அனைவரும் திருமணத்திற்கு தேவையான முகூர்த்த புடவை வேஷ்டி சட்டை அனைத்தையும் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கும் சென்று விட்டு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்…மாணிக்கம் , கலை , வரு மூவரையும் அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு தீரன் குடும்பத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள் வீட்டிற்கு சென்றவுடன் “அரசி அனைத்து புடவையும் எடுத்து பார்த்துவிட்டு இது அவளுக்கு நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டு இந்த புடவையை எடுத்துக் கொண்டு சென்று நல்ல கடையில் இப்பொழுதே கொடுத்தால் நன்றாக தைத்து கொடுப்பார்கள் என்றார்”…”தேவா தான் அமைதியாக இல்லாமல் இதை அங்கேயே சொல்லி இருந்தால் அங்கு அவர்களிடம் கொடுத்திருந்தால் அவர்கள் நன்றாக தைத்து வைத்திருப்பார்களே என்றான் அரசி தேவாவை முறைத்துவிட்டு அது எங்களுக்கு தெரியாது பாரு என்று விட்டு உள்ளே சென்றார்” …இப்போது அரசி என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் தேவா முழித்தான் “ஆது சிரித்துக் கொண்டே அண்ணா அண்ணியை நீங்கள் கடைக்கு அழைத்துக் கொண்டு சென்று அண்ணிக்கு பிடித்தது போல் நன்றாக அளவெடுத்து தைத்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்றான்… ஆது அவ்வாறு சொல்லிவிட்டு தனது அண்ணன் தன்னை முறைப்பார் என்று வேகமாக ஆது அறைக்குள் புகுந்து கொண்டான் போகும் “ஆதுவை பார்த்து தேவா முறைத்துவிட்டு இந்த சில்லுவண்டு எல்லாம் என்ன பேச்சு பேசுகிறது பார் என்று முனங்கினான்”…ஆது வெளியில் வந்தவுடன் படிக்கும் வேலையை பார் என்றான் அண்ணா எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு ஆது படிக்க உட்கார்ந்து விட்டான்…தேவாவும் அந்த புடவைகளை எல்லாம் தன்னுடைய அறையில் பத்திரமாக எடுத்துக் கொண்டு சென்று வைத்துவிட்டு இருக்கும் வேலைகளை பார்த்தான் ..இப்படியே நாட்களும் சென்றது வரு அவ்வப்போது வாரத்தில் இரண்டு , மூன்று நாட்கள் தேவா விட்டிற்கு வந்து செல்வாள் தேவா அப்படியெல்லாம் வரு வீட்டிற்கு செல்ல மாட்டான் ஏதாவது முக்கியமாக இருந்தால் அதுவும் அலுவலக நேரத்தில் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டு விட்டு வரு இல்லாத நேரத்தில் தான் அவர்கள் வீட்டிற்கு செல்வான்…அதுவும் தன் தந்தையை அதிகம் அலைய வைக்க கூடாது என்பதற்காகவே அவன் வருவான் இல்லை என்றால் தீரனை அனுப்பி வைத்து விடுவான் முடிந்த அளவிற்கு அனைத்து வேலைகளையும் அவனும் வாசுவும் பார்த்துக் கொள்கிறார்கள்.தீரனை அதிகமாக எங்கும் அலைய வைக்க வேண்டாம் என்று எண்ணி நிறைய உறவினர்கள் என்று எல்லாம் தீரன்,அரசி இரு பக்கமும் அவர்களுக்கு அதிகமாக இல்லை என்றாலும் அவர்களுடன் பழக்க உடையவர்கள் நண்பர்கள் என்று இருப்பவர்களுக்கு பத்திரிக்கை அவர்கள் இரண்டு பேரும் தான் வைத்தார்கள்…தன் தந்தையுடன் வேலை செய்தவர்கள் நண்பர்கள் என்பவர்களுக்கு மட்டும் தன் தந்தையை தன்னுடனே அழைத்து சென்று ஒரு நாளுக்கு இரண்டு வீட்டுக்கு மட்டும் பத்திரிகை வைத்துவிட்டு வருவான் இப்படி நாட்களும் சென்றது…இரு வீட்டிலும் கல்யாண வேலையும் நெருங்க நெருங்க “இரு வீட்டிலும் கல்யாண கலையும் கட்டியது இன்னும் திருமணத்திற்கு ஒரு வாரம் என்ற நிலையில் வந்து நின்றது முகூர்த்த புடவை எடுத்துக் கொண்டு வந்து ஒரு வாரத்திற்கு பிறகு தேவாவே வருவிற்கு போன் செய்தான்” …இருவரும் போனில் கூட தினமும் எல்லாம் பேசிக்கொள்ள மாட்டார்கள் வரு கூட தேவா வீட்டில் சென்று அங்குள்ளவர்களிடம் பேசிவிட்டு செல்வதை தவிர அலுவலகத்தில் சிறிதாக தேவாவை கண்டு கொள்ள மாட்டாள் ..போனிலும் அவனுக்கு போன் செய்து தொல்லை செய்யவில்லை அவனாகவும் எதற்காகவும் போன் செய்யவும் மாட்டான் அவனுக்கு திருமண விஷயமாக ஏதாவது பேச வேண்டும் என்றால் கலை, மாணிக்கத்திற்கு அழைத்து எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்வான்…இப்படி இருந்த நிலையில் தனக்கு தேவாவாக அழைத்தவுடன் எதற்கு என்று புரியாமல் ஒரு நிமிட யோசனைக்கு பிறகு சரி அட்டென்ட் செய்தால் தானே என்ன என்று தெரிய வரும் என்று எண்ணி விட்டு போன் அட்டென்ட் செய்தாள்…அந்த பக்கம் தேவா ஒரு நிமிட அமைதிக்கு பிறகு “திருமணத்திற்கு புடவை பிளவுஸ் தைக்க வேண்டும் என்றான் வரு அமைதியாக என்ன சொல்ல வருகிறான் என்று கேட்டுவிட்டு நாளை அலுவலகத்திற்கு வரும்பொழுது புடவை எடுத்துக் கொண்டு வாருங்கள் நான் எனக்கு தெரிந்த நல்ல டெய்லரிடம் தைக்க கொடுத்து விடுகிறேன் என்றாள்” .உங்களுக்கு எதற்கு சிரமம் என்றாள் வரு அவன் எப்படியும் தனக்காக என்று எதுவும் செய்ய மாட்டான் என்று எண்ணி அவ்வாறு சொன்னாள் அரசி ஏன் இந்த பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்தார் என்று உணர்ந்து விட்டு இல்லை நீ நான் இருவரும் சென்று தைக்க கொடுத்து விட்டு வரலாம் என்றார்…”வருவிற்கு ஒரு நிமிடம் தன் காதையே நம்ப முடியவில்லை என்ன சொன்னீர்கள் என்றாள் உன் காதில் என்ன கேட்டதோ அதை தான் சொன்னேன் என்று விட்டு வைத்து விட்டான்”..”சிடு மூஞ்சி நம்மிடம் இவ்வளவு பேசியதே பெரிய விஷயம்தான் சாமியாராக போக வேண்டியவனை என் தலையில் கட்டி வைக்கிறார்கள் என்று லேசாக முனக செய்தாள்”..அப்போது அவளது அருகில் இருந்த அவளுடைய தோழி சுவாதி என்ன டி லேசாக முனங்கி கொண்டிருக்கிறாய் என்று கேட்டாள். வரு அவளைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு ஒன்றும் இல்லை என்றாள்…” மேடம் வரவர இந்த உலகத்திலேயே இருப்பதில்லை வேறு எங்கே இருக்கிறீர்கள் ஒன்றும் புரியவில்லை என்று சிரித்தாள் பிச்சு புடுவேன் என்று சொன்னாள் வரு பின்ன என்னடி எந்த உலகத்துல தான் இருக்கேன்னு புரியமாட்டேங்குது”..” அடிக்கடி அவுட் ஆப் மோடு வேறு என்று சொல்லி சிரித்தாள் உனக்கு புரியும் போது புரியும் என்று சொல்லி சிரித்தாள் வரு தோடா என்று விட்டு சுவாதியும் சேர்ந்து சிரித்தாள் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வாசு வந்து நின்றான்”..”இருவரும் வேலை நேரத்தில் வேலையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது என்றான் இப்போது சுவாதி வாசுவை முறைத்துவிட்டு அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்தாள்” ..சாரி சார் என்று சொல்லிவிட்டு வரு தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள் வாசு இருவரையும் பார்த்து முறைத்து விட்டு நகர்ந்து விட்டான் அப்படியே அன்று மாலை வேலை வந்தது…” அலுவலகம் முடிந்து சுவாதியும் வருவும் பேசிக்கொண்டே பார்க்கிங் ஏரியாவில் வந்து நின்றார்கள் அப்பொழுது தேவா கீழ இறங்கி வந்தவன் வரு உன்னிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றான் சுவாதி குருகுருவென தேவாவை பார்த்தாள் “..”தேவா சுவாதியை பார்த்துவிட்டு வருவிடம் இன்னும் சுவாதி இடம் எதுவும் நீ சொல்லவில்லையா ?என்று கேட்டான் வரு ஒரு நிமிடம் அமைதிக்குப் பிறகு நீங்கள் தான் அலுவலகத்தில் இருப்பவர்களிடம் சொல்லவில்லை என்று சொன்னீர்கள்”..பிறகு நான் எப்படி சொல்வது என்று கேட்டாள் வரு .”தேவாவிற்கு அவளை ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது நான் உன்னுடைய தோழியிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லையே அது மட்டும் இல்லாம இங்கு உள்ளவர்களிடமும் நான் உன்னை சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லையே நான் சொல்ல மாட்டேன் என்று மட்டும் தான் சொன்னேன் என்றான்”… “நீங்கள் சொல்லாமல் நான் மட்டும் எப்படி சொல்வது என்று கேட்டாள் நான் சொல்லாமல் நான் செய்யாமல் நீங்கள் எந்த வேலையும் செய்ய மாட்டீர்கள் சொல்ல மாட்டீர்கள் அப்படித்தானே என்றான் கோபமாக “…”சுவாதி இவர் ஏன் இவளிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணி விட்டு சார் அவள் என்ன செய்தாள் எதற்காக அவளிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாள் “…சுவாதி நாம் ஆபீஸை விட்டு வெளியே வந்து விட்டோம் என்றான். சுவாதி இருக்கட்டும் அண்ணா ஆனால் நீங்கள் அவளிடம் இவ்வாறு பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டாள்…”விஷயம் என்ன என்று தெரிந்தால் என்னை விட அதிக கோபப்படுவது நீதான் என்றான் சுவாதி ஒன்றும் புரியாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள் பிறகு தன் தோழி தலையை கீழே குனிந்து கொண்டிருந்தவுடன் வரு என்னடி என்று அவளது கையை பிடித்தாள்”..” வருவின் கண்ணில் இருந்து ஒரு சில நீர்த்துளி கீழே விழுந்தது சுவாதி அவளது தாடையை நிமிர்த்து விட்டு வரு இங்க பாரு என்ன விஷயம் நான் கோபித்துக் கொள்ள மாட்டேன் என்ன பத்தி உனக்கு தெரியாதா என்றாள்”…”தேவா அவள் எந்த அளவுக்கு பெரிய விஷயத்தை உன்னிடம் இந்த மறைத்து இருக்கிறாள் என்று தெரிந்தால் அதன் பிறகு தெரியும் என்றான்”…”அண்ணா போதும் நிறுத்துங்கள் அவள் ஏதோ ஒரு சூழ்நிலையில் கூட ஏதோ ஒரு விஷயத்தை மறைத்து இருக்கட்டும் அதற்காக நீங்கள் இப்படி பேசுவது சரியா இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும் எதற்காக அவளை அழைத்தீர்கள் அதை சொல்லிவிட்டு செல்லுங்கள்” …”என் தோழியிடம் நான் என்ன பேச வேண்டுமோ நான் பேசிக் கொள்கிறேன் என்று சொன்னாள் தேவா லேசாக சிரித்து விட்டு நாளை காலை பிளவுஸ் எடுத்துக் கொண்டு வந்து விடு மாலை செல்லும் போது தைக்க கொடுத்து விடலாம் என்றான் “…”வரு லேசாக மண்டையை ஆட்டினாள் சுவாதி அண்ணா ஒரு நிமிடம் என்றாள் அவள் எதற்கு பிளவுஸ் எடுத்து கொண்டு வர வேண்டும் அதை நீங்கள் தைக்க கொடுக்க வேண்டும் என்றாள் அதைப் பற்றி தானே பேசிக் கொண்டிருந்தேன்”…”நீ தான் என் தோழியிடம் நானே பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டாயே ! உன் தோழியே உனக்கு விளக்கமாக சொல்வார்கள் கேட்டுக் கொள் என்று விட்டு நகர்ந்தான்”..”அப்போதுதான் கீழே இறங்கி வந்தான் வாசு வருவின் கண்கள் கலங்கி இருப்பதையும் தேவா அவர்கள் இருவரையும் விட்டு நகர்வதையும் சுவாதியும் உடன் நின்று கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு வருவின் அருகில் வந்தான்”…”வரு என்றான் என்று அண்ணா என்று கேட்டாள் என்னாச்சு ஏதாவது திட்டி விட்டானா ஏன் உன் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று கேட்டான்” அப்போது “சுவாதி தான் ஒரு நிமிடம் அவர் ஏன் இவளை திட்ட வேண்டும் என்று கேட்டாள்”..” வாசு சுவாதியை அற்ப புழுவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு இவள் என்ன லூசு மாதிரி கேட்கிறாள் என்று எண்ணி விட்டு ஏன் திட்ட வேண்டும் என்றால் என்ன அர்த்தம் என்றான் இல்லை அவர் ஏன் இவளை திட்டி விட்டு செல்ல வேண்டும் என்று திரும்பவும் அதே கேள்வியை கேட்டு வைத்தாள்”..”அவன் தானே இவளை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் நார்மலாகவே இருவருக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும் இப்பொழுது இருவருக்கும் திருமண வேறு ஆக போகிறது ஏதாவது வேலை விஷயமாகவோ இல்லை வீட்டு விஷயமாகவோ இவளிடன் ஏதாவது கோபமாக பேசி விட்டானோ என்று கேட்கிறேன்”..”அதனால் என்ன தவறு என்று கேட்டான் சுவாதி பெய் அறைந்தது போல் தனது தோழியை பார்த்தாள் சுவாதியின் கை வருவின் கையை விட்டு நகர்ந்தது வாசு இப்பொழுது தான் அவள் முகத்தை வைத்து அவளுக்கு இந்த திருமணம் பற்றி தெரியவில்லை என்பதை தெரிந்து கொண்டான்” …”சுவாதி என்றான் வாசு ஒன்றும் இல்லை என்று விட்டு வருவை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்துவிட்டு வரு, வாசு இருவரிடமும் வேறு எதுவும் பேசாமல் தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள்” …சுவாதி சென்று பிறகு வாசு தான் வரு உன்னுடைய திருமணத்தைப் பற்றி நீ சுவாதியிடம் சொல்லவில்லையா ?நான் நிச்சயத்திற்கு உன்னிடம் கேட்டிருந்தேனே ஏன் சுவாதி வரவில்லை என்று அப்பொழுது அவளுக்கு ஏதோ வேலை என்று என்னிடம் பொய் சொன்னாயா?..”இப்பொழுது என்னவென்றால் அவள் பேய் அறைந்தது போல் பார்த்து விட்டு செல்கிறாள் என்றான் அண்ணா நான் இன்னும் எங்கள் திருமணத்தைப் பற்றி அவளிடம் சொல்லவில்லை என்றாள்”..”என்ன என்று கேட்டான் வாசு அதிர்ச்சியாகி வரு என்ன சொல்கிறாய் நீ தேவாவை காதலித்ததாவது அவளுக்கு தெரியுமா என்று கேட்டான்”..”நான் தேவாவை பற்றி சுவாதி இடம் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை என்றாள் வரு நீ என்ன செய்து வைத்திருக்கிறாய் என்று புரிகிறதா” என்றான் “இப்பொழுது நீ ஒரு நல்ல நட்பை இழக்க கூட நேரிடும் “என்றான்..”அவள் அந்த அளவிற்கு செல்ல மாட்டாள் அண்ணா இப்பொழுது அவள் அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு சென்றாள் என்றான் அது எனக்கும் தெரியும் நான் அவளை சமாளித்துக் கொள்கிறேன் உங்கள் நண்பருக்கு தான் இப்பொழுது என் மேல் கோபம் போய் அவரை சமாதானம் செய்யுங்கள்” என்றாள் ..”அவனிடம் என்ன பேசினாய் என்று கேட்டான் நான் சுவாதி இடம் சொல்லவில்லை என்ற உண்மை அவருக்கும் இப்போதுதான் தெரிந்தது அதனால்தான் என்னிடம் கோபித்து விட்டு செல்கிறார் என்றாள்”..சரி நான் அவனைப் பார்க்கிறேன் நீ சுவாதியை பார் என்று விட்டு நகர்ந்தான் வாசு.” சுவாதி வருவின் நெருங்கிய தோழி பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் உயிர் நண்பர்கள் வாசுவிற்கு சுவாதி மேல் பிரியம் இருக்கிறது ஆனால் அதை அவன் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறான் “… “சுவாதிக்கு தன்னை வாசு பார்ப்பதற்கான அர்த்தம் தெரிந்தும் தெரியாதது போல் சுவாதி ஒதுங்கி, நகர்ந்து விடுவாள்” …இப்போது “வரு நிச்சயத்திற்கு முன்பே தேவாவிடம் சுவாதிக்கு நிச்சயத்திற்கு சொல்லட்டா என்று கேட்டதற்கு தேவா உன்னுடைய விருப்பம் என்று தான் சொன்னானே தவிர நீ சொல்ல வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை.” ஆனால் “அலுவலகத்தில் இருப்பவர்களிடம் அவன் சொல்லாமல் தான் சொல்வது சரியாக வராது என்பதால் வரு சொல்லாமல் மறைத்தால் ஆனால் தேவா அவள் சுவாதியிடம் கூட சொல்லாமல் இருப்பாள் என்றெல்லாம் எண்ணவில்லை”..இப்பொழுது வரு சுவாதி ,தேவா இருவரையும் எப்படி சமாளிப்பாள் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன் தனிமையின் காதலிகதை நகர்வு எப்படி இருக்கிறது என்று உங்களது விமர்சனங்களையும் மற்றும் ஸ்டிக்கர் , ரேட்டிங்கையும் தட்டி விட்டு செல்லுங்கள் ..என்னை பாலோ மற்றும் சப்ஸ்கிரைப் செய்து என்னுடைய அடுத்த அடுத்த பாகங்களை உடனுக்குடன் படியுங்கள் மிக்க நன்றி
வரு செய்தது தவறு
ஆனாலும்… இவங்க ரெண்டு பேரும் பண்றது ரொம்பவே அநியாயம். அதுக்கு எதற்கு இவங்க கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுது.
Friend kitta solli irukanum varu
Interesting epi