நேசன் 5
மருத்துவரின் முன் அமர்ந்திருந்தாள் பிரியவாகினி நேசனின் நலம் பற்றி அறிந்து கொள்ள வேண்டி. நேசனோ ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருந்தான்.
“இதுக்கு முன்னாடி இது மாதிரி மயக்கம் போட்டுருகாரா?” மருத்துவர்.
“தெரிலயே டாக்டர். எங்களுக்கு ரீசண்டா தான் மேரேஜ் நடந்தது”
“உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை அல்லது வாக்குவாதம் ஏதும் நடந்ததா?”
“நோ டாக்டர்”
வேறெதுவும் கேட்காமல் மருத்துவ கோப்புகளையே உற்று நோக்கியவரிடம்
“டாக்டர் ஏதாவது பிராப்ளமா?”
பதற்றத்துடன் வினவியவளை அமைதிப்படுத்தியவர்
“நத்திங் டூ ஒர்ரி மிஸஸ் நேசன். கொஞ்சம் மன அழுத்தத்தில் இருக்கார். மனசு விட்டு பேசுங்க. நல்லா ரெஸ்ட் எடுக்க விடுங்க. சீக்கிரமே ரெகவர் ஆகிடுவாரு”
“ஓகே டாக்டர். தேங்க்யூ”
என்று மொழிந்தவள் நேசனை காணச் சென்றிருந்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் வதனத்தை பார்த்தவுடன் விழிகளில் நீர் கோர்த்தது. சேந்தன் அழைப்பு விடுக்க எடுத்து பேசினாள்.
“பயப்பட எதுவும் இல்லைப்பா. நான் பாத்துகிறேன். வீட்டில் யாரும் இல்லைனா சாஷாவும் ரோஜாவும் ரொம்ப வம்பு பண்வாங்க. நீங்க வர வேணாம். இன்னும் கொஞ்சம் நேரத்தில் நாங்களே வந்துடுவோம்”
என்று பேசி அணைத்து வைத்தவள் நேசனின் விழிப்புக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தாள்.
பிரியவாகினியின் தோளில் மயங்கிய நேசனை தண்ணீர் தெளித்து எழுப்ப செய்த முயற்சிகள் தோல்வியில் முடிய உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தவள் அலர்விழியிடமும் தகவலை பகிர்ந்திருந்தாள். மறுபடியும் அழைத்து பேசியவள் பயப்பட தேவையில்லை என்ற தகவலை சொல்லிக் கொண்டிருந்த போதே நேசன் விழித்திருக்க அழைப்பை துண்டித்திருந்தாள்.
“ஆர் யூ ஓகே நௌ?”
மெதுவாக தலையசைத்தவன்
“பயந்துட்டியா?” நேசன்
“ம்ம்ம்…. இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கிறதா?”
“ஒரேயொரு தடவை நினைக்கிறேன். நீ நல்லா இருக்கல்ல?”
“நான் எப்படி இருக்கேன்னு நீங்க தான் சொல்லனும்”
“வீட்டுக்கு போகலாமே பிரியா எனக்கு அம்மாவை பார்க்கனும் போல இருக்கு”
சிறுபிள்ளையாய் அடம் பிடித்தான்.
மருத்துவரிடம் சொல்லி அனுமதி பெற்று நேராக நேசனின் வீட்டில் போய் இறங்கினார்கள்.
“எப்பா தம்பி நேசா என்ன ஆச்சு?”
என்று வாசலில் நின்றபடி அலர்விழி கண்கலங்க பொழிலன் அதட்டினார்.
“வீட்டுக்கு உள்ள கூப்பிடு அலர் இப்படி வாசல்லயே நிற்க வைத்து பேசுவியா?”
நீள் மெத்திருக்கையில் அமர்ந்தவன் மேலே அவர்களது அறையை தான் பார்த்தான். ஓய்வெடுக்க விரும்புகிறானென்று அனைவரும் நினைத்திருக்க அவனின் தேடலோ வேறாக இருந்தது.
“பயப்பட ஒன்னும் இல்லை அத்தை சடர்னா மயங்கி விழுந்துட்டாரு”
“டாக்டர் என்னமா சொன்னாங்க?” பொழிலன்
“ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க மாமா. மனசு விட்டு பேசினாலே சரியாகிவிடும் சொல்லியிருகாங்க”
“அவன் தான் பேசவே விட மாட்டானே வேலை வேலைனு ஓடுவான்” அலர்விழி
“அலர் சும்மா இருக்கமாட்ட. நீ அவனை கூட்டிட்டு மேலே போய் ரெஸ்ட் எடுக்க வைமா” பொழிலன்.
கைத்தாங்கலாக அறைக்கு அழைத்து வந்த பிரியவாகினி நேசனை படுக்க வைத்து விட்டு குளியலறை சென்றாள்.
வெளியே வந்தவள் அறை வெறுமையாக இருப்பது கண்டு கீழிறங்கி வந்து தேடினாள். அலர்விழியிடம் தண்ணீர் வேண்டும் என்று சொல்லி வாங்கிச் சென்றிருந்தாள். இப்பொழுது அறையில் நேசன் அமர்ந்திருந்தான்.
“எங்கே போனீங்க?”
“நா..நான் இங்க தான் இருக்கேன். எங்கே போக போறேன். சரி எனக்கு டயர்டா இருக்கு நான் தூங்க போறேன்”
என்றவன் படுக்கையில் திரும்பி படுத்துக் கொண்டான். யோசனையுடன் அவனருகில் படுத்தவள் தானும் உறங்கிப் போனாள்.
இரவு உணவை அறைக்கு கொண்டு வரவைத்து உண்டு விட்டனர். சிறிது நேரம் நடக்கலாம் என்று மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள் பிரியவாகினி. வெறுமையாக காட்சியளித்தது மொட்டைமாடி.
இரவின் நிசப்தம். இருளின் காதலன் சந்தமாமா வெண்ணிற ஆடையணிந்து பாலொளியை பரணியெங்கும் வீசி குளிர்வித்துக் கொண்டிருந்தான். மென்காற்று தேகத்தை ஸ்பரிசித்து காதல் மொழி பேசிச்செல்ல காதல் பறவைகளோ ஒருவருக்கொருவர் பார்த்தபடியே தரையில் அமர்ந்தனர்.
“நானும் ருத்துவும் இப்படி தான் சந்தமாமா சந்தமாமானு நிலாவை கூப்பிட்டு விளையாடுவோம் பிரியா. அப்பா அம்மாக்கு அப்புறம் அண்ணா தான் எனக்கு எல்லாமே. ருத்..”
“அப்ப நான்?”
“————-?”
“நான் உங்க மனசுல எங்கே இருக்கேன்னு கேட்டேன்?”
அவளின் கையை பிடித்து நெஞ்சில் வைத்தவன் அவன் இதயதுடிப்பை உணரச் செய்தான்.
“இந்த துடிப்பு நீதான் பிரியா”
நேயத்துடன் மொழிந்தவனை அணைத்துக் கொண்டாள்.
“ருத்துவுக்கு ஸ்வீட்னா கொள்ளை இஷ்டம். அம்மா மார்னிங் காய் கட் பண்ணும் போது அந்த சவுண்ட்க்கு ரெண்டு பேரும் ஆடுவோம் ரம்மியமான காலை வேளை அது. அவனுக்கு பார்க்ல ஊஞ்சலாட ரொ…”
என்றவன் தன் செவியிலிருந்த காதொலிப்பானை சரி செய்தப்படி மாடிப்படிகளில் கீழிறங்கி ஓடினான். நொடி நேரத்தில் நடந்த இதனை எதிர்பாத்திராத பிரியவாகினி தானும் எழுந்து கீழிறங்கி வர அவர்களின் அறையின் பக்கவாட்டிலிருந்து நிதானமாக நடந்து வந்தான் நேசன்.
“எதுக்கு இப்படி தலைதெறிக்க ஓடி வந்தீங்க? நான் என்னவோ ஏதோனு பயந்துட்டேன்”
“ஆங்.. சா.. சாரி பிரியா. எனக்கு டயர்டா இருக்கு. வா ரூம்க்கு போலாம்” என்று அறைக்கு அழைத்துப்போனான்.
இழுத்துப்போனான் என்பதே சரியாக இருக்கும். அவனின் செய்கைகளை மனதில் குறித்து வைத்தவள் அவன் இழுத்த இழுப்பிற்கே சென்றாள்.
“காலில் பிளட் வருது பாருங்க. உட்காருங்க”
என்றவளாய் காயத்தை சுத்தம் செய்து மறுபடியும் கட்டுப்போட்டு விட்டாள்.
“பிரியா நீ ஏதோ பிஸ்னஸ் பண்ண போறதா சொல்லிட்டே இருந்தியே. எப்ப ஸ்டார்ட் பண்ண போற?”
“பண்ணணும்ங்க. டிஸ்கஸிங் போயிட்டு இருக்கு”
என்றவள் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். முகத்தில் தண்ணீரை வேகமாக ஊற்றி தன்னை சமநிலைப் படுத்திக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவளை இமைக்காது பார்த்திருந்தான் நேசன்.
வதனமெங்கும் நீர்த்துளிகள் அங்கங்கே பூத்திருக்க ரசனையுடன் பார்த்திருந்தவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளில் வைத்து பொதிந்து
“ஐ லவ் யூ பிரியா”
என்றிருந்தான். காதல் மொழி பேசிய விழிகள் தங்கள் முதல் சந்திப்பினை நினைவுக் கூர்ந்து தித்தித்தன.
அன்றைய பொழுது காலை வேளையில் பிரியவாகினி தோட்டத்திலுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவள் காய்ந்த இலைகள் சருகுகளை அகற்றி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“இஷாம்மா இன்னைக்கு உன்னை பொண்ணு பாக்க வருவாங்கனு சொல்லியும் இங்கயே வந்து நேரத்தை கடத்துறீயே. கொஞ்சமாது அலங்கரிச்சிக்கடா”
என்றவாறு தமிழினி சத்தம் போட அவள் பதில் சொல்லும் முன் பின்னிருந்து
“வ்வவவவ் வ்வவ் வ்வவ்”
என்று திட்டும் குரல் கேட்டது. என் சகோதரியை திட்டினாள் நான் வந்து நிற்பேன் எனும் தோரணையில் சாஷா வந்து நின்றிருந்தாள்.
“என் செல்ல அம்மா நேச்சுரலா கடவுள் எனக்கு என்ன அழகை பரிசா தந்திருகாங்களோ அதுவே போதும்மா எனக்கு. உங்க மாப்பிள்ளைக்கு பிடிக்கலைனா போக சொல்லுங்க”
என்றவள் நினைவு வந்தவளாக
“ம்மா இன்னைக்கு க்ரூமிங்க்கு அப்பாயிண்மென்ட் போட்ருக்கேனே”
“அதலாம் முல்லையா பாத்துப்பான். நீ போய் ரெடியாகு” என்றிருந்தார்.
அதே காலை வேளையில் காரசாரமான விவாதம் தித்திக்கும் தேநீர் பருகிடும் வேளையில் நடைப்பெற்றது ப்ரியநேசனின் வீட்டில்.
“மாம் கல்யாணத்துக்கு மட்டும் தான் நான் ஓகே சொல்லிருக்கேன். மத்தபடி என் ப்ரைவேசி விஷயத்தில் யாரும் தலையிடக்கூடாது. அண்ட் ஒன்மோர் திங்க் நானா தான் எல்லா விஷயத்தையும் லைப் பார்ட்னர் கிட்டே ஷேர் பண்வேன் நீங்க எதுவுமே சொல்ல கூடாது. ப்ராமிஸ் பண்ணுங்க”
என்று ஒற்றைக்கால் கொக்கினை போல ஒற்றை முடிவில் உறுதியாக கேட்டு நின்றிருந்தான். பொழிலனும் அலர்விழியும் சம்மதித்த பிற்பாடே கிளம்பி தயாராகி வந்து நின்றான்.
“போட்டோவில் பார்க்கும் போதே உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருந்தது. கல்யாணத்தை எப்ப வைச்சிக்கலாம்னு தான் பேச வந்தோம்”
என்பதாக பொழிலன் ஆரம்பித்தார்.
“ரொம்ப சந்தோஷம்ங்க. எங்க பொண்ணுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்ங்க. தமிழு இஷாவை அழைச்சிட்டு வாமா” என்றிருந்தார் சேந்தன்.
எவ்வித ஆர்ப்பாட்டமின்றி அலங்காரமின்றி இயல்பான ஒப்பனைகளுடன் வந்து நின்ற இஷியா பிரியவாகினியை ப்ரிய நேசனுக்கு ரொம்பப் பிடிந்திருந்தது.
அந்நேரத்தில் அவனுக்கு தொடர்ந்து அலைபேசி அழைப்பு வேறு வந்தவண்ணம் இருக்கவே எழுந்தவன் அவளின் அருகில் வந்து நின்றிருந்தான்.
அனைவரும் அவர்களையே பார்த்திருக்க அவனோ அவனவளின் ஹேசல் விழிகளை நேர் கொண்டு பார்த்து தன் கைகளில் அவளது கைகளை பொதிந்து
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிக்கும்னு நம்புறேன். உன் எண்ணங்களின் பிரதிபிம்பமா நான் இருப்பேன்”
என்றவன் கைகளை மென்மையாக விடுவித்து
“டோண்ட் மிஸ்டேக் மீ. அர்ஜெண்ட் அபிஷியல் கால்ஸ் கண்டினியூஸ்லி வருது சோ நான் கிளம்பனும். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்”
அனைவரையும் பார்த்து பொதுவாக சொன்னவன் கடைசி வார்த்தையை அவளைப் பார்த்து சொல்லியிருந்தான். அவன் விருப்பம் தெரிவிக்க அணுகிய விதத்திலேயே வதனம் செம்மையை பூசியிருக்க மீண்டும் தனக்கு மதிப்பளித்து சொல்லி சென்றவனை மிகவும் பிடிந்திருந்தது.
அவளும் சம்மதம் தெரிவித்த பின்னர் ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவாகி பிரியவாகினியின் குல தெய்வம் ஊரான குறுங்கை பொழிலூரில் திருமணத்தை முடித்திருந்தனர்.
நினைவுகளின் தித்திப்பிலிருந்து மீண்ட நேசன் அவளின் பிறை நுதலில் இதழ் ஒற்றினான். அதில் சிலிர்த்தவள் அவன் அன்பிற்குள் மெல்ல மூழ்கத் தொடங்கினாள்.
நாட்கள் அதன்போக்கில் நன்றாக தான் சென்றன. நேசன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். பிரியவாகினியையும் தனது தொழில் தொடங்கும் விஷயமாக அலைந்துக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல் நன்றாக போய்க்கொண்டு இருந்த இல்வாழ்வில் மீண்டும் ஒரு புதிராக நேசன் நடந்துக் கொண்டான்.
காதில் எந்நேரமும் காதொலிப்பானை வைத்திருந்தவன் வீட்டிலிருக்கும் சமயம் சில நேரங்களில் காணாமல் போனான்.
அப்படி ஒரு நாள் சமையலறையில் இருந்து வெளியே வந்த பிரியவாகினி கண்டது தங்களது அறையை கடந்து சுவர் போலிருக்கும் கதவினை திறந்து கொண்டு வெளியே வந்த நேசனை தான். இவள் கவனித்ததை நேசன் பார்த்திடவில்லை. அசைவற்று நின்றவளை அலர்விழி என்னவென்று வினவ கேட்டே விட்டிருந்தாள் பிரியவாகினி
” இந்த வீட்டில் இன்னும் என்னென்ன ரகசியம் இருக்கும்னே தெரியலையே அத்தை. நேசன் என் எண்ணங்களின் பிரதிபிம்பமா இருப்பேன்னு வாக்கு கொடுத்தார். ஆனால் இப்பவரைக்கும் அவருக்கு சாஷாவும் ஆகாது என் விருப்பங்களும் ஆகாது. இப்ப வீட்டுகுள்ளயே சீக்ரெட் ரூம் இருக்கு. என்ன தான் நடக்குது இங்க”
“அவன் எங்க வாயை கட்டிப்போட்டுட்டான்லாம் சொல்லி நழுவ மாட்டேன்மா. நீயே எல்லாம் தெரிஞ்சிப்ப. தெரிஞ்சிக்கும் போது அதை ஹேண்டில் பண்ற பக்குவம் உனக்கு இருக்குனு தான் இத்தனை நாட்களா அமைதியா இருந்தோம்”
அலர்விழி சொல்வதை கேட்டிருந்தவள் நேரே அறைக்கு செல்ல
“எங்கே போன இவ்வளவு நேரம்? சரி சரி நான் கிளம்புரேன் டைம் ஆச்சு. முக்கியமான மீட்டிங் இருக்கு இந்த பைல் எடுக்க தான் வந்தேன்”
என்றவன் அவள் பதிலைக்கூட கேட்காது விறுவிறுவென்று இறங்கிச் சென்றுவிட்டான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் எழுந்து பக்கத்து அறைக்குள் நுழைந்தாள். அவள் வெளியே வரும் போது அவளுடன் இரு ஆடவர்கள் வெளியே வந்திருந்தனர்.
பிரியமானவள் வருவாள்…
🎶
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி
நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி
நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே
நான் என்றும் மிதப்பேன்
காவேரி மணலில் நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்
🎶
ena ragasiyam athu yaru antha room la irukanga
நேசன் புதிரானவன் … என்ன தான் பிரச்சனை அவனுக்கு. .. அந்த ரூம்ல என்ன ரகசியம் இருக்கு. .
இரண்டு பேரோட வந்தால் அவங்க யாரு
Interesting