அரசி தீரனிடம் அவள் என்ன சொன்னால் என்று வருகை பற்றி கேட்டார் தீரன் லேசாக சிரித்துக் கொண்டே அந்தப் பெண் எங்கள் மூவரையும் திட்ட செய்தாள் அதுவும் என்னிடம் வந்து உன்னை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் அனுப்பிய பிறகு நான் உட்கருந்து அழுது கொண்டு இருந்தேன் …
ஆதுவும் அது கொண்டு இருந்தான் தேவா எங்கள் இருவரில் யாரை சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அப்பொழுது அந்த பெண் தான் வந்து எங்கள் மூவரையும் திட்டி விட்டாள் “அவர்கள் நன்றாக இருக்கும்போது அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளாதீர்கள் இப்பொழுது உட்கருந்து கொண்டு குடும்பத்துடன் அழுது கொண்டிருங்கள்”.
“ஏன் சார் தெரியாமல் தான் கேட்கிறேன் அவர் உங்களுடைய மனைவி தானே அவர்களை உங்களால் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாதா அவர்களது உடல் நலனில் கருத்து கொள்ள முடியாதா? அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூட அறியாமல் தான் நீங்கள் அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா “என்று கேட்டாள்…
தேவா கோவப்பட்டு என் அப்பாவை பற்றி பேசும் உரிமை உனக்கு இல்லை என்று கத்தினான் வாய மூடுங்கள் உங்களுக்கு முதலில் மகன் என்று எண்ணம் இருக்கிறது அவர்கள் உடல் நலனை கருத்தில் கொள்ளுங்கள் அவர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருந்து இருக்கிறீர்கள் …
“கர்ப்பப்பை ஒரு பெண்ணுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா அதையே எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் மனதில் எந்த அளவிற்கு போராட்டம் இருக்கும் என்று கூட அறிய மாட்டீர்கள் “உங்களுக்கெல்லாம் என்ன தெரியப்போகிறது..
உங்களை பொறுத்த அளவிற்கு ஒரு பெண் உங்களுக்கு சமைத்து வைப்பதற்கும் உங்களது துணியை துவைத்து போடுவதற்கும் உங்களது தேவைக்கு மட்டுமே அவர்களை உபயோகித்துக் கொள்கிறீர்கள் என்று கத்தினாள் அப்பொழுது ஆது கூட எங்க அம்மா இந்த வேலையெல்லாம் செய்தார்கள் என்று நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்டான்…
நீ வாயை மூடுடா சின்ன பையன் என்று அமைதியாக இருந்தேன் நீ உன் அண்ணனிடம் உன் அம்மா பேசவில்லை என்பதற்கும் உன் அம்மாவிடம் நீ பேசுவதற்கும் என்னடா சம்பந்தம் நீ அவர்களிடம் மகனாக நடந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்குமா அவர்களது வலியோ வேதனையோ உங்களில் யாரிடமாவது வெளிப்படுத்தி இருப்பார்கள்.
ஆனால்” நீங்கள் மூவருமே ஒரே பக்கமாக இருப்பதினால் அவர்கள் அவர்களுடைய சந்தோஷம் துக்கம் அனைத்தையும் மனதில் பதித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு அவர்களது உடலில் ஏற்பட்ட வலி கூட மனதின் வலியை விட சிறிதாக இருப்பதால் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறார்கள்” ..
இனிமேலாவது நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சொல்ல முடியும் இதன் பிறகும் எனக்கு என்ன என்று நீங்கள் எப்பொழுதும் போல் இருந்தால் இருக்கும் போது அவரை துச்சமாக எண்ணிவிட்டு இல்லாத போது உட்க்கார்ந்து அழுவுவதால் ஒன்றும் ஆகிவிடாது என்று விட்டு நகர்ந்துவிட்டாள்..
அதன் பிறகு தான் எங்கள் மூவருக்கும் நாங்கள் செய்த தவறு புரிந்தது என்றார் அரிசி எதுவும் பேசாமல் தீரன் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டு அமைதியாகிவிட்டார் தீரன் சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்தார் அரசியா ஆது, தேவா இருவரும் ஒன்றாக உள்ளே சென்றார்கள் தேவா அரசியின் அருகில் வந்து கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு அவரது நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு அமைதியாக நின்றான் ..
எதுவும் பேசவில்லை தான் எங்கு பேசப்போய் அவர் கத்துவரோ என்று எண்ணி பயந்தான் அதன் பிறகு ஆதுவும் அம்மா இனிமேல் நான் ஒழுங்காக நடந்து கொள்கிறேன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள் இப்படி எங்களிடம் சொல்லாமல் இருக்காதீர்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுதான் ..
அவர் எனக்கு ஒன்றும் இல்லைடா நன்றாக இருக்கிறேன் என்று அவனைத் தேற்றிவிட்டு மயக்கமாக இருந்ததால் கண் அயர்ந்து விட்டார் அதன் பிறகு வரு தான் அனைவரையும் வீட்டிற்கு செல்லுங்கள் நான் இரவு இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்றாள் தேவா இல்லை நீ உங்கள் வீட்டிற்கு செல் இதுவரை இருந்ததற்கு நன்றி என்றான்…
வரு தேவாவை முறைத்து விட்டு உங்களால் அவருக்கு என்ன தேவையோ அதை பார்க்க முடியுமா ?உங்களால் எல்லாம் அவங்களுக்கு என்ன தேவை என்பதை பார்க்க முடியாது அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதை உங்களிடம் கேட்கவும் செய்ய மாட்டார்கள் என்றாள்…
அதன் பிறகு தேவா எதுவும் பேசவில்லை இரவு ஆப்ரேஷன் முடிந்த சிறிது நேரத்தில் வாசுவும் வந்து அரசியை பார்த்துவிட்டு சென்றான் அவனுக்கு அழுகையாக இருந்தது அழுது விட்டு ஒன்றும் இல்லை மா அனைத்தும் சரியாகி விடும் என்று சொல்லிவிட்டு சென்றான்…
இப்படியே மூன்று நாட்கள் கழிந்தது பகலில் கலைமணியும் இரவில் வருவும் அரசியை பார்த்துக் கொண்டார்கள் அவர்களுக்கு காரசாரமாக தரக்கூடாது என்று மருத்துவர் சொல்லியிருந்ததால் தேவா சமைக்கிறேன் என்று சொன்னதற்கு கூட கலைமணி தினமும் சமைத்து எடுத்துக் கொண்டு வந்தார் …
தேவா இல்லை ஆன்டி என்று சொன்னது கூட ஒன்றும் பிரச்சனை இல்லைப்பா. நீ மருத்துவமனையில் இரு நான் இரவு வீட்டிற்கு சென்று விட்டு காலையில் தானே வருகிறேன் வரும்போது எடுத்துக் கொண்டு வருவேன் அதுதான் இரவில் வரு பார்த்துக் கொண்டிருக்கிறாளே என்று சொல்லி சமாளித்து விட்டார் …
இரவு வரு உள்ளேவும் தேவா வெளியேவும் இருந்து அரசியை பார்த்துக் கொண்டார்கள் பகலில் தீரனும் கலைமணியும் பார்த்துக் கொண்டார்கள் இப்படியே மூன்று நாட்கள் முடிந்து வீட்டிற்கும் அழைத்துக் கொண்டு வந்தார்கள் வீட்டில் கலைமணி பார்த்துக்கொண்டார்…
ஒரு வாரம் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார் வீட்டிற்கு வந்த பிறகு வரு அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வாள் வாசுவும் வந்து அடிக்கடி பார்த்துவிட்டு செல்வான் ஒரு பத்து பதினைந்து நாட்களில் அரசியின் உடலில் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது லேசாக யாருடைய துணையும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தார் …
அவருடைய வேலைகளை அவர்களே அவரே பார்க்க செய்தார் இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது அவருக்கு காரசாரமாக சாப்பிடக்கூடாது என்றவுடன் தேவா காரசாரம் இல்லாமல் சமைத்துக் கொண்டு இருந்தான் தனது தம்பி ஆதுவிற்கு மட்டும் எப்பொழுதும் போல் சமைத்துக் கொண்டிருந்தான் ..
ஆனால் தேவாவிற்கு அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது ஆது பள்ளி செல்வதற்கு முன்பு அவனுக்கு எப்போதும் போல் சாப்பாடு செய்வதற்கும் அதன் பிறகு அரசிக்கு காரசாரம் இல்லாமல் சமைத்து விட்டு அதன் பிறகு வேலைக்கு செல்வதற்கு கடினமாக இருந்தது அப்போது வரு அரசியை பார்க்க வந்திருந்தாள்..
தேவா ஆதுவிடம் டேய் இன்னும் இரண்டு வாய்டா என்று கெஞ்சு கொண்டிருந்தான் அவன் சாப்பிட்டு கொண்டே அண்ணா எனக்கும் அம்மாவிற்கு சமைப்பதையே கொடுங்கள் எனக்கு எதற்காக தனியாக சமைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் .
உங்களுக்கும் வேலைக்கு நேரமாகிறது உங்களுக்கும் இரண்டு வேலை என்று சொல்லிக் கொண்டு இருந்தான் அப்போது வரு சிரித்துக் கொண்டே வந்து என்ன ஆது பள்ளிக்கு கிளம்பு நேரத்தில் ஏதோ வாக்குவாதம் போல் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுக் கொண்டே இருந்தாள் ஆது விஷயத்தை சொன்னவுடன் ஆது இனிமேல் தனியாக உனக்கு என்று எதுவும் சமைக்க வேண்டும் …
நான் மயூ விடம் தினமும் காலை மதியம் இரண்டு வேளையும் சாப்பாடு கொடுத்து அனுப்புகிறேன் என்றாள் தேவா அமைதியாக வருவை பார்த்துவிட்டு யார் அந்த மயூ என்று கேட்டான் ஆதுவுடன் பள்ளியில் படிக்கும் பெண் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெண் ஆதுவிற்கு இனி தினமும் அந்த பெண்ணிடம் நான் சாப்பாடு கொடுத்து அனுப்பி விடுகிறோம் …
நீங்கள் உங்கள் அம்மாவிற்கும் உங்கள் மூவருக்கும் சமைத்துக் கொள்ளுங்கள் என்றாள் இல்லை வேண்டாம் உங்களுக்கு எதற்கு சிரமம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் வரு அவனை முறைத்துவிட்டு இதில் எங்களுக்கு என்ன சிரமம் நான் இவனை தேடிக் கொண்டு போயா தரப்போகிறேன்…
எங்கள் வீட்டின் அருகே உள்ள மயூவும் இவனும் ஒரே பள்ளியில் அதுவும் ஒரே வகுப்பில் தான் படிக்கிறார்கள் அவள் பள்ளிக்கு செல்லும் பொழுது எங்களுக்கு சமைப்பதில் சேர்த்து சமைத்தால் அவளிடம் கொடுத்து அனுப்பினால் இவனிடம் வந்து தரப்போகிறாள் இதில் எங்களுக்கு என்ன இருக்கிறது..
அலைச்சாலும் இல்லை எந்த சிரமமும் இல்லை என்றாள் அவனுக்கும் அது சரி என்று பட்டதால் ஒரு மாதம் மட்டும் அதன் பிறகு நான் சமாளித்துக் கொள்கிறேன் என்றான் வரு அவனை முறைத்து விட்டு வேறு எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள் தீரன் இப்பொழுது கடைக்கு செல்வதில்லை வேலைக்கு இருக்கும் ஆட்களை பார்க்க சொல்லிவிட்டு முழு நேரமும் அரசியுடன் தான் இருக்கிறார் ..
வரு வந்தவுடன் தீரன் வெளியே வந்து சாப்பிட அமர்ந்தார் “என்ன மாமியாரே இப்பொழுது எப்படி இருக்கிறது என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் அரசி முறைத்து விட்டு அது எப்படி டி அனைவரும் இருக்கும் பொழுது நல்ல பிள்ளை போல் ஆண்டி என்றும் யாரும் இல்லாத நேரங்களில் மாமியாரே என்றும் திமிராக பேசுகிறாய் என்ற கேட்டார்”..
வரு சிரித்துக் கொண்டே என்ன பண்றது வீட்ல இருக்க உன் முன்னாடி நல்ல புள்ள போல நடிக்க வேண்டாமா அதற்கு தான் சும்மா என்றாள் நீ என்னை நன்றாக பார்த்துக்கிட்டா அவன் உன்னை லவ் பண்ணுவான் என்று நினைத்து என்னை பார்த்துக் கொள்கிறாயா ?என்று கேட்டார் …
வரு அவரை முறைத்து விட்டு உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வேறு இருக்கிறதா ? ஒரு மனுதாபிமானத்தில் தான் பார்த்துக் கொண்டேன் என்றாள் இதில் என்னடி மனுதாபி மானம் என்றார் இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் தேவாவின் அம்மா இறந்தபோது என்றவுடன் அரசியின் கண்கள் கலங்கியது .
.சாரி தெரியாமல் சொல்லிவிட்டேன் அப்பொழுது தேவாவின் அப்பா தனிமையாக இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டீர்களா என்றுடன் அரசி வருவை முறைத்துப் பார்த்தார் இல்லை அல்ல அதேபோல் தேவா கைக் குழந்தையாக இருந்தார் என்பதற்காக நீங்கள் அவரைப் பார்த்துக் கொண்டீர்களா ?..
உங்களுக்குள் இருந்த மனிதாபிமானம் உங்களுக்கு தேவாவின் அப்பாவின் காதலாலோ இல்லை தேவாவின் அம்மா பாரு ஆன்ட்டியின் மேல் இருந்த அனுதாபமும் நம் தோழி என்ற எண்ணமோ இல்லை உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் தங்களுக்குத் தெரிந்த ஒரு பையன் தாய் இல்லாமல் தகப்பனின் வளர்ப்பில் கை குழந்தையாக இருப்பவன் வளர்வது கஷ்டம் என்று எண்ணி தானே அவரை வளர்த்தீர்கள்…
அது மனிதாபிமானம் அப்படித்தான் இதுவும் எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும்போது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாள் பிறகு அவருக்கு தேவா சமைத்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு அவள் அலுவலகம் சென்று விட்டாள்..
இப்படியே நாட்கள் சென்றது கலைமணியும் நன்றாக பார்த்து கொன்றார் அரசுக்கு ஓரளவிற்கு உடல்நிலை தேறிய பிறகு திறந்தான் உங்களுக்கு எதற்கு சிரமம் கலை நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள் இதற்கு மேல் நான் சமாளித்துக் கொள்வேன் என்றார் கலை இல்லை இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொன்னதற்கு கூட அரசி சிரித்துக் கொண்டே அவர் சொல்வது சரிதானே …
இதுவரை நீங்கள் என்னை பார்த்துக் கொண்டதே பெரிய விஷயம் தான் என்ன அரசி இவரெல்லாம் பேசுகிறீர்கள் இருவரும் என்றார் கலை நாங்கள் தவறாக சொல்லவில்லை என்னை பார்த்துக் கொண்டது பெரிய விஷயம் இதற்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கூட விரும்பவில்லை உறவு போல் எண்ணி கொள்கிறேன்…
ஆனால் உங்களுக்கும் குடும்பம் என்று இருக்கிறது முழு வேலையும் என்னையும் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா நான் தான் என்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டேனே இதற்கு மேல் ஓரளவுக்கு நான் என்னைப் பார்த்துக் கொள்வேன் அப்படி இல்லை என்றால் ஏதாவது உதவி தேவை என்றால் நான் இவரை அழைத்துக் கொள்வேன் ..
இல்லை முடியவில்லையென்றால் உங்களை அழைக்கிறேன் மற்றபடி இங்கே இருந்து என்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லையே நீங்கள் உங்கள் குடும்பத்தையும் பாருங்கள் என்றார் அதன் பிறகு கலையும் சிரித்துக் கொண்டே சரி என்று விட்டார் அவ்வப்போது வந்து பார்த்து சென்றார் கலை…
இப்படியே அரசிக்கு ஆப்ரேஷன் முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் சென்று இருந்தது அரசி தனது கணவரை பார்த்தார் தீரன் என்ன அரசி என்ன பண்ணுகிறது இப்பொழுது பரவாயில்லை தானே என்று கேட்டார் அரசி சிரித்து கொண்டே எனக்கு உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை இல்லைங்க இப்பொழுது நான் நன்றாக தான் இருக்கிறேன்….
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் என் மனதில் ஒரு விஷயம் தோன்றியது அது சரியா தவறா என்று தெரியவில்லை நம் குடும்பத்திற்கு சரியாக வருமா என்று தெரியவில்லை என்றார் அப்படி என்ன விஷயம் அரசி என்றார் தீரன் நான் சொல்வேன் ஆனால் நீங்கள் என்னை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது நான் உன்னை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்ன அரசி என்றார்…
எனக்கு வருணி நன்றாக புரிய வைத்து இருக்கிறாள் என்றார் அரசி சிரித்துக் கொண்டாள் இப்போது உங்களுக்கு அவளை வருணி என்று சொல்லும் அளவிற்கு நல்ல க்ளோஸ் ஆகி விட்டார்களா என்றார் அரசி சிரித்துக் கொண்டே தீரனும் சிரித்துக் கொண்டே அப்படியும் வைத்துக் கொள்ளலாம் அந்த பெண் மட்டுமா கலை தங்கச்சியும் தான் மாணிக்கம் மச்சானும் தான் என்றார் …
அரசி லேசாக சிரித்துக் கொண்டே உங்களிடம் இதைப் பற்றி தான் பேச வேண்டும் என்றார் இதைப் பற்றிய எனக்கு புரியவில்லை அரசி என்று சொன்னார் நீங்கள் உங்கள் மகனுக்கு பெண் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள் என்றவுடன் தீரன் முறைத்தார் இப்போது கூட உன்னால் அவனை ஏற்றுக் கொள்ள முடியாதா ?என்று கேட்டார் .
நான் இப்பொழுது அதைப் பற்றி பேச விரும்பவில்லை திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்காதீர்கள் என்றார் அரசி தீரனும் இப்பொழுதுதான் அரசிக்கு உடல்நிலை தேறிக்கொண்டு வருவதால் மேற்கொண்டு அரசியை புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தார் சரி இப்பொழுது அதற்கு என்ன என்றார்…
இல்லை இந்த பெண் வருணிகாவும் நல்ல பெண் போல் தான் இருக்கிறது அவர்களுடைய அப்பா அம்மாவும் நல்லவர்கள் போல் தான் இருக்கிறது இந்த பெண்ணை நீங்கள் உங்கள் மகனுக்கு கேட்டால் என்னவென்றார் தீரன் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி என்ன அரசி இவ்வாறு பேசுகிறாய்..
இது சரி வருமா நமக்கு உதவி செய்தார்கள் என்பதற்காக அவர்கள் வீட்டுப் பெண்ணை கேட்பது சரியா ? ஏன் இதில் என்ன தவறு கேட்டுப் பார்ப்போம் கொடுப்பது அவர்களது விருப்பம் என்றார் அரசி.
அரசி சொன்னது போல் தீரன் வருணிகா வீட்டிற்குச் சென்று பெண் கேட்பாரா அதற்கு வருணிகா வீட்டில் ஒத்துக் கொள்வார்களா முதலில் இதற்கு தேவா ஒத்துக் கொள்வானா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
Papom varu va ivangale ponnu keta deva othupana arasi ah intha idea sonnathunala
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
சூப்பர். .. இரண்டு பேரையும் சீக்கிரம் சேர்த்துவைங்க
Tq
Nice epi