Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 11

பூவிதழில் பூத்த புன்னகையே 11

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து தீரனை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் வீட்டிற்கு வந்தவுடன் தேவா தனது அப்பாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டான் …உங்களுக்கு சுகர் இருப்பது சித்திக்கு தெரிந்துவிட்டது என்றான் அவர் அதிர்ச்சியாகி தேவாவை பார்த்தார் “நான் சொல்லவில்லை மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்” என்றவுடன் அரசிடம் சென்றார் அரசி தீரனை  முறைத்துவிட்டு நகர்ந்தார் அரசி நான் சொல்வதைக் கேளு என்று அரசியின் கையை தீரன் பிடித்தார் அவரது கையை உதரி விட்டு “இந்த தாலிக்கு என்னை அர்த்தம் நான் எதற்காக இங்கு இருக்கிறேன்”…”நான் உங்களுடன் பேசாமல் இருந்தாலும் உங்கள் உழைப்பில் தானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் உன் உழைப்பில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார் அரசி…தீரன் ஓங்கி அறைந்தவர் “என்னடி என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் கோபத்தில் நீயாக ஏதாவது வார்த்தையை விட்டுவிட்டு என்னையும் புண்படுத்தி நீயும் காயப்பட்டு” எதற்காக என்றார்…”அரசி  அவரது சட்டையை கொத்தாக பிடித்து எனக்கு காயமாகும் என்று கூட உங்களுக்கு தெரியுமா? “இதுவரை நீங்கள் பேசியதும் என்னை காயப்படுத்தி இருக்கும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா ? என்றார்..ஒத்துக் கொள்கிறேன் என் மீது தவறு இருக்கிறது நான் பேசிய வார்த்தைகள் உன்னை காயப்படுத்தி தான் இருக்கும் காயப்படுத்தும் விதமாகத்தான் பேசினேன் என்று அதற்காக நீயும் பதிலுக்கு அதையே செய்யாதே …நான் தெரியாமல் செய்த ஒரு தவறுக்கு வாழ்நாள் முழுவதும் வருந்தி கொண்டிருக்கிறேன் ஆனால் நீ தெரிந்தே என்னை காயப்படுத்தாதே என்றார் என்னிடம் உனக்கு சுகர் இருக்கிறது என்று கூட சொல்ல முடியாதா என்று கேட்டார்…சொல்லலாம் என்று தான் இருந்தேன் ஆனால் என்றார் “ஏன் சொன்னால் உன்னை விட்டு விலகி விடுவேன் என்று நினைத்தாயா” இல்லை என்னை இதுவரை என்று அரசி கேவலமாக ஏதாவது பேசுவதற்கு முன்பே தீரன் அரசியை அடித்துவிட்டார் …தேவா அப்பா என்று கத்தினான் அரசி  தேவாவை முறைத்துவிட்டு அவர் என்னுடைய புருஷன் என்னை அடிக்கிறார் நான் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இதில் தலையிட வேண்டிய உரிமை உனக்கில்லை என்றார்…தீரன் இத்தனை நாட்களுக்கு பிறகு எனது மனைவி தன்னை புருஷன் என்று சொல்கிறார் என்று ஆனந்தத்தில் தேவாவை பேசியதை கவனிக்க மறந்துவிட்டார் சித்தி என்றால் சித்தி தான் உன்னுடைய சித்தி தான் அமைதியாக நகர்ந்து விடு .எனக்கு ஒரே மகன் தான் அது என்னுடைய மகன் ஆத்விக் மட்டும் தான் இனி உன்னை பற்றிய எண்ணமோ யோசனையோ எனக்கு இல்லை எனக்கு தேவையும் இல்லை …”எப்பொழுது அந்த மனிதனுக்கு உடல்நிலை சரியில்லாததை கூட என்னிடம் மறைக்க வேண்டும் என்று எண்ணினாயோ இதன் பிறகு உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை”…”நான் உன் அப்பாவின் இரண்டாவது மனைவி உனக்கும் எனக்குமான உறவு அவ்வளவுதான் என்றா”ர் தீரன் அதிர்ச்சியாகி அரசியை பார்த்தார் தேவாவும் இப்படி ஒன்று எதிர்பார்க்கவில்லை .இத்தனை நாட்கள் ஏதோ ஒரு மூலையில் தன்னை நேசித்தவர் இப்பொழுது தன்னை முற்றிலுமாக வெறுத்து விட்டார் என்று எண்ணி பயந்தான் சித்தி என்றான் அவர் எதுவும் பேசாமல்   அவனை முறைத்தார்…தீரன் அரசி என்றார் அவருக்கு தன்னிடம் பேசிய அரசியை திரும்பவும் இழக்க செய்ய விருப்ப மில்லை இப்போது நன்றாக இல்லை என்றாலும் இன்னும் சிரித்து நாட்களில் தன்னுடன் பேச வைக்க வேண்டும் என்று எண்ணினார் …தேவாவை பார்த்தார் தேவா தனது தந்தையின் சந்தோஷத்திற்காக அவரிடம் தனது சித்தி நன்றாக பேசினால் போதும் என்று அரசியிடம் இருந்து முற்றிலுமாக ஒதுங்க ஆரம்பித்தான்..அன்றிலிருந்து அரசி தீரனிடம் எப்பொழுதும் போல் பேச செய்தார் அவரே காலை மாலை இருவேளையும் தீரனுக்கு மாத்திரை எடுத்துக் கொடுப்பார் மதியத்திற்கு போட்டுக்கொள்ள சொல்லியும் அனுப்பி வைப்பார் போன் பண்ணி மாத்திரை போட்டு விட்டீர்களா என்று கேட்பார் .தீரனுக்கு சுகர் ஏறாமலும் குறையாமலும் நார்மலாக இருக்கும் படியாக  பார்த்துக் கொண்டார் அவர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொண்டார் அவர் எந்த அளவிற்கு தீரனை கவனிக்க ஆரம்பித்தாரோ ஆத்விக்கை பற்றி யோசிப்பதை ரொம்பவே குறைத்து கொண்டார் என்று தான்  சொல்ல வேண்டும்..அவர் மனதளவில் எங்கு தீரனை விட்டு விடுவோமோ என்ற பயத்தில் தீரனை முற்றிலுமாக கவனிக்க செய்தார் ஆத்விக் பற்றிய யோசனை அவருக்கு இல்லை ஆத்விக் முழுக்க முழுக்க தேவாவின் வளர்ப்பாகிப் போனான் …”எப்படி தேவாவிற்கு வளரும் காலத்தில் விவரம் தெரியும் நேரத்தில் அரசி அம்மாவாக இருந்தாரோ அதேபோல் ஆத்விக்கின் விவரம் தெரியும் வயதில் முழுக்க முழுக்க தேவாவின் வளர்ப்பாகியிருந்தான்” அதனால் அவனுக்கு தனது தாய் தந்தையை விட தேவா ஒரு படி மேலாக ஆத்விக் வைத்திருந்தான்..தேவா எது சொன்னாலும் சரி தேவா சொல்வது தான் செய்வான் தேவா தான் அவனது ஆதியும் அந்தமும் ஆக இருந்தான் தேவாவும் ஆத்விக் தான் தனது உலகம்   மாறி இருந்தான் இருவரும் இன்னொருவர் இல்லாமல் இல்லை என்பது போல் வாழ ஆரம்பித்து இருந்தார்கள்…தீரனை முற்றிலுமாக ஒரு அளவிற்கு உடல் அளவில் அவரை தேற்றி  விட்டு அரசி திரும்பி பார்க்கும் போது ஆத்விக் முழுமையாக தேவாவின் தம்பியாக இருந்தான் அரசி என்னதான் நல்ல விஷயங்களை சொன்னாலும் அமைதியாக கேட்டுக் கொள்பவன்…தேவாவை  ஏதாவது சொன்னால் தன் தாய் என்றும் பார்க்காமல் சண்டைக்கு வந்து விடுவான் முதலில் ஆரம்பத்தில் இதைப் பார்த்து மனதிற்குள் எண்ணி சந்தோஷப்பட்டவர் அதன் பிறகு தேவாவின் மீது இருக்கும் கோபத்தில் ஆத்விக்யிடம் சண்டை விட ஆரம்பித்தார்..அரிசி ஆத்விக்கை அடிக்க கை ஓங்கினார் தேவா குறுக்கே வந்து சித்தி எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள் என் மீது கை வையுங்கள் அவன் மீது கை வைத்தால் என்ன செய்வேன் என்று தெரியாது என்று சொல்லிவிட்டான்….இத்தனை வருடங்களாக தன்னை அம்மாவாக எண்ணிக் கொண்டிருந்தவன் இப்பொழுது தன்னுடைய மகனுக்காக  தன்னையே எதிர்த்து நிற்கிறான் என்று எண்ணி ஒரு நிமிடம் அமைதியாக அவனை பார்த்தார் ..நான் உங்கள் வளர்ப்பு உங்களைப் போல் தான் இருப்பேன் எனக்கு நீங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட பல மடங்கு ஆத்விக் முக்கியம் இனி என்னுடைய உலகம் அவன்தான் அவனை என்னிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் ..ஏதாவது தவறாக இருந்தால் என்னிடம் கேள்வி கேளுங்கள் இனி அவனிடம் கை ஓங்குவதையோ இல்லை இவனை திட்டுவதையோ நிறுத்தி விடுங்கள் அவன் தவறான செயல் செய்தால் அம்மா என்ற முறையில் கண்டியுங்கள் …ஆனால் அவன் என்னிடம் பேசுகிறான் என்பதற்காக அவனை கண்டிக்காதீர்கள் “நீங்கள் சொன்னது போல் நீங்கள் எப்படி என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவியோ அதேபோல் அவன் என்னுடைய தம்பி என்று எண்ணபதிலும் மாற்றமில்லை “என்று நினைக்கிறேன் …சித்தியின் மகனாக இருந்தாலும் சரி இல்லை என் அப்பாவின் மகனாக இருந்தாலும் சரி அவன் என்னுடைய தம்பி தான் என்று அவரை முறைத்து பார்த்துவிட்டு ஆதுவையும் அழைத்துக் கொண்டு நகர்ந்தான் அரசி மனதிற்குள் சிரித்துக் கொண்டார்…” நான் இல்லாமல் இவன் எங்கு இருந்து வந்தான் என்ன்று எண்ணி சிரித்தார் ஆனால் தேவாவின் மீது அவருக்கு வேருப்பு ஒவ்வொரு நாளும் கூடி கொண்டிருந்தது தன்னுடைய மகனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டான் என்று எண்ணினார்…அவர் எவ்வளவோ அதுவே மனசை மாற்ற  பேசினார் ஆனால் ஆத்விக் முற்றிலுமாக தேவா சொன்னது போல பேச செய்தான் என்னால் எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவா அண்ணானை  விட்டு வர முடியாது என்று விட்டான்..தூக்கம் கூட அவனுடனே என்று ஆகி போனது தீரன் ஒரு அளவிற்கு முன்னேறி இருந்ததால்  வீடு ஒன்று அவர்களுக்கு பெரிய அளவிற்கு கட்ட செய்தார் மூன்று அறைகள் கொண்ட வீடு மேலேயும் வீடு கட்டி இருந்தார் ஆனாலும் தேவா ஆத்விக் இருவரும் ஒரே அறையில் தங்கிக் கொண்டார்கள்…குழந்தைகள் வளர ஆரம்பித்ததால் அரசியும் தீரனும் ஒரே அறையில் தங்கிக் கொண்டார்கள் தீரனுக்கு என்ன தோன்றியதோ அரசியின் அருகில் வந்து அவருடன் இணக்கமாக இருக்க நினைத்தார் அரசியும் அதை உணர்ந்து இருந்தார்…ஆனால் திரும்பவும் இன்னொரு அடி பெற தனது மனதிற்கு வலிமை இல்லை என்று எண்ணி அஞ்சினார் கொஞ்ச நாட்கள் தீரனிடம் இருந்து கொஞ்ச ஒதுங்க ஆரம்பித்தார் ஆனால் அதையும் மீறி அவரது மனதில் தீரனின் ஏக்க முகம் வந்து சென்றது…அதன் பிறகு இருவரும் கணவன் மனைவியாக தங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள் முழுக்க முழுக்க ஆத்விக் தேவாவின் தம்பியாகவும் தீரன் தனது இரண்டு மகன்களையும் இரு கண்களாகவும் பார்க்க ஆரம்பித்தார் ஆனால் அரசி தனது கணவனையும் தனது மகனையும் தன்னிடம் இருந்து தேவா பிரித்து விடுவது போல் மனதிற்குள் எண்ணினார்…  அதுவே அவர்  தேவாவை வெறுக்க காரணமாக அமைந்தது  தேவா தனது சித்தி தன்னை முழுமையாக புரிந்து கொண்டு தன்னை முன்பு போல் மகனாக ஏற்றுக் கொள்ளும் நாள் வரும் என்ற நம்பிக்கையில் அமைதியாக காத்துக் கொண்டிருந்தான் …இப்படியே வருடங்கள் ஓடியது தீரன் அரசி இருவரும் கணவன் மனைவியாக ஒத்துமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருவருக்கும் முட்டிக் கொள்ளும் விஷயம் என்றால் அது தேவாவை பற்றியதாக தான் இருக்கும் இப்படியே சென்று கொண்டிருந்த பொழுது அரசிக்கு உடல்நிலை ரொம்பவே மோசமாக இருந்தது …ஒரு கட்டத்தில் ஜுரம் வந்து அவர் ரொம்ப முடியாமல் இருந்தார் அந்த நேரத்தில் தேவா சமைக்க செய்தான் அப்பொழுது இருந்து தினமும் ஒரு கட்டத்தில் ரொம்ப நாட்களாக தேவா சமைப்பதால் தீரன் தான் சமைக்கிறேன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்…உங்களுக்கு வயதாகி விட்டது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னான் அதன் பிறகு ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் அரசி கொஞ்சம் தேறி வந்தார் அப்பொழுது அவர் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் அதிகமாக இந்த வேலையும் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிருந்தால் தானே வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்வதாக சொன்னான்  தேவா..தீரன் ஆள் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னதற்கு தேவா ஒன்றும் வேண்டாம் நான் என்னுடைய தம்பி அப்பா சித்திக்காக தானே  செய்கிறேன் என்று அனைத்து வேலைகளையும் எடுத்து போட்டு செய்ய ஆரம்பித்தான்…இப்படியே ஒரு வருட காலம் ஓடிய பிறகு “தேவாவின் மீது இருக்கும் கோபத்தால்  அரசி தனக்கு உடல்நிலை நன்றாக தேரிய பிறகும் தேவாவை அனைத்து வேலைகளையும் செய்யட்டும் என்று எண்ணினார்” …அவருக்கு ஏதோ ஒரு மூலையில் தான் தவறு செய்கிறோம் என்று தோன்றினாலும் அவன் செய்த தவறுக்கு அதுதான் தண்டனை என்பது போல் மனதிற்குள் சொல்லிக்கொண்டு அனைத்து வேலைகளையும் தேவாவின் தலையில் கட்டினார் ..எந்த அளவிற்கு ஆத்விக்கை இழுத்துப் பிடிக்க வேண்டும் என்று எண்ணினாரோ அவரே ஆத்விக்கை நாம் என்ன அழைத்தாலும் இனி வரமாட்டான் என்று எண்ணிக் கொண்டு அவனை தேவாவின் பொறுப்பில் விட்டு விட்டார்..இப்படித்தான் தேவாவின் தலையில் வீட்டு வேலைகளும் விழ செய்தது முழு பொறுப்பும் தேவா உடையதாக வந்து நின்றது தேவா கல்லூரி படிப்பு முடித்துவிட்டு நல்ல மதிப்பெண் எடுத்து ஒரு வேலையிலும் சேர செய்தான்…அவனுக்கு கல்லூரி படிக்கும் பொழுது இருந்தே காதலிக்கிறேன் என்ற பெயரில் நிறைய பெண்கள் அவனிடம் ப்ரபோஸ் செய்தார்கள் ஆனால் அவன் முற்றிலுமாக அனைத்தையும் வெறுத்தான். ஏற்கனவே தன் வீட்டில் இருக்கும் பிரச்சனையில் இருந்தே அவன் இன்னும் வெளிவரவில்லை அப்படி இருக்கும் சூழ்நிலையில் இன்னொரு பெண்ணை காதலி என்று தான் சொல்ல வேண்டுமா.காதல் மீது நம்பிக்கை இல்லை என்று கூட சொல்லலாம் காதலால் தான் தன் அப்பாவின் வாழ்வில் இரு பெண்கள் வந்தார்கள் என்றும் அதில் ஒரு பெண்ணை இழந்து நிற்கிறார் என்றும் இன்னொரு பெண்ணை அருகில் வைத்து கொண்டே எத்தனை வருடங்கள் இழுந்து நின்றார் என்றும் கண்கூட பார்த்தவனுக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை என்று கூட சொல்லலாம்…இப்படி காதல் மேல் நம்பிக்கை இல்லாதவன் பின்னாடி தான் இப்பொழுது நம் கதையின் நாயகி வருனிகா காதலிக்க சொல்லி அலைந்து கொண்டிருக்கிறாள் இப்படி காதல் மீது நம்பிக்கை இல்லாதவன் எப்படி வருவின் காதலில் விழுந்து வருவின்   காதலில் திலைப்பானா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️

3 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *