Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 31

பூவிதழில் பூத்த புன்னகையே 31

“வரு தேவா இருவரது நிச்சயமும் வரு வீட்டில் சிம்பிளாக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து நல்ல முறையில் நடந்தேறியது”..பிறகு அனைவரும் அவர்களது வீடு நோக்கிச் சென்றார்கள் அப்படியே நாட்கள் நகர்ந்து ஒரு வாரம் சென்று இருக்கும் “வரு அதிகமாக அலுவலகத்தில் தேவாவை முன்பு போல் இப்போது சீண்டுவதில்லை” …”தேவா கூட ஒரு சில நேரங்களில் இவள் என்ன அமைதியாக இருக்கிறாள் இவளது அமைதியில் பூகம்பம் வெடிக்குமா ? புன்னகை முளைக்குமா ?என்று யோசித்தான்”..” வாசு தனது நண்பனிடம் வந்து கேட்கவும் செய்தான் என்ன டா வரு இப்பொழுது எல்லாம் அமைதியாக இருக்கிறாள் என்ன அதிசயம் நல்ல பிள்ளையாக மாறிவிட்டாளா ?”இல்லை உன்னை வச்சு செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறாளா ?என்று சிரிப்பு உடனே கேட்டான்..” தேவா தனது நண்பனை  முறைத்துவிட்டு பிறகு சோகமாக அது எனக்கும் தான் மச்சான் தெரியவில்லை இவள் ஆப்பு வைக்கலாம் என்று இருக்கிறாள் போல என்று சொல்லி சிரித்தான் “இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வரு வந்தாள் ..இருவரும் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார்கள் தான் வரும் வரை சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள் தான் வந்தவுடன் அமைதியாக இருந்தாள் தன்னை பற்றி பேசியிருப்பவர்களோ என்று வரு  யோசித்து விட்டு அவர்கள் இருவரும் எதை பற்றியோ பேசட்டும் தனக்கென்ன என்று விட்டு தான் வந்து வேலையை பார்த்துக் கொண்டு கிளம்பி விட்டாள்…இப்படியே நாட்கள் உருண்டோடி ஒரு மாதங்களுக்கு மேல் சென்று இருக்கும் பிறகு “இரு வீட்டிலும் முகூர்த்த புடவை எடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள்” …”வரு ஒரு சில நேர அமைதிக்குப்பின் அனைவரும் வருவதாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால் ஏற்கனவே நிச்சயத்திற்கு அரசி தேவாவும் வருவும் சென்று எடுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்” …அப்பொழுது “தேவா தான் வரவில்லை நீங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டு அமைதியாக இருந்தான் அப்போது வரு தான் அரசிடம் வந்து மாமியாரே எனக்கு உங்கள் மகன் வேண்டாம் நீங்கள் என்னுடன் வந்து எடுத்துக்  கொடுங்கள் என்று கேட்டாள் “..”அரசியும் முறைத்துவிட்டு பிறகு சிரித்துக் கொண்டே அவளுடன் சென்று அவளுக்கு நிச்சய புடவை எடுத்துக் கொண்டு வந்தார் இப்போதும் அவ்வாறு செய்து விடக்கூடாது என்பதற்காக வரு முன்கூட்டியே அனைவரிடமும் பேசி விட்டாள்”…அரசியும் ஒத்துக் கொண்டு பிறகு தான் “முகூர்த்த புடவை எடுக்கச் சென்றார்கள் அதில் அவளுக்கு எந்த புடவையும் பிடிக்கவில்லை இது தனக்கு நன்றாக இருக்குமா என்று யோசித்தாள்”…”அவள் அதிகமாக புடவை அணிந்ததில்லை அதனால் புடவை பற்றி அவளுக்கு எதுவும் தெரியவில்லை” ஒரு சில நிமிட அமைதிக்கு பிறகு “தன் தாயிடமும் அரசியிடமும் உங்களுக்கு எந்த புடவை பிடித்து இருக்கிறதோ அதை எடுங்கள்” ..”எனக்கு புடவை தேர்வு செய்ய தெரியவில்லை என்று சொல்லி விட்டாள் தேவாவிற்கு தான் முதலில் கோபம் வந்தது அதை முதலில் சொன்னால் உங்களுக்கு என்னவாம் என்று லேசாக முனங்கவும் செய்தான்”..வரு அவனைப் பார்த்து முறைத்துவிட்டு நகர்ந்தாள் பிறகு கலை ,அரசி இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் தேவாவின் கண் அங்கு முகூர்த்த புடவை இருக்கும் செக்ஷனில் தான் பதிந்திருந்தது ..”அவனுக்கு ஒரு இரண்டு புடவை மிகவும் பிடித்திருந்தது அதை எப்படி இப்போது சொல்வது என்று யோசித்தான் ஆனால் அவனுக்கு அந்த வேலையை வைக்காமல் அரசி அந்த இரண்டு புடவையுமே  எடுக்க சொன்னார்”..” தேவா தன் தாயை மனதிற்குள் மெச்சிக் கொண்டு அவரை அமைதியாக பார்த்தான் அரசியும் தேவாவை பின் பக்கம் திரும்பி பார்த்து முறைத்துவிட்டு இந்த இரண்டில் உனக்கு எது பிடித்து இருக்கிறது என்று கேட்டார்” ..”வரு அவரது அருகில் வந்து நின்று மாமியாரே என்று அவரது காதில் குனிந்து இதை நான் கட்டிக் கொண்டாலும் என்னை ரசிக்க போவது உங்களது மகன் தானே உங்கள் மகனுக்கு எதை பிடித்து இருக்கிறதோ அதையே எடுத்து விடுங்கள்” என்று சொல்லி சிரித்தாள்…”அவர் அவளை முறைத்துவிட்டு  அவளது கையிலும் லேசா கிள்ளி வைத்துவிட்டு தேவாவின் அருகில் கொண்டு வந்து அந்த இரண்டு புடவையையும் வைத்தார்”…”தேவா தனக்கு இரண்டு புடவையும் பிடித்திருந்ததால் ஒன்று முகூர்த்தத்திற்கும் இன்னொன்று மாலை ரிசப்ஷனுக்கும் வைத்து கொள்ளுங்கள்” என்றான்…அப்பொழுது “ஆது தான் அண்ணா நீ என்ன அந்த காலத்தில் இருக்கிறாய் ? மாலை ரிசப்ஷனுக்கு லெகங்கா போல எடுத்துக் கொள்ளலாம் என்றான்  வரு அமைதியாக தான் இருந்தாள்” …பிறகு “தேவா எப்படியும் நம் வீட்டில் இருந்து மூன்று துணி எடுத்து கொடுப்போம் அல்லவா? அரசி எதுவும் சொல்லவில்லை ஆமாம் இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை கலை தான் அமைதியாக தனது மருமகனை பார்த்துக் கொண்டு நின்றார்”..பிறகு  இல்லப்பா அதான் “நிச்சயதார்த்தத்தின் போது ஒன்று எடுத்து கொண்டோம் அல்ல இப்பொழுது இரண்டு தான் என்றார் அவன் அரசியைப் பார்த்தான் அவர் கலையிடம் இருக்கட்டும்  கலை ஒன்றும் பிரச்சனை இல்லை “என்றார் …பிறகு இந்த இரண்டு புடவையும் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு அவனது கால்கள் எதுவும் பேசாமல் சென்றது வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக அவனைப் பார்த்தார்கள் ..”ஆது தான் லேசாக சிரிக்கவும் செய்துவிட்டு வருவின் அருகில் சென்று அண்ணா உங்களுக்கு அடுத்தபடியாக லெகங்கா எடுக்க போகிறார் என்றான்” டேய்” புடவையை உன் அண்ணன் எடுத்தது போல சொல்கிறாய் “என்றாள்..பின்ன இல்லையா “அண்ணன் ரொம்ப நேரமாக அந்த இரண்டு புடவையும் பார்த்துக் கொண்டிருந்ததார் அதனால் தான் அம்மா அந்த இரண்டு புடவையும் தேர்வு செய்தார் அதன் பிறகு அண்ணன் இந்த இரண்டு புடவையுமே இருக்கட்டும் என்று சொன்னார் “என்று சொல்லி சிரித்தான்…  வரு இப்போது லெகங்கா இருக்கும் செக்ஷனுக்கு சிரித்த முகமாக சென்றாள் அங்கு சென்றவுடன் “அவனுக்கு பேபி பிங்க் கலர் லெகங்கா பிடித்திருந்தது இருந்தாலும் இது அவளுக்கு நன்றாக இருக்குமா? என்று அவளை திரும்பிப் பார்த்து ஒரு நிமிடம் யோசித்தான்”..அப்பொழுது “அரசி அவனது அருகில் வந்து அந்த பிங்க் நிற லேகங்காவை எடுத்து வருவின் கையில் திணித்து இதை போட்டு பார்த்துக் கொண்டு வா என்றார் வருவும்  எதுவும் பேசாமல் சிரித்த முகமாக அதை போட்டு பார்த்துவிட்டு வந்தாள்”…”அவள் நடந்து வரும் போது அவளை பார்க்க பேரழகி   போல் இருந்தது தேவாவிற்கு இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளுமால் அனைவரையும் பார்த்தான் அனைவருக்கும் அவள் உடுத்திக் கொண்டு வந்த உடை சரியாகவும் நன்றாகவும் இருந்தவுடன் இதை எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள் “..பிறகு ஒரு லேகங்காவும் இரண்டு பட்டு புடவையும் தேர்வு செய்தார்கள் அப்பொழுது “வரு தான் ஆதுவிற்கு துணி அம்மா அப்பாவிற்கு துணி என்றாள் தேவா எதுவும் பேசாமல் அனைவருக்கும் கீழே எடுத்துக் கொள்ளலாம் என்றார் தீரன் “..அப்பொழுது “அங்கிள் எனக்கு மட்டும் இங்கே எடுத்தீர்கள் என்று கேட்டாள் உனக்கு முகூர்த்த புடவை காஸ்லியாக எடுப்பதற்கு இங்கு வந்தோம் மற்றபடி வீட்டில் உள்ளவர்களுக்கு புடவை எடுப்பதற்கு கீழே உள்ளது என்றார்” ..”வரு அமைதியாக தேவாவை பார்த்தாள் தேவா எதுவும் பேசாமல் இருந்தவுடன் அம்மா உங்களுக்கும் அத்தைக்கும் இங்கேயே இருக்கும் புடவையை பாருங்கள்” என்றாள் ..மாணிக்கம் தான்  நான் சொல்ல நினைத்ததை நீ சொல்லி விட்டாய் டா என்று சிரித்தார்  ஐ ஜாலி வாங்க என்று அனைவரையும் வர சொல்லிவிட்டு துள்ளிக் குதித்தாள்..”தேவா அவள் குதித்துக் கொண்டு வந்ததை பார்த்துவிட்டு இன்னும் சின்ன பிள்ளை என்று நினைப்பு என்று முனங்கினான் வரு தேவாவை பார்த்து முறைத்தாள் ஆது சிரிக்க செய்தான்” …பிறகு “அரசி ,கலை இருவருக்கும் ஒரே கலரில் ஒரே டிசைனில் புடவை எடுத்துக் கொண்டார்கள் அதேபோல் தீரன் ,மாணிக்கம் இருவருக்கும் ஒரே கலரில் சட்டை வேஷ்டி எடுக்கப்பட்டது இப்பொழுது ஆது தான்  அண்ணா நான் மட்டும் தனியாக இருப்பேனா “என்றான் “வரு ஆதுவின் அருகில் வந்து சிரித்த முகமாக உனக்கும் உன் அண்ணனுக்கும் ஒரே கலரில் எடுத்து விடலாம் டா செல்லம் என்று சொல்லி அவனது தாடையில் தட்டி விட்டு நகர்ந்தாள் “அவள் இப்பொழுது தேவாவிற்கு என்ன உடை என்று யோசித்தாள் …பாட்டி வேஷ்டி சட்டை கீழே இருக்கிறது என்றவுடன் இங்கு இருப்பதெல்லாம் வயது பெரியவர்களுக்கு என்று சொன்னவுடன் பேசாமல் கீழே சென்றார்கள்..அங்கு சென்று “தேவா ,ஆது இருவருக்கும் ஒரே கலரில் பார்த்தாள் பிறகு யோசனை வந்து வாசு விற்கும் சேர்த்து மூன்று உடை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் தேவா அவளை கேள்வியாக பார்த்தான்”..”வாசு அண்ணாவிற்கு அவருடைய சைஸ் தெரியும் என்று விட்டு அவனது கையில் அவனது கையில் திணித்தாள் தேவா லேசாக சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான் “பிறகு அனைவரும் உடை எடுத்த பிறகு அதற்கு மொத்த பணத்தையும் தேவா கொடுக்க வந்தான் …இல்லை “தாங்கள் தான் மாப்பிள்ளை பெண் வீட்டு சார்பாக உங்களுக்கு துணி எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றார் மாணிக்கம் சொன்னதுக்கு பொறுமையாக தேவா நான் இப்பொழுது மொத்த துணிக்கும் காசு கொடுத்து விடுகிறேன்” ..”நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆக வந்து பிறகு எனக்கு நீங்கள் என்ன எடுத்து தர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போது நான் எதையும் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் இப்போது எடுத்த அனைத்து துணிகளுக்கும் நானே தருகிறேன்” என்றான் …இல்லை “நீங்கள் செய்ய வேண்டுமோ செய்யுங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை  என்றான் அப்பொழுது அவன் காசு தரட்டும் என்றார் அரசி அதன் பிறகு மாணிக்கமும் எதுவும் சொல்லவில்லை அமைதியாக விட்டுவிட்டார் “பிறகு அனைத்திற்கும் தேவாவே பில் கட்டி விட்டு வெளியில் வந்தான்…அப்பொழுது “வரு அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரை காட்டி ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று சொன்னாள் தேவா லேசாக முனகவே செய்தான் அவளது காதில் கேட்க படியாக இன்னும் சின்ன பிள்ளை என்று நினைத்து அது வேண்டும் இது வேண்டும் என்று சொல்லிக்கொண்டு என்றான்”…”வரு தேவாவை முறைத்து பார்த்துவிட்டு உங்கள் காசில் ஒன்றும் வாங்கி தரத் தேவையில்லை நான் காசு தருகிறேன் வாருங்கள் என்று ஆதுவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தன் தாய், தந்தை ,அத்தை ,மாமா நால்வரையும் பார்த்து தலையாட்டிவிட்டு ஐஸ்கிரீம் பார்லருக்கு ஆதுவே அழைத்து கொண்டு சென்றாள்” …”தேவா தன் தலையில் அடித்துக் கொண்டு அவள் பின்னாடியே சென்றான் வீட்டில் உள்ள பெரியவர்கள் போகும் வருவையும் தேவையும் பார்த்து சிரித்தார்கள்”..” என்னதான் அவள் செய்வது தவறு என்று அவளிடம் பேசினாலும் அவள் பின்னால் செல்கிறான் என்று எண்ணி சிரித்தார்கள் பிறகு பெரியவர்களும் அந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் சென்றார்கள்”…” வரு தனக்கும் ஆதுவிற்கும் என்ன வேண்டும் என்று சொல்லிவிட்டு மற்ற அனைவரையும் கேள்வியாக பார்த்தாள் அனைவரும் தங்களுக்கு தேவையானதை சொன்னவுடன் தேவா தனக்கு வெண்ணிலா என்று சொன்னான்”..”வரு தேவாவை அற்புத புழுவை பார்ப்பது போல் பார்த்தாள் ஏனென்றால் அவன் தனக்கு வெண்ணிலா போதும் என்றவுடன் ஆதுவின் காதை கடித்தாள்” “என்னடா உன் அண்ணன் கஞ்ச பிசினாரி என்று நிரூபிக்கிறாரா என்றாள் “..”அண்ணி விடுங்களையும் என் அண்ணனை ரொம்ப ஓட்டாதீங்க என்று சொன்னான்  தேவா அவளை லேசாக முறைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்தான் “பிறகு ஆது பாதி சாப்பிட்டவுடன் டேய் போதும் சளி பிடித்து விடும் என்று சொல்லிவிட்டு ஆதி விடம் இருந்து வாங்கிக் கொண்டான் தேவா”…”வரு இதை பார்த்துவிட்டு அமைதியாக இல்லாமல் இந்த மானங்கெட்ட வேலைக்கு தனியா ஒன்னு வாங்கி சாப்பிட்டு இருக்கலாம் ” என்றாள் “தேவாவின் காதில் விழும்படியாக கலை தன் மகளின் காலை மிதித்தார் அரசி லேசாக சிரிக்க செய்தார்” …”தீரன் சிரித்துக் கொண்டே ஆதுவிற்கு ஐஸ்கிரீம் ஆகாதுடா வரு அவன் முழுவதாக எப்பொழுதுமே சாப்பிட மாட்டான் அதனால் தான் தேவா எப்பொழுதும் வெண்ணிலா மட்டும் வாங்கிக் கொள்வான் என்றார் விளக்கமாக”…”வரு இப்பொழுது தேவாவை நிமிர்ந்து பார்த்தாள் தேவா அவளை பார்க்காமல் தன் கடமையை கண் என்பது போல் ஐஸ்கிரீமை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்”..” இது தேறாது என்று அரசியும் வருவும் ஒரே போல் லேசாக முனகினார்கள் தேவா இருவரையும் பார்த்துவிட்டு லேசாக நெளிந்தான் “..ஆது தீரன் இருவரும் மற்ற  இருவரையும் பார்த்து சிரித்தார்கள் இவர்களது சிரிப்பு எப்பொழுதும் நீடிக்குமா ?வரு தேவா கல்யாணம் நன்றாக நடக்குமா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …அன்புடன் தனிமையின் காதலி கதை நகர்வு எப்படி இருக்கிறது என்று உங்களது விமர்சனங்களையும் மற்றும் ஸ்டிக்கர் , ரேட்டிங்கையும் தட்டி விட்டு செல்லுங்கள் ..என்னை பாலோ மற்றும் சப்ஸ்கிரைப் செய்து என்னுடைய அடுத்த அடுத்த பாகங்களை உடனுக்குடன் படியுங்கள் மிக்க நன்றி

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 31”

  1. CRVS2797

    அய்யய்யோ..! நீங்க இப்படி கேட்டாலே ஏதாவது ஆப்பு வைக்கப் போறிங்களோன்னு வயித்துக்குள்ள திகிலே வருது. அது மாதிரி எதுவும் பண்ணிடாதிங்க ப்ளீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *