Skip to content
Home » புன்னகை 58

புன்னகை 58

“சுவாதி சொல்லியது போல் மறுநாள் விழுந்தவுடன் மலராகவே எழுந்து வீட்டு வேலையில் அனைத்தையும் முடித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.”..

“வசந்த்  எட்டு மணி போல் எழுந்து வந்தான். வசந்த் வந்தவுடன் கிளம்புங்கள் நாம் உங்கள் வீட்டிற்கு சென்று விட்டு வரலாம் என்றவுடன் மலராக அழைத்தவுடன் வசந்த் சரி என்றான் “..

“சுவாதியும் வந்தாள். வரு ,தேவா இருவரும் வீட்டில் நடந்த அனைத்தையும் போன் மூலமாக கலை, மாணிக்கத்திற்கும் வீட்டில் வந்து அரசி ,தீரன் இடமும் சொல்லிருந்ததால் அனைவரும் தாங்களும் வருவதாக சொன்னார்கள்”..

“வரு தான் அனைவரும் ஒரே நேரத்தில் போய் எதையும் பிரச்சினை ஆக்க வேண்டாம். நாங்கள் மட்டும் சென்று விட்டு வருகிறோம்”..

. நான் ஏற்கனவே நடேசன் அப்பாவிற்கு ஃபோன் செய்து விடுமுறை சொல்லிவிட்டேன் என்று விட்டு காலை போல் வாசுவிற்கு அழைத்தான்.

” வாசு போன் எடுத்தவுடன் டேய் ஒரு முக்கியமான இடத்திற்கு போக வேண்டும். உனக்கு விடுமுறை சொல்லிக்கொண்டு நான் சொல்லும் இடத்திற்கு வந்து விடு என்றான்”..

” டேய் என்னடா மச்சான் என்று கேட்டதற்கு அங்கு வந்து பார் ? என்று விட்டு வைத்து விட்டான். “.

ஏற்கனவே ,”தன் நண்பனிடம் சுவாதியின் அக்கா மலருக்கு. ஐந்தாம் மாதம் சாதம் கொடுத்ததை சொல்லவில்லை என்றவுடன்  அவன் முகம் போனதை வைத்து அவனது வருத்தத்தை உணர்ந்ததால் இப்பொழுது தேவாவே அழைத்து சொல்லியிருந்தான் “..

அவனுக்கு இரவு சொல்ல நேரமில்லை என்று கூட சொல்லலாம். ஆகையால் காலையில் கிளம்புவதற்கு முன்பு போன் செய்து சொல்லி இருந்தான் .பிறகு ,லொகேஷன் அனுப்பி இருந்தான்…

வாசுவும் வந்திருந்தான்.தேவா, வரு இருவரும் சுவாதி வீட்டிற்கு சென்று அனைவரும் ஒன்றாக ஒரு கால் டாக்ஸி புக் பண்ணி சென்றிருந்தார்கள்.

“வசந்த் பெற்றவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு, அங்கு வசந்த் அம்மா ,அப்பா இருவரும் ஹாலில் தான் இருந்தார்கள். அவர்களுக்கு அவர்கள் பெரிய மருமகளை பிடிக்கவில்லை என்று கூட சொல்லலாம் “..

“பணத்திற்காக இந்த வீட்டிற்கு வந்துவிட்டு தினமும் தங்கள் பெயரில் சொத்து எழுதி வைக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.”..

” இவர்கள் இருவரையும் நன்றாக கூட பார்த்துக் கொள்வதில்லை .அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எனது இளைய மகனின் பெயரில் தான் அனைத்து சொத்துகளும் இருக்கிறது”..

” உன் பெயரில் இரண்டு சொத்துக்கள் மட்டும் தான் இருக்கிறது என்றவுடன் வசந்த் அண்ணன் மனைவி தான் இவ்வாறு வசந்த் அண்ணனுக்கு குமார் ஐடியா கொடுத்து குமார் இவ்வளவும் செய்தார்”..

” அவர்களுக்கு இப்பொழுது ஒரு வருடங்களாக கெடுதல் செய்து கொண்டிருக்கிறான். வசந்த் அங்கு வந்து நின்றவுடன் வசந்த் அப்பா அம்மா தங்களது வயதையும் தாண்டி வேகமாக வந்து தங்களது இளைய மகனை கொஞ்சினார்கள்”..

” வசந்த் அமைதியாக தனது தாய் தந்தையிடம் உடல்நிலை பற்றி விசாரித்தான். பிறகு ,மலரை பார்த்துவிட்டு இதுதான் உன்னுடைய மனைவியா டா? எங்கள் கண்ணில் கூட காட்டவில்லை என்று மலரின் தாடையை பிடித்துக் கொண்டு வசந்தின் அம்மா அழுதார்”..

” மலரும் லேசாக அழ செய்தாள்.எப்படி இருக்கிறாய் ? என்று கேட்டார். மலர் எதுவும் பேசவில்லை. அப்பொழுது ,குமரன் மனைவி தான் இங்கு எதற்காக வந்திருக்கிறாய்?”..

” நீ விரும்புவளை திருமணம் செய்து கொண்டால் இந்த வீட்டு பக்கம் வரமாட்டேன் என்று தானே சொன்னாய் ?என்று கத்தினார் “..

“அதுவரை அமைதியாக இருந்த வசந்த் அருகில் உள்ள ஒரு பூச்சாடியை தூக்கி எறிந்து நான் உங்களிடம் பேச வரவில்லை.”

” நான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். நான் இங்கு வர வேண்டுமா ?வேண்டாமா? என்பதும் என்னுடைய விருப்பம் .”..

“இதில் நீங்கள் தலையிட்டால் கீழே விழுந்த பூச்சாடி உங்கள் மண்டையில் விழும் என்று கத்தினான் “..

“அவன் அண்ணிக்கு பயம் வந்துவிட்டது. குமார் சத்தம் கேட்டு வெளியில் வந்தவன் தனது தம்பி குடும்பத்துடன் இருப்பதை பார்த்துவிட்டு என்னடா இந்த பக்கம் என்று கேட்டான் “..

“வேகமாக அவனது சட்டையை பிடித்தான் . வரு தான் வந்து சட்டையை எடுத்துவிட்டு மாமா அமைதியாக இருங்கள் .உங்கள் அப்பா அம்மாவை மனதில் வையுங்கள் என்றவுடன் வசந்த் ஒரு சில நொடி இதனால் தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன்”..

ஆனால் ,இப்பொழுது என்றான்.

“என்னடா ஆச்சு என்று வசந்த் அப்பா கேட்டவுடன் வரு அனைத்தையும் ஒன்று விடாமல் அனைத்தையும் சொன்னாள்.”

“அவர்கள் இருவருக்கும் தலை சுற்றியது. அப்பா அம்மா உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு சுவாதியை நீர் எடுத்துக் கொண்டு வர சொன்னாள் இதுவரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவுடன் வசந்த் அப்பா தனது பெரிய மகன் குமாரை ஓங்கி அறைந்திருந்தார் “..

அதேபோல் ,”வசந்த்தின் அம்மா தனது பெரிய மருமகளை அடித்திருந்தார். உங்கள் இருவருக்கும் இன்னும் சொத்து மேலிருக்கும் மோகம் போகவில்லை அப்படித்தானே”..

” உங்கள் இருவருக்கும் இந்த சொத்து தானே வேண்டும் என்று கத்தினார் .அப்பொழுது ,குமாரின் மனைவி ஆமாம் .எங்கள் இருவருக்கும் சொத்து தான் வேண்டும். அதற்கு என்ன ?”..

“நீங்கள் ஏற்கனவே உங்கள் இளைய மகனின் பெயரில் அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்திருக்கிறீர்கள். “..

இப்பொழுது,  “உங்கள் இளைய மருமகள் மாசமாக வேறு இருக்கிறாள் என்றவுடன்  வசந்த் அம்மாவின் பார்வை தனது இளைய மருமகள் மலர் மீது இருந்தது.அவள் அமைதியாக இருந்த உடன் வசந்த்தை பார்த்தார்”..

” வசந்த் ஆமாம் ,என்று கண்ணை மூடி திறந்தவுடன் வேகமாக சென்று மலரை கட்டிக்கொண்டு சாரி மா உன்னை இந்த நிலைமையில் நிற்க வைத்த அனைத்திற்கும் காரணம் நாங்கள் இருவரும் தான் “..

“நாங்கள் வசந்த்தை நம்பாமல் இல்லை. ஆனால் ,ஒரு தாயாக என்னுடைய சூழ்நிலையும் கொஞ்சம் யோசி உன்னை நாங்கள் தவறாக சொல்லவில்லை.”..

“ஆனால் , என்று விட்டு அமைதியாக இருந்தார். அப்பொழுது ,வரு தான் அம்மா விடுங்கள் இப்பொழுது நாங்கள் உங்களை தவறு சொல்லவில்லை”..

ஆனால் ,”உங்கள் பெரிய மகன் இப்பொழுது என்ன செய்து இருக்கிறார். இன்று வரை யோசியுங்கள் என்றவுடன் வேகமாக வசந்த் அப்பா இந்த சொத்து அவன் பெயரில் இருப்பதால் தானே இவ்வளவும் செய்து கொண்டிருக்கிறாய் என்று விட்டு உடனடியாக தன்னுடைய வக்கீலுக்கு போன் செய்து வர செய்தார்”.

அடுத்த அறை மணி நேரத்தில் வக்கீலும் அந்த பிறகு, “குமார் பெயரில் இருக்கும் அனைத்து சொத்துகளையும் வசந்த் குழந்தை பெயரில் மாற்றிவிட்டு குமாருக்கு இப்பொழுது தாங்கள் இருக்கும் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இந்த வீடு கூட தாங்கள் உன்னைப் பெற்றதற்காக மட்டும் தான் சரியா ?”..

“இதுவரை நீங்கள் இருவரும் எங்களுக்காக என்று எதுவும் யோசித்ததில்லை .உனது பொண்டாட்டி என்னவென்றால் தினமும் விதவிதமாக உடைய அணிந்து கொண்டு கேவலமாக பார்க்க சகிக்காமல் உடை அணிந்து கொண்டு லேடிஸ் கிளப் என்று பார்ட்டி என்று சென்று விட்டு வருகிறாள்”..

“நீ  ஏனென்றால் பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்கிறாய் .இனி நாங்கள் இந்த வீட்டில் இருப்பதாக இல்லை. நாங்கள் எனது இளைய மகன் உடனே சென்று விடுகிறோம்”..

” இந்த சொத்தை உனக்கு கொடுத்துவிட்டு செல்வேன் என்றெல்லாம் யோசிக்காதே .சரியா ?என்று விட்டு எழுந்தார்கள் .”..

அப்பொழுது ,”வசந்த் தனக்கு எந்த சொத்தும் வேண்டாம் நான் இந்த சொத்தும் வேண்டும் என்றெல்லாம் எண்ணி வாழவில்லை “என்றான்..

“அவனின் அப்பா ,அம்மா இருவரும் வசந்தை அழுகையுடன் பார்த்தவுடன் இல்லை. நான் உங்கள் இருவரையும் என்னுடன் அழைத்துக் கொண்டு செல்கிறேன் “..

ஆனால் ,”எனக்கு இந்த சொத்து வேண்டாம். இந்த சொத்து எதுவும் வேண்டாம் என்று ஒரே வார்த்தையாக சொன்னான். மலரை பார்த்தார்கள் மலரும் தங்களுக்கு சொத்து வேண்டாம் அத்தை”..

” இந்த சொத்துக்காக நாங்கள் இப்பொழுது இங்கு வரவில்லையே என்றவுடன் சுவாதி ஒரே வார்த்தையாக ஆனால், இந்த சொத்தை நாங்கள் உங்கள் பெரிய மகனுக்கும் எழுதி வைக்க மாட்டோம் “..

“என் மாமாவின் பெயரில் தானே இருக்கிறது. அவர் டிரஸ்ட்க்கு எழுதி வைக்கட்டும் என்றவுடன் பெரியோர்களுக்கும் அதுவே சரி என்று பட்டதால் குழந்தையின் பெயரில் கொஞ்சம் சொத்து இருக்கட்டும் என்று சொன்னதற்கு சுவாதி தான் நீங்கள் இருவரும் எங்களுடன் வாருங்கள் அத்தை மாமா நீங்கள் இருவரும் எங்களுடன் இருந்தாலே போதும் “.

“எங்களுக்கு இந்த சொத்து வேண்டாம் .மாமாவிற்கு நல்ல வேலை இருக்கிறது. எனக்கும் வேலை இருக்கிறது .அக்கா மாசமாக இருக்கிறாள் .இப்பொழுது ,பெரியவர்களின் துணை அக்காவிற்கு தேவை ஒத்துக் கொள்கிறோம் “..

இப்பொழுது நான் உணர்ந்து இருக்கிறேன் பெரியவர்கள் வேண்டும் என்பதை ஆனால் ,அதற்காக நீங்கள் அன்று என் அக்காவை வேண்டாம் என்று சொன்னது தவறு என்றெல்லாம் நான்  சொல்ல முடியாது பெற்றவர்களாக நீங்கள் யோசித்தது”..
என்று விட்டு அமைதியாக இருந்தாள்.

” அவர்களும் சுவாதியை கட்டிக் கொண்டு அழுதார்கள். பிறகு ,தனது பெரிய மகனை காரி துப்பி விட்டு அவர்கள் வீட்டில் இருந்து வேறு எதுவும் எடுத்துக் கொண்டு செல்லாமல் தங்கள் உடுத்திருந்த உடையோடு சுவாதி ,வசந்த் ,மலர் இருக்கும் வீட்டிற்கு சென்றார்கள் “..

“அனைத்தும் அமைதியாக முடிந்ததால் வரு, தேவா இருவரும் மதியம் போல் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள். “

“பிறகு கலையும் ,மாணிக்கமும் அங்கு வரு வீட்டில் தான் இருந்ததால் அனைவரிடமும் விஷயத்தை சொன்ன பிறகு அனைவருக்கும் சிறிது வருத்தம் தான் இருந்தாலும் இதிலிருந்து அனைவரும் சீக்கிரம் வெளியில் வந்து விடுவார்கள் என்று எண்ணி அமைதியாக இருந்தார்கள் “..

நாட்கள் சென்றது .”வசந்த் பெற்றவர்களும்  மலரை தாங்கினார்கள். நாட்கள் ஓடி மாதங்கள் சென்றது வரு, வசந்த் நல்லவன் என்று உறுதி ஆன பின்பு வாசுவின் பெற்றவர்களை நேரில் சந்தித்து விஷயத்தை சொல்லிவிட்டு வந்துவிட்டாள்”..

“அவள் அவனுடைய தோழிக்காக செய்த ஒன்று தேவாவிடம் கூட சென்று விட்டு வந்து தான் சொன்னாள். தேவா சிரித்துவிட்டு அமைதியாக விட்டு விட்டான் “.

வசந்த்தின் தாய் தந்தை தனது மகன் எதுவும் சொல்லாமல் இருப்பதால் அமைதியாக இருந்தார்கள்.

  “வாசு அன்று வசந்த் பெற்றவர்கள் வீட்டிற்கு சென்று இருக்கும் பொழுது அவனுக்கு அங்கு நடந்த அனைத்துமே புதிய செய்தி என்பதால் அப்படியே நின்று கொண்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்”..

வாசு குமாரை அடிக்கப் போகும்போது தேவா தான் குறுக்கே வந்து வாசுவை தடுத்திருந்தான். ஆகையால், வாசுவும் அமைதி காத்தான் பிறகு 2 மாதங்கள் சென்று இருந்தது..

” அப்பொழுது ,வாசுவின் பெற்றவர்கள் திரும்பவும் வாசுவிடம் வந்து நின்றவுடன் அம்மா நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். சுவாதி என்ற பெண்ணை விரும்புகிறேன் என்று என்றவுடன்  சரி வா அந்த பெண் வீட்டில் சென்று பெண் கேட்டுவிட்டு வரலாம் என்றார்கள்”.

உங்களுக்கு ஓகேவா அந்த பெண்ணுடைய மாமா என்றான்.”வரு எங்களிடம் அனைத்து உண்மையை சொல்லிவிட்டாள் என்று சிரித்தார்கள் .பிறகு சரி என்று விட்டு வருவிற்கு போன் செய்து வாசுவின் அம்மா விவரத்தை சொன்ன பிறகு சுவாதி வீட்டிற்கு மாலை அலுவலகம் முடிந்து நேராக சென்றிருந்தார்கள்”..

சுவாதி தான் ஒரு சில நிமிடம் அமைதியாக இருந்தாள் .அப்போது வசந்த் பெற்றவர்கள் தான் திருமணத்தை எங்களுடைய மருமகளுக்கு குழந்தை பிறந்து பிறக்க வைத்துக் கொள்ளலாமே ?இப்பொழுது நிச்சயம் மட்டும் செய்து கொள்ளலாமே ?சுவாதி இந்த குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள் “..

“தன் அக்காவையும் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறாள் . ஆனால் எங்களுக்கு பெண் கொடுக்க சம்மதம் என்ற பிறகு வாசுவின் தாயும் அவர்கள் நிலவரத்தை உணர்ந்தால் நிச்சயத்தை மட்டும் இன்னும் ஒரு வாரத்தில் வைத்துக் கொள்ளலாமா? “..

“திருமணத்தை வேண்டுமானால் குழந்தை பிறந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டார்கள் .பிறகு அனைவரும் சரி என்று சம்மதம் சொன்னார்கள். அப்போது ,வரு தான் பெண் இன்னும் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையே என்று சிரிப்புடனே கேட்டாள் “.

“சுவாதி வருவை முறைத்துவிட்டு நான் வாசு இடம் ஒரு சில நொடி பேச வேண்டும் என்று கேட்டாள் .அனைவரும் சரி என்பது போல் அமைதியாக இருந்த உடன் வாசு அவர்கள் வீட்டு ஒரு அறைக்குள் போய் நின்றான்”..

” சுவாதியும் அடுத்து ஒரு சில நொடியில் அந்த அறைக்கு வந்து நின்றாள் . சுவாதி வாசுவிடம் என்ன பேச போகிறாள். சுவாதி வாசுவை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்வாளா ?”என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அன்புடன்

தனிமையின் காதலி

3 thoughts on “புன்னகை 58”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *