Skip to content
Home » புன்னகை 50

புன்னகை 50

வரு ஆதுவிற்கு கொரிக்க தீனி எடுத்துக் கொண்டு வைத்துவிட்டு அவளது அறைக்கு சென்றாள்.

“தேவா ஒரு சில நிமிடம் நின்று  மற்ற மூவரையும் பார்த்துவிட்டு அவனது அறைக்குள் புகுந்தான் வரு தன்னறையில் இருக்கும் பொருட்களை ஒரு சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவளது கையை பிடித்து இழுத்து திருப்பி அவனை பார்க்குமாறு செய்தான் “..

என்ன தேவா என்று கேட்டாள். “நானும் இந்த வீட்டில்  இத்தனை வருடங்கள் இருக்கிறேன் .எனக்கு ஆதுவின் ஏக்கமோ அம்மாவின் ஏக்கமோ புரியவில்லை என்றான். ஆனால் நீ அவர்களை புரிந்து வைத்து இருகிறாய்”.என்றான்.

“உங்களுக்கு இருவரின் ஏக்கமும் புரியாமல் இல்லை. அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. ஆதுவின் ஏக்கத்தை நிறைவேற்ற அவன் பள்ளி முடிந்து வரும் வேளையில் நீங்கள் தினமும் வீட்டில் இருப்பதில்லை உங்களால் இருக்கவும் முடியாது”..

அப்படி நீங்கள் இருப்பீர்கள் என்றால் அது ஞாயிற்றுக் கிழமையாக தான் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஆதுவிற்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்தாலும் அவன் மதியவேளையில் வந்து விடுவான் அதனால் அன்று கூட உங்களால் அவனது சிறு சிறு ஆசைகளையும், ஏக்கத்தை தீர்த்து வைக்க முடியாது ..

“அத்தையின் ஏக்கம் அதை நீங்கள் சரி செய்ய முடியாத அளவிற்கு உங்களது சூழ்நிலை இருக்கிறது. அவர்களிடம் பேசி அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவரிடமும் பேசக்கூடிய  ஒரு ஆள் வேண்டுமென்றால் அது நீங்களா? நீங்களாக இல்லை” ..

“நீங்களாக இருக்கவும் முடியாது” மாமா அதை செய்திருக்கலாம். ஆனால், அவர்  ஏதோ ஒரு இடத்தில் தவறிவிட்டார். ஏதோ ஒரிடத்தில் என்று கூட சொல்ல முடியாது அவர் அத்தை விஷயத்தில் நிறைய இடத்தில் தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்”..

அவர் இனிமேல் ஆவது ஒரு சில விஷயங்களை அத்தை விஷயத்தில் திருத்திக் கொண்டால் அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நடந்து கொள்வார் என்று என்றாள்..

” தேவா அவளை இறுக்கி கட்டி அணைத்தான் என்னாச்சு  என்று கேட்டாள். ஒன்றுமில்லை என்று விட்டு அவளது நெற்றியில் இதழ் பதித்து   நீ எனக்கு கிடைத்த வரம் டி என்றான் அவளது தாடையை பிடித்து வரு  அவனது கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள்”

“வரு அப்படியா என்று  அவனிடம் கேட்டு விட்டு அவனது தாடையில் கடித்து விட்டாள். அவளின் நெருக்கத்தை எண்ணி தேவா சிரித்துவிட்டு மேடம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றான் சும்மா என்று அவனைப் பார்த்து கண் அடித்தாள் “..

“தேவா அவளைப் பார்த்து சிரித்தான் ரொம்ப நாட்களுக்கு பிறகு அவள் தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்வது எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தான்  தேவா வேறு எதுவும் பேசாமல் வெளியில் சென்றான்”..

ஆது தான் சாப்பிட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு சமையலறையில் வைத்துவிட்டு அங்கு டீ போட்டு இருக்கும் பாத்திரத்தையும் கழுவி வைத்துவிட்டு வந்தான் .டேய் நான் செய்திருப்பேன் இல்ல என்றான் தேவா.

“அண்ணா நாம் ஐந்து பேர் இருக்கிறோம். ஐந்து பேரும் சரிசமமாக ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொள்ளலாம். நான் இது தான் செய்வேன் என்று எல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒருவர் ஒரு வேலை செய்தால் மற்றவர்கள் இன்னொரு வேலை செய்யலாம்”..

” இது எனக்கு அண்ணி கற்றுக்கொடுத்த பாடம் “தான் .அவர் வாயால் சொல்ல வேண்டியதில்லை. அவர் செயலால் கற்று கொண்டேன் அண்ணா. இதை நீங்கள் செய்ய தவறிவிட்டீர்கள் என்று விட்டு நான் இனி பழகிக் கொள்கிறேன்” அண்ணா என்றான் .

தேவா சரி என்று விட்டு சமையல் அறையில் இருந்து வெளியில் வந்து  சிரித்துக் கொண்டான். ஆது பேசியதை மற்ற இருவருமே கேட்டார்கள். தீரன் அரசியும் கேட்டார்கள் .இருவருமே தங்களுக்குள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்..

அப்படியே இரவு ஒவ்வொருவராக ஒவ்வொரு வேலையாக பார்க்க இரவு உணவையும் சமைத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அனைவரும் சந்தோஷத்துடன் படுத்து உறங்கினார்கள். மறுநாளில் இருந்து இருவரும் வேலைக்கு செல்வதாக இருக்கிறது ..

மறுநாள் காலை பொழுதும் நன்றாக விடிந்தது. ஆதுவை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு இருவரும் வேலைக்கு 8 மணி போல் தீரன், அரசி இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் பொழுது இருவரும் ஆளுக்கு ஒரு   வண்டி  சாவியை எடுத்தார்கள். அப்பொழுது தீரன் தான் இருவரும் ஒரே வண்டியில் செல்ல வேண்டியது தானே என்றார்.

மாமா இருவரும் ஒரே வண்டியில் செல்வதெல்லாம் செட் ஆகாது .அவர் போஸ்டிங் ஏற்ப அவர் அடிக்கடி மீட்டிங் செல்ல வேண்டி இருக்கும் .அவருக்காக நான் காத்துக் கொண்டு இருக்க முடியாது. அவர் வரும் வரை நான் வீட்டிற்கு வராமல் இருக்க முடியாது ..

இல்லை இருவருக்கும் வெளியே எங்கேயாவது தனியாக செல்ல வேண்டியிருக்கலாம். நான் எனது நண்பர்களுடனும் அவர் அவருடைய நண்பர்களுடன் என்று  அப்படி இருக்கும் போது இருவரும் ஒன்றாக ஒரே வண்டியில் செல்ல முடியாது..

” வீட்டில் இருந்து எங்கு செல்வதாக இருந்தாலும் இருவரும் ஒரே வண்டியில் செல்வோம் .ஆபீஸ்க்கு என்று வரும்போது இருவரும் வெவ்வேறு வண்டியில் செல்வது தான் சரியாக இருக்கும் தவறாக எடுத்துக்  கொள்ளாதீர்கள் என்றாள்”..

பிறகு தீரனும் சரி மா பார்த்து போய்விட்டு வாருங்கள் இப்பொழுது முதல் நாள் இருவரும் வெவ்வேறு வண்டியில் செல்ல வேண்டுமா என்றார். மாமா முதலில் இருந்தா என்றால் சிரித்துக் கொண்டே சும்மா என்றார் .

பிறகு சரி மாமா என்று விட்டு அரசி,தீரன் இருவரிடமும் சொல்லிக்கொண்டு  தேவாவை திரும்பிப் பார்த்துவிட்டு தனது வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

“தேவாவும் இருவரிடமும் சொல்லிக்கொண்டு அவள் பின்பு சந்தோஷத்துடன் ஒவ்வொரு படியாக தாவிக் கொண்டே தனது வண்டி சாவியை சுழற்றிக் கொண்டே வந்தான் . வரு அவளது ஸ்கூட்டியில் சாய்ந்து கொண்டு தேவா வரும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்”…

“என்னை சைட் அடிச்சது போதும் டி ஆபீஸ்க்கு கிளம்புற வேலையை பாரு .ஏதோ இன்று சீக்கிரமா கிளம்பி இருக்க போல ..என்றான். அவனது  தோளிலே இரண்டு போட்டுவிட்டு தான் நிற்பது ரோடு என்பதை உணர்ந்து விட்டு அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டு தனது சாவியை வண்டியில் போட்டுவிட்டு தனது வண்டியில் உட்கார்ந்து தனது அலுவலகத்தை நோக்கி பறந்தாள் “..

தேவா அதான பார்த்தேன். இவளலாவது கையும் காலையும் வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பதாவது என்று தன் தலையில் தட்டிக் கொண்டு தனது வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ..

பிறகு இருவரும் அலுவலகம் வந்த பிறகு அலுவலகத்தில் உள்ளவர்கள் தான் வருவிடம் ஒரு சிலரும் ,தேவா விடம் ஒரு சிலரும் சார் திருமணமாகிய மூன்று நாட்களில் அலுவலகம் வர வேண்டுமா ? ஒரு பத்து நாட்கள் விடுமுறை எடுத்திருக்கலாமே என்று கேட்டார்கள் ..

இருவருமே ஒரே போல் அவ்ளோ அவசரம் என்றால் எடுத்துக் கொள்வோம் . இப்போது எந்த அவசியமும் இல்லை என்று சொல்லி சிரித்து விட்டு நகர்ந்து விட்டார்கள். இப்படியே காலைப்பொழுது முடிந்தது .

இங்கு சுவாதி தான் வருவை  சீண்டி கொண்டே இருந்தாள் வருவும் சிரித்துக் கொண்டும், அவளை முறைத்துக் கொண்டும் சமாளித்தாள். மதிய உணவு இடைவேளையின் போது வருவை சுற்றி இருந்த ஆஃபீஸ் நண்பர்கள் தான் என்னம்மா உன்னை நம்ம தேவா சாறு துறத்தி விட்டாரா ?என்று ஒரு சிலர் கல்யாணம் ஆன பெண்களும் கேட்க செய்தார்கள்..

ஆண்களும் சிரித்துக் கொண்டே வருவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அக்கா நீங்க வேற அமைதியாக இருங்கள் என்றாள். வரு உனக்கு வெக்கம் எல்லாம் பட தெரியுமா ?என்று ஒருத்தி சிரித்து கொண்டே கேட்டாள்.

வரு வயது உடைய பெண் ஏய் போடி என்றாள் வரு. சரி நம்ம தேவா சார் வீட்ல எப்படி என்று சில ஆண்கள் கேட்டார்கள். நீங்க வேற போங்கண்ணா இந்த சிடு மூஞ்சி வீட்லையும் சிடு மூஞ்சியாக தான் இருக்கு என்றவுடன் என்ன என்று அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும் போது, மற்றொரு பெண் அவளது தாலியை எடுத்து அவள் தாலியை வெளியேதான் போட்டிருந்தால் சுடிதார் ஷால் மட்டும் மறைவாக இருந்தது ..

“அவளது தாலியை நெஞ்சிலிருந்து எடுத்து இப்படி உரிமையாக ஆகிய பின்பும் உன்னிடம் சிடு மூஞ்சியாக வா இருக்கிறார் என்று கேட்டாள்”.

.”தாலியை அவளது நெஞ்சில் இருந்து எடுத்தவுடன் வருவின் ஞாபகம் தேவா திருமணமான அன்று அவ்வாறு எடுத்ததை எண்ணி லேசாக சிரித்தாள் ” சுற்றி இருந்த ஒரு சில பெண்கள் வெட்கத்தை பார்த்தியா என்று சொல்லிவிட்டு அந்த தாலியை எடுத்த பின்பு தான் இப்படி ஆகிறாள் “..

“ஆனா ,தேவா சார் ஒண்ணுமே இல்லைன்னு சொல்ற என்று சிரித்தாள் அந்த பெண் வரு தன் கழுத்தில் தொங்கும் தாலியில்  இருக்கும் பெண்ணின் கையை தட்டி விட்டாள் “..

அனைவரும் ஒன்றாக சிரித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது தேவா அங்க வந்து நின்றான் அனைவரும் கப் சிப் என்று வாயை மூடினார்கள். என்ன பேசி சிரித்துக் கொண்டிருந்தீர்கள் .நான் வந்த உடனே சைலன்ட் ஆயிட்டீங்க அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆன ஆளா நான் என்றான் ..

“அது எங்களுக்கு தானே தெரியும் நேரடியாவா சொல்ல முடியும் என்று வரு இங்கு முனகினாள் சுற்றி இருந்தவர்கள் அவளை பார்த்துவிட்டு லேசாக கீழே குனிந்து கொண்டு சிரித்தார்கள் “..

நான் பேசியதற்கு இவள் ஏதோ கமெண்ட் கொடுத்து இருக்கா என்பதை மட்டும் உணர்ந்து விட்டு அவளை பார்த்து முறைத்து விட்டு சரி     நான் பேச வந்ததை பேசுகிறேன் .

“திருமணத்திற்கு முன்பு உங்களுக்கு பார்ட்டி , டீரிட் வைக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் ,திருமணம் வேலையில் நேரம் கிடைக்கவில்லை .தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நாளை மாலை அனைவரும் ஃப்ரீயாக இருந்தால் அருகில் உள்ள பார்க்குக்கு சென்று வரலாமா அப்படியே அருகில் உள்ள ஹோட்டலுக்கும் என்றான் “..

அனைவரும் வருவைப் பார்த்தார்கள் வரு அமைதியாக இருந்த உடன்  அனைவரும் சரி என்றார்கள் பிறகு சரி நாளை அலுவலகம் முடிந்த பிறகு அனைவரும் செல்லலாம் என்று விட்டு நகர்ந்து விட்டான் அனைவரும் இப்போது வருவைப் பார்த்து வரு வயது உடையவர்கள் அவளை நச்சரித்தார்கள்..

என்ன டி எங்க தேவா சார் ஸ்ட்ரிக்ட் என்றும் சிடு மூஞ்சி என்று சொன்னாய் ஆனால் அவரைப் பார்த்தாலும் உன் முகத்தைப் பார்த்தாலும் அப்படி தெரியவில்லையே.. என்று சிரித்தார்கள்..

இங்கிருந்து பார்க்கும் உங்களுக்கு என்ன தெரியும் என்று விட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தாள் வரு.அவளது சிரிப்பை பார்த்து நன்றாக இருந்தால் சரி என்று எண்ணி விட்டு அனைவரும் அவர்களது வேலையை பார்க்கச் சென்று விட்டார்கள் ..

வாசு தான்  என்னடா மச்சான் சொல்லாம கொள்ளாம என்றான் டேய் லூசு நான் ஏற்கனவே யோசித்தது தான் .அப்பொழுது வேலையாக இருந்ததால் உன்னிடமும் சொல்ல முடியவில்லை என்றான் ..

சரி டா என்று சொல்லிவிட்டு வாசு அவனது வேலையை பார்க்கச் சென்று விட்டான். வருவிற்கும் இது புதிய செய்தி தான் வரு விடம் அவன் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு ட்ரீட் வைப்பதாக ஏற்கனவே சொல்லவில்லை.

இப்பொழுது அனைவரின் முன்பும் சொன்னது தான் . வரு தேவாவிடம் இதைப்பற்றி ஏன் என்னிடம் ஏற்கனவே சொல்லவில்லை என்று கோபித்துக் கொள்வாளா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அன்புடன்

தனிமையின் காதலி

4 thoughts on “புன்னகை 50”

  1. CRVS2797

    ஐய்யய்யே..? யாரும்மா நீ..?
    அவங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருந்தாலும் நீங்க சிண்டை முடிச்சு விட்டுவிங்க போலயிருக்கே..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *