Skip to content
Home » புன்னகை 57

புன்னகை 57

“தேவா, வரு இருவரும் சுவாதி வீட்டிற்கு செல்லும் பொழுது சுவாதி வீட்டில் ஒரு பெண் இருக்க செய்தாள். அந்த பெண்ணை பார்த்துவிட்டு இவள் யார் ?என்று தெரியாததால் தேவா ,வரு இருவரும் சுவாதி அருகில் போய் நின்றார்கள்”..

” மலர் அங்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து அழுது கொண்டு முகம் வீங்கி போய் இருப்பதை பார்த்தவுடன் வருவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது “..

“வேகமாக மலர் அருகில் சென்றவுடன் மலர் வருவை கட்டிக்கொண்டு அழ செய்தார் .அக்கா ஒன்றுமில்லை இந்த நேரத்தில் அழக்கூடாது “..

“எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு அந்த பெண்ணை ஒரு நிமிடம் திரும்பி பார்த்துவிட்டு உங்களுக்கு மாமா மீது நம்பிக்கை இருக்கு தானே என்றாள்.”.

“அவளாக ஒன்றை யோசித்து இருந்தாள் அந்த பெண்ணை பார்த்தவுடன்  எனக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லாமலா டி என்று அழுகை உடனே கேட்ட பிறகு பின்ன என்ன அமைதியாக இருங்கள்”..

“அவரும் தனது கண்ணீரை துடைத்துவிட்டு எழுந்து நின்றார் .பிறகு சுவாதி , அருகில் போய் நின்று என்ன ஆச்சு சுவாதி மாமா எங்கே என்று கேட்டதற்கு அவர் அறையில் இருக்கிறார் என்று சொன்னாள்…

“தேவா வேகமாக அறைக்குச் சென்றான் .அப்போது, அங்கு தங்களுடைய அறையில் இருக்கும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு யோசனையில் வசந்த் இருப்பதை பார்த்துவிட்டு தேவா  அவனது தோளில் வைத்தான்”..

” வசந்த் திரும்பி நின்று தேவாவை  கட்டிக் கொண்டார் .அண்ணா என்ன ஆச்சு ,ஏன் இப்படி உடைந்திருக்கிறீர்கள் நீங்களும் அண்ணியும் என்று கேட்டான்”..

“பிறகு என்ன செய்வது என்று கேட்டான் .அண்ணா எதுவாக இருந்தாலும் கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள் . எனக்கும் சரி ,வருவிற்கும் சரி ஏன் அண்ணிக்கும் சுவாதிக்கும் கூட உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது “என்றான்…

” சுவாதிக்கு என்று விட்டு சிரித்துவிட்டு சுவாதிக்கு நம்பிக்கை இருக்கிறது ஆனால், அதையும் தாண்டி வலி இருக்கிறது . “..

“அண்ணா இப்பொழுது நாம் சுவாதி பற்றி இங்கு பேசப் போவதில்லை. அந்த பெண் யார் ?உங்களுடைய பிரச்சினை இப்பொழுது என்ன ?நீங்கள் சூழ்நிலை கைதியாக நிற்கும் விஷயம் என்ன ?என்று கேட்டான் “..

“வசந்த் தனக்கு தெரிந்தவரை விஷயத்தை கூறினான் .தான் இந்த பெண்ணுடன் ஒன்றாக இருந்தது போல் அந்த பெண் சில போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டு வந்து மலரிடம் காண்பித்து இருக்கிறாள் “..

“அப்பொழுது, நான் செல் ஷாப்பில் இருந்து வந்தேன் மலர் இப்படி உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு என்ன என்று கேட்டதற்கு அவள் அந்த பெண் காமித்த ஆதாரத்தை என்னிடம் காண்பித்தாள் “..

“சரி நீங்கள் இந்த பெண்ணை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறீர்களா ? என்று அமைதியாக கேட்டான் தேவா .இல்லை தேவா நான் இந்த பெண்ணை இப்போது தான் பார்க்கிறேன் என்றான்”..

“அண்ணா நான் ஒன்று கேட்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே ?அன்று சுவாதி உங்களை ஒரு பெண்ணுடன் பார்த்த அல்லவா? அந்த பெண் இந்த பெண் இல்லை தானே ?..”

“இல்லை தேவா. அதனால் தான் சுவாதி இவ்வளவு நேரம் அந்த பெண்ணிடம்  கத்திக் கொண்டிருந்தாள் .சரி என்று விட்டு வசந்த்தை சமாளித்து அழைத்து  கொண்டு வெளியில் வந்தான்” ..

இங்கு வருவிற்கு சுவாதி அனைத்தையும் சொல்லி இருந்ததால் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

“அந்த பெண் தைரியமாக தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது என்று நின்று  கொண்டிருந்தாள். வரு  ஓங்கி அந்தப் பெண்ணின் தாடையில் அறைந்தாள்”.

“அவள் கீழே விழப போகும் நொடி தேவா அந்த பெண்ணை பிடித்து விட்டு வருவை மறுத்தான்”..

“என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?என்றான்..”

“நீங்கள் கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறீர்களா ?என்று தேவாவிடம் கத்திவிட்டு இவர் உன்னிடம் இருந்தார் சரி எப்படி உன்னுடைய கணவனாகவா ?இல்லை நீ அந்த மாதிரி ஆள் இல்லை”…

“இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று இப்பொழுது தான் தெரியுமா? இல்லை முன்கூட்டியே தெரிந்து இவருக்கும் உனக்கும் பழக்கமா ?”..

“என் அக்காவின் வாழ்க்கையை பறிப்பதற்காக வந்திருக்கிறாயா? என்று வசந்த் மேல் தப்பிருக்கிறது என்பது போல பேசினாள். அந்த பெண்ணும் தன்னை நம்பினால் போதும் என்று எண்ணி தனக்கும் இவருக்கும் இரண்டு வருடங்களாக பழக்கம் இருக்கிறது”..

” இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது .குழந்தை இல்லை என்று என்னிடம் வந்திருந்தார் என்று சொன்னவுடன் அடுத்த நிமிடம் சுவாதி ஓங்கி ஒன்று விட்டிருந்தாள் “..

“அந்த பெண் அதிர்ச்சியாகி இவ்வளவு நேரம் அமைதியாக பேசிக் கொண்டிருந்த சுவாதி தன் மேல் கை வைத்தவுடன் அவளையே பார்த்தாள் “..

“சுவாதி காரி துப்பி விட்டு எது என்னுடைய மாமா என்னுடைய அக்காவிற்கு குழந்தை இல்லை என்பதால் உன்னை தேடி வந்திருந்தாரா ? நல்லா கதை கட்டுகிறாயடி …”

“எனக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை .சரியா ?அவர்மேல் வருத்தம் இருக்கிறது. அதற்காக, என் மாமாவை நான் எங்கும் விட்டு தர மாட்டேன் என்று விட்டு இன்னும் சில பல அடிகளை ஓங்கி விட்டிருந்தாள்”..

” தேவா அமைதியாக இருந்தான். இங்கு வந்திருப்பது பெண் என்பதால்  நான் பேச முடியாது. கை நீட்டுவதும் சரியல்ல .ஆனால் இவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்கலாம் என்று அமைதி காத்தான்”..

“மலர் தான் போதும் நிறுத்துங்கள் என்று கத்தினாள். மலர் அந்த பெண்ணின் அருகில் வந்து இவர் எனக்கு குழந்தை இல்லை என்பதால் உன்னிடம் வந்தார். “..

“இப்பொழுது .நான் மாசமாக இருப்பதால் உன்னிடம் வருவதை நிறுத்திவிட்டார். அப்படித்தானே ,என்றவுடன் அந்த பெண் ஆமாம் என்பது போல் மிரச்சியுடன் தலையாட்டியவுடன் கை தட்டி சிரித்துவிட்டு  உன்னை இங்கு வர வைப்பதற்கு யார் ?எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று இந்த நிமிடம் சொல்ல வேண்டும் ..”

“நான் என் கணவனை நம்பாமல் அழவில்லை .சரியா ?நான் அழுவதற்கான காரணம் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை .ஆனால், இப்பொழுது இந்த நொடி நீ யார் சொல்லி வந்தாய் ?என்று சொல்லவில்லை என்றால் நான் உன்னை போலீசில் ஒப்படைப்பேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்”..

” நீ இங்கிருந்து உயிரோடு செல்ல முடியாது .எந்த காரணத்திற்காக இங்கு வந்தாயோ ?அதுவும் உன் கைக்கு கிடைக்காது என்றவுடன் அந்த பெண் மிரச்சியுடன் மூன்று பெண்களையும் பார்த்துவிட்டு பாவமாக இரண்டு ஆண்களையும் பார்த்தாள்”..

“இருவருமே அமைதியாக இருந்தார்கள் அப்போது வரு தான் அந்தப் பெண்ணின் முடியை கொத்தாக பிடித்து இப்பொழுது நீ சொல்கிறாயா ?இல்லை என் அக்கா சொன்னதை  நடத்தி காட்டவா ?என்றவுடன் சுவாதி கையை பிடித்து முறுக்க ஆரம்பித்தாள் “..

“வலி தாங்காமல் நான் சொல்லி விடுகிறேன் என்று விட்டு வசந்த் அண்ணன் குமார் தான் என்னிடம் பணம் கொடுத்து இவ்வாறு சொல்ல சொன்னார். இது மட்டும் இல்லை .”..

“நாங்கள் பணத்திற்காக என்று விட்டு அமைதியாகி விட்டாள். நான் உன்னுடைய விவரத்தை கேட்கவில்லை. என்றாள் வரு…”

அதன் பிறகு, “எங்களைப் போல் இருக்கும் ஒரு சில பெண்களிடம் பணம் கொடுத்து இவருடன் இருப்பது போல் இந்த பெண்ணிடம் என்று சுவாதி இடமும் மலரிடமும் கை காமித்தாள் இருவரும் பார்க்கும் படியாக செய்ய சொன்னார்கள்.”..

“அதற்கு ஏற்ப நாங்களும் செய்தோம். ஆனால், அப்பொழுதும்  இவர்களை என்று வசந்த் மலரை விட்டு வரவில்லை. ஆகையால், இப்பொழுது மலர் மாசமாக இருப்பதை உணர்ந்து விட்டு என்னிடம் பணம் கொடுத்து இது போல் செய்ய சொன்னார் “..

“இதெல்லாம் அவர்கள் கொடுத்த போட்டோ தான் என்றவுடன் மலர் சீ என்று காரி துப்பினார். பின்னர்  அந்த பெண்ணை விட சொல்லி வசந்த் சுவாதி, வரு இருவரிடமும் சொன்னவுடன் வரு, சுவாதி இருவரும் அந்த பெண்ணை அமைதியாக விட்டு விட்டார்கள் “..

“அவளும் தப்பித்தால் போதும் என்று வெளியே செல்ல இரண்டு அடி எடுத்து வைத்தாள். தேவா தான் இங்கு நடந்த எதுவும் உனக்கு பணம் கொடுத்தவர்களிடம் மூச்சு விடக்கூடாது என்றார்கள் “..

“அந்த பெண்ணும் தான் உயிர் தப்பித்தால் போதும் என்று எண்ணி நான் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன் சார் என்று ஓடிவிட்டாள்”.

” இப்பொழுது தேவா வசந்தை பார்த்தான். வசந்த் தன் தலையில் அடித்துக் கொண்டு உட்கார்ந்தான். சுவாதி தான் வேகமாகச் சென்று தனது மாமாவை கட்டிக்கொண்டு அழ செய்தாள்”..

” அவனும் அவளை கட்டிக்கொண்டான். மாமா  எழுந்திருங்கள் .இது நாம் அழும் நேரம் அல்ல .உங்கள் அண்ணனிடம் நீங்கள் இந்த சொத்து வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்து விட்டீர்கள் “..

“இப்பொழுது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதாலும் உங்களுடைய அப்பா ,அம்மா உங்கள் பேரில் அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்திருப்பதாலும் இவ்வாறு செய்திருக்கிறார்”..

” நமக்கு சொத்து வேண்டாம் மாமா .நீங்கள் அனைத்து சொத்தையும் நாளையே அவர்களுக்கு எழுதி வைத்துவிடலாம் “

“.ஆனால் ,இப்பொழுது இந்த நிமிடம் சென்று இவர்கள் சொத்துக்காக கூட பிறந்த தம்பியின் வாழ்க்கையை இவ்வாறு அழிக்க நினைப்பார்களா ?என்ன என்று கேட்டு விட்டு வரலாம் என்று அவனை எழுப்பினாள்”..

” அவனிடம் போய் என்ன கேட்க சொல்கிறாய் ?என்று வசந்த் கத்தினான் .”

“உங்களுக்கு மலர் வேண்டும் என்றால் நீங்கள் செய்ய தான் வேண்டும் இல்லை என்றால் நான் இத்தனை நாட்கள் யோசித்தேன் உங்களையும் நினைவில் வைத்து ஆனால் இனி ஒரு நொடி கூட யோசிக்க மாட்டேன். “..

“மலரை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவேன் வேறொரு வீட்டுக்கு சென்றவுடன் வசந்த் சுவாதியை ஓங்கி அறைந்து விட்டு அமைதியாக பார்த்தான்”..

“அவனுக்கு சுவாதி இடம் என் மனைவியை அழைத்து கொண்டு செல்ல நீ யார் ?என்று கேட்க அவனுக்கு விருப்பமில்லை “..

“தன்னுடைய முதல் குழந்தையாக சுவாதியை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அவன் எப்படி அவ்வாறு கேட்பான் .”

பிறகு ,”சுவாதி தான் அழுது கொண்டே தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்று சிரித்துவிட்டு எழுந்திருங்கள் என்றவுடன் வசந்த் எழுந்து நின்றான்”..

“வரு தான் இப்பொழுது வேண்டாம் .காலையில் பேசிக்கொள்ளலாம் .இல்லடி என்றாள் சுவாதி. அமைதியாக இரு மலர் அக்காவை யோசி என்றவுடன் மலர் ஒடுங்கி இருப்பதை பார்த்துவிட்டு தேவாவும் அவ்வாறே சொன்னவுடன் சுவாதியும் சரி என்று விட்டு அமைதியானாள் “..

பிறகு “வசந்த் தான் சரி நீங்கள் இருவரும் வீட்டிற்கு கிளம்புங்கள் நேரம் ஆகிறது .இல்லை அண்ணா என்று தேவா சொன்னத்திற்கு ஒன்றும் இல்லை இதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவுடன் சுவாதியும் அவ்வாறே சொன்னவுடன் சரி என்று விட்டு வரு,தேவா இருவரும் அவர்கள் வீடு நோக்கி சென்று விட்டார்கள்”..

பிறகு “தேவா செல்வதற்கு முன்பு மூவருக்கும் உணவு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றான். மூவரையும் சாப்பிட வைத்துவிட்டு தான் வரு,தேவா இருவரும் அவர்கள் வீடு நோக்கி சென்றார்கள்”..

“வசந்த் மலரை அழைத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றான் .சுவாதி அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள் .”

“சுவாதி சொல்லியது போல் நாளை விடியலில் வசந்த் அண்ணனை பார்த்து ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்டுவிட்டு வசந்த் அனைத்து சொத்தையும் அவனது அண்ணனுக்கு எழுதி கொடுத்து விட்டு வருவானா ?”என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

தனிமையின் காதலி

1 thought on “புன்னகை 57”

  1. எதற்கு அவர்களுக்கு சொத்தை தர வேண்டும்..?
    இவங்களுக்கும் தானே உரிமை இருக்குது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *