Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 14

பூவிதழில் பூத்த புன்னகையே 14

தேவா வருவை அவளது வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வரும் பொழுது தன்னுடைய தம்பி ஆது தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “இன்று என்ன பிரச்சனையோ தெரியவில்லையே” என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் சென்றான்…என்னடா ஆது என்று கேட்டுக் கொண்டே அவனது தலையை வருடி விட்டு கொண்டே கேட்டான் அண்ணா தினமும் எப்போ வருவீங்க இன்னைக்கு என்ன டைம் ஆகுது என்று கேட்டான் டேய் நான் தான் மீட்டிங் போயிருந்தேனே சொல்லி இருந்தேன் தானே இன்று வருவதற்கு லேட் ஆகும் என்று என்றான்…சரி மீட்டிங் போக போறேன் என்று சொன்னீர்கள் தினமும் வரும் நேரத்தை விட இன்று எவ்வளவு நேரம் ஆகிறது பாருங்கள் என்றான் இரவு ஒன்பதரை கடந்திருப்பதை பார்த்துவிட்டு இல்ல ஆது என்று விட்டு அமைதியாக இருந்தான்.அப்பொழுது “அரசி டேய் எங்களுக்கெல்லாம் பசிக்காதா” என்று கத்தினார் தேவா வேறு எதுவும் பேசாமல் தனது தோள் பையை அங்கே கழட்டி வைத்து விட்டு கிச்சனுக்குள் சென்று அனைவருக்கும் தோசை வார்த்து தக்காளி சட்னியும் பொட்டுக்கடலை சட்னியும் அரைத்தான்…ஆது தனது தாயை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றான் அம்மா “இன்று ஒருநாள் அண்ணன் வேலை விட்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது இருந்தும் உங்களால் சமைக்க முடியவில்லை தானே” அடிக்கடி சொல்கிறீர்கள் நானும் அப்பாவும் அண்ணன் பக்கம் சேர்ந்து விட்டோம் என்று எனக்கு ஒன்று புரியவில்லை ..அப்பா உங்களுடைய கணவர் தானே நான் உங்களுடைய மகன் தானே அண்ணனை தானே உங்களுக்கு பிடிக்கவில்லை நம் மூவருக்கும் மட்டும் கூட நீங்கள் சமைத்திருக்கலாமே அண்ணன் அவருக்கு மட்டும் கூட வந்து சமைத்திருப்பார் என்று சத்தம் போட்டான் …டேய் ஆது அமைதியாக இரு என்றான் தேவா ஆமாம் இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை உன்னை திட்டிக் கொண்டே ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள் நீ என்னையும் அப்பாவையும் அடக்கி கொண்டே இரு அப்பொழுதும் உன்மேல் தான் தவறு சொல்வார்கள் என்று சொல்லிவிட்டு அமைதியாக படிக்க உட்கருந்து விட்டான் …அரசி தன் மகனை முறைத்து பார்த்துவிட்டு சமையலறைக்குள் இருக்கும் தேவாவையும் முறைத்து பார்த்துவிட்டு அமைதியாக ஹாலில் உட்கார்ந்தார் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவருக்கு தோசையும் இரண்டு வகையான சட்னி எடுத்துக் கொண்டு வந்து வைத்தான் தேவா…அரசி ஆதுவை  சாப்பிட அழைத்தார் அதற்கு அவன் நான் என்னுடைய அண்ணனுடன் சாப்பிட்டுக் கொள்கிறேன் நீங்கள் சாப்பிடுங்கள் இல்லை உங்களுக்கு துணைக்கு ஆள் வேண்டுமென்றால் உங்களது கணவரை கூப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றான்..இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் தீரன் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருந்தார் ஆனால் அவர் கேட்டு தினமும் ஒரு சண்டை இழுத்து வைத்துக் கொண்டு இருக்க விரும்பவில்லை அது அரசியின் உடல் நிலைக்கும் சரியில்லை …தங்கள் வீட்டு சந்தோஷத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விடும் தினமும் ஒரு பிரச்சனை இழுத்து நிம்மதியையும் சந்தோசத்தையும்  குறைத்துக் கொள்ள வேண்டாம் என்பதால்   அமைதியாகிவிட்டார் ..ஆனால் அமைதியாக இருக்க முடியாமல் மனம் தாங்காமல்  சாப்பிட உட்கார்ந்தவுடன்  அரசியிடம் ஆது  கேட்டது போல தான் கேட்க செய்தார் நம் மூவருக்கும் மட்டும் கூட சமைத்திருக்கலாம் அப்படி நீ சமைக்கவில்லை என்றால் கூட நான் செய்திருப்பேன் என்றார் …நீங்களும் இப்பொழுது தான்  வந்தீர்கள் என்றார் அரசி சித்தியின் தட்டில் தோசை போட வந்தவன் அப்பா எங்கு சென்றிருந்தீர்கள் இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டான் அரிசி தேவாவை முறைத்தார் ..தீரன் ஒரு முக்கியமான வேலையாக சென்று இருந்தேன் தேவா என்றார் அப்படி என்ன முக்கியமான வேலை என்றான் தீரன் சொல்வதற்கு சிறிது யோசித்தார் அப்பொழுது அரசி தான் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இல்லாமல் எல்லாம் உனக்காக தான் சென்று வருகிறார் என்றார்…எனக்காகவா என்ன என்று கேட்டான் தேவா “வேலைக்காரனா இருக்க இல்ல நீ உனக்கு ஒரு வேலைக்காரியை தேடி கண்டுபிடிச்சுட்டு வர போயிட்டு வந்தாரு” என்றார் அரசி அடுத்த நொடி தீரன் , ஆது இருவரும் வேகமாக கத்த செய்தார்கள் போதும் நீங்கள் என்னுடைய அண்ணனை இந்த அளவிற்கு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்…என் அண்ணனுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது நீங்கள் பெண் பார்க்கவில்லை என்பதால் அப்பா பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் இதில் நீங்கள் அப்பாவை குற்றச்சாட்டுவதையோ இல்லை அண்ணனை தவறாக பேசுவதையோ நிறுத்தி விடுங்கள் அவ்வளவுதான் சொல்வேன் என்று விட்டு ஆது தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு தேவா ஆது இருக்கும் அறைக்குச் சென்றுவிட்டான்..தீரன் அடிபட்ட பார்வை அரசியை பார்த்துவிட்டு போதும் அரசி செய்த தவறு அனைத்தும் நான் ஆனால் பழி முழுவதும் தேவா மீது போட்டுக் கொண்டிருக்கிறாய்  சரி “இத்தனை வருடங்களில் உன் மனது மாறிவிடாதா என்று அவனும் நானும் காத்துக் கொண்டிருக்கிறோம்”..ஆனால் நீ மேலும் மேலும் அவன் மேல் வெறுப்பையும் வன்மத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாய் சரி என்று அமைதியாக விட்டால் கூட இப்பொழுது நீ அவனை என்ன வார்த்தை பேசுகிறாய் உனக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காகத்தான் அவன் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தான் …அதற்காக அவனை வேலைக்காரன் என்று சொல்லி விடுவாயா ?அவனை குற்றச்சாட்டுவது மட்டுமல்லாமல் யார் என்றே தெரியாத ஒரு பெண்ணை வேலைக்காரி என்று சொல்கிறாய் இதெல்லாம் நாயாமா “நாளை பின்ன இந்த வீட்டிற்கென்று ஒரு மருமகள் வந்த பிறகு நீ தேவாவையோ இல்ல அந்த பெண்ணையோ இப்படி பேசுவது சரி இல்லை”…”அந்த பெண்ணின் முன்னாடி தனது கணவனை பேசினால் எந்த பெண்ணும் தாங்கிக் கொள்ள மாட்டாள்” அப்பொழுது நான் என்றார் அதையே தான் சொல்கிறேன் உனக்கு கிடைத்த வலியை இன்னொரு பெண்ணுக்கு கொடுக்க நினைக்கிறாயா? “இவன் மேல் இருக்கும் கோபத்தில் உன்னுள் இருக்கும் நற்குணங்களை இழந்து கொண்டிருக்கிறாய் “என்பதை மறந்து விடாதே..உனக்கு இவன் மேலும் எங்கள் மீதும் தானே கோபம் எங்கள் மீது காட்டு அதற்காக தவறாக பேசாதே என்று விட்டு சாப்பிடாமல் கூட எழுந்து கொண்டார் தேவா தான் தனது தந்தையின் கையை பிடித்து  அப்பா இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள் மாத்திரை போட வேண்டும் என்றான்..டேய் விடுடா அவள் எது பேசினாலும் நீ எங்கள் இருவரையும் தான் அவன் சொல்வது போல் அதட்டி கொண்டிருக்கிறாய் நீ ஆரம்பத்திலேயே உனது சித்தியிடம் எங்களிடம் அதட்டுவது போல் அதட்டி இருந்தால் அவள் கொஞ்சம் கேட்டு இருப்பாளே என்னவோ…ஆனால் நீ கொடுத்த இடம் அவள் இப்பொழுது இந்த அளவிற்கு வந்து நிற்கிறாள் என்று விட்டு தனது கண்ணீரை துடைத்து விட்டு சென்று விட்டார் அரசியும் சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்தார் சித்தி ப்ளீஸ் நீங்களாவது சாப்பிடுங்கள் என்றான் ..என்னுடைய கணவரும் என்னுடைய மகனும் சாப்பிடாமல் நான் மட்டும் சாப்பிடுவேன் என்று எண்ணிணாயா இப்பொழுது நடந்த பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் நீ மட்டும்தான் அதை மறந்து விடாதே உனக்கு அவர் பெண் பார்ப்பதை உன்னுடைய அப்பா என்ற முறையில் இதுவரை நான் தடுக்கவில்லை..ஏன் பார்க்கிறீர்கள் என்றும் கேட்கவில்லை சரியா பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை பார்க்கும் அவர் பார்க்கும் பெண்ணை நான் தவறாக சொல்லி தட்டிக் கழிக்கவும் இல்லை ஆனால் என்ன என்னென்ன வார்த்தை சொல்லி இருவரும் செல்கிறார்கள் பார்த்தாயா..அப்பொழுது நீ செய்தது எதுவும் தவறாக தெரியவில்லை நான் பேசுவது மட்டும் தான் உனக்கும் உன் அப்பாவிற்கும் தம்பிக்கும் தவறாக தெரிகிறது அப்படி தானே உன் அப்பா பேசிய வார்த்தை சரி நீ நடந்து கொள்வதும் சரி அப்படித்தானே என்று விட்டு நகர்ந்தார்..அவன் தனது சித்தியின் அருகில் வந்து   ப்ளீஸ் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள் நான் அப்பாவையும் தம்பியையும் சாப்பிட வைக்கிறேன் என்னை நம்புங்கள் அவர்கள் இருவரும் சாப்பிடாமல் படுக்க மாட்டார்கள் முதலில் என்னிடம் யாரும் திருமணத்தை பற்றி பேசவில்லை..”நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று யாரிடமும் சொல்லவும் இல்லை பெண் பார்க்க சொல்லியும் சொல்லவும் இல்லை” என்றான் அப்போது தீரன் அறையில்   இருந்து வெளியில் வந்து “டேய் நான் உன்னுடைய அப்பா உனக்கு பெண் பார்ப்பதற்கும் உனக்கு திருமணம் செய்து வைப்பதற்கும் நான் யாரிடம் சம்மதம் கேட்க வேண்டும்” என்றார்..என்னிடம் கேட்க வேண்டும் எனக்கு தான் நீங்கள் பெண் பார்க்கிறீர்கள் எனக்கு தான் திருமணத்தை பற்றி பேசுகிறீர்கள் அப்போது எனக்கு சம்மதமா திருமணத்தில் என்று கேட்க வேண்டும் நான் திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட பிறகுதான் இந்த பெண் உனக்கு ஓகேவா என்பதை கேட்க வேண்டும் ..ஆனால் நீங்கள் இது எதையுமே செய்யாமல் நீங்களாக ஒரு முடிவு எடுத்துக் கொண்டு இப்பொழுது பிரச்சனையும் நீங்களாக இழுத்து விட்டீர்கள் என்றான்  தீரன் தனது கையில் இருக்கும் வாட்டர் பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ செய்யுங்கள்…நான் யார் உனது சித்திக்கு புருஷனும் இல்லை உனக்கு அப்பனும் இல்லையே என்று விட்டு நகர்ந்து விட்டார் தேவாவிற்கு அழுகையாக இருந்தது சமையல் அறைக்குள் சென்று விட்டான் அரசி அதை அமைதியாக பார்த்தார் வேறு எதுவும் பேசவில்லை அவரும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் வெறும் வயிற்றில் போட்டால் வயிறு எரிச்சல் உண்டாகும் என்பதால் சாப்பிட்ட அமர்ந்தார் ..தேவா இன்னும் ஆளுக்கு மூன்று  தோசை ஊற்றி விட்டு ஹாட் பாக்ஸில் போட்டு எடுத்துக் கொண்டு வந்து வைத்துவிட்டு தனது அப்பா தம்பி இருவரையும் அழைக்க சென்றான் இருவரும் அவனை முறைத்துக் கொண்டிருந்தார்கள் ..ஆது தான் ஏன் அண்ணா உனக்கு எதையும் செய்ய வேண்டிய உரிமை அப்பாவுக்கு இல்லையா என்றான் டேய் நான் அப்படி சொல்லவில்லையே அப்புறம் எப்படி சொன்னாய் என்று தீரன் கேட்டார் …அப்பா கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் என்னடா புரிந்து கொள்ள வேண்டும் “உன் வயதில் இருக்கும் பசங்கள் உன்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தைகள் கூட இருக்கிறது ஆனால் நீ இப்படியே தனிமரமாக இருக்க போகிறாயா?”..உன் சித்தியிடம் தினமும் ஏச்சு பேச்சு வாங்கிக் கொண்டு என்றார் அப்பா ப்ளீஸ் நான் தனிமையில் இருக்கும் போதும் சித்தி சித்தி என்று சொல்லாதீர்கள் நீங்களும் நானும் செய்த தவறு நாம் அம்மாவிடம் பேச்சு வாங்கி  கொண்டிருக்கிறோம் என்றான்..சரிடா நான் தவறு செய்தேன் ஒத்துக் கொள்கிறேன் நீ என்ன தவறு செய்தாய் அதுவும் வாழ்க்கை முழுவதும் அவள் கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பாளா தவறு செய்தால் ஒருநாள் திட்டலாம் ஒரு வாரம் திட்டலாம் வருடங்கள் முழுவதும் திட்டிக் கொண்டே இருப்பாள்…நீ கேட்டுக் கொண்டே இருப்பாயா? என்றார் பார்ப்போம் அப்பா அம்மாவின் மனது கூடிய விரைவில் சரியாகும் என்று நம்புவோம் என்றான் எனக்கு உண்மையாகவே திருமணத்தில் ஈடுபடவில்லை என்றான்.. ஆது தான் ஏன் என்றான் தேவா ஆதுவை முறைத்துவிட்டு உன் வேலையை பார் என்றான் “ஆது இதுவும் என் வேலை தான் எனக்கு அண்ணி வேண்டும் எனது அண்ணனை அன்னையாக தாங்கக்கூடிய ஒரு அண்ணி எனக்கு வேண்டும் “என்றான் ..ஏன் டா நீ என்னை பார்த்துக் கொள்ள மாட்டாயா என்றான் நான் பார்த்துக் கொள்வதற்கும் அண்ணி வந்து உன்னை தாயாக தாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது அவ்வளவுதான் சொல்லுவேன் அப்பா நீங்கள் அண்ணனுக்கு பெண் பார்க்க ஆரம்பியுங்கள் …இவர் எப்படி வேண்டாம் என்று சொல்கிறார் என்று நானும் பார்க்கிறேன் என்று விட்டு அப்பா வாருங்கள் எனக்கு பசிக்கிறது அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு மாத்திரை போட வேண்டும் சாப்பிடலாம் என்று தனது தந்தையை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து விட்டான் …தேவா போகும் இருவரையும் பாவமாக பார்த்தான் இருக்கும் பிரச்சனையை சீக்கிரம் சரி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் இதில் புதிதாக ஒரு பிரச்சினையை இழுத்து வைத்துக் கொள்ள தனக்கு விருப்பம் இல்லையே..திருமணம் என்ற எண்ணமே தனக்குள் இல்லையே நாளை “தனக்கு திருமணமாகி வரும் பெண் இந்த வீட்டில் நடக்கும் அனைத்தையும் பார்த்தால் அவளது மனது எந்த அளவிற்கு காயம் படும்” அது  ஏதோ ஒரு பெண்ணாக இருந்தாலும் அந்த பெண்ணின் மனதை காயப்படுத்துவது பாவம் தானே…இருக்கும் பாவத்தையே இன்னும் தீர்க்க முடியவில்லை இன்னும் நிறைய பாவத்தை சம்பாதிக்க நான் விரும்பவில்லை அப்பா எந்த பெண் பார்த்தாலும் அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்று எண்ணினான் அப்போது “அவனது மனசாட்சி கேள்வி கேட்டது உன்னால் வருவை தவிர வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா? “என்பதுபோல் திடுக்கிட்டு என வரு வா?..நான் அவளை அப்படி ஒரு கோணத்தில் பார்க்கவில்லை என்று எண்ணி தனது தலையை உலுக்கி விட்டு ஹாலுக்கு வந்தான் தேவா வருவை அப்படி விரும்பினாலும் அவளிடம் தன்னுடைய விருப்பத்தை சொல்லி வீட்டிலும் சொல்லி அவளை தேவா திருமணம் செய்து கொள்வானா ?அரசி அதற்கு ஒத்துக் கொள்வாரா ? என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 14”

  1. Kalidevi

    Varu va mrg pannikanum ninaikirathoda mrg panni inga vantha avan chithi summa irupala ithe mariye pesuna entha ponnuku t pidikum avan yosikirathu crt thane. Thanoda purushana yar pesinalum pidikathe oru wife ku . Ithula mrg pathi avan yosikave illa ponnu paka poirukaru ivan taknu varu va ninaikiran ena nadakum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *