமனைக்கு விரைந்திட, வாசல் அருகே வந்தான்.

 

“ஏய் சாரா… நான் வர லேட்டானா சாப்பிட்டு தூங்கிடு. நான் ஏதும் ரிப்ளை பண்ணலலன்னா சோகமாயிட்டு பீல் ஆகாத.. நான் பேஷண்ட் வச்சி அதுக்கேத்த மாதிரி வருவேன்.” என்று கூற அவன் கூற வரும் சாரம்சம் புரிய, சாரா இமை மூடி பார்த்துக்கறேன் என்று உரைத்தாள்.

 

ஐயப்பன் மருத்துவமனையில் ஜோசப்பிற்கு சிகிச்சை அளித்திருக்க, சார்லஸ் வந்து சேரும் போது ஐயப்பன் சோர்ந்திருந்தார்.

 

“என்ன டாக்டர்.. .சீரியஸ் ஆகிடுச்சா? நேத்து ஸ்டாபிளா இருந்தான். இப்ப சடனா டிராப்ல இருக்கான்னு சொல்லறிங்க” என்று கேட்டான்

 

“என்னத்த சொல்லறது சார்லஸ்… ஏதோ போன் எடுத்துட்டு வரச்சொல்லியிருக்கான். வில்லியம்ஸ் அவரும் போன் தானே, ஹாஸ்பிடலில் பிரெண்ட்ஸ் கூட பேச கேட்டான்னு எடுத்துட்டு வந்து தந்திருக்காங்க.

 

போன் கேஸுக்குள்ள ஏதோ டிரக்ஸ் வச்சிட்டு இருந்தான் போல. அதை வில்லியம்ஸ் கவனிக்கலை. இங்க வந்து அதை வில்லியம்ஸும் தந்துட்டார்.

மனசு மாற நினைச்சவன், டிரக்ஸ் பார்த்ததும் மனசு அதை யூஸ் பண்ண மைண்ட் சொல்லவும், வில்லியம்ஸுக்கும் சிஸ்டர்ஸுக்கும்  தெரியாம டாய்லெட் போய் அங்க யூஸ் பண்ணிருக்கான். மருந்து மாத்திரை எது கொடுத்தும், இப்ப அந்த கெமிக்கல் வேறனு உடம்பு மருந்து மாத்திரை கண்ட்ரோல் இல்லாம போயிடுச்சு. உயிருக்கு ஆபத்தான கண்டிஷன்ல தான் இருந்தான்.

 

ஆனா எவ்ளோ நேரம் பிழைக்க வைக்க போராடறது. ஒரு உயிரை பிழைக்க வைக்க டாக்டர்ஸ் மட்டும் போரட முடியாது. அதை விட பேஷண்ட் தான் பிழைக்க மனசால் மீண்டு வரணும். அவன் செத்துட்டான் சார்லஸ். சாகற நேரம் என்னை காப்பாத்துங்க டாக்டர்னு கையை பிடிச்சான். காலம் முடிச்சிவிட்டுடுச்சு” என்றுரைத்தார்.

 

சார்லஸுக்கு எத்தனை முறை உயிரை காப்பாற்றி அல்லல்பட வைத்தான். ஆயுசு கெட்டு பிழைத்து நடமாடி, உலகில் காதலை தாண்டி பல உன்னதமான உணர்வும் அன்பும் உண்டென வாழ்ந்து காட்டுவானென நினைத்தான். இன்று ஜோசப் இறந்ததை கேட்டதும் வருத்தம் உண்டானது. இங்கு வரும் வரை உயிரோடு இருந்து சற்று முன் இறந்ததாக கூறியதும் இனி என்ன செய்வதென்ற மனநிலையில் சார்லஸ் இருந்தான்.

 

ஐயப்பனோ “ஜோசப்போட அம்மாவுக்கு அவன் நிலை புரிந்துடுச்சு.

தபித்தாள் என் கையை பிடிச்சிட்டு வில்லியம்ஸிடம் மருந்து மாத்திரை அவனுக்கு ஏத்துக்கலை என்று சொல்லுங்க. மத்தபடி மறுபடியும் டிரக்ஸ்.. அதுவும் அவரால ஜோஸப் கைக்கு போனதா சொல்லாதிங்கனு கெஞ்சறாங்க. நான் என்ன செய்யறது சார்லஸ். சப்போஸ் ஜோஸப் இறப்புல சந்தேகம்னு அவர் ஏதாவது கேஸ் பைல் பண்ணி போஸ்ட்மார்ட்டம் பண்ணினா டிரக் யூஸ் பண்ணியது தெரியும் தானே.

என்னால இந்த மாதிரி மாத்தி சொல்ல முடியாதுனு சொல்லிட்டேன். நர்ஸிடம் சொல்லி வில்லியம்ஸுக்கு விஷயத்தை கன்வே பண்ணிட்டேன். தலையில தலையில அடிச்சிட்டு அழறார். தபித்தாள் வெறிச்சோடிய பார்வையில் இருக்காங்க.

 

ஒரு பேஷண்ட் உயிருக்கு ஆபத்துனு வந்து அவங்க அப்பா அம்மாவையும் இப்ப லைப் லாங் பேஷண்டா மாத்திட்டான் ஜோசப்.” என்று இத்தனை முறை உயிரை காப்பாற்றியும் இறந்தவனை எண்ணி எரிச்சலுடன் நகர்ந்தார்.

 

சார்லஸோ அங்கிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தான்.

 

சார்லஸ் வாழ்வில் பல பேஷண்டை கவனித்து கவுன்சிலிங் செய்து மனதை மாற்றியவன்.

 

மொடாக் குடிக்காரர்களையும், டிரக்ஸ் அடிக், புகைப்பிடித்து அதிலிருந்து மீள விரும்புவருக்கு, கூட்டு கற்பழிப்பில் கற்பிழந்த பெண்ணுக்கும், காதல் தோல்வி, படிப்பில் குறைந்த மதிப்பெண், கடனில் உயிரை மாய்க்க முயலுபவர்கள், கணவன் மனைவி சண்டை, குழந்தைகளுக்கான டிப்ரஸன், போன்ற எத்தனையோ பேஷண்டை பார்த்து வந்துவிட்டான். காதல் தோல்வி என்று இதே போல உயிரை மாய்க்க சென்று கவுன்சீலிங் செய்து நல்லபடியாக வாழும் இளைஞன் இளைஞிகளை கண்டவனே. அப்படியிருந்தும், இந்த ஜோசப் இறப்பை ஜீரணிக்க இயலாமல் இருந்தான்.

 

வில்லியம்ஸ் தெரிந்தவர், ஒவ்வொரு முறையும் சர்ச்சில் கர்த்தர் முன்னே தன் காலில் விழுந்து மகனை நலம் பெற வைக்க யாசித்ததால் கூட, இந்த இறப்பால் மனம் வேதனை கொள்வதை உணர்ந்தவனாக இருந்தான்.

 

வில்லியம்ஸ் தபித்தாள் அழுது கரைவது செவியில் கேட்டது.

 

எல்லா நேரமும் மருத்துவம் பார்க்கும் நாயகன், அவனது பேஷண்டை உயிர் காத்திடும் வல்லவை இறைவன் தரமாட்டாரே. அவரோடு இறப்பால் அணைத்துக் கொள்ளும் பேஷண்டும் உண்டு என்று புத்திக்கு புரிந்தாலும் மனதிற்கு வலித்தது.

 

தபித்தாள் வில்லியம்ஸ் இருவரும் மகனின் உடலை வாங்கி செல்வதற்குள் சார்லஸ் நிலைக் குலைந்து போனான்.

 

அந்த நேரம் சாரா அழைத்திடவும், அட்டன் செய்தான்.

 

“டாக்டர் சாரே… ஜோசப் சுகமாயி?” என்று கேட்க, “ஜோசப் இறந்துட்டான் சாரா” என்றான் விரக்தியாக.

 

“சாரே… நிங்கள் எந்த பறைஞ்சே.. இவ்விட சரியா கேட்டில்லா. ஜோசப்புக்கு சுகமாயி?” என்று கேட்டதும், எங்கே சாரா ஏதாவது பயந்து ஓட்டுக்குள் சுருங்கிடுவாளென நேரில் சொல்வோமென, “நான் வீட்டுக்கு வர்றேன் சாரா. வந்து பேசறேன்” என்று போனை துண்டித்துவிட்டான்.

 

சாராவுக்கோ ஜோஸப் இறந்ததாக கேட்டது பிரம்மை என்றே நினைத்தாள். சார்லஸ் வந்ததும் மீண்டும் கேட்போமென, சமையலை கூட சுருக்கமாக செய்து வைத்துக் கொண்டு வாசலை ஏறிட்டாள்.

 

சார்லஸ் வீட்டிற்கு வரும் பொழுதே தளர்ந்த நடையுடன் வரவும் சாரா முகத்தை வைத்தே ஏதோவொன்று என்று அமைதியானாள்.

 

“டாக்டர் சாரே… சோர்வா இருக்கு. நான் சாயா போட்டு வரவா?” என்று மெதுவாக கேட்டாள்.

 

சார்லஸ் வேண்டாமென மறுத்து, அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

 

சாராவுக்கு என்ன இது என்று புரியாமல் முழிக்க, “செத்துட்டான்… சாரா…  இடியட்… வாழ தெரியாதவன். செத்துட்டான் சாரா செத்துட்டான். பிழைக்க வச்சி, பிழைக்க வச்சி எவ்ளோ போராடினேன். இப்ப போயிட்டான்” என்று கூறியதும் சாரா அதிர்ச்சியானாள்.

 

சார்லஸோ ”ஒரு மாதிரி பண்ணுது சாரா. எல்லா பேஷண்டும் என்னிடம் கவுன்சிலிங் வருவாங்க. ரிட்டர்ன் போறப்ப மனதிடத்தோட தான் போவாங்க. எத்தனை பேர் ஆப்டர் ஒரு லைப்பை காட்டியிருக்கிங்கனு என் கையை பிடிச்சு சந்தோஷமா பேசி, குழந்தை குட்டினு வந்து சொல்வாங்க தெரியுமா? இந்த ஜோஸப் விஷயத்தில நான் தோற்றுட்டேன். இதுக்கு முன்ன இது மாதிரி ஆனதேயில்லை. லவ் பிரேக்கப்னு சொல்வாங்க. லவ் பெயிலியர், ஏன் லவ் பண்ணின பொண்ணு செத்து போச்சுனு ஜோஸப் கேஸ் மாதிரி கூட வந்திருக்காங்க. எல்லாம் க்யூர் பண்ணிருக்கேன். பட் இவனை நான் சரிப்பண்ணிருக்கணும்.” என்று தலையை பிடித்து எழுந்தான்.

 

”டாக்டர் சாரே… நிங்கள் ட்ரீட்மென்ட் நன்னாயி பார்த்து. ஜோஸப் சேட்டனுக்கு இ.. பிரபஞ்சத்தில் வாழும் காலம் முடிஞ்சியிருக்கும்” என்று கூறினாள். சாராவுக்கும் இந்த பேஷண்ட் ஜோஸப்பை ஒரு நாள் சந்தித்து பேச வேண்டுமென ஒரு உந்துதல் இருந்தது. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஏன் பார்க்கவும் வேண்டாமென போய் சேர்ந்தப்பின் அதிர்ச்சியே மிஞ்சியது. இதில் சார்லஸ் வேறு, ”இல்லை… நான் ஜோஸப்பை சரியா ட்ரீட்மென்ட் பண்ணலை. இதே மேரேஜிக்கு முன்னாடின்னா பேஷண்ட், சிட்டிங்கு வரலைன்னு நானா போய் என்னனு பார்த்து கவுன்சிலிங் பண்ணிருப்பேன்.

என்னோட மேரேஜ்னால நான் பேஸண்ட் கவுன்சிலிங் டைமை க்ளேஸ் பண்ணிட்டேன்.” என்றவன் தண்ணீரை அருந்தினான்.‌

 

சாரா திடுக்கிட்டு

நின்றாள். தங்களது விவாகம் சார்லஸ் வேலையை பாதித்ததா? என்ற வண்ணம் ஸ்தம்பித்தாள்.

 

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

 

6 thoughts on “பிரியமானவரே என் தேவதூதனே-21”

  1. Omg Charles again u are hurting sara? Its ur profession. In that u should face ups and down. Its quite natural. So stay strong doctor. Very intresting sis.

  2. பிரியமானவரே என் தேதூதனே…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 21)

    அட ராமா ! இம்புட்டு ட்ரை பண்ணியும் கடைசியில ஜோசப் இப்படி ட்ரக்ஸ்ஸாலயே போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுடுச்சே…? பாவம் ஜோசப்.

    இப்ப சார்லஸ் வேற ஜோசப் இறந்த குற்றவுணர்ச்சியில வார்த்தையை விட்டுட்டான், இப்ப சாரா என்ன பண்ணப் போறான்னு தெரியலையே..?
    இவ கிட்ட ஒரு வார்த்தையை விட முடியலைப் பாருங்க.

    😌😌😌
    CRVS (or) CRVS 2797

  3. Charles ena pesurenu yosichi pesu sara ipo than sari agi ava manasu lesa agi Iruku nee thirumba atha ninaika vaikira mari pesura paru ena ithu oru phycology doctor pesura vithama ithu , ipo ava ena yosika poralo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!