Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 30

பூவிதழில் பூத்த புன்னகையே 30

” வரு தேவா இருவருக்கும் நாளை நிச்சயம் என்று இருக்கும் நிலையில் இன்று மாலை இருவரும் அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சொல்ல வேண்டுமா ?”என்று யோசித்தார்கள் …வரு தேவாவின் அறை கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் அவனும் வா என்று சொன்ன பிறகுதான் உள்ளே நுழைந்தாள்  வரு வந்துவிட்டு “ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு நிச்சயத்திற்கு அலுவலகத்தில் உள்ளவர்களிடம் சொல்ல வேண்டுமா? என்று கேட்டாள்” …அவள் வந்த பிறகும் தன்னுடைய வேலை  கவனத்தில் இருந்தவன் அவள் அவ்வாறு கேட்டவுடன் “அவளை அமைதியாக நிமிர்ந்து பார்த்து விட்டு உனக்கு சொல்ல வேண்டும் என்று இருந்தால் சொல்லிக் கொள்”..நான் திருமணத்திற்கு தான் அனைவரிடமும் சொல்ல போகிறேன் என்றான் ஏற்கனவே வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விட்டேன் என் பக்கம் இருந்து நண்பன் என்றால் வாசு மட்டும் தான் வருவான் ..மற்றபடி உறவினர்கள் கூட அக்கம் பக்கம் இருப்பவர்கள் தான் உனக்கு மேற்கொண்டு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன் என்று விட்டு அமைதியாகி விட்டான்..ஆனால் “அவனது கைகள் என்னவோ வேலை செய்து கொண்டிருந்தது ஆனால் கண்கள் அவளை தான் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தது” வருவும் அதை உணர்ந்து விட்டு சரி நான் யாரையும் கூப்பிடவில்லை என்று விட்டு சுவாதிக்கு சொல்லலாமா? என்று கேட்டாள் …இப்பொழுது “நேரடியாகவே அவளது கண்ணை பார்த்தவன் நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் உனக்கு விருப்பமிருந்தால் நீ யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள் “என்றான்.. “வரு அவனை முறைத்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் வெளியே கிளம்பி விட்டாள் இவள் வந்து கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டும் ஆனால் மேடம் எதுவும் சொல்லிவிட்டு செல்ல மாட்டார்கள்” என்று எண்ணினான்..அதற்கு அவனது மனசாட்சி அதை அவள் உன்னிடம் வந்து கேட்டாள் ஆனால் நீ அதற்கு முறையாக பதில் சொன்னாயா ?என்று கேட்டது . தனது மனசாட்சியை  புறம் தள்ளி வைத்துவிட்டு போகும் வருவையும் பார்த்து முறைத்துவிட்டு தன்னுடைய வேலையில் கவனத்தை வைத்தான்..நாளை இருவருக்கும் விடுமுறை அவனே சொல்லியும் கொண்டான் ஏற்கனவே வரு அவனுக்கு மெயில் அனுப்பி விட்டாள். நாளை விடுமுறை வேண்டும் என்று அதனால் தேவா இருவருக்கும் சேர்த்து விடுமுறை சொல்லிவிட்டான்..வாசு நேரடியாக எம்டிக்கு தனது விடுமுறையை பதிவு செய்து விட்டான் “தேவா தனது  எம்டியை நேரில் சென்று தனக்கு நாளை நிச்சயம் என்பதையும் சொன்னான் அவர் சந்தோஷத்துடன் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு என்னடா நாளை நிச்சயம் என்பதை இப்போது வந்து சொல்கிறாய் என்று கேட்டார்…”அவனது  கண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே கேட்டார் அவனும் நேரடியாக அவரது கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு எனக்கு பார்த்திருக்கும் பெண் யார் ?என்று உங்களுக்கு தெரியாது .எனக்கு நாளை நிச்சயம் என்றும் உங்களுக்கு தெரியாது ?அப்படி தானே அப்பா என்று சிரிப்புடனே கேட்டான்”..அவரும் சிரித்துக் கொண்டே நீயாக சொல்லவில்லையே என்றார் நான் சொன்னால் என்ன அவன் சொன்னால் என்ன என்றான். டேய் அவன்  திருமணத்திற்கு தான் அவன் சொல்ல வேண்டும்  என்றார். “நான் உங்கள் மகன் இல்லையா நான் சொல்லாமலே நீங்கள் வர மாட்டீர்களா “என்றான்…அவர் சிரித்துக் கொண்டே நான் வருவேன் நாளை நிச்சயம் சீக்கிரம் வீட்டிற்கு செல் என்று அனுப்பி வைத்தார் .அவனும் சரி என்று விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டான் .அன்றைய இரவு பொழுது “நாளை நிச்சயத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் தீரன் ஆட்களை வைத்து செய்து கொண்டு இருந்தார்”…முதலில் அவர் தனியாகத்தான் செய்து கொண்டிருந்தார் தேவா சொல்வதற்கு முன்பே வரு தான் இடைப்பட்ட நாட்களிலும் அவனது வீட்டிற்கு வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் வந்து செல்வாள் ..அப்போது அங்கிள் நீங்கள் தனியாக எந்த வேலையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்ய வேண்டாம் அப்பா ஆள் அனுப்புவார் அவரை வைத்து செய்து கொள்ளுங்கள் என்று விட்டாள் ..”அதன்படியே மாணிக்கம் ஒரு ஆள் அனுப்பி இருந்தார் அவர்களை வைத்து திருமண நிச்சயத்திற்கு தேவையான வேலைகளை செய்து கொண்டார்கள் “இரவு தேவா உணவு சமைப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும் போதே தீரன் எதுவும் செய்ய வேண்டாம் டா என்றார்…” அப்பா வெளியில் வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு சேராது  என்றான் டேய் நான் ஒன்றும் கடையில் வாங்கி சாப்பிட போவதில்லை என்றார் பின்ன என்றான் தீரன் சிரிப்புடன் நான் சமைத்து விட்டேன் என்றார் “தனது தந்தையை முறைத்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் அவனது அறைக்கு உடை மாற்ற சென்று விட்டான் பிறகு நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள் “தீரன் அரசியிடம் நாளை நிச்சயத்திற்கு என்னென்ன தேவை அனைத்தும் சரியாக இருக்கிறதா ?என்று பார் “என்று சொல்லி இருந்தார் …அப்பா இப்பொழுது நேரம் ஆகிறது நீங்கள் போய் தூங்குங்கள் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றான் இப்போதே சரி பார்த்து விட்டால் நன்றாக இருக்கும் காலையில் ஏதாவது இல்லை என்றால் கொஞ்சம் கஷ்டம் என்றார் ..”அப்பா ஏற்கனவே ஒன்று இரண்டு முறை பார்த்திருப்பீர்கள் அனைத்தும் இருக்கும் நீங்கள் போய் படுங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டு தனது தம்பி நாளை விடுமுறை எடுத்துக் கொள்வதால் அவனை அழைத்துக்கொண்டு சென்று படுத்துவிட்டான் “பாத்திரங்களை காலையில் எழுந்து கழுவிக் கொள்ளலாம் என்ற எண்ணம் ..”அவனுக்கு இப்பொழுது  எந்த வேலையும் செய்யத் தோன்றவில்லை என்பது தான் உண்மை” அவனது மனநிலை ஒரு நிலையிலும் இல்லை அது அவனுக்கும் தெரியும் படுத்த பத்து நிமிடத்தில் உறங்கியும் இருந்தான்..”ஆது தனது அண்ணனை எழுந்து  பார்த்தான் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு லேசாக தன் மேல் இருக்கும் அவனது  கையை எடுத்து கீழே வைத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றான் அனைத்து பாத்திரங்களையும் கழுவலாம் என்று சென்றான்”…ஏற்கனவே தீரன் கழுவி வைத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அப்பா நீங்கள் எதுக்கு செய்து கொண்டிருக்கிறீர்கள் நான் செய்திருப்பேனே என்றான் ..அனைத்தையும் இழுத்து போட்டு கொண்டு செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்றான் டேய் நீ படிக்கும் வேலையை பார் ஒரு நாள் செய்வதால் ஒன்று குறைந்து விடாது..  “நிச்சய வேலை முழுவதும் மாணிக்கம் அனுப்பி இருக்கும் ஆள் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் நான் மேலோட்டமாக தான் பார்க்கிறேன் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார்”…”சரிப்பா அம்மா எங்கே , தூங்கி விட்டார்களா என்று கேட்டான் ஒரு சில வேலைகளை இழுத்து போட்டு செய்ததால் அவளுக்கு கால் வலி வந்து விட்டது அதனால் இப்போதுதான் தைலம் தேய்த்து விட்டு வந்தேன்” …ஆனால் அவள் தூங்கி விட்டாளா? இல்லையா? என்று தெரியவில்லை தூங்கி இருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன் என்றார் பிறகு அவனும் “தனது தாய் தந்தை அறைக்குச் சென்றான் அரசி யோசனையாக இருப்பதை பார்த்துவிட்டு என்ன மா யோசனை என்று கேட்டுக் கொண்டே அவரது காலை அமுக்கி விட்டான்”…”அவரது கண்கள் கலங்கியது . ஆது அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு சாரி மா ” “நான் உங்களை மனதளவில் புண்படுத்தி இருந்தாள் அண்ணனின்  மீது இருக்கும் பாசத்தில் உங்களிடம் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் “ஆனால் ” நீங்கள் அண்ணனிடம் நடந்து  கொள்வதும் எனக்கு தவறாகப்பட்டது உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன் ஆனால் கொஞ்சம் அண்ணனை பற்றி யோசிங்கள் “என்று விட்டு அமைதியாக இருந்தான் …அவர் வேறு எதுவும் பேசவில்லை சிறிது நேரத்திற்கு பிறகு ” நீ  ஏன் இங்கு வந்திருக்கிறாய் தூங்கவில்லையா ? என்றார் அண்ணன் தூங்கி விட்டார் அவர் அதைக் கேட்க தான் தன்னிடம் நேரடியாக கேட்கவில்லை என்பதை உணர்ந்து விட்டு அண்ணன் தூங்கிவிட்டார்” …அதனால் நான் எழுந்து வந்தேன் அப்பா பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார் என்றான் தீரனும் பாத்திரங்கள் கழுவி வைத்துவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டு வந்தார்..பிறகு சரி ஆது நேரமாகிறது போய் தூங்கு என்றார் ஆதுவும் வேறு எதுவும் பேசாமல் தனது தாய் தந்தை இருவரையும் பார்த்துவிட்டு அவனது அறைக்குச் சென்றான் பிறகு தேவாவை கட்டியணைத்துக் கொண்டு தூங்கிவிட்டான் …மறுநாள் “காலை 10:30 to 12 நல்ல நேரத்தில் தேவமித்ரன் ❤️ வருணிகா இருவருக்கும் நிச்சயம் ஏற்பாடு நடைபெற்றது சிறிதாக வரு வீட்டில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மட்டும் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது”…”தேவாவின் பக்கம் இருந்து அருகில் உள்ள அக்கம்பக்கத்தினரும் வாசுவும் வந்திருந்தார்கள் வரு பக்கம் இருந்தும் வரு தன் தாய் தந்தையிடம் ஏற்கனவே சொல்லி விட்டாள் நிச்சயத்திற்கு அதிகமாக யாரையும் அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்”..அதனால்” வரு பக்கம் இருந்து வருவின் அம்மா கலையின் தங்கை தம்பி என்று சித்தி மாமா இருவரும் வருவின்  தந்தை பக்கம் இருந்து அவருடைய அண்ணன் வருவின் பெரியப்பா மூவரின் குடும்பத்தை மட்டும் அழைத்து சிம்பிளாக வரு வீட்டில் தேவா வருணிகா நிச்சயதார்த்தம் நடந்தேறியது” …”யாரும் அங்கு விளையாட்டிற்கு கூச்சலோ கிண்டலோ செய்யவில்லை  நிச்சயதார்த்தத்திற்கு என்று வருவிற்கு மோதிரம் வாங்கலாம் என்று சொன்னார்கள் வரு ஒரே வார்த்தையாக அரசியிடம் எனக்கு மோதிரம் வேண்டாம் எனக்கு சிறிதாக ஒரு பவுனில் செயின் மட்டும் வாங்கித் தாருங்கள் என்று கேட்டாள் “”அரசி ஒரு நிமிடம் வருகை அமைதியாக பார்த்தார் கலை தான் வரு இது என்ன பேச்சு அவர்கள் என்ன வாங்கி தர வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை தான் வாங்குவார்கள் உன் இஷ்டத்திற்கு இல்லை என்றார் “..”அது மட்டுமில்லாமல் நிச்சயத்திற்கு மோதிரம் தானே மாற்றுவார்கள் என்றார் அம்மா இது இப்போது வந்த பழக்கம் தானே நிச்சியதிற்கு முன்பு எல்லாம் தட்டு மட்டும் தானே மாற்றிக் கொள்வீர்கள் ஒரு பவுனில் மோதிரம் எடுக்கிறேன் என்று சொல்கிறார்கள்” …அதே ஒரு பவுனில் தானே நான் சிறிதாக ஒரு செயின் கேட்கிறேன் என்றாள் “அரசி சிரித்துக் கொண்டே சரி என்று விட்டு அமைதியாகி விட்டார் ஒரு பவுனில் எடுத்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமா? என்று யோசித்து விட்டு ஒன்றை பவுனில் சிறிதாக செயினும் ஒரு கிராமில் ஒரு சிறிய டாலரும் வாங்கினார்கள்”…”அதில் D💙V என்று போட்டிருந்தது வரு அதை பார்த்து சிரித்தாள் பிறகு தேவா ஒன்றுக்கு இரண்டு முறை இதை வரு கழுத்தில் மாற்றிவிட வேண்டுமா? என்று யோசித்தான் அரசி ஒரே வார்த்தையாக அவனே மாற்றி விடட்டும் என்று சொல்லிவிட்டார்” …”தன் தாய் சொல்லாவிட்டால் கூட இதை தன் தாயையோ இல்லை வேறு ஏதாவது ஒரு பெண்மணியையோ கூட மாற்றிவிட சொல்லி இருப்பான் அவர் முன்கூட்டியே சொல்லியிருந்ததால் அவனால் எதுவும் செய்ய முடியாதா காரணத்தால் வருவின் கழுத்தில்  அந்த சிறிய செயினை மாற்றிவிட்டு அவளை முறைக்கவும் செய்தான்”…”அவளது கழுத்தில் செயின் மாட்டி விடும் பொழுது கொக்கி ஒரு முடியில் சிக்கியது  அந்த முடியை எடுத்துக் கொண்டே அவளது காதில் சென்று உனக்கு  நீ கேட்டது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறாய் அவ்வளவு திமிர் என்றான் “..”ஏன் மோதிரம் போட்டுக் கொண்டால் வேண்டாம் என்று சொல்லி இருகிறாய் மோதிரம் போட்டால் குறைந்து விடுவாயோ என்று கேட்டான்”..”வரு அவனை பார்த்து சிரித்து விட்டு அவனது கழுத்தில் தங்கள் வீட்டில் வாங்கிய செயினை போட்டு விட்டாள் அந்த செயினை போட்டுவிட்டு அவனைப் போலவே அவனது காதில் லேசாக கிசு கிசுத்தபடி அப்படியே வச்சு கோடா எனக்கு திமிர் தான் என்று சொல்லிவிட்டு தன் உதடால் அவனது காது மாடல் உரச லேசாக பேசிவிட்டு நகர்ந்தாள்”..”வருவின் உதடு அவனது காது மாடலில் உரசியவுடன் அவனது உடல்கள் சிலிர்த்து அடங்கியது கிராதகி எப்படி எல்லாம் பண்றா என்று லேசாக முனங்க செய்தான் “. ..”நிச்சயமும்  நல்ல முறையில் முடித்துக் கொண்டு வருவை பார்த்து எப்படி எல்லாம் பண்ற பாரு என்று அவளை முறைத்துக் கொண்டே முனங்கினான் வருவும் அவனை பார்த்து சிரித்து விட்டு அமைதியாக நின்றாள்”..”வரு தேவா நிச்சயமும் நல்ல முறையில் நடந்தேறியது பிறகு கலை வீட்டிலே அனைவருக்கும் சாப்பாடு ரெடி ஆகி இருந்தது அனைவரும் இரு வீட்டார் சொந்த பந்தங்களும் ஒன்றாக வந்து சாப்பிட்டுவிட்டு நிச்சயதார்த்தத்தையும் நல்ல முறையில் முடித்துக் கொண்டு அவர்களது இடத்தை நோக்கி சென்றார்கள்” ..அதன் பிறகு “வரு தேவா வீட்டில் இருப்பவர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் ஆது வருவிற்கு ஊட்டி விடுமாறு சொன்னான் தேவா ஆதுவை முறைதான் அப்பொழுது வாசு தான் டேய் ஏன் ஊட்டி விட்டால் என்ன என்றான் அப்போது தேவா வாசுவை முறைத்தான்”..”வரு தான் சிரித்துக் கொண்டே ஆது அமைதியாக இரு அதெல்லாம் எதுவும் வேண்டாம் கல்யாணத்தின் போது வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம் என்றாள் “இப்பொழுது “தேவா வருவை முறைத்தான் முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பிறகு திருமணத்தின் போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறாள் “…”இவள் மனதில் இன்னும் என்னென்ன திட்டத்தை வைத்துக்கொண்டு என்னை பழி வாங்க காத்து இருக்கிறாளோ என்று மனதிற்குள் புலம்பினான்” ..”வரு அவனைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு கண்ணடித்தாள் தேவா தனது நெஞ்சை தடவிக் கொண்டான்” அதை “வாசு ,ஆது, வரு மூவரும் பார்க்க செய்தார்கள் பிறகு மூவரும் லேசாக சிரித்தும் கொண்டார்கள்..”அரசி நிச்சயம் நல்ல முறையில் முடிந்து வீட்டிற்கு கிளம்பும்போது  வருவின் அருகில் வந்து உனக்கு இப்பொழுது சந்தோஷமா என்றார் வரு அரசியை பார்த்து லேசாக சிரித்து விட்டு உங்களுக்கு சந்தோஷம் என்று சொல்லுங்கள் மாமியாரே ” என்று சொல்லிவிட்டு அமைதியாக அவரையே பார்த்தாள்…அவர் அவளைப் பார்த்து முறைத்துவிட்டு சரி கிளம்புகிறேன் நேரம் ஆகிறது என்று விட்டு அவரது வீடு நோக்கி சென்று விட்டார்கள் “வரு தேவா இருவரது திருமணமும் எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறுமா? வரும் அரசியை சமாளிப்பாளா ?இல்லை அரசி வருவை சமாளிக்க வேண்டி வருமா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️

3 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *