Skip to content
Home » புன்னகை 59

புன்னகை 59

சுவாதி அறைக்கு சென்றவுடன்  கதவை தாழ்ப்பாள் போடாமல் சாதாரணமாக சார்த்த செய்தாள் ..

“அவள் வந்து நின்றவுடன் என்ன பேச வேண்டும் என்று வாசு நேரடியாக கேட்க செய்தான். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று என்னிடம் சொல்லவில்லையே ?என்று அமைதியாக கேட்டாள்”..

“எனக்கு உன் மேல் விருப்பம் இருக்கிறது என்று உனக்கும் தெரியும் .ஆனால், என்னுடைய விருப்பத்தை நான் வந்து உன்னிடம் சொல்வதை விட உன் வீட்டில் பெண் கேட்டு உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்”..

“சுவாதி அமைதியாக இருந்தாள். உனக்கு இந்த திருமணத்தில் விருப்பமா முழு மனதுடன் விருப்பம் என்றால் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் இல்லையா என்று விட்டு அமைதியாக இருந்தான்..”

“சுவாதி லேசாக சிரித்துவிட்டு இல்லையென்றால் வேறொரு பெண் பார்த்துக் கொள்வீர்களா ?”என்று கேட்டாள்…

” வாசு சுவாதியை முறைத்தான்.  கொஞ்ச நாட்கள் கழித்து நிச்சயம் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று தான் கேட்டேனே தவிர ..
உன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்வது பற்றி நான் யோசிக்கவில்லை” என்றான்

“சுவாதி சிரித்துக்கொண்டே எனக்கு சம்மதம். ஆனால் ,திருமணம் உண்மையாகவே அக்காவிற்கு குழந்தை பிறந்த பிறகு தான் உங்களுக்கு அதில் ஒன்றும் பிரச்சனை இல்லையே.? “

“வாசுவும் சிரித்துக் கொண்டே அவளது தாடையை பிடித்து அவளது கண்ணை நேருக்கு நேராக பார்த்துவிட்டு எனக்கு நீ என்னுடையவள் என்ற நம்பிக்கை மனதில் விதைத்தால் மட்டும் போதும்”..

“திருமணத்தை இன்னும் இரண்டு வருடங்களுக்கு கழித்து கூட வைத்துக் கொள்ளலாம் “..

“இரண்டு வருடம் நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். உங்கள் வீட்டில் என்று கேட்டாள். வாசு அவளை முறைத்தான் “..

“சுவாதி சிரித்துக்கொண்டே வாசுவின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு எனக்கு திருமணத்திற்கு சம்மதம் என்று விட்டு வாசு அதிர்ச்சியாகி நிற்கும் போது வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்”..

” அவள் சிரித்த முகமே அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் என்பதை அனைவருக்கும் காட்டிக் கொடுத்தது “..

“வாசுவின் வருகைக்காக தேவா பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன்  ஐந்து நிமிடங்களுக்கு பிறகு பேய் அறைந்தது போல் வந்ததை பார்த்துவிட்டு வரு தேவாவிடம் கண் காண்பித்து சிரிக்க செய்தாள் “.

“தேவா முறைத்து விட்டு அமைதியாக இரு டி உன்னுடைய தோழி உன்னை போலவே இருப்பாள் போல ஏதாவது செய்து விட்டாள் போல அதான் எனது நண்பன் இப்படி இருக்கிறான்”. என்றான்..

“வரு தேவாவை முறைத்துவிட்டு சிரிக்க சிரித்தாள். பிறகு , வாசுவின் தாய் தான்  வேறொரு நல்ல நாள் பார்த்து நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று விட்டு இப்பொழுது சுவாதிக்கு பூ மட்டும் வைத்துவிட்டு அவர்கள் வீடு நோக்கி கிளம்பினார்கள்”..

“வாசு கிளம்பும்போது சுவாதியை ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பி பார்த்தான். வசந்த் சுவாதி அருகில் வந்து கேடி என்ன பண்ணி வச்ச பையன் பேய் அறைந்தது போல போறான் என்று கேட்டான் “..

“சுவாதி வசந்த் தை பார்த்து கண்ணடித்துவிட்டு உங்கள் சகளைக்கு உங்க அளவுக்கு விவரம் பத்தலா  மாமா என்று சிரித்தாள் .வசந்த் சிரித்தான்”..

இப்படி நாட்கள் சென்றது “அடுத்த ஒரு வாரத்தில் நல்ல நாள் பார்த்து  வாசு ,சுவாதி இருவருக்கும் சிறிதாக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து சிம்பிளாக  சுவாதி வீட்டிலே நிச்சயதார்த்தம் வைத்தார்கள் “..

“நிச்சயம் நல்ல முறையில் நடந்தது. இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது அப்பொழுது சகுந்தலா வரு,தேவா வீட்டிற்கு வந்திருந்தார் “..

“வரு, தேவா இருவரும் அலுவலகம் விட்டு வரும்பொழுது சகுந்தலா இருப்பதை பார்த்துவிட்டு வரு வேகமாக வந்து தனது சித்தியை கட்டிக்கொண்டு என்ன சித்தி இந்த பக்கம் என்று கேட்டாள்”..

“நீ தாண்டி ரொம்ப பிசி கல்யாணமாகி போனவ சித்தியை மறந்து விட்டாய். சித்தி போன் பண்ணா ரெண்டு வார்த்தை பேசிட்டு வைத்து விடுகிறாய்..”

“கல்யாணத்திற்கு முன் நான் போன் பேசுலனு என்னை திட்டுவ மேடம் இப்ப நீங்க ரொம்ப குடும்பஸ்திரி ஆயிட்டீங்க என்றார்”.

” சித்தி என்று சிரித்தாள் பிறகு தேவாவும்  வரவேற்றான். அப்பொழுது அரசி வருவையே பார்த்துக் கொண்டு இருந்தார் வரு ஒன்றும் புரியாமல் சகுந்தலாவை லேசாக அவளுடைய அறைக்கை அழைத்து சென்றாள்”..

“சகு என்ன வந்து பேசினாய் என்னுடைய மாமியார் முகமே ஒரு மாதிரி இருக்கு என்று கேட்டாள். நான் உன் மாமியாரை ஒன்றும் சொல்லவில்லை மா போதுமா? என்றார் ..

“பின்ன என்ன சொன்னாய் என்று கேட்டாள் உனக்கு திருமணம் ஆகி மூன்றாவது மாதம் முடிய போகிறது தாலி பிரித்து கோர்ப்பதை பற்றி அக்கா எதுவும் பேச்சு எடுக்கவில்லை” அதனால், நான் பேசிவிட்டு செல்லலாம் என்று வந்தேன்”..

” ஏன் ,உன் அக்காவிற்கு பேச தெரியாதோ என்றாள் .பிச்சு எடுத்துடுவேன் உன் வீட்டில் இருந்து பேசுவார்கள் என்று கூட அக்கா அமைதி காத்திருக்கலாம்”..

” ஆனால் இங்கிருந்தும் யாரும் எதுவும் சொல்லவில்லை .அக்காவும் எதுவும் பேசவில்லை என்பதால் நான் வந்தேன். ஏன் இரு வீட்டிலும் யாருக்கும் எதுவும் பேச தெரியாது என்று நீ அங்கிருந்து பஸ் ஏறி வந்தாயோ? என்றாள்”..

“கிண்டல் பண்ணாதே வரு  என்றார்  சித்தி நான் கிண்டல் பண்ணவில்லை. சரியா ?என்றாள். இப்பொழுது என்ன டி பிரச்சனை என்றார்”..

அவர்களிடம் என்ன பேசினாய் என்று கேட்டாள் .”வரு உண்மையாகவே நான் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று மட்டும் தான் கேட்டேன் “..

ஆனால் ,”அவர்கள் எதுவும் பதில் சொல்லாமல் மற்றதை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சரி நீங்கள் இருவரும் வரட்டும் என்று அமைதி காத்தேன் வேறு ஒன்றும் நடக்கவில்லை என்றார்”..

” தனது சித்தி பொய் சொல்லவில்லை என்பதை உணர்ந்தாள் வரு சரி என்று விட்டு வெளியில் அழைத்துக் கொண்டு வந்தாள்”..

“தேவா  வருவின் முகத்தை பார்த்தான். என்ன என்று கேட்டான். அவனை அறைக்கு வருமாறு சொன்னாள்.தேவாவும் அமைதியாக வந்து நின்றான்”..

*அவளை பார்த்தான் வருவின் கண்கள் கலங்கி இருந்தது.என்ன டி ஆச்சு என்று கேட்டான். அவள் தேவாவை கட்டி அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்..”

“வரு என்ன ஆச்சு உன்னுடைய சித்தி என்ன சொன்னாங்க. அம்மாவின் முகம் ஒரு மாதிரி இருக்கிறது என்று கேட்டான் அவள் விஷயத்தை சொன்னவுடன் தேவாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது”..

“வீட்டில் உள்ள யாரும் தாலி பிரித்து கோர்பது பற்றி பேசாததால் தானே ஒரு தாயாக வருவின் சித்தி இங்க வந்து இது பற்றி பேசுகிறார்கள் ஒரு தாயாக அவர்களின் எண்ணம் தவறில்லையே என்று யோசித்தான்”..

” ஆனால் ,இதைப் பற்றி தன்னுடைய அம்மா யோசிக்கவில்லையே என்று லேசாக வருத்தம் என்று கூட சொல்லி விட முடியாது வலி இருக்க செய்தது “..

“வருவை அவனிடம் இருந்து பிரித்து விட்டு வேகமாக வந்து அரசியின் மடியில் படுத்துக்கொண்டு அழ செய்தான் அவர் அமைதியாக இருந்தார்”..

“அவளுக்கு தாலி பிரித்து போட வேண்டிய சடங்கு பற்றி கூட உங்களுக்கு தெரியாதா ?இல்லை நான் வேண்டாம் என்று எண்ணியதால் அவளுக்கு செய்ய வேண்டாம் என்று விட்டு அமைதியாக இருக்கும் போது அரசி அவனது தாடையில் ஓங்கி அறைந்திருந்தார் “..

“வரு சிரித்துக் கொண்டு நின்றாள். அனைவரும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் .ஆனால், தேவா தனது தாயை எழுந்து நின்று பார்த்தான்”..

” என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறாய் ?என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் எப்பொழுதுமே என்னை நம்பவே மாட்டாயா? “..

“மூவருமே என்னை நம்பக்கூடாது என்று குறிக்கோளாக இருக்கிறீர்களா “உன்னிடம் வந்து நான் சொன்னேனா அவளுக்கு நான் தாலி பிரித்து போட மாட்டேன் என்று “..

“வரு சிரித்து முகமாக இருந்தாள். அப்போது அரசி தான்  எல்லாம் உன் வேலை தான டி என்று கத்தினார்”..

” இப்பொழுது, மற்ற அனைவருமே வருவை அதிர்ச்சியாக பார்த்தார்கள் .வரு அப்பொழுதும் சிரித்த முகமாக வேறு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் “என்று கேட்டாள் ..

“நீதானே இப்போது சகுந்தலாவிற்கு ஃபோன் செய்து இங்கு வந்து பேச சொன்னாய் என்றவுடன் வரு திருட்டு முழித்தாள் “..

“மற்ற அனைவரும் வருவை பார்த்தார்கள் என்ன இவள் சொல்லி சகு வந்து பேசுகிறாரா ?என்று அவளுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தால் தங்களிடமே பேசி இருக்கலாமே? என்ற எண்ணம் கலை,மாணிக்கம் ,தீரன் ஆது அனைவருக்குமே “.

ஆனால் ,”வரு சிரித்த முகமாக ஒத்துக் கொள்கிறேன் அத்தை நான் தான் வரச் சொன்னேன் இப்பொழுது அதற்கு என்ன என்று கேட்டாள் “..
வரு தேவாவை பார்த்துக் கொண்டே “..

“தேவாவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை .அவனுக்கு புரிந்த அடுத்த நொடி அரசியை பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு அவரது தோளில் சாய்ந்துகொண்டு அழ செய்தான்”..

” அம்மா என்னை மன்னித்து விடுங்கள். இத்தனை வருடங்கள் நான் என்ன தவறு செய்தேன் என்பதையும் உணர்ந்து விட்டேன். நீங்கள் என்னை ஒதுக்கி வைக்கவில்லை நான் தான் உங்களிடம் இருந்து லேசாக ஒதுங்க ஆரம்பித்து இருக்கிறேன் “..

“என்னுடைய ஒதுக்கம் உங்களை என் மீது கோபமடைய செய்திருக்கிறது
அதே கோபம் நாளடைவில் வெறுப்பாகவும் மாறி இருக்கிறது. அனைத்திற்கும் நான் தான் காரணம் என்று சொல்லி அழுதான்”..

” மற்ற அனைவரும் என்ன என்று யோசித்தார்கள். ஏன் சகுந்தலா கூட வருவிடம் ஒன்று இரண்டு முறை கேட்டார்”..

” ஏன்,டி தாலி பிரித்து கோர்ப்பதை பற்றி நீயே பேசலாமே என்னை ஏன் பேச சொல்கிறாய் ?என்று கேட்டதற்கு உன் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நீ வந்து பேசு “..

“நீ எனக்காக அதை மட்டும் செய் மற்றதே அங்கு வந்து தெரிந்து கொள் சித்தி என்று சொல்லிவிட்டு வைத்தாள் “..

“இப்பொழுது இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் சகுந்தலாவும் அமைதியாக இருந்தார். ஆனால் மற்ற அனைவருமே ஏதோ ஒன்று இருக்கிறது என்று உணர்ந்து அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள் “..

“அப்பொழுது அரசி அமைதியாக தேவாவை பார்த்தார் தேவா அரசியை சோபாவில் உட்கார வைத்து அவரது மடியில் படுத்துக்கொண்டு அவரது முகத்தை பார்த்துக்கொண்டே பேச செய்தான்”..

” நீங்கள் ஏங்கியது இதற்கு ஆனால், நான் இதை செய்ய தவறி விட்டேன். நான் உங்கள் மகனாக உரிமை எடுக்க தவறி விட்டேன்”..

” நீங்கள் அப்பாவிடம் நெருக்கும் காட்ட வேண்டும் என்று எண்ணி நான் உங்களிடம் இருந்து ஒதுங்க செய்தேன் .ஆனால் ,என்னுடைய ஒதுக்கம் உங்களை எந்த அளவிற்கு வலிக்க செய்திருக்கிறது என்பதை இப்பொழுது இந்த நொடி உணர்கிறேன்”..

” இதை நான் இத்தனை வருடங்களாக உணரவில்லை. எனக்கு இவளைப் போல என்று வருவை காண்பித்து செயலாக உணர வைக்க யாரும் கிடைக்கவில்லை “..

“ஒத்துக்கொள்கிறேன். உங்களுக்கும் என்னால் அதிக வலி என்று விட்டு அவரது இடுப்பை கட்டிக்கொண்டு அழுதான் “..

“ஆது ஒன்றும் புரியாமல் தனது அண்ணன் அருகில் வந்து உட்கார்ந்தான். அண்ணா என்று  தேவா ஆதுவை கட்டிக்கொண்டு அழ செய்தான்”.

“ஆது தான் தனக்கு ஒன்றும் புரியாமல் வேகமாக கத்தவே செய்தான் இங்கு என்ன நடக்கிறது என்று வரு சிரித்துக் கொண்டே ஆதுவின்  தலையை கோதிக் கொண்டே அவனது அருகில் வந்து விவரத்தை சொல்ல ஆரம்பித்தாள் “.

“வரு என்ன சொல்ல வருகிறாள் அதை ஆதுவும் மற்றவர்களும் புரிந்து கொள்வார்களா ?”என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

தனிமையின் காதலி

3 thoughts on “புன்னகை 59”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *