Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 37

பூவிதழில் பூத்த புன்னகையே 37

” பந்தக்கால் நட்ட அன்று மாலை 5 மணிக்கு மேல் தேவா வெளியே கிளம்ப அவனது அறையில் இருந்து வந்தான் அரசி அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தீரனிடம் கண்க காண்பித்தார் “”..

“வீட்டில் தான் தீரன் அரசி இருவரும் இருக்க செய்தார்கள் இன்னும் ஐந்து நாட்களில் திருமணம் என்பதால் தீரனும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தார் “..

இந்த நேரத்தில் எங்கடா கிளம்புகிறாய் ? என்றார் .அப்பா கொஞ்சம் வெளியே சென்று வருகிறேன் என்றான். தேவா விளையாடாதே “பந்த கால் நட்ட பிறகு இனிமேல் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது “..

அது பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி “பத்திரிக்கை வைத்ததற்கு பிறகு நேரம் கழித்து வரக்கூடாது நீ அன்று போல் இன்றும் வருவை  வைத்துப் பேசாதே என்றார் முன்கூட்டியே” …

“தேவா தனது தந்தையை அமைதியாக பார்த்துவிட்டு அப்பா இப்பொழுது மட்டும் சென்று விட்டு வருகிறேன் என்று கேட்டான் எதுவாக இருந்தாலும் நாளை காலை கூட பார்த்துக் கொள்” இப்பொழுது வேண்டாம் என்றார் ..

அப்பா என்றான் நாளை பார்த்துக் கொள் மாலை நேரத்தில் வேண்டாம் “அது மட்டும் இல்லாமல் இன்று தான் பந்த கால் நட்டது என்றார். தனது தாயைப் பார்த்தான் அவர் அமைதியாக இருந்தவுடன் அமைதியாக அவனது அறைக்குச் சென்று விட்டான்” …

“அவன் வருவைப் பார்த்து தன் பக்க நியாத்தை சொல்வதற்கு யோசித்தான் ஆனால் இன்று அனுப்ப மாட்டேன் என்று சொன்னவுடன் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை வருவிற்கு போன் செய்து பார்க்கலாமா ?என்று யோசித்தேன் “…

“ஆனால் இது போனில் பேசக்கூடிய விஷயம் இல்லை நேரில் தான் பேச வேண்டும் என்று அவனுக்கு தெரியும் இருந்தாலும் தான் போன் செய்தால் எடுப்பாளா ? என்று யோசித்து விட்டு போன் செய்தான் ஆனால் அவள் எடுக்கவில்லை”..

” அவள் வேண்டும் என்று எடுக்காமல் இல்லாமல் அவளுடைய போன் அவளுடைய அறையில் இருந்தது அவள் சொந்த பந்தங்கள் சூழ அவளுடைய வீட்டு வரவேற்பறையில் இருந்தாள் இன்று தான் அவர்கள் வீட்டிலும் பந்த கால் நட்டதால் அனைத்து உறவினர்களும் திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே நேற்று இரவே வந்து விட்டார்கள்””..

“அதனால் அவர்கள் வீட்டில் கல்யாண கலை கட்டி இருந்தது சொந்த பந்தங்கள் அவளை சுற்றி இருந்தனர் அவளுடைய போன் அவளுடைய அறையில் இருந்தது அதனால் அவளுக்கு தேவா போன் செய்ததே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும் “..

அன்று பொழுது அப்படியே எதையெதையோ யோசித்துக் கொண்டே தேவா உறங்கியும் இருந்தான் வரு இரவு தூங்கு வரும் போது தான் தன்னுடைய போனில் தேவாவின் மிஸ்டு கால் இருப்பதை பார்த்துவிட்டு இந்த நேரத்தில் அழைக்கலாமா ?என்று யோசித்தாள் பத்து மணிக்கு மேல் வேண்டாம் என்று விட்டு அமைதியாக விட்டு விட்டாள் ..

“காலையில் வேண்டுமானால் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி அவன் மேல் அவளுக்கு வருத்தம் கோபம் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் அதை அவன் செய்த போன் காலில் காட்ட வேண்டும் என்று எண்ணம் அவளுக்கு துளி கூட இல்லை “..

அது மட்டும் இல்லாமல் ஏதாவது அவசரமாக இருந்தால் இரண்டு மூன்று முறை அழைத்து இருப்பார் என்ற எண்ணம் அவளுக்கு இப்போது சாதாரணமாகத்தான் எப்படியும் அழைத்து இருப்பார் அதனால் தான் ஒரு முறைக்கு மேல் அழைக்கவில்லை என்று எண்ணிவிட்டு அமைதி காத்தாள் …

“அவளும் அப்படியே உறங்கி இருந்தாள் மறுநாள் பொழுதும் நன்றாக விடிந்தது தேவா, வரு இரு வீட்டிலும் கல்யாண கலை கட்டியிருந்தது தேவா வீட்டில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து ஒரு சில வேலைகளை செய்தார்கள் “

இன்றும் இரு வீட்டிலும் நலங்கு வைத்தார்கள் மதியம் 2 மணி போல் தேவா தன் தந்தையிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று எண்ணி அவனது அறையில் இருந்து வெளியில் வந்தான். ஏனென்றால் நலங்கு காலையில் வைத்தார்கள் அதுவே அவனுக்கு 12 மணி போல் ஆகிவிட்டது ..

அதன் பிறகு நலங்கிற்கு வந்தவர்களும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் சென்ற பிறகு அவனும் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைப்பதற்கு  இரண்டு மணி ஆகிவிட்டது “..

“தன் தந்தையிடம் அப்பா நான் இப்பொழுது வெளியே சென்று வரலாமா என்று கேட்டான் அவரும் அவனது முகத்தை பார்த்துவிட்டு அரசியை பார்த்தார் அரிசி தலை அசைத்தவுடன் சரி சீக்கிரம் வீட்டிற்கு வந்து சேர வேண்டும்  மாலைக்குள் வந்தாக வேண்டும் என்று அனுப்பி வைத்தார்”..

“சரி என்று விட்டு தனது வண்டியை எடுத்துக் கொண்டு வரு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்  மதியம் இரண்டு மணி போல் தான் வரு வீட்டிலும் அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துவிட்டு பெரியோர்கள் அனைவரும் படுப்பதற்கு கொஞ்சம் நேரம் படுத்திருந்து எழுந்தால்  தான் மாலைக்கு மேல் கொஞ்சம் வேலைகள் செய்ய முடியும் என்று அவர்களது அறைக்கு ஓய்வு எடுக்க சென்றார்கள்”

தேவா வரும் வேளையில் வரு வீட்டில் இலவட்டங்கள் எல்லாம் சுற்றி பார்ப்பதற்கு என்று வெளியில் சென்று இருந்ததால் பெரிதாக அவர்கள் வீட்டு வரவேற்பு அறையில் யாரும் இல்லை . அப்பொழுது கலை தான் அனைத்தையும் ஒதுங்க வைத்துக் கொண்டு இருந்தார் …

தேவாவை பார்த்துவிட்டு வா தேவா என்று அழைத்து அவனை உட்கார வைத்து தண்ணி கொடுத்துவிட்டு என்னப்பா இந்த நேரத்தில் எப்படி உன்னை விட்டார்கள் என்று கேட்டார் “தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அத்தை”  நான் வருவை பார்க்க வேண்டும் என்றான்”..

அவர் அமைதியாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவுடன் அவன் ஒரு நிமிடம் அமைதிக்கு பிறகு அத்தை என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றான்  அவரும் “ஒரு சில நிமிடம் யோசித்து விட்டு தன் மகள் இரண்டு மூன்று நாட்களாக எதையோ இழந்தது போல் இருப்பதை உணர்ந்து விட்டு இப்பொழுது தங்களுக்காக தான் எப்பொழுதும் போல் நடமாடி கொண்டிருக்கிறாள்” என்று எண்ணிவிட்டு சரி பா .

பேசிவிட்டு சீக்கிரம் கிளம்பி விடு உறவினர்கள் வேறு நிறைய இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் பந்த கால் வேறு நட்டாச்சு என்றார் சரி அத்தை என்று விட்டு ஒரு நிமிடம் நின்றவன் வரு எங்கே என்று கேட்டான் அவளுடைய அறையில் இருக்கிறாள் என்றார்…

“அத்தை என்று  விட்டு அமைதியாக நின்றான் அவள் மட்டும் தாம் தேவா இருக்கிறாள் அவளுடன் யாரும் இல்லப்பா வந்து சொந்த பந்தத்தில் இருக்கும் சிறியவர்கள் எல்லாம் வெளியே சுற்றி பார்க்க சென்றிருக்கிறார்கள் அதனால் அவளுடைய அறையில் அவள் மட்டும் தான் இருக்கிறாள்”

“நீ சீக்கிரம் பார்த்துவிட்டு வா நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன் என்று அனுப்பி வைத்தார் சரி என்று விட்டு உள்ளே சென்றான் வரு அப்பொழுதுதான் தான் போட்டிருந்த நகைகளை கழட்டி வைத்துக் கொண்டிருந்தாள் “

அறை கதவை திறந்தவுடன் தனது தாயாக இருக்கும் என்று எண்ணி  என்னம்மா நீயும் கொஞ்ச நேரம் படுக்க வேண்டியது தானே என்று குரல் கொடுத்துக்கொண்டு அவள் அனைத்து நகைகளையும் கழட்டிக் கொண்டு இருந்தாள்…

அப்பொழுது “தன் தாயிடம் இருந்து எந்த பேச்சும் இல்லை என்றவுடன் கண்ணாடி வழியாக குரல் கொடுக்கவில்லை என்று பார்த்தவள் தேவா  தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு தனது நெத்தி சுட்டியில் கை வைத்தவள் அப்படியே திரும்பி தேவாவை பார்த்தாள்”…

“”தேவா அமைதியாக அவளது அறை கதவை சாற்றி விட்டு வந்து அவளது அருகில் நின்றான் இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டாள்” தேவா  அமைதியாக அவளது கண்ணை உற்றுப் பார்த்து இருந்துவிட்டு நான் கொஞ்சம் பேச வேண்டும் என்றான்”..

“வரு அமைதியாக இருந்தாள் உன்னிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றான் என்ன பேச வேண்டும் இனி  பேச வேண்டியது எதுவும் இல்லையே  அன்றே அனைத்து பேசி விட்டீர்களே அப்பறம் என்ன என்றாள் “

“வரு கொஞ்சம் நான் என்ன தான் சொல்ல வருகிறேன் என்று கொஞ்சம் யோசி என் பக்கம் நியாயத்தையும் கேட்கலாம் அல்லவா ?என்று கேட்டான்  அதற்கான நேரத்தை எனக்கு தர மாட்டாயா ? என்றான்”..

“அவனது கண்கள் கலங்கி இப்பொழுதே விழுந்து விடுவேன் என்பது போல்  கண்ணீர்  முட்டி கொண்டு நிற்பதை பார்த்துவிட்டு தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு என்ன கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் “..

“உங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உண்மையாகவே உங்கள் மனதில் நான் இருக்கிறேன் என்று எண்ணி மட்டும் தான் நான் இந்த திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்னேன்”..

“நீங்கள்  உங்கள் அப்பா அம்மாவிற்காக சம்மதம் சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று எண்ணினேன் அந்த ஒரே காரணத்திற்காக தான் திருமணம் நிச்சயம் செய்த பிறகு கூட உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்தேன் “..

“அலுவலகத்தில் கூட நான் உங்களை தொந்தரவு செய்யவில்லை ஆனால் இவை அனைத்தையும் ஒரே வார்த்தையில் நீ நினைத்ததெல்லாம் தவறு நான் எப்போதும் இப்படிதான் இருப்பேன் என்பது போல் ஒரு நிமிடத்தில் தவிடு பொடி ஆக்கி விட்டீர்கள் “..

“எனக்கு புரியவில்லை நான் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் எல்லாம் பேசுகிறீர்கள் சரி ஆனால் என்னுடைய மனது என்ன என்று எல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது? புரிந்து கொள்ள முயற்சி எடுக்க மாட்டீர்கள் ?அப்படித்தானே என்றாள்”…

” நீயாக எதையாவது யோசித்துக் கொள்ளாதே என்றான்  உண்மையாகவே இத்தனை நாட்கள் தான் நானாக எதை எதையோ யோசித்துக் கொண்டு இருந்திருக்கிறேன் என்பதையே தெரிந்து கொண்டேன்”..

” உங்களுக்கு என் மீது ஏதோ ஒரு மூலையில் விருப்பம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இப்பொழுது தான் தெரிந்தது அப்படி ஒன்று என் மீது இந்த நிமிடம் வரை உங்களுக்கு இல்லவே இல்லை “என்பதையே அப்போது நான் உங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றால் நீங்கள் பேசியதை கேட்கவில்லை என்றால் இந்த நிமிடம் வரை ஒரு பைத்தியம் போல் நீங்களும் என்னை விரும்புகிறீர்கள் என்று எண்ணி இருந்திருப்பேன்…

” நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று எண்ணி உங்கள் கையால் என் கழுத்தில் தாலியும் வாங்கி இருந்திருப்பேன்” என்று மெதுவாக கத்தினாள் நான் உன்னிடம் வந்து சொன்னேனடி நீயாக எதையாவது யோசித்துக் கொள்வாயா? தெரியாமல் தான் கேட்கிறேன் “..

“ஏதோ ஒரு மூலையில் கூட நீ என் மனதில் இருக்கிறாய் என்று உனக்கு தெரியவில்லையா? அந்த அளவிற்கு தான் நான் நடந்து கொண்டேனா ?எனக்கு புரியவில்லை எந்த இடத்திலும் நான் கொஞ்சம் கூட தவறி என்னுடைய மனதை உனக்கு திறந்து காட்ட வில்லையா?..

“என்னுடைய விருப்பத்தை நான் ஆது விடம்  முதலில் சொல்லக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் அமைதியாக  இருந்தேன் ஆனால் அவன் என்னை விடாமல் கேட்டுக் கொண்டே இருந்ததால் அவனை சரி கட்டுவதற்காக அவ்வாறு கூறி மழுப்பினேன்.”..

” ஆனால் நீ என்ன எல்லாம் பேசுகிறாய் “என்றான் அப்பொழுதும் அமைதியாகவே தான் வரு இருந்தாள்  உன்னிடம் தான் டி பேசிக் கொண்டிருக்கிறேன் என்றான் போதும் இப்போது  கூட இன்னும் மூன்று நாட்களில் திருமணமாக போகிறது “..

“எங்கு நான் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவேனோ என்ற பயத்தில் என்னிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டால் அவள் அவ்வாறு கேட்டவுடன் தேவாவிற்கு எங்கிருந்துதான் கோபம் வந்ததோ அவளை அடிக்க கை ஓங்கிவிட்டு கீழே போட்டான் “..

“உனக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரியவில்லை அப்படித்தானே என்றான் ஆமாம் புரியாது தான் போதுமா கிளம்புங்கள் என்று கதவு பக்கம் கை காண்பித்தாள் “..

“அவள் போதும் என்று கை காண்பித்துடன் ஏற்கனவே இவளிடம் எப்படித்தான் சொல்லி புரிய வைப்பது ஆனால் திருமணத்திற்கு முன்பு என் மனதை இவளிடம் மொத்தமாக திறந்து காட்ட வேண்டுமே என்று யோசித்தான்”..

ஆனால் “அவன்  பேசுவதற்கு கூட அவள் வாய்ப்பளிக்கவில்லை “அவள் அது மட்டும் இல்லாமல் அவர்கள் வீட்டில் உறவினர்கள் வேறு இருக்கிறார்கள் நாம் இதற்கு மேல் பேசவும் முடியாது “

“அத்தை வேறு தனக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களும் பாவம் காலையிலிருந்து வேலையில் அசதியில் இருப்பார்கள் தான் வெளியில் சென்றால் தான் அவர் கொஞ்ச நேரமாவது உறங்கி எழுந்திருப்பார் என்று யோசித்து விட்டு வருவை ஒன்று இரண்டு முறை  திரும்பி பார்த்துக் கொண்டே வருவின் அறையிலிருந்து வெளியில் வந்தான் “…

“கலை தேவாவின் முகத்தை பார்த்தார் அப்பொழுதும் அவனது முகத்தில் தெளிவு வில்லை என்றவுடன் அவனது தோளில் தட்டி அனைத்தும் சரியாகும் தேவா உன் மனதிற்கு அனைத்தும் நன்றாக நடக்கும் “என்றார் ..

“அவன் கலங்கிய கண்களுடன் கலையை நிமிர்ந்து பார்த்தான்” அவர் அவனது தாடையில் லேசாக தட்டிக் கொடுத்து ஒன்றுமில்லை என்றார் அத்தை என்றான் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு இதுவரை தெரியாது ஆனால் அனைத்தும் சரியாகும் ..

“அவள் உங்கள் மேல் கோபத்தை காண்பிக்கிறாள் என்றால் என் மகள் என்பதற்காக அவள் சரி என்று சொல்லிவிட மாட்டேன் ஆனால் அவள் மனதளவில் காயம் பட ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் அல்லவா ? அதற்குக் காரணமும் நீங்களாக இருக்கக்கூடும் அல்லவா? அதை முடிந்த அளவிற்கு சரி செய்ய பாருங்கள் “..

“இப்படி மனதளவில் வலியோடு இருவரும் திருமண வாழ்வில் இணைந்தால் இருவருக்குமே கஷ்டம் என்றார் அதற்காகத்தான் அத்தை இந்த நேரத்தில் வந்திருக்கிறேன்” நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இப்படி ஒரு சூழ்நிலையில் திருமணம் பந்ததத்தில் இணைய வேண்டாம் என்பதற்காக மட்டும்தான் இப்பொழுது வந்திருக்கிறேன்”  பார்க்கலாம் அத்தை…

ஆனால்” இதற்கான நேரம் இதுவாய் என்று எனக்கு புரியவில்லை இப்படி தனிமையில் பேசுவதும் இப்போது சரியில்லை அது மட்டும் இல்லாமல் இருவருமே இப்போது வீட்டை விட்டு வெளியே எங்கும்  செல்லக்கூடாது என்றார் “..

புரிகிறது அத்தை முடிந்த அளவிற்கு சரி செய்கிறேன் என்று விட்டு  சரி அத்தை நீங்கள் கொஞ்ச நேரம் தூங்குங்கள் நான் வருகிறேன் என்று விட்டு அவனது வீட்டை நோக்கி சென்றான்..

கலை சொன்னது போல் தேவா வருவின் மனதை எப்படியாவது குளிர்வித்து விடுவானா இருவரும் திருமண பந்தத்தில் இணையும் பொழுது மனதிற்குள் எந்த வலிகளும் இல்லாமல் இணைவார்களா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

தனிமையின் காதலி

5 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 37”

  1. CRVS2797

    அதெல்லாம் தன்னோட திருமணத்துலேயே, தன்னோட செய்கையாலேயே எல்லாத்தையும் புரிய வைச்சிடலாம் தானே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *