வரு தேவாவிற்கு ஃபோன் போட்டவுடன் தேவாவின் போன் சத்தம் தங்களுக்கு அருகில் கேட்டவுடன் வரு அறைக் கதவை திறந்து விட்டு லேசாக வெளியில் எட்டி பார்த்தாள் …”தேவா அவர்கள் வீட்டு ஷோபாவில் உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு வரு நெளிந்தாள் சுவாதியும் எட்டி பார்த்தாள் அங்கு தேவா இருப்பதை பார்த்துவிட்டு வருவை பார்த்தாள் இருவரும் அமைதியாக வெளியில் வந்தார்கள்” …”வரு அமைதியாக எப்போது வந்தீர்கள் என்று கேட்டாள் இப்போதுதான் வந்தேன் இதை கொடுத்துவிட்டு செல்வதற்கு என்று நீட்டினான் வரு அமைதியாக அதை வாங்கி பார்த்துவிட்டு இதற்காக தான் நான் உங்களுக்கு போன் செய்தேன் சென்று விட்டு அமைதியாக இருந்தாள்”…”அம்மா இல்லையா உங்களை பார்க்கவில்லையா என்று கேட்டாள் அத்தை இருந்தார்கள் இப்பொழுது நான் வந்த பிறகுதான் வெளியே சென்றார்கள் அவர்களுக்கு ஏதோ வெளியே வேலையாக செல்வதாக இருந்தது என்னை இங்கு உட்கார சொல்லிவிட்டு நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்”…” நான் வந்து சிறிய நேரம் ஆகிறது நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததால் இங்கு உட்கார்ந்து இருந்தேன் சரி நான் கிளம்புகிறேன் என்று எழுந்தான் சுவாதியும் சரி நேரமாகிறது நான் வருகிறேன் என்று சொன்னாள்”…”இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி சுவாதி அவ்வாறு சொன்னாள் சுவாதி ஒரு நிமிடம் நீ வேண்டுமானால் உன் தோழியிடம் பேசிக் கொண்டிரு எனக்கு உண்மையாகவே வேலை இருக்கிறது என்றான் அண்ணா நானும் உண்மையாகவே வீட்டிற்கு செல்ல வேண்டும் “…”அக்கா தனியாக இருப்பாள் என்று சொன்னாள் இருவருமே அவர்கள் வேலையை பாருங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றாள் வரு. தேவா தான் தனியாக இருந்து கொள்வாயா என்று கேட்டான்.வரு சிரித்துக் கொண்டே இது என்னுடைய வீடு”..”எத்தனை நாட்களில் இந்த வீட்டில் நான் தனியாக இருந்திருக்கிறேன் எனக்கு ஒன்று பயமில்லை என்னை யாரும் தூக்கிக் கொண்டு சென்று விட மாட்டார்கள் “என்றாள் “இந்த வாய் வாய் வாய் கொண்றும் குறைச்சல் இல்லை வாயாடி என்று லேசாக முணங்கினான்”…அதை “சுவாதியும் கேட்டால் வருவும் கேட்டாள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள் “சரி என்று விட்டு தேவா சுவாதி ,இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்தார்கள் “சுவாதி தான் தேவா வண்டி எடுக்கும் போது அண்ணா நாங்கள் இருவரும் பேசியதை கேட்டீர்களா என்று கேட்டாள் “..”கேட்டேன் சுவாதி ஆனால் அவள் பேசியதில் ஒன்றும் தவறில்லை அதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவும் இல்லை நடந்த விஷயத்தை தன்னுடைய தோழியிடம் உன்னுடைய தோழி சொன்னதில் எனக்கு ஒன்றும் வருத்தமும் இல்லை” ஆனால் “இத்தனை நாட்கள் உன்னிடம் சொல்லாமல் இருந்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது “…அது எதனால் என்று இப்பொழுது புரிந்ததால் அமைதியாக விட்டு விட்டேன் என்றான் எப்பொழுது அண்ணா வந்தீர்கள் என்றகள் நீங்கள் உங்கள் அக்காவை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் இந்த புடவையை கொடுத்துவிட்டு செல்லலாம் என்று தான் வந்தேன் …”கதவைத் தட்டுவதற்கு வந்தேன் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்ததால் பெரிதாக எதுவும் விவாதமோ என்று எண்ணினேன் அப்போதுதான் அமைதியாக கேட்கும் பொழுது அனைத்தும் தெரிந்தது “இதற்கு மேல் கேட்க வேண்டாம் என்று வந்து அமர்ந்து விட்டேன் என்றான் ..அண்ணா சாரி என்றாள் இதுக்கு நீ சாரி கேட்கும் அளவிற்கு எல்லாம் இங்கு எதுவுமே இல்லை நீ உன்னுடைய தோழியின் வாழ்க்கைக்காக பார்க்கிறாய் அதை இப்பொழுது அல்ல எப்போதுமே தவறு இல்லை அந்த இடத்தில் நான் இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் அது தவறு இல்லை என்றான் ..”சுவாதியும் சரி என்று விட்டு கிளம்பினாள் ஒரு நிமிடம் என்றான் என்னன்னா உன் அக்காவை உன் மாமா புரிந்து கொள்ளும் நாள் வரும் சுவாதி உன் அக்காவின் காதல் உண்மை எனில் அவருடைய காதல் அவர் கை வந்து சேரும் நீ அவரை தனியாக அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணாதே” …”இது நான் உன்னுடைய அண்ணனாக சொல்கிறேன் என்று நீ எண்ணினாலும் சரி இல்லை வெளியாளாக சொல்கிறேன் என்று எண்ணினாலும் சரி கொஞ்சம் யோசி உன் அக்காவின் வாழ்க்கையில் நல்லது செய்கிறேன் என்று நீயாக எந்த முடிவும் எடுக்காதே” என்றான்…”அந்த ஒரே காரணத்திற்காக மட்டும் தான் அண்ணா நான் காத்துக் கொண்டிருக்கிறேன் அது மட்டும் இல்லை என்னுடைய மாமாவை பற்றி எனக்கு தெரியும் எப்பொழுது இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எனக்கு என்னுடைய அக்காவுக்கும் பக்க பலமாக இருந்தவர்”…இப்பொழுது “இரண்டு வருடங்களாக தானே இப்படி இருக்கிறார் என்ன அவருடைய கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்று கூட இல்லை என் அக்கா இருக்கும் போதே எப்படி சொல்வது வேறொரு பெண்ணுடன் ஒரு பெண் என்று இல்லை தினம் ஒருத்தி கூட போய்விட்டு வருகிறார்” ..”அதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது என்றாள் அது உன் அக்காவிற்கும் தெரியும் தானே என்று கேட்டான் தெரிந்தும் அவர் தன்னுடைய கணவன் திருந்துவான் என்று சொல்கிறாள் அது மட்டும் இல்லாமல் என்னுடைய கணவன் அப்படி இல்லை என்றும் சொல்கிறாள் “..ஆனால் “நானே என் கண் கூட அவரைப் பார்த்தேன் அதில் இருந்து தான் என்னால் அவரை நம்ப முடியவில்லை என்றாள் உன் அக்காவிற்கு உன் மாமா மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா ?உன் அக்காவின் வாழ்க்கை சீராகும்” ..” உன் மாமா சரியானவராக கூட இருக்கலாம் ஏதோ ஒரு சூழ்நிலையாக கூட இருக்கலாமே இப்போது குழந்தை வந்த பிறகு மாறுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றான்” எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது அண்ணா ..” காலம் தான் இனி பதில் சொல்லும் அந்த நம்பிக்கையில் தான் நான் அமைதியாக இருக்கிறேன் பார்ப்போம் சரி அண்ணா எனக்கு நேரமாகிறது அக்கா தனியாக இருப்பாள் நான் வருகிறேன் என்று விட்டு கிளம்பினாள்”..போகும் “சுவாதியை தேவா பார்த்துவிட்டு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணிவிட்டு வரு வீட்டை திரும்பி பார்த்தான்” …”அவர்கள் வீட்டு வாசலில் நின்று வரு தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் தனது வண்டியை உயிர் பித்து கொண்டு தனது வீட்டை நோக்கி பறந்தான்”..தேவா வீட்டிற்கு சென்றவுடன் அரசி தான்” எந்த நேரத்தில் எங்கு செல்வது என்று விவஸ்தை இல்லையா என்றார் அப்போது தேவா தன் தாயிடம் எதுவும் சொல்லாமல் லேசாக முனங்கி கொண்டே சமையல் அறைக்குள் போனான் ஒருத்தி நைட்டு எத்தனை மணி ஆனாலும் இங்க இருந்துட்டு போற அது தப்பு இல்ல நான் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்தது தப்பாம்” எல்லாம் கால கொடுமை என்று முனங்கினான் “..”அது தீரன் காதிலும் விழுந்தது அரசி ஆது, காதிலுல் விழுந்தது அரசி முறைத்தார் தீரனும் ஆதுவும் சிரித்துவிட்டு அண்ணன் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றான்”…”டேய் பொய் படிக்கிற வேலையை பாருடா என்று விட்டு நகர்ந்தார் அரசி. தேவா வருவதற்கு முன்பே தீரன் சமைத்து வைத்திருந்தார் அப்பா உங்களை யார் செய்ய சொன்னார்கள் நான் வந்து செய்திருப்பேனே” என்றான் ..”நீயும் கல்யாணம் வேலையாக அலைந்து கொண்டுதான் இருக்கிறாய் .உன்னை சமைக்க வேண்டாம் நான் மட்டும்தான் சமைப்பேன் என்று சொல்லவில்லை .ஆனால் உனக்கு அதிக வேலை இருக்கும் போது நான் சமைப்பதில் ஒன்றும் தவறில்லை” ..”10 நிமிடம் சமைப்பதில் நான் ஒன்றும் குறைந்து விட மாட்டேன் என்றார் பிறகு அனைவரும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டுவிட்டு படுக்க சென்று விட்டார்கள் சுவாதி அவளுடைய வீட்டிற்கு செல்லும் பொழுது அவளுடைய மாமா முறைத்துக் கொண்டு இருந்தார்” …எங்கு சென்று வருகிறாய் வரும் நேரம் என்ன என்றான் . ஏன் நான் எங்கு போகிறேன் என்று உங்களிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டுமா ?அவள் தான் உங்களிடம் சொல்ல வேண்டும் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாள்…” அவளைப் பற்றி அக்கறை கூட உனக்கு இல்லை. உன்னை நம்பி தானே இருக்கிறாள் உங்களை நம்பி இருக்கவில்லை அப்போது அவளுக்கு இந்த வீட்டில் என்ன வேலை என்றாள். அதைப்பற்றி உனக்கு தேவை இல்லாத விஷயம் அவள் என்னுடைய மனைவி என்றான் சுவாதியின் மாமா வசந்த்” …”போதும் நிறுத்துங்கள் இப்பொழுது என்ன அவளுக்கு என்றாள் அவள் ரொம்ப நேரமாக அடிவயிறு வலிக்கிறது என்று அழுது கொண்டிருக்கிறாள் உனக்கு போன் போட்டேன் எடுக்கவில்லை” என்றான் ..”சாரி என்று விட்டு உள்ளே சென்று தன் அக்காவை பார்த்தாள் சுவாதி.வசந்துவும் உள்ளே வந்தவன் மருத்துவமனை அழைத்துச் சென்று விட்டு வந்து விட்டேன் ஒன்றும் பெரிதாக இல்லை சூட்டு வலி என்று சொன்னார்கள் கொஞ்சம் பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறார்கள்” என்றான்..”சூட்டு வலியா? எப்படி வந்தது சூடு குறைய என்ன செய்ய வேண்டுமாம் வேறென்ன சொன்னார்கள் என்று கேட்டாள் ஆயில்மெண்ட் அவள் கையில் திணித்துவிட்டு இதை தடவி விட சொன்னார்கள்” என்றான்..” என்ன சூட்டு வலிக்கு ஆயில்மெண்ட் என்று விட்டு தனது அக்காவின் அறைக்குள் சென்று என்னாச்சு என்று கேட்டாள் ஒன்றுமில்லை சாதாரண சூட்டு வழி தான் என்றாள் . சூட்டு வலிக்கு ஆயில்மெண்ட் எதற்கு என்று கேட்டாள்” ..”அடியில் தடவ கொடுத்திருந்தார்கள் கூடு நான் தடவிக் கொள்கிறேன் என்று சொன்னாள் சுவாதியின் அக்கா மலர் .தன் அக்காவை அமைதியாக மேல் இருந்து கீழ் பார்த்துவிட்டு குடு நான் தடவி விடுகிறேன் என்றாள் சுவாதி ..”இல்லை டி என்றவுடன் அந்த ஆயின்மெண்ட்டை சுவற்றில் தூக்கி எறிந்து விட்டு என்ன தான் வேண்டும் உன்னுடைய புருஷனுக்கு தினம் ஒருத்தியுடன் சென்று விட்டு வருவது பத்தாதா..””நீ இந்த நிலையில் இருக்கும்போது கூட உன்னுடன் இருந்தாக வேண்டுமா ?இந்த குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறாரா என்றவுடன் சுவாதி உடைய அக்கா மலர் சுவாதியை ஓங்கி அறைந்து இருந்தாள்”… ” என்னுடைய புருஷனை நீயும் அளவுக்கு மீறி பேசிக் கொண்டிருக்கிறாய் என்னுடைய தங்கை என்பதற்காக தான் அமைதி காத்துக் கொண்டிருக்கிறேன் அவர் மேலும் ஓரளவுக்கு தவறு இருக்கிறது என்பதற்கான அமைதியாக இருக்கிறேன்”. ஆனால் “அளவுக்கு மீறி நீ பேசிக் கொண்டிருக்கிறாய் இதற்கு மேல் பேசுவதை நிறுத்திவிடு நான் எப்பொழுது கர்ப்பம் என்று சொன்னேனோ அதிலிருந்து அவர் வீட்டை விட்டு வெளியில் செல்வதில்லை” என்று விட்டு வெளியில் வந்தாள்..அப்பொழுது “சுவாதி அக்காவை மலர் மலர் என்று அழைத்து கொண்டே வெளியில் வரும்போது வசந்த் ஹாலில் நின்று அக்கா தங்கை இருவரும் பேசியதை கேட்டுக் கொண்டு தன் கண்ணில் வழியும் நீரை கூட துடைக்க தோன்றாமல் நின்று கொண்டு இருந்தான்”..”மலர் வசந்தத்தை பார்த்துவிட்டு நீங்கள் கொடுத்த இடம்தான் உங்களை இந்த அளவிற்கு பேசும்போது அமைதியாக இருந்ததால் தான் அவள் இந்த அளவிற்கு வந்து நிற்கிறாள்” என்றாள்.”சுவாதி தன் அக்கா பேசியவுடன் வெளியில் வந்தவள் தனது மாமா கண் கலங்கி நிற்பதை பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் சமையலறைக்குள் புகுந்தாள்”..”இரவு உணவு சமைக்கிறேன் என்று ஆனால் ஏற்கனவே அங்கு சமைத்து அனைத்து பாத்திரங்களையும் விளக்கி வைத்திருப்பதையும் பார்த்துவிட்டு அமைதியாக நின்றாள் “..”நீ வருவதற்கு நேரம் ஆகியதால் நானே சமைத்து விட்டேன் என்று விட்டு அவளுடைய மாமா வசந்த் வெளியில் சென்றுவிட்டான் “சுவாதி அங்கையே மடங்கி உட்கார்ந்து அழ செய்தாள் “”அவள் தன் மாமாவை நம்பாமல் இல்லை ஆனால் அவள் கண்கூட பார்த்த ஒன்றை அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை அப்பொழுது கூட ஏதோ ஒரு சூழ்நிலை என்று அமைதி காத்தாள்”. அதன்பிறகு “தன்னுடைய மாமாவை ஒரு பெண்ணுடன் நெருக்கமாக ஓரளவிற்கு பார்த்தவுடன் அவளுக்கு அங்கே செத்து விடலாம் போல இருந்தது “தன் அக்காவின் வாழ்க்கை இனி எப்படி இருக்கும்…” தன்னை தந்தை போல் தாங்கியவரை இப்படி யோசிப்பது சரியா ?என்று யோசித்தாள் . “சுவாதிக்கு அக்கா மட்டும்தான் அவளுடைய அப்பா அம்மா இருவரும் சுவாதியின் பள்ளி பருவத்திலே இறந்துவிட்டார்கள்” ..”அப்பொழுது இருந்து சுவாதியை மலர் தான் சுவாதி தன்னுடைய தங்கையாக மட்டுமில்லாமல் குழந்தையாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்”…”சுவாதி மலர் இருவருக்கும் வருடங்கள் வித்தியாசம் என்பதால் வயது பெண்ணை வைத்துக்கொண்டு மலர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் வசந்த் திருமணம் செய்வதையே தள்ளிப்போட்டு கொண்டிருந்தான் “…” வசந்த் ,மலர் இருவரும் கல்லூரி படிக்கும் போது இருந்தே விரும்பினார்கள் சுவாதிக்காக மட்டும்தான் திருமணத்தை அவள் ஓரளவுக்கு வளர்ந்து கல்லூரி படிப்பு முடிந்து சுவாதிக்கு வெளியுலகம் தெரிய ஆரம்பித்து பிறகு தான் திருமணம் செய்து கொண்டார்கள் “..”அப்பொழுது இருந்து வசந்த் தந்தையாகவும் குடும்பத் தலைவனாகவும் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்”. ஆனால் “இப்பொழுது இரண்டு வருடங்களாக தனது மாமாவின் போக்கு சரியில்லை என்றவுடன் குழந்தை இல்லாத காரணத்தினால் என்று கூட வசந்த் சட்டையை பிடித்து கேட்டு விட்டாள் சுவாதி”…”வசந்த் சிரித்துக்கொண்டே நகர்ந்து விட்டான் அவன் எதுவும் பதில் சொல்லாமல் சென்றது சுவாதியை மேலும் கோபம் அடைய செய்தது சுவாதி நினைப்பது போல் வசந்த் கெட்டவனா ?இல்லை சூழ்நிலை அவனை கெட்டவனாக காண்பிக்கிறதா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் தனிமையின் காதலி
Interesting
இந்த வசந்த் நல்லவனா..? கெட்டவனா…தெரியலையே..?
Nice update