Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 16

பூவிதழில் பூத்த புன்னகையே 16

தேவா ஆதுவின் கையில் இருக்கும் போனை மாவு கையோடு பிடுங்க பார்த்தான் அப்பொழுது ஆது தரமாட்டேன் என்று தனது கையை உயர்த்தி விட்டு தேவா எட்டிப் பிடிக்க வரவும் தனது தாயின் கையில் திணித்தான் …அரசிக்கும் போனை தேவாவின் கையில் கொடுக்க விருப்பமில்லை யார் என்று தெரியவில்லை இவனிடம் இப்படி விளையாடி கொண்டிருக்கிறாள் என்ற ஒரு ஆவலில் தேவாவை முறைத்து பார்த்தார்..அப்பொழுது தான் அவன் அமைதியாக இருப்பான் என்பதால் பேசுமாறு கண்ணாலே சொன்னார் தேவா நெளிந்து கொண்டே இவள வச்சிகிட்டு என்ன பண்றதுனே தெரியல போன்ல என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுற பாரு பக்கத்துல யாராவது இருப்பாங்களா என்று கூட யோசிக்கமாட்டால் இப்போ என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பல்லை கடித்துக் கொண்டு முனங்கினான்…ஆது சிரித்து கொண்டே இருந்தவுடன் அவன் பக்கத்தில் இருந்ததால் காலில் லேசாக மிதித்து விட்டு  இப்படி போனை தூக்கி  கொடுப்பியா என்றான் ஆது லேசாக சிரித்து விட்டான் …அரிசி ஆதுவை முறைத்தார் இப்போ இந்த நேரத்துல உனக்கு என்னடி எதுக்கு போன் பண்ண என்று கத்தினான் நாளைக்கு ஆபீஸ் வந்து உன்னை வைத்துக் கொள்கிறேன் டி அப்ப இருக்கு என்றான் நீ எது கொடுத்தாலும் எனக்கு ஓகே தான் என்று சிரித்தாள் ..சரி சரி ரொம்ப கோபப்படாதே இன்னைக்கு கோட்டோ முடிஞ்சிடுச்சு இதுவே போதும்னு நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு நான் எதுக்கு போன் பண்ணேன் என்று கேட்கவே இல்லை பாரு என்றாள் எதுக்கு போன் பண்ணியோ அந்த விஷயத்தை சொல்லுவாங்கன்னு பேரு லூசுத்தனமா பேசிட்டு இருக்க மாட்டாங்க சரியா  என்றான்…அதற்கும் வரு சிரித்துக் கொண்டே நா உன் பின்னாடியே லூசு மாதிரி திரிவதால்  உனக்கு நான் பேசுவது லூசுத்தனமாக தெரிகிறது என்று சொல்லி சிரித்தாள் அரசி தன் தலையில் அடித்துக் கொண்டார்  எதுக்குடி போன் பண்ண அதை சொல்லுடி என்றான் …  நாளைக்கு மீட்டிங் இருக்கு என்னென்ன பைல் வேண்டும் என்னென்ன கொட்டேஷன் ரெடி பண்ணனும் என்று கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் நேரம் ஆகிட்டே இருக்கு பாரு நீ சீக்கிரம் சொன்னா உன்னோட வருங்காலம் சீக்கிரம் தூங்கிடுவேன் பாரு …காலையில் நான் எப்போ எப்படி எழுந்திரிப்பேன் என்று உனக்கே தெரியும் தானே என்ன பத்தி என்றாள் தேவா தலையில் அடித்துக் கொண்டான் நான் ஆபீஸ்ல சொல்லிட்டு இருக்கும்போது கவனம்  எங்க இருந்துச்சு என்றான் …”உனக்கு தெரியாது பாரு செல்லம் ஆல்வேஸ் என்னோட கவனம் முழுவதும்  உன் மேல தான் என்றாள் “மேடம் அதற்கு தான் ஆபீஸ்க்கு வரீங்களா என்றான்  சரி சரி கத்துவதை நிறுத்திவிட்டு அப்படியே வச்சுக்கலாம் மச்சி  உன்னை பார்ப்பதற்கு தானே நான் ஆபீஸ் வருகிறேன் என்றாள் ….சரி சரி கோபப்படாத நேரத்தில் நீ சொன்னா நீ உன் வேலையை பார்க்கலாம் நேரம் ஆகுது பாரு “எனக்கும் பசிக்குது எனக்கு பசிச்சா உன் மனசு தாங்குமா “என்றாள்  அப்பொழுது ஆது ஏதோ பேசுவதற்கு வாய் எடுத்தான் அரசி ஆதுவின் காலை மிதித்தார் …ஆது அமைதியாகி விட்டான் அதன் பிறகு தேவா நாளை மீட்டிங் இருக்கு என்னென்ன எடுத்து வர வேண்டும் கொட்டேஷன் எப்படி ரெடி பண்ண வேண்டும் என்று அனைத்தையும்  சொல்லிவிட்டு போன் பண்ணா மரியாதையா எதுக்கு போன் பண்ணியோ அந்த விஷயத்தை சொல்லிட்டு வச்சிடனும் …லூசு தனமா பேசுற வேலை வெச்சுட்டனு வை இனிமே என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று சொல்லிவிட்டு தனது தாயைப் பார்த்தான் அவர் வேறு எதுவும் பேசாமல் போனை ஆப் பண்ணி விட்டு ஆதுவை  பார்த்து யாருடா இந்தப் பொண்ணு என்றார்..ஆது தேவாவை பார்த்தான் தேவா ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு என் ஆஃபீஸில் வேலை செய்யும் பெண்  அவ்வளவுதான் என்றான் கூட வேலை செய்கின்ற பெண் இப்படித்தான் பேசுவாளா? என்று ஆதுவை பார்த்து கேட்டார் அப்போதுதான் வேலை முடித்துவிட்டு பசி எடுப்பதால் நேரமாகி இருக்கும் என்பதால் வெளியே வந்தார் தீரன்…அப்பொழுது தனது மனைவி தனது மகனிடமும் முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு இப்போது ஏதாவது பிரச்சனையோ என்று எண்ணி என்ன ஆச்சு அரசி  வரும் போதே கேட்டுக் கொண்டே வந்தார் என்ன ஏன் கேக்குறீங்க “உங்க பெரிய பையனா கேளுங்க ஏதாவது பிரச்சனைனா அதுக்கு காரணம்  நான் தான் என்று முடிவு பண்ணிடுவிங்களே” நான் எதுவும் பண்ணவில்லை என்று விட்டு அங்குள்ள ஷோபாவில் சென்று உட்கார்ந்து விட்டார்…தீரன் தனது பெரிய மகனை பார்த்தார் சிறிய மகன் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு இப்பொழுது எதுவும் பிரச்சனை இல்லை என்று மனதிற்குள் எண்ணி விட்டு தேவாவை பார்த்தார் அப்பொழுது  தேவா அப்பா இருங்கப்பா உங்களுக்கு பசிக்கும் நேரம் ஆகுது சப்பாத்தி போட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று நழுவி விட்டான்…அப்பொழுது ஆது தேவாவை  பிடித்து வைத்து அப்பா என்னன்னு கேளுங்க என்றான் டேய் அவன விடு அவன் என்ன செய்தான் என்று நீயாவது சொல் என்றார் ஆது இப்போது அரை மணி நேரத்திற்கு முன்பு நடந்ததிலிருந்து ஒன்று விடாமல் அனைத்தையும் ஒப்புவித்தான் ..தேவா தனது தந்தையை பார்த்து அசௌகரியமாக உணர்ந்து கொண்டு நடந்து கொண்டிருந்தான் தீரன் தேவாவை குறுகுறுவென பார்த்துவிட்டு சரி போ எனக்கு பசிக்குது போய் சப்பாத்தி போட்டு எடுத்திட்டு  வா என்று விட்டு அனுப்பி வைத்தார் …தன் மகன் அவனது தம்பி அவனது அப்பா அம்மாவின் முன்பு இப்படி நடந்து கொண்டிருப்பதை பார்க்க அவருக்கு விருப்பமில்லை அவன் பக்கம் எதுவும் தவறு செய்திருக்க மாட்டான் என்று எண்ணி அனுப்பி வைத்தார் அவன் உள்ளே சென்ற பிறகு அரசி தான் கேட்டார் …ஏன் இதெல்லாம் ஏன் என்னன்னு கேக்க மாட்டீங்களா என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு வேணும்னா நீங்க கேளுங்க கேட்காட்டி போங்க எனக்கு என்ன வந்துச்சு என்று விட்டு அமைதியாக இருந்தார் ஆது தனது தாய் பேசுவதை அமைதியாக பார்த்தான் …இவ்வளவு நேரம் “அந்த பெண் பேசும் பொழுது அவர் கத்தவில்லை எதுவும் செய்யவில்லை அமைதியாகவும் ஆர்வமாகவும் தான் பார்க்க செய்தார் அப்போது தன் அண்ணன் சொல்வது போல் அவருக்கு தன் அண்ணன் மீது ஏதோ ஒரு முறையில் அக்கறையும் பாசமும் இருக்க தானே செய்கிறது” …இப்பொழுது தந்தையிடம் கூட ஏன் கேட்கவில்லை என்று கேட்கிறார்கள் நாம் தன் அண்ணன் சொன்னது போல் கொஞ்சம் தனது தாய்க்காக இறங்கி வந்து விட்டுக் கொடுத்திருக்கலாமோ என்று முதல்முறையாக எண்ணினான்…நான் இதைப்பற்றி தன் அப்பாவிடம் பேச வேண்டும் என்று எண்ணிவிட்டு அமைதியாக இருந்தான் அப்போது தீரன் தான் ஒரு வேலை அந்த பெண்ணை தேவா விரும்புகிறானோ என்று எண்ணினார்…அப்போது அரசி தான் “அந்த பொண்ணு தான் வாயாடி மாதிரி பேசிட்டே இருந்தா உங்க பையன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை  உங்க பையனுக்கு லவ் பண்ற அளவுக்கு திறமை இருக்கான்னு போய் பாருங்க” என்று விட்டு சாப்பாடு ரெடியா இல்லையா என்ற குரல் கொடுத்தார்…ரெடி சித்தி என்று விட்டு வேகமாக மூன்று சப்பாத்தியை போட்டு எடுத்துக் கொண்டு வந்து வைத்தான் பிறகு சமையல் அறைக்குள் புகுந்து கொண்டான் தேவா தாய் தந்தை இருவருக்கும் சப்பாத்தியும் தனக்கும் தனது தம்பிக்கும் தோசையும் வார்த்துக்கொண்டு வந்து வைத்தான். தீரன் நீயும் உட்காருடா நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்றார் அரசி எதுவும் பேசாமல் தனக்கு தேவையானதை எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிட்டார் தேவா எங்கு தனது தந்தை ஏதாவது கேட்பாரோ என்று எண்ணி கொண்டே சாப்பிட்டான்..”டேய் உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது எப்போதும் போல் நீ ப்ரீயாக இரு சாப்பிடு என்றார் அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை  அமைதியாக இருந்தவர் யார் அந்த பெண் என்றார் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நின்று விட்டான்” ..அப்பா அந்த பெண் என்னுடன் வேலை பார்க்கும் பெண் தான் நீங்களாக ஏதாவது கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள் என்று தனது தாயைப் பார்த்து சொல்லிவிட்டு எனக்கும் அந்த பெண்ணுக்கும் வேறு எந்த உறவும் இல்லை …அவள் அடிக்கடி இப்படித்தான் லூசு மாதிரி பேசுவாள் ஜாலிக்காக மற்றபடி அவளைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள் என்றான் அப்பொழுது அரசி தான் தன் கணவனை பார்த்து எந்த பெண்ணும் ஜாலிக்காக என்று சொல்லி அதுவும்  இந்த இரவு நேரத்தில் தங்கம் செல்லம் புஜ்ஜி ஐ லவ் யூ என்றெல்லாம் கொஞ்ச மாட்டார்கள் .”அடுத்தவர்கள் முன்பு கலைப்பதற்கு இரண்டு வார்த்தை பேசுவதற்கும் யாரும் அருகில் இல்லை என்று எண்ணி தனியாக தானே அழைத்து இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் இவ்வாறெல்லாம் பேச மாட்டார்கள் விருப்பமில்லை என்றால் அந்த பெண்ணிடம் விருப்பமில்லை என்று முழுமையாக சொல்லிவிட சொல்லுங்கள்” …”இன்னொரு பெண்ணின் சாபத்தையும் கோபத்தையும் வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள் என்று விட்டு நகர்ந்து விட்டார் அவருக்கு வரு பேசியது சாதாரணமாக  தெரியவில்லை” அவருக்கு அவள் ஜாலிகாக பேசி இருந்தாலும் அவளுடைய காதல் உண்மை என்பதை அவள் பேசிய வார்த்தையில் அரசி உணர்ந்திருந்தார்…அதனால்  தான் தனது கணவரிடம் அவ்வாறு சொல்லிவிட்டு சென்றார் உண்மையாகவே அவனுக்கு விருப்பமில்லை என்றால் விருப்பமில்லை என்பதையும் சொல்லிவிட வேண்டும் பிறகு அந்த பெண்ணின் மனதில் ஆசை வளர்த்துவிட்டு பிற்காலத்தில் அந்த பெண் மனது புண்படும் படியாக நடந்து கொள்வது சரியில்லை என்று உணர்ந்தார் …”தான் அனுபவித்த   வலியை இன்னொரு பெண் அனுபவிக்க கூடாது என்ற எண்ணத்தில் தான்  அவ்வாறு சொல்லிச் சென்றார் தேவாவும் அதை உணர்ந்தான்” தனது சித்திக்கு தனது அப்பா கொடுத்த வலியை தான் வருவிற்கு கொடுத்து விடக்கூடாது என்று உணர்ந்து விட்டு நாளை இவளிடம் தன் மனதில் இருப்பதை கொட்டி விட வேண்டும் என்று எண்ணினான்…பிறகு  அமைதியாக அனைத்து பாத்திரங்களையும் எடுத்து வைக்க சென்றான் ஆது மனதில் முழுவதும் தன் அண்ணன் இந்த பெண்ணை விரும்புகிறாரா இல்லையா என்பதும் அடுத்த விஷயம் தனது அண்ணன் இத்தனை நாட்களாக சொல்லி நாம் கேட்கவில்லை …தனது தாய்க்கு ஏதோ ஒரு மூலையில் தனது அண்ணன் மேல் இருக்கும் பாசத்தை முதலில் முழுவதாக வெளி கொண்டு வர வைத்து தனது அண்ணனின் வாழ்வில் வெளிச்சத்தை வர வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவன் மனதில் இருந்ததால் ஆது  தனது தாய் பேசியதையோ தனது அண்ணன் நான் இதைப் பற்றி பேசுகிறேன். என்று சொல்லிச் சென்றதையோ அவன் காதில் வாங்கவில்லை..தீரன்  தான் தனது இளைய மகன் அப்படியே உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு டேய் நேரமாகிறது பார்  போய் படி இல்லையென்றால்   தூங்க செய் விடியும் வரை இப்படியே உட்கார்ந்து கொண்டிருப்பாயா? என்றார் …”அப்பா நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றான் இந்த நேரத்திலா ? என்றார் ஆமாம் என்று விட்டு சமையல் அறையை  எட்டிப் பார்த்தான் தேவா பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு தனது தாயின்  அறையை பார்த்தான் அவர் அமைதியாக சென்று ஏதோ யோசனையில் இருப்பதையும் பார்த்துவிட்டு தனது தந்தையை அவனும் தேவா  இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்” …அவர் அவனிடம் அப்படி என்ன  முக்கியமான விஷயம் இருவரையும் எட்டிப் பார்த்துவிட்டு அழைத்துக் கொண்டு வருகிறாய் என்றார் முக்கியமான விஷயம் தான் என்று விட்டு தன் மனதில் பட்டதை அப்படியே சொல்ல செய்தான் அவருக்கும் அப்பொழுதுதான் ஒன்று புரிந்தது…நீ சொல்வதை நினைத்து பார்த்தால்  உன் அம்மா அவனை திட்டிக் கொண்டே இருக்கிறாளே உனது அண்ணனின் மனதில் தனக்கு யாரும் சப்போர்ட் செய்யவில்லை என்று எண்ணம் வந்து விடுமோ என்று எண்ணி இவ்வளவு நாள் அவளை அதட்டினேன் ஆனால் இப்பொழுதுதான் நீ சொன்ன பிறகு புரிகிறது …அவள் உன் அண்ணனை இந்த விஷயத்தில் குறை சொல்லவில்லையே இப்பொழுது கூட எங்கு அவன் மூலமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டு விடுமோ என்று தானே எண்ணுகிறாள் “அவள் தேவாவை பற்றி கவலைப்படவில்லை என்றால் எனக்கு என்ன எப்படியோ போங்கள் என்று அந்த போனை வைத்துவிட்டு கூட உன் அம்மா நகர்ந்து இருக்கலாம்” …ஆனால் அதை செய்யவில்லை சரி நானும் முடிந்த அளவிற்கு எனது கோபத்தை குறைத்துக் கொள்கிறேன் ஆனால் முழுவதாக என்பது முடியாது சுத்தமாக நாம் இருவரும் அவனுக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றால் உன் அம்மா தலையில் ஏறி உட்கருந்தாலும் உட்கார்ந்து விடுவாள் ..”எப்பொழுது உன் அம்மா நல்லமுறையில் நடந்து கொள்வாள் எப்பொழுது பேய் ஆட்டம் ஆடுவாள் என்று கூட நமக்கு தெரியாது” என்றார் கடைசியாக தீரன் பேசிய வார்த்தையை மட்டும் அரசி கேட்க செய்தார் தீரனை காணவில்லை என்று கூப்பிடுவதற்காக வந்த அரசி தீரன் இறுதியாக பேசிய வார்த்தையை கேட்டுவிட்டு அவரை முறைத்துக்கொண்டு நான் பேயாட்டம் தான் ஆடுவேன்…உங்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் கண்ணுக்கு  தெரியாது நான் கத்துவது மட்டும் தான் தெரியும் வந்து படுங்க என்று விட்டு நகர்ந்துவிட்டார் போகும்போது தனது இளைய மகன் ஆதுவையும் முறைத்துவிட்டு சென்றார் …நாம் என்ன செஞ்சாலும் இந்த அம்மா ஏன் முறைக்குது என்று மனதிற்குள் எண்ணி விட்டு உள்ள போனா அப்பாவுக்கு என்ன டோஸ் விழுமோ  தெரியல என்று சிரித்தான் அப்பொழுது தேவாவும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு  அறைக்குள் வந்தவன் என்னடா தனியா சிரிச்சிட்டு இருக்க என்றான்…ஆது தனது  அண்ணனை சீண்ட எண்ணி “யார் அண்ணா அந்த அண்ணி என்றான் எது அண்ணியா எவ அவ என்று தேவா கேட்டான் “இவ்வளவு நேரம் போன்ல பேசினார்களே என்றான் டேய் அமைதியா போய் படிக்கிற வேலையா  பாரு “அண்ணியாம் அண்ணி அவ பண்ணி டா என்றான்”…எது  பண்ணியா என்றான் யாருடா சொன்னது அந்த லிஸ்டில் லூசு மாதிரி இருக்கும் நீ லைட் ஆப் பண்ணு என்று விட்டு போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டு படுத்துக் கொண்டான் ஆது வேகமாகவே சிரிக்க  செய்தான் சின்ன பையன் என்கிட்ட இருந்து ஒதுங்கறதா நினைச்சு போர்வைக்குள் ஒளிந்து கொண்டால் அனைத்தும் சரியாகிவிடுமா என்றான்…தேவா  போர்வையை விலக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்து உனக்கு வேற வேலை இல்லை என்று விட்டு படுத்தான் “ஆது சொன்னது போல் இவள் ஆதுவிற்கு அண்ணியாக தனக்கு மனைவியாக தங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தால் நன்றாக தானே இருக்கிறது”…ஆனால் தனக்கு கொடுத்து வைக்காது என்று எண்ணிவிட்டு தன் சித்தி சொன்னதை மனதில் ஏற்றிக்கொண்டு அப்படியே கண்ணை அயர்ந்தான் தேவா நாளை அலுவலகம் சென்ற பிறகு வருவை திட்டு செய்வானா? இல்லை தனக்கு உன் மேல் எந்த விருப்பமும் இல்லை என்று மெதுவாக அவளிடம் புரிய வைப்பானா? என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …அன்புடன்❣️ தனிமையின் காதலி❣️

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *