Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே-46

பூவிதழில் பூத்த புன்னகையே-46

வரு வேகமாக  தனது முந்தியை தன் மேல் போர்த்திக்கொண்டு அதற்குள் வந்து விட்டீர்களா” என்றாள் ..”இது என்ன டி கேள்வி  நான் ரெஸ்ட் ரூம் தான் சென்றிருந்தேன் அங்கே குடியிருக்க செல்ல வில்லையே” ..என்றான் .அவனை முறைத்து பார்த்தாள் ..சரி நீங்கள் வெளியில் இருங்கள் என்றாள் ஏன் இந்த புடவைக்கு என்ன ஏன் மாற்றுகிறாய் என்றான் விளையாடாதீங்க எனக்கு புடவையில் இருக்க ஒரு மாதிரியாக இருக்கிறது ..”நான் வேறொரு உடை மாற்ற வேண்டும் என்றாள் தேவா அவள் சொன்னதற்கு ஆப்போசிட்டாக அவளது அருகில் வந்து அவளது உதட்டை பிடித்தான்” ..”வருவிற்கு உடல் முழுவதும் வேர்க்க ஆரம்பித்து,நடுங்க ஆரம்பித்தது அவனை பார்த்துக் கொண்டே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் தேவ் என்று கேட்டாள்”..இப்பொழுது நீ என்னை என்ன சொல்லி அழைத்தாய் என்றான் ஏன் நீங்கள் என்னை வனி என்று அழைக்கும் போது நான் உங்களை தேவ் என்று அழைக்க கூடாதா ? என்று  ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள் …”யாரு டி  உன்னை அப்படி  அழைக்க வேண்டாம் என்று சொன்னார்கள் என்று விட்டு அவளது உதட்டையே பார்த்துக் கொண்டு இருந்தான்” ..”அவள் பேச பேச அவளது உதட்ட அசைவையே  பார்த்துக்கொண்டு நின்றான் அவனது கையை மெதுவாக எடுத்து விட்டாள் அவனின் பார்வை அப்பொழுதும் உதட்டின் கீழ் இருக்கும் மச்சத்தில் நிலை குத்தி  நிற்ப்பதை பார்த்து விட்டு கொஞ்ச நேரம் வெளியில் இருங்கள்”..நான் வேறு உடை மாற்ற வேண்டும் என்று சொன்னாள்  “அவன் அப்பொழுதும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவுடன் நீங்கள் ஏதோ செய்யுங்கள் என்பது போல் கதவு தாழ்ப்பாள் போட்டு இருக்கிறதா என்பதை இன்னொரு முறை சரி பார்த்து விட்டு அவனுக்கு பின்பக்கம் திரும்பி தனது புடவையை அவிழ்க்க  செய்தாள் “பிறகு “தேவா தான் வேகமாக கத்திவிட்டு என்ன டி பண்ற என்றான் நானும் எவ்வளவு நேரம் தான் சொல்வது வெளியில் கிளம்புங்கள் என்று நீங்கள் இங்கே நின்று கொண்டிருந்தாள் நான் என்ன செய்வது நேரமாக வில்லையா என்று கேட்டாள்.”.”அதற்கு என்றான் அதற்கு என்று விட்டு புடவையை முழுவதாக அவிழ்த்து முடித்தவுடன் பிளவுஸில் கை வைக்க ஆரம்பித்தாள்”..” அடியே நில்லு டி என்று விட்டு வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றான் அவனுக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது”..” படுபாவி ராட்சசி என்னென்ன வேலை எல்லாம் செய்ற பக்கத்தில் நிற்கிறேன்  கொஞ்சம் கூட கூச்சமே இல்லை எனக்கென்ன என்பது போல் இரண்டு முறை சொல்லிவிட்டு படபட வென்று  புடவையை அவிழ்க்க செய்கிறாள்” என்று வாய்விட்டு புலம்பினான் ..அதை எதிர்ச்சியாக சமையலறைக்குள் புகுந்த அரசி கேட்டுவிட்டு அவனை விசித்திரமாக பார்த்துவிட்டு தண்ணீரை எடுத்துக் கொண்டு அமைதியாக வெளியில் சென்றார் ..அரசி வந்து  சென்றவுடன் தேவா  தனது தலையிலே தட்டிக்கொண்டு அச்சோ தேவா மானத்தை வாங்கிட்டையே டா  அம்மா நம்மளை என்ன நெனச்சிட்டு போறாங்களோ என்று தலையில் தட்டிக் கொண்டான் ..”அரசி சமையலறை பக்கம் பார்த்து  கொண்டே உணவு மேசையில் வந்து உட்கார்ந்தவுடன் தீரன் தான் என்ன அரசி என்று கேட்டார் உங்கள் மகனுக்கு இன்னும் இரண்டு நாட்களில் பைத்தியம் முத்தி விடும் என்று நினைக்கிறேன் என்றார்” …”தீரன் சிரித்துவிட்டு இரண்டு நாட்கள் எல்லாம் தேவையில்லை உன் மருமகள் செய்யும் வேலையை பார்த்தால் இன்றே பைத்தியம் பிடித்து விடும் “என்றார் ..இருவரும் சிரித்தவுடன் ஆது என்னம்மா என்று கேட்டுக் கொண்டு வந்தான் இருவரும் இப்பொழுது இவனிடம் என்ன என்று சொல்வது என்று புரியாமல் முழித்தார்கள் . இவனிடம் எப்படி இதைப் பற்றி பேசுவது என்று அமைதியாக இருந்தார்கள் ..அப்போது வரு தான் வேறொரு உடை அணிந்து கொண்டு வந்தாள் ஆதுவின் கவனம் இப்போது வருவின் மீது பதிந்ததால் மேற்கொண்டு தனது அப்பா, அம்மாவிடம் இதைப் பற்றி கேட்கவில்லை..”அண்ணி உங்களுக்கு இந்த ஸ்கர்ட் டாப் சூப்பரா இருக்கு என்றான் ஆதுவின் குரல் கேட்டு தேவா சமையலறைக்குள் இருந்து வெளியில் வந்து எட்டிப் பார்த்தான்.”.”அவள் அணிந்து இருக்கும் உடையை பார்த்து விட்டு  போச்சு என் மானத்தை வாங்குவதற்கு  என்றே வந்து  இருக்கா போல இப்பதான் ரெண்டு வயசு பாப்பா என்று நினைப்பு என்று எண்ணி விட்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்”..ஆது கமெண்ட் செய்ததற்கு அவனைப் பார்த்து சிரித்துவிட்டு  வரு தீரனை பார்த்தாள். தீரன் அமைதியாக அவளை பார்த்தவுடன் இந்த உடை உங்களை அசவுரியமாக  உணர வைக்காதே மாமா என்று கேட்டாள்..”அவர் சிரித்த முகமாக நீ பாவாடை சட்டை போடுவதில் எல்லாம் எனக்கு பிரச்சனை இல்லடா என்றார் .. அவர் அவ்வாறு  சொல்லிவிட்டு அவரது பார்வை சமையலறையில் இருக்கும் தேவாவின் பக்கம் சென்றது” ..”இந்த உடை என்னை அசவுரியமாக உணர வைக்காது ஆனால் எனது மகனை படாத பாடு நீ படுத்த போகிறாய் என்றும் அவனை நீ வச்சு செய்யப் போகிறாய் என்றும் நன்றாக புரிந்து விட்டது மருமகளே என்றார்”..அதைக் கேட்டு “அரசி தனது கணவனை லேசாக முறைத்து  பார்த்தார். தீரனின் பார்வை மட்டுமல்ல தீரன், அரசி , ஆது மூவரின் பார்வையுமே சமையல் அறையில்  இருக்கும் தேவாவின் பக்கம் சென்றது” ..”மூவரின் பார்வையும் உணர்ந்து வரு சமையல் அறை பக்கம் திரும்பியவள் அங்கு தனது கணவன் தனது ரசனையாக பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு லேசாக நெளிந்தாள் “.பிறகு அரசி தான் டேய் ஆது உனக்கு படிக்கும் வேலை இல்லையா ? அதை பார் என்றார் ஆதுவும் தனது தாய் சொன்னவுடன் அறைக்குள் சென்று விட்டான் .வருவும் அத்தை மாமா இருவரையும் அமைதியாக  பார்த்துவிட்டு சமையல் அறைக்குள் புகுந்தாள் . “அவள் சமையல் அறைக்குள் புகுந்தவுடன் தேவா அவளை இழுத்து தன் முன் நிற்க வைத்து சமையல் மேடையில் உட்கார  தூக்கி உட்கார வைத்து அவளது தாடையை கையில் ஏந்தி என்ன டி இது டிரஸ் என்றான்” ..” ஏன் பிடிக்கவில்லையா? என்றாள் அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்து விட்டு நன்றாக தான் இருக்கிறது இருந்தாலும் என்னுடைய  மானத்தை வாங்குகிறாய் டி” ..”நீ காலையில் வந்ததை கூட ஓரளவிற்கு ஒத்துக் கொள்வேன் சேரி ஒழுங்காகவும் கட்டவில்லை சரி என்று  இருந்தேன். ஆனால் இப்பொழுது போட்டிருக்கும் உரை என்றான் “..”ஏன் என்னுடைய உடைக்கு  என்ன பிரச்சனை நன்றாக தானே இருக்கு  என்றாள். நீ இப்பொழுது தான் இரண்டு வயசு பாப்பா என்று நினைப்பா “என்றான்  “ஓ என்று கீழே குதித்தவள் அவனது காலின் மீது இறங்கி நின்றாள் “..”அவனுக்கு வலிக்காத வாரு அவன் மீது ஏறி நின்றாள் ஏன்? இரண்டு வயது பாப்பா மட்டும்தான் இந்த மாதிரி உடை அணிய வேண்டுமா ?நாங்களும் அணிந்தாள் வேண்டாம் என்று சொல்கிறதா?  “..”இதில் எங்கு தவறு இருக்கிறது உடல் எங்காவது தெரியும் படியாக இருக்கிறதா ? இல்லை அடுத்தவரின் கவனம் தவறாக இருக்கும்படியாக உடை அணிந்து இருக்கிறேனா என்று கேட்டாள்..”அவளை மேல் இருந்து  கீழ் வரை  பார்த்தான். அவளை அப்படி பார்த்தவுடன் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது தன் தலையிலே தட்டிக் கொண்டு ராட்சசி என்னை படாத பாடு படுத்து எடுக்கிறாள் என்று எண்ணி விட்டு அம்மா தாயே உன்னுடைய உடை நன்றாக தான் இருக்கிறது”..   “அவளது அருகில் நெருங்கி வந்து நின்று அவளது காதில்   லேசாக நன்றாக தான் இருக்கு என்று சொல்லிவிட்டு அவளது கழுத்தில் கடித்து வைத்தான் வருவிற்கு தான் ஒரு மாதிரியாக  இருந்தது”..”அவளுக்கு  உடல் கூசியது, சிலிர்த்து அடங்கியது  அவனை தள்ளிவிட்டு இப்படி எல்லாம் செய்யாதீர்கள் ” நம் அறைக்குள் எதுவாக இருந்தாலும் சரி ஆனால் இப்படி வெளியில் வேண்டாம்..” நான் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் வயது பையன் ஆது இருக்கிறான் .அத்தை மாமா பெரியோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முன்பும் தவறு தான்” இருந்தாலும் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் ..ஆனால் “ஆது வேறு நான் அவன் தப்பானவன் என்று சொல்லவில்லை. நம்முடைய செயல்கள் அவனை பாதிக்க கூடாது “..”என்னதான் அவன் நல்ல பையனாக இருந்தாலும் அவனது வயது தவறாக யோசிக்க தோன்றும் புரியும்” என்று நினைக்கிறேன் என்று விட்டு அவன் தோளில் கை வைத்து அவனை நகர்த்தி விட்டு உணவு மேசை மீது ஏறி உட்கார்ந்தாள் ..தேவாவும் அவள் பேசியது தனக்கு புரியாமல் இல்லை என்று எண்ணிவிட்டு சரி டி இனி பார்த்து இருக்கிறேன் என்று விட்டு சப்பாத்திக்கு மாவு பிசைந்து  கொண்டு இருந்தான் ..” என்ன தினமும் சப்பாத்தியா? என்றாள். அவளைப் பார்த்து முறைத்தான். மேடம் தினமும் சப்பாத்தி சாப்பிடுவது போல் சொல்கிறீர்கள் இன்று ஒரு நாள் சாப்பிட்டால் குறைந்து விட மாட்டீர்கள் ..வேற வேண்டுமென்றால் நீ தான் செய்து  சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்றான் . அப்பொழுது ஆது சமையல் அறைக்குள் வந்தான் அண்ணா என்று அழைத்து கொண்டே வந்தான்..”அவன் ஏற்கனவே வந்தான் இருவரும் நின்ற கோலத்தை அவன் பார்க்க வில்லை தான் ஆனால் வரு பேசியதை கேட்க செய்தான்” .”தன் அண்ணியை எண்ணி கர்வம் கொண்டான் தனக்காகவும் எண்ணுகிறார்கள் நான் நல்வழியில் செல்ல வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்” என்று சந்தோஷம் அடைந்தான். அவன் அண்ணா என்று அழைத்து கொண்டே வந்ததாலல் என்னடா வேண்டும் என்று தேவா கேட்டவுடன்  அண்ணா எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என்றான் ..” டீ குடிக்கிறாயா போட்டு தரட்டா என்றவுடன் அவன் அமைதியாக இருந்த உடன் அவன் சாப்பிட கேட்டான் நீங்க டீ போட்டு தரேன்னு சொல்றீங்க ? என்று வரு கேட்டாள் .”சரி டா என்ன வேண்டும் என்றாள் ஆது அமைதியாக இருந்த உடன் ஆது நீ சொல்லு நான் செஞ்சு தரேன் என்று கீழே இறங்கினாள் தேவா அவளை அமைதியாக தான் பார்த்தான்.அண்ணி எனக்கு லைட்டா வேற ஏதாச்சு ஸ்னாக்ஸ் மாதிரி செஞ்சு தரீங்களா ?சரி டா நான் செய்து தரேன் நீ உட்கார்ந்து படி  நான் செய்து விட்டு கொண்டு வருகிறேன் என்றாள்..”ஆது சென்ற பிறகு தேவா அவளை அமைதியாக பார்த்தான் .அவன் பிசைந்து  வைத்த சப்பாத்தி மாவை சிறிதாக எடுத்து திரட்டி பிஸ்கட் போல் எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள்”..”இனிப்பு கலவையாக ,சிறிது மிளகாய் தூள் உப்பு கலந்து காரமாகவும் சிறிது எடுத்துக் கொண்டு வைத்தாள் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ப.அண்ணி இது என்ன புது டிஷ் ஆக இருக்கு என்றான் .புதிதல்ல உனக்கு தான் புதிது எப்படி இருக்கு என்று சாப்பிட்டு சொல் என்றாள்.”வரு அதை உணவு மேசையில்  வைத்துவிட்டு அவள் தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு வந்தவுடன் தேவா தான் அவளை முறைத்துக் கொண்டு நின்றான் இப்பொழுது நான் என்ன செய்தேன் எதற்காக என்னை முறைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டாள்” .”மேடம் என்ன செய்தீர்கள் என்று கூட  புரியவில்லையோ” என்றான் இல்லையே நான் நல்லது தானே செய்தேன் என்று பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு  கேட்டாள்.”அவளது தலையில் கொட்டி விட்டு நல்லது  தாண்டி செய்தாய் .நான் சப்பாத்திக்கு என்று பிசைந்து வைத்த மாவை மேடம்  வேகமாக எடுத்து சிநாக்ஸ் செய்தீர்கள் அல்லவா? அப்போது மேடமே இரவு உணவுக்கு .மாவு பிசைந்து வையுங்கள் என்றான்..என்ன நானா ? அதிர்ந்து கேட்டாள் எனக்கு தெரியாது என்று  அவள் சொல்வது காதில் வாங்காமல் வெளியே சென்றான் ..இப்போது வரு சமையல் அறையில் நின்று முழித்து கொண்டு இருந்தாள் அவள் சப்பாத்திக்கு மாவு பிசைவாளா இல்லை தேவா அவளை என்ன சொல்வான் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன்தனிமையின் காதலி னகை 46

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே-46”

  1. CRVS2797

    சப்பாத்திக்கு மாவு பிசையறது அத்தனை பெரிய வேலையா என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *