Skip to content
Home » புதுக்காவியம் அரங்கேறுது-2

புதுக்காவியம் அரங்கேறுது-2

புதுக் காவியம் அரங்கேறுது 2

தாயை அழைத்துக் கொண்டே வந்த தந்தையை கண்டவுடன் தனது அறைக்குள் சென்று மறைந்தாள் சஞ்ஜனா..

” எங்க உன்னோட பொண்ணு ” ??? என்று நீலகண்டன் கேட்க..

“இதோ இங்க தான் இருக்கா “.என்று காயத்ரியை கை காட்டினார் மீனாட்சி….

” நான் காயத்ரிய கேக்கல ..உன்னோட ரெண்டாவது பொண்ணு எங்க”???..

“உள்ள தான் இருக்கா”.
” கூப்பிடு அவள”!!.
“சஞ்சு இங்க வா.. அப்பா கூப்பிடுறாங்க பாரு”..
” ம்கூம் கேட்டுச்சு கேட்டுச்சு”.. என்று வாயை குணட்டி கொண்டே வந்த சஞ்ஜனா தன் தந்தை பார்த்தவுடன் ஏதும் அறியாதது போல் பவ்யமாக வந்து நின்று “சொல்லுங்கப்பா ” என்றாள்…
“இந்தா இதுல 5000 ரூபாய் பணம் இருக்கு. டூர் போறாங்க இல்ல உன்னோட காலேஜ்ல போயிட்டு வா”.என்று நீலகண்டன் கூற அதற்குள்…
” அப்பா செலவுக்கு 2000 அவளுக்கு போதாதா! ஏன் ஐய்யாயிரம் தரிங்க” ?என்று தந்தையை கேட்டாள் காயத்ரி…
“இவ ஒருத்தி போதும் எனக்கு தொல்ல குடுக்க. ஏம்மா இவள பெத்த? என்று தாயிடம் ரகசியமாக கேட்டாள் சஞ்சு…
அதற்குள் நீலகண்டன் ” இல்ல காயத்ரி பிரெண்ட் கல்யாணம் கிப்ட் இல்லாம போக முடியாது. அதுவும் இல்லாம போக போறது கன்னியாகுமரி போக வர செலவு அதிகமாகும் அதான் என்று காயத்ரியிடம் கூறிவிட்டு அப்படியே இளைய மகளிடம் திரும்பி ” இங்க பாரு சஞ்ஜனா நீ குளோஸ் பிரெண்ட் கல்யாணம் சொன்னதால தான் போக சொல்றேன் கல்யாணத்துக்கு போனோம், வந்தோமா ன்னு இருக்கணும். தேவை இல்லாம எதையாவது பிரச்சனை இழுத்து விட்டுட்டு வந்த தோலை உரிச்சிடுவேன் பார்த்துக்கோ”… என்று எச்சரித்தார்.
அவர் சொன்னதை கேட்டு தலையை சரி என்று ஆட்டினாள் சஞ்ஜனா..

” சொன்னது புரிந்தது தான மறுபடியும் அப்பாவ சொல்ல வைக்காத “என்றாள் காயத்ரி.

” இவள எல்லாம் என்ன செய்யறது? நல்லவளா! கெட்டவளா ன்னு தெரியல.. சிலசமயம் நல்லவன்னு நெனச்சு பேசினா அவளோட குணம் வெளில வந்துடுது… பார்த்து இருந்துக்கோ சஞ்சு என்று சஞ்சனாவை எச்சரிக்கை செய்தார் அவளின் தாய் மீனாட்சி.

பிற்காலத்தில் அவர் எச்சரிக்கை உண்மையாகும் என்று அறியாமல்.
” அம்மா நான் போய் ராகினி கல்யாணத்துக்கு கிப்ட் வாங்கிட்டு வரேன்.. அப்படியே பிரெண்ட்ஸ் யும் பார்த்துட்டு வரேன்” . என்று சஞ்ஜனா அம்மாவிடம் கூற ” ஊர சுத்தாம சீக்கிரம் வந்து சேரு சஞ்சு.! லேட் ஆகிட்டா அப்ப ரொம்ப கோவப்படுவாரு” என்று தன் தாய் கூறும் முன் காயத்ரி கூறினாள்.

“என்ன தான் உன் மேல அவளுக்கு கோவமோ? ஏதாவது சொல்லிட்டே இருக்கா. சரி நீ பாத்து போய்ட்டு வா. கிப்ட் வாங்க உன் கூட யார் , யார் வராங்க”.என்று சஞ்ஜனா விடம் மீனாட்சி கேட்க.

” நானு, இந்தர், ராஜி, வித்யா, சரண்யா மட்டும் வருவாளான்னு தெரியலம்மா” என்று சஞ்ஜனா கூற ” அப்ப எல்லா வாணரமும் போறீங்களா? என்றாள் காயத்ரி.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் “சரி சஞ்சு நீ கிளம்பு சீக்கிரம் வா ” .மீனாட்சி கூற “சரிம்மா ” என்று வாசலுக்கு சென்றாள் சஞ்ஜனா.

“அப்பா இங்க பாருங்க அப்பா ஒரு அக்கான்னு மரியாதை இல்லாம பேசிட்டே இருக்கும் போது பதில் சொல்லாம போற” என்று தந்தையிடம் காயத்ரி புகார் வாசிக்க.. “சின்ன பொண்ணு கூட உனக்கு என்ன போட்டி காயத்ரி போய் வேலையை பாரு சும்மா அவளையே ஏதாவது சொல்லிட்டு இருக்க” என்று மீனாட்சி அதட்டினார்..

இது போட்டி இல்லை பல வருட பொறாமை அந்த பொறாமையால் தன் சின்ன மகள் பட போகும் துயர் அறிந்து இருந்தால் இன்னும் கவனமாக இருந்து இருப்பரோ மீனாட்சி..

1 thought on “புதுக்காவியம் அரங்கேறுது-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *