அரசி வருவின் தோளில் கை வைத்தவுடன் வரு திரும்பி பார்த்து விட்டு இவர் யார் என்பது போல் ஒரு நிமிடம் யோசித்து விட்டு தேவாவின் அம்மாவா என்று கேட்டாள் …அவர் அவளை முறைத்தவுடன் சரி சித்தியா? என்றாள் அவர் ஆமாம் என்றார் என்னை எதற்காக பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள் என்று கேட்டாள் வரு அவர் ஒரு ஒரு நிமிடம் முழுவதாக அவளது கண்ணை உற்று பார்த்துவிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு நீ அவனுக்கு போன் பேசும்போது நான் அங்கு தான் இருந்தேன் …”ஃபோன் ஸ்பீக்கரில் இருந்தது என்றார் ஒரு சில நிமிடம் வரு அமைதியாக இருந்துவிட்டு பிறகு நிதானமாக நான் உங்கள் மகனை என்று சொல்ல வந்தவள் திருத்திக் கொண்டு உங்களது வளர்ப்பு மகனை உங்கள் கணவனின் மகனை நான் இரண்டு வருடங்களாக விரும்பி கொண்டிருக்கிறேன்” ..என்னுடைய விருப்பத்தையும் நான் அவரிடம் சொல்லி விட்டேன் ஆனால் அவர் என்னை வேண்டாம் என்று சொல்லத்தான் செய்தார் அவர் மீது எந்த தவறும் இல்லை அதையும் மீறி அவர் பின்னால் அவர் எனக்கு வேண்டும் என்று சுற்றி கொண்டிருப்பது நான் தான்..என்னை அவர் பிடிக்கவில்லை அந்த மாதிரி எண்ணம் என் மேல் அவருக்கு இல்லை என்று அவர் சொல்லியும் எனக்கு அவரை விட்டு ஒதுங்க வேண்டும் என்று தோன்றவில்லை எனக்கு ஓரளவிற்கு உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் தெரியும் முழுவதாக தெரியும் என்று சொல்ல மாட்டேன் …ஒரு சில நேரங்களில் வாசு அண்ணன் சொல்லி கேட்டு இருக்கிறேன் அதற்காக அவர் உங்களை தவறாக எந்த இடத்திலும் சொல்லவில்லை நானும் உங்களை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை இதை அனைத்தையும் தாண்டி எனக்கு இப்பொழுதும் அவர் மேல் விருப்பம் இருக்கிறது என்று விட்டு அமைதியாக அரசியின் முகத்தை பார்த்தாள் …அவர் அவளது கண்களையும் அவள் பேசும் விதத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தார் அவள் பேசி முடித்த பிறகு தனது தொண்டையை சரி செய்து கொண்டு இதில் நீ என்னை பற்றியோ என் குடும்பத்தை பற்றி தெரிந்து இருப்பதில் எனக்கு ஒன்றும் பெரிய அதிர்ச்சி ஒன்று எதுவும் இல்லை “அவன் வேண்டாம் என்று சொல்லிய பிறகும் எதற்காக நீ அவனிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறாய்”.அவன் தான் உன்னிடம் வேண்டாம் என்று உன் முகத்திற்கு நேராகவே சொல்லி விட்டான் தானே அப்புறம் ஏன் என்று கேட்டார் அவர் வாயிலிருந்து சொல்வது போல் தான் எனக்கு தெரிகிறது மனதளவில் இருந்து இல்லை அவர் என்னைப் போல் இன்னும் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருப்பார் …அவருடைய வயதிற்கு ஆனால் அத்தனை பெண்களிடமும் இவ்வாறு தான் வாய்மொழியாக மட்டும் வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் “எனக்கு அவர் மனதில் ஏதோ ஒரு முறையில் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை”…என்னுடைய காதல் அவரை அசைத்துப் பார்க்கும் என்ற நம்பிக்கை உங்களைப்போல என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய காதல் ஒரு குழந்தை பிறந்த பிறகு கூட நிறைவேறவில்லையா ? அதே போல் என்னுடைய காதலும் நிறைவேறாதா என்ற எண்ணம் என்றவுடன் அரசி அவளை அடிக்க கை ஓங்கிவிட்டு கீழே போட்டார்…என்னை போல் என்று எதற்காக சொல்கிறாய் என்றார் இப்பொழுது கூட நான் உங்களை பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் என்னை அடிக்க கை ஓங்கவில்லை நாளை உங்களுடைய நிலைமை எனக்கு வந்து விடக்கூடாது என்று நினைக்கிறீர்கள் இப்பொழுது கூட நீங்கள் என்னிடம் வந்து பேசுவதற்கு அது தான் காரணம் என்று நினைக்கிறேன்…அதை பற்றி நான் யோசிக்கவும் இல்லை ஆனால் “நீங்கள் கெட்டவர் என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன் என்றாள் உன்னை நான் எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க சொல்லி கேட்கவில்லையே என்றார் அரசி” வரு சிரித்துக் கொண்டே நான் எதற்கு உங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்கப் போகிறேன்…சரி நான் இப்பொழுது அதைப் பற்றி பேச வரவில்லை வேண்டாம் என்று சொல்லி அவன் சொல்லிய பிறகும் நீ ஏன் அவனிடம் இப்படி பேசி கொண்டு இருகிறாய் இனி மேல் அவன் பின்னாடி வராது என்று சொல்லத்தான் வந்தேன் இல்லை நான் அவன் பின்னால் சுற்றுவேன் அவனை நான் காதலிக்க வைத்தே திருவேன் என்றாள் …அதற்கு ஒன்றும் நான் பண்ண முடியாது அப்படி நீ அந்த வீட்டிற்கு தான் வருவேன் என்றால் அதன் பிறகு வரும் அனைத்தையும் நீ சமாளித்தாக வேண்டும் நீ வந்தால் இந்த வீடு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது உனக்கே தெரிந்திருக்கிறது என்று சொல்கிறாய் என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் அவ்வளவுதான் சொல்வேன்…பிறகு அந்த சிக்கலில் வந்து நீயும் சேர வேண்டுமா இல்லையா அவனை இதன் பிறகும் நேசிக்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பது உன்னுடைய விருப்பம் ஆனால் நீ அங்கு வந்தால் அதன் பிறகு நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல நீ தான் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டும் வரும்…அந்த குடும்பத்திலும் சரி அவனிடமும் சரி என்று விட்டு சரி நேரமாகிறது வீட்டிற்கு செல் வீட்டில் தேடுவார்கள் என்றார் அரசி நான் உங்களை பார்க்க வரப்போகிறேன் என்று நீங்கள் போன் செய்து சொன்னவுடனே அம்மாவிற்கு ஃபோன் செய்து நான் வருவதற்கு நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டேன் என்றாள் ..”நீ உன் வீட்டில் சொல் இல்லை சொல்லாமல் கூட போ உன்னிடம் நான் உன்னுடைய பயோடேட்டா கேட்கவில்லை” என்றார் வரு சிரித்துக் கொண்டே நீங்கள் கேட்கவில்லை என்றாலும் சொல்ல வேண்டியது “என்னுடைய கடமையாக தெரிகிறது ஏனென்றால் நான் உங்களுடைய வருங்கால மருமகளாக கூட வரலாம் அல்லவா ?” என்றாள்..சாரி சரி உங்கள் கணவனின் வருங்கால மருமகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். என்று விட்டு அவரது தாடையில் லேசாக தட்டிவிட்டு பாய் மாமியாரே என்று விட்டு தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறந்து விட்டாள் அவளது வீடு நோக்கி போகும் வருவையே அரிசி பார்த்துவிட்டு இவ்வளவு சுட்டியாக இருக்கிறாள் என்று சிரித்தார்…” இந்த சுட்டி தனமும், துடுக்குத்தனமும் மாறுவதும் மாறாமல் இருப்பதும் இறைவன் கையில் தான் இருக்கிறது “என்று விட்டு அவர் வீட்டுக்கு நடையை கட்டினார் வரும் வீட்டிற்கு போகும் வரை இப்போது இவர் எதற்காக தன்னை அழைத்தார் இவ்வாறெல்லாம் பேசி செல்கிறார் என்று எண்ணிக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள்…வீட்டிற்கு சென்றவுடன் தனது தாயின் கை பக்குவத்தில் இருந்த சூடான பக்கோடாவையும் டீயையும் சுவைத்துவிட்டு தனது தந்தை வந்தவுடன் அவருடன் அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டாள் வீட்டிற்கு சென்றவுடன் தேவாவை பற்றியோ அரசியைப் பற்றியோ அவள் யோசிக்கவில்லை …தனது தாயின் கவனப்பிலும் அவளது தந்தை வந்த பிறகு அவருடைய அரவணைப்பிலும் சந்தோஷமாக இருந்தாள் இவர்களைப் பற்றி அவர் யோசிக்கவில்லை அப்படியே மறுநாள் பொழுதும் முடிந்தது மறுநாள் எப்பொழுதும் போல் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டு இருந்தாள் …அப்பொழுது தான் அவளுக்கு அந்த யோசனை வந்தது நான் நேற்று அவர் வந்ததை பற்றி தேவாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தாள் பிறகு அவளுடைய அம்மா கலை அடியே தினமும் நேரம் கழித்தே சென்று கொண்டிருக்கிறாயே உன்னை யாருமே எந்த கேள்வியும் கேட்க மாட்டார்களா என்று கேட்டார். அப்போது மாணிக்கம் சிரித்திக்கொண்டே வந்து என் பொண்ணை யார் கேள்வி கேட்பார்கள் அவள் இங்கு நேரம் கழித்து எழுந்தால் கூட ஆபீஸில் எல்லா வேலையும் சரியான நேரத்தில் முடித்து விடுவாள் அதனால் அவளை யார் கேள்வி கேட்பார்கள் என்று சிரித்தார்…தனது தாய் தன்னை பேசியதற்கு தந்தை தனக்கு சப்போர்ட் செய்து கொண்டு வந்தவுடன் வருவும் சிரித்துக் கொண்டே அப்படி சொல்லுங்கப்பா என்று சொல்லிவிட்டு தனது தாய்க்கு பழுப்பு காண்பித்து விட்டு ஆபீஸ் நோக்கி வண்டியை விட்டாள் …ஆபீஸ் சென்றவுடன் சிறிது நேரம் தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தவள் இவரிடம் இவரது சித்தி தன்னை பார்த்ததை பற்றி சொல்ல வேண்டும் என்று யோசித்து விட்டு தேவாவிற்கு ஃபோன் செய்தாள்…அவன் ஒரு நிமிடம் போனை எடுத்துப் பார்த்துவிட்டு இவளுக்கு வேற வேலையே இல்லை வந்தவுடன் ஆரம்பித்துவிட்டாள் என்று எண்ணி விட்டு போனை கீழே வைத்து விட்டான் அடுத்த முறை போட்டவுடன் இவளை வைத்து கொண்டு என்ன செய்வது என்று மனதில் திட்டிக் கொண்டு போனை எடுத்தான். தேவா போனை எடுத்தவுடன் வரு அந்த பக்கம் என்ன சொல்ல வருகிறாள் என்று கூட காதில் வாங்காமல் அவனாக கத்த ஆரம்பித்து விட்டான் உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா அதுவும் காலையில் வந்தவுடன் வேலையை விட்டுவிட்டு எனக்கு எதற்காக போன் செய்கிறாய்?…என் பின்னாடி போன் செய்து கொண்டும் பேசிக்கொண்டும் காதலிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அலையவில்லை என்றால் உனக்கு தூக்கம் வராதா ?இதுவே ஒரு பொழப்பா உனக்கு காலையில் வந்தோமா வந்த வேலை என்னவோ அதை பார்த்தோமா என்றெல்லாம் இருக்க முடியாதா என்று கத்தினான் …ஆனால் அந்த பக்கம் வருவிடமிருந்து எந்த பேச்சும் இல்லை என்றவுடன் தேவா ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு வரு எதுவும் பேசவில்லை என்றவுடன் தான் பேசியது அளவுக்கு மீறி இருக்கிறது என்று உணர்ந்து விட்டு வரு என்றான்…அவளும் ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு உங்களிடம் பேசுவதற்கு தான் போன் செய்தேன் ஆனால் நீங்கள் நினைப்பது போல் இல்லை “நேற்று எனக்கு உங்களுடைய சித்தி போன் செய்தார்கள் என்றாள் என்ன என்னுடைய சித்தி உனக்கு போன் செய்தார்களா?” என்று கேட்டான் …ஆமாம் என்றாள் தேவாவிற்கு இவள் தன்னிடம் எந்தெந்த விஷயத்தில் விளையாடுவாள் என்று தெரியும் அதுவும் தனது சித்தி வாசுவிடம் நம்பர் வாங்கியதால் இவளுக்கு போன் செய்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே இருந்தான் ..இப்போது சித்தி இவளுக்கு எதற்கு அழைத்தார்களோ இவளிடம் என்ன பேசி விட்டார்களோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அப்பொழுது அடுத்த இடியாக “வரு அவர்கள் என்னிடம் போனில் பேசியது மட்டும் இல்லை என்னை நேரில் பார்க்கவும் செய்தார்கள் என்றாள் என்ன என்னுடைய அரசி அம்மா உன்னை நேரில் வந்து பார்த்தார்களா? “எங்கு என்று கேட்டான்…வரு தேவாவிடம் அரசி பேசிய அனைத்தையும் சொல்வாளா அதற்கு தேவா என்ன எதிர்வினை காட்டுவான் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …அன்புடன்❣️ தனிமையின் காதலி❣️மக்களே கதை எப்படி இருக்கு என்று உங்களது விமர்சனங்களையும் ஸ்டிக்கர் களையும் ரேட்டிங்கையும் தட்டி விட்டு செல்லுங்கள் நீங்கள் தரும் ஊக்கம் தான் என்னை கதையை மென்மேலும் மெழுகற்ற உதவும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி ✍️🙏
Sollu varu apo tha deva ena pana mudium yosipan arasi ethukaga varu kitta pesanum
சூப்பர்…அன்ட் வெரி நைஸ் கோயிங்.
அரசி எதுக்கு இவள் பார்க்க வந்தான்னு புரியல
இந்த தேவாக்கு வரு மேல் காதல் இருந்தும் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்
Interesting