வரு தேவாவிடம் போன் செய்து நேற்று உங்களுடைய சித்தி எனக்கு போன் செய்தார்கள் என்று சொன்னது மட்டும் இல்லாமல் அவர்கள் என்னை நேரில் வந்து பார்க்கவும் செய்தார்கள் என்றாள்…அதற்கு தேவா ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி விட்டு எதற்கு வந்தார்கள் என்ன பேசினார்கள் என்று கேட்டான் அதை என்னால் போனில் சொல்ல முடியாது நேரில் தான் சொல்ல முடியும் என்றாள்..ஏன் போனில் சொன்னால் என்ன என்றான் உங்களுக்கு அவர்கள் என்னை எதற்காக பார்க்க வந்தார்கள் என்று தெரிய வேண்டும் என்றால் நேரில் வந்து என்ன என்று கேட்டுக் கொள்ளுங்கள் எனக்கு வேலை இருக்கிறது என்று விட்டு வைத்து விட்டாள் …அவள் போன் வைத்தவுடன் தேவா போனை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு சில நிமிடங்கள் பிறகு அதற்கு எதற்கு இப்பொழுது எனக்கு ஃபோன் செய்து என்னை டென்ஷன் செய்கிறாள் மாலை பார்க்க வேண்டும் என்றால் மாலையைப் பார்த்து என்னிடம் விஷயத்தை சொல்ல வேண்டியது தானே என்று புலம்பி கொண்டே அவனது வேலைகளை பார்த்து கொண்டு இருந்தான் …மதியத்திற்கு மேல் தேவாவிற்கு ஒரு ஃபோன் வந்தது ஃபோனை எடுத்து பார்த்துவிட்டு தீரன் என்றவுடன் வேலை நேரத்தில் அப்பா அனாவசியமாக தனக்கு அழைக்க மாட்டார்களே இப்போது எதற்காக போன் செய்திருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே போன் எடுத்து அப்பா என்றான்..தீரன் அந்த பக்கம் அழுகையுடன் சித்திக்கு அடி வயிறு வலிக்கிறது என்று அழுது கொண்டு இருந்தால் அப்படியே லேசாக மயங்கி விட்டாள் அதனால் அருகில் உள்ள மருத்துவமனை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்றார் …அப்பா எங்கு என்றான் டேய் நாம் எப்போதும் அவளுக்கு காமிக்கும் மருத்துவமனை தான் என்றார் சரி வையுங்கள் உடனே வருகிறேன் என்று விட்டு வேகமாக தனது அறையை கூட ஒழுங்காக சாத்தாமல் கீழே இறங்கி வந்து தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்…தேவா மருத்துவமனை செல்லும் வேலையில் தான் எம்டிக்கு போன் செய்து தான் இன்று விடுமுறை என்பதையும் சொன்னான் அங்கு சென்றவுடன் தனது தந்தை மருத்துவமனையில் இருப்பதை பார்த்துவிட்டு வேகமாக அவரது அருகில் ஓடினான்..அப்பா எங்க அம்மா என்று கேட்டான் அவள் உள்ளே இருக்கிறாள் டா என்றார் என்ன ஆச்சுப்பா காலையில் நான் கிளம்பும்போது நன்றாக தானே இருந்தார்கள் என்றான் அப்பொழுது நன்றாகத் தான் இருந்தாள் இப்போது ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் நன்றாக தான் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தாள் ..பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவரது முகம் ஒரு மாதிரியாக மாறியது என்னாச்சு என்று கேட்டதற்கு ஒன்றும் வாய் திறக்கவில்லை சிறிது நேரத்தில் அலற ஆரம்பித்தாள் பிறகு கத்த ஆரம்பித்து விட்டாள் அப்படியே லேசாக மயங்கி விழுந்து விட்டாள் அதனால் தான் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வேகமாக மருத்துவமனை அழைத்துக் கொண்டு வந்தேன் …அதன் பிறகு தான் உனக்கு போன் பண்ணினேன் என்றார் சரி பா மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்றான் அவர்கள் இன்னும் எதுவும் சொல்லவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே டாக்டர் வெளியே வந்தார்கள்..தேவா தான் வேகமாக முன்னே வந்து டாக்டர் எங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு டாக்டர் இப்போ எப்படி இருக்காங்க என்று கேட்டான் நீங்கள் என்று கேட்டார் டாக்டர் நான் அவங்க பையன் என்ன ஆச்சு அவங்களுக்கு என்று கேட்டான்..”ஒன்றுமில்லை சொல்கிறேன் வீட்டில் வேற யாரும் லேடிஸ் இல்லையா என்று கேட்டார் டாக்டர் லேடீஸா என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு இவர் என்னுடைய அப்பா எனது அம்மாவின் கணவர் நான் அவர்கள் மகன் எங்களிடம் சொல்லலாம் அல்லவா ? என்றான்”..இல்லப்பா யாராவது பெண்கள் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்றார் தேவா ஒரு நிமிடம் யோசித்து விட்டு ஏதாவது முக்கியமான விஷயமா என்றான் யாராவது இருந்தால் பரவாயில்லை பெரிதாக ஒன்றும் பிரச்சனை இல்லை லேசான மயக்கம் தான் என்றார் ஆனால் தேவாவும் தீரனும் நம்பும்படியாக இல்லை…டாக்டர் சொன்ன காரணம் அதனால் தேவா தனது போனை எடுத்துக் கொண்டு நகர்ந்து வந்து தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெண்மணிக்கு அழைத்தான் அவர்கள் தன்னுடைய பெண் இப்போது மாசமாக இருப்பதால் அவள் தன்னை அவர்கள் வீட்டிற்கு கூப்பிட்டாள் என்பதால் அவர் அவர்களுடைய பெண் வீட்டிற்கு சென்று இருக்கிறேன் என்று சொன்னார் …அதன் பிறகு தனக்கு ஒரு அளவிற்கு தெரிந்தவர்கள் என்றால் பக்கத்தில் இருப்பவர்கள் தான் அவர்களும் அவர்கள் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளை மாசமாக இருப்பதால் இப்பொழுது நான் இங்கு பிரசவ காலத்தில் உடன் இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் வீட்டிற்குச் சென்று இருக்கிறார்கள் ..இப்பொழுது நான் எங்கு ஒரு பெண்ணுக்கு செல்வேன் என்று யோசித்துக் கொண்டிருந்தான் அப்போது அவனது மனதில் உதிர்த்தது வரு தான் ஒரு நிமிடம் யோசித்து விட்டு சரி என்று விட்டு வருவிற்கு அழைத்தான் கடைசி ரிங்கில் தான் வரும் போனை எடுத்தாள்..இப்போது “இவர் எதற்காக தனக்கு அழைக்கிறார் என்று யோசித்து கொண்டே சொல்லுங்கள் என்று கேட்டாள் தேவா சுற்றி வளைக்காமல் கொஞ்சம் அருகில் உள்ள மருத்துவமனை வருகிறாயா ?”நான் மருத்துமனை அட்ரஸ் சொல்கிறேன் என்றான்…ஏன் என்னாச்சு யாருக்கு என்ன என்றாள் கொஞ்சம் எனக்கு உன்னுடைய உதவி தேவை என்றான் வரு வேறு எதுவும் பேசாமல் அவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்றவுடன் சரி நீங்கள் அட்ரஸ் அனுப்புங்கள் நான் வருகிறேன் என்று விட்டு வைத்து விட்டாள் ..கம்பெனியில் தேவாவிற்கு அடுத்தபடியாக வாசு தான் இருப்பதால் வாசவிடம் சென்று தனக்கு விடுமுறை சொன்னாள் வரு அவன் எதற்கு என்று கேட்டதற்கு அவள் விஷயத்தை சொன்னவுடன் இவன் என்னிடம் சொல்லவில்லையே என்றான் …தெரியவில்லை அண்ணா ஆனால் அவர்தான் போன் செய்தார் யாருக்கு என்ன என்று எனக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு சரி அண்ணா நான் வருகிறேன் என்று விட்டு மருத்துவமனை நோக்கி கிளம்பி விட்டாள் ..வாசுவிற்கு முக்கியமான வேலை இருந்ததால் உடனடியாக அவனால் செல்ல முடியாதுதால் தேவாவிற்கு ஃபோன் செய்து என்ன விஷயம் என்று கேட்டுக் கொண்டான் சரிடா அம்மாவிற்கு பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று எனக்கு சொல் என்று விட்டு வாசு வைத்து விட்டான்..அவன் வேலைகளை முடித்துவிட்டு போய் அரசி அம்மாவை போய் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான் வரு வாசுவிடம் பேசி விட்டு தேவா அனுப்பிய லொகேஷனுக்கு தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் …அங்கு சென்றவுடன் தீரனும் தேவாவும் கையை பிசைந்து கொண்டு வெளியே நிற்ப்பதை பார்த்துவிட்டு தேவா அருகில் வந்து யாருக்கு என்னாச்சு என்று கேட்டாள் அதற்கு தீரன் தேவாவிடம் இந்த பெண் யாரு என்று கேட்டார் என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அப்பா…மருத்துவர் யாராவது பெண்ணிடம் தான் என்ன விஷயம் என்று சொல்வார்கள் என்பதால் நான் நம் பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு அழைத்தேன் அவர்கள் அவர்களுடைய பெண்ணுக்கு பிரசவ நேரம் என்பதால் அவர்கள் பெண் வீட்டிற்கு சென்றிருக்கிறேன் என்று சொன்னார்கள் …அதனால் எனக்கு இப்பொழுது யாரை அழைப்பது என்று தெரியவில்லை அதனால் தான் என்று சொன்னான் அவரும் வேற எதுவும் பேசாமல் சரி என்று தலையாட்டினார் பிறகு வருவை தேவா மருத்துவர் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றான் தேவா ..அவரும் நீங்கள் என்று கேட்டாள் வரு எனக்கு தெரிந்த பெண் தான் நீங்கள் என்ன விஷயம் என்று இந்த பெண்ணிடம் சொல்லுங்கள் என்று விட்டு அங்கே நின்றான் நான் தான் சொன்னேனே தேவா நீ வெளியே இரு கொஞ்ச நேரம் என்றார்.அவனும் சரி என்று விட்டு வெளியே வந்தான் அதன் பிறகு வரு தான் என்னாச்சு டாக்டர் என்று கேட்டாள் உள்ளே வெளியே பேசும்போது தேவா தனது அம்மாவிற்கு தான் மயங்கி விழுந்து விட்டார்கள் என்று மட்டும் அவன் சொல்லி இருந்ததால் என்ன ஆச்சு டாக்டர் அவங்களுக்கு என்று கேட்டால்..நீங்கள் என்ன வேண்டுமோ அவர்களுக்கு என்றார் மருத்துவர் நான் அவர்களுக்கு நெருங்கிய உறவு தான் நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டாள் நான் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி ஆக வேண்டாம் என்றார் மருத்துவர் டாக்டர் என்ன ஆச்சு அவ்ளோ முக்கியமான விஷயமா என்றாள்..முக்கியமான விஷயம் தான் மா நான் அவர்களிடம் பேசினேன் ஆனால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை வீட்டில் உள்ளவர்களிடமும் பேச வேண்டாம் என்று கெஞ்சுகிறார் அதனால் தான் யாராவது பெண்கள் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன் என்றார்…அப்படி அவர்களுக்கு என்ன பிரச்சனை ஏன் மயங்கி வந்து விட்டார்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னார்களாமே என்று அடுக்கடுக்காக வரு கேள்வி கேட்டாள் மருத்துவரும் சிரித்துக் கொண்டே ஒரு ஒரு கேள்வியாக கேளுமா சொல்கிறேன் அவர்களுக்கு கர்ப்பப்பை வீக்காக இருக்கிறது ..அது மட்டும் இல்லை “யூட்ரஸ்டு ரிமூவ் செய்ய வேண்டும் என்றார் என்ன கர்ப்பப்பை எடுக்க வேண்டுமா என்று கேட்டாள் ” நான் சொல்வது உனக்கு புரிகிறது தானே கர்ப்பப்பை தான் எடுக்க வேண்டும் அவர்களுக்கு அடி வயிறு இறங்கிக் கொண்டே வருகிறது ஏற்கனவே அவருக்கு ஏதோ பிரச்சினை இருந்திருக்கும் போல..இவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் ஆனால் இதற்கு முன்பே அவர்களுக்கு அவர்களுடைய பிரச்சனை தெரியவில்லை என்பது மட்டும் உண்மை இப்போதுதான் தெரிந்திருக்கிறது சரி நான் ஆப்ரேஷன் செய்யலாம் என்று சொன்னதற்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றார் மருத்துவர்.”வரு அதிர்ச்சியாக ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கேட்டாள் அதுதான் நானும் கேட்டேன் என்னை பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்று சொல்கிறார் என்றார் மருத்துவர் ஏன் அவர்களை பார்த்துக் கொள்ள ஆள் இல்லை இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய கணவர் இருக்கிறார்கள்” என்றாள்..கொஞ்சம் புரிந்து கொள்ளுமா அவர்களுக்கு ஒரு பெண் உதவி இப்போது தேவை கணவன் பார்த்துக் கொள்வார் என்று நானும் சொன்னேன் ஆனால் என்னுடைய கணவனுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை அவரை நான் துன்புறுத்த விரும்பவில்லை..என்னை கண்ணும் கருத்துமாக அவர் பார்த்துக் கொள்வார் தான் இருந்தாலும் என்னுடைய முழு பாரத்தையும் நான் அவர் மீது சுமக்க விரும்பவில்லை என்று சொல்கிறார் மகன்கள் இருக்கிறார்கள் என்றதற்கு என்னுடைய அனைத்து உதவிகளுக்கும் நான் என் மகன்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாதே என்கிறார்..இது அப்படிப்பட்ட விஷயமும் இல்லையே என்றார் மருத்துவர் வரு ஒரு நிமிடம் யோசித்து விட்டு சரி நீங்கள் ஆப்ரேஷன்க்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள் என்றாள் அவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை சொன்னார் அவர் சொன்னவுடன் சரி இப்போது முன் பணமாக கால்வாசி கட்டினாள் போதும் தானே என்று கேட்டாள்…அவரும் சிரித்துக் கொண்டே போதும் மா ஆனால் அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார் நான் அவர்களை ஒத்துக் கொள்ள வைக்கிறேன் நீங்கள் ஆபரேஷன் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என்றாள் வீட்டில் உள்ளவர்களிடமும் பேச வேண்டுமே என்றார்…நான் அனைவரிடமும் பேசுகிறேன் உள்ளே இருப்பவர்களிடமும் பேசுகிறேன் நீங்கள் ஆப்ரேஷனுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள் எப்போது ஆபரேஷன் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டாள் இன்று மாலை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் இல்லை என்றாலும் ஒரு வாரத்திற்குள் செய்தாக வேண்டும் …”அவர்களது உடல்நிலை அந்த அளவிற்கு தான் இருக்கிறது அதற்கு மேல் அவர்களால் வலி பொறுக்க முடியாது என்றார் வரு சரி இன்று மாலையே நீங்கள் ஆப்ரேஷன் வைத்துக் கொள்ளுங்கள் பணத்தை இன்று மாலை ஆபரேஷனுக்கு முன்பே கட்டி விடுகிறோம் ..நான் அனைவரிடமும் பேசுகிறேன் என்று விட்டு அரிசியை பார்க்க அரசி இருக்கும் அறைக்கு சென்றாள் அரசி இவளை பார்த்துவிட்டு முறைத்தார் வரு அரசிடம் ஆப்ரேஷன் செய்வதை பற்றி பேசுவாளா அதற்கு அரசி ஒத்துக் கொள்வாரா ? அதே போல் தேவா தீரன் ஆது மூவரும் அரசிக்கு ஆபரேஷன் செய்ய ஒத்துக் கொள்வார்களா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Itha vachi arasi varu va deva ku mrg pana ninaikirangala varu operation ku samathika vachidunga deva dheeran aathu ellarum operation pana solvanga
செம சூப்பர்
Nice epi