Skip to content
Home » புன்னகை 60

புன்னகை 60

“ஆது வருவையே பார்த்துக் கொண்டிருந்தவுடன் வரும் ஆது நிதனமாக நான் சொல்வதை யோசி நீ சிறிய பையன் இல்லை என்றுடன் ஆதுவும் தலையாட்டினான் “..

பிறகு ,”அவனது அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் கண்ணை பார்ப்பது போல் உட்கார்ந்து கொண்டு  முதலில் உனது அண்ணன் உன் அம்மா (அத்தை) தேவாவை ஒதுக்கவில்லை சரியா ?”..

“அதை நீயும் சரி, மாமாவும் சரி உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை வருடங்களாக உன் அண்ணன் தான் (உன் அம்மாவிடம் )அத்தையிடமிருந்து ஒதுக்கும் காண்பிக்கிறார் “..

“அவரின் ஒதுக்கம் தான் அத்தைக்கு கோபத்தை வர வைத்தது .அதே கோபம் நாளடைவில் பெரியதாகியது என்றவுடன் தீரன் தான் அவன் என்னம்மா செய்தான் என்று கேட்டார் “..

“மாமா நான் பேசுவதை சிறிய பையன் அவனே பொறுமையாக நிதானமாக கேட்கிறான். உங்களுக்கு பொறுமையும் நிதானமும் ரொம்ப தேவை .”

“நிறைய இடங்களில் நீங்கள் அதை இழந்து நிற்பதால் தான் இப்பொழுது தேவாவும் சரி ,அத்தையும் சரி நிறைய இழந்து நிற்கிறார்கள்”

” அதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான். நான் உங்களை தவறு சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் என்றவுடன் தீரனுமே வருவின் இந்த பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் “..

“ஒத்துக் கொள்கிறேன். என் மேல் தவறு இருக்கிறது. ஆனால் ,தேவா என்றார். உங்கள் மகன் மீதும் தவறு இருக்கிறது மாமா என்றவுடன் அனைவரும் என்ன என்று பார்த்தார்கள் “..

“தேவா அமைதியாக அரசியை பார்த்துக் கொண்டிருந்தான் . அரசியும் கூட தேவாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் காது மட்டும் தான் வருவிடமிருந்தது பார்வை என்னவோ மற்றவர் மீது தான் இருந்தது”.

” தேவா அரசியின் மடியில் தான் படுத்து இருந்தான் வரு சொல்ல ஆரம்பித்தாள் .நான் இங்கு வந்து சில நாட்களிலேயே உணர்ந்தது ஒன்று தான்”..

” தேவா தான் அரசி அத்தையிடமிருந்து ஒதுங்கி இருக்கிறாரே தவிர அத்தை ஒதுக்கி வைக்கவில்லை. இப்பொழுது வரையும் கூட”..

“ஆது ஒருநாள் சொன்னான் ஞாபகம் இருக்கிறதா ? நீங்கள் அனைத்தையும் அனைவருக்கும் பங்கு பிரித்து தர வேண்டி இருக்கிறது. நீ இந்த வேலையை செய் இந்த வேலையை செய் என்று சொல்லாமல் இருந்து இருக்கிறீர்கள்”..

” அதை நீங்கள் செய்யவே இல்லை அண்ணா. அண்ணி செயலால் உணர்த்திருக்கிறார்கள் என்று சொன்னான் என்றுடன் தீரணுமே அமைதியாக இருந்தார்”..

“அங்கு தான்  அன்று தான் ஆதுவின் மூலமாகத்தான் ஒன்றை நான் முதலில் உணர்ந்தேன். அதன் பிறகு தான் நான் அத்தையை ஒவ்வொரு  சின்ன சின்ன விஷயங்கள் இருந்தும் நோட் பண்ண ஆரம்பித்தேன் “..

“அப்போது,தான் எனக்கும் ஒன்று புரிந்தது. அத்தை ஒதுங்கவில்லை .தேவா தான் அத்தையிடமிருந்து ஒதுங்கி இருக்கிறார் அதை அவர் உணரவே இத்தனை வருடங்களாகி விட்டது என்றவுடன் தேவா கண்மூடி திறந்தான் அவனது கண்ணீர் அரசியல் கையில் பட்டது” .

” அரசியின் கண்ணீரும் தேவாவின் மீது பட்டது. அரசியின் கை தேவாவின் கண்ணத்தையும் ,தேவாவின் கை அரசின் கண்ணத்தையும் துடைத்து விட்டது அதை மற்றவர்கள் பார்த்துவிட்டு வருவை பார்த்தார்கள்”..

” அனைவருமே அமைதியாக இருந்தார்கள். நீ சொல்லிய பிறகு தான் நான்  அத்தையை ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன விஷயத்திலும் பார்க்க ஆரம்பித்தேன் பிறகு தான் தெரிந்தது “..

“ஆது நீ வயிற்றில் இருக்கும் பொழுது மாமா பேசிய வார்த்தை உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என்றவுடன் அவன் கண் மூடி திறந்தான் .அவர் பேசிய பிறகு அவரே தேவாவை அத்தையிடமிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறார்”..

” முதல் இரண்டு நாட்கள் தேவா அடம் பிடித்திருக்கிறார் ,அழுத்திருக்கிறார். அதன் பிறகு அரசி அத்தைக்கு அவர் என்னென்ன செய்ய வேண்டுமோ ?அனைத்தையும் செய்து இருக்கிறார் அதை அத்தை அமைதியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் “…

“அவரிடம் அமைதியாக பேசியும் இருந்திருக்கிறார் .என்ன முன்பு போல் நெருக்கம் காட்டவில்லை .ஆனால் ,அவரை ஒதுக்கி வைக்கவில்லை ஒரு வாரங்களுக்கு பிறகு மாமாவிற்கு அனைத்து உண்மையும் தெரிந்து அவர் அத்தையிடம் பேசியும் இருக்கிறார்”..

அப்போது,” அத்தை மாமாவை தான் ஒதுக்கி வைத்தாரே தவிர தேவாவை இல்லை  ஆனால் ,சிறுவயதாகிய தேவா உணர்ந்தது தான் தன்னுடைய அம்மாவிடமிருந்து  விலகினால் தன் அம்மா தன் அப்பாவிடம் பேச செய்வார் அதன்பிறகு நாம் பேசலாம் என்று உணர்ந்து அவராக தனது அப்பாவிற்கு இடம் கொடுத்து அரசி அத்தை இடம் இருந்து ஒதுங்கி இருக்கிறார் “..

“அதுதான் தேவா செய்த பெரிய தவறையே .. அவரின் லேசான ஒதுக்கம் அத்தையின் மனதில் பெரிதாக வலியை கொடுத்து இருக்கிறது அது நாளடைவில் பெரியதாகவே ஆகியிருக்கிறது “..

“நீ பிறந்த பொழுது என்னதான் தேவா அத்தையுடன் இருந்து உன்னையும் அத்தையும் பார்த்துக் கொண்டாலும் அதன் பிறகு முழுவதாக மாமாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அத்தை மாமாவை பார்த்துக் கொண்டதால் தேவா முழுவதாக உன்னுடைய பொறுப்பை எடுத்துக் கொண்டார் “..

“அவர் உன்னுடைய பொறுப்பை எடுத்தது தவறில்லை. ஆனால் ,உன்ன பார்க்க செய்தவர் அத்தையை பார்க்க அங்கு மறந்துவிட்டார் .அதுதான் அவரது இரண்டாவது தவறு”..

” இது அத்தையின் மனதில் எப்படி பதியும் என்று யோசித்துக் கொள். தனக்கு என்று ஒரு தம்பி வந்து பிறகு தான் இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டோமோ ?என்று எண்ணம் “..

“இது மனிதனாக பிறவி எடுத்த அனைவருக்கும் வரக்கூடிய உணர்வு என்றவுடன் அரசி அமைதியாக இப்பொழுது வருவை பார்க்க ஆரம்பித்தார்”..

” தன்னை முழுவதாக வந்த மூன்று மாதங்களிலேயே இவள் உணர்ந்திருக்கிறாளே..! என்று தான் பார்க்க செய்தார் “..

“அவருக்கு கண்கள் கலங்கியது தன்னை இந்தளவுக்கு புரிந்து கொண்ட மருமகள் கிடைக்க தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கூட மனதில் எண்ணினார்”..

” தேவா வேகமாக எழுந்து சென்று வருவின் காலை கட்டிக்கொண்டு அவளது மடியில் படுத்தான் வரு அமைதியாக தேவாவை பார்த்து கொண்டே ஆது தீரனுக்கு அனைத்தையும் புரிய வைக்க செய்தாள்”..

” இதை இழுக்க அவளுக்கு விருப்பமில்லை. அதனால் ,தான் உடனடியாக இது செய்ய விரும்பினால் அதன் பிறகு தேவா உன்னை பார்த்து கொள்ள ஆரம்பித்தார் நீ வளர ஆரம்பித்தாய். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். நீ பள்ளி படிக்க ஆரம்பித்து இருந்தார் “..

“அப்போது மாமாவிற்கு சர்க்கரை இருப்பது தெரிய வந்தது. பிபி இருப்பது தெரிய வந்தது அது தவறு இல்லை. ஆனால் ,தெரிந்த அன்றே அத்தை இடம் வந்து தேவா சொல்லியிருக்க வேண்டும் “..

“அத்தை மாமாவுடைய மனைவி தானே ?தேவாவுடைய அம்மா தா ?தன் தாயிடம் தன் தந்தையின் உடல்நிலை பற்றி ஒரு மகனாக உன் அண்ணன் அங்கு சொல்லி இருக்க வேண்டும் அதையும் அவர் செய்யவில்லை”..

“அது அவருடைய மூன்றாவது தவறு அதன் பிறகு அத்தை கோவித்துக்கொண்டு சென்றார் என்னிடம் பேசாதே என்று சொன்னார் சரி அது கோபத்தில் அவர் பேசியது”..

” ஆனால் ,அவர் சொன்னார் என்பதற்காகவே தேவா அப்படியே விட்டுவிட்டார்.  தேவா இடத்தில் இருந்து அத்தையின் உடல்நிலை என்று எண்ணி அமைதியாக அப்படியே விட்டுவிட்டார் அவர் அப்படியே விட்டதன் விளைவு அத்தைக்கு அவர் மேல் இருந்து வலி கோபம் வெறுப்பாக மாறிவிட்டது “..

“அது இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆதுவும் முற்றிலுமாக அண்ணனுகாக மட்டுமே யோசித்து அத்தையை திட்டுவது, தீரன் மாமாவும் அவ்வப்போது அத்தையை திட்டிக் கொண்டே தேவாவிற்கு ஆதர்வாக இருப்பது ‘””..

“தேவா முழுவதாக ஆதுவையும் பார்ப்பது அத்தைக்கு வலியை கொடுத்து இருக்கிறது “..

“அதற்காக அத்தை உன் மீது, மாமா மீது கோபம் கொள்ளவில்லை. அது அவரின் கோபம் முழுக்க முழுக்க தேவாவின் மீது மட்டும் தான். நீங்கள் இருவரும் தேவாவிற்கு சப்போர்ட் செய்தீர்கள் சரி “..

“அதை ஒரு தாயாக அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் ,தேவா தன் தாயிடம் நான் என்ன செய்தேன் ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று வந்து உரிமையாக கேட்டிருக்கலாம் .அதை அவர் சிறு வயதிலிருந்து செய்ய தவறிவிட்டார். “..

“இத்தனை ஆண்டுகாலம் விவரம் தெரிந்த பிறகு கூட செய்ய தவறிவிட்டார். அதுதான் அவர் செய்த தவறு “.

“இப்பொழுது ,இந்த நொடி தாலி பிரித்து கோர்க்க வேண்டும் என்று வரும் பொழுது அத்தையிடம் செல்கிறார்.  திருமணத்தின்போது அத்தையாக தான் என்னை இந்த வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணினார் “..

“அதற்கு காரணம் என்ன என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் . தேவா மனதில் ஏதோ ஒரு இடத்தில் நான் இருக்க செய்தேன் என்று எண்ணி மட்டும் தான் அத்தை இந்த திருமணத்தை நடத்த முன் வந்தார் “..

“அப்போது ,கூட தேவா அத்தையை முன் நிறுத்தி நான் இந்த வீட்டுக்கு வரவேண்டும் என்று எண்ணினாரே தவிர அத்தையிடம் சென்று தேவ் என் திருமணத்தின் போது அனைத்தையும் நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை அவராக செய்வார் என்று இவர் எண்ணுகிறாரே தவிர “..

“நீங்கள் செய்யுங்கள் என்று உரிமையாக கேட்கவில்லை .அப்படி கேட்கும் உரிமை தேவாவிற்கு இல்லையா ?இல்லை ,தேவா கேட்காமலே அத்தை செய்ய வேண்டும் என்றால் அதை ஆரம்பத்தில் இருந்தே தேவா யோசித்து இருக்க வேண்டும் “..

“என் திருமணத்தின் போது கூட அத்தைக்கு துணை வேண்டும் என்று யோசித்து இருக்கிறார் .நான் எங்களின் தனிப்பட்ட விஷயத்தை இங்கு பேசவில்லை என்று விட்டு தன் குடும்ப உறுப்பினர்களையும் பார்க்க செய்தாள்”..

” எங்கு தன்னுடைய அம்மாவிற்காக என்று மட்டும் எண்ணி தேவா தன் கழுத்தில் தாலி கட்டினார் என்று தன் வீட்டில் உள்ளவர்கள் எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே அவர்களை பார்த்தாள் அவர்களும் புரிந்தது போல் கண் மூடி திறந்தார்கள்”..

“அது தான் தேவா செய்த பெரிய தவறு அவர் ஒதுக்கும் காண்பித்ததால் மட்டும்தான் அத்தைக்கு கோபம் வந்தது இதுவரை அத்தை இவரை ஒதுக்கி வைக்கவில்லை “..

“இவர்தான் அத்தை இடம் இருந்து ஒதுங்கி விட்டார்.இப்பொழுது வரை முற்றிலுமாக ஒதுங்கி நிற்கிறார் “..

“தன்னுடைய தம்பிக்காக தம்பிக்காக என்று ஆனால் தனக்குத் தாய் வேண்டும் என்று அவர் எண்ணவில்லை. அத்தை இந்த வீட்டிற்கு வந்ததிற்கு முழுமுதல் காரணம் தேவாவிற்காக மட்டும் தான் மாமாவின் மீது இருக்கும் காதல் அடுத்த பட்சமாக மட்டும்தான் இருந்தது “..

“மாமா மீது அவருக்கு விருப்பம் இருக்கிறது .இப்பொழுதும் அன்பு இருக்கிறது . ஆதுவின் மீதும் மகனாக அன்பு இருக்கிறது”..

“ஆனால் ,அத்தை தன்னுடைய மூத்த மகனாக எண்ணுவது தேவாவை தானே அப்படி இருக்கும் போது தேவா உண்மையாக எதையும் செய்யவில்லை “..

“சிறு விஷயங்களாக கூட அவர் ஒதுக்கம் காண்பித்ததால் அத்தைக்கு கோபம் . அந்த ஒதுக்கம் தேவா தனது தந்தைக்காகவும் ,தம்பிக்காகவும் விட்டுக்கொடுத்து ஒதுங்கி  நிற்க அத்தைக்கு வெறுப்பாகவே மாறிவிட்டது “..

“மற்றொன்று, நீங்கள் இருவருமே தேவாவின் ஒதுக்கத்தையும் உணராமல் அத்தை தான் ஒதுக்கி வைத்திருக்கிறார் என்று எண்ணி அத்தையின் மீது கோபத்தையும் வேறுப்பையும் கொட்டியது வார்த்தையையும் கொட்டியது அதை அத்தையை கல்லாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் “..

“இப்போது ,கூட தன் மகன் மனதில் நேசித்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணி மட்டுமே அத்தை இந்த திருமணத்தை நடத்த செய்தார்”..

“தன் மகன் வந்து தன்னிடம் இந்த திருமணத்தில் நீங்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே ?என்ற வலி அவருக்கு இருக்கிறது”..

” என் திருமணத்தின் போது சித்தி பேசும்போது கூட அவர் கண்கள் கலங்கிதான் இருந்தது. தேவா அப்பொழுது எதுவும் பேசாததற்கு காரணம் என்ன எண்ணியாக கூட இருக்கலாம் என் குடும்பத்திடம் அங்கு அந்த இடத்தில் சண்டை வர கூடாது அதனால் அத்தைக்கு வலி வரலாம் என்று கூட யோசித்து இருக்கலாம்”..

ஆனால் ,”ஒரு மகனாக தேவா அப்போது எதுவும் பேசாத தான் தவறு இப்போது தாலி பிரித்து கோர்க்க வேண்டும் என்ற பிறகுதான் தேவாவிற்கு தன் தாயை  நாட வேண்டும் என்ற எண்ணமே வந்து இருக்கிறது “..

“இப்போது அவர் தவறை அவர் உணர்ந்துவிட மாட்டாரா ?என்று எண்ணித்தான் நான் சித்தியை வீட்டில் வந்து பேச சொன்னேன் நான் நினைத்த அனைத்தும் நடந்து விட்டது என்று சிரிக்க செய்தாள்”..

“அனைவரும் இப்பொழுது ,அரசியை பார்த்தார்கள் அரசி வருவை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார் வரு சொல்லும் அனைத்தும் உண்மையா ?என்பதை அரசி தான் இனி சொல்ல வேண்டும் “..

அரசி என்ன சொல்வார் என்பதை நாம் வரும் பதிவுகள் பார்க்கலாம்..

அன்புடன்

தனிமையின் காதலி

3 thoughts on “புன்னகை 60”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *