- அரசிக்கு வலி வந்து அரசியை மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள் அங்கு சென்றவுடன் “அரசியை பரிசோதித்து விட்டு குழந்தை தலை திரும்பி இருக்கிறது கொஞ்சம் கடினம் தான் என்றார்கள்”…
- தீரன் அங்கே மண்டியிட்டு அழ ஆரம்பித்தார் இவளையும் என்னிடம் இருந்து பரித்துக் கொள்ளாதே உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை சந்தோஷமாக தான் போய் கொண்டு இருந்தது என்னுடைய பேச்சால் நானே எனது வாழ்க்கையை அழித்துக் கொண்டேன்…
- இவளை என்னிடம் இருந்து பிரித்து விடாதே எனது மகனுக்கு திரும்பவும் அம்மா இல்லாமல் ஆக்கி விடாதே இன்னொரு குழந்தையையும் தாய் இல்லாத குழந்தையாக ஆக்கிவிடாதே …
- எனக்கு என்னுடைய மனைவி குழந்தை இரண்டும் நல்ல முறையில் வேண்டும் என்று கத்தினார் தேவா தந்தையின் தோளில் கை வைத்தான்..
- தேவாவை கட்டிக்கொண்டு தீரன் அழ செய்தார் தேவா நர்ஸிடம் சென்று நான் என்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என்றான் நான் கொஞ்சம் பேச வேண்டும் என்று விட்டு வேகமாக நர்ஸ் கத்துக்கு பிரசவ அறைக்குள் சென்றான்..
- “நீங்கள் நன்றாக வருவீர்கள் என்று எனக்கு தெரியும் என்னையும் அப்பாவையும் இப்படியே விட்டு சென்றுவிட மாட்டீர்கள்” என்று எனக்கு தெரியும் என்று அவரது கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு அவரது வயிற்றில் தலை வைத்து முத்தம் கொடுத்துவிட்டு குட்டி பையா சீக்கிரம் அண்ணனிடம் வந்துவிடு…
- “அம்மாவிற்கு அதிக வலி கொடுக்காதே அண்ணன் சொன்னால் கேட்பாய் தானே நீ அண்ணன் செல்லம் தானே” என்று அரசி வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசிவிட்டு அரசியின் வயிற்றில் முத்தம் பதித்து விட்டு தனது தாயை ஏக்கமாக பார்த்துக் கொண்டே வெளியில் சென்றான் …
- அவருக்கு இப்பொழுது குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பித்ததோ அப்பொழுது இருந்து குழந்தை இடம் தேவா பேசிக்கொண்டு தான் இருக்கிறான் அதுவும் அரசி சொன்ன வார்த்தைதான்…
- அவர் ஆரம்ப காலத்தில் கர்ப்பமாக இருக்கும் பொழுது அம்மா நான் இப்போது பேசினால் தம்பி பாப்பாவிற்க்கு கேட்குமா என்று கேட்டான் இப்போது கேட்காது தம்பி பாப்பா ஆறு மாதத்திற்கு பிறகு அசைவு தெரிய ஆரம்பிக்கும் அப்பொழுது நீ பேசு தம்பி பாப்பா நீ பேசுவதை கேட்கும் என்றார்…
- அதை நினைவில் வைத்துக் கொண்டு அவருக்கு எப்பொழுது அசைவு தெரிய ஆரம்பித்ததோ அதிலிருந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறான் தினமும் பேசுவான் தனது பள்ளியில் நடந்த கதைகளை அனைத்தையும் வந்து சொல்ல செய்வான்…
- அது அவனுக்கு தனது அரசி அம்மாவிடமே சொல்வது போல் இருந்தது அவர் தன்னைச் சித்தி என்று அழை என்று சொன்ன பிறக்கும் அவன் அவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு குழந்தை அசைய ஆரம்பத்துடன் தினமும் காலை மாலை அவன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் குழந்தையிடம் அவரது மடியில் படுத்துக்கொண்டு வயிற்றில் காது வைத்து பேச செய்வான்…
- அதை எப்பொழுதும் செய்துவிட்டு வந்தான் அடுத்த அரை மணி நேரத்தில் சுகப்பிரசவத்தில் அரசிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அதுதான் நமது கதையின் நாயகன் தேவாவின் தம்பி ஆத்விக் பிறந்தான் .
- குழந்தை நல்ல முறையில் பிறந்து விட்டது என்று மருத்துவர் சொல்லிவிட்டு நர்ஸ் குழந்தையை தீரன் கையில் கொடுக்க வந்தார் அப்பொழுது தீரனின் கைகள் அடங்கியது தனக்கு இந்த குழந்தையை வாங்க தகுதி உள்ளதா ?
- வயிற்றில் இருக்கும் இந்த உலகத்தை எட்டிப் பார்க்காதா? தன்னுடைய ரத்ததை எவ்வாறெல்லாம் பேச செய்தோம் இந்த குழந்தையை அவளுடைய ஆசையில் உருவானது என்றெல்லாம் சொல்லிவிட்டோமா என்று கண்கலங்கினார் …
- அப்போது நர்ஸ் இடம் தேவா தன்னிடம் குழந்தையை கொடுக்குமாறு கேட்டான் அதற்கு நர்ஸ் இல்ல பா நீ சின்னப் பையன் என்றார் “நான் இங்கே உட்கார்ந்து கொள்கிறேன் நீங்கள் தம்பியை எனது மடியில் வையுங்கள்” என்று சொன்னான்..
- ” அவர்களும் சிரித்துக்கொண்டே அவன் உட்கார்ந்துடன் குழந்தையை அவனது மடியில் பத்திரமாக பிடித்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வைத்தார்கள்” அவன் தனது தம்பியை கெட்டியாமாக பிடித்துக்கொண்டு கொஞ்சினான் …
- குழந்தையும் அவனது விரலை கெட்டியமாக பிடித்துக் கொண்டது தன்னுடைய தேவா தனது குட்டி தம்பியை தாயாக இருந்து பார்த்துக்கொள்ள செய்தாலும் “என் செல்ல குட்டி அண்ணனிடம் வந்து விட்டீர்களா அண்ணன் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன் “என்று குழந்தையின் நெற்றியில் பட்டும் படாமல் முத்தம் வைத்து விட்டு குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தான்…
- தீரன் அந்த குழந்தையை பார்ப்பதற்கு யோசித்தார் என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து அரசி கண் விழித்து விட்டார் என்றவுடன் தேவா தன்னால் தூக்க முடிந்த அளவிற்கு குழந்தையை கெட்டியாக தூக்கிக்கொண்டு அரசியின் அருகில் வந்து குழந்தையை அரசு இடம் காண்பித்தான்…
- அரசி அமைதியாக தேவாவை பார்த்தார் அம்மா சித்தி தம்பி எப்படி இருக்கிறான் என்று பாருங்கள் என்று அவரின் முகத்தினருகே கொண்டு சென்றான் அவரும் “அவன் அம்மா என்று தன்னைக் கூப்பிட வந்து தன்னை திருத்திக் கொண்டதை பார்த்து மனதில் குறித்துக் கொண்டு அமைதியாக குழந்தையை பார்த்தார்” …
- அதன் பிறகு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு சுகப்பிரசவம் என்பதால் மூன்றாவது நாள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் அருகில் உள்ளவர்கள் அரசியை ஓர் அளவிற்கு பார்த்துக் கொண்டார்கள் …
- தீரன் அரசிடம் எவ்வளவோ பேச முயன்றார் ஆனால் அதற்கு அரசி கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் தீரன் குழந்தை பிறந்ததிலிருந்து அரசியிடம் எவ்வளவோ பேசிப் பார்த்து விட்டார் …
- ஆனால் அரசி கொஞ்சம் கூட மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை ஏதாவது தேவை என்றால் அது வேண்டும் இது வேண்டும் என்று சொல்வதைத் தவிர மற்றபடி தீரனிடம் வேறு எதுவும் பேசவில்லை…
- அவர் பெரியதாக மனைவியாக எந்த உரிமையும் எடுத்துக் கொள்ளவும் இல்லை பேசவும் செய்யவில்லை தீரனுக்கு வருத்தமாக தான் இருந்தது ஆனால் என்ன செய்ய முடியும் அமைதியாக இருந்தார் ஆனால் தேவா தனது தம்பியை நன்றாக பார்த்துக் கொண்டான் …
- தனது சித்திக்கும் தேவையானதை செய்வான் அரசி ஒரு சில வீட்டு வேலைகளை செய்ய கற்றுக் கொடுத்திருந்தார் அதன்படி அவன் தனது சித்திக்கு ஜூஸ் போட்டு தருவான்…
- ஒரு சில வேலைகளை செய்ய தான் செய்தான் தன் சித்தி தண்ணீரில் கை வைக்க கூடாது என்பதற்காக தனது அப்பாவிடம் சொல்லி தண்ணி எடுத்துக் கொண்டு வர சொல்வான் தனது அப்பாவை சாப்பாடு செய்ய சொல்லி வேலை வாங்குவான் ..
- தீரனுக்கு லேசாக சிரிப்பாக இருந்தது தன்னால் செய்ய முடியாததை தனது மகன் செய்கிறானே என்று சந்தோஷப்பட்டு கொள்வார் அரசி எழுந்து சமைக்க சென்றதற்கு தேவா ஒரே வார்த்தையாக சித்தி நீங்கள் அமைதியாக இருங்கள்…
- ” நீங்கள் தண்ணீரில் கை வைத்தால் உங்களுக்கும் சளி பிடித்து விடும் தம்பிக்கும் சளி பிடித்து விடும் அப்பா சமைக்க செய்வார் என்றான்”…
- “அவருக்கு சமைக்க தெரியும் ஆனால் அந்த அளவிற்கு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது அதுவும் குழந்தை பெற்ற உடம்புகாரிக்கு செய்வது அவருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது” இதே போல் பார்வதிக்கு செய்ததை நினைத்து பார்த்தார் …
- பிறகு சிரித்துக் கொண்டார் அரசி வேறு எதுவும் பேசவில்லை இப்படியே மூன்று மாதங்கள் சென்றது தேவாவின் கவனிப்பில் அரசி கொஞ்சம் தேறி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் காலையில் அவன் பள்ளி சென்ற பிறகும் தீரன் அலுவலகம் சென்ற பிறகும் பக்கத்து வீட்டு பாட்டி அரசியை பார்த்து கொள்வார் ..
- அருகில் உள்ளவர்கள் நல்லவராக இருந்ததால் அரசியையும் ஆத்விக்கையும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள் ஆத்விக் என்ற பெயரை கூட தேவா தான் வைத்தான் …
- “ஐந்து மாதங்களுக்கு பிறகு ஆத்விக் கொஞ்சம் கவிழ ஆரம்பித்த பிறகு தேவாவின் முழு பொறுப்பாகி போனான்” ஆத்விக் பால் குடிப்பதற்கு மட்டுமே அரசியிடம் செல்வான் மற்றபடி முழு நேரமும் தேவாவின் கவனிப்பில் வளர செய்தான் ..
- தேவா பள்ளி சென்ற பிறகு அரசி உடன் இருப்பான் இப்படியே நாட்கள் ஓடி வருடங்களும் ஓடியது ஆத்விக் பள்ளி செல்ல ஆரம்பித்திருந்தான் தேவா கல்லூரியில் அடி எடுத்து வைத்திருந்தான்..
- அரசியிடம் இடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தபோது தீரன் மனதளவில் ரொம்பவே ஒடைந்து போய் மெலிதாக காணபட்டார் அப்போது அவர் அலுவலகத்தில் இருக்கும் பொழுது மயங்கி விழுந்துவிட்டார் என்று அலுவலகத்திலிருந்து அரசிக்கு போன் செய்தார்கள்…
- அரசிக்கு என்னதான் தீரன் மேல் கோவம் இருந்தாலும் தனது காதல் கணவர் மயங்கி விழுந்து விட்டார் என்றவுடன் பதறி விட்டார் பள்ளி முடிந்து சீக்கிரமாகவே வந்திருந்த ஆத்விக்கையும் உடன் அழைத்து கொண்டு வேகமாக மருத்துவமனை நோக்கி சென்றார்…
- அங்கு சென்ற பிறகு “அவருக்கு சுகர் அதிகமாகி மயங்கி விழுந்து விட்டார் என்று சொன்னவுடன் இது அரசிக்கு அதிர்ச்சியான செய்தி அவருக்கு சுகர் இருக்கிறது என்பது அரசிக்கு தெரியாது” அப்படி இருக்கும்போது சுகர் லெவல் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்களே என்று எண்ணி விட்டு டாக்டரை பார்க்கச் சென்று அவருக்கு எப்போது இருந்து சுகர் இருக்கிறது …
- “அவருக்கு சுகர் இல்லையே என்றார் அரசியை மருத்துவர் ஒரு நொடி மேல் இருந்து கீழ் வரை பார்த்துவிட்டு என்ன உங்களுடைய கணவன் என்னிடம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருக்கு இரண்டு வருடங்களாக சுகர் இருக்கிறது”…
- மாத்திரை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார் இப்பொழுது ஒரு மாத காலங்களாக செக்கப்பிற்கும் வரவில்லை மாத்திரை வாங்கவும் வரவில்லை சரி வேறொரு டாக்டரை பார்க்க ஆரம்பித்துவிட்டார் போல என்று இருந்தேன்.
- “நீங்கள் என்னவென்றால் உன்னுடைய கணவருக்கு சுகர் இருப்பதே தெரியாது என்கிறீர்கள் இந்த அளவிற்கு தான் கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா என்ற உடன் அரசிக்கு எங்கோ சாட்டையால் அடி வாங்கியது போல் இருந்தது “
- என்னதான் அவர் மேல் கோபம் இருந்தாலும் அவரது உடல் நலத்தில் கவனம் இல்லாமல் இருந்து விட்டோமோ என்று எண்ணி வருந்தினார் தேவா கல்லூரி முடிந்து வந்திருப்பான் என்றவுடன் தேவாவின் எண்ணிற்கு அழைத்தார் …
- அவன் போன் எடுத்து அடுத்த நொடி அப்பாவின் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு வா என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார் தனது தந்தைக்கு என்னவோ ஏதோ என்று அடுத்து பிடித்து மருத்துவமனை வந்தான் …
- தனது தந்தை மயக்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தனது சித்தியின் அருகில் வந்தான் சித்தி அப்பாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்டான் அவர் ஒரு நிமிடம் அவனை அமைதியாக பார்த்துவிட்டு “உன்னுடைய அப்பாவிற்கு சுகர் இருப்பது உனக்கு தெரியுமா என்று அமைதியாக கேட்டார்”
- தெரியும் சித்தி எனக்கும் ஒரு வருடங்களுக்கு முன்புதான் தெரியும் ஆனால் அப்பாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சுகர் இருக்கிறது அவர் நம் யாருக்கும் தெரியாமல் தான் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் .
- ஒரு வருடங்களுக்கு முன்பு அவர் மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது தினமும் சாப்பிடுகிறார் என்று எண்ணி அவருக்கு தெரியாமல் எடுத்து பார்த்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று மெடிக்கலில் கேட்ட பொழுதுதான் சொன்னார்கள்…
- “நான் அவரிடம் எவ்வளவு கேட்டேன் ஆனால் அவர் என்னிடம் வாய் திறக்கவில்லை அதன் பிறகு தான் நான் மெடிக்கலுக்கு சென்று இது என்ன மருந்து என்று கேட்டேன் அவர்கள் தான் இது சுகருக்கு சாப்பிடு மாத்திரை” என்று சொன்னார்கள் …
- அதன் பிறகு அப்பாவிடம் கேட்டதற்குத்தான் ஆமாம் என்று ஒத்துக் கொண்டார் என்றவுடன் அரசி தேவாவின் சட்டையை பிடித்தார் அதான் “உனக்கு ஒரு வருடத்திற்கு முன்பே தெரியுமே என்னிடம் இதுவரை ஏன் செல்ல வில்லை” என்றார்…
- இல்லை சித்தி இப்போது நீங்கள் அப்பாவிடம் பேசாமல் இருக்கும்பொழுது என்றான் “பேசவில்லை என்பதற்காக அவர் என்னுடைய கணவன் இல்லை என்று ஆகிவிடுமா நான் அவருடைய மனைவி இல்லை என்றாகி விடுமா” ..
- அப்பா உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னார் என்றான் அழுது கொண்டே அதனால் என்னிடமிருந்து மறைத்து விடுவாயா என்றவர் அவர் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் என்னிடம் சொல்லமால் விட்டு விட்டாய்…
- “நாளை அவருக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்து அவர் உயிருக்கும் இல்லை ஏதாவது என்றாலும் என்னிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தால் அப்போது சொல்லாமல் விட்டிருப்பாய் அப்படித்தானே”…
- “அப்போது அப்பனும் மகனும் சரியாக தான் இருக்கிறீர்கள் நான்தான் தவறாக இருக்கிறேன்” நான் தான் உங்களிடம் ஏமாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று கத்தினார் ..
- தேவா எவ்வளவோ அவரை சமாதானம் செய்து பார்த்து தான் பக்க நியாயத்தை சொல்ல விரும்பினான் ஆனால் அவர் கேட்பதாக இல்லை நான் தான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறேன் …
- “என்னிடம் நீ ஏன் சொல்ல வேண்டும் நான் என்ன உன்னுடைய அம்மாவா என்றார் தேவாவிற்கு அடிபட்ட உணர்வு அமைதியாக தனது சித்தியை பார்த்தான் “அவர் வேறு எதுவும் பேசாமல் அதான் உன் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று உனக்கு தெரியுமே நீயே உன் அப்பாவுடன் இருந்து உன் அப்பாவை பார்த்துக்கொள் என்று விட்டு ஆத்விக்கை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே சென்று விட்டார்…
- அரசி ஆத்விக்கை அழைத்துக் கொண்டு செல்லும் போது ஆத்விக் நான் அண்ணனுடன் தான் இருப்பேன் என்று அழுததற்கு அவன் முதுகில் ஒரு அடி போட்டு அவனை அழைத்துக் கொண்டு சென்றார் “அவர் அடித்தவுடன் தேவா குறுக்கே வந்தான் இவன் என்னுடைய மகன் என்றார்” …
- அவனுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்து நின்றது இருந்தாலும் இப்பொழுது தனது தந்தையை பார்ப்பதா இல்லை சித்திக்கு நிலைமை புரிய வைப்பதா என்று தெரியாமல் இருத்தலை கொள்ளியாக தவித்து நின்றான் முதலில் அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனதிற்குள் எண்ணி கொண்டு அமைதியாக இருந்தான்…
- அரசி அன்றிலிருந்து முற்றிலுமாக தேவாவை வெறுக்க செய்தார் என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகு ஏதோ ஒரு மூலையில் தான் வளர்த்த மகன் என்று உணர்வாவது இருந்தது…
- எப்போது அவன் இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் இருந்து மறைத்தான் என்று தெரிந்ததோ அப்பொழுதே அவன் மனதிலும் தன்னை வேண்டாம் என்றுதான் எண்ணுகிறானோ” என்று இவராகவே ஒன்றை யோசித்துக் கொண்டு அவரிடமிருந்து முற்றிலுமாக விளங்கினார் என்று தான் சொல்ல வேண்டும்…
- தீரனுக்கு உடல்நிலை சரியாகி வீட்டிற்கு வந்தார் தீரனிடம் அரசி எப்படி பேச செய்தார் தேவாவை முற்றிலுமாக ஒதுக்கி விட்டாரா இல்லை பழையபடி பேசுவாரா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
- அன்புடன்
- ❣️தனிமையின் காதலி❣️
அச்சோ பாவம் தேவா… அரசி புரிய வைத்து தேவா கூட சேர்த்து வைங்க
Beenga ethum pesala nu avarum sollama irunthutaru paiyan ena pana avanuke late ah thane therinji iruku ithukaga la pesama verupingla deva va
Nice epi