Skip to content
Home » புன்னகை 55

புன்னகை 55

“வரு புடவை கட்டி கொண்டு அலுவலகத்திற்கு வந்ததால்  அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் தோழிகள் வருவிடம்  என்ன வரு இன்று புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கிறாய் ?”என்று கேட்டார்கள் ..

வரு வாய் திறப்பதற்கு முன்பே வருவின் மற்றொரு தோழி ஒரு வேலை தேவா சார் இவளை சைட் அடிப்பதற்காக கட்டிக்கொண்டு வர சொல்லி இருப்பார் என்று சிரித்தாள்”..

. வரு அனைவரையும் முறைத்துவிட்டு விவரத்தை சொன்னவுடன் அனைவரும் எங்களுக்கு எதுவும் சாப்பாடு இல்லையா ? என்று சுவாதி ,வரு இருவரையும் பார்த்து கேட்டார்கள்”..

வரு சிரித்துக் கொண்டே ஒரு பெரிய கேரியர் எடுத்து வைத்து அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் சாதம் கொடுத்தாள் .சாப்பிடுவதற்கு முன்பே தேவா வாசுவிற்கு போன் செய்து டேய் நாம் இன்று ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம் என்றான் ..

சரி என்று விட்டு வாசுவும் அவனது டிபன் பாக்ஸ் எடுத்துக் கொண்டு தேவா இருக்கும் அறைக்கு சென்று இருந்தான். இருவரும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது தேவா வாசுவிற்கு ஒரு சிறிய கிண்ணம் எடுத்து வைத்தான் ..

“மச்சான் ஸ்பெஷலாக ஏதாவது எடுத்து வந்திருக்கியா ? என்றான். டேய் அது உனக்கு தான் ஆனா உனக்காக ஸ்பெஷலா எதுவும் எடுத்துட்டு வரல என்றான். வாசு டிபன் பாக்ஸை திறந்தான் கலவை சாதாத்தை பார்த்துவிட்டு என்ன டா  எனக்கு தெரியாம ஏதாச்சும் விசேஷமா கலவை சாதமாக இருக்கிறது” என்றான்..

தேவா ஒரு நிமிட அமைதிக்கு பிறகு சுவாதியின் அக்காவிற்கு இன்று ஐந்தாம் மாதம் சாதம் கொடுத்து விட்டு வந்தோம் கலை அத்தை செய்தார்கள் என்றவுடன் வாசு அமைதியாக தேவாவை பார்த்தான் ..

நேற்று இரவு தான் எனக்கே தெரியும் .என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை .இரவு வீட்டிற்கு செல்வதற்கு நேரம் ஆக்கிவிட்டது. காலையிலும் சீக்கிரம் அவர்கள் வீட்டிற்கு கிளம்பியதால் என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை என்றான் …

சரி விடுடா மச்சான் இதுல என்ன இருக்கு என்று சொல்லிவிட்டு இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் .அப்போது அவர்கள் அறை கதவு தட்டப்பட்டது .தேவா தான் சாப்பிடும் நேரத்தில் யார் ?என்று எண்ணிவிட்டு எஸ் கமின் என்றான்..

சுவாதி வந்ததை பார்த்துவிட்டு இன்னும் சாப்பிடும் நேரம் முடியவில்லையே சுவாதி என்றான் .அண்ணா அதற்காக வரவில்லை என்று விட்டு சிறிய பாக்ஸ் எடுத்து வைத்தாள். என்ன சுவாதி இங்கே இருப்பதே நான் சாப்பிட்டு முடிக்கவில்லையே ..

“இதுவே மீதம் இருக்கும் என்றான். அண்ணா இது கலவை சாதம் அல்ல ஒயிட் ரைஸ்சும் ,ரசமும் உங்களுக்கு கலவை சாதம் சாப்பிட்டால் சாப்பிட மாதிரி இருக்காது என்பதால் வரு கொடுத்து அனுப்பினாள் “..

“அவள் புடவை கட்டி இருப்பதால் என்று விட்டு அமைதியாக விட்டாள். தேவா சுவாதி சொல்ல வருவதை உணர்ந்ததால் அமைதியாக வாங்கி வைத்துக் கொண்டான் .சரி அண்ணா என்று விட்டு கிளம்பினாள்” ..

அப்பொழுது, “வாசு தான் ஏன் ,சுவாதி என்னிடம் சொல்லி இருந்தால் நான் வந்திருப்பேன்ல இல்லை வரக்கூடாது என்பதற்காகவா என்ற உடன் ஒரு நிமிடம் நின்று சுவாதி வாசுவை பார்த்துவிட்டு எல்லோரும் எல்லா விஷயத்தையும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பதில்லையே” …

“நானும் அப்படி சொல்ல வேண்டும் என்று அவசியமில்லையே என்று விட்டு நகர்ந்தாள். இவள் என்ன பேசுகிறாள் என்று யோசித்தான் வாசு. ஒன்னு கூப்பிட முடியவில்லை  என்று சொல்லி இருக்க வேண்டும் .இல்லை நாங்கள் வீட்டிற்குள் முடித்துக் கொண்டோம் என்று சொல்லி இருக்க வேண்டும்” ..

ஆனால் இவள் என்ன சொல்லிக்கொண்டு செல்கிறாள் என்று புரியாமல் தேவாவை பார்த்துவிட்டு தேவா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்றான்.  நானும் உன்னிடம் ஒன்று பேச வேண்டும் என்றான் தேவாம்

நான் முதலில் சொல்லிவிடுகிறேன் என்றான் வாசு .சரி சொல்லு என்றவுடன் நீ சாப்பாட்டை பற்றி பேசிய பிறகு தான் ஞாபகம் வருகிறது. காலையில் வேலை இருந்ததால் சொல்ல முடியவில்லை என்றான். என்னிடம் அம்மா நேற்று இரவு ஒரு விஷயத்தை சொன்னார்கள்…

ஜோசியக்காரங்களை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்துவிட்டு வந்திருப்பார்கள் போல என்றான். தேவா அமைதியாக வாசு சொல்லுவதை கேட்க செய்தான் என்ன டா என்று கேட்டதற்கு “எனக்கு இன்னும் மூன்று மாதத்திற்குள் நிச்சயம் செய்தாக வேண்டும் ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்..”

ஏதோ தோஷம் இருக்கிறது என்று ஜோசியக்காரன் சொல்லி இருக்கிறான். அதையும் நம்பி விட்டு அம்மாவும் , அப்பாவும் இன்னும் மூன்று மாதத்தில் நிச்சயம் செய்தாக வேண்டும் .ஆறு மாதத்தில் திருமணம் முடித்தாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ..

நேற்று இரவு தான் என்னிடம் சொன்னார்கள் கேட்டதிலிருந்து எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்றான்.இதில் என்ன இருக்கிறது என்றான் தேவா. டேய் என்ன விளையாடுகிறாயா ? என்றான்..

பின்ன என்ன மச்சான் என்று கேட்டான். எப்படி திருமணம்  என்றான். நல்ல குடும்பமாக நல்ல பெண்ணாக கிடைத்து விட்டால் மூன்று மாதத்தில் நிச்சயம் முடித்துக் கொள்ளலாம் தான் ..திருமணத்தை கூட மெதுவாக வைத்துக் கொள்ளலாம் என்றான்..

வாசு தேவாவை முறைத்தான் . தேவா என்ன மச்சான் என்று கேட்டான். என்னுடைய சிட்டுவேஷன் தெரிஞ்சு பேசுடா என்றான். உன்னுடைய சிட்டுவேஷன் என்ன மச்சான் . டேய் நான் சுவாதியை  விரும்புவது உனக்கு தெரியும் தானே அப்புறம் என்ன ..

நீ சுவாதி விரும்புகிறாய். ?ஆனால் , அவளிடம் சென்று உன்னுடைய விருப்பத்தை சொன்னாயா? என்றான். ஒத்துக் கொள்கிறேன் நான் இதுவரை சொல்லவில்லை தான் .அதற்காக நீ ஒழுங்கு என்பது போல் பேசாதே ..என்றான்..

என்னுடைய கதை வேற உன்னுடைய கதை வேறு என்றான் தேவா. சரிடா ஒத்துக்கொள்கிறேன் என்னுடைய விருப்பத்தை நான் அவளிடம் சொல்ல வேண்டும் தான் ஆனால் கொஞ்ச நாட்கள் செல்லட்டும் என்று அமைதி காத்தேன் .ஆனால் ,இப்பொழுது அப்பா ,அம்மா இப்படி சொல்வதைப் பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது..

” அதுவும் அவர்கள் ரொம்ப சின்சியராக இருக்கிறார்கள் மூன்று மாதத்திற்குள் நிச்சயத்தை முடித்தாக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றான்”..

” அப்படி உன்னால் உன்னுடைய விருப்பத்தை சுவாதி இடம் சொல்ல முடியும் என்றால் உன் விருப்பத்தை அவரிடம் சொல்… இல்லையென்றால், அப்பா அம்மாவிடம் மூடி உற்பத்தி சொல்லி சொல்லி அவர்களை சமாதானம் செய்து அவர்கள் வீட்டில் போய் பெண் கேளுங்கள் இல்லை முடியாது என்றால்” …

வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள். என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும் என்று விட்டு சாப்பிட்ட தட்டுகளை எடுத்துக் கொண்டு கழுவ சென்றான் .வாசு தனது நண்பன் தேவாவின் முதுகை வெறித்துவிட்டு அதானே நீ என்ன பண்ண போற என்று லேசாக முனங்கினான் “..

“இதில் நான் செய்வதற்கும் ,சொல்வதற்கும் ஒன்றும் இல்லை தம்பி என்று அவனது தோளில் தட்டி விட்டு டேய் நேரமாகிறது கிளம்பு . எது எப்படி இருந்தாலும் வேலையில் குறியா இரு என்று சிரித்துவிட்டு வாசுவும் தான் சாப்பிட தட்டை மட்டும் கழுவி வைத்துவிட்டு திரும்பினான் “..

ஏற்கனவே, தேவா அனைத்து பாத்திரங்களையும் கழுவி வைத்து விட்டான்.சாப்பிட்ட ஒரு சில நேரங்களில் தேவாவிற்கு வெளியே மீட்டிங் இருந்ததால் மீட்டிங் சென்று விட்டு மாலை வீட்டிற்கு செல்லும் நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து கொண்டு இருந்தான் ..

அப்பொழுது , “வரு அவளது இடத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள். புடவை அணிந்து இருந்தால் ஆனால் புடவை எங்கும் அவள் சொல்லியது போல் விலகவில்லை .ஆனால் ,அவள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தால் புடவை கொஞ்சம் மேலே ஏறி இருந்தது .அவளது பாதம் தெரியும் படியாக கொலுசு தெரியும் படியாக இருந்தது “..

“சாதாரணமாக தேவா அனைவரையும் பார்த்துக் கொண்டு வந்தவன். வருவை பார்த்துவிட்டு அவள் சொல்லியது ஞாபகத்தில் வந்ததால் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். எனக்கு அடக்க ஒடுக்கமாக உட்கார தெரியாது என்று சொல்லியதால் அவ்வாறு பார்க்க செய்தான்.”..

” அவளை பார்த்தவுடன் அவளது கால் கீழே தெரிவதை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் நின்று முறைதான் .அவள் அப்பொழுதும் அவனை பார்க்காமல் இருந்தாள். வரு தன்னை யாரோ குறுகுறு என்று பார்ப்பதை உணர்ந்து திரும்பும் வேளையில் சுவாதி வருவை சுரண்டினாள்.”..

“வரு என்னடி என்றாள்.சுவாதி கண்ணை காண்பித்தவுடன் வரு சுவாதியின் பார்வை போகும் திசையை பார்த்தாள்.  தேவா வருவை முறைத்துவிட்டு அவனது சென்று விட்டான். வரு தான் எதற்காக இப்பொழுது என்னை முறைக்கிறார் நான் ஒன்றும் செய்யவில்லையே என்றாள்..”

“எனக்கும் தெரியவில்லை ஆனால் உன்னுடைய கணவர் உன்னை சைட் அடித்தது போலும் இல்லை என்றாள் சுவாதி லேசான சிரிப்புடன் பிறகு ,வரு தன்னை ஒரு சில நொடி உணர்ந்து விட்டு ,மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு தனது காலை கீழே போட்டாள் “..

“சுவாதி அவளின் செயலை பார்த்துவிட்டு அமைதியாக இருந்தாள் பிறகு வருவின் பார்வை தேவாவின் அறை பக்கம் சென்றது .அவனும் வருவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு வரு அமைதியாக சுவாதியின் பக்கம் திரும்பிக் கொண்டாள்”..

” சுவாதி தான் என்ன டி என்றாள். வரு வீட்டில் நடந்த விஷயத்தை சொன்னவுடன் சுவாதி சிரிக்க செய்தாள். பொசசிவ்னஸ் அவருக்கு ரொம்பவே இருக்கு போல.. என்று வரு போ டி என்று சிரித்தாள். அதன் பிறகு ,இருவரும் அவர்களது வேலையை பார்க்க செய்தார்கள்”..

அப்படியே மாலை பொழுதும் வந்து  அனைவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள் .”வரு தேவாவிற்காக கீழே காத்துக் கொண்டிருந்தாள். காலையில் அவள் வண்டி எடுத்துக் கொண்டு வராததால் ஒன்றாக செல்ல வேண்டி இருந்தது.” ..

அவருக்கு ஏதாவது பெரிய வேலை இருந்தால் சுவாதியுடன் சென்று விடலாம் என்று சுவாதியுடன் நின்று கொண்டு இருந்தாள் .தேவா ,வாசு இருவரும் பேசிக்கொண்டே இறங்கி வந்தவுடன் தேவா தான் வாசுவிடம் சரி டா மச்சான் நீ கிளம்பு .

“இருவரும் ஒரே வண்டியில் செல்ல வேண்டும் நீ பார்த்து கிளம்பு .வீட்டில் பேசு என்றான். வாசுவும் சுவாதியை  நின்று பார்த்துவிட்டு சரிடா மச்சான் நான் வீட்ல பேசிட்டு சுவாதி இடம் பேச வேண்டும் என்றான் “..

தேவா சரி என்று விட்டு வாசுவை அனுப்பி வைத்துவிட்டு சுவாதியின் அருகில் வந்து நின்றான் .அண்ணா உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கிறதா ?இல்லை நான் வருவை அழைத்துக் கொண்டு செல்லவா ?என்றாள்..

இல்லை. ஸ்வாதி எதுவும் பெரிதாக வேலை இல்லை .வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்றான் .சரி என்று விட்டு சுவாதியும் வரு,தேவா இருவரிடம் சொல்லிக்கொண்டு அவளது  வீடு நோக்கி சென்று விட்டாள் .பிறகு ,தேவா வண்டி எடுத்துக்கொண்டு வந்தவுடன் வரு வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்..

“எங்காவது வெளியே சென்று விட்டு வரலாமா ?என்றான் தேவா.எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. புடவை கட்டி இருப்பது.வீட்டிற்கு செல்லலாமே முக்கியமாக செல்ல வேண்டுமா? நேற்றும் கேட்டீர்கள் என்றாள் “..

இல்லை சும்மாதான் ,என்று விட்டு அவளை திரும்பி பார்த்தான் .என்ன என்று கேட்டாள்.ஒன்றுமில்லை என்று விட்டு வண்டியை எடுத்தான். பிறகு ,இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து இறங்கினார்கள்.

“அவர்கள் வீட்டிற்கு போய் இறங்கும் போது அவர்கள் வீட்டில் ஒரு பைக் நின்று கொண்டு இருந்தது. அந்த பைக் யாருடையது யார் ?தேவா வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள்”.. என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அன்புடன்

தனிமையின் காதலி

3 thoughts on “புன்னகை 55”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *