தேவாவின் எம் டி தேவா வீட்டிற்கு வந்திருந்தார் வந்தவர் அனைவரிடமும் பேசிவிட்டு நான் ஒரு முக்கியமான விஷயமாக தான் வந்திருக்கிறேன் என்றார் .
“அனைவரும் அவரை கேள்வியாக பார்த்தவுடன் சிரித்த முகமாக தேவாவின் கையில் ஒரு கவரை வைத்தார் அப்பா என்னப்பா என்று கேட்டான் பிரித்து பாரு டா தெரியும் என்றார் “
“தேவாவும் ஒரு நிமிடம் அவரைப் பார்த்துவிட்டு அந்த கவரை பிரித்தான். அதில் வரு ,தேவா இருவரும் சிம்லா செல்வதற்கு அதாவது ஹனிமூன் செல்வதற்கான டிக்கெட் இருந்தது”..
அப்பா இது எதற்கு என்று கேட்டான் எதற்காக தருவார்கள் எதற்கு என்று கேட்கிறாய்? அதுவும் இப்பொழுதுதான் திருமணமாகி இருக்கிறது. இருவரும் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு ஹனிமூன் சென்று விட்டு வாருங்கள் என்றார் .
அப்பொழுது “வரு தான் சார் நான் குறுக்கே பேசுகிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .நீங்கள் கொடுப்பதை வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். நீங்கள் உங்கள் மகனுக்காக செய்கிறீர்கள் .”
ஆனால் , என்று விட்டு தேவாவை பார்த்துவிட்டு இப்பொழுது நாங்கள் இருவரும் ஹனிமூன் செல்வதாக இல்லை. நாளை முதல் வேலைக்கு வரலாம் என்று இருக்கிறோம் என்றாள் .
என்ன? இப்பொழுது தானே திருமணமாகி இருக்கிறது. மூன்று நாட்கள் தான் ஆகிறது என்றார் இத்தனை நாட்களாக வேலை என்று ஓடிவிட்டு இப்போது, வீட்டில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது இருவருக்குமே கஷ்டமாக இருக்கிறது சார் ..
அதனால் ,தான் நானும் “ஹனிமூன் சென்று விட்டு வர சொல்கிறேன் அதுவும் புதுமண தம்பதிகள் தனியாக இருப்பது வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கிறதா ?”என்று தேவாவை பார்த்தார்
” வரு சிரித்துக் கொண்டே தனிமை எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லவில்லை சார் .வீட்டில் இருப்பது எல்லா நேரமும் நாங்கள் தனிமையில் இருக்க முடியாது அல்லவா? “என்றாள் .
அதற்காகத் தான் வருணி நான் உங்களை ஹனிமூன் சென்று வரச் சொல்கிறேன் .அங்கு நீங்கள் தனிமையில் இருக்கலாமே என்றார் .சார் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இப்பொழுது செல்ல விருப்பமில்லை..
” இன்னும் ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு செல்கிறோம். ஏனென்றால், ஆது பள்ளி முடிந்துவிடும் அவனுக்கு பரிச்சை முடிந்துவிடும். அவன் பரீட்சைக்கும் உங்களுக்கும் என்ன மா சம்பந்தம் என்றார்”.
“நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். அவன் படிப்பை அவன் பார்த்துக் கொள்வான் என்றார் .இல்லை குடும்பத்துடன் சென்று வரலாம் என்று இருக்கிறோம். என்றவுடன் தேவாவை பார்த்து சிரித்துவிட்டு குடும்பத்துடன் சென்றால் அதற்கு பெயர் ஹனிமூன் இல்லம்மா ஃபேமிலி ட்ரிப் என்றார்” .
இருக்கட்டும் சார் பேமிலி ட்ரிப் போனால் தவறில்லையே எங்களுக்கான தனிமையை இவர்கள் கொடுக்காமல் விட்டு விடுவார்கள் என்று கேட்டாள். அவர் சிரித்துக் கொண்டே பரவா இல்லை டா தேவா உனக்கு நல்ல பொண்டாட்டி.
எனக்கு நல்ல மருமகளும், இந்த குடும்பத்துக்கு நல்ல மருமகளும் கிடைத்திருக்கிறாள். நான் கூட வரு நல்ல பெண்ணாக இருந்தாலும் இந்த வீட்டிற்கு ஒத்து வருவாளா ?என்று யோசித்தேன்.
அப்பொழுது வாசு கூட சிரித்துக் கொண்டே உங்கள் மகனை மேய்க்க சரியான ஆள் வரு தான் என்று சொல்லி சிரித்தான் என்றார் சிரித்த முகமாக. தேவா என்ன ?என்று அதிர்ச்சியாகி கேட்டான் ..
“அவர் லேசாக சிரித்துக் கொண்டே இல்லடா வருவை வைத்து சமாளிக்க கூடிய ஒரே ஆள் நீதான் என்று சொன்னான் என்றவுடன் அவனுக்கு இருக்கு என்றான் தேவா. மற்ற மூவரும் சிரித்து விட்டார்கள் ..
தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சார் என்றவுடன் சரி நான் உங்களுக்கு எப்போது விருப்பம் என்று சொல்லுங்கள் அப்பொழுது நானே எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களோ டிக்கெட் ரெடி பண்ணிக்கிறேன் என்றார் .
சரி சார் அதில் நான் தலையிட மாட்டேன் என்றாள். ஆனால், நீங்கள் இன்னும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு வரலாமே வேலைக்கு என்றார். இல்லை என்று விட்டு அவள் கொஞ்சம் தயக்கமாக பார்த்தவுடன் சரி வரு உங்களது விருப்பம் என்று விட்டு சரி பாருங்கள் ..
“இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று சொல்ல வந்தேன் மறந்து விட்டேன் என்றார் தேவா அவரை பார்த்தான்.உன் அம்மா உன்னை விருந்துக்கு வர சொன்னால்டா போனில் கூப்பிட்டால் சரியாக இருக்காது என்று யோசித்தாள்” .
அவளும் வருவேன் என்று சொன்னாள் ஆனால் எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருப்பதால் நான் தான் நானே சென்று விட்டு வருகிறேன் என்று சொன்னேன் நீ கோபித்துக் கொள்ள மாட்டாய் என்று எண்ணினேன் என்றவுடன் இதில் என்ன பா இருக்கிறது என்றான் ..
அவரது கையை பிடித்தான் சரிடா இருவரும் “நாளை அங்கு வந்து விடுங்கள் என்ற உடன் சார் நாளை தான் வேலைக்கு வரலாம் என்று இருந்தோம் என்றாள். அதனால் என்னம்மா குடும்பத்துடன் தான் மா உங்களை விருந்துக்கு அழைக்கிறேன் “என்றார்..
குடும்பத்துடன் தான் நாளை இரவு வருகிறோமே தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றாள். சரி உன் விருப்பப்படியே செய் என்றார் பிறகு சரி மா நேரம் ஆகிறது என்று விட்டு எழுந்தார் ..
சார் ஏதாவது சாப்பிட்டு விட்டு செல்லலாமே என்றார் இல்லம்மா என்றார் கொஞ்சம் உட்காருங்கள் ஒரு ஐந்து நிமிடம் என்று விட்டு அவருக்கு கோரிக்க தீனி எடுத்து வந்து கொடுத்தாள் .அவரும் சாப்பிட்டுவிட்டு நேரமாவதை உணர்ந்து சரி எனக்கு கொஞ்சம் மீட்டிங் இருக்கு என்று விட்டு அம்அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்..
” அரசி தான் ஏன் ,இப்போது ஹனிமூன் சென்று வந்தால் என்ன என்று கேட்டார் .அத்தை நான் அவர் முன்பு சொன்னது தான் இதில் எனக்கு எந்த மாற்று கருத்து இல்லை. ஒருவேளை உங்கள் மகன் இப்போது ஹனிமூன் செல்ல விரும்புகிறாரோ ?என்று விட்டு தேவாவை பார்த்தாள்” .
அவன் இவளை பார்த்து சிரித்தான். அவர் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றார் வேறு எதுவும் பேசாமல் சரி அத்தை வாசு அண்ணன் வீட்டிற்கு செல்ல வேண்டும் .நேரம் ஆகிறது என்று விட்டு அவளது அறைக்குள் சென்று உடை மாற்ற செய்தாள் .
அவள் உடை மாற்றிக்கொண்டு வந்த பிறகு தேவாவும் வேறொரு உடை மாற்றிக்கொண்டு இருவரும் அரசி, தீரன் இருவரிடமும் சொல்லிக்கொண்டு வாசுவின் வீட்டை நோக்கி சென்றார்கள் ..
அடுத்த அறை மணி நேரத்தில் தேவாவின் பைக்கிலே இருவரும் வாசு வீட்டிற்கு சென்று இருந்தார்கள். இவர்கள் இருவரும் விருந்துக்கு வருகிறார்கள் என்பதால் வாசு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தான் .
வாடா மச்சான் வா மா வரு என்று அழைத்துக் கொண்டு சென்றான் .தேவா தான் என்னடா டேரா போட்டு டியா என்றான் .நீ வரேன்னு சொன்னதால இன்னைக்கு நான் லீவு என்றான். என்ன சாக்கு வச்சு டேரா போட முடிவு பண்ணிட்டனு சொல்லு மச்சான் என்று அவனது கழுத்து நெரிப்பது போல் அவனது தோளில் கை போட்டுக் கொண்டு அவனுடன் வீட்டிற்குள் சென்றான்..
பிறகு இருவருக்கும் முதலில் தண்ணீர் கொடுத்தார் வாசுவின் தாய் இருவருக்கும் ஜூஸ் போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் .இருவரும் குடித்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள் ..
மணி 12 போல் சாப்பிடலாம் வாருங்கள் என்று அழைத்தார் இப்போதே வா அம்மா என்று கேட்டாள் வரு பின்ன எப்பொழுது சாப்பிடுவாய் .சாப்பிட்டுவிட்டு பேசி கொண்டு இருக்கலாம் என்றார் .
இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமே அம்மா என்றாள் சரி அவரும் இருந்தார் .சில நேரம் கழித்து ஒரு மணி போல் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். மட்டன் ,சிக்கன் ,நண்டு இறால் என்று வகை வகையாக தான் வாசுவின் தாய் வைத்து சமைத்து இருந்தார் ..
“அனைத்தையும் சாப்பிட்டார்கள் வருவிற்கு மீன் ஒழுங்காக சாப்பிட தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள். மீனை ஒதுக்கி வைத்தாள்.அவளுக்கு மீன் என்றால் பிரியும். ஆனால் ,அவளுக்கு சிறுவயதில் முள்ளு மாட்டியதில் இருந்து லேசான பயம்” .
“அதனால் ,இப்பொழுது வரை அவளுக்கு மீன் என்றால் அவளது அம்மா கலையோ ,அப்பா மாணிக்கமும் தான் முள் எடுத்துக் கொடுப்பார்கள் . இப்பொழுது அவர்களை எண்ணி விட்டு மீனை தேவாவின் இலையில் நகர்த்தி வைத்தாள்”..
“தேவா அவளைப் பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசவில்லை .வா சு தான் ஏன் மா ?என்று கேட்டான். இல்ல அண்ணா எனக்கு மீன் பிடிக்காது என்று சமாளித்தாள். தேவா எதுவும் பேசாமல் முல்லை எடுத்துவிட்டு அவளது இலையில் வைத்தவுடன் தேவாவை பார்த்தாள்” .
“அவன் கண் மூடி திறந்தவுடன் வரு வேறு எதுவும் பேசாமல் சாப்பிடச் செய்தாள் வாசு தான் பார்த்து சிரித்துவிட்டு முள் எடுக்க தெரியாதா ? என்றான்.வரு இல்ல அண்ணா பயம் என்று சிறுவயதில் நடந்ததை சொன்னாள்.
பிறகு அனைவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்கள் வாசு அவனுமே ஒன்று இரண்டு மீன் துண்டுகளை முள் எடுத்து வருவிற்கு வைத்தான். பிறகு அனைவரும் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு எழு. சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
வாசு கடையிலிருந்து பீடா வாங்கிக்கொண்டு வந்து வைத்திருந்தான். அதை இருவருக்கும் கொடுத்தான் இருவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டார்கள். மாலை ஐந்து மணி வரை இருந்து விட்டு நேரமாவதை உணர்ந்து இருவரும் சொல்லிக்கொண்டு தங்கள் வீடு நோக்கி சென்றார்கள்..
பிறகு* மாலை 6 மணிக்கு மேல் வரு தங்கள் வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் குளித்துவிட்டு பார்வதியின் புகைப்படம் முன்பும் ,பூஜை அறையிலும் விளக்கேற்றி வழிபட்டாள் .பிறகு சிறிது நேரம் கழித்து வரும்போது வாசுவின் தாய் பூ கொடுத்து அனுப்பியிருந்தார்கள்” .
“பூ,புடவை ,வேஷ்டி சட்டை என்று தாம்பூலத்துடன் வைத்து கொடுத்திருந்தார் பூ கொடுத்து அனுப்பி இருந்ததால் அதை கட்டிக் கொண்டு இருந்தாள். அரசியும் அவளுடன் பேசிக்கொண்டு கட்ட செய்தார்” ..
“தீரன் அதை பார்த்துவிட்டு தனது மகன் தேவாயைப் பார்த்து இது போல் அவளுடன் உட்கார்ந்து பேச ஒரு ஆளு இல்லையா என்று எத்தனை நாள் ஏங்கி இருப்பாள் என்று சொன்னார் தேவா தனது கண்ணீரை துடைத்து விட்டு நாம் தான் அப்பா அம்மாவை நிறைய விஷயங்களில் புரிந்துகொள்ளவில்லை” என்றான்..
“தீரன் தேவாவின் தோளை பற்றி டேய் நாம் என்று உன்னையும் சேர்த்துக் கொள்ளாதே. உன்னை விட உன் அம்மாவை வேறு யாராலும் புரிந்து வைத்துக்கொள்ள முடியாது என்றார் இல்லைப்பா நானுமே நிறைய இடங்களில் அம்மாவை புரிந்து வைத்துக் கொள்ளவில்லை.”
தான் என்றவுடன் என்ன மாமா பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே வரு இருவரின் அருகில் வந்தாள். சும்மா தான் மா என்றார் . சரி என்று விட்டு இருவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
” நான் போட்டிருப்பேன் இல்லா என்றான் தேவா . ஒன்றுமில்லை என்று கொடுத்துவிட்டு ஆது வரும் நேரம் என்பதால் ,ஆதுவிற்காக காத்துக் கொண்டிருந்தாள். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆதுவும் வந்தவுடன் வரு கையில் இருக்கும் டீ கப்பை எடுத்துக் கொண்டு வந்து அதுவின் கையில் கொடுத்தாள்”..
“அவன் பள்ளி முடிந்து வந்து உடனே எல்லாம் டீ குடிக்க மாட்டான் மா என்றார் தீரன். ஆது ,அப்பா போங்கப்பா இந்த மாதிரி ஸ்கூல் விட்டு வந்த உடனே டீ குடிக்கிறது எவ்ளோ ஹாப்பி தெரியுமா ?அது தனி சுகம் தான் என்று விட்டு டீ கப்போடு உட்கார்ந்தான்”..
“அவன் கையில் இருக்கும் டீ கிளாசை கீழே வாங்கி வைத்துவிட்டு ஆதுவின் ஸ்கூல் பேக்கை வரு கழட்டி வைத்துவிட்டு அவனது தலையை கோதினாள். தேவா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்”..
“அவன் மட்டும் அல்ல மூவருமே அமைதியாக பார்த்தார்கள் அவனுக்கு (ஆதுவிற்கு )இப்படி ஒரு ஆசை ஏக்கம் இருக்கிறது என்பதே இப்போதுதான் மற்ற மூவரும் உணரவே செய்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் “..
“அவன் கேட்டிருந்தால் அரசியே தினமும் டீ போட்டு கூட கொடுத்திருப்பார் .அரசி கூட அவனுக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்பதை உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்”..
பிறகு “வரு சமையல் அறைக்குச் சென்று அவனுக்கு கோரிக்க தீனியும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் தேங்க்யூ அண்ணி என்று விட்டு டீ குடித்துக் கொண்டே அவள் வைத்த ஸ்னாக்ஸை கொரித்துக் கொண்டு இருந்தான்”
“. மற்ற அவரும் ஆதுவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் இதுபோல் இந்த குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் மனதிற்குள் புதைந்து கொண்டிருக்கிறது அதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்”..
“வரு வந்த பிறகுதான் அவரவர்கள் அவர்களது ஆசைகளையே வெளிப்படுத்த செய்கிறார்கள். வரு அனைவரின் ஆசையையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடப்பாளா ?அதே போல் இந்த வீட்டில் உள்ள மற்ற நாள் வரும் வருவின் சிறு சிறு ஆசைகளையும் தெரிந்து கொண்டு அவளுக்கேற்ற மாதிரி இருப்பார்களா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
தனிமையின் காதலி
Nice
ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு போவதில் தானே வாழ்க்கையின் தாத்பரியமே இருக்குது.
Super
Interesting