Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 13

பூவிதழில் பூத்த புன்னகையே 13

தேவா அன்று வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து வைத்துவிட்டு ஒரு மீட்டிங் செல்ல வேண்டும் என்பதால் ஆபீசுக்கு வந்திருந்தான் அவன் வந்து பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் வரு அன்று ஆபீஸ்க்கு வந்தாள் …தேவா வருவை பார்த்து முறைத்துவிட்டு டைம் கிப் அப் பண்ண தெரியாது எங்கு செல்ல வேண்டுமென்றாலும் நேரத்திற்கு வருவதில்லை உன்னால் வாய் மட்டும் நீளும் என்றான்..மீட்டிங் செல்ல வேண்டும் ஞாபகத்தில் இருக்கிறதா அதற்கு தேவையான அனைத்தும் எடுத்து வைத்து விட்டாச்சா கிளம்பலாமா என்றான் எடுத்து வைத்துவிட்டேன் எல்லாம் ரெடியாக இருக்கிறது…கொஞ்சம் இருங்கள் அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்து கொள்கிறேன்   என்று விட்டு வரு அவனைப் பார்த்து முறைத்து விட்டு இவர் சரியாக இருப்பார் என்பதற்காக சுற்றி இருப்பவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியா…என்று வாய்க்குள் முனகி கொண்டே  தங்கள் மீட்டிங்கிற்கு செல்ல வேண்டியதற்க்கு என்னென்ன பைல்கள் எடுக்க வேண்டுமோ அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அவன் அறை கதவைத் தட்டினாள் என்ன என்றான்…நான் அனைத்தும் எடுத்து வைத்து விட்டேன் சரி கிளம்பலாமா  என்றான் அவளும் கிளம்பலாம் என்றவுடன் சரி என்று விட்டு இருவரும் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு அலுவலக காரில் சென்றார்கள் …போகும் வழி எங்கும் வரு விடாமல் பேசிக்கொண்டு வந்தாள் தேவா அவள் பேச்சை கேட்டு கேட்காமல் ரோட்டில் கவனம் வைத்துக் கொண்டு தாங்கள் மீட்டிங்கில் பேச வேண்டியதை பற்றி மனதில் ஆசைப்பட்டு கொண்டே வண்டியை மீட்டிங் நடக்கும் இடத்திற்கு விட்டான்…வரு மனதிற்குள் ஜடம் ஒரு பொண்ணு பக்கத்தில் இருக்கிறது என்ற எண்ணம் கூட இல்லாமல் எப்படி வண்டி ஓட்டிட்டு போறான் பாரு என்று அவனை மனதிற்குள் கருவிக்கொண்டே வந்தாள்…வரு தேவாவை திரும்பி திரும்பி பார்ப்பாள் தேவாவும் அவளது பார்வையை உணர்ந்துவிட்டு அவளை பார்த்து லேசாக சிரித்துவிட்டு நீ எது நினைத்தாலும் நடக்காது கண்ணம்மா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான் ..அப்பொழுது அவனுடைய மனசாட்சி அவனைக் கேள்வி கேட்டது யார் என்று தெரியாத ஒரு பெண்ணிற்கு தான் நீ மனதளவில் பாசமாக கண்ணம்மா என்று கூட பேர் வைத்திருக்கிறாயா என்று அவன் மனசாட்சி அவனை காரி துப்பியது …தனது மனசாட்சியுடன் சண்டைக்கு  விட்டு அவள் என்னுடைய கண்ணம்மா தான் ஆனால் அதற்கான காலம் இதுவல்ல என்று சொல்லிக் கொள்வான் டேய் நீ தான் உன்னுடைய சித்திக்காக காலம் முழுவதும் அமைதியாக இருக்க வேண்டும் காலத்தையும் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்…உன்னை விரும்பக் கூடியவள் எதற்காக காத்திருக்க வேண்டும் என்று அவனது மனசாட்சி கேள்வி கேட்கும் என்னை இவள் உண்மையாக விரும்பினால் எனக்காக காத்துக் கொண்டிருப்பாள் என்று மனதிற்குள் சொல்லிக் கொள்வான் …இருவரும் மீட்டிங்  நடக்கும் இடத்திற்கு சென்று மீட்டிங்கையும் மதியம் வரை நல்ல முறையில் முடித்துவிட்டு மதிய உணவு அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது வருவிற்கு புரை ஏறியது …..அருகில் இருந்த தேவா தண்ணீர் எடுத்துக் கொடுத்து அவள் தலையில் தட்டு வதற்கு முன்பே இந்த பக்கம் மீட்டிங்கிற்க்கு வந்து வேறொரு அலுவலகத்தை சேர்ந்தவன் வருவின் தலையில் தட்டி விட்டு தண்ணீர் கொடுத்தான்….வரு தண்ணீர் குடித்துவிட்டு புறை அடங்கியவுடன் தேவாவை திரும்பிப் பார்த்தாள் தேவா வருவை முறைத்துக் கொண்டு இருந்தான் வரு  தான் இவன்  எதற்கு இப்பொழுது தன்னை முறைக்கிறான் என்று மனதிற்குள் என்னை விட்டு தன் தலையை தட்டியவனை நிமிர்ந்து பார்த்தாள்…அவன் வருவின் நண்பன் தனது நண்பன் தன் தலையில் தட்டுவதை பார்த்து தான் இவர் தன்னை இப்போது பார்த்து முறைத்து இருக்க   வேண்டும் இவன் என்னுடைய நண்பன் என்பதை நான் இவருக்கு சொல்லவில்லையே என்று மனதிற்குள் எண்ணி விட்டு பல்லை காண்பித்து விட்டு சாரி பாஸ் என்றாள்…நான் என்ன கொள்ள கூட்டத்து  தலைவனா என்னை பாஸ் என்கிறாய் என்றான் இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று மனதிற்குள் எண்ணி விட்டு இவன் என்னுடைய நண்பன் இவன் பெயர் அருண் என்றாள்…அவன் உன் நண்பனாக இருந்தால் எனக்கு என்ன என்று விட்டு அந்த அருணை மேலிருந்து கீழாக எடை போட்டான்  சார் நான் நல்லவன் தான் சார் நாங்க ரெண்டு பேருமே ஸ்கூல்ல இருந்து ஃப்ரெண்ட்ஸ் என்றான் …தேவா இருவரையும் முறைத்து விட்டு அமைதியாக சாப்பிட செய்தான் அந்த மனுஷனுக்கு ஏதோ இப்போதுதான் என் மேல அக்கறை வந்து தலையில் தட்டி தண்ணி கொடுக்க வந்தார் அதையும் கெடுத்து விட்டாயே பாவி என்று தனது நண்பனின் தலையில் லேசாக வரும் கொட்டினாள் …எனக்கு என்னடி தெரியும் நீ மீட்டிங் வருகிறாய் என்று தானே சொன்னாய் நீ காதலிக்கும் தேவாவுடன் வருகிறேன் என்று என்னிடம் சொல்லவில்லையே என்றான் ….டேய் பாவி இருந்ததையும் கொடுத்து விட்டு என்னை கொல்லாதே என்று விட்டு அவனுடன் கொஞ்ச நேரம் அமைதியாக பேசிக்கொண்டு இருந்தாள் அதன் பிறகு அடுத்த மீட்டிங் ஆரம்பித்தவுடன் முழு மூச்சாக வரு,தேவா இருவரும் அதில் கவனத்தை செலுத்தினார்கள்…தங்களுடைய கம்பெனி பற்றிய விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்கள் இப்படியே அன்றைய  பொழுது முழுவதும் அங்கேயே முடித்துவிட்டு அவர்களது கம்பெனி நோக்கிச் செல்வதற்கு வெளியில் வந்தார்கள்..அப்பொழுது நான் வரு நீ என்னுடன்  வருகிறாயா  என்று கேட்டான் அருண் வரு பேச ஆரம்பிப்பதற்கு முன்பே தேவா ஹலோ மிஸ்டர் இப்பொழுது அவள் உங்களுடைய தோழி இல்லை எங்கள் கம்பெனியின் ஒரு எம்பிளாய் …நாங்கள் கம்பெனி விஷயமாக பேசுவதற்கு வந்தோம் அதை நினைவில் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று விட்டு வருவின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அவன் அவர்கள் வந்த கார் நிற்கும் இடத்திற்கு சென்றான் ..வரு மனதிற்குள் சிரித்துக் கொண்டே அருணிடம் கட்ட விரலை காண்பித்தாள் வரு தான் அவ்வாறு சொல்ல சொல்லி அவனிடம் சொல்லி இருந்தாள் அருண் அப்போது கூட இத்தனை வருடம் உன்னிடம் சிக்காதவரா டி இப்போது சிக்க போகிறார் என்று கேட்டதற்கு அதெல்லாம் சிக்குவார் …ஏற்கனவே சிக்கிவிட்டார் வீம்பில் அமைதியாக இருக்கிறார் என்று சொல்லி சிரித்தாள் அதை இப்பொழுது அருண் மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டே நினைத்தது போல் அவர் மனதில் ஏதோ ஒரு முலையில் உன்னை நினைத்து கொண்டு தான் இருக்கிறார்…அதனால் தான் உன்னை இப்படி தன்னுடைய இழுத்துக் கொண்டு செல்கிறார் இப்போது அவர் கம்பெனி விஷயமாக என்று எண்ணி உண்ணியா அழைத்துக் கொண்டு செல்லவில்லை …உன்னை என்னிடம் அனுப்ப கூடாது என்பதற்காக உன்னை அழைத்துக் கொண்டு செல்கிறார் என்று மனசுக்குள் எண்ணி சிரித்தான்உன்னுடைய காதல் ஜெயித்தால் எனக்கும் சந்தோஷம் தான் என்று மானசிகமாக நினைத்து சிரித்து விட்டு அவனது கம்பெனியை நோக்கி கிளம்பிவிட்டான்..போகும் வழி இங்கு  வரு தேவாவை திட்டிக் கொண்டு வந்தாள் எனது நண்பனுடன் போயிருந்தால் கூட சந்தோஷமாக இருந்திருக்கும் பேசிக்கொண்டே வந்து இருப்பான்…எனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்திருப்பான்  என்று சொல்லி கொண்டே வந்தாள் தேவாவிற்கு எரிச்சலாக இருந்தது வண்டியில் ஏறியதில் இருந்து இவள் என்னவென்றால் தனது நண்பனின் புராணத்தையே படி கொண்டு இருக்கிறாள் என்று  அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான் ..அவளை திரும்பி அவ்வப்போது பார்த்து  கொண்டே வண்டி ஓட்டினான் கடைசியாக அவள் சொன்ன வார்த்தையை மனதில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் வண்டியை நிறுத்தினான்…வரு என்ன என்று கேட்டதற்கு தேவா வண்டியை நிறுத்திவிட்டு அவளை கீழே இறங்க சொன்னான் அவள் இறங்காமல் இருந்தவுடன்  அவளை தர தரவென இழுத்துக் கொண்டு வந்தான் எங்கு என்று சொல்லி இருந்தால் நானே வந்து இருப்பேன்…எனக்கு வர தெரியும் என்றாள் அமைதியாக வா என்று விட்டு ஒரு இடத்தில் சென்று அமர்ந்தான் வரு உங்களுக்கு என்ன ஃப்ளேவர் வேண்டும் என்று கேட்டாள் உனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள் என் காசில் எனக்கு வாங்கிக் கொள்ளத் தெரியும் என்று விட்டு அவளைப் பார்த்து முறைத்தான் ..நான் உனக்கு வாங்கித் தரவில்லை நீ உன் சொந்த காசில் உனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக்கொள் என்றான் எந்த ஃபீளவர் வேண்டும் என்று கேட்டது ஒரு குத்தமா என்று எண்ணி  மனதிற்குள்  சிரித்தாள் ..நான் உங்களை மாதிரி இல்லை உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் நானே வாங்கி தருகிறேன் என்றாள் நீ ஒன்றும் எனக்கு வாங்கி தர வேண்டியது இல்லை எனக்கு என்ன வேண்டுமோ நான் வாங்கிக் கொள்வேன் என்று விட்டு தனக்கு ஒரு வெண்ணிலா என்றான்..இன்னும் சிறு பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று சொல்லி சிரித்தாள் இருந்தால் இருந்துவிட்டு போகிறேன் உனக்கு என்ன வாங்கணுமோ வாங்கிக்கொள் என்றான் அதன் பிறகு அவளுக்கு தேவையானதை அவள் வாங்கி சாப்பிட்டு விட்டு இருவருக்கும் பில் கட்டும் இடத்திற்கு வந்தார்கள்…அப்போது தேவா இருவருக்கும் சேர்த்தே பில் கட்டினான் அப்பொழுது வரு வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் என்னை தர சொன்னீர்கள் என்றாள் அமைதியாக வா  நேரமாகிறது நாம் இருவரும் ஒரே கம்பெனி செல்ல வேண்டும் அதன் பிறகு நீ வீட்டிற்கு செல்ல வேண்டாமா என்றான் …வருவும் அதன் பிறகு நேரம் ஆகியதால் எதுவும் பேசாமல் அமைதியாக காருக்கு சென்றாள் தேவா பில் கட்டிவிட்டு காருக்குச் சென்று காரை ஒட்டிக்கொண்டு அவனது அலுவலகம் முன்பு நிறுத்தினான் பிறகு இருவரும் சேர்ந்து அலுவலகத்திற்கு சென்று எம்டி இடம் ஒப்படைத்துவிட்டு அங்கு நடந்ததையும் சொல்லிவிட்டு இருவரும் கீழே அவர்கள் வண்டி நிற்கும் இடத்திற்கு வந்தார்கள்…தேவா அவனது வண்டியை எடுத்தவுடன் வரு கிளம்பாமல் அவளது போனை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருப்பதை பார்த்தான் அவள் ரொம்ப நேரமாக அவளுடைய போனையும் டைமையும் பார்ப்பதை பார்த்துவிட்டு அவளது அருகில் வந்து என்ன என்று கேட்டான் …அவனை லேசாக முறைத்துவிட்டு எல்லாம் உங்களால்  தான் இப்பொழுதே மணி 7:30 கடந்துவிட்டது என்றால் ஏன் இந்த நேரத்தில் நீ இதற்கு முன்பு சென்றதில்லையா என்றான் நீ அவ்வளவு பயந்தவளா ? என்று நக்கல் தோணியில் கேட்டான்…அவள்  அவனை முறைத்து விட்டு நான் பயந்தவள் என்று சொல்லவில்லை என்று விட்டு அமைதியாக இருந்தாள் அப்புறம் என்ன என்றான் கிளம்பாமல் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய் அதுவும் நேரத்தையும் போனையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்றான்..ஒன்றும் இல்லை என்று அவனைப் பார்த்து வாய் கோணத்து காண்பித்து விட்டு தனது போனை பார்த்தால் ரொம்ப நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறாயே  என்ன என்று சொன்னால் கொஞ்சம் பரவாயில்லை என்றான் ஒன்றுமில்லை உங்களுக்கு என்ன வந்தது என்று சொன்னால்..அவள் அவ்வாறு சொன்னவுடன் அவளை விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவன் அவளை தனியே விட்டு செல்வதற்கு யோசித்து விட்டு உன்னை தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஏன் போனில் சார்ஜ் இல்லையா யாராவது வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறாயா என்றான்…ஒன்றும் இல்லை என்னுடைய வண்டி காலையில் நான் வரும் பொழுது பஞ்சர் ஆகிவிட்டது அதனால் தான் என்றாள் அதற்கு எதற்கு நின்று கொண்டிருக்கிறாய் ஒரு ஆட்டோவோ இல்லை கால் டாக்ஸியோ புக் பண்ணி வீட்டிற்கு செல்லி  வேண்டியது தானே என்றான் ..வரு மனதில் அவனை திட்டி விட்டு கடுவன் பூனை என்று மனதில் அவனை திட்டி விட்டு அது எங்களுக்கு தெரியாத பார் என்றாள் வெளியே அப்புறம் என்ன என்றான் ஒன்றும் இல்லை நான் என்னுடைய நண்பனை வர சொல்லி இருக்கிறேன் அவன் வருவான் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்றாள்..வரு நண்பன் என்றவுடன் அவனுக்கு முதலில் நினைவில் வந்தது அருண் தான் வீடு எங்கே இருக்கிறது என்றான் அதை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன பண்ண போகிறீர்கள் என்றாள்..உன்னை இப்படியே இந்த நேரத்தில் விட்டு விட்டு செல்ல மனமில்லை உன்னை உன் வீட்டில் விடுவதற்கு தான் என்றான் நான் என் நண்பனை வர சொல்லிவிட்டேன் என்று சொன்னால்  அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் அவனை வர வேண்டாம் என்று சொல்லிவிடு என்றான்…அவனை முறைத்தாள்  அவன் என்ன என்றான்  ஒன்றுமில்லை என்றவுடன் சரி நேரம் ஆகிறது ஏறு என்றான் வருவும் சரி என்று விட்டு தேவாவின் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மனதில் உன்னுடன் வருவதற்கு என்னென்ன தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது எண்ணினாள் …தேவாவின் வண்டியில் ஏறியவுடன் அருணுக்கு மெசேஜ் செய்து விட்டாள் என்னுடைய செல்லம் என்னுடைய ஆபீஸ் பார்க்கில் அனாமுத்தாக நின்று கொண்டு இருக்கிறது வந்து பத்திரமாக எடுத்துக் கொண்டு வீட்டில் விட்டு விடு டா என்று  அனுப்பி இருந்தாள்..அதை பார்த்துவிட்டு அருண் மானசீகமாக  தன் தலையில் கொட்டிக் கொண்டான் இவள் காதலில் ஜெயிப்பதற்கு என்னென்ன வேலை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது என்று தட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டே அவளது அலுவலகத்தில் இருக்கும் அவளது வண்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் தெருமுனையில்  போய் நின்றான் …தேவா அவளது வீட்டு அட்ரஸ் கேட்டு விட்டு அவளை வீட்டில் இறக்கி விட்டு கிளம்ப வேண்டும் அப்பொழுது வரு வீட்டிற்குள் வந்து விட்டு செல் என்று அழைத்ததற்கு இல்லை நேரமாகிறது என்று அனைவரும் சொல்லிவிட்டு வண்டியை உயிர்ப்பித்தான்…ஒரு இரண்டு நிமிடம் வீட்டுக்குள் வந்து விட்டு சென்றாள் உங்களது குடியா முழுகிவிடும் இல்லை உங்களுக்காக யாராவது காத்துக் கொண்டிருக்கிறார்களா என்று கேட்டாள் அவளிடம் அதன் பிறகு ஆதுவை  பற்றி பேச விருப்பம் இல்லாமல் அதைப்பற்றி பேச்சு உனக்கு தேவையில்லை…நீ வீட்டிற்கு பத்திரமாக வந்து விட்டாயா அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு இதை வைத்து மனதில் ஏதாவது தவறாக எண்ணி விடாதே நீ இல்லை இந்த இடத்தில் வேறு ஏதாவது பெண் இருந்தால் கூட இந்த உதவியை செய்திருப்பேன் என்று விட்டு  கொஞ்ச தூரம் சென்றான்…அப்போது வரு இப்படித்தான் எங்கள் தனியாக இருக்கும் பெண்களின் மீது பரிதாபப்பட்டு வீட்டு வரை கொண்டு வந்து விட்டிருப்பீர்களோ ரொம்ப சந்தோஷம் என்றாள் தேவா நின்று அவளை முறைத்துவிட்டு லூசு உன்னை எப்போதும் திருத்த முடியாது என்று லேசாக முனங்கி விட்டு வேகமாக வண்டியை உயர்பித்து விட்டு  அவனது வீடு நோக்கி சென்றான்..அங்கு தேவா வீட்டுக்குள் செல்லும்போது ஆது அவனை முறைத்துக் கொண்டு நின்றான் தேவா இன்று என்ன பிரச்சனையோ என்று நினைத்துக் கொண்டே தேவா வீட்டிற்குள் வந்தான் ..அது ஏன் தேவாவை முறைத்துக் கொண்டிருக்கிறான் வரு மனதில் எண்ணியது போல் தேவாவிற்கு தன் காதலை உணர வைப்பாளா ?அவன் அவள் காதலை உணர்வானா? என்பதை நாம் வரும் பதிவுகளை பார்க்கலாம். அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️

3 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *