“வருணிகாவை உங்கள் மகனுக்கு கேட்டுப்பாருங்கள் என்று அரிசி சொன்னவுடன் தீரன் அதிர்ச்சியாகி என்ன அரிசி இவ்வாறு பேசுகிறாய் நமக்கு அவர்கள் உதவி செய்தார்கள் என்பதற்காக நாம் அவர்கள் வீட்டுப் பெண்ணை கேட்பது சரியா ?”என்றார் ..கேட்பது நம் விருப்பம் கொடுப்பதும் கொடுக்காததும் அவர்களது விருப்பம் நீங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் கேட்டுப்பாருங்கள் உங்கள் மகனிடம் கேட்டுவிட்டு அதன் பிறகு இதைப்பற்றி பேசலாம் என்றார் …தீரனுக்குமே வருணிகாவை பிடித்திருந்தது இப்படி ஒரு மருமகள் தங்கள் வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார் ஆனால் இதைப் பற்றி தன் மகனிடம் பேசிப் பார்க்கலாம் என்றும் நேசித்தார்..அது மட்டும் இல்லாமல் இந்த பெண் தானே அன்று ஆது சொன்னது போல் பேசிய பெண் அப்போதும் நல்ல முறையில் நடந்து கொண்டாள் இப்பொழுதும் நன்றாக தான் தன் மனைவியை பார்த்துக் கொண்டாள் என்று எண்ணி விட்டு முதலில் ஆதுவிடம் இந்த பெண்ணை பற்றி பேச வேண்டும் என்று எண்ணினார்…அரசி வாசுவிடம் போன் செய்து வர சொன்னார் அவனும் வந்திருந்தான் என்னம்மா என்ன போன் செய்து வர சொல்லி இருக்கிறீர்கள் என்று கேட்டான் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் அதனால் தான் என்று சொன்னார்…சொல்லுங்கம்மா என்ன விஷயம் என்றான் கதவை சாத்திவிட்டு வந்து உட்காரு என்றார் அப்படி என்னமா முக்கியமான விஷயம் என்று கேட்டுக் கொண்டே கதவு சாற்றிவிட்டு அவரது அருகில் அமர்ந்தான்…அவனை அமைதியாக பார்த்துவிட்டு வாசு நான் சொல்லும் விஷயத்தை கவனமாக கேட்டுக்கொள் அதேபோல் உனக்கு இது விருப்பமா என்பதையும் சொல்லு அப்படி என்ன விசயம் மா என்றான் சொல்கிறேன் உங்களுடைய ஆபீஸில் வேலை செய்யும் வருணிகா என்ற பெண்ணை தெரியும் தானே என்றார்…அம்மா அந்த பெண்ணை எனக்கு தெரியாமல் எப்படி அதுவும் இப்போது உங்களை நன்றாக பார்த்துக் கொண்ட பெண் ம்மா குடும்பத்துடன் உங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்களே என்றான் சரிமா அந்த பொண்ணுக்கு என்ன என்றான்..அப்பாவிடம் பேசி இருக்கிறேன் உன் நண்பனுக்கு அந்தப் பெண்ணை பெண் கேட்க சொல்லி இருக்கிறேன் நீயும் அவனிடம் பேசி பாரேன் என்றார் அவன் முறைத்து விட்டு எழுந்து நின்று அப்போது கூட நீங்கள் பேச மாட்டீர்களா ? அப்படித்தானே என்றான் …டேய் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் பேசுங்கள் அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும் என்றார் வாசுவிற்கு அரசி இவ்வளவு தூரம் வந்ததே பெருசு என்று எண்ணி அமைதியாகிவிட்டான் சரிமா நான் அவனிடம் இதை பற்றி பேசி பார்க்கிறேன் என்றான்…அம்மா உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை அந்தப் பெண் இவனை இரண்டு வருடங்களாக விரும்பி கொண்டிருக்கிறது என்றான் அவர் ஒரு நிமிடம் வாசுவை உற்றுப் பார்த்துவிட்டு நான் அவளிடம் ஏற்கனவே இதைப்பற்றி பேசி விட்டேன் என்றார்..அவன் அதிர்ச்சியாகி என்னம்மா சொல்கிறீர்கள் என்றான் ஆமாம் இப்போது உன் நண்பனுக்கு கூடவே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது இல்லை என்னுடைய உடல் நிலையை பற்றி பேசாமல் இருந்திருக்கலாம் நான் உன்னிடம் அந்த பெண்ணுடைய ஃபோன் நம்பர் வாங்கிய மறுநாள் அந்த பெண்ணை பார்த்து பேசி விட்டேன் என்றார் …”அம்மா என்ன சொல்கிறீர்கள் அந்த பெண்ணிடம் என்ன பேசினீர்கள் தவறாக ஏதும் பேசவில்லையே” என்றான் பிறகு அவர் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தவுடன் அப்படி நீங்கள் ஏதாவது பேசி இருந்தாள் அவள் உங்களை வந்து பார்த்திருக்க முட்டாள் அதுவும் இந்த அளவிற்கு என்றான்.அரசி சிரித்து விட்டு “உனக்கு என் மேல் அவ்வளவு நம்பிக்கையா இல்லை அந்த பெண்ணின் மீது அவ்வளவு நம்பிக்கையா ” என்றார் வாசு ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகிவிட்டு அம்மா எனக்கு புரியவில்லை என்றான்…” நீ நினைப்பது போல் இல்லை நான் அவளிடம் தவறாக ஒன்றும் பேசவில்லை தான் இருந்தாலும் நான் பேசியதற்கு அவள் எதிர்வினை இப்படி காட்டுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை இதுவே வேறொரு பெண்ணாக இருந்தால் என்னிடம் இப்படி நடந்து கொண்டிருப்பாளா என்பது கேள்விதான் “என்றார்…அவன் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி அரசியை பார்த்தான் அவர் சிரித்துக் கொண்டே நான் ஒன்றும் அவ்வளவு நல்ல விஷயமாக ஒன்றும் அந்த பெண்ணிடம் பேசிவிட்டு வரவில்லை என்றார் அம்மா என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் உங்கள் மகன் அந்த பெண்ணை விரும்பவில்லை அவள்தான் விரும்புகிறேன் என்று சொல்கிறாள் ..அது அவளுடைய தனிப்பட்ட விருப்பம் உங்களுக்கு வேண்டும் என்றால் அந்த பெண்ணிடம் பெண் கேட்பதை பற்றி பேசி இருந்திருக்கலாம் இல்லையென்றால் அமைதியாக விட்டிருக்கலாம் எதற்காக நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று பேசினீர்கள் அப்படி என்ன பேசினீர்கள் …”அந்த பெண்ணின் மனது காயம்படும்படியாக ஏதாவது பேசி விட்டீர்களா ஏற்கனவே ஒவ்வொரு நாளும் உங்களது மகன் அந்த பெண்ணின் மனது காயப்படும் படி தான் பேசிக் கொண்டிருக்கிறான்” என்றான் ..”அரசி சிரித்துக்கொண்டே அப்படி நீ சொல்வது போல் “அவன் காயம்படும்படியாக பேசியிருந்தாலும் அந்த பெண் விடாமல் அவனை துரத்திக் கொண்டுதானே இருக்கிறாள் இதுலையே தெரிகிறது அவளது காதலின் ஆழம்” அவள் காதல் ..அதற்காக அந்தப் பெண் தவறான வழியில் செயல்பட்டு தனது காதலை அடைந்து கொள்ளுவாள் என்று சொல்லவில்லை உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் அவன் அந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் நானாக கூட இருக்கலாம் …”அந்த ஒரே காரணத்திற்காக மட்டும்தான் நான் இவ்வளவு தூரம் பேசிக் கொண்டிருக்கிறேன் மற்றபடி அவன் மேல் எனக்கு எந்த பாசமும் இல்லை பந்தமும் இல்லை நீங்களாக எதையாவது நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்” என்றார் வாசு லேசாக சிரித்துக் கொண்டு நான் நம்பி விட்டேன் என்றான் நம்பினால் எனக்கு என்ன நம்ம விடில் எனக்கென்ன என்றார் உனக்கு ஒன்று தெரியுமா நான் அவனைப் பற்றி பேசவில்லை என்றார் ஆனால் நீங்கள் அந்த பெண்ணிடம் என்ன பேசினீர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பேசிய விதம் சரியா தவறா என்று உங்களுக்கு தான் தெரியும் என்றான்…நான் அவளிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்பது அவளுக்கு தெரியும் அவள் என்னை எந்த முறையில் புரிந்து கொண்டாள் என்று மட்டும் நான் யோசித்தால் போதும் என்று நினைக்கிறேன் சுற்றியுள்ளவர்களை பற்றிய கருத்து எனக்கு தேவையில்லை என்றார் …அப்பொழுது நீங்கள் அவளிடம் ஏதோ ஒன்று பேசிவிட்டு வந்திருக்கிறீர்கள் அப்படித்தானே என்றான் அவர் லேசாக விஷமாக சிரித்தார் என்னை பொறுத்தவரை எனது நண்பன் நன்றாக இருக்க வேண்டும் அந்த பெண் அவனது வாழ்க்கையில் வந்தாள் அவனது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்…”நான் உங்களை வற்புறுத்த மாட்டேன் உங்களது மனம் மாறும் என்று அவன் எண்ணுவது போல் அப்பா என்பது போல் நானும் எண்ணுகிறேன் உங்களது மனம் மாறும் வரை அவன் காத்திருக்கிறான் ஆனால் வரும் பெண்ணும் அவ்வாறு காத்திருப்பாள் என்பது இல்லை அதையும் கருத்தில் வைத்துக் கொள்ளுங்கள்”…அந்த பெண் இந்த வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் நீங்கள் அவனிடம் காண்பிக்கும் ஒதுக்கத்தை அந்த பெண்ணிடம் காட்டி விடாதீர்கள் அதேபோல் அந்த பெண்ணின் முன்பு என்னதான் இருந்தாலும் கணவனை தர குறைவாக நடத்தினால் எந்த பெண்ணிற்கும் பிடிக்காது…பிடிக்காது என்பதை தாண்டி அந்த பெண்ணுக்கு மன வருத்தத்தை உண்டாக்கி விடாதீர்கள் என்னால் இதை மட்டும் தான் சொல்ல முடியும் அவர் அவனைப் பார்த்து எனக்கும் இருக்கிறது டா என்று தனது மூளையை சுட்டி காண்பித்தார் புத்தி என்பது போல் அவன் அவரைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு சரிமா நான் அவனிடம் பேசிப் பார்க்கிறேன் …ஆனால் கொஞ்சம் கஷ்டம் தான் என்ன தான் நானோ அப்பாவோ பேசுவதை விட நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அவன் ஒத்துக் கொள்வான் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் நான் பேசி அவன் ஒத்து கொள்ள வேண்டாம் இந்த குடும்பத்திற்காக என்று இல்லை…அவனுக்காக அது அவனுடைய விருப்பம் அவன் இங்கு உள்ளவர்களுக்காக ஒத்துக் கொண்டாலும் சரி இல்லை அவனுக்காக ஒத்துக் கொண்டாலும் சரி இல்லை வேண்டாம் என்று சொன்னாலும் அது அவனது விருப்பம் இதற்கு மேல் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்னால் இவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்..சரி டா நேரமாகிறது சாப்பிட்டுக் கிளம்பு என்றார் இல்லம்மா வீட்டில் அம்மா எனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள் நான் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுக் கொள்கிறேன் நேரம் ஆகிறது நான் வருகிறேன் என்று விட்டு கிளம்பி விட்டான் வாசு. அவன் கிளம்பிய பிறகு அரசி ஒரு பெருமூச்சு விட்டார் …ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லியே என்னால் முடியவில்லை அவள் அப்படி இந்த வீட்டிற்குள் வந்தாள் தன்னுடைய நிலைமை என்று எண்ணி சிரித்தவர் பிறகு தன்னுடைய நிலைமை கூட பரவாயில்லை அவனுடைய நிலைமை என்று தேவாவை எண்ணி சிரித்துக் கொண்டார்…இங்கு தீரன் முதலில் தேவாவிடம் பேசுவதை விட ஆதுவிடம் இதைப்பற்றி பேசலாம் அவனுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்று யோசித்தார் அதுபடியே ஆது அன்று பள்ளி முடிந்து வந்தவுடன் அவனிடம் பேச வேண்டும் என்று சொன்னார் …சொல்லுங்கப்பா என்றான் படிக்கிற வேலையை அதிகமாக இருக்கிறதா என்றார் இல்லப்பா இருக்கிறது இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ன பேச வேண்டும் என்றான் இங்கு வேண்டாம் வெளியே என்றார் அவன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு தனது தந்தை ஏதோ முக்கியமான விஷயம் பேசப்போகிறார் என்று எண்ணிவிட்டு சரிப்பா இருங்கள் என்று அவனது அறைக்கு சென்றான்…அறைக்குள் தன்னுடைய பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு சென்று அவனது அறையில் வைத்துவிட்டு முகம் கை கால் அலம்பி கொண்டு வேறொரு வீட்டில் அணியும் உடையை அணிந்து கொண்டு வெளியில் வந்தான் பிறகு தனது தந்தையை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று அமர்ந்தார்கள் ..தீரன் அங்கு அமர்ந்தவுடன் தீரன் சுற்றி வளைக்காமல் அவனது கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு உன் அண்ணனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பது உனக்கு தெரியும் தானே .. தெரியும் ப்பா ஆனால் நீங்கள் நம் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கொஞ்ச நாட்கள் அதைப் பற்றி நீங்கள் யோசிக்கவில்லை என்று நினைத்தேன் என்றான்….சொன்னாலும் சொல்லவிட்டாலும் நான் அம்மாவிற்கு உடல் நிலை சரியாகிய பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்று இருந்தேன் இதைப் பற்றி நான் யோசிக்கவில்லை ஆனால் நான் சொல்வதை பொறுமையாக கேட்க வேண்டும் நிதானமாக யோசிக்க வேண்டும் கத்த கூடாது என்றார் …சரி ப்பா சொல்லுங்கள் என்று அமைதியாக பார்த்தான் உன் அம்மா உன் அண்ணனுக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறார் என்றார் ஆது அதிர்ச்சியாகி என்ன அம்மா அண்ணனுக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறார்களா என்று அதிர்ச்சியாகி எழுந்து நின்று கேட்டான்…டேய் ஏன் இவ்வளவு அதிர்ச்சி என்றார் பிறகு அதிர்ச்சியாகாமல் என்ன செய்வது அதுவும் அம்மா அண்ணனுக்கு பெண் பார்த்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே என்றான் இதைவிட இன்னும் நிறைய விஷயங்களை இருக்கிறது என்றார்…எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தரப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன் என்றான் அந்தப் பெண் யார் என்று தெரிந்தால் இன்னும் அதிர்ச்சி ஆவாய் என்றார் அப்படி யாருப்பா அண்ணனுக்கு அம்மா பார்த்திருக்கும் பெண் ..அம்மா மனம் மாறிவிட்டார்களா அண்ணனை ஏற்றுக் கொண்டார்களா என்று கேள்வி கேட்டான் அவர் அவனை முறைத்துவிட்டு உன் அம்மா அவ்வளவு எளிதில் உன் அண்ணனை ஏற்றுக் கொள்வாய் என்று எண்ணுகிறாயா ?என்றார் பிறகு எப்படி அண்ணனுக்கு பெண் பார்த்தார்கள் என்றான் ..அது எனக்கும் தெரியவில்லை என்றார் அப்பா ஒரு நிமிடம் நான் அம்மாவை குறை சொல்கிறேன் என்று எண்ணாதீர்கள் ஒருவேளை அம்மா அண்ணனை பாழும் கிணத்தில் தள்ளிவிட்டு விட்டால் இது என்னுடைய எண்ணம் அதற்காக நான் அம்மாவை தவறாக சொல்லவில்லை ..ஆனால் எனக்கு ஒரு மூலையில் அண்ணன் மீது இருக்கும் அன்பினால் ஏற்படும் பயம் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள் ஏற்கனவே அண்ணன் மனதளவில் உடைந்து தான் போயிருக்கிறார் அதை நாம் இருவரிடம் அவர் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் என்று உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அப்படி இருக்கும்போது அம்மா அண்ணனுக்கு என்று ஒரு பெண் பார்த்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்..அந்த பெண் வந்து அண்ணனின் வாழ்க்கையை வசந்தமாக்கினால் சரி ஆனால் இருக்கும் அண்ணனின் வாழ்க்கையை இன்னும் நாசம் செய்தால் என்றான் தீரன் தனது மகனை சிரிப்பாக பார்த்தார் அவனுக்கு அவனது அண்ணின் மீது இருக்கும் பாசத்தை எண்ணி மகிழவும் செய்தார்…நானும் சாதரணமாக உங்க அம்மா ஒரு பெண்ணை பார்த்துகிறேன் என்று சொல்லும் பொழுது யோசிக்க தான் செய்தேன். ஆனால் அவள் பார்த்திருக்கும் பெண் யாரென்று கேட்டால் நீ இவ்வாறு எல்லாம் யோசிக்க மாட்டாய் என்றார் அப்பா அப்படு அம்மா அண்ணனுக்காக பார்த்திருக்கும் பெண் யார் ? நீங்களும் ரொம்ப நேரமாக சொல்கிறீர்கள் ஆனால் யார் அந்த பெண் என்று சொல்லவில்லையே என்று கேட்டான் …தீரன் லேசாக சிரித்து விட்டு வருணிகா என்றார் என்ன அந்த அக்காவா என்று அதிர்ச்சியாக கேட்டான் ஆது. அவனுக்கு வர்ணிகாவின் மீது நல்லெண்ணம் இருக்கிறதா அப்படி தனது அண்ணனின் வாழ்க்கையை அந்த அக்கா வசந்தமாக்க வருவாள் என்று எண்ணி தனது தந்தையிடம் தனது அண்ணனிடம் இதைப் பற்றி பேசலாம் என்று சொல்வானா? இல்லை எனக்கு விருப்பமில்லை அதனால் இதைப் பற்றி அண்ணனிடம் பேசாதீர்கள் என்று சொல்வானா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
Sthu eppadi pidikama pogum aathu ku sari nu tha solvan anna life ache yosikama irupana
வருணிகாவை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் ???
😜😜😜
வருணி தேவா கியூட் ஜோடி
Nice epi