“தேவாவிற்கு இப்பொழுது இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது வருவை எப்படி சமாதானம் செய்வது என்று புரியவில்லை”..”அவனுக்கு தான் செய்தது தவறு என்று தெரியும் ஆனால் அவன் வேண்டும் என்று செய்யவில்லை அவன் தன்னுடைய விருப்பத்தை முதலில் வருவிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணினான்”…”அதுவும் அவள் தன்னுடையவள் ஆன பின்பு என்று எண்ணினான் அதனால் தான் ஆது விடம் முதலில் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை அதனாலேயே எதை எதையோ சொல்லி தனது தம்பியை மழுபினான்”…ஆனால் “அந்த நேரத்தில் வரு வந்து நின்று தான் பேசி அனைத்தையும் கேட்பாள் என்றெல்லாம் அவன் எண்ணவில்லை” அமைதியாக அவனது அறைக்கு சென்றான்..” அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் சரி நாளை அலுவலகத்திற்கு சென்ற பிறகு இதைப் பற்றிய வருவிடம் தெளிவாக பேச வேண்டும் என்று எண்ணினான்”..இன்னும் திருமணத்திற்கு ஒரு வாரம் தான் இருக்கிறது இருவரும் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் தான் அலுவலகம் செல்வார்கள்..நாளை எப்படியாவது இதைப் பற்றி பேசி தீர்த்து விட வேண்டும் என்று யோசித்து விட்டு ஆதுவை பார்த்தான் அவன் படித்து கொண்டு இருந்தான் ..தேவாவிற்கு தூக்கம் வரவில்லை புலம்பி கொண்டு தவித்து கொண்டு படுத்து கொண்டு இருந்தான் ஆது தனது அண்ணனை பார்த்துவிட்டு அமைதியாக இருந்தான் ..பிறகு ஆது நேரம் ஆகிய பிறகு தூங்கி விட்டான் . தேவாவும் எதையெதையோ யோசித்து விட்டு விடியும் தருவாயில் கண் அயர்ந்தான் மறுநாள் பொழுது விடிந்தது ..”தேவாவிற்கு எந்த வேலையும் எளிதாக ஓடவில்லை காலையிலிருந்து மெதுவாக ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தான் தீரன் வந்து உதவ வந்தார்”..இல்லைப்பா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டு ஆதுவிற்கு நேரமாவதை உணர்ந்து வேகமாக அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி சென்றான்…”அங்கு சென்று விட்டு வருவிற்காக காத்துக் கொண்டு இருந்தான் அவள் எப்போதும் போலவே வந்து சேர்ந்தாள் அவளது முகத்தை பார்த்தான் அவளது முகத்தில் பெரிதாக எந்தவித மாற்றமும் அவனக்கு தெரியவில்லை”..”அழுது இருப்பாளோ என்று எண்ணினான் ஆனால் அவளது முகம் எப்பொழுதும் போல் இருந்தவுடன் அவளிடம் இதை முதலில் பேசி இன்றே இந்த விஷயத்தை தீர்க்க வேண்டும் என்று யோசித்தான் “..”இப்போது போய் அவள் இருக்கும் இடத்தில் நின்று அவளிடம் தன் மனதையும் வெளிப்படுத்த முடியாது என்று எண்ணிவிட்டு அவளை தன்னுடைய அறைக்கு வர வைத்தான்” “அவளும் வந்தாள் என்ன சார் என்று கேட்டாள் வரு நான் உன்னிடம் பேச வேண்டும் என்றான் ஆபீஸ் விஷயமாக பேசுவதாக இருந்தால் பேசலாம் என்று விட்டு ஒரு சில நொடி நின்றாள்”..”அவன் வரு நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள் என்றவுடன் சாரி சார் என்று விட்டு கதவை திறந்து கொண்டு வெளியில் சென்று விட்டாள் அதன் பிறகு அவனுக்கு பேசுவதற்கான வாய்ப்பு வரு தரவில்லை “..”அன்று மாலை பொழுதும் வந்தது வருவும் சுவாதியும் பார்கிங்கில் இருந்து வண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள் தேவா வேகமாக ஓடிவந்து வருவின் வண்டி சாவியை எடுத்துவிட்டான் “…”நான் பேசுவதை கொஞ்சம் பொறுமையாக கேள் அதன் பிறகு எந்த முடிவாக இருந்தாலும் எடுத்துக் கொள் என்றான் வரு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவுடன் சுவாதி இவர்கள் இருவரும் தனியாக பேசட்டும் என்று நகர்ந்து நின்றாள்..”அப்போது தான் தனது நண்பன் ஓடி வந்ததை பார்த்துவிட்டு வாசுவும் கீழே வந்தான் தனது நண்பன் வருவிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு டேய் என்னடா பண்ற என்று கேட்டான்”…”அண்ணா சாவி வாங்கி கொடுங்கள் நேரமாகிறது வீட்டிற்கு நேரமாகச் செல்ல வேண்டும் அம்மா திட்டுவார்கள் என்று சொன்னால் நீ என்ன சின்ன குழந்தையா உன்னை திட்ட போகிறார்கள் “..”இவ்வளவு நாட்கள் வீட்டிற்கு நேரமாக செல்லும் பொழுது தெரியவில்லையா என்றான் வாசுவிற்கு தனது நண்பனின் பேச்சு கோபத்தை வர வைத்தது இன்னும் ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு இவளை அவர்கள் வேலைக்கு அனுப்பியதே பெரிய விஷயம்”…” இதில் இவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இவ்வாறு எல்லாம் பேசுவான் என்று எண்ணி விட்டு சாவியை தனது நண்பனின் கையில் இருந்து வாங்கி வருவின் கையில் கொடுத்துவிட்டு நீ கிளம்பி வரு என்று விட்டு சுவாதியை பார்த்தான் “..”நேரம் இருந்தால் அவளை வீட்டில் விட்டுவிட்டு செல் என்றான் சுவாதியும் ஒரு தலையசைப்போடு வேறு எதுவும் பேசாமல் வருவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நகர்ந்தார்கள்”…” இருவரும் சொஞ்சம் தூரம் சென்ற பிறகு வரு சுவாதியிடம் நீ வீட்டிற்கு கிளம்பு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அனுப்பி வைத்தாள் வரு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாள் “”..”வரு ஒன்றும் இல்லை என்றவுடன் சுவாதி சரி அவர்கள் விஷயத்தை அவர்களே இருவரும் பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்று எண்ணிவிட்டு சுவாதியும் அவளது வீட்டிற்கு கிளம்பி விட்டாள்”..”வாசு தான் வரு சென்ற பிறகு என்ன டா செய்து கொண்டிருக்கிறாய் என்றான் தேவா தன் நண்பனை பார்த்துவிட்டு அமைதியாக வண்டியை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பார்க்கிற்கு சென்றான்”..”வாசுவும் அவனுடனே வந்தான் டேய் ஏன் இன்று முழுவதும் ஒரு மாதிரியாக இருந்தாய் வருவின் முகமும் நீ வண்டி சாவி வாங்கியவுடன் ஒரு மாதிரி ஆகிவிட்டது “..”என்னடா ஆச்சு அவள் முகத்தில் சிறிது கூட விளையாட்டுத்தனம் இல்லை நீ வண்டி சாவி வாங்கியதற்கு முன்பு போல் இருந்து இருந்தால் வாயடித்து இருந்து இருப்பாள்””..ஆனால் “இன்றோ அமைதியாக என்னிடம் சாவி வாங்கி தர சொல்கிறாள் அவள் அவ்வாறு பேசியதற்கு நீ அவளிடம் பேசியதும் தவறு என்றான்”..”தேவா வீட்டில் நேற்று இரவு நடந்த அனைத்தையும் சொன்ன உடன் வாசு தேவாவை ஓங்கி அறைந்து இருந்தான் தேவா நண்பனை அமைதியாக பார்த்தான்”..” இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அவளை உண்மையாக தானே விரும்புகிறாய் அவள் உன் மனதில் இல்லாமல் இருந்திருந்தால் நீ இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருப்பாயா? “..”இல்லை வரு இடத்தில் வேறு ஒரு பெண்ணை அரசி அம்மாவே உனக்கு பார்த்து இருந்தாலும் முழு மனதுடன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருப்பாயாக”..”வரு உன்னை காதலிக்கிறேன் என்று பின்னாடி வந்தபோது அம்மாவிற்காக என்று அவளை ஒதுக்கினாய். இப்போது அவர்களே உனக்கு இவளை பார்த்து திருமணம் முடிக்கும் வேலையில் கூட அவளது மனதை கொன்று புதைத்து இருக்கிறாய் “..”விதி வலியது டா உனக்கு இந்த வலியை அவள் கொடுத்திருந்தாள் உனக்கு தெரிந்திருக்கும் எதுவுமே ஈசியாக கிடைத்து விட்டாள் அதோட மதிப்பு தெரியாது என்று சொல்வார்கள் அது போல் தான் இருக்கிறது “..இப்பொழுது உன்னுடைய நிலைமை..” எந்த கஷ்டமும் படாமல் நீ நினைக்காமல் ஒரு பொக்கிஷம் உன் கை வந்து சேர்ந்ததல்ல அதனால்தான் உன்னால் முடிந்த அளவிற்கு நீ அவளை கஷ்டப்படுத்தி பார்க்கிறாய் “” நீ எல்லாம் மனிதனை கிடையாது என்று சொல்லிவிட்டு வாசு தனது நண்பனை பார்த்து இத்தனையும் கத்திவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்”..”தேவா அப்படியே உட்கார்ந்து இருந்தான் அவனுக்கு இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை இவளிடம் பேசிக் புரிய வைக்கலாம் என்று பார்த்தால் இவள் தான் பேசுவதற்கு கூட இடம் தரவில்லையே என்று யோசித்தான் “…”அப்படியே அன்றைய பொழுதும் கழிந்து மறுநாளும் வந்தது மறுநாளிலும் வரு தேவாவிற்கு தன்னிடம் பேசுவதற்கான இடம் கொடுக்கவில்லை”…”தேவாவிற்கு இப்பொழுது இதை எப்படி சரி செய்வது என்று கூட புரியவில்லை அடுத்த நாளிலிருந்து இருவரும் அலுவலகம் வேறு வரமாட்டோம் இன்னும் திருமணத்திற்கு 5 நாட்கள் தான் இருக்கிறது “என்று யோசித்தான் ..”நாளை திருமணத்திற்கு பந்தகால் வேறு நட போகிறார்கள் இவளை வெளியே எங்கும் பார்க்கவும் முடியாது என்று எண்ணி குழம்பி தவித்தான் அவனக்கு ஒன்றுமே புரியவில்லை”..” அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே வரு அவனது அறைகதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் தேவா அமைதியாக பார்த்தான் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு பத்திரிக்கை எப்போது வைப்பது என்று கேட்டாள் “…”தேவா வருவிடம் ஏற்கனவே திருமண பத்திரிகையை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு இன்று வைப்பதாக தான் ஏற்கனவே சொல்லி இருந்தான் அதனால் தான் அவள் அவ்வாறு வந்து கேட்கிறாள்”…”வரு பத்திரிக்கை என்றவுடன் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாயா என்று அவளை பார்த்து கேட்டான் அவள் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்ற உடன் நான் எடுத்துக் கொண்டு வரவில்லையே என்றான் “..”ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு வரு ஒன்றாக ஒரே பத்திரிக்கையை கொடுத்துவிடலாம் என்று சொன்னள் தேவாவும் சரி என்றான் பிறகு இருவரும் ஒன்றாகவே வெளியில் வந்து அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரே பத்திரிக்கையாக வைத்து அனைவரையும் திருமணத்திற்கு அழைத்தார்கள் “…”அனைவருமே நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா நிச்சயத்தின் போது கூட சொல்லவில்லை என்று கேட்டார்கள் நிச்சயம் சிம்பிலாக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து வீட்டில் நடந்து விட்டோம் “…அதனால் தான் “நாங்கள் இருவரும் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் நிச்சயத்திற்கு சொல்லவில்லை என்றாள் அலுவலகத்தில் உள்ள ஒரு சிலர் லவ் மேரேஜா என்று கேட்டார்கள் தேவா லேசாக சிரித்தான்”..”தேவா வீட்டில் பார்த்த பெண் வருவாக இருந்திருக்கும் அதனால் அதனால் திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருப்பான் என்று யோசித்தார்கள் “”அனைவருக்கும் தெரியுமே தேவா அலுவலகத்தில் இருக்கும் பெண்களிடம் எப்படி பழகுவான் என்று அது மட்டும் இல்லாமல் அவன் திருமணத்திற்கு முன்பு இதுவரை வரு விடம் அதிகமாக நெருக்கம் காட்டி பேசி இதுவரை யாரும் பார்த்ததில்லை அதனால் அவனது சிரிப்பு எதற்கு என்பதை உணர்ந்து விட்டு அமைதியாக இருந்தார்கள்”..”அது மட்டும் இல்லாமல் நிச்சயத்திற்கு பிறகு வரு சுத்தமாகவே தேவாவை பெரிதாக அலுவலகத்தில் சீண்டுவதில்லை சரி என்று அவர்கள் திருமணத்திற்கு வந்து விடுங்கள் என்றார்கள் சிரித்து முகமாக இருவருக்கும் வாழ்த்தும் தெரிவித்தார்கள் அனைவரும்..”வந்து விடுகிறோம் நாங்கள் இல்லாம உங்கள் திருமணம் என்றும் சிரிப்புடனே சொன்னார்கள் அப்படியே பத்திரிக்கை வைத்தவுடன் வரு எப்பொழுதும் போல் அவளுடைய இடத்திற்குச் சென்று அமர்ந்து விட்டாள்”..”மாலை தேவா வருவிற்கு போன் செய்ததற்கு கூட எடுத்து என்ன என்று கேட்டாள் ப்ளீஸ் நான் பேசுவது கொஞ்சம் கேள் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றான் அம்மா என்னை சீக்கிரம் வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டாள் “”..”அவனுக்கு தான் செய்த தவறு ஒரு பக்கம் என்றாலும் இவள் அந்த தவறை கூட திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தர மாட்டிக்கிறாளே என்று எண்ணம் அவனது மனதில் ஓடியது”..”அன்றைய பொழுது அப்படியே கழிந்தது தேவாவிற்கு ஒன்றுமே புரியவில்லை நாளை பந்த கால் நடுவதற்கு தேவையான அனைத்து சடங்குகளும் வீட்டில் நடந்தேறிக் கொண்டிருந்தது”..”அப்படியே அன்றைய பொழுது கழிந்து மறுநாள் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் இருவீட்டிலும் நடைபெற ஆரம்பித்தது தேவா வீட்டில் வாசு உதவிக்கு வந்து அனைத்து வேலைகளையும் செய்தான்”..அதேபோல் அங்கு “சுவாதியும் வருவிற்கு துணையாக இருந்தாள் இன்று மட்டும் வாசு, சுவாதி இருவரும் விடுமுறை எடுத்திருந்தார்கள் பிறகு திருமணத்தின் போதும் இரண்டு நாட்கள் லீவ் கேட்டு இருந்தார்கள் “..”எம்டியும் இருவருக்கும் லீவு கொடுத்து இருந்தார் பந்த கால் நடுவதற்கு அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தவுடன் அக்கம் பக்கம் இருப்பவர்களையும் நெருங்கி உறவினர்களையும் கூப்பிட்டு வருவீட்டிலும் அக்கம் பக்கம் இருப்பவர்களும் அரசிக்கும் தீரனுக்கும் தெரிந்தவர்களை அழைத்து வாசுவின் தாய் தந்தை அழைத்து தேவா வீட்டிலும் பந்த கால் நல்ல முறையில் நட்டு முதல் நாள் நலங்கும் வைத்தார்கள் “..”தாய்மாமன் தான் முதல் நலங்கு வைக்க வேண்டும் என்று இருந்தது வரு வீட்டில் வருவின் மாமா கலையின் தம்பி முதல் நலங்கு வைத்தார் தேவாவிற்கு தாய் மாமன் என்ற முறையில் யாரும் இல்லை என்று இருக்கும்போது தீரன் உடன் வேலை செய்தவர் ஒருவர் தான் அனைத்து எழுத்துக்கட்டி செய்து தான் தாய் மாமனாக இருக்கிறேன் என்று சொல்லி நலுங்கு வைத்தார்”..” தேவாவிற்கு கவனம் முழுவதும் இங்கே இல்லை மனது அரிது கொண்டிருந்தது தான் திருமணத்திற்கு முன்பே அவள் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பே தன்னுடைய மனதை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் ” ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை அவள் தராமல் தன்னை ஒதுக்கி கொண்டு இருக்கிறாளே”..”இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தவள் இப்பொழுது என் மீது அனைத்து கோபத்தையும் காட்டுகிறாளே நான் என்ன பேச வருகிறேன் என்று கூட காதில் வாங்கினால் கூட போதும் என்று யோசித்தான் “..”அவனுக்கு அழுகை வந்து விடுவது போல் இருந்தது இப்படியே தன்னுடைய வாழ்க்கை சென்று விடுமா என்னுடைய வாழ்க்கையில் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வலியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் திரும்பவும் இன்னொரு வலியா?”..” என் வாழ்க்கை முழுவதும் நான் இப்படியே தான் நான் வலியை சுமந்து கொண்டிருக்க வேண்டுமா? என்று யோசித்தா. தேவா வருவை சமாதானம் செய்வானா அதற்கான சந்தர்ப்பத்தை வரு அவனுக்கு தருவாளா ?”..இருவரும் சமாதானமாகி நல்ல முறையில் திருமணம் நடந்திடுமா ?இல்லை வரு தேவாவின் மீது இருக்கும் கோபத்தில் அவன் கையால் தாலியை ஏற்றுக்கொள்வாளா ?..”தேவாவின் வாழ்வு கடைசி வரை இப்படியே வலியுடனே சென்று விடுமா ?”என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் தனிமையின் காதலிஹாய் வாசக நெஞ்சங்களே சைலன்ட் லீடர்ஸ்களே உங்களது விமர்சனங்களையும் தட்டி விட்டு என்னுடைய கதையின் நகர்வு எப்படி இருக்கிறது என்று ஒரு இரு வரிகள் ஆவது சொல்லிவிட்டு செல்லுங்கள்…நீங்கள் சைலன்டாக படிப்பதால் என்னுடைய கதையின் நகர்வு எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று கூட எனக்கு தெரியவில்லை உங்களுக்காக நேரம் ஒதுக்கி எழுதி கொண்டு இருக்கிறேன் உங்களது கருத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளலாமே..உங்களது விமர்சனங்களை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்களின் kani suresh “தனிமையின் காதலி”
அதெப்படி வரு கல்யாணத்தை நிறுத்துவா…? அவ ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இருந்தே தேவாவை காதலிக்கிறவாளாச்சே…!
வரு முட்டாள்தனமா பண்றா தேவா பேச விடுனுமா இல்லையா
Nice epi