Skip to content
Home » புன்னகை 53

புன்னகை 53

வசந்த் மாமா எனக்கு மலர்  தான் வேண்டும் என்று சொன்ன பிறகு மாமாவின் அண்ணன் அப்பொழுது உனக்கு இந்த சொத்திலும் இந்த வீட்டிலும் இடமில்லை என்று சொன்னார்..

” அப்படி  நீங்கள் கை காமிக்கும்  பெண்ணை தான் நான் திருமணம் செய்து கொண்டால் தான் எனக்கு இந்த சொத்து என்றால் எனக்கு இந்த சொத்து வேண்டாம் என்று விட்டு வந்து விட்டார் என்றவுடன் ஒரு வேலை என்று அமைதியாக இருந்தான் நீங்கள் யோசிப்பது போல் நான் பல நாள் யோசித்து இருக்கிறேன்” ..

“அவருடைய அண்ணன் சொத்துக்காக இவரை ஏதாவது விதத்தில் பிளாக்மெயில் செய்கிறாரா ?என்று ஆனால் அதைக் கேட்டால் வசந்த் மாமா எதுவும் பதில் சொல்ல மாட்டேங்கிறார். இதற்குள் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்ன என்று எனக்கும் புரியவில்லை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றாள் “..

சரி என்று விட்டு இருவரும் அவர்கள் வீடு நோக்கி சென்றார்கள். இருவரும் வீட்டிற்கு செல்வதற்கு நேரம் ஆகியிருந்தால் வேகமாக இருவரும் வீட்டிற்குள் சென்றார்கள் .அப்போது தீரன் அனைத்து உணவுகளையும் எடுத்துக்கொண்டு உணவு மேசையில் எடுத்து வந்து வைத்துக் கொண்டு இருந்தார் ..

“வரு தான் அத்தை நான் தான்  வந்து பார்த்துக் கொள்கிறேன் வந்து விடுவேன் என்று தானே சொன்னேன் .எதற்காக இவ்வளவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டாள். நான் ஒன்றும் செய்யவில்லை டி .நான் காய்கறிகள் மட்டும்தான் கட் பண்ணி கொடுத்தேன்”..

” உனது மாமாவும் , ஆதுவும் தான் அனைத்தையும் செய்தார்கள் என்ற உடன் ஆதுவை  பார்த்து முறைத்தாள். உனக்கு படிக்கும் வேலையே இல்லை டா என்று ஒரு நாள் தானே அண்ணி ஒரு நாள் அரை மணி நேரத்தில் ஒன்றும் குறைந்து விடாது “..

அது தினமும் நான் உங்களிடம் பேசும் நேரத்திற்கு சரியாக இருக்கும் என்று சிரித்துவிட்டு சரி வாருங்கள் சாப்பிடலாம் என்றான்.சரி என்று விட்டு அவளது அறைக்கு சென்று முகம் கை,கால் கழுவிக்கொண்டு வேறொரு உடை அணிந்து கொண்டு வந்தாள்..

தேவாவும் சமையலுக்குச் சென்று அனைத்தும் சுத்தமாக இருப்பதை பார்த்துவிட்டு இதுவரை சமைப்பதற்கு உபயோகத்தை பாத்திரங்களையும் கழுவி வைத்திருப்பதை பார்த்துவிட்டு தனது தந்தை ,தம்பி இருவரையும் முறைத்துவிட்டு அமைதியாக இருந்தான் ..

அதற்குள் வரு வந்தவுடன் அவனும் அவனது அறைக்குச் சென்று பிரஷ் ஆகி விட்டு வேறு ஒரு உடை அணிந்து கொண்டு வந்தான். பிறகு இறுதியில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் சாப்பிட ஆரம்பிக்கும் போது வரு தான் அரசிடம் அத்தை நாளை சுவாதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் ..

சுவாதி அக்காவிற்கு என்று ஆரம்பித்தாள் அரசி சிரித்துக் கொண்டே கலை போன் செய்து அனைத்து விஷயத்தையும் சொல்லிவிட்டாள் நாம் நாளை காலை சென்று விட்டு வரலாம். இருவரும் அலுவலகம் செல்வதற்கு முன்பு அங்கு சென்று விட்டு அப்படியே அலுவலகம் சென்று விடுங்கள் ..

நேரம் சரியாக இருக்கும் என்றார் தனது தாய் ஏற்கனவே ஃபோன் செய்து விஷயத்தை சொல்லி விட்டார் என்றவுடன் வரு வேறு எதுவும் பேசவில்லை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு நேரமாகியதால் ஆதுவும் படிக்க வேண்டும் என்பதால் அவரவர் அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள் …

“அறைக்குச் சென்று பிறகு தேவா தான் வரு விடம் நீ வந்த பிறகு இந்த வீட்டில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது டி என்றான். ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று சிரிப்புடனே கேட்டாள். அவளை இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டு உன்னை தினமும் இங்கு படுக்க சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று அவனது நெஞ்சை சுட்டிக்காட்டி விட்டு நான் நிறைய மாற்றம் இருக்கிறது என்று தான் சொன்னேன் அது எனக்கு பிடிக்கவில்லை என்றோ அது நல்ல மாற்றம் இல்லை என்றோ சொல்லவில்லை” என்றான்…

“அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு எனக்கு அனைத்தும் பிடித்திருக்கிறது என்று விட்டு அனைத்தும் என்று உன்னையும் சேர்த்து தான் என்று அவளது காதில் மெதுவாக சொல்லிவிட்டு அவளது காதில் கடித்தான் “.

“வரு அவனை தள்ளிவிட்டு நகர்ந்து தலையணையில் படுத்தாள் .ஏன் டி என்றதிற்கு ஒன்றுமில்லை அமைதியாக படுங்கள் எனக்கு தூக்கம் வருகிறது. காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று சிணுங்கினாள்” .

“அதை நீ இங்கு படுத்துக் கொண்டே தூங்கு யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று அவளது தலையை தனது நெஞ்சில் சாய்த்து கொண்டு அவளது தலையை வருடி விட்டுக் கொண்டே அப்படியே தூங்கி இருந்தான் வருவும் தூங்கி இருந்தாள்”..

மறுநாள் காலைப் பொழுது நன்றாக புலர்ந்து இருந்தது .5 மணி போல் எழுந்து அரசி தண்ணி தலித்து கோலம் போட்டுவிட்டு வந்து விட்டிருந்தார் . தேவாவுமே எழுந்து எப்பொழுதும் போல் டீ போட்டான் .அப்பொழுது தான் வரு எழுந்து வந்தாள். அரசி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாமே என்று விட்டு அமைதியாகிவிட்டார்..

” தேவா டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு  எத்தனை மணி போல் கிளம்ப வேண்டும் என்று தேவா கேட்டான். அப்பொழுது அரசி பதில் சொன்னார் அனைவரும் குளித்துவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும். இருவரும் அலுவலகத்திற்கு ஒரு ஒரு மணி நேரம் பர்மிஷன் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் “..

“அங்கு முன்ன பின்ன நேரம் ஆகலாம் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக அவரது அறைக்கு குளிக்க சென்று விட்டார் .தேவா வருவை பார்த்தான் வரு சிரித்துவிட்டு அவளது அறைக்குள் புகுந்து கொண்டாள். பிறகு ,அவள் குளித்து முடித்து வரும் போது தேவா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு போன் பார்த்துக் கொண்டிருந்தான் “”..

“அவள் குளித்து முடித்து வந்தவுடன் அவள் கண்ணாடி முன்பு நின்று தலை குளித்து இருந்ததால் முடியை முன்னாடி போட்டு துவட்டி கொண்டிருந்தாள். தேவா என்ன யோசித்தானோ அவள் பின்பு வந்து அவளது முதுகில் முத்தம் வைத்தான். வருவிற்கு உடல் சிலிர்த்து அடங்கியது”..

” என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று லேசாக முனங்கினாள் அவள் கேட்டது அவளுக்கே கேட்டதா ?என்று அவளுக்கு தான் வெளிச்சம் .தேவா சிரித்துக் கொண்டே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்டான். ஏன் விருப்பம் இல்லையா ? “என்றான்..

நான் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன். விருப்பமில்லை என்றெல்லாம் சொல்லவில்லையே ..என்று  அவன் பக்கம் திரும்பிக் கொண்டே கேட்டாள்.

“தேவாவும் அவளது கழுத்தில் தனது கையை மாலையாக போட்டுக் கொண்டு எப்ப பார்த்தாலும் இந்த பாவாடை சட்டையோட சுத்திட்டு இருக்க என்று கேட்டான். ஏன் ,அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை . எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை சிறிய பெண் போல் இருக்கிறாய் .. “என்றான் ..

“எனக்கு பிடித்து இருக்கிறது என்று சிரித்தாள் அவனது கையை எடுத்து விட்டுக் கொண்டே அவன் அவள் பக்கம் இன்னும் நெருங்கி வந்து இன்று புடவை கட்டிக் கொண்டு வருகிறாயா ?அப்படியே கம்பெனிக்கு என்றான் இல்லை என்னால் முடியாது “என்றாள் ..

நாம் அங்கு சுவாதி வீட்டுக்கு மட்டும் செல்கிறோம் என்றால் கூட பரவாயில்லை அப்படியே அலுவலகம் வர வேண்டும். என்னால் முழு நேரமும் புடவை சுற்றிக் கொண்டு எல்லாம் இருக்க முடியாது. அதுவும் நான் ஒழுங்காக எல்லாம் எனக்கு உட்கார வராது …

“அப்படி இப்படி உட்காரும்போது புடவை விலகும் என்று லேசாக சிரித்துக் கொண்டே சொன்னாள் .விலகினால் என்ன என்றான் நீங்கள் மட்டும் இல்லை அலுவலகத்தில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் மறந்துவிடாதீர்கள் என்றாள். அவனும் சிரித்துக் கொண்டே அவளது தலையில் லேசாக கொட்டி விட்டு அப்போ அடுக்க ஒடுக்கமா உட்காரு என்றான் “..

“அப்படி எல்லாம் வராது .உங்களுக்கு தான் தெரியுமே நானும் சொல்லிட்டேன். பின்ன என்ன என்று பேசிக்கொண்டு இருந்தாள் அப்படியா ? என்னன்னு தெரியும் என்று அவளது உதட்டை பிடித்தான்.அப்பொழுது, அவர்களது அறை கதவை திறந்து கொண்டு ஆது வந்தான்”..

“தேவா வேகமாக அவளது உதட்டில் இருக்கும் தன் கையை எடுத்துவிட்டு அவளது தோளில் இருக்கும் கையை அப்படியே வைத்துக் கொண்டு தனது தம்பியை பார்த்தான் வரு தான் லேசாக முறைத்து கொண்டே ஆது அறைக்கு வருவதற்கு முன்பு கதவை தட்டி விட்டு வர வேண்டும் என்று தெரியாதா ?”என்றாள்..

“தேவா அமைதியாக தான் பார்த்தான். சாரி அண்ணி ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டேன் . நான் தவறாக சொல்லவில்லை என்று உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.இனி வருவதற்கு முன்பு கதவை தட்டிக் கொண்டு வா. அப்படி எங்கள் இருவரில் ஒருவர் வெளியே இருந்தால் நீ எப்பொழுதும் போல் வரலாம் “என்றாள்..

பிறகு ,”ஆதுவும் அண்ணி நான் சொல்கிறேன் என்று நீங்களும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இனி கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள் என்றான் வருவும் தங்கள் மீதும் தவறு இருப்பதை உணர்ந்து சரி என்று சிரித்தாள் “..

பிறகு” தேவா தான் என்னடா இங்கே பள்ளிக்கு கிளம்பவில்லையா ? என்றான். அண்ணா நானும் உங்களுடன் வருகிறேன் என்றான் .என்ன நீ எதற்காக என்று கேட்டான். அவன் வரட்டுமே உங்களுக்கு என்ன அவன் அப்படியே பள்ளிக்கு சென்று விடுவான் .”..

“அவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான் என்பதற்காக எங்குமே செல்லக்கூடாது என்று இருக்கிறதா என்று லேசாக முகத்தை தூக்கினாள். இருவரும் ஏதோ செய்யுங்கள் என்று விட்டு அமைதியாக கட்டிலில் சென்று உட்கார்ந்தான்  .பிறகு ஆது நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வரு எதற்காக டா வந்திருக்கிறாய் ?”என்று கேட்டாள்..

“அண்ணி இன்று புடவை கட்டிக் கொண்டு வருகிறீர்களா? .ஏன் ,என்று கேட்டாள் நீங்கள் புடவையும் ,அண்ணன் வேஷ்டி சட்டையும் போட்டுக் கொண்டு வாருங்களேன் நாம் அங்கு சுவாதி அக்கா வீட்டிற்கு செல்வதற்கு முன்பு கோவிலுக்கு சென்று விட்டு அப்படியே செல்லலாம் “என்று கேட்டான் ..

“வரு சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு தேவாவை பார்த்துக் கொண்டே சரிடா கட்டிக் கொண்டு வருகிறேன்  சரியா என்றாள். சரி என்று விட்டு நீங்கள் இனிமேல் கதவை தாழ்ப்பாள் போட்டு கொள்ளுங்கள் என்று லேசான சிரிப்புடன் சொல்லிக் கொண்டே வெளியில் சென்றான்”..

“இந்த சில்லுவண்டுக்கு பேச்சு பாத்தியா என்று தேவா சொன்னான் வரு சிரித்துக் கொண்டாள். அவன் ஒன்றும் சும்மா சொல்லவில்லையே ..உண்மையை தானே சொன்னான். நம் மீதும் தவறு இருக்கிறது தானே” என்றாள்..

“நீயா அவனை விட்டு தருவாய் ?என்று கேட்டான் நீங்கள் விட்டுக் கொடுத்து விடுவீர்களா ?என்று வரு கேட்டாள். தேவா அமைதியாக இருந்தான் பிறகு அவளது காதை லேசாக பிடித்து திருகி  கொண்டே கொஞ்ச நேரத்துக்கு முன்பு  நான் புடவை கட்டிக் கொண்டு வர சொல்லி கேட்டேன்”..

” அப்பொழுது, முடியாது என்றாய் .அடக்க ஒடுக்கமாக உட்கார தெரியாது சேலை அங்கு விலகும் இங்கு விலகும் என்றாய் .இப்பொழுது மட்டும் எப்படி என்று கேட்டான் . அவன் ஆசையாக கேட்கிறானே முடியாது என்று எப்படி சொல்வது “என்றாள்..

” நானும் ஆசையா தாண்டி கேட்டேன் என்றான். உங்கள் ஆசைக்கும் நீங்கள் கேட்பதற்கும், அவன் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று சொல்லி சிரித்தாள்.  நான் கேட்பதற்கும் ,அவன் கேட்பதற்கும் என்னடி வித்தியாசம் “..

“அவனும் உன்னை புடவை கட்டிக் கொண்டு வர சொன்னான். நானும் புடவை கட்டிக்கொண்டு வர சொன்னேன். அதெல்லாம் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது  அவன் கேட்பதற்கும், நீங்கள் கேட்பதற்கும் அதை மாலை வந்து சொல்லுங்கள் “என்றாள்..

“அப்படி என்னடி வித்தியாசம் என்றான். இப்பொழுது நேரம் ஆகிறது நான் புடவை கட்ட வேண்டும். நீங்கள் குளித்துவிட்டு வருகிறீர்களா ?  சரி டி என்று எழுந்து அவளது தாடையில் லேசாக கடித்துவிட்டு அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை நானும் மாலை வந்து சொல்கிறேன் “என்று குளியல் அறைக்குள் புகுந்தான் ..

” வருவிடம் தேவா புடவை கட்ட சொல்வதற்கும் , ஆது புடவை கட்ட சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தேவா மாலைக்குள் உணர்ந்து விடுவானா ?”என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

தனிமையின் காதலி

2 thoughts on “புன்னகை 53”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *