Skip to content
Home » புன்னகை 64 (இறுதி அத்தியாயம்)

புன்னகை 64 (இறுதி அத்தியாயம்)

“தேவா தன் அறையில் இருந்து வெளியில் வரும் போது ஆது பள்ளி போகாமல் இருந்தவுடன் டேய் பள்ளிக்கு கிளம்பவில்லையா? என்று கேட்டான் “..

“போகணும் அண்ணா என்று விட்டு அண்ணி எங்கே எழுந்து விட்டார்களா இல்லையா ?என்றவுடன் அவன் இப்பொழுது என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தான் “..

“அப்பொழுது, வரு எழுந்து வந்து டேய் ஒரு 10 மினிட்ஸ் இரு ஆது வந்துருவேன் என்று விட்டு குளியல் அறைக்குள் வேகமாக புகுந்தாள் அடுத்த கால் மணி நேரத்தில் குளித்துவிட்டு தன் வீட்டில் எப்பொழுதும் போடும் தனக்கு  பிடித்தமான ஸ்கர்ட் டாப் போட்டுக் கொண்டு வெளியில் வந்தாள் “..

” என்னடா என்று அவனது தலையை கோதிக் கொண்டே கேட்டாள். ஒன்றுமில்லை அண்ணி என்று சிரித்தான். லூசு ஸ்கூலுக்கு கிளம்பு நேரம் ஆகிறது என்றாள் “..

“சரி என்று விட்டு அறைக்குச் சென்று யூனிபார்ம் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தான் வருவும்  அவனுக்கு ஊட்டி விட்டாள் .சாப்பிட்டு விட்டு தனது அண்ணனிடமும் சொல்லிக்கொண்டு அண்ணா நான் இன்று 9:00 மணி பஸ்சுக்கு செல்கிறேன் பாய் என்று விட்டு தனது அண்ணனின் தாடையில் லேசாக முத்தம் வைத்து விட்டு ஓடினான்”..

” அரசி தனது இளைய மகனின் முகத்தை வெறித்துக் கொண்டு பார்த்தார் .வரு தான் அரசியின் அருகில் வந்து அத்தை ஒன்றும் இல்லை என்றாள் உண்மையாவே அவன் எந்த அளவிற்கு அண்ணன் மீது பாசத்தில்  இருந்தானோ இப்ப மாறிட்டான் டி என்றார் “..

“தேவா சிரித்துக் கொண்டான். தீரன் இருந்தா  போறான் என்று உனக்கென்ன என்று விட்டு உட்கார்ந்தார்.  பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் “..

“வரு தான் இன்னும் யாரும் சாப்பிட வில்லையா ?என்று கேட்டாள் யாரும் இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினார்கள். அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு  வருவின் பெற்றவர்கள் அவர்கள் வீடை நோக்கி சென்று விட்டார்கள் .
“..

“இப்படியே நாட்கள் சென்றது. வாசு அடிக்கடி சுவாதி வீட்டிற்கு சென்று வருவான் . தனது பெற்றவர்களையும் அழைத்துச் செல்வான். நடேசன் ,கல்யாணி,இனியா  மூவரும் அவ்வபோது தேவா வீட்டிற்கு  வந்து விட்டு செல்வார்கள்”..

” வருவும், தேவாவும் ஆதுவை அழைத்துக்கொண்டு  சென்று பார்த்துவிட்டு வருவார்கள். இப்படியே ஒரு வாரம் சென்று இருந்தது “..

“ஆதுவிற்கு இறுதி தேர்வும் நடைபெற ஆரம்பித்தது. வரு வீட்டில் உள்ள அனைவரிடமே ஒரே வார்த்தையாக சொல்லிவிட்டாள்.அவனுக்கு பரீட்சை முடியும் வரை நான் 12 மணி வரை வரவேற்பறையில் தான் இருப்பேன்”..

” என்னை அறைக்குள் செல் என்று எல்லாம் யாரும் சொல்லக்கூடாது என்று தனது அத்தை, மாமாவிற்கும் சரி தனது கணவனுக்கும் ,ஆதுவிற்கும் சேர்த்து சொல்லி இருந்தாள் “..

“அனைவரும் சிரித்துக் கொண்டார்கள் வேறு எதுவும் பேசவில்லை. அரசி டீ போட்டு தருவார் .வரு தான் அவர் டீ போட்டு தருவார் அத்தை அப்படி அவசியம் என்றால்.”..

” நீங்கள் போய் தூங்குங்கள். உங்கள் உடம்பை கொடுத்துக் கொள்ளாதீர்கள் என்றவுடன் அரசியும் சரி என்று அமைதியாகி விட்டார் பரீட்சை முடியும் இந்த 20 நாட்களிலும் வரு ஆதுவை நன்றாக பார்த்துக் கொண்டாள்”..

“அவன் படிக்கும்போது உடன் இருக்க செய்வாள். அவன் படிப்பதை அமைதியாக கேட்கவும் செய்தாள் . இப்படியே ஆது நல்லமுறையில் பரீட்சையும் எழுதி இருந்தான் “..

“அவன் பரீட்சை எழுதி ஒரு வாரம் சென்று இருந்தது .அப்பொழுது நடேசன், கல்யாணி ,இனியா மூவரும் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார் “..

“வரு இடமும் தேவா இடமும் இப்பொழுது நீங்கள் இருவரும் ஹனிமூன் சென்று விட்டு வரலாமே என்றார் . வரு சிரித்த முகமாக நாங்கள் குடும்பத்துடன் சென்று விட்டு வருகிறோம் மாமா என்றாள் “..

“செம்ம போங்க ஐஸ் குடோனையே தூக்கி தலையில்  வச்சிட்டீங்க அண்ணி என்று இனியா சிரித்தாள். அனைவரும் அவள் பேச்சால் சிரிக்க செய்தார்கள்”..

“நடேசன் தான் சரிடா மா என்று விட்டு குடும்பத்துடன் சிம்லா செல்வதற்கு டிக்கெட் புக் பண்ணி கொடுத்தார். அடுத்த ஒரு வாரத்தில் குடும்பத்துடன் ஒரு சிம்லா சென்று இருந்தாள் வரு “..

“கலை ,மாணிக்கத்தையும் கூப்பிட்டு இருந்தாள்.இருவரும் நாங்கள் வரவில்லை. சகு ரொம்ப நாட்களாக கூப்பிடுகிறாள். உன்னால் நாங்கள் அங்கு செல்லவில்லை இப்பொழுது நாங்கள் இருவரும் அங்கு சென்று விட்டு வருகிறோம் என்றவுடன் நானா உன்னையும் உன் புருஷனை பிடித்து வைத்துக் கொண்டேன் என்று சொன்னாள்”..

“ஏண்டி சொல்ல மாட்டாய் !இப்பொழுது உனக்கு கொழுப்பு கூடி போச்சு எல்லாவற்றையும் சொல்வாய் .நீயும் உன் அப்பாவும் தான் என்னை போகவிடாமல் தடுத்தது. உன் அப்பா என்றால் என் மகளுக்கு வெளியில் சாப்பிட்டாள்  ஒத்து கொள்ளாது என்றும்”..

” உன்னால் எனக்கு ஆக்கி போடுவதை விட உன் தங்கச்சி வீட்டுக்கு செல்வது தான் முக்கியமா என்று கேட்டாய் ?. “..

“ஆனால் ,இப்பொழுது நானா உன் கையைப் பிடித்து போக வேண்டாம் என்று சொன்னேன் என்று சொல்கிறாய் ? ஏன் சொல்ல மாட்டீர்கள் அப்பாவும் ,மகளும் என்றார். “..

“அதன் பிறகு ,வரு சிரித்துக் கொண்டே உன் தங்கை வீட்டிற்கு செல்வதற்கு இவ்வளவு சாக்குபோக்கு என்னையாயும் என் அப்பாவையும் குறை சொல்கிறாய் என்று சொல்லி சிரித்துவிட்டு ஜாலியா போயிட்டு ஒரு வாரம் உன் புருஷனோட ஜாலியா இருந்துட்டு வா தங்கச்சி வீட்டில என் தொல்லை இல்லாமல் என்று சிரித்தாள்”..

” அடி கழுதை என்று சிரித்து விட்டு வைத்தார் கலை.  பிறகு குடும்பத்துடன் சிம்லா சென்று இருந்தார்கள் . ஆது ,தீரன், அரிசி ஒரு அறையிலும்., வரு ,தேவா இருவரும் ஒரு அறையிலும் தங்கி கொண்டார்கள்”..

“பத்து நாட்கள் சந்தோஷமாக இருந்துவிட்டு அங்கு உள்ள இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு தங்களது தனிப்பட்ட வாழ்க்கையும் வரு,தேவா இருவரும் சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டு பத்து நாட்களுக்கு பிறகு தங்களது இருப்பிடத்தை நோக்கி வந்தார்கள்”..

” அப்படியே நாட்கள் உருண்டோடியது. ஆதுவின் ரிசல்ட்டும் இன்று வெளியாகும் என்று இருந்தது. ஆது தான் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தான். “.

“வரு சிரித்து முகத்துடன் அவனை 5 மணிக்கு எழுப்பி குளிக்க  சொல்லிவிட்டு டீ கொடுத்துவிட்டு சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு ஏழு மணிக்கு குடும்பத்துடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று விட்டு வந்தாள் “..

“அவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு வரும்போது அவர்கள் வீட்டு வாசலில் புதிதாக கவர் போட்டு ஒரு பைக் நின்று கொண்டிருந்தது . ஆது வேகமாக பைக்கின் முன்பு போய் நின்றான்”..

“வரு சிரித்துக் கொண்டே திறந்து காண்பித்து பிடித்திருக்கிறதா ?என்றாள் அண்ணி என்றான். டேய் உனக்கு பைக் என்றால் பிடிக்கும் என்று எனக்கு தெரியும் என்று சிரித்தாள்”..

“தேவா வருவை முறைக்க செய்தான்.அவள்  தேவாவை கண்டு கொள்ளாமல் ஆதுவை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்து இன்னொரு கிப்ட் கொடுத்தாள்”.

” ஆது இது என்ன என்றான்.பிரித்துப் பார் என்றவுடன் ஸ்டேட்டஸ் கோப் இருந்தது. தனது அண்ணியை கட்டிக் கொண்டான் .இன்னும் அவன் ரிசல்ட் வரவில்லை டி என்ற அரசி”..

” உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் மகன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் .எனக்கு என் ஆதுவின் மீது நம்பிக்கை இருக்கிறது .அவன் கனவை நினைவாக்குவான் என்று சிரித்தாள் “..

“அதன் பிறகு ,தேவா வாட்ச் கொடுத்தான் .அண்ணா சூப்பராக இருக்கிறது என்று சிரித்தான். எப்படியும் உன் அண்ணி கொடுத்ததை விட கம்மிதான் என்றவுடன் ஆது சிரித்துக் கொண்டே என் அண்ணனின் பாசத்திற்கு அண்ணியின்  பாசம் நிகர் தான் “..

“எதுவும் சலைத்தது இல்லை என்று சொல்லி இருவருக்கும்  நடுவில் நின்று கொண்டு இருவரின்  தோளிலும் கை போட்டான் இருவரும் சிரித்தார்கள் “..

“சரியாக மணி பத்து பத்தை தொட்டு இருந்தது .ரிசல்ட் வர ஆரம்பித்திருந்தது.   ஆது சிறிது ஒரு மாதிரியாக இருந்தான். டேய் என்ன என்றாள். அண்ணி எனக்கு நம்பிக்கை இருக்கிறது இருந்தாலும் சிறிது பயம் என்றான்”..

” ஆது இது  எல்லாம் அனைவருக்கும் இருக்கக்கூடியது தான் என்று சிரித்துவிட்டு தன்னுடைய லேப்டாப் எடுத்துக் கொண்டு  ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.வீட்டில் அனைவருமே அவனுடைய ரிசல்ட் பார்க்க அவ்வளவு ஆவலாக இருந்தார்கள்”..

” சிறிது நேரம் நெட்வொர்க் சுற்றிவிட்டு பிறகு அவனுடைய ரிசல்ட் வந்திருந்தது. ஆது நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான். அவனது பள்ளியிலும் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்று இருந்தான்”..

. “வருவிற்கு அவ்வளவு சந்தோஷம் ஆதுவின் உச்சியில் இதழ் பதித்தாள். ஆது வருவை கட்டிக்கொண்டு அழ செய்தான் . டேய் இதற்கு எதற்காக அழுகிறாய் ?சந்தோஷம் விஷயம் டா சிரி என்றவுடன் தனது கண்ணீரை துடைத்து விட்டு தனது அண்ணியை பார்த்து சிரித்தான் “..

“பிறகு பள்ளியில் இருந்து போன் செய்து பள்ளியில் இரண்டாவது மதிப்பெண் எடுத்ததால் ஸ்டேட் தர்ட் ரேங்க் எடுத்ததாலும் பள்ளிக்கு வர சொல்லி இருந்தார்கள்  “.

“பிறகு குடும்பத்துடன் சென்று இருந்தார்கள். கலை மாணிக்கமும் கூட வந்திருந்தார்கள். நடேசன் ,கல்யாணி வந்திருந்தார்கள் . ஆதுவும் அனைத்திற்கும் எனது அண்ணி தான் காரணம் என்றான்”..

” வரு ஆதுவை  முறைக்க செய்தாள் .என்னப்பா அண்ணி என்று சொல்கிறாய் ? அனைத்து மாணவர்களும் என் அப்பா அம்மா இல்லை என்றால் ஆசிரியர்கள் என்று சொல்வார்கள் என்று மீடியாக்காரர்கள்  கேட்டார்கள் “..

“ஆது சிரித்த முகமாக சொன்னாலும் சொல்ல விடலாம் என்னுடைய அண்ணி தான் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் இரவு படிக்கும் வரை எத்தனை மணி ஆனாலும் என்னுடன் இருந்தார்கள் .அவர்கள் இருந்து விட்டால் நீ படித்து விடுவாயா? என்று கேட்கலாம் “..

“நான் தூங்கி தூங்கி வழியாமல் இருக்கவும் சரி, நான் சோர்ந்து போயிருந்தாலும் சரி அனைத்து நேரத்திலும் எனக்கு தைரியம் கொடுத்து படிக்க வைத்தது என்னுடைய அண்ணி தான்”..

” நான் படித்தது என் கனவிற்காக தான். ஆனால் ,என்னுடன் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது என்னுடைய அண்ணி தான் .அவர்கள் இல்லாவிடில் நான் இந்த அளவிற்கு மதிப்பெண்  எடுத்து இருப்பேனா என்பது கொஞ்சம் கடினம் தான் “..

“என்னுடைய உழைப்பும் இருக்கிறது. ஆனால் எனக்காக என்னுடன் ஒத்துழைப்பு கொடுத்தது முழுக்க முழுக்க என்னுடைய அண்ணி என்று சொல்லி சிரித்தான் “..

பிறகு ,”பள்ளியில் அனைத்தும் முடித்துவிட்டு அனைவரும் அப்படியே குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள் “..

“வீட்டிற்கு வந்தவுடன் வரு ஆதுவை வெளியவே நிற்க சொல்லிவிட்டு ஆரத்தி  எடுத்துக் கொண்டு வந்தாள். அதுவரை அமைதியாக இருந்தவன் அவள் ஆரத்தி சுற்றி முடித்தவுடன் வீட்டிற்குள் வந்தான்”..

“என்ன அண்ணி வர வர நீங்க குடும்ப பெண்ணாகவே மாறி கொண்டு வருகிறீர்கள் .எனக்கு பிடிக்கவில்லை .எனக்கு என்னுடைய ஜாலியான அண்ணி தான் வேண்டும்”..

“என்னை தோழமையுடன் நடத்தும் அண்ணி தான் வேண்டும் என்று சிரித்தான் .டேய் இதெல்லாம் சும்மா டா நமக்கெல்லாம் இந்த குடும்ப பாங்கு செட்டாகாது டா என்று சிரித்தாள் “..

“அரசி தனது இளைய மகன் ,மருமகள் தலையில் கொட்டி விட்டு அதான பார்த்தேன் . எலி என்ன டா கோமணம் இல்லாம ஓடுதுன்னு நினைத்தேன்  என்று சிரித்தார்”..

” பிறகு குடும்பத்துடன் அனைவரும் சிரிக்க செய்தார்கள் .பார்வதியும் மொத்த குடும்பத்தையும் போட்டோவின் மூலமாக பார்த்துக்கொண்டு  போட்டோவில் சிரிக்க செய்தார்.”..

“இந்த குடும்பம் இப்பொழுது போல் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று எண்ணி வாழ்த்தி இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்”..

சுபம்

மிக்க நன்றி.

கதையின் நகர்வு எப்படி உள்ளது என்பதை படித்துவிட்டு தங்களின் விமர்சனங்களுக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்…

இதுவரை சைலன்ட் லீடர்ஸ் ஆக இருந்தவர்களும் உங்களின் மேலான கருத்துக்களை ஒரு சில வரிகள் ஆவது கதையின் முடிவில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

3 thoughts on “புன்னகை 64 (இறுதி அத்தியாயம்)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *