Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 19

பூவிதழில் பூத்த புன்னகையே 19

தேவா வாசுவிடம்  பேசிவிட்டு அவனது  அறைக்கு  சென்று  அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்  எவளோ ஒருத்திக்காக தன்னிடம் தனது நண்பன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் என்று  யோசித்தான்…

அப்போது அவனது மனசாட்சியே அவனிடம் கேள்வி கேட்டது “வரு உனக்கு எவளோ  ஒருத்தியா” என்று அவன் தனது மனசாட்சியை  முறைத்து விட்டு அதை புறம் தள்ளிவிட்டு சிறிது நேரம் நடந்து கொண்டிருந்தவன் பிறகு இதைப் பற்றி யோசித்தால் நம் கவனம் முழுவதும் சிதறிவிடும் என்று எண்ணிவிட்டு வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி அவனுடைய வேலைகளை பார்க்கச் செய்தான் …

அப்படியே அன்றைய பொழுதும் முடிந்தது இரவு அவன் அலுவலகம் முடிந்து இரவு வீட்டில் இரவு உணவு சமைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனுடைய  போன் உணவு மேசையின்  மீது இருந்தது ..

அரசி அங்குதான் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் அரசி நொடிக்கு ஒரு முறை தேவாவின் ஃபோனை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார் ஆது அவனது அறையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான் …

தீரன்  ஒரு கால் மணி நேரங்களுக்கு பிறகு வெளியில் வந்தவர் என்ன அரசி ரொம்ப நேரமாக இங்கே உட்கார்ந்து  ஃபோனை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் ஒன்றுமில்லை என்றார் அரசி…

அது உன்னுடைய போன் இல்லையே தேவாவுடையது என்றார் எனக்கும் தெரியும் பிறகு அவனுடைய ஃபோனில் என்னபார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தேவாவின் போன் அலறியது அதை வேகமாக எடுத்து நேற்று பேசிய பெண்ணா என்று ஆவலுடன் பார்த்தார் அரசி…

அதில் வாசு என்று❤️ சிம்பில் வந்தவுடன் அதன்பிறகு ஹாட்டின் ஒன்றுதான் குறைச்சல் என்று புலம்பி விட்டு அந்த போனை அட்டென்ட் செய்தார்  போன் அடித்தவுடன் சமையல் அறையிலிருந்து வெளியில் வந்து எட்டிப் பார்த்தான் தேவா..

அரசி கையில் தனது போன் இருப்பதை பார்த்துவிட்டு அமைதியாக இருந்தான் அவர் போன் அட்டென்ட் பண்ணி அடுத்த நொடி டேய் ஒரு வாரம் இந்த வீட்டு பக்கம் வரவில்லை என்ன நினைத்து கொண்டு  இருக்கிறாய் என்று  கேட்டார் …

அந்த பக்கம் லைனில் இருந்த வாசு  ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு  அம்மா நீங்கள் எப்படி இவனுடைய ஃபோனில் என்றான் நான் கேட்டதற்கு  முதலில் பதில் சொல் டா அதன் பிறகு எண்ணி கேள்வி கேள் என்றார் …

சும்மா தான் மா வரவில்லை முக்கியமான வேலை இருந்தது அப்படி வீட்டிற்கு வந்து விட்டு போக முடியாதா அளவிற்கு சாருக்கு அவ்ளோ முக்கியமான வேலையோ என்றார் அவன் அமைதியாக இருந்த உடன் வீட்டுக்கு வந்துட்டு போ என்று சொன்னார்…

அம்மா இந்த நேரத்தில்லா  என்றான் இப்போதண்டா என்ன வெட்டி முறிக்கிற  வீட்டுக்கு வந்துட்டு போற என்கிட்ட உன் வேலையை காட்டாதே என்று  விட்டு வைத்து விட்டார் அடுத்த பத்தாவது நிமிடத்தில் இங்கு இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார் …

வாசு என்றவுடன்  தேவா லேசாக சிரித்துக் கொண்டே சமையல் அறைக்குள் புகுந்து கொண்டான் அவர் சொல்லியது போல் அடுத்த கால் மணி நேரத்தில் வாசு தேவாவின் வீட்டில் இருந்தான் வீட்டிற்குள் வரும்போது சிரித்துக் கொண்டே வந்து அரசியின் தோளில் போட்டுவிட்டு அம்மா எப்படி இருக்கீங்க…

என்ன காணாமல் தேடுனிங்க போல அவ்ளோ பாசமா இந்த மகன் மேல என்றான்  அவர் அவனது கையை தட்டி விட்டு ஒரு வாரமா ஏன் டா வரல என்று அவனை முன் பக்கம் திருப்பி உட்கார வைத்து கேட்டார் உண்மையாகவே வேலை இருந்தது என்றான்..

சரி யாரு டா அந்த பொண்ணு என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் எந்த  பொண்ணு மா என்று இவனும்  தெரியாது போல் கேட்டான்  டேய் படவா நடிக்காதே உன்னிடம் எப்படியும் அவன் வந்து வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லி இருப்பான் உனக்கே தெரியும் யார் அந்த பெண் ஒழுங்காக சொல் என்றார் …

ஒரு நிமிடம் திரு திருவென முழித்துவிட்டு அம்மா எங்களுடன் ஆபீசில் வேலை செய்யும் பெண் அவ்வளவுதான் என்றான் அது எப்படி டா இருவரும் ஒரே போல் சொல்லி வைத்தது போல் சொல்வீர்களா ஆபீஸில் வேலை செய்யும் பெண் என்று நானும் ஓத்து கொள்கிறேன்…

வேலை விஷயமாக போன் செய்திருந்தால் அந்த விஷயத்தை மட்டும் தான் பேசி இருப்பாள் அவள் நட்பாக பழகியிருந்தால் கூட இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை அந்தப் பெண் நிதானமாக தான் பேசுகிறாள் அதேபோல் அவளது முடிவிலும் சரியாகி இருக்கிறாள்…

அவளது பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்று மட்டும் தான் நான் சொல்வேன் விருப்பம் இருந்தால் அது உங்களுடைய விருப்பம் அதில் நான் தலையிட போவதில்லை அப்படி விருப்பம் இல்லை என்றால் அந்த பெண்ணிடம் நேரடியாக உங்களுக்கு விருப்பமில்லை என்பதை சொல்லிவிடுங்கள் அவ்வளவுதான் சொல்வேன்…

ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்தாதீர்கள் என்று விட்டு அமைதியாக விட்டார் அவருக்கு எங்கு நான் நின்றது போல் இன்னொரு பெண் நின்று விடுவாளோ என்று அச்சம் தேவா இருக்கும் இடம் பார்த்தான்  வாசு தேவா தலையில் அடித்துக் கொண்டான் …

இவன் எப்படியாவது மழுப்ப செய்திருந்தால் கூட பரவாயில்லை அப்படியே அனைத்தையும் கொட்டுகிறேனே என்று எண்ணினான்  அந்த பெண் நல்ல பெண் தான் அந்த பெண் இரண்டு வருடங்களாக இவன் பின்னாடி வந்து லவ் பண்ணுகிறேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறது…

இவன் தான் வேண்டாம் என்று சொல்கிறான் என்றான்  வாசு அதைப் பற்றிய பேச்சு எனக்கு தேவையில்லாதது நான் சொன்ன விஷயம் என்னவோ அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் வேண்டுமென்றால் நீங்கள் மேற்கொண்டு என்ன செய்கிறீர்களோ அது உங்களுடைய விருப்பம் அதில் நான் தலையிட மாட்டேன்…

ஆனால் வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள் அவ்வளவுதான் சொல்வேன் என்று கேட்டு அமைதியாகிவிட்டார் அந்த பெண்ணுடைய ஃபோன் நம்பர் தா என்று கேட்டார் மா எதற்கு என்று கேட்டான் வாசு அந்த பெண்ணோட ஃபோன் நம்பர் கேட்டேன்..

உன்னால் கொடுக்க முடியுமா முடியாதா உன்னுடைய போனில் இருந்தோ அவனுடைய போனிலிருந்து என்னால் அந்த நம்பர் எடுத்துக் கொள்ள முடியும் அது அநாகரீகம் எனக்கு அதில் விருப்பமும் இல்லை இப்பொழுது உன்னால் அந்த பெண்ணுடைய ஃபோன் நம்பர் தர முடியுமா முடியாதா என்றார் …

சரி என்று விட்டு வாசு தனது போனை எடுத்து வருவின் போன் நம்பரை அரசிக்கு சொன்னான் அவரும் தனது போனை எடுத்து வருவின் நம்பரை சேவ் பண்ணிக் கொண்டார் அதன் பிறகு சமையலறையை பார்த்து சாப்பாடு ரெடியா நேரமாகிறது என்ற குரல் கொடுத்தார்…

அவர் அவ்வாறு கேட்டவுடன் வாசு அரசியை முறைதான் அரசி அதை பார்த்தும் பார்ப்பது போல் அமைதியாக இருந்தார் தேவா வேகமாக இடியாப்பம் தேங்காய் பாலும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தான்  டேய் சாப்பிடலாம் வா என்றார் அரசி …

வேண்டாம் மா நான்  வீட்டில் போய் சாப்பிடுகிறேன் என்றான் ஓவரா சீன் போடாத சாப்பிட்டு செல் டா ஏற்கனவே நேரம் ஆகி விட்டது என்றார் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வாசு அவனது வீடு நோக்கி சென்றான் அவன் பின்னாடியே வந்து தேவா அவனது கழுத்தை நெறித்து விட்டு உன்னை யாரு டா அனைத்தையும் போட்டு கொடுக்க சொன்னார்கள் என்றான்..

அம்மா என்னை கூப்பிட்டார்கள் கேட்டார்கள் சொன்னேன் என்று சொன்னான் வாசு சிரித்துக் கொண்டே அதற்கு தேவா  இருக்குடி  உனக்கு ஒரு நாளைக்கு என்று சொல்லிவிட்டு அவனை வழி அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்தான்…

அரசி தேவாவை நின்று முறைத்து விட்டு திரும்பவும் தனது கணவனை பார்த்து அதே வார்த்தையை சொல்லிவிட்டு அவர் அறைக்குள் சென்று விட்டார் தீரனுக்கும் புரிந்தது தான் அரசுக்கு செய்த தவறை தனது மகன் வேறொரு பெண்ணுக்கு செய்து விடக்கூடாது என்று எண்ணுகிறாள் என்று எண்ணினர்…

பிறகு தனது மகனை அமைதியாக பார்த்தார் அவனுக்கு புரியும் தான்  எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை என்பதால் அமைதியாக இருந்தார் அவனும் தனக்கு புரிந்தது என்பது போல் தலையாட்டியவுடன் அவர் அறைக்குச் சென்று விட்டார்…

அரசிக்கு தான் தூக்கம் வருவேனா என்று இருந்தது  புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தார் சிறிது நேரத்தில் உறங்கியும் இருந்தார் அப்படியே இரண்டு நாட்கள் சென்று இருந்தது வரு பெரிதாக தேவாவிடம் எந்த வம்பும் வளர்க்காமல் அமைதியாக இருந்தாள்..

  இரண்டாவது நாள் முடிவில் மாலை வேலையில் வரு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கும்போது அவளுக்கு ஒரு போன் கால் வந்தது இது யாருடா புதுசா அன்நவுன் நம்பரா இருக்கு யாருன்னு தெரியலையே என்று எண்ணிக் கொண்டே போனை காதுக்கு கொடுத்தாள்…

” ஹலோ வருணிக்கவா என்றது அந்த பக்கம் ஆமாம் நீங்கள் என்றாள் நான் தேவாவின் சித்தி என்றார்”..

தேவாவின்  சித்தியா எனக்கு தெரியவில்லையே எந்த தேவா என்றால் அரசி ஒரு சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு தேவ மித்ரனின் சித்தி என்றார் ..

“ஓ தேவா சாரோட அம்மாவா என்று கேட்டாள் சித்தி என்று ஒன்றுக்கு இரண்டு  முறை  அழுத்தம் சொன்னார் அரசி”  சரி சரி  நீங்கள் தேவா சாரோட சித்தி தான் ஒத்துக் கொள்கிறேன் சொல்லுங்கள் ஆண்ட்டி என்றாள்..

நான் உன்னிடம் பேச வேண்டும்  என்றார் என்னிடம் பேசுவதற்கு என்ன ஆன்ட்டி என்று  கேட்டாள் உன்னிடம் நான் தனிமையில் பேச வேண்டும் உன்னால் வர முடியுமா என்ன என்றார் வரு சில நிமிடம் அமைதிக்கு பிறகு  சரி ஆன்ட்டி வருகிறேன் எங்கு எப்போது வரவேண்டும் என்றாள் …

உங்கள் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பார்க்கிற்கு என்று சொன்னார்  என்னைக்கு பார்க்கலாம் ஆன்ட்டி என்றாள் இன்று இப்பொழுது அலுவலகம் முடிந்து விட்டது தானே வீட்டிற்கு செல்லும் போது பார்த்துவிட்டு சொல்லலாம் தானே இல்லை வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டார்…

“இவர் ஒரு முடிவோடு இன்று வந்திருக்கிறார் என்று வரு மனதிற்குள் எண்ணிக்கொண்டு சரி ஆண்ட்டி வருகிறேன் ஒரு கால் மணி நேரம் வெயிட் பண்ணுங்க “என்று விட்டு வைத்தாள்…

வரு அங்கு அலுவலகம் முடிந்து வெளியே வந்து தனது ஸ்கூட்டியை உயிர்ப்பித்து விட்டு அருகில் உள்ள பூங்காவில் வந்து வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள் நமக்கு அவர்கள் யார் என்று தெரியாதே என்று மனதிற்குள் எண்ணி விட்டு அரசிக்கு அழைக்கலாம் என்று போன் எடுத்தாள்..

அப்போது அரசி அவளது அருகில் வந்து நின்று வருணிகா என்றார் அவளுக்கு ஒரு நிமிடம் யார் என்று புரியாமல் தேவா சாரோட அம்மா வா என்று விட்டு  அமைதியாக இருந்தாள் அவர் அமைதியாக இருந்த உடன் சாரி தேவா சாரோட சித்தியா என்றாள் அவர் ஆமாம் என்றார் …

அவருக்கு வருவை எப்படி தெரிந்தது சரியாக அவளது அருகில் வந்து அவளது தோளில் கை வைத்தார் அரிசிக்கு வருவை எப்படி தெரிந்து இருந்தது என்றால் அரசி நேற்று வாசுவிடம் அவளுடைய போன் நம்பரை வாங்கியவுடன் அவளுடைய போன் நம்பரை சேவ் செய்து இருந்தார்…

அதில் வாட்ஸ் அப்பில் அவளுடைய டிபி காண்பித்தது அதில் தனது தாய் தந்தை மாணிக்கம் கலைமணி இருவருக்கும் இடையில் உட்கார்ந்து கொண்டு முகத்தில் புன் சிரிப்புடன் இருக்கும் வருணிகாவை கண்டார்.

அந்த பெண்ணின் அழகிய முகமும் அந்த பெண்ணின் அழகான குடும்பத்தையும் பார்த்து அவளது முகத்தை தொடுத்திரையின் மூலமாக வருடினார் இவள் இந்த வீட்டிற்கு சரியாக வருவாளா இவனுக்கு சரியாக இருப்பாளா என்று யோசித்தார்…

அரசி தேவாவிற்கு வரு சரியாக இருப்பாளா என்று ஏன் யோசித்தார் ?அதேபோல் இப்பொழுது எதற்காக வருவை பார்த்து பேச வேண்டும் என்று அழைத்திருக்கிறார் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

3 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 19”

  1. Avatar

    அரசி அவனுக்கு அம்மா‌ தான் கோபத்தில் தான் வீட்டல அப்படி நடந்துக்கறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *