தேவா வாசுவின் கேபினுக்கு வந்தான் வாசு புலம்பிக்கொண்டே அவனுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தான் “சாருக்கு ரொம்ப கோபமோ, கொந்தளிச்சிட்டு இருக்க மாதிரி இருக்கு” என்று அவனை சீண்டினான் தேவா…
கொன்றுவேன் என்று முறைத்துவிட்டு நீங்கதான் பெரிய ஆளு எம்டிக்கு அடுத்த பொசிஷன்ல இருக்கீங்க உங்க கிட்ட நான் விளையாட முடியுமா சார் தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடுங்க என்றான் வாசு…
தேவா சிரித்துக் கொண்டே வாசுவின் இரு பக்க தோளிலும் கையை போட்டு கொண்டு சரி விடுடா மச்சான் ஓவரா துள்ளாத என்றான் அவனது கையை வாசு உதிரி விட்டு மரியாதையா போயிடு ஆஃபீஸ் என்று கூட பார்க்க மாட்டேன் கேவலமா கெட்ட வார்த்தை பேச வேண்டி வரும் .
நீ பேசுடா மச்சான் நீ பேசி நான் கேட்காம வேற யார் கேட்க போற என்னை யார் பேச போற என்றான் சிரித்துக் கொண்டே டெய்லி திட்டு வாங்குவது பத்தல என்கிட்டே வாங்கணும் போல இருக்கு அப்படித்தானே என்றான் வாசு …
தனது சித்தியை பற்றி அவன் சொன்னவுடன் அவனை பார்த்து ஒரு நிமிடம் முறைத்தான் அரசி அம்மா பற்றி பேசி விட்டால் மட்டும் உனக்கு கோபம் வந்துவிடும் என்றான் நீ செய்தது சரியா என்றான் ..
டேய் என்றான் தேவா பின்ன என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாய் நான் எனக்காக பேசவில்லை அதையும் நினைவில் வைத்துக்கொள் என்னைப்போல் உன்னைப்போல் இங்கு ஐந்து வருடம் 10 வருடம் இதற்கு மேல் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள்..
ஆனால் பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்பவர்களுக்கும் இப்போது வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும் மாதம் ஒரே ஊதியம் அனைவருக்கும் ஒரே ஊதியம் என்றால் பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து கொண்டிருப்பவர்களின் நிலை என்ன ?என்று யோசி …
மற்ற கம்பெனிகளில் தருவது போல் அல்லாமல் நமக்கு இங்கு சம்பளம் சீக்கிரம் தருவார்கள் விடுமுறை தருகிறார்கள் என்பதற்காக மட்டும் இங்கு யாரும் வேலை செய்து கொண்டு இல்லை அதை நினைவில் வைத்துக்கொள்.
நம்பிக்கை என்ற ஒன்று இருக்கிறது அதை வைத்து மட்டுமே இங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களை நாம் ஒரு அளவிற்கு மேல் காக்க வைத்துக் கொண்டு இருக்க முடியாது அதைப்பற்றி கேட்டால் வெளியே செல்வது போல் கை காண்பிப்பாயா ? என்றான்…
சரி டா நான் செய்தது தவறு தான் விடேன் எம்டி தான் சொல்லிவிட்டார் தானே இதைப்பற்றி ஒரு வாரத்தில் ஒரு நல்ல முடிவு எடுத்துவிட்டு சொல்லுவார் நானும் அவர் யோசித்தது போல் தான் யோசித்தேன் …
நீ சொன்னது தவறு என்று நான் சொல்லவில்லை ஆனாலும் இது ஒரு கம்பெனி இல்லையே அவருக்கு இதுபோல் எட்டுக் கிளைகள் இருக்கிறது என்றால் எட்டு கிளைகளிலும் இங்கு 200 பேருக்கு மேல் என்றால் ஒவ்வொரு கிளைகளுக்கு 200 பேருக்கு மேல் என்றால் கொஞ்சம் யோசி ?..
அதில் ஒரு கிளையில் 10 பேர் என்றால் கூட அவர் மொத்தம் என்பது 100 பேருக்கு மேலாவது சம்பள உயர்வு ஏற்றி தர வேண்டிய வரும் அது அவருக்கும் கொஞ்சம் கஷ்டம் தானே கொஞ்சம் யோசிக்க வேண்டி உள்ளது தானே மற்ற கிளைகளில் உள்ளவர்களிடமும் பேச வேண்டி இருக்கு தானே ..
அதற்கு நாம் கால அவகாசம் தர வேண்டுமே என்றான் ஆனால் நீ இதைப் பற்றி என்னிடம் பேசவில்லையே எம்டி தானே கால அவகாசம் வேண்டும் என்று சொன்னார் நீ சொல்லவில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள் இருவரும் அப்பொழுது அங்கு வரு வந்து நின்றாள்..
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வரு வேறு எதுவும் பேசாமல் சார் என்றாள் வாசுவும் என்ன வரு என்றான் அண்ணா உங்களை இல்லை நான் இவரை பார்க்க வந்தேன் அவர் கிட்ட பேசணும் என்றாள் ..
தேவாவை காண்பித்து அவன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு என்னை பார்க்க வேண்டும் என்றால் என்னுடைய கேப்டனுக்கு வந்திருக்கலாமே என்று கேட்டான்…இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று வாசு எண்ணிவிட்டு அமைதியாக இருந்தான் நான் அங்கு தான் முதலில் சென்றேன் நீங்கள் இல்லை வெளியேயும் தேடிப் பார்த்தேன் எங்கும் இல்லை என்ற பிறகு தான் இங்கு வந்தேன் சரி அப்படி என்ன முக்கியமான விஷயம் என்றான் தேவா…
உங்களுக்கு இன்டர் கிராமில் ஃபோன் செய்து பார்த்தேன் எடுக்கவில்லை அதன் பிறகு தான் இங்கு வந்தேன் என்றாள் சரி விஷயம் என்ன என்று கேட்டான் கற்று தெரிந்தால் போல் மீட்டிங்கிற்க்கு தேவையான பைல் கொட்டேஷன் எல்லாம் ரெடி பண்ணி அதை உங்கள் பிளேஸில் வைத்து விட்டேன் …
அதை உங்களிடம் சொல்வதற்காக தான் வந்தேன் பிறகு என்னிடம் இருந்தால் நான் தொலைத்து விட்டேன் அங்கு வைத்து விட்டேன் என்னால் தான் விணாகி விட்டது என்று சொல்வீர்கள் அதனால் தான் உங்களிடம் கொடுத்துவிட்டு செல்லலாம் என்று வந்தேன் …
நீங்கள் அங்கு இல்லை என்பதால் இங்கு உங்களை நேரில் பார்த்து சொல்வதற்காக வந்தேன் மற்றபடி ஒன்றுமில்லை என்று விட்டு நகர்ந்தாள் வாசு தான் போகும் வருவை பார்த்துவிட்டு டேய் ஏன்டா அவளிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என்று கேட்டான்..
வேற எப்படி நடந்து கொள்ள வேண்டும் அங்கு இருக்கும் கோபத்தை என்னிடம் காட்டாதே அவளும் இரண்டு வருடங்களாக உன்னை லவ் பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாள் நீ என்ன என்றால் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறாய் ..
பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும் அதை விட்டுவிட்டு அந்த பெண்ணின் மனம் நோகும் படி முகத்திற்கு நேராகவே இப்படி எரிந்து விழுகிறாய் என்று கேட்டான் வாசு அதற்கு தேவா எனக்கு விருப்பமில்லை என்பதையும் நான் அவளிடம் சொல்லிவிட்டேன்…
அதை விட்டுவிட்டு அவள் என்னிடம் பின்னாடி அலைந்து கொண்டு இருந்தால் அதற்கு நான் பொறுப்பா என்று கேட்டான் தேவா அவ்வாறு கேட்ட அடுத்த நொடி வாசுவின் 5 விரல்களும் தேவாவின் கன்னத்தில் பதிந்திருந்தது மவனே அந்த பொண்ணு உன்ன லவ் பண்றான்னு சொல்லு …
அதன் விட்டுட்டு அலைஞ்சிட்டு இருக்கான்னு சொல்ற அந்த அளவுக்கு கேவலமாக இல்லை இன்னும் அந்த பொண்ணு உன் மேல அன்பு வச்சு இருக்கா லவ் பண்ற சரியா உனக்கு விருப்பம் இருந்தால் அந்த பெண்ணிடம் விருப்பம் இருக்கு என்று சொல் விருப்பமில்லை என்றால் விருப்பமில்லை என்பதை நேரடியாக சொல்லிவிடு…
எனக்கு விருப்பமில்லை என்பதை தான் இரண்டு வருடங்களாக நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவள் என் பின்னாடி வருவதற்கு நான் பொறுப்பல்ல என்றான் தேவா…
வாசு தேவாவிடம் எனக்கு ஒன்று புரியவில்லை மச்சான் கல்லூரி காலங்களில் இருந்து உன் பின்னாடி நிறைய பெண்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அந்தப் பெண்களிடம் நீ ஒதுக்கம் காண்பித்ததற்கும் எனக்கு விருப்பமில்லை என்று சொல்கின்றவனுக்கும் இவளிடம் நீ காண்பிக்கும் ஒதுகத்திருக்கும் வேண்டாம் என்று சொல்வதற்கும் எனக்கு வித்தியாசம் இருப்பது போல் தெரிகிறது…
உனக்கு வித்தியாசம் தெரிகிறது என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல எதையோ செய்யுங்கள் அவளுக்காக என்னை அடித்து விட்டாய் அல்ல என்றான் டேய் நீ உனக்கு விருப்பமில்லை என்பதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே அதற்கு இவ்வளவு கேவலமாக பேசுகிறாய் என்று கேட்டான்…
நானும் எத்தனை முறை சொல்வது இந்த இரு வருடங்களில் அவள் என்னுடைய கேபினுக்கு வந்து பேசும்போதெல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன் அவள் திருந்தாமல் என் பின்னாடி வந்து நின்று கொண்டிருப்பதற்கு நான் பொறுப்பல்ல சரியா?..
அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் எனக்கும் இருக்கும் பிரச்சனையில் இதை வேறு இழுத்து வைத்துக் கொண்டிருக்க முடியாது என்றான் அதற்கு ஏன் அவளைக் காரணம் சொல்கிறாய் அதைத்தான் நானும் சொல்றேன் டேய் உனக்கு உன்னுடைய பிரச்சனை உன்னுடையது அதில் எங்கிருந்து அவள் வந்தால் என்றான் வாசு…
நானும் அதை தான் சொல்கிறேன் “என்னுடைய பிரச்சனை என்னுடையது தான் எனக்கு இருக்கும் பிரச்சனையே போதும் இன்னொரு பிரச்சனை எழுத்து வைத்துக்கொள்ள நான் தயாராக இல்லை” என்று சொல்லிவிட்டு தேவா அவனது அறைக்கு செல்வதற்கு வெளியே சென்றான்…
அப்பொழுது வரு தேவா பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தாள் அவளது கண்ணீரை கீழே விழாமல் உள் இழுத்து கொண்டு நின்றாள் தேவா அவளை பார்த்து முறைத்துவிட்டு அவனது கேபினுக்கு சென்றான் தேவா வெளியே சென்ற அடுத்த நொடி வரு வாசுவின் அறைக்குள் வந்தாள்..
வாசு நண்பனை வெறுத்து பார்வை பார்த்துக் கொண்டிருந்தவன் வரு உள்ளே வருவதை அதிர்ச்சியாகி பார்த்தான் பிறகு “அவளது கண்களை உற்று நோக்கினான் அவளது கண்கள் கலங்கி இருப்பதை பார்த்துவிட்டு வரு என்றான் அவனை கையை உயர்த்தி எதுவும் பேச வேண்டும் என்பது போல் அண்ணா வேண்டாம் எனக்கு சமாதானம் என்ற பெயரில் எதையும் சொல்ல வேண்டாம்”..
” உங்களது நண்பன் பேசிய அனைத்தையும் நான் கேட்க செய்தேன் ஆனால் வேண்டும் என்று கேட்கவில்லை அதையும் உங்கள் நண்பன் சொல்வார் நான் நீங்கள் இருவரும் என்ன பேசுகிறீர்கள் என்று கேட்பதற்காக வந்தேன் என்று நான் அதற்காக வரவில்லை”…
எம்டி உங்களை வர சொன்னார் அதை சொல்வதற்காக தான் வந்தேன் என்று விட்டு நகர்ந்து விட்டாள் வாசுவிற்கு சிறிது கஷ்டமாக இருந்தது இந்த பெண் தனது உயிர் நண்பன் தேவாவின் மனைவியாக வந்தால் அவனது வாழ்க்கை சிறக்கும் என்று எண்ணினான் …
அதற்காகவே அவனும் இந்த இரண்டு வருடங்களாக தேவாவிடம் எவ்வளவு எடுத்து கூறிக் கொண்டிருக்கிறான் ஆனால் அவன் தான் கேட்ட பாடு இல்லை வாசு என்கிற வாசுதேவன் தேவா என்கிற தேவமித்ரனின் பள்ளி கால நண்பன் ….
அப்பொழுது இருந்து இப்பொழுது வரை இருவரும் நெருங்கிய நண்பர்களே வாசு சரி இந்த பிரச்சனையை பிறகு வந்து பார்க்கலாம் என்று எண்ணி விட்டு எம்டியை பார்க்க அவர் அறைக்குச் சென்றான் உள்ளே சென்று விட்டு சொல்லுங்க சார் வர சொல்லி இருந்தீர்களா என்று கேட்டான்…
எம்டி சிரித்து கொண்டே டேய் இங்கே யாரும் இல்லை நாம் இருவர் தான் இருக்கிறோம் என்றார் அப்பா நான் வேண்டும் என்று கேட்கவில்லை நான் பேசியதில் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் என்றான் வாசு நீ பேசியதில் ஒன்றும் எனக்கு தவறாக தெரியவில்லை ஆனால் எனக்கு இதற்கான முழு முடிவும் எடுப்பதற்காக கொஞ்சம் கால அவகாசம் தேவை அவ்வளவுதான்…
ஆனால் தேவா எதையோ யோசித்துக் கொண்டு இருந்திருப்பான் போல அதனால் கொஞ்சம் உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டான் என்றார்…
வாசு மனதிற்குள் அவன் மனது முழுவதும் வரு மேல் இருக்கிறது ஆனால் அவள் மேல் விருப்பமே இல்லை என்று வெளியே பொய் சொல்லிக் கொண்டிருக்கிறான் அவள் மேல் இருந்த கவனத்தில் என்னிடம் கத்திவிட்டு தான் இப்போது இவ்வாறு பேசி சொல்கிறான் என்று எண்ணி விட்டு விடுங்க ப்பா நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் என்றான் …
டேய் எப்ப தான் அவனுடைய லைஃப் சரியாகும் என்று கேட்டார் அப்பா அவனுடைய சரி ஆக்க ஒருத்தி வந்துட்டா அவனுடைய லைஃப் உடனே சரியாயிடும் என்றான் வாசு…
அவனோட லைஃப் என்று யாருடா அது அந்த படவா இதை பற்றி எல்லாம் என்கிட்ட என்ன சொல்லவே இல்ல யாருடா அந்த பொண்ணு என்று கேட்டார்…
அவனே அதை உணர்ந்தும் உணராத போது உங்களிடம் எப்படி ப்பா சொல்லுவான் என்னடா சொல்கிறாய் புரியவில்லை உணர்ந்தும் உணரவில்லையா என்றார் கொஞ்சம் பொறுங்க அவனே உங்க கிட்ட வந்து சொல்லுவான் …
“எனக்கு இந்த பெண்ணை பிடித்து இருக்கிறது என்று வந்து சொல்லுவான்” அதுக்கு கொஞ்சம் காலம் ஆகும் அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம் அவங்க லைஃப் கூடிய விரைவில் மாறும் என்றான் …
சரிடா நீ அவன் மேல ஒரு கண்ணு வச்சுக்கோ கோவத்துல உன்னை விட்டு நகர்ந்து விடப் போகிறான் இல்லை நீ அவனே விட்டுவிட போகிறாய் என்றார் வாசு சிரித்துக்கொண்டே அவனை விட்டு நான் இருப்பேனா இல்லை என்னை விட்டு அவன் இருந்து விடுவானா என்று சொல்லி சிரித்தான் ….
சரி டா நேரம் ஆகுது பார் நீ போய் உன் வேலையை பார் என்று அனுப்பி வைத்தார் வாசு தேவாவிற்கு அனைத்து இடங்களிலும் துணையாக நிற்பானா அது அவனது வாழ்க்கையாக இருந்தாலும் சரி தொழிலாக இருந்தாலும் சரி என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Nice story. Interesting next
Interesting
Nice epi