Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 27

பூவிதழில் பூத்த புன்னகையே 27

Your Attractive வாசு தேவாவிடம் பேசி சென்றவுடன் தேவா ஏதோ ஒரு சில நொடி தன் தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே  தான் அமர்ந்து இருந்தான் பிறகு நேரம் ஆவதை உணர்ந்து வீட்டிற்கு சென்றான்…யாரும் வருவை பற்றி அவனிடம் பேசவில்லை அவனாக யோசிக்கட்டும் என்று அமைதியாக இருந்தார்கள் இரவு வீட்டிற்கு சென்று சமையல் வேலைகளை செய்தான் அன்று இரவும் படுத்துக் கொண்டு நிதானமாக யோசித்தான் படித்துக் கொண்டிருக்கும் தனது தம்பி ஆதுவையும் பார்த்தான்..ஆதுவும் கொஞ்ச நேரமாக தனது அண்ணன் தன்னை பார்ப்பதையும் எதையோ  யோசிப்பதையும் உணர்ந்து விட்டு  என்ன அண்ணா என்றான் ஒன்றுமில்லை என்றான் தேவா ஆது தனது அண்ணனின் அருகில்  வந்து அவனது கைக்குள் தன் கையை வைத்துக்கொண்டு அண்ணா உன்னை இங்கு யாரும் வற்புறுத்தவில்லை சரியா …”எனக்கு வரு அக்காவை பிடித்து இருக்கிறது நம் அம்மாவிற்கு உதவி செய்தார்கள் என்பதற்காக இல்லை” எனக்கு வயதில்லை தான் ஆனால்  என்னால் ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது நீங்கள் அந்த அக்காவை விரும்புகிறீர்களா? இல்லையா ?என்றெல்லாம் எனக்கு தெரியாது…ஆனால் அந்த அக்காவின் மீது உங்களுக்கு  ஈர்ப்பு இருக்கிறது என்னைப் பொறுத்தளவு உங்களுக்கு அந்த அக்கா மனைவியாக ,உங்களது வாழ்க்கை துணையாக வந்தாள் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் என்று எண்ணினேன்..இந்த குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்று எண்ணினேன் என்னால் அவ்வளவு தான் சொல்ல முடியும் நீங்கள் யோசிங்கள் ஆனால் நாங்கள் யாரும் உங்களை வற்புறுத்தவில்லை  வரு அக்காவை அம்மாதான் உங்களுக்கு பார்த்தார்கள் என்று அப்பா சொல்லி இருப்பாரா இல்லையா என்று எனக்கு தெரியாது..ஆனால் அம்மாவிற்காக என்று அந்த அக்காவை ஏற்றுக் கொள்ளவும் செய்தீர்கள் அம்மாவிற்காக என்று எண்ணி அந்த அக்காவை வேண்டாம் என்றும் உதாசினம் செய்யாதீர்கள் என்று விட்டு அமைதியாக தனது அண்ணனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று படிக்க அமர்ந்து விட்டான்… அவனுக்கு நாளை மாடல் எக்ஸாம் இருப்பதால் வேறு எதுவும் பேசவில்லை எந்த அளவிற்கு தனது படிப்பு தனக்கு முக்கியமோ அதே அளவிற்கு தனது அண்ணனின் வாழ்க்கை முக்கியம் என்று எண்ணியதால் ஒரு பத்து நிமிடம் தனது அண்ணனுக்காக ஒதுக்கி பேசி சென்றான் ஆது …தேவா அமைதியாக அனைத்தையும் யோசித்து விட்டு தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து விட்டு அமைதியாக படுத்தான். மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் எழுந்தது தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகம் சென்றான் அன்று முழுவதும் வருவை பற்றியே யோசித்தான் …வருவை பார்த்துக் கொண்டே இருந்தான் வாசுவை தேவா அழைத்தான் வாசு என்ன என்று கேட்டுக் கொண்டு வந்தான் வீட்டுக்கு வந்துவிட்டு செல் டா என்றான் ஏன் டா என்ன விஷயம் இங்கே சொல் என்றான் வாசு இல்லை என்னோடவே நீ வீட்டிற்கு  வா என்று அழைத்தான் வாசுவும் வேற எதுவும் பேசாமல் சரி என்றான் ..இருவரும் ஒன்றாக வீட்டிற்குச் சென்றார்கள் வீட்டிற்கு சென்றவுடன் ஆது வெளியே படித்துக் கொண்டிருந்தான் ஆது அம்மா எங்கே என்றான் உள்ளே அறையில் இருக்கிறார்கள் அண்ணா என்ன அண்ணா என்றான் ஒன்றுமில்லை நீ பார் என்று விட்டு அரசியை பார்க்க சென்றான்…அவர் அறையில் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்துவிட்டு கதவைத் தட்டினான் அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு என்ன என்று  கேட்டார் கொஞ்சம் வெளியே வாருங்கள் அப்பா எங்கே என்றான்  அவர் பாத்ரூமில் இருக்கிறார் என்றார் சரி நீங்கள் வாருங்கள் என்று விட்டு அப்பா என்று குரல் கொடுத்தான் …இதோ வருகிறேன் என்றார் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அனைவரும் ஹாலில் கூடியிருந்தார்கள் வாசு இவன் எதற்காக தன்னை அழைத்து விட்டு வீட்டில் உள்ளவர்களையும் அழைத்திருக்கிறான் என்று அமைதியாக தனது நண்பனை பார்த்தான் ஆதுவும் ஒன்றுக்கு இரண்டு முறை வாசுவிடம் அண்ணா எதற்காக என்று கேட்டான் …டேய் எனக்கும் தெரியாது என்னை வீட்டிற்கு வர சொன்னான் நானும் அவனுடனே வந்தேன் மற்றபடி அவன் எதற்காக வர சொன்னான் என்று தெரியவில்லை என்ன முடிவு எடுத்து இருக்கிறான்  என்றும் எனக்கு தெரியாது என்றான்..அனைவரும் அவனை அமைதியாக பார்த்தவுடன் “எனக்கு நீங்கள் பார்த்திருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம்” என்றான் அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி தான் தீரன் ஒன்றுக்கு இரண்டு முறை டேய் நன்றாக உனக்காக என்று மட்டும் யோசித்து முடிவு செய்தது தானே என்றார் …அவன் என் வாழ்க்கைக்கு என்று தான் முடிவு செய்து இருக்கிறேன் என்று விட்டு தன்னுடைய வேலைகளை பார்க்கச் சென்று விட்டான் தீரன் அரசியை பார்த்தார் அவர் கண்மூடி திறந்து விட்டு அமைதியாகிவிட்டார் வாசு நண்பனை கட்டிக் கொண்டான் …பிறகு வாசு நேரமாகியதால் அரசி அம்மாவை பார்த்தான் அவர் கண் மூடி திறந்த பிறகு கிளம்பிவிட்டான் ஆது நேரம் ஆகிறது போய் படி என்று அனுப்பி வைத்தார் ஆது தனது அண்ணன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட சந்தோஷத்தில் அமைதியாக படிக்கச் சென்று விட்டான் …அரிசி அவரது அறைக்குச் சென்றார் தீரன் பின்னாலே சென்றார் அரசி இவன் நமக்காக ஒத்துக் கொண்டானோ என்றார் ஒரு வித பயத்தோடு இல்லை என்பது போல் தலையாட்டினார் அரசி  பின்ன என்றார் பின்ன என்றால் மேற்கொண்டு போய் அந்த பெண் வீட்டில் பேசுங்கள் என்றார் …நான் மட்டும் தனியாகவா என்றார் வேறு எங்காவது பெண் எடுத்திருந்தால் உங்களை தனியாக கூட செல்லுங்கள் என்று சொல்லி இருப்பேன் கலையிடம் என்னால் உங்களை தனியாக போய் பெண் கேளுங்கள் என்று சொல்ல முடியாது போகலாம் நாளை என்றார் …தீரனும் சரி என்று விட்டு அமைதியாக இருந்தார் பிறகு இரவு உணவு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் சாப்பிட்டு முடித்தவுடன் தீரன் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அவர் அறைக்கு சென்று விட்டார் ஆது படித்துக் கொண்டிருந்தான்..தேவா சமையலறையில் நின்று யோசனையில் இருப்பதை அரசி பார்த்தார் பார்த்துவிட்டு சமையலறைக்குள் வந்து நின்றார் “தேவா அமைதியாக தனது தாயை பார்த்தான் எனக்காக என்று யோசித்தேன் என்று நான் நின்ற நிலைமையில் ஒரு பெண்ணை நிற்கவைக்க மாட்டாய் என்று நினைக்கிறேன்”…அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் என்று விட்டு அமைதியாக நகர்ந்து விட்டார் தேவா ஒரு நிமிடம் என்றான்  அவரும் நின்றார் நான் “யாரையும் மனதில் வைத்து நான் இந்த முடிவை எடுக்கவில்லை ஆனால் அனைவரும் என் மனதில் இருக்க தான் செய்கிறீர்கள் இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும் நான் அனைவரையும் முன்னிறுத்தி தான் யோசிக்க முடியும்” ..என்னுடைய மனைவியாக அவள் வந்தாள் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன் அதே போல் தான் இந்த வீட்டிற்கு மருமகளாக வந்தாள் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன் உங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காகவோ இல்லை நான் வேலை செய்வதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவோ இல்லை அவள் வந்தாள் இந்த வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷம் அடைவார்கள் என்பதற்காகவோ மட்டும் நான் அவளைப் பற்றி யோசிக்கவில்லை…நீங்கள் அவளிடம் சென்று பேசி இருக்கிறீர்கள் இதுவரை என்ன பேசினீர்கள் என்று நான் கேட்கவில்லை அவள் என்னிடம் சொல்ல வந்தாள் அன்றுதான் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது அதனால் என்னிடம் சொல்ல முடியவில்லை அதன் பிறகு நானும் என்ன பேசினீர்கள் என்று கேட்கவில்லை..அவளும் என்னிடம் வந்து நீங்கள் இதுதான் பேசினீர்கள் என்று சொல்லவில்லை ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நீங்கள் என்னை புரிந்து இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு தனது தாயே நிமிர்ந்து பார்த்தான் ..அவர் லேசான சிரிப்புடன் எனக்கு புத்தி இருக்கிறது யார் இடம் எப்படி பேச வேண்டும் என்று  எனக்கு தெரியும் நான் இன்று வரை உன்னிடம் வீம்புக்காக என்று எதையும் பேசியதில்லை அதையும் நினைவில் வைத்துக்கொள் என்றார் …எனக்கு தெரியும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று என்னால் அவளுக்கு நல்ல கணவனாக இருக்க முடியும் என்று நான் யோசித்த பிறகு மட்டும்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றான் அவர் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார் போகும் அரசியை தேவா பார்த்து சிரித்தான்…இப்பொழுது கூட அவளை உங்களுக்கு பிடித்திருந்ததால் நான் உங்களுக்காக என்று அவளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள் ஆனால் இதே பாசத்தை என்னிடம் நேரில் காண்பிக்க மாட்டீர்கள் உங்களின் பாசத்திற்காக வேண்டி தவிக்கிறேன் ..உங்கள் மடியில் படுத்துக்கொள்ள ஏங்குகிறேன் என்று தன் கண்ணில் துளிர்த்த ஒரு சிலர் நீர் துளிகளை துடைத்துவிட்டு தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு வந்து அமைதியாக படுத்து விட்டான் மறுநாள் மாலை ஆது பள்ளி முடிந்து வந்தவுடன் தீரன் அரிசி ஆது மூவரும் கலைமணி மாணிக்கம் வீட்டிற்குச் சென்றார்கள் …இருவரும் வீட்டில் இருந்தார்கள் கலை மூவரையும் வாருங்கள் என்று அழைத்துவிட்டு ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் என்னிடம் சொல்லி இருக்கலாமே நான் வந்து இருப்பேனே அரசி உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எதற்கு இவ்வளவு தூரம் என்றார் கலை ..என்ன இவ்வளவு தூரம் ஆதுவும் மூவரும் வந்திருக்கிறீர்கள் என்ன விஷயம் என்றார் முக்கியமான விஷயம் பேச வேண்டும் கலை அதனால் தான் என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் வந்து அமர்ந்தார்கள் கலை அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தார் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி குடித்தார்கள்…மாணிக்கம் தான் இப்பொழுது உனக்கு உடம்பு பரவாயில்லையா  அரிசி என்றார் பரவாயில்லை அண்ணா என்றார் பிறகு கலை தான் என்ன அரசி முக்கியமான விஷயம் என்றார் நான் ஒன்று கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே என்று மாணிக்கம் கலை இருவரையும் பார்த்து அரசி கேட்டார்…”இருவரும் தங்கள் முகத்தை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு எதுவும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம் சொல் அரசி என்றார்கள் இல்லை என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு வருவை தேவாவிற்கு கேட்கலாம் என்று எண்ணினோம் “அதனால் தான் என்றார்கள் இருவரும் அமைதியாக அரசியை பார்த்தார்கள்…இருவரும் அதிர்ச்சியாக எல்லாம் பார்க்கவில்லை அதன் பிறகு அரசியே மேற்கொண்டு தொடர்ந்தார் நீங்கள் எனக்கு உதவி செய்வதற்கு தான் வந்தீர்கள் ஆனால் நான் உங்கள் பெண்ணை கேட்கிறேன் என்று எண்ணாதீர்கள் எனக்கு வருவை பிடித்திருக்கிறது என்றார்..அது அப்போது இப்போது நாம் ஒருவருக்குள் ஒருவராக தானே இருக்கிறோம் அண்ணன் தங்கையாக தானே பழகிக் கொண்டிருக்கிறோம் அப்புறம் என்ன என்றார்கள் இருந்தாலும்  உங்களுக்கு என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் அவனைப் பற்றியும் தெரியும் என்று நினைக்கிறேன் என்றார்…அதுதான் நீ அப்பொழுதே சொல்லி இருக்கிறாயே அரசி எங்களுக்கு தெரியுமே தேவாவை பற்றியும் உன்னை பற்றியும் உங்கள் இருவருக்கும் இருக்கும் உறவைப் பற்றியும் தெரியுமே என்றார் அதனால் தான் கலை  யோசித்து உங்களது முடிவை சொல்லுங்கள் நீங்கள் மட்டும் யோசிக்க வேண்டாம் வருவிடமும் இதை பற்றி பேசுங்கள் …அவளுக்கு விருப்பம் இருந்தால் நம் மேற்கொண்டு இதைப் பற்றி பேசலாம் என்றார் நாங்கள் வருவிடம் பேசுகிறோம் என்று விட்டு கலை தனது கணவனை பார்த்தார் அவர் சரி என்று தலையாட்டிய பிறகு சரி அரிசி எங்கள் இருவருக்கும் விருப்பம் தான் தேவா தம்பியை விட ஒரு நல்ல பையன் எங்கள் பெண்ணுக்கு கிடைத்து விடுமா ?…ஆனால் இதுவரை நாங்கள் வரு திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை அதுதான் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருக்கிறது என்றார் அரசி அமைதியாக பார்த்தார் நானும் அதைத்தான் சொல்கிறேன் கலை வருவிடம் பேசுங்கள் இது அவளுடைய வாழ்க்கை அவளுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் நாம் மேற்கொண்டு பேசலாம் என்றார்…கலை மாணிக்கம் இருவரும் சரி என்றார்கள் அனைவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் பொழுது வரு அலுவலகம் முடிந்து வீட்டிற்குள் வந்தாள் தேவாவின் பெற்றவர்களும் தம்பியும் இருப்பதை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் என்ன மூவரும் வந்திருக்கிறார்கள் என்று யோசித்து விட்டு மூவரையும் வரவேற்று விட்டு அவளது அறைக்கு சென்றாள் …அறைக்குள் சென்றவுடன் என்ன விஷயம் மூவரும் வந்திருக்கிறார்கள் என்று யோசித்தாள் வருவை தேவாவிற்கு பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் வரு துள்ளி குதித்து சம்மதம்  சொல்வாளா இல்லை இதற்கு தன்னுடைய தேவ் எப்படி ஒத்துக் கொண்டான் என்று யோசிப்பாளா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன்❣️தனிமையின் காதலி❣️

2 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *