வரு வாசுவுடன் பேசிவிட்டு தான் இப்போது முதலில் சுவாதியை பார்த்து பேச வேண்டும் ஆகையால் சுவாதி வீட்டுக்கு செல்லலாம் என்று எண்ணி கொஞ்ச தூரம் சென்று கொண்டிருந்தாள்..அப்போது “அவளுடைய தாயிடம் இருந்து போன் வந்தது நம் கலையிடம் வேறு சொல்லவில்லையே இப்பொழுது நேரம் ஆகிவிட்டது சரியாக கலையும் போன் செய்து விட்டதால் அம்மாவிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று எண்ணி போன் அட்டென்ட் செய்து அம்மா நான் சுவாதி வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் என்றாள்,”..” கலை சிரித்துக் கொண்டே அவள் உன்னை பார்க்க இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறாள் அவள் முகமும் சரியில்லை இருவருக்கும் ஏதாவது பிரச்சனையா ? என்றார் அம்மா நான் வந்து பேசுகிறேன் என்று விட்டு வண்டியை தன் வீட்டிற்கு விட்டாள்” அடுத்த கால் மணி நேரத்தில் வரு அவளது வீட்டில் இருந்தாள் தன் தாயை பார்த்துவிட்டு எங்க அம்மா சுவாதி என்றாள் அவள் உன்னுடைய அறையில் தான் உட்கார்ந்திருக்கிறாள் வரும் பொழுதே கோபமாக வந்தாள் என்ன செய்வீர்கள் என்று தெரியாது…” இன்னும் அரை மணி நேரத்தில் உங்கள் மகள் வீட்டில் இருக்க வேண்டும் என்று விட்டு உள்ளே அறைக்கு சென்று விட்டாள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் நான் அவளிடம் பேசிட்டு வருகிறேன் என்றாள்…”வரு ஏதாவது பெரிய விஷயமா என்றார் இல்லம்மா ஒன்றுமில்லை “என்று விட்டு சென்றாள் டீ என்றார் அவள் குடித்து விட்டாளா என்று கேட்டாள் வரு அவள் வந்தவுடனே குடித்து விட்டாள் கொடுத்துவிட்டேன் என்றார் ..சரி எனக்கு இப்பொழுது வேண்டாம் கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் செய்யாதே எனக்கு கொஞ்சம் பேச வேண்டும் என்றாள் அவரும் சிரித்துக் கொண்டே சரி என்று விட்டு நகர்ந்துவிட்டார் …இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரை பற்றியும் தெரிந்ததால் கலை மேற்கொண்டு வேறு எதுவும் கேட்கவில்லை அதன் பிறகு வரு உள்ளே சென்றவுடன் சுவாதி நிமிர்ந்து பார்த்துவிட்டு கதவை தாழ்ப்பாள் போட்டாள்…பிறகு “சுவாதி வருவை ஓங்கி ஒன்று விட்டாள் வருவும் சிரித்துக் கொண்டே தனது தோழியை பார்த்தாள் சிரிக்காத டி என்னிடம் மறைக்க கூடிய அளவிற்கு நீ பெரிய ஆளாக ஆகிவிட்டாயா? இல்லை நான் உனக்கு யாரோ வா ? எவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து இருக்கிறாய்” என்றாள்…”மறைக்க வேண்டும் என்று இல்லை என்றாள் பிறகு மறைக்க வேண்டும் என்று இல்லை என்றால் இன்னும் எத்தனை நாள் இருக்கிறது திருமணத்திற்கு ஆனால் நீ காதலித்ததையோ ,உனக்கு நிச்சயம் செய்ததையோ திருமண தேதி குறித்ததையோ இதுவரை என்னிடம் சொல்லவில்லை” …ஆனால் “எனக்கு உன் மேல் டவுட் இருந்தது நான் கூட உன்னிடம் இரண்டு முறை கேட்டு இருக்கிறேன் அப்போது எல்லாம் என்ன சொன்னாய் இந்த சிடுமூஞ்சியை போய் யாராவது விரும்புவார்களா ?என்று கேட்டாய் என்றாள்” …பின்ன “அவர் சிடுமூஞ்சி இல்லையா ?என்று சிரித்துக் கொண்டே வரு கேட்டாள் அந்த சிடு மூஞ்சியை தான் மேடம் இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் அது நினைவில் இருக்கிறதா ? “என்று ஸ்வாதி கேட்டாள்…வரு சிரித்துக் கொண்டே அவளை கொஞ்சினாள் போடி என்னை தொடாத என்றாள் “சாரி டி செல்லம் வேணுமென்று மறக்கவில்லை என்றாள் மேடம் காதலித்தையும் தான் சொல்லவில்லை நிச்சயத்தை கூட சொல்ல முடியாது என்று கேட்டாள்”…சுவே காதலித்ததை சொல்ல வேண்டாம் என்று இல்லை இரண்டு வருடங்களாக நான் அவரை காதலிக்கிறேன் என்றாள் என்ன இரண்டு வருடங்களாக வா ? என்று கேட்டாள்.அதிர்ச்சியாகாதே நான் அப்போதே என்னுடைய விருப்பத்தை அவரிடம் சொன்னேன் …ஆனால் “அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக எண்ணி வேண்டாம் என்று இத்தனை நாட்களாக ஒதுக்கிக் கொண்டிருந்தார் என்றாள் ஆனால் அப்புறம் எப்படி இப்பொழுது திருமணம் வரை என்று கேட்டாள்”.அவர் அம்மா மூலமாக நடந்தது. “வரு நான் சொல்வேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதே ? உனக்கு தேவா அண்ணனின் குடும்பத்தை பற்றி தெரியும் தானே என்றாள் .அமைதியாக இருந்தாள் என்ன டி வரு அவர்கள் சித்தி பற்றி தெரிந்தும் ஏன் “என்றாள்…”நீ அவர்களை தவறாக எண்ணுகிறாயா? என்று வரு கேட்டாள் நான் அவரை தவறாக எண்ணுகிறேனா என்பதெல்லாம் இல்லை இங்கு கேள்வி நாளை அவரால் உனக்கு ஏதாவது சங்கடம் என்றால் என்ன செய்வாய் என்றாள்”…”எனக்கு அவர் மூலமாக எந்த சங்கடமும் ஏற்படாது என்றாள் வரு. எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய் என்று கேட்டாள். சுவே இந்த திருமண நடைபெறவே காரணம் அவர்தான்” ..”புரியவில்லை எப்படி தேவா அண்ணனை தானே அவருக்கு பிடிக்காது .பிடிக்காது என்பது வெளிவேஷம் உள்ளுக்குள் அத்தனை பாசமும் இருக்கிறது” ..”அவர் வயிற்றில் பிறந்த ஆத்விக் மேல் இருக்கும் பாசத்தை விட தேவாவின் மீது அவர்களுக்கு கொள்ள பிரியம் இருக்கிறது” அதை நான் எப்போதே உணர்ந்து கொண்டேன் “..ஆனால் “அவர் இந்த பாசத்தை வெளியே காட்டாமல் உள்ளுக்குள்ளே வைத்திருக்கிறார் அதற்கு காரணம் என்ன என்பதை நான் அங்கு போய் தான் தெரிந்து கொள்ள முடியும்” .இருந்தாலும் என்றாள் சுவே.இல்லை டி சரி இதற்கு எப்படி தேவா அண்ணன் ஒத்துக் கொண்டார் என்றாள் வரு அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள் நான் ஒரு முறை மீட்டிங் செல்வதற்காக தேவாவிற்கு இரவு நேரத்தில் போன் செய்து இருந்தேன்…” அவர் ஏதோ வேலையாக இருந்ததால் ஸ்பீக்கரில் போட சொல்லி அவருடைய தம்பியிடம் சொல்லி இருக்கிறார் அப்போது நான் பேசிய அனைத்தையும் அவருடைய அம்மா கேட்டிருக்கிறார் நான் அப்போது விளையாட்டுத்தனமாக நிறைய விஷயங்கள் பேசி இருந்தேன் உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்”..பிறகு “அவருடைய அம்மாவே இரண்டு நாட்கள் யோசித்து விட்டு வாசு அண்ணனிடம் என்னுடைய நம்பர் வாங்கி என்னிடம் பேசிவிட்டு என்னை நம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் சந்தித்து பேசினார்கள் என்றாள் “என்ன பேசினார்கள் என்று கேட்டாள் சுவாதி..” அவர் மகனை விட்டு விலக சொல்லி என்றாள் அப்புறம் எப்படி என்று அதிர்ச்சியாக கேட்டாள் அவர் வாய் தான் என்னை தேவாவை விட்டு விலக சொன்னதே தவிர அவரது மனதோ கண்ணோ அவனை விட்டு விடாதே !என்பது போல் தான் எனக்கு தோன்றியது” …”லூசாடி நீ அது எப்படி என்றாள் நான் தான் சொல்லி விட்டேனே அவருக்கு தேவாவின் மீது அன்பு இருக்கிறது ஆனால் ஏதோ ஒன்று அவர் நேரடியாக அந்த அன்பை காட்ட மறைக்கிறது, தடுக்கிறது அது என்ன என்று தெரிய வரும் பொழுது சொல்கிறேன்” என்றாள்..சரி இருந்தாலும் இவ்வளவு தூரம் எப்படி வந்தது என்று கேட்டாள். அதன் பிறகு “தேவாவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை கர்ப்பப்பை எடுக்க வேண்டி இருந்தது. அந்த சூழலில் அவருக்கு ஒரு பெண் தேவை இருந்தது .அப்போது நான் போய் பார்த்துக் கொண்டேன் என்று விட்டு சுவாதியை பார்த்தாள்” ..”லூசாடி நீ தேவா அண்ணனுக்காக அவங்க அம்மாவை பார்த்துக் கொண்டாய் என்று நான் சொல்ல மாட்டேன்”. ” உன்னை பற்றி எனக்கு தெரியாதா ? என்றாள் .வரு சிரித்துக் கொண்டே அப்பொழுது நான் அம்மாவுடன் சென்று இருந்தேன் …”என்னால் தனி ஆளாக அவர்களை சமாளிக்க முடியுமா? என்று தெரியாமல் அம்மாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று இருந்தேன் உதவிக்கு அப்போது என்னையும் அப்பா அம்மா மொத்த குடும்பத்தையும் பிடித்திருக்கிறது அவருக்கு”…அதன்பிறகு “அம்மாவிற்கும் அவர்களுக்கும் நல்ல ஒட்டுதல் அப்படி இருக்கும் நிலையில் தான் என்னை வந்து குடும்பத்துடன் பெண் கேட்டார்கள். தேவா அண்ணன் ஒத்துக் கொண்டார்களா? அவரிடம் பேசிவிட்டு அவருக்கு இரண்டு நாட்கள் டைம் கொடுத்து இருக்கிறார்கள் “…”அவரும் சம்மதம் தெரிவித்த பிறகு தான் எங்கள் வீட்டில் வந்து பேசினார்கள். பிறகு எனக்கும் இரண்டு நாட்கள் டைம் கொடுத்தார்கள் நானும் யோசித்து விட்டு தான் என்னுடைய விருப்பத்தை சொன்னேன். அதன் பிறகு ஒரு வாரத்தில் நிச்சய ஏற்பாடு நடந்தது “…”சரி மேடம் நிச்சயத்திற்கு கூட என்னை கூப்பிட முடியாத அளவிற்கு நான் வெளியாளாகி விட்டேனா? அவர் ஆபீஸில் உள்ளவர்களை நிச்சயதிற்கு கூப்பிட மாட்டேன் என்று சொன்னார் அதனால் நானும் அவர் சொல்லாத பொழுது எப்படி சொல்வது என்பதால் யாரையும் கூப்பிடவில்லை “என்றாள்..” என்னை கூடவா ?என்று கேட்டாள் உன்னை கூப்பிட வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை .ஆனால் உன்னை கூப்பிடக் கூடிய நிலையில் நான் இல்லை என்றாள் அப்படி என்ன மேடமுக்கு நிலை” என்று கேட்டாள்..”நன்றாக யோசி சுவே அப்போது நீ எங்கிருந்தாய் என்று என்னடி அன்னைக்கு தான் என்னுடைய மாமன் எனக்கு ஒரு வயதான ஆளுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்கு பெண் பார்க்க வர சொல்லியிருந்தான்” …”உன் நிச்சயத்தை விட எனக்கு அது முக்கியமா என்று கேட்டாள் லூசு மாதிரி பேசாதே எனக்கு நீ அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை ஆனால் அந்த சூழ்நிலையில் நான் உன்னை இங்கு கொண்டு வந்து விட்டால் அது நன்றாக இருக்குமா ?”என்று கேட்டாள்…”சரி சரி ஓவராக பண்ணாதே அதன் பிறகு கூட நீ என்னிடம் சொல்லி இருக்கலாமே ?எப்படி சொல்வது சுவே உன்னுடைய சூழ்நிலையை யோசி ?என்னுடைய சூழ்நிலை என்ன டி.”.”அக்காவை பற்றி யோசித்தாயா ? லூசா நீ அவளை இப்போது அவளை பற்றி பேசினாலே எனக்கு பத்தி கொண்டு வருகிறது அக்கா என்னடி செய்தார்கள். என்ன செய்யவில்லை அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்று தெரிந்தும் அவனுடன் தான் வாழ்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்” …”அவளை அங்கு தனியாக விட்டு விட்டு என்னால் வர முடியாது அவளையும் அழைத்தாள் அவனை விட்டு விட்டு வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்” “இவள் பத்தாது என்று அவன் தினம் ஒருத்தி கூட சென்று விட்டு வருகிறான் “…”அப்படி இருந்தும் என்னுடைய அக்காவிற்கு கொஞ்சம் கூட புத்தி வரமாட்டேங்குது என்று விட்டு அமைதியாக இருந்தாள் சுவே அக்கா உண்மையாக தானே மாமாவை காதலித்தார் அரஞ்சேனே அவள் மட்டும் காதலிச்சா போதுமா ?ஆனா அவன் உண்மையாக இவளை காதலிக்கவில்லையே என்றவுடன் வரு கோபமாக சுவே என்ன பேசுறா”…யோசிச்சு பேசு ரெண்டு பேத்துக்கும் லவ் மேரேஜ் மாமா உன்ன நல்லா தானே பாத்துக்கிட்டாரு இப்ப அவர் கேரக்டர் சரியில்லன்றதுக்காக அவர் மொத்தமா சரியில்லை என்று பேசாதே ! என்றாள்.”ஆமாண்டி நீயும் அவளும் அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துக் கொண்டு தெரிவியுங்கள் அதனால் தான் அவன் இவ்வளவு தில்லாலங்கடி வேலையும் பண்ணிட்டு இருக்கான் என்றாள் கோபமாக”..சரி இப்போ அக்கா எப்படி இருக்காங்க என்றாள் அவளுக்கென்ன நன்றாக தான் இருக்கிறாள். ஆனால் “நீ நிச்சயத்திற்கு பிறகு கூட என்னிடம் இதைப் பற்றி இதுவரை பேசவில்லையே அதற்கு காரணம் அக்கா தான் டி”..என்ன அக்கா தான் லூசு மாதிரி பேசாத சுவே அக்கா இப்போ மாசமா இருக்காங்க இந்த மாதிரி நீ தான் அவங்களை பாத்துக்க வேண்டியது இருக்கு இப்ப போயிட்டு நான் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா? என்றாள்..”அவள் மாசமா இருந்தா நீ என்கிட்ட உன் வாழ்க்கையின் முக்கியமான விஷயத்தை சொல்ல மாட்டியோ லூசு மாதிரி பேசாதே எனக்கு உன்னை பொண்ணு பார்க்க வந்த போது அக்கா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க “…”அப்ப கூட மாமா அக்கா இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு தான் இப்படி நடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அவரது தாட்டையில் தட்டியுடனும் எழுந்திருக்கவில்லை என்று நீங்கள் மருத்துவமனை அழைத்துச் சென்றீர்கள் அப்போதுதான் அக்கா மாசமாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது”…”அஞ்சு வருஷமா குழந்தை இல்லாமல் இப்பொழுதுதான் குழந்தை தங்கி இருக்கு அதை சந்தோஷமா எடுத்துக்கோ இனி மாமாவும் அக்கா மாசமாக இருப்பதால் மாறி விடுவார் என்றாள்” அந்த லூசு அப்படித்தான் நினைச்சுட்டு இருக்கு இல்லன்னு வச்சுக்கோ அந்த லூசை கூப்பிட்டு எப்பையோ வந்து இருப்பேன்…”அவன் இவளை விட்டு விலகிச் சென்றாலும் அவள் தான் அவன் மேல பைத்தியமா இருக்கிறது என்றாள் சுவே”.சரி எப்படி மேடம் ஆபீஸ்ல இருக்க எல்லாத்துக்கும் பத்திரிக்கை கொடுக்கும்போது எனக்கு கொடுக்கலாம் என்ற ஐடியாவா ?என்று கேட்டாள்…”வரு உன்னை அப்பொழுது கூட கூப்பிட வேண்டாம் என்று எண்ணம் டி என்றாள் சிரித்துக் கொண்டே சுவாதி அவளை இரண்டு மூன்று அடி அடித்தவுடன் சிரித்துக் கொண்டே லூசு அப்படியே சொல்லாமல் விட்டு விடமாட்டேன் சரியா ?இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு உன்னுடைய பிறந்தநாள் அன்று உன்னிடம் சொல்லலாம் என்று என்னை அமைதி காத்தேன் என்று சொன்னாள்” ..நம்பிட்டேன் என்று சிரித்தாள் எப்படி நான் உன்னை நம்புவது என்றாள் பிறகு லூசு “திருமணத்திற்கு என்று உனக்கும் புடவை எடுத்து இருக்கிறேன் இருவருக்கும் ஒரே போல் “என்றாள்…”ஓ புடவை எடுக்கும் அளவிற்கு சென்று இருக்கிறாய் ஆனால் என்னை கூப்பிடவில்லை என்றாள் சுவே முதலில் இருந்து ஆரம்பிக்காதே ! ப்ளீஸ். புரிந்துகொள் என்றாள் .சரி டி கல்யாண பொண்ணு ஓவரா டென்ஷன் ஆகாதே”…” சரி புடவை எங்கு காட்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்றவுடன் வரு தன் தலையில் தட்டிக் கொண்டு உனக்காக எடுத்த புடவை அவர்கள் வீட்டில் எனக்கு எடுத்துக் கொடுத்த புடவை உடன் சென்றுவிட்டது “என்றாள் ..”அங்கு வைத்துக் கொண்டு எனக்கு எப்படி தருவாய் மேடம் என்ற சிரிப்புடன் கேட்டாள் லூசு இரு அவருக்கு போன் செய்கிறேன் அங்கு தான் இருக்கிறது என்று நினைக்கிறேன் “என்று விட்டு தேவா நம்பருக்கு அழைத்தாள் ..”அவனுடைய போன் தங்களுக்கு அருகில் தன் வீட்டில் அடிப்பது போல் இருந்தவுடன் வரு சுவே இருவரும் அதிர்ச்சியாகி நின்றார்கள்…வரு தான் லேசாக கதவைத் திறந்து பார்த்தாள் தேவா அவர்கள் வீட்டு வரவேற்பு அறையில் ஷோபாவில் உட்கார்ந்து இருப்பதை வரு பார்த்துவிட்டு நெளிந்தாள்” …”சுவாதியும் எட்டிப் பார்த்தாள் தேவா அங்கு தான் உட்கார்ந்து கொண்டு இருந்தான் இப்பொழுது சுவாதி ,வருணிகா இருவரும் பேசியதை தேவா கேட்டு இருப்பனா ?அப்படி கேட்டிருந்தால் அவனது எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை நம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் தனிமையின் காதலி
Interesting
அய்யோடா..! இவங்க மனசுல நினைக்கிதுக்கு கூட மத்தவங்க என்ன சொல்லுவாங்களோன்னு ரொம்ப ஓவராவே திங்க் பண்றாங்கப்பா.
Interesting update