Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 15

பூவிதழில் பூத்த புன்னகையே 15

தேவா அறையில் இருந்து வெளியில் வந்தான் அப்பொழுது இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அரசி மற்ற இருவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார்…

நான்   இதற்கு தானே ஆசைப்பட்டேன் ஆனால் நாம் இப்பொழுது நான் அங்கு சென்றாள் இதுவும் கேட்டு விடும் என்று மனதிற்குள் எண்ணி விட்டு  அமைதியாக அவனது அறைக்குள் செல்ல செய்தான் அப்போது ஆது தான் அண்ணா வந்து சாப்பிட்டு சொல்லுங்கள் என்றான் ..

இல்லை டா நீ சாப்பிடு என்றான் எங்கு தான் வந்தால் தனது சித்தி அப்பாவிற்கும் தம்பிக்கும் பரிமாறாமல் சென்று விடுவார்களோ என்று பயந்து அவ்வாறு  சொன்னான் டேய் இப்பொழுதே மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டது மரியாதையாக நீயும் உட்காந்து சாப்பிடு …

எதுவாக இருந்தாலும் நாளை காலை பார்த்துக் கொள்ளலாம் இல்லையென்றால் நானும் உனக்கு உதவி பண்ணுகிறேன் என்றார் அப்பா ஒன்றும் இல்லை அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வர வேண்டும் அவ்வளவுதான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டு சமையல் அறைக்குள் போக நகர்ந்தான்..

ஆது சாப்பிடுவதை விட்டுவிட்டு நீ சொன்னால் கேட்க மாட்டாய் என்று சொல்லி தனது அண்ணனை கையோடு அழைத்துக் கொண்டு வந்து உட்கார வைத்தவன் அம்மா அண்ணனுக்கு தோசை வையுங்கள் என்றான் அவர் அவனது அருகில் நகர்த்து வைத்துவிட்டு அமைதியாக நின்றார்…
தீரன் ஆது அருகில் போய் நின்று கொண்டார் தீரன், ஆது இருவரும் அரசியை முறைத்தார்கள் ஆனால் அவனுக்கு தனது தாய் தனக்கு நகர்த்தி வைத்ததை  அமைதியாக அவனாகவே எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான் …
தனக்கு தனது சித்தி எதுவும் சொல்லாமல் சாப்பாட்டை நகர்த்தி வைத்தது பெரிதாக எண்ணிக் கொண்டான் தேவா

பிறகு அரசி அனைவரும் சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை கொண்டு போய் சிங்கிள் போட்டார் தேவா அவன் சாப்பிடத் தட்டை எடுப்பதற்கு கை வைத்தான் அப்பொழுது அரசி எதுவும் பேசாமல் அவன் சாப்பிட்டு தட்டையும் எடுத்துக்கொண்டு சிங்கிள் போட்டுவிட்டு  இப்போது 11 மணி ஆகிவிட்டது ..



எதுவாக இருந்தாலும் நாளை காலை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு நகர்ந்துவிட்டார் தன்னுடைய அரிசிமா தான் இப்பொழுது பாத்திரம்  கழுவ வேண்டாம் என்பதற்காக தான் அவ்வாறு சொல்லி செல்கிறார் என்று லேசாக மனம் குளிர்ந்து எதுவும் செய்யாமல் சமையலறை லைட்டை மட்டும் ஆஃப் பண்ணிவிட்டு அவனது அறைக்கு  சென்றான்…

அதன் பிறகு தீரன் அனைத்து லைட்டையும் நிறுத்திவிட்டு வந்தார் அரசி தீரன் உள்ளே வந்த பிறகு அவருக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்தார் தீரனும் மாத்திரை  சாப்பிட்டுவிட்டு படுத்தார் அரசி “அரசியும் அருகில் படுத்தவுடன் ஏன் அரசி அவனுக்கு பரிமாறாமல் சாப்பாட்டை நகர்த்தி மட்டும் வைத்தாய்” என்றார்..

என்னுடைய வலி என்று சொன்னார் அரசி கொஞ்சம் புரிஞ்சுக்கோ நான் தானே தவறு செய்தேன் அவன் என்ன செய்தான் என்றார் அரசி இதைப் பற்றி பேச வேண்டாம் என்று விட்டு தீரனின் நெஞ்சில் இருந்து தலையணையில் தனது தலையை வைத்துக் கொண்டு படுத்தார்..


தீரனுக்கு கஷ்டமாக இருந்தது இவளை பார்க்க போய் தனது மகனை விட்டு விட அவர்  விருப்பமில்லை மகனுக்காக இவளை விட்டு தரவும் விருப்பமில்லை ஆனால் இருவரையும் ஒன்றாக இணைப்பது எப்படி என்று தெரியாமல் தவித்தார் பிறகு அவர் ஆகவே அரசியை  தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தட்டிக் கொடுத்தார்…


தீரன் தட்டிக் கொடுத்துக்கொண்டே தூங்கிவிட்டார் தீரனிமிருந்து சீரான மூச்சுக்காற்று வந்தவுடன் “அரசி எழுந்து உட்க்கார்ந்து நான் எதையும் வேண்டுமென்று செய்யவில்லை அனைத்திற்கும் காரணம் நீங்களும் உங்க மகனும் தான் உங்களை ஏற்றுக் கொள்ள முடிந்த என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை”..

இதற்கு நான் என்ன பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை “எனக்கு அவன் மேல் வன்மம்  கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே  தவிர குறையவில்லை வெறுப்பும் அதிகமாகிறதே  தவிர குறையவில்லை” இதை தடுக்க நானும் என்னென்னவோ செய்து பார்க்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை …

ஒவ்வொரு முறையும் நீங்களும் ஆதுவும் அவனுக்கு சப்போர்ட் செய்து கொண்டு வரும் பொழுதும் ஆது முற்றிலுமாக முழுவதுமாக அவனுடைய தம்பியாக இருப்பதையும் பார்க்கும் பொழுது என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை என்று விட்டு தனது கண்ணீரை துடைத்து விட்டு படுத்துக் கொண்டார் …


ஆதுவும் தூக்கம் வந்ததால் படுத்துக்கொண்டான் இங்கு அரசியை போல் அங்கு தேவாவும் எண்ணிக் கொண்டிருந்தான் நீயும் அப்பாவும் என் மேல் பாசத்தை அள்ளி கொட்டி சப்போர்ட் செய்வதால் தான் அரசிமாவிற்கு என் மேல் இன்னும் கோபம் கூடிக் கொண்டே செல்கிறது ..
நீங்கள் இருவரும் அமைதியாக இருந்திருந்தால் கூட அவர்களது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருக்கும் ஆனால் நான் எவ்வளவு சொன்னாலும் நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பால் எனக்கு சப்போர்ட் செய்கிறேன் என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் என்னை அரசிமாவிடமிருந்து தூர தான்  விளக்கி வைத்திருக்கிறீர்கள் …

ஆனால் எனக்கு உங்கள் மேல் கோபம் வரவில்லை இன்னும் பாசம் அதிகமாகிறது ஆனால் அரசி மாவின் கோபம் என் மேல் மட்டுமல்லாமல் உங்கள் மீதும் கோபம் ஏற்படுகிறது அப்பாவை ஏற்றுக் கொள்ள முடிந்த அவர்களால் என்னை ஏற்றுக் கொள்ள ஏதோ ஒன்று தடுகிறது …

அதை எப்படி சரி செய்வது என்று எனக்கும் புரியவில்லை சரி செய்ய முடியும் என்று  எண்ணியே இத்தனை வருடங்கள் ஓடியது தான் மிச்சம் இதை நான் எப்பொழுது சரி பண்ணுவேன் இதில் எனக்கு என்று ஒரு பெண் என்று எண்ணினால்..

அப்பொழுது என்னால் இந்த வீட்டில் மாற்றம் ஏற்படும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது வரும் பெண்ணால்  இன்னும் பிரச்சனை அதிகமானால் இதை எப்படி சரி கட்டுவது இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று யோசித்துக் கொண்டே இருந்தான்…
ஆது தனது மடியில் வந்து படுத்தவுடன் அவனது தலையை கோதிக் கொண்டே இவனும் கண்ணை அயர்ந்தான் மறுநாள் எப்பொழுதும் போல் விடிந்தது காலை 5 மணிக்கு எழுந்து தேவா அனைத்தையும் கடகடவென்று செய்ய ஆரம்பித்தான்..


தனது தம்பிக்கு 7 மணிக்கு பஸ் வந்துவிடும் என்பதால் அவனுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு காலை சாப்பாடு மதியம் லஞ்ச் அனைத்தும் ரெடி பண்ணி முடித்துவிட்டு கிச்சனையும் முழுவதாக ஒதுங்க வைத்து ஆது கிளம்பியுடன் அவனுக்கு தன் கையாலே ஊட்டி விட்டு நேரத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு சென்று பஸ் ஏற்றி விட்டு வந்தான்…

பிறகு அவனுக்கு நேரம் ஆகியதால் குளித்துவிட்டு அலுவலகம் நோக்கி சென்றான் அரசி எனக்கு சாப்பிட்டுக் கொள்ள தெரியும் என்று விட்டு அமைதியாகிவிட்டார் அதனால் எதுவும் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று விட்டு தீரனிடம் நீங்களே அம்மாவுடன் இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு  அலுவலகத்திற்கு கிளம்பி  விட்டான் …


வரு  இன்றும் தேவாவை விடுவதாக இல்லை நேரத்திற்கு ஒருமுறை ஏதாவது சொல்லிக் கொண்டே அவனது அறை கதவைத் தட்டிக் கொண்டு வந்து கொண்டு இருந்தால் ஒரு சில நொடி பொறுமையாக பேசுவான் ஒரு சில நேரங்களில் கத்த செய்வான்..

  உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா வந்த வேலை என்னவோ அதை பார்த்து கொண்டு செல் அதை விட்டுவிட்டு “என் பின்னாடி அலைகிறேன் என்ற பெயரில் உன்னுடைய கேரியரை கேடுத்து கொள்ளாதே” அது உனக்கும் நல்லதல்ல உன் பிற்கால வாழ்க்கைக்கு நல்லது இல்லை என்று விட்டு அவனது அறையை விட்டு அவனே சென்று விட்டான்..
என்னுடைய பிற்கால வாழ்க்கையில் நீ இருக்கும் போது நான் உன்னுடைய பின்னாடி அலைவதில் எப்படி என்னுடைய பிற்கால வாழ்க்கைக்கு நல்லதில்லை என்று சொல்கிறாய்..

உன்னை எப்படியாவது சரி காட்டுவேன் என்று மனதில் எண்ணிக்கொண்டு அவளது வேலையை பார்க்க சென்றுவிட்டாள் அப்படியே நாட்கள் உருண்டோடியது ஒரு நாள் தேவா அவளை அழைத்து  நாளை இருக்கும் மீட்டிங்க்கு என்னென்ன பைல் எடுத்துக் கொண்டு வரவேண்டும் எப்படி பிரிப்பேர் ஆக வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருந்தான் …


“அவன் சொல்லும் பொழுது அவன் சொல்லும் அழகை பார்த்து ரசித்து கொண்டிருந்தாளே  தவிர வரு அவன் சொன்னதை முழுவதாக காதில் வாங்கவில்லை அதை பார்த்த தேவா   இவளை திருத்தவே முடியாது என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு அவன் தன் கடமையை செய்ய ஆரம்பித்தான் “…


அன்று இரவு தேவா தோசை வார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வரு இடமிருந்து ஃபோன் வந்து இருந்தது போன் உணவு மேசையின் மீது இருந்த உடன் அரசி ஒருமுறை யாருடைய போன் அன்று எட்டிப் பார்த்தார் அது தேவா உடையது என்று பார்த்தவுடன் தெரிந்ததால்  அமைதியாக இருந்தார்…

“அரசியின் போட்டோவை தான் முன்பக்கத்தில் வைத்திருந்தான் இதற்கு ஒன்றும் குறையில்லை” என்று விட்டு அமைதியாகிவிட்டார் திரும்பவும் அடித்தவுடன் ஆது என்று கத்தினார் ஆது வந்து என்னமா என்றான் ..

இது ரொம்ப நேரமாக போன் அடித்துக் கொண்டிருக்கிறது என்றார்  என்னை கூப்பிடுவதற்கு பதில் அண்ணனிடம் கொடுத்திருகலாம் இல்லையா  அவரை  கூப்பிடு இருக்கலாம் என்று சொல்லி கொண்டு இருந்தான் ..
ஒரு நிமிடம் வந்து என்ன என்று கேட்பதால் உன்னுடைய படிப்பு கெட்டி விடாதே என்றார் அதன் பிறகு ஆது அண்ணா போன் என்றான் அவனும் அங்கிருந்து யாருடா என்று கேட்டதற்கு எதுவோ வரு என்று வருகிறது என்றான் “வரு என்றவுடன் போனை ஸ்பீக்கரில் போடு என்று விட்டு தனது அப்பாவிற்க்கும் சித்திக்கும் சப்பாத்தி செய்ய  சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டு இருந்தான் …


தனது தம்பிக்கு தான் தோசை வார்த்துக் கொண்டிருந்தான் தினமும் தோசை சாப்பிடுவது தனது தாய் தந்தைக்கு சரியில்லை என்பதால் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தான் அதனால் உணவு மேசையின்  போது வந்து உட்கார்ந்து கொண்டு வருவிடம் பேச ஆரம்பித்தான் தம்பி ஆதுவிடம் போனை ஸ்பீக்கரில் போட சொல்லிவிட்டு பிசைந்து கொண்டு இருந்த மாவுடன் உணவு மேசை மீது உட்கார்ந்தான்…




வரு பற்றி தெரிந்து இருந்தும் தேவா ஸ்பீக்கரில் போட சொன்னது அவனது தவறு அதுவும் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் என்பதையும்  யோசிக்க மறந்து விட்டான் போல அலுவலகத்திலேயே அனைவரும் இல்லாத நேரங்களில் அவள் என்னென்ன சேட்டைகள் செய்வாள் என்று தெரிந்திருந்தும் வீட்டில் தான் இருக்கும்பொழுது தன்னுடைய தனிப்பட்ட மொபைலுக்கு அழைக்கிறாள் என்றாள்…

அவள் தன்னிடம் எப்படி எல்லாம் விளையாடுவாள் என்பதை அறிந்தும் மறதியில் ஸ்பீக்கரில் போட சொல்லி விட்டான் இன்று அவனது  கதி அதோ கதிதான் ஆது போனை ஸ்பீக்கரில் போட்ட அடுத்த நொடி வரு அந்த பக்கம் என்ன டார்லிங் என்ன பண்ணிட்டு இருக்க என்றாள்…
எடுத்த எடுப்பில் அவள் அவ்வாறு கேட்டவுடன் ஆது தனது அண்ணனை குறுகுறுவென பார்த்தான் அரசிக்கு  சிரிப்பு வந்துவிட்டது சிரித்து விட்டார் இருவரின் முகத்தையும் பாவமாக பார்த்தான் தேவா இந்த மாதிரி கூப்பிடக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் டி என்றான்  …


“ஆது சுவாரசியமாக தனது அண்ணன் ஒரு பெண்ணை வாடி போடி என்று அழைக்கிறார் மறுபக்கத்தில் இருப்பவர்களும் தனது அண்ணனை செல்லமாக கூப்பிடுகிறார்கள் இருவருக்கும் அப்படி என்னதான் உறவு என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அமைதியாக அந்த பெண் பேசுவதையும் தனது அண்ணன் பேசுவதையும் உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருந்தான்”..



அரசி யாருடா இவனிடம் இப்படி சிக்கிக் கொண்டு விளையாடுவது என்று எண்ணி அமைதியாக இருந்தார் தீரன் இப்பொழுது ஒரு கடை வைத்துக் கொண்டிருக்கிறார் அந்த கடையை வேறு ஒரு பையன் பார்த்துக் கொள்ளுமாறு தேவா பேசி வைத்திருக்கிறான்  இவரால் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்க முடியாது என்பதால் காலையில் இரண்டு மணி நேரமும் மாலை இரண்டு மணி நேரமும் இருந்து விட்டு வருவார் ..

காலை 10 மணி போல் போனால் மதியம் 12 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார்  12 மணிக்கு மேல் வீட்டில் ரெஸ்ட் எடுத்துவிட்டு மாலை 3 மணிக்கு தான் அவர் கடைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்  அதன்படியே தீரனும் கேட்டு அமைதியாகிவிட்டார் ..


இப்பொழுது அந்த கணக்கு வழக்கை பார்த்துக்கொண்டு அவரது அறையில் இருந்ததால் தேவா  போனில் பேசிக் கொண்டிருப்பதை அவர் கேட்கவில்லை அடுத்து வரு பேசியது தான் தேவாவை சங்கடத்தில் ஆழ்த்தியது ஐ லவ் யூ டார்லிங் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க என்றாள்…

“ஆது கையில் இருந்து தேவா போனை பிடுங்கி ஸ்பீக்கரை ஆப் பண்ண வேண்டும் என்று எண்ணி அவனிடம் புடுங்க வேண்டும் என்று மாவு கையோடு எழுந்தான் ஆனால் ஆது போனே உயர்த்தி பிடித்து ஆட்டம் காட்டிவிட்டு தனது தாயிடம் தூக்கி எறிந்தான்” ..


அவரும் இவள் என்ன தான் பேசுகிறாள் என்று கேட்கலாம் என்று எண்ணி  அந்த போனை அப்படியே வைத்துக் கொண்டிருந்தார் வரு போன் செய்து தேவாவை படாத பாடு படுத்து கொண்டிருக்கிறாள் அதை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் கேட்கிறார்கள் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்..


அரசியும் ஆதுவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தாள் வரு என்ன மனநிலையில் இருப்பாள்  தேவா  நாளை அலுவலகம் சென்று வருவை என்ன படாத பாடு படுத்தப் போகிறானோ என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் கதையின் நகர்வு எப்படி உள்ளது என்பதையும் சொல்லுங்கள் மிக்க நன்றி





அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️


4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *