Skip to content
Home » புன்னகை 51

புன்னகை 51

இப்போது அன்றைய பொழுதும் கழிந்து மாலை வேலை வந்தது . சுவாதி தான் அலுவலகம் முடிந்து வருவிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்..

சுவாதி வருவை சீண்டி கொண்டே இருந்தாள் வரு அவளை திட்டிக்கொண்டே சிரித்து முறைத்து கொண்டு இருந்தாள். சிரித்து சிரித்து அவளுக்கு கண்ணீர் கூட வந்திருந்தது .

இருவரும் வண்டி பார்க்கிங்கில் நின்று தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். வாசு வரு, சுவாதி இருவரும் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வாசு தான் வருவின் அருகில் வந்து என்னம்மா ஆனந்த கண்ணீரா ?என்று அவளது கண்ணீரை பார்த்து கேட்டான்..

அண்ணா ப்ளீஸ் இவள் தொல்லை தாங்கல வந்ததுல இருந்து சாவடிக்கிறாள் என்றாள். உன்னோட பிரண்டு உன்கிட்ட பேசறதுக்கு நான் என்னம்மா பண்ண முடியும் என்று சுவாதியை பார்த்துக் கொண்டே சொன்னான்..

நான்  போன் பண்ணா பொழுதெல்லாம் எடுக்கவில்லை. மேடம் ரொம்ப பிசியோ என்றாள் சுவாதி. வாசுவும் சிரித்துக் கொண்டே சுவாதி  சொல்வதில் தப்பில்லையே என்றான். ஆமாம் என்று சுவாதி சொன்னாள் தேவா அருகில் வருவது பார்த்துவிட்டு சுவாதி அமைதியாக இருந்தாள்.

என்ன சுவாதி நான் வந்தவுடனே பேச்சை நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டான் அப்படியெல்லாம் எதுவும் இல்லை அண்ணா என்று சொல்லி சிரித்தாள். சரி மா என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் வருவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு தேவா தனது வண்டியை எடுத்துக்கொண்டு வாசுவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

என்னடி வந்தார் இரண்டு வார்த்தை பேசினார் யாரோ மாதிரி
கிளம்பிட்டாரு என்று கேட்டாள்.என்ன பண்ணனும் என்று நினைக்கிறாய் ?என்று வரு கேட்டாள். உன்ன அழைச்சிட்டு போவாரு என்று நினைச்சேன்.

மேடம்  என் வண்டியில் தான் ரொம்ப நேரமாகவே சாய்ந்து நின்று கொண்டு இருக்கிறீர்கள்  கண்ணு தெரியுதா ?என்று கேட்டாள் வரு சிரிப்புடன் இருந்தாலும் என்றாள் சரி கிளம்பு நேரம் ஆகிறது என்று சொல்லிவிட்டு வருவும் அவளது வண்டியை எடுத்தாள் ..

சுவாதி அவளது வண்டியை எடுத்துக் கொண்டு இருவரும் அவர்களது வீடு நோக்கி கிளம்பினார்கள் .வரு தினமும் கலை ,மாணிக்கம் இருவரிடமும் போனில் பேசுவாள் .அவர்களை சென்று பார்த்து விட்டு எல்லாம் வரவில்லை. பிறகு தான் யோசித்தாள்.

நாம் இன்று எம்டியின் வீட்டிற்கு செல்வதாக இருந்தோமே என்று யோசித்து விட்டு வேகமாக வண்டியை வீட்டிற்கு விட்டாள். அவளைத் தவிர அனைவரும் கிளம்பி இருப்பதை பார்த்துவிட்டு தன் தலையில் தட்டிக்கொண்டு சாரி அத்தை மறந்துட்டேன் என்று விட்டு வேகமாக அவளது அறைக்கும் சென்று நன்றாக ஒரு புடவையை கட்டிக் கொண்டு வந்தாள்..

அப்போது ஆது தான் அவளை கண்கள் விரிய பார்த்தான். புடவை கட்டத்தெரியாது என்றீர்கள் என்று கேட்டான் .சும்மா டா காலேஜ் டேஸ்ல இருந்தே எனக்கு சாரி கட்டு தெரியும். கட்டு தெரியாம இல்ல அப்போ இதோ ஒரு ஞாபகத்துல எப்பயும் போல சேரி கட்டியிருக்கிறது ஞாபகம் இல்லாமல் வெளியே தூங்கி எழுந்தவுடன் அப்படியே புடவையை சொருகிக்கொண்டு வந்து விட்டேன்.

மறுநாள் அத்தை கட்டி விடுகிறேன் என்று சொன்னதால் நான் அவர்களிடம் அமைதியா கட்டிக்கிட்டேன் என்று சிரித்தாள். இப்போது ,தேவா தான் அவளை முறைத்தான். அரசியுமே சிரிக்க தான் செய்தார் .

“அவருமே உணர்ந்திருந்தார் அவளுக்கு புடவை கட்ட தெரிந்திருக்கிறது என்பதை பிறகு அனைவரும் தேவாவின் எம் டி நடேசன், கல்யாணி வீட்டிற்கு கிளம்பினார்கள். 

தேவா குடும்பத்துடன் தனது எம்டி நடேசன் வீட்டிற்கு சென்று இறங்கினா.ன் கால் டாக்ஸி புக் செய்து இருந்தார்கள் அதில் தான் கிளம்பினார்கள். எம்டி நடேசன் கார் அனுப்புகிறேன் என்று சொன்னதற்கு வேண்டாம் நாங்கள் வந்து விடுகிறோம் என்று சொல்லி இருந்தான் .

பிறகு , நடேசன் கல்யாணி இருவரும் அனைவரையும் வரவேற்க வேகமாக வந்தார்கள். அவர்களையும் தாண்டி வேகமாக அவர்கள் வீட்டு செல்ல மகள் இனியா வேகமாக ஓடிவந்து தனது அண்ணன் தேவாவை முறைத்துக் கொண்டு நின்றாள்.

தேவா அவளை பார்த்து சிரித்து விட்டு அவளது தாடையை பிடித்து இனி செல்லம் என்று கொஞ்சினான். இனி அவனது கையை தட்டி விட்டு அண்ணி வாங்க அண்ணி என்று அழைக்க வரு சில நிமிடம் இவள் யார் ?என்று புரியாமல் நின்றாள்.

ஆது தான் அவளுக்கு அருகில் வந்து இது இனியா அண்ணி நடேசன் அப்பா பொண்ணு என்று சிரித்தான். பிறகு பாப்பு குட்டி என்ன படிக்கிறீங்க என்று கேட்டாள் . நான் ஒன்றும்  சின்ன புள்ள இல்ல அண்ணி 11th ஸ்டாண்டர்ட் படிக்கிறேன் என்றாள் ..

வரு அவளது தலையில் கை வைத்து தலையை அழகாக ஆட்டிக் கொண்டே நீங்க பெரிய பொண்ணு தான் என்று சொல்லி சிரித்தாள். அப்போது தான் கல்யாண நடேசன் இருவரும் ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தார்கள்.

பிறகு ,குடும்பத்துடன் ஆரத்தி சுற்றினார்கள் தேவா கூட எதற்கு மா என்று கேட்டான். சும்மா இருடா என் மகனுக்கு நான் செய்யணும் இல்லை என்று ஆரத்தி  எடுத்துவிட்டு ஊற்றிவிட்டு வந்தார்.

“வரு இந்த அளவிற்கு எல்லாம் யோசித்துப் பார்க்கவில்லை. நடேசன் கூட தேவா அலுவலகம் சேர்ந்த பிறகு பழக்கம் என்று யோசித்தாள். ஆனால் இவர்கள் பேசுவதை பார்த்தாள் அப்படி தெரியவில்லையே என்று யோசித்தாள்” .

கல்யாணி தான் அவளது யோசனையை பார்த்துவிட்டு என்னம்மா யோசிக்கிறாய் என்றார்  ஒன்றுமில்லை  அத்தை என்று சிரித்துக்கொண்டு அத்தை என்றாள். நடேசன் தான்  முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு என்னை மாமா என்று சொல்ல யோசிக்கிறாய் ஆனால் இவர்கள் இருவரிடமும் சாதாரணமாக பேசுகிறாய்  என்றார் “

சார் உங்களை சார் என்று அழைத்து பழக்கம் ஆகிவிட்டது உடனே மாற்றிக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. ஆனால், இனியாவையும் அத்தையும் கூப்பிட கஷ்டமாக தெரியவில்லை என்றவுடன் அவரும் சிரித்தார்” .

அப்போது, கல்யாணி தான் உன் மண்டைக்குள் ஓடிய விஷயத்தை நான் கேட்ச் பண்ணி விட்டேன். எங்களுக்கு தேவாவை அலுவலகம் சேர்ந்த பிறகு தெரியாது  அதற்கு முன்பாகவே ,அதாவது அவன் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போது இருந்ததே தெரியும்  “..

“வருவிற்கு இந்த செய்தி புதிது என்பதால் அவர் சொல்வதை கேட்க ஆர்வமாக இருந்தாள். அரசி அமைதியாக இருந்தார் .தேவா தான் அம்மா இப்போது அது எதற்கு என்று கேட்டான் அமைதியாக இரு டா இனி இவள் உன்னுடைய மனைவி உன்னுடைய நல்லது கெட்டது அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியவள் என்றார் “.

அப்படி என்ன டா பெரிய விஷயம் என்று வரு மண்டைக்குள் ஓடியது  இனி அருகில் வந்து உட்கார்ந்தாள் .தேவா குட்டி மா அண்ணன்ட்ட வரமாட்டியா என்றான்.நான் வரமாட்டேன் கல்யாணத்துக்கும் லீவு போடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க ..

நிச்சயதார்த்தத்துக்கு என்ன கூப்பிடல அண்ணியோட போட்டோவ காமிக்கிறதுக்கே அவ்வளவு யோசிங்கிறீங்க என்று அவனை முறைத்துக் கொண்டு நின்றாள். உண்மையாவே இந்த குட்டி பெண் இனியவை பார்க்க வருவிற்கு சிரிப்பாக இருந்தது..

” இவ்வளவு உரிமையா தனது கணவரிடம் சண்டை இட ஒரு பெண் இருக்கிறாளா ?”என்று யோசித்தாள் .அவள் வருவின்  அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு வருவின் கையை கோர்த்துக்கொண்டு அவளது தோளில் சாய்ந்து கொண்டு அண்ணி என்றாள்.

அவளுக்கு சிரிப்பாக இருந்தது. சிரித்துக் கொண்டே என்ன என்று  கேட்டாள் அவளும் திருமணத்தின்போது எனக்கு பரீட்சை இருந்ததால் அண்ணன் விடுமுறை எடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார் .அப்பா அம்மா இருவரும் என்னை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியூர்  சென்று விட்டார்கள் என்றாள்.

இவர்கள் ஆனால் ,திருமணத்திற்கு வரவில்லையே நடேசன் சார் மட்டும்தான் வந்தார் அவர் கூட இறுதியில் தானே வந்தார் என்று யோசித்தாள் .அப்போது நடேசன் தான் உன் திருமணத்தின் போது எங்களை பார்த்திருக்க மாட்டாய் வருணி..

நாங்கள் திருமணத்திற்கு வராததிற்கு கூட காரணம் இருந்தது என்று விட்டு என்னுடைய சித்தப்பாவின்  பேத்திக்கு அப்போது திருமணம் அதனால் தான் உங்கள் திருமணத்திற்கு வர முடியவில்லை. நான் மட்டும் மாலை வேலையில் வந்து நிச்சயதார்த்தத்தின் போது அவர்கள் திருமணத்திற்கு  வந்தேன்.

கல்யாணியும் நானும் தான் ஊருக்கு சென்று இருந்தோம் .அங்கு இருக்கும் உறவுகளிடம் சொல்லி கொண்டு இவளால்  வர முடியவில்லை அதனால் தான் நான் மட்டும் வந்தேன்  என்றார் .

அவள் அமைதியாக கேட்டுக் கொண்டாள் கல்யாணி அனைவருக்கும் ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர்களுடனே உட்கார்ந்து கொண்டார் . வருவின் அருகில் உட்கார்ந்து கொண்டு தேவாவை அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தெரியும்  மா என்றார் ..

என்ன என்று வரு யோசித்தாள் “அவனை முதன் முதலில் நாங்கள் கோவிலில் தான் சந்தித்தோம். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் இருக்கும். அப்பொழுது எங்களுக்கு குழந்தை இல்லை .குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்று வருத்தத்தில் நான் கோவிலுக்கு சென்றிருந்தேன்”.

அப்போது அவரும் வந்திருந்தார் அப்போது நாங்கள் கோவிலை சுற்றிக் கொண்டு வரும்போது தான் கோவில் குலத்த கரையில் உட்கார்ந்து இருந்தான் .இவன் சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு நான் அவன் அருகில்  சென்று என்ன என்று கேட்டேன்.

” அவன் ஒரு சில நொடி அமைதியாக இருந்தான் என்னை உன் அம்மா போல் நினைத்துக் கொள் என்றவுடன் அவன் என்னை கட்டி அணைத்துக் கொண்டான் .அப்பொழுது,தான் அரசி  மாசமாக இருந்தார் என்றவுடன் இது எப்போது நடந்திருக்கும் என்பதை வரு யோசித்தாள்”.

” கல்யாணி தெளிவாக எல்லாம் மேற்கொண்டு சொல்லவில்லை வருவே புரிந்துகொண்டு கல்யாணியை பார்த்தவுடன் அப்போது அவன் சோகமாக உட்கார்ந்து இருந்த பிறகு என்ன என்று கேட்டதற்கு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த உடன் அவனை தன் மடியில் சாய்த்துக் கொண்டேன் “..

பிறகு தான் அவன் அனைத்தையும் சொன்னான். அப்பொழுது இருந்து பழக்கம் அவனிடம் பேசிவிட்டு நாங்கள் அவனை வீட்டில் விட்டுவிட்டு அரசி, தீரன் இருவரிடமும் பேசிவிட்டு வீட்டிற்கு வந்தோம்  அப்படித்தான் எங்களுக்கும் இவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது

அடிக்கடி நான் தேவாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு வருவேன் எனக்கு தேவாவை பார்த்தவுடன் அவன் மேல் ஒரு பாசம் தானாகவே வந்தது .அவனை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தேன். மேலும் ஒரு வருடம் சென்று இருக்கும் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை அதன் பிறகு இவன்தான் எனக்காக கோவிலில் விரதம் எல்லாம் இருக்க செய்தான் .

“இவன் விரதம் இருந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு என் வயிற்றில் இனியா தங்க ஆரம்பித்தாள் எங்களுக்கு இனியவை விட தேவா ஒரு படி மேல்தான் இனியாவிற்கு எங்களை விட தேவா தான் முக்கியம் “..

“தேவா ஆது என்றால் அவளுக்கு அவ்வளவு பிரியம். ஆது படிக்கும் பள்ளியில் தான் இனியாவும் படிக்கிறாள். பள்ளியில் முழுவதாக இனியாவை ஆது தான் பார்த்துக் கொள்வான் என்றவுடன் ஆதுவை பார்த்தாள் “

ஆது கண் மூடி திறந்தவுடன் சிரித்தாள். இனி வருவின் கையை கட்டிக்கொண்டாள் அப்பொழுது இருந்து இப்பொழுது வரை  எங்களுடைய பழக்கம் சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு அவனும் ஒரு மகன் தான் என்றார் வரும் சிரித்து  விட்டு இனியாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்”..

பிறகு , கல்யாணி அனைவருக்கும் இரவு உணவு ரெடி செய்திருந்தார் .அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு இரவு 9:30 போல் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தங்களது இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள்”..

நடேசன் கல்யாணி இருவரும் அனைவருக்கும் துணி எடுத்து கொடுத்திருந்தீர்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லமால் வாங்கிக் கொண்டார்கள். வரு தான் கிளம்பும் நேரத்தில் தான் இனியை தேவாவிடம் தான் பேச வைத்தாள்..

“உங்களுக்காக தான் அண்ணி பேசுகிறேன். இல்லையென்றால் நான் அண்ணானிடம் பேச மாட்டேன் என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் தேவா ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு வந்து தந்தவுடன் அவனது அருகில் சென்று ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு அவனது கையில் சாய்ந்தாள் “..

வரு சிரிக்க செய்தாள் ஒரு ஐஸ்கிரீமைக்கே சாய்ந்து விட்டாளே என்று எண்ணி சிரித்தாள்.பிறகு ,அனைவரும் நேரமாவதை உணர்ந்து அவர்களது இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள் .அப்படியே நாட்கள் சென்றது தினமும் இருவரும் அலுவலகத்திற்கும் தீரன் பகலில் சிறிது நேரம் மாலையில் சிறிது நேரமும் கடைக்கும் சென்று விட்டு வருவார்…

அரசி அவ்வப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருப்பார் இல்லையென்றால் சிறிது நேரம் கதை புக் படிப்பார். இப்படியே நாட்கள் சென்றது. ஆது தினமும் பள்ளி விட்டு வருவான். மாலையில் சிறிது நேரம் வருவுடன் அரட்டை அடித்து விட்டு பிறகு ஒரு சில சந்தேகங்களை வருவிடும் கேட்டும் தெரிந்து கொண்டு அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு படிக்க சென்று விடுவான் ..

ஒரு வாரத்திற்கு மேல் சென்றிருக்கும் இந்த ஒரு வாரத்தில் தேவா சொன்னது போல் தனது அலுவலக நண்பர்கள் அனைவரையும் அழைத்து அருகில் உள்ள பார்க்கிற்க்கு அழைத்துச் சென்று வந்தான் அங்கு சென்று சிறிது நேரம் அனைவரும் பேசிவிட்டு இரவு 7:00 மணி போல் அனைவரும் அருகில் உள்ள ரெஸ்டாரண்ட்க்கு சென்று தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அப்படியே சாப்பிட்டு விட்டு அவர்களது இருப்பிடத்தை நோக்கி சென்றார்கள்..

அனைவருக்கும் தேவாவே பில் பே பண்ணி விட்டான் ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் அன்று வரு சுவாதி இடம் பார்க்கிங்கில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். தேவா கீழ இறங்கி வந்தவன் இருவரையும் பார்த்துவிட்டு வருவின் அருகில் வந்து வரு கொஞ்சம் வெளியில் சென்று விட்டு வரலாமா என்று கேட்டான்..

அப்பொழுது, வரு தான் இல்லை நான் இன்று சுவாதி வீட்டுக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்.தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றாள். அப்போது வரு அவ்வாறு சொன்னவுடன் சுவாதி தான்  இல்ல அண்ணா நீங்கள் அழைத்துக் கொண்டு செல்லுங்கள் ..

நாளைக்கு கூட நீ வந்து கொள்ளலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை .  அக்காவை பார்த்து ரொம்ப நாளாகிறது .அக்காவை பார்த்துவிட்டு வரலாமென்று எண்ணினேன் என்றாள் வரு.

சுவாதி  இல்லை அண்ணா நீங்கள் இவளை அழைத்து  கொண்டு செல்லுங்கள் என்றாள்.ஒன்றுமில்லை சுவாதி  நானும் வருகிறேன். நான் திருமணத்தின் போது உன் அக்காவையும் ,மாமாவையும் பார்த்தது தானே நானும் வருகிறேன்.

சாதாரணமாக தான் கூப்பிட்டேன் .நாங்கள் வேறு ஒரு நாள் கூட சென்று கொள்வோம் முக்கியமாகலாம் இல்லை என்றான்  பிறகு மூவரும் அவர்களது வண்டியில் தனித்தனியாக சுவாதியின் வீடு நோக்கி சென்றார்கள் சுவாதியின் வீட்டுக்கு சென்றால் சுவாதியின் மாமா வரு தேவா இருவரையும் எவ்வாறு நடத்த செய்வார் இருவரையும் திட்டுவானா இல்லை இருவரையும் வரவேற்று நன்றாக பேசுவானா என்பதை நாம் ஒரு பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

தனிமையின் காதலி

3 thoughts on “புன்னகை 51”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *