“அரசி வருவின் கையில் ஒரு புடவையை கொடுத்துவிட்டு இந்த புடவை கட்டிக் கொண்டு வா என்றார் . வரு சிறு புன்னகையோடு அரசியை பார்த்தாள்”..
” அரசி கண் மூடி திறந்தவுடன் எதுவும் பேசாமல் தன்னுடைய அறையை நோக்கிச் சென்றாள்ச.குந்தலா தான் என்ன டி எங்களிடம் தான் ஆயிரம் கேள்வியா? உன்னுடைய மாமியாரிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக செல்கிறாய் என்றார் “..
“நீயும் உன் அக்காவும் தான் என்னிடம் 1008 கேள்வி கேட்ப்பீர்கள் என்னுடைய அத்தை அப்படி எல்லாம் கேட்க மாட்டார்கள் என்று சொல்லி சிரித்து விட்டு அவளுடைய அறையை நோக்கிச் சென்றாள்”..
” அப்பொழுது, தேவா போனில் வேலை விஷயமாக ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான் . வருவை பார்த்துவிட்டு எழுந்தான். என்னடி புது புடவை கையில் என்றான் ” .
“அத்தை தான் கட்டிக் கொண்டு வர சொன்னார்கள் . இந்த நேரத்திலா எங்கு செல்கிறோம் என்று கேட்டான். ஏன் இந்த புடவை எதற்காக கொடுத்தார்கள் என்று சாருக்கு தெரியாதோ? என்று கேட்டாள் “..
” அவன் வருவை அமைதியாக பார்த்தான். அப்பொழுது ,அரசி தேவாவை அழைத்தார் தேவா வெளியே சென்று என்னம்மா என்று கேட்டவுடன் அவன் கையில் ஒரு வேஷ்டி சட்டையை கொடுத்து நீ அந்த அறையில் சென்று குளித்துவிட்டு வா “..
” அம்மா என்றான். போடா என்றவுடன் வேறு எதுவும் பேசாமல் அந்த அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தான் .வருவும் அவளுடைய அறையில் குளித்துவிட்டு நேர்த்தியாக புடவை அணிந்து கொண்டு தலை சீவிக் கொண்டு வந்தாள்”..
” பிறகு ,அனைவரும் இரவு எட்டு மணிக்குள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் . ஆது தான் வாய் வைத்துக்கொண்டு அமைதியாக இல்லாமல் அண்ணி உங்களுக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்டா என்று கேட்டான்”
..
” வரு அவன் கேட்ட விதத்தில் முதலில் சிரித்து விட்டாள். பிறகு அனைவரும் காது கேட்டுச்சு என்றார்கள். “
“..ஏற்கனவே உன்னை அனைவரும் சின்ன பையன் சின்ன பையன் சொல்லி இருக்கிறார்கள் தேவையா இது எனக்கு. நான் உங்ககிட்ட மெதுவா தான் அண்ணி கேட்டேன் என்று அவன் அமைதியாக வருகைப் பார்த்தவுடன் வரு அப்படி தான் சொல்லிக்கிறாங்க என்று கண் சிமிட்டினாள்”..
“ஆது வருகை பார்த்து சிரித்தான். தேவா தான் அங்க என்னடா குசு குசு என்று கேட்டான். ஒன்றுமில்லையே என்று இருவரும் ஒரே போல் சொன்னவுடன் மற்ற அனைவருமே அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்”..
“இருவரும் திருட்டு முழி முழித்துவிட்டு சாப்பிட செய்தார்கள். கேடிங்க எதையோ மறைக்குது கூட்டு களவானிங்க என்று தேவா முறைத்தான் “..
“ஒன்பது மணி போல் தேவா, வரு இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி விட்டு சாமி கும்பிட வைத்தார்கள் “..
பிறகு” வரு பார்வதியின் புகைப்படம் முன்பும் நின்று விளக்கேற்றிவிட்டு மனதிற்குள் பார்வதியின் முன்பு நின்று இந்த குடும்பத்தை நீங்கள் அரசி அத்தையை நம்பி மட்டும்தான் விட்டுச் சென்றீர்கள் என்று அரசி அத்தைக்கும் தெரியும் எனக்கும் புரிகிறது “..
“இந்த ஒரே காரணத்திற்காக தான் மாமா எவ்வளவு பேசி இருந்தாலும் அரசி அத்தை இந்த இடத்தில் இருந்து நகரவும் இல்லை யாரையும் விட்டுக் கொடுக்கவும் இல்லை “..
“அவர் மீது தவறில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன் என்று விட்டு அமைதியாக மனதுக்குள் வேண்டி விட்டு பிறகு ஆதுவை போய் தூங்கு என்று சொன்னார்கள்”..
” ஆது தனது தாயை மட்டும் பார்த்து விட்டு வேறு எதுவும் பேசாமல் தாய் தந்தை இருக்கும் அறைக்கு சென்று விட்டான்”..
” அரசி தான் தேவா , வரு இருவரையும் பார்த்துவிட்டு நீங்கள் இருவரும் இதுவரை கணவன் மனைவியாக வாழவில்லை என்று எனக்கு தெரியும். இனிமேல் வாழ்வதும் ,எப்பொழுது உங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று எண்ணுவதும் உங்களுடைய விருப்பம்.”..
” அதில் நான் தலையிட மாட்டேன். ஒரு தாயாக ,ஒரு மாமியாராக இந்த சடங்கை இன்று நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் .உங்களது விருப்பம் என்றார்.இருவரும் எதுவும் பேசவில்லை.”..
” தீரன் ,அரசி காலிலும் அரசியின் அப்பா ,அம்மா காலிலும்,கலை மாணிக்கம் காலிலும் சகுந்தலா அவருடைய கணவனும் வந்திருந்தார் அவருடைய காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் “..
“அப்பொழுது ,அரசி ஒரு பால் கிளாஸை எடுத்துக் கொண்டு வந்து வருவின் கையில் கொடுத்தார். வரு சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டாள். எதுக்குடி சிரிக்கிற என்று சகு கேட்டார்”..
” இல்ல சித்தி டிவியில் காமிக்கற மாதிரி பால் சொம்பு எடுத்து வந்து குடுக்குறீங்களே என்று கேட்டாள். சகு தனது அக்கா மகளை முறைத்துவிட்டு அது என்னவோ வாஸ்தவம் தாண்டி அதுவும் உன் கையில குடுத்து இருக்காங்க பாரு அண்ணி”..
” அண்ணி இவ எல்லாம் அடாவடி லா என்று சிரித்தார். அவள் தனது சித்தியை பார்த்து முறைத்துவிட்டு முனங்கிக் கொண்டே வாயை கோணித்து காண்பித்து விட்டு ஒரு நிமிடம் நின்று அரசியையும் பார்த்துவிட்டு ஃபோட்டோவில் இருக்கும் பார்வதியின் முகத்தையும் பார்த்துவிட்டு அவர்களது அறைக்குள் புகுந்தாள் “..
“ஒரு சில நொடி தேவா தான் நின்று முழித்துக் கொண்டு நின்றான். இவள் என்ன இவள் மாட்டும் சென்று விட்டாள் என்று யோசித்தான் .கலை தான் சிரித்த முகத்துடன் நீ போ தேவா”..
” அந்த வாலு அப்படித்தான் என்றார் .தேவா தன்னை விட்டால் போதும் என்று எண்ணி வேகமாக அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டான்”..
” வரு அந்த பால் கிளாஸை அங்கு இருக்கும் ஒரு இடத்தில் வைத்து மூடிவிட்டு பால்கனியில் போய் நின்றாள்.தேவா ஒரு சில நிமிடம் நின்று அவளை பின்பக்கம் இருந்து ரசித்துவிட்டு அவளது அருகில் போய் நின்றான்”..
பிறகு ,”ஒரு சில நிமிடம் இருவரிடமும் மௌனம் தான் தேவா தான் வரு உள்ளே போலாமா ?என்றான். அவளும் சரி என்று விட்டு உள்ளே வந்தவுடன் இருவரும் பால்கனியை கதவை சாற்றி விட்டு வந்து அவர்களது கட்டில் உட்கார்ந்தார்கள்”..
” அவள் பால் குடிக்கிறாயா ?என்று கேட்டாள்.என்ன டி விளையாட்டா என்றான். இல்லையே என்றாள் .பின்ன என்ன பால் கொடுத்து அனுப்பி விட்டார்கள் குடிக்கிறாயா என்று கேட்டேன் “..
“நான் அதை பற்றி கேட்கல. வேற எதைப்பற்றி. அவளது கண்களை ஒரு சில நிமிடம் பார்த்தவன் நம் வாழ்க்கையை பற்றி ஒன்றும் பேசவில்லை அமைதியாக அவனைப் பார்க்கச் செய்தாள் “..
“வரு பார்த்துக் கொண்டு இருக்கும்போதே அவளது உச்சியில் ஆரம்பித்து அவளது கண்ணில் வந்து நிறுத்திவிட்டு ஒரு சில நிமிடம் அவளைப் பார்த்தான் “..
“உச்சியில் இதழ் பதிக்கும் போது வரு கண்ணை மூடி இருந்தாள் .தன் கண்ணில் ஏதோ பட்டும் அதன் பிறகு ஒரு சில நொடி அமைதியாக இருந்த உடன் கண்ணைத் திறந்து தேவாவை பார்த்தாள் “..
“தேவா சிரித்து முகத்துடன் கை கட்டிக்கொண்டு அவளை பார்த்தான் .என்ன மேடம் ரெடியா ?தான் இருக்கீங்க போல என்றவுடன் அவனது தோளில் அடித்துக் கொண்டே அவனை பார்த்தாள்”..
“தேவா அவளுடைய தாடையை பற்றி நான் உன்னை ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன் டி .எப்பொழுது இருந்து எல்லாம் எனக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால், இந்த குட்டி ராட்சசி எப்போது இருந்து என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தாளோ அப்போது இருந்தே என் மனதுக்குள் ஏதோ செய்து விட்டாய்”..
“நான் உன்னை விரும்பாமல் இல்லை .ஆனால் ,இங்கு கொண்டு வந்து விட்டு உன்னை பேச்சு வாங்க விட வேண்டாம் என்று மட்டும் தான் நினைத்தேன் . வரு அமைதியாகவே அவனைப் பார்த்தாள்”..
” அவள் எதுவும் பேசாமல் இருந்தவுடன் அவளது உதட்டோடு உதடு வைத்து தன் மூச்சுக்காற்றையும் அவளுக்கு கொடுக்க செய்தான். முதலில் சிணுங்கியவள் பிறகு அவனுக்கு ஒத்துழைக்க செய்தாள் “..
“ஒரு சில நொடிக்கு பிறகு விலகி விட்டு அவளது காலை தன் மடியில் வைத்து அவளது பாதத்தில் முத்தமிட்டு விட்டு எனக்கு உன்னிடம் பிடித்தது இந்த பாதம் தாண்டி என்று விட்டு அவளது கொலுசுகளை பிடித்து இழுத்து விளையாடினான்”..
” அமைதியாக அவனை பார்த்தாள் ஆனால் நெளிந்து கொண்டு இருந்தாள் .அவனது செய்கையின் விளைவால் தேவா சிரித்துவிட்டு அவளது காதில் இருக்கும் சிறிய ஜிமிக்கி போட்டு இருந்தால் இன்று குலதெய்வ கோயிலுக்கு செல்வதால் அந்த ஜிமிக்கியை ஒரு ஆட்டு ஆட்டி விட்டான் “..
“அவளுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது. தேவாவின் ஒவ்வொரு செய்கையையும் ரசித்துக்கொண்டு சிணுங்கி கொண்டே இருந்தாள் .அவளது தாடையில் லேசாக கடித்து விட்டு அவளது கண்ணை பார்த்து நான் உன்னை உண்மையாக தாண்டி விரும்புகிறேன் என்று விட்டு அவனது சட்டை பட்டனை கழட்டினான்”..
” வரு வேகமாக தனது கண்ணை மூடினாள். தேவ் என்ன செய்கிறீர்கள் என்றாள் .ஏன் ,தினமும் சட்டையை அவிழ்த்து விட்டு தானே தூங்குகிறேன் என்றான் இல்லை நீங்கள் தினமும் பனியன் போட்டு இருப்பீர்களே என்று கேட்டாள்”.
” ஆனால், இப்பொழுது அனைத்தையும் கழட்டுகிறீர்களே என்று கேட்டாள். மேடம் வெளியே என்ன நினைத்துக் கொண்டு உள்ளே வந்தீர்கள் என்றான் .வேகமாக கண்ணைத் திறந்து அவனது முகத்தைப் பார்த்தவள் கீழே அவனது நெஞ்சை பார்த்தாள் “..
“அங்கு வருவின் புகைப்படம் பார்த்துவிட்டு வேகமாக தேவாவின் நெஞ்சில் சாய்ந்து விட்டு அவனது தாடையில் ஒன்றுக்கு இரண்டு முறை அடித்தாள்”..
” என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் இது எப்போது போட்ட டாட்டூ என்று லேசாக கத்தினாள். இப்போ போட்ட டாட்டூ இல்லை .இந்த டாட்டூ போட்டு இரண்டு வருடம் ஆகிறது என்றான்”..
“டாட்டூ போட்டு இரண்டு வருடம் ஆகிறது என்றால் என்னவென்று ஒரு சில நொடி அதிர்ச்சியாக பார்த்தாள் நீ தான் எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று யோசித்தேன்”.
ஆனால், “உன்னை இந்த வீட்டிற்கு அழைத்து வருவதற்கு தான் நான் எந்த ஸ்டெப்பும் செய்யவில்லையே தவிர எனக்கு மனைவியாக நீ மட்டும் தான் வேண்டும் என்ற ஆசை “..
“ஆது இந்த அறையில் தூங்கினால் கூட நான் நீ சொன்னது போல் டி ஷர்ட் உடன் தான் இருப்பேன். நான் சட்டை இல்லாமல் இருக்க மாட்டேன். இப்போது என்று விட்டு ஒரு சில நொடி அமைதியாக இருந்தாள் “..
“அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் .அதான் இங்கு ஏற்கனவே நான் இருக்கிறேனே என்னை எதற்கு இப்படி இழுத்தீர்கள் என்றாள் “..
” இது நிழல் டி எனக்கு நிஜம் வேண்டும். எனக்கு என்னுடைய வனி வேண்டும் என்று அவளுடைய உச்சியில் இதழ் பதித்தான். வருவுமே தன்னுடைய புகைப்படம் டாட்டுவாக குத்தி இருக்கும் இடத்தில் முத்தமிட்டாள் “..
“இப்பொழுது, தேவாவின் உடல்கள் சிலிர்த்து அடங்கியது .பிறகு தேவாவை பார்த்து சிரித்து விட்டு சார் சிறிது நேரத்திற்கு முன்பு கேட்டீர்களே இப்பொழுது உங்களுக்கு விருப்பமா ?என்று அவன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு கேட்டாள் “..
“தேவாவிற்கு ஒரு சில நிமிடம் கண்கள் கலங்கியது. என்ன டி எல்லாரும் சொல்றது போல நீதான் இங்க எல்லா வேலையும் செய்வ போல என்றான்.என்ன பேச்சு பேசுறீங்க .ஓ மேடம் செய்யறது தப்பு இல்ல நான் பேசறது தப்பா என்றான் “..
“வேண்டுமா? வேண்டாமா? என்று விட்டு அவனது அருகில் படுத்தாள் .தேவா அவளை தன் மேல் போட்டுக்கொண்டு அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அவளது கண்ணில் இதழ் பதித்தான் “..
“வரு கண்களை மூடினாள் அதன் பிறகு அங்கு நடந்தேறிய எதற்கும் நாம் பொறுப்பல்ல. அங்கு இனிய தாம்பத்தியம் ,இல்லறம் நடந்தேறியது. “..
“மறுநாள் காலையில் ஆது பள்ளி கிளம்பாமல் எட்டு மணி ஆகியும் ஹாலில் குறுக்க நெருக்க நடந்து கொண்டிருந்தான் “..
“அரசி, கலை ,சகுந்தலா அனைவருமே என்ன என்று கேட்டு விட்டார்கள். ஆனால் , ஆது வாய் திறக்கவில்லை .அவன் அப்படி இருப்பதை பார்த்துவிட்டு அனைவரும் அமைதியாக இருந்தார்கள் “..
“அரசிக்கு தான் சிறிது சங்கடமாக இருந்தது அப்போது கூட அவன் வாய் திறக்கவில்லை. எட்டு மணி போல் தேவா தான் எழுந்து குளித்துவிட்டு தான் எப்பொழுதும் வீட்டில் அணியும் உடையை அணிந்து கொண்டு வெளியில் வந்தான்”…
“அவனுக்குமே சிறிது சங்கோஜமாக இருந்தது வெளியில் வருவதற்கு இருந்தாலும் எப்பொழுதாக இருந்தாலும் வெளியில் சென்று தானே ஆக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவனது அறையில் இருந்து வந்தான் “.
“தன் தம்பி பள்ளி கிளம்பாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவனது அருகில் வந்தான் . ஆது தேவாவின் அறையையே பார்த்துக் கொண்டிருந்தான்.”..
“ஆது ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான்” என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..
அன்புடன்
தனிமையின் காதலி
Nice
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Nice epi