நேசன் 6

விபினம் பற்றி எரிந்தது போல் வதனமெங்கும் செந்சாந்துடன் காற்றுக்கு இணையாக சினத்துடன் உள் நுழைந்த நேசன், உணவு மேஜையில் அமர்ந்து உண்பவனை பார்த்ததும் தணிந்தான் கொஞ்சமே கொஞ்சமாய்.
பிரியவாகினியை தன்னருகே இழுத்தவன் ஒட்ட வைத்த சிரிப்புடன் அவள் செவியருகே அடித்தொண்டையிலிருந்து குரலெடுத்து சீறினான்.
“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க பிரியா? உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்க”
அவன் அழுத்திய அழுத்தத்தில் கைகளில் வலி எடுத்தது.
“கையை விடுங்க நேசன் இட்ஸ் ஹர்ட்ஸ்”
“நீயும் அதை தான் பண்ணுற பிரியா”
“என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்க முன்னாடி இப்படி நடந்துகாதீங்க?”
“உனக்கு என்ன நடந்ததுனே தெரியாது”
“ம்ம்ம் விடுங்க, என்னனு சொன்னா தானே தெரியும்”
“உன்கிட்ட நான் எதுக்கு சொல்லனும்? என்கிட்ட கேட்டு தான் எல்லாம் செய்கிறாயா?”
“ந்ந்நீ சா..ப்..டு..ரி..யா?”
மெது மெதுவாகவே பேசினான் உண்டுக்கொண்டிருந்த ஆண்மகன் நேசனிடம்.
“இல்லைடா. நீ சாப்பிடு. நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன். உனக்கு நான் ஊட்டி விடவா?”
“வ்வ்வெ..வே..ணா.. ந்ந்நா..னா..”
“சரி விடு நீயே சாப்பிடு. நான் இதோ வந்துரேன்”
என்றவன் தன்னவளின் கைகளை இழுத்துக்கொண்டு செல்ல மெத்திருக்கையில் கண்ணீருடன் அமர்ந்து இருந்த அலர்விழி அருகில் வந்து அமர்ந்தார்.
எதுவும் பேசாமல் அறைக்கு இழுத்து வந்தவன் இன்னும் குறையாத கோவத்துடன்
“என் விஷயத்தில் இண்டர்ஃபயர் ஆகுற ரைட்ஸ் உனக்கு யார் கொடுத்தது? என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காமல்…”
“என்ன பேசுரீங்கனு தெரிஞ்சி தான் பேசுரீங்களா?”
“இந்த விஷயத்தை இதோடு விட்ரு பிரியா. எல்லாருக்கும் கஷ்டத்தை கொடுக்காதே”
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. என் ப்ரெண்ட் டாக்டர் தான். அவள் என்ன சொல்கிறாள்னு பார்த்து விட்டு உங்கள் விருப்பம் போல நடந்துகிறேன்”
“ப்ச்… நான் வர்க் விஷயமா பெங்களூர் போறேன் வர டென் டூ பிப்டின் டெய்ஸ் ஆகலாம். அதுவரை நான் என்ன என்னனு பயந்துட்டே இருக்கனுமா?”
“ஓகே போய்ட்டு வாங்க. அவருக்கு என்ன ஆச்சுனு சொல்லுங்க? அத்தை அழுதுட்டே இருகாங்க கேட்டாலும் எதுவும் சொல்லமாட்டேங்குறாங்க. மாமாவும் இன்னும் வீட்டிற்கு வரவில்லை”
“அதற்கு தான் சொன்னேன் எல்லாரையும் கஷ்டப்படுத்தாதேனு”
“என்ன ஆச்சு அவருக்கு நீங்களாது சொல்லுங்க?”
“அது.. அது” என்றவன் தங்கள் கடந்த கால கசப்பான நினைவுகளை அவளிடம் சொல்லியவன் உடைமைகளை எடுத்து கொண்டு புயலாய் வெளியேறியிருந்தான்.
பெருமூச்சுடன் கீழே இறங்கி வந்தவள் அலர்விழியின் கைகளை ஆதுரமாகப் பற்றிக்கொண்டாள்.
💭மாலையில் நேசன் வெளியேச் சென்றதும் அவர்களது அறையை கடந்து பக்கவாட்டில் கைப்பிடி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தவள் கண்களில் சிறிய பட்டன் தெரிய அவற்றை அழுத்தவும் கதவு மெல்ல திறந்தது.
மெத்திருக்கையில் நேசனின் சாயலை ஒத்த ஆடவன் கண்களை மூடி படுத்திருந்தான். அவனுக்கு தட்டிக்கொடுத்தபடி மற்றொருவன் அருகில் அமர்ந்து தன் அலைபேசியில் அவனது குடும்பப் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அரவம் கேட்டு திரும்பியவன்
“மேடம் நீங்க இங்க… ரூம் மாறி வந்துடீங்களா?” என்றவன் கேட்டான்.
“நீங்க யார்? இங்கு என்ன பண்றீங்க? இவர்…”
“மேடம் நான் ஓவிய முத்து. பர்மா ஹாஸ்பிடல்ல செவிலியரா வேலை பாத்துட்டு இருந்தேன். இவர் சாரோட அண்ணன் ருத்ர நேசன். ஒரு ஆக்ஸிடண்ட்ல இவருக்கு கொஞ்சம் நினைவு தப்பி போயிருச்சி. சில வருஷமா நான் தான் பாத்துட்டு இருக்கிறேன் மேடம்”
“ஓ.. சரி இவருக்கு ட்ரீட்மெண்ட் எதுவும் பாக்கலயா?”
“இல்லை மேடம். இவர் வெளியே வந்தாலே ரொம்ப பயப்படுவாரு நடுங்குவாரு. அதுக்காகவே ரூம்லயே அடைச்சி வச்சிருகாரு சார். மேடம் எனக்கு ஒரு ரெண்டு நாள் லீவு வேணும் சார்கிட்ட சொல்லி வாங்கி கொடுங்க மேடம் என் புள்ளைக்கு பிறந்த நாள் வருது இந்த தடவையாது வாங்கனு சொல்றா பொண்டாட்டி”
“ஓகே நான் சொல்றேன். இவர் எப்ப எழும்புவாரு?”
“இப்பதான் சார் வந்து தூங்க வச்சிட்டு போறார். எழுந்துக்க நேரம் ஆகும்”
இவர்கள் பேச்சுச் சத்தத்தில் எழுந்து அமர்ந்து இவர்கள் பேசுவதையே பார்த்திருந்தவன் பிரியவாகினியை கண்டு பயந்து வெளிறிய முகத்துடன் தள்ளி அமர்ந்தான்.
“ரிலாக்ஸ் ரிலாக்ஸ். நான் உங்க ப்ரெண்ட் தான் ஓகே” என்றவள் ஆதுரமாக கைகளைப் பிடித்து தட்டிக் கொடுத்தாள்.
அந்த அறையில் ஒலிவாங்கி உள்ளமைக்கப்பட்ட கருவி ஒன்று இருந்தது. அதன் வழியே கேட்டிருந்த நேசன் தான் சினத்துடன் வீட்டிற்க்கு வந்திருந்தான்.
இருவரையும் அறையிலிருந்து கூட்டி வந்து முகப்பறையில் அமர வைத்தவள்
“அண்ணா நீங்க வீட்டுக்கு போய் உங்க பேமிலியை பாருங்க. தேவைனா நானே கூப்பிடுறேன்”
என்றவளிடம் ஒரு கோப்பினை எடுத்து வந்து கொடுத்து விடைபெற்றான். அதில் ருத்ராக்கு பிடித்த பிடிக்காத செய்யும் செய்யாத விஷயங்கள் அனைத்தும் இருந்தது.
அலர்விழி ருத்ராவை பார்த்ததும் அழத்தொடங்க
“அத்தை இப்படி அழுது அவரை இன்னும் பயமுறுத்த போறீங்களா? ரிலாக்ஸ்”
ருத்ரா வீட்டினை சுற்றிச் சுற்றி பார்த்திருந்தான். ஒருவித ஒவ்வாமையுடன் பதற்றம் பயம் கலந்த உணர்வுடன் அமர்ந்திருந்தான்.
அவனின் பார்வையெல்லாம் பிரியவாகினியிடமே. அவளின் அன்பான அரவணைப்பு அவனை அவள் மீது நம்பிக்கைக் கொள்ள வைத்தது. பசியெடுக்கவே தட்டினைக் கையிலெடுத்து நிற்க பிரியவாகினி அவனை அமர வைத்து சாப்பிட வைத்தாள்.
அந்நேரத்தில் தான் நேசன் வந்து சண்டையிட்டு சென்றான்💭
உண்டு முடித்தவுடன் மெத்திருக்கையில் போய் படுத்துக்கொண்டான். ஆனால் அவனுக்கு படுப்பதற்கு இணக்கமாக இல்லை. அலர்விழியை அமரச் செய்து அவரது மடியில் தலை வைத்து படுக்க வைத்தாள். இருந்தும் பதற்றம் இருந்தது அவனிடம்.
“அம்மா மடியில் படுத்து தூங்குங்க. உங்களுக்கு எது வேணும்னாலும் அம்மாகிட்ட கேளுங்க. என்கிட்டயும் கேளுங்க” என்றவளிடம்
“அ..ம்..மா.. அ..ம்..மா” என்று அழைத்துப் பார்த்தான்.
“நான் தான்டா கண்ணா உன் அம்மா”
தன் மடியில் தலை வைத்து படுத்திருந்தவனின் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்தார்.
“அத்தை ஏன் இப்படி ரூம்குள்ள போட்டு அடைச்சி வச்சிருகீங்க? ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்னு தோணவே இல்லையா?”
“நாங்க இல்லைமா பிரியன் தான். அந்த இன்ஸிடண்ட்க்கு அப்புறம் ரொம்ப பயந்துட்டான் வெளியே வந்தாலோ யாரையும் புதுசா பாத்தாலோ ரொம்பப் பயபடுவான் பேசவே மாட்டான். எப்போதும் ஒரு மாதிரி சோர்வாவே இருப்பான்”
“ஓகே பட் ஹாஸ்பிடல்க்கு கூப்பிட்டு போய் பாத்துருக்கலாமே?”
“ஒரு தடவை அப்படி தான் கார்ல கூட்டிட்டுப் போய் நடு வழில காரை நிறுத்த வச்சு நடு ரோட்டில் ஓடி அவனை பிடிக்க முடியாமல் கடைசியில் கீழே விழுந்து அடிப்பட்டது தான் மிச்சம். அதிலிருந்து தான் பிரியன் ரொம்ப மாறிட்டான். எங்களை கூட ரூம்ல விட மாட்டான். நான் அழுதா உடனே ருத்ரா பயப்படுவான். அவன் தூங்கும் போது தான் எப்பவாவது போய் பாப்போம் அது கூட அவனுக்கு தெரியாது”
கண்ணீர் மல்க உரைத்தவரை பார்த்திருந்தவள் மனநல மருத்துவரான தன் நண்பி நனியினிக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து வர வைத்திருந்தாள் வீட்டுக்கு.
“ஹாய் டியர். ஹவ் யூ?”
“ம்ம்ம் உள்ள வா நனி. இவங்க தான் என் மதர் இன் லா. இவர் ருத்ர நேசன்”
“ஓ ஹலோ ஆண்ட்டி. ஹலோ ருத்ரா”
அவளைக் கண்டதும் நடுங்கியவன் பிரியவாகினியை கெட்டியாக பிடித்து கொண்டான்.
அவனின் நடுக்கத்தை கண்ட நனியினி
“ஹேய் ரிலாக்ஸ். நானும் உங்க ப்ரெண்ட் தான். இந்தாங்க சாக்லேட் சாப்பிடுங்க” என்று முதுகில் மெதுவாக வருடி தட்டி கொடுத்தாள்.
இரண்டு மூன்று நாட்கள் வந்து சாதாரணமாகப் பேசி நண்பர்களானார்கள்.
பிரியவாகினியிடம் அனைத்தும் கேட்டறிந்தவள் அவனுக்கு என்ன பிரச்சனை இருக்கலாம் என்று அறிந்து கொள்ள ருத்ராவிடம் பேச்சினை வளர்த்தாள்.
அவள் கொடுத்த பெர்ரி ஃப்ளவனி இன்னட்டும் (சாக்லேட்) அதற்கு உதவிச் செய்தது. இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூளையின் அத்தனை நரம்புகளும் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கும்.
“ஹேய் ருத்ரா நாம ஒரு கேம் விளையாடலாமா? இந்த ரூம்ல என்னலாம் இருக்குனு பாருங்க உங்களுக்கு தெரியுதா?”
“ஆ..மா தெரி..யும்”
“ஓகே உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்னலாம் இருக்கோ அத டச் பண்ணி காட்டுங்க பாப்போம். கமான் கமான்”
உற்சாகமாக குரல் எழுப்பினாள்.
ருத்ராவின் விழிகள் ஆர்வத்துடன் வலம் வந்துப் பின் பயத்துடனும் பதற்றத்துடனும் அலர்விழிப் பின் மறைந்து நின்றான்.
மறுபடியும் நனியினி அவனிடம் பேசி ஊக்கி அவனைப் பார்க்க வைத்தாள். முகப்பறையில் இருந்த ப்ரியநேசனின் புகைப்படம், கண்ணாடி ஜார், உணவு மேஜையில் இருந்த ஆப்பிள், கூவும் குயிலோடு இருக்கும் கடிகாரம் என சிலவற்றை மழலையாய் மாறி ஓடி ஓடித் தொட்டுக் காண்பித்தான்.
“வாவ் சூப்பர்” என்று கைகளைத் தட்டி ஊக்குவித்து
“ஓகே நெக்ஸ்ட் உங்களுக்கு என்னனென்ன சவுண்ட்ஸ் கேக்குது சொல்லுங்க பாப்போம்”
இரவுக் காதலன் நிலவன் வரும் நேரமாதாலால் நிசப்தமாக இருந்த அறையில் ‘டிக் டிக்’ கடிகார ஓசையும், சாலையில் கூவி விற்கும் வாழைப்பழ தள்ளுவண்டியின் சத்தமும், தூரத்தில் நாய் குரைக்கும் சத்தமும் வாகன இரைச்சலும் கேட்க ருத்ரனின் விழிகளில் அப்பட்டமாக பயமும் பதற்றமும் ஒட்டிக்கொண்டது.
“ருத்ரா என்ன ஆச்சு? இங்க பாருங்க என்னை பாருங்க ரிலாக்ஸ் ரிலாக்ஸ் எதுக்கு பயபடுறீங்க? நாங்க எல்லாரும் இங்கு தானே இருக்கோம். அந்த சவுண்ட் உங்களுக்கு பிடிக்கலயா? லீவ் இட்”
என்ற நனியினி ருத்ரனை மெத்திருக்கையில் அமர வைத்து
“ஓகே வேற கேம் இப்ப. கண்ண மூடுங்க. நான் உங்க கூடவே இருக்கேன் ஓகேவா பயபடக் கூடாது ரிலாக்ஸ். இப்ப என்னென்ன வாசனையை உங்களால் ஸ்மெல் பண்ண முடியுது சொல்லுங்க பாப்போம்”
விழிகளை மூடியவன் நனியினியின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு ஆழ்ந்து சுவாசித்தான். பயம் கலந்த பதற்ற உணர்வு அதிகமாக அவனுக்குள் கார்டிசால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அவனின் சிந்தனைகளை தடைச் செய்து மயக்க நிலைக்குத் தள்ளியது.
கார்டிசால் என்பது மன அழுத்தம் ஏற்படும் போது ஸ்டீராய்டு ஹார்மோன் அதிகமாக வெளியேறுவதால் ஏற்படும்.
“ஓகே ரிலாக்ஸ் ருத்ரன்.. வாகினி எனி டிரிங்க் ஹை சுகர்ல “
பிரியவாகினி உடனடியாக பழச்சாறு கலந்து வந்து கொடுத்தாள். அதனை குடித்தவுடன் மெத்திருக்கையில் சுருண்டுப் படுத்துக்கொண்டான்.
“நனி எவ்ரிதிங்க் இஸ் ஓகே? அவரை குணப்படுத்திடலாம் தானே?”
“எஸ். ஐ திங்க் ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்ல தான் இருக்கிறார். இவருக்கு இருக்கது டிஸ்அசோசியேட்டிவ் மெண்டல் டிஸ்ஸார்டர். அதாவது இவருக்கு ஏற்ப்பட்ட ஆக்ஸிடென்ட் இன்ஸிடண்ட்னால தன்னைச் சுற்றி இருப்பதை புரிஞ்சிக்கவும் அக்செப்ட் செய்யவும் கஷ்டப்படுவாங்க. ஓரளவுக்கு நாம சொல்றத புரிஞ்சி செய்தாரே பட் சவுண்ட் அண்ட் ஸ்மெல் பண்ண முடில மே பி சவுண்ட் கேட்க பயந்து அதனால் கூட ஸ்மெல் பண்ண முடியாமல் போயிருக்கலாம்”
“இப்ப என்ன பண்ணலாம் நனி? எதுக்கு இந்த கேம்?”
“அவரோட மைண்ட்செட் தெரிஞ்சிக்க தான். நான் சில மெடிசின் எழுதி தரேன் ரெகுலரா பாலோ பண்ணு. அவருக்கு எக்ஸாட்டா எதுக்கு பயம்னு தெரிஞ்சா நெக்ஸ்ட் மூவ் ஈஸியா இருக்கும்”
“வெளியே கேட்கும் சத்தம் கூட டிஸ்டர்ப்டா இருக்கலாம்”
சிறிது நேரம் பேசிவிட்டு தோழியிடமிருந்து விடைப்பெற்றாள் நனியினி. அனைத்தையும் பார்த்திருந்த அலர்விழிக்கும் பொழிலனுக்கும் தைரியமூட்டி அறைக்குச் சென்றாள்.
இருபது நாட்கள் கழித்து வீடு திரும்பிய நேசன் வீட்டில் நிலவிய இதமானச் சூழலையும் புது உறவினர்களாக வந்திருந்தவர்களையும் பார்த்து அதிர்ச்சியுற்றவன் உடனடியாக அவர்களை வெளியேறச் சொல்லி கத்தியிருந்தான் வீடு அதிர.
பிரியமானவள் வருவாள்…
🎶
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
🎶
Very interesting
நன்றி சிஸ்
very interesting . etho nadanthu iruku atha bayam nesan kum ipo avan anna rudra kum inum mela poi avarku concious illa sariya
ஆமா சிஸ் அடுத்த அத்தியாயத்தில் இதற்கான பதில் இருக்கும். நன்றி
Interesting😍