“வரு ஆச்சரியமாக பார்த்தவுடன் என்ன டி என்று சிரிப்புடன் அரசி கேட்டார் “..
“ஆதுவை பார்த்தாள் . ஆது சிரித்துக் கொண்டே நீங்கள் இப்படி தண்ணீர் தெளிக்க வெளியில் சென்றவுடன் அம்மா எழுந்து வந்து விட்டார் அவர் தான் நான் போடுகிறேன் என்றார் “..
“நானும் அமைதியாக அவருடன் நின்றேன் என்று சிரித்தான் .இல்லை நான் வந்ததிலிருந்து நீங்கள் சமையலறையில் வந்து சமைப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்று அமைதியாகி விட்டாள்”..
” எனக்கு சமைக்கவே தெரியாது ?என்று சொல்வாய் போல என்று சிரிப்புடன் கேட்டார் .பிறகு தீரனும் ,தேவாவும் எழுந்து வந்தவுடன் இருவருக்கும் அவரே அவரது கையால் டீ கொடுத்தார் “..
“தேவா தனது தாயை சிறுபிள்ளை போல் பின்பக்கம் இருந்து கட்டிக் கொண்டான் .அவரும் அவனது தலையோடு லேசாக பின்பக்கம் இருந்து முட்டினார் “..
” தீரன் ஆது இருவருக்கும் இது புதிதாக இருந்தது.”
” ஆனால் ,சிறு வயதில் தேவா ஆது பிறக்கும் வரை இவ்வாறு தான் நடந்து கொள்வான் தினமும் அரசி டீ கொடுக்கும்போது டீ கப்பை வாங்கிக்கொண்டு அரசியின் பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு அவரது தோலில் சாய்வான்”
” அதையே அவன் இப்போது செய்ய அரசிக்கு ரொம்ப நாட்கள் ,ரொம்ப வருடங்களுக்கு பிறகு தனது மகன் தன் கை சேர்ந்த சந்தோசம்”..
பிறகு,” அனைவரும் டீ குடித்துவிட்டு இன்று கோவில் சென்று வரலாமா என்று தீரன் கேட்டார் அரசி சிரித்த முகமாக எல்லோருமே சென்று விட்டு வரலாம் என்று விட்டு வருவைப் பார்த்தார் “..
“நான் அப்பா அம்மாவிடம் சொல்கிறேன் என்று சிரித்தாள் .பிறகு அனைவரும் குளித்துவிட்டு கிளம்பி கோவில் சென்று விட்டு வெளியில் காலை உணவு முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள் “..
“மதிய உணவு கலை, அரசி, சகுந்தலா மூவரும் செய்தார்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள் .மாலை போல் சகுந்தலா தான் திரும்பவும் கேட்க செய்தார் “..
“அப்பொழுது வரு கேட்க சொன்னால் என்பதற்காக கேட்டேன் அண்ணி. இப்பொழுது ,உண்மையாகவே கேட்கிறேன் வருவிற்கு திருமணமாகி மூன்று மாதமாக போகிறது எப்பொழுது தாலி பிரித்து கோர்க்கலாம் என்று கேட்டார்”..
“அரசி சிரித்துக் கொண்டே நான் இரவே தேதி பார்த்து விட்டேன். இன்னும் மூன்று நாட்களில் நல்ல நாள் இருக்கிறது. அன்று கோர்த்து விடலாம் .எங்கள் பக்கம் இருந்து என்னென்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்து விடுகிறோம் “..
“உங்கள் பக்கம் இருந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுங்கள் என்றார் .அப்பொழுது சகுந்தலா தான் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வந்தீர்களா ?என்று கேட்டார் “..
“அரசி இதுவரை போகவில்லை போய் பொங்கல் வைத்து விட்டு வரணும் என்றார் .அப்போது நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே கோவில் சென்று அங்கே தாலி பிரித்து கோர்த்து விட்டு பொங்கல் வைத்து விட்டு வரலாமா? “என்றார் ..
“அரசி வருவைப் பார்த்தார் வரு சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். தேவாவை பார்த்தாள். அவனும் தனக்கு சம்மதம் என்று கண் மூடி திறந்தவுடன் சரி சகு வைத்துக் கொள்ளலாம் என்றார் “..
பிறகு,” வாசுவின் தாய் தந்தைக்கு ,சுவாதி வீட்டிற்கும் போன் செய்து சொன்னார். பிறகு தன்னுடைய அப்பா ,அம்மாவிற்கும் மீது இருக்கும் போன் செய்தார் அரசி வீட்டிற்கு வருமாறு சொல்லி இருந்தார் “..
” அவர்கள் வரும்பொழுது தேவா அரசியின் மடியில் படுத்திருப்பதை பார்த்துவிட்டு வேகமாக வந்து இருவருமே தேவாவின் தாடையை தான் பிடித்தார்கள் அரசி சிரிக்க செய்தார் “..
அப்பொழுது,” அரசியின் தாய் தான் சிரித்துக்கொண்டே அரசி தேவா என்று விட்டு நிறுத்தினார் .அவர் கண்மூடி திறந்தவுடன் அரசியின் பெற்றவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம் “.
“இரண்டு நாட்கள் இங்கே இருந்தார்கள். தேவா இங்கே இனிமேல் இருக்குமாறு சொன்னான் .இங்கே இனிமேல் எல்லாம் இருக்க மாட்டோம் டா. இப்பொழுது உனக்கு தாலி பிரித்து கோர்க்கும் விழா இருக்கும் வரை இங்கு இருக்கிறோம் என்றார்கள்”..
பிறகு ,”இரண்டு நாட்கள் அங்கே இருந்தார்கள். அப்படியே இரண்டு நாட்கள் சென்றிருந்தது. அந்த இரண்டு நாட்களும் அரசி நேரடியாக நடேசுனுக்கு போன் செய்து எனது மகன் மருமகளுக்கு ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என்று கேட்டிருந்தார் “..
“நடேசன் சிரித்துக் கொண்டே நம் மகன் மருமகளுக்கு என்று சொல்லு அரசி என்றார் .சரி மாமா என்றார்.ஒரு மாதம் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ள சொல் என்றார்”..
“இருவரும் திருமணம் முடிந்து எங்கும் செல்லவில்லை .இப்பொழுது எங்காவது சென்று விட்டு வரட்டும் என்றார் .இல்லை மாமா இன்னும் ஒரு வாரத்தில் ஆதுவிற்கு இறுதி பரிச்சை வரப்போகிறது அல்லவா ?”..
“அவனுக்கு பரீட்சை முடிந்த பிறகு வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு இன்னும் இரண்டு நாட்களில் குலதெய்வ சென்று பொங்கல் வைத்து வரலாம் குடும்பத்துடன் வாருங்கள் என்றார் “..
“நம் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டியதிற்கு நீ என்னிடம் சொல்ல வேண்டுமா ?நீ எப்போது கிளம்ப வேண்டும் என்று சொல் நாங்கள் வந்து விடுகிறோம் என்றார். “..
சரி மாமா என்று விட்டு வைத்து விட்டார்.பிறகு “நடேசன் குடும்பத்தையும் ,வாசுவின் குடும்பத்தையும் ,சுவாதி குடும்பத்தையும் கலையின் ஒரு சில நெருங்கிய உறவினர்களையும் ,தேவா வீட்டிற்கு அக்கம்பக்கம் இருக்கும் ஒரு சில உறவினர்களையும் அரசியின் பெற்றவர்களையும் அழைத்துக் கொண்டு சிறியதாக ஒரு டிராவல்ஸ் பேசிக்கொண்டு அனைவரும் தேவாவின் குலதெய்வ கோவிலுக்கு சென்று இறங்கினார்கள் “.
“பிறகு முதலில் அபிஷேகத்திற்கு பொருட்கள் கொடுத்து விட்டு வந்து ,பொங்கல் வரு கையால் வைக்கப்பட்டது. பொங்கல் வைத்துவிட்டு அபிஷேகத்தையும் பார்த்துவிட்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு காலை 10:30 போல் தாலி பிரித்து நல்ல நேரத்தில் பெரியவர்கள் கோர்க்க செய்தார்கள் “..
“அரசி முதலில் ஐந்து பவுனில் ஒரு தாலி சரடு எடுத்தார் . வரு தான் அத்தை இவ்வளவு பெரிதாக எனக்கு வேண்டாமே .மூன்று பவுனில் போதும் “..
“அப்படி உங்களுக்கு எனக்கு 5 பவுனு நகை எடுக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் இரண்டு பொருள் எடுத்து தாருங்கள்.வேறு ஏதாவது எடுத்துக் கொள்ளலாம் என்று சிரித்தாள் “.
“அப்போது அரசி தான் சிரித்துக் கொண்டே மூன்று பவுனில் வேண்டும் என்று கேட்டாய் சரி ,அது என்ன வேற ஏதாவது இரண்டு பவுனில் ஏன் எனக்கு இவன் மட்டும் தான் மகனா ?”..
“இளைய மகனுக்கு வரப்போற மருமகளுக்கு சேர்த்து வைக்க மாட்டேனா ? என்றார்.தன் அருகில் யாரும் இல்லை என்றவுடன் மாமியாரே அனைத்தையும் நீங்கள் உங்கள் இளைய மருமகளுக்கே தாருங்கள் “..
“யார் ?வேண்டாம் என்று சொன்னார்கள் என்றால் சிரிப்புடன் அவள் சுற்றி பார்த்து விட்டு தன்னை ரொம்ப நாட்களுக்கு பிறகு மாமியாரே என்று அழைத்ததை பார்த்து சிரித்து விட்டு ஏன் டி மூன்று பவுனில் போதுமா ? “என்றார்..
“உண்மையாகவே போதும் நான் தினமும் அலுவலகத்திற்கு தானே சென்று வர போகிறேன். இப்பொழுது எங்கு போக போறேன் .அது இல்லாமல் அவ்வளவு கனமாக எனக்கு வேண்டாமே என்றாள் “..
“அவரும் சரி என்று விட்டு மூன்று பவுனில் எடுத்தார் பிறகு ஒரு சிறிய செயின் பார்த்தார் .அத்தை நான் சும்மா சொன்னேன் என்றாள். உனக்கு இல்ல டி அவனுக்கு என்றார் “.
“சரி என்று விட்டு அமைதியாக இருந்தாள்.பிறகு தேவாவிற்கும் சிறிதாக ஒரு பவுனில் செயின் எடுத்தார்கள் .அதை இப்போது தேவாவை காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போது அரசி தேவாவின் கையில் கை செயின் கொடுத்து போட்டுக்கொள்ள சொன்னார்”..
” தேவாவும் சிரித்து முகமாக அரசி கொடுத்ததை வாங்கி போட்டுக் கொண்டான். இப்பொழுது மூன்று நாட்களாக அவர்கள் வீட்டில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமையல் செய்கிறார்கள் “..
“கிச்சனில் அரசியும் வருவும் சேர்ந்து நிற்பார்கள். காய்கறிகளை மற்ற மூவரும் சேர்ந்து அறிந்து கொடுப்பார்கள். இப்படியே சமைத்து சாப்பிட்டார்கள் “.
பிறகு,” நல்ல நேரத்தில் தாலி பிரித்து கோர்க்க வேண்டும் என்பதற்காக பெரியவர்கள் கோர்த்து தாலியை தேவாவின் கையில் கொடுத்தார்கள்”.
” தேவா அரசியை பார்த்தான் அவர் அவனை பார்த்து சிரித்தவுடன் சாமியை வேண்டிக் கொண்டு தன்னை பெற்றெடுத்த பார்வதி அம்மாவையும் மனதில் வேண்டிக்கொண்டு வருவின் கழுத்தில் தங்கத்தினால் ஆன தாலி சரடை மாற்றி விட்டான் “.
பிறகு “அவளது நெற்றியில் குங்குமம் வைத்து விட்டான் .அப்பொழுது ஆது தான் வாய் வைத்து கொண்டு சும்மா இருக்க முடியாமல் அண்ணா திருமணத்தில் நடந்தது போல் இங்கு நடக்காதா ?”..என்றான்.
” வரு சிரித்தாள் .தேவா தனது தாய், தந்தையை பார்த்து விட்டு ஆதுவை முறைத்துவிட்டு வயசுக்கு தகுந்த பேச்சா பேசுகிறாய் என்றான் “.
அப்போது ,”ஆது தான் உங்க புருஷன் அப்போ அத்தனை பேர் இருக்காங்கன்னு யோசிக்காம செஞ்சாரு அது தப்பு இல்ல .நான் பேசுறது தான் தப்பா என்றான்”..
” அப்படி கேள் டா செல்லம் என்று ஆது உடன் ஹை ஃபை அடித்தாள். தேவா அவளது இடுப்பில் கிள்ளி விட்டான். வரு லேசாக சிணுங்கி விட்டு தேவாவை முறைத்தாள் பிறகு அனைவரும் சிரித்தார்கள்”..
” சாமியை தரிசனம் செய்துவிட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் .அப்பொழுது அரசி தான் கலை, சகுந்தலா இருவரிடமும் வந்து நின்றார் “.
“சகு தான் என்ன அண்ணி ஏன் கூப்பிட்டு அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் .இல்லை ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்கு தான் என்றார் சொல்லுங்க அண்ணி என்று சகுந்தலா கேட்டார்”..
” கலையும் சொல் அரசி என்றவுடன் இல்லை என்று விட்டு இன்னும் இருவரும் கணவன் மனைவியாக வாழவில்லை. அதான் இன்று நல்ல நாளும் இருக்கிறது நேரம் குறித்து இருக்கிறேன் இரவு சடங்கு வைத்துக் கொள்ளலாமா ? “என்றார்..
“சகுந்தலா சிரித்து முகமாக எங்கள் வீட்டு பெண்ணை பற்றி எங்களுக்கு தெரியாத? எங்களுக்கு ஒன்றும் உங்கள் மீது கோபம் இல்லை என்று சிரித்து விட்டு இன்றே நாம் வைத்துக் கொள்ளலாம் “..
“அனைத்தையும் நீங்கள் முன் நின்று செய்தாலே எங்களுக்கு சந்தோசம் என்றவுடன் அரசி சிரித்து முகமாக என் மகன் ,மருமகளுக்கு நான் செய்யாமலா ?என்று சிரித்தார் “..
“இதை கோவிலை சுற்றி பார்க்கலாம் என்று வந்த தேவாவும் ,வருவும் கேட்க செய்தார்கள். ஆனால் ,தாங்கள் கேட்டது போல் காண்பித்துக் கொள்ளாமல் நகர்ந்து விட்டார்கள் “..
பிறகு “அனைவரும் சாமியை தரிசனம் செய்து விட்டு மாலை 3 மணி போல் அவர்கள் இருப்பிடத்தை நோக்கி சென்றார்கள்”..
” அக்கம் பக்கம் ,வாசுவின் வீட்டிலிருந்து ,சுவாதியின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அவர்கள் இருப்பிடத்தை நோக்கி சென்றிருந்தார்கள் “..
“மாலை 6:00 மணி போல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காபி குடித்தார்கள் பிறகு இரவு உணவும் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள் “..
“7:00 மணி போல் அனைத்து உணவும் சமைத்த பிறகு அரசி வருவை அவருடைய அறைக்கு அழைத்தார் வருவும் என்ன அத்தை என்று கேட்டு கொண்டே வந்தாள்”..
” அப்போது ,தனது தாய் ,சித்தி இருவரும் இருப்பதை பார்த்து விட்டு என்ன மூன்று தாய் குலங்களும் ஒன்றாக நிற்கிறீர்கள். இப்பொழுது என்ன கூட்டு சதி என்றாள்”..
“உன்னை விடவா என்றார் அரசி. அரசியை முறைத்துவிட்டு என்ன மாமியாரே என்று கேட்டாள்.பிறகு தனது தாய், சித்தி இருவரும் இருப்பதை உணர்ந்து விட்டு நாக்கை கடித்தாள் “..
“சகுந்தலா தனது அக்கா மகளின் காதை திருகினார் .பிறகு அரசி வரு காதில் இருக்கும் சகு கையை எடுத்துவிட்டு வருவைப் பார்த்தார் “.
“என்ன அத்தை என்று கேட்டவுடன் வருவின் கையில் புடவையை கொடுத்து குளித்துவிட்டு இதைக் கட்டிக் கொள் என்றார் “..
“வரு அமைதியாக அரசியை பார்த்தாள். அரசி இன்று தேவா வரு இருவருக்கும் இரவு சடங்கு ஏற்பாடு செய்வாரா? “..
“அதற்கு தேவா ,வரு இருவரும் ஒத்துக்கொள்வார்களா ?”என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் .
அன்புடன்
தனிமையின் காதலி
Nice
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Interesting