Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 39

பூவிதழில் பூத்த புன்னகையே 39

“வாசு அரசியின் பெற்றவர்கள் வெங்கடேசன் பத்மினி இருவரையும் அழைத்து கொண்டு வந்து உடன் இருவருக்கும் முதலில் தங்களது மகளை பார்க்க வேண்டும் போல் இருந்தது “..”தங்களது மகள் அங்கு ஒரு சிலரிடம்  நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் அரசியின் அருகில் வந்து நின்றார்கள் அரசி இருவரையும் பார்த்துவிட்டு தன் கண்ணில் துளிர்க்கும் நீரை கூட துடைக்க தோன்றாமல் பார்த்துக் கொண்டு நின்றார்”..” தேவா தன் தாயின் அருகில் வந்து நின்று அவரது கையை பிடித்தான். அவர் அவனைப் பார்த்துவிட்டு அமைதியாக நின்றார் பிறகு தன் தாத்தா பாட்டியை பார்த்து இப்பொழுதுதான் பேரனுடைய நிச்சயத்திற்கு வருவதா என்றான்”…”அவர்கள் அவனை அமைதியாக பார்த்தார்கள் சரிபாட்டி எதுவாக இருந்தாலும் நாம் அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து பேசிக் கொள்ளலாம் இப்போது அனைவரும் இருக்கிறார்கள் என்று நாசுக்காக சொன்னான் “..”அவர்களுக்கும் புரிந்ததால் சரிப்பா நீ மாப்பிள்ளை போய் மேடையில் இரு என்று விட்டு எங்க டா எங்க பேத்தி என்று கேட்டார்கள் அவனும் வாசு விடம் அழைத்துக் கொண்டு செல்ல சொன்னான்””…பிறகு வெங்கடேசன், பத்மினி இருவரும் வருவின் அறைக்கு சென்றார்கள் அரசி இப்போது தனது தாய் தந்தையை  எதிர்க்கும் நிலையில் இல்லை என்பதால் அமைதியாக ஓர் இடத்தில் சென்று அமர்ந்தார்”..”தேவா  தனது அம்மாவிற்கு யோசிக்க கொஞ்ச நேரம் வேண்டும் என்பதற்காகவே அவன் இவ்வாறு செய்தான் அதை அரசியின் பெற்றவர்களும் உணர்ந்ததால் அமைதியாக வருவின் அறைக்குச் சென்றார்கள்”…” பாட்டி பத்மினி வருவின் தடையை பிடித்துக் கொண்டு அவளது நெற்றியில் முத்தம் வைத்தார்  இத்தனை வருடம் தேவா செய்ய முடியாத ஒன்றை நீ ஒரு நாளில் செய்து இருக்கிறாயே தங்கமே “உன்னை காலம் முழுவதும் என் பேரன் நன்றாக பார்த்துக் கொள்வான் என்றார்…”வரு லேசாக சிரித்துவிட்டு அதை நீங்கள் சொல்ல வேண்டுமா ?பாட்டி என்றாள். ஆனால் நீ சிரிக்கும் சிரிப்பு உன் கண்ணிலும் இல்லை உன் சிரிப்பில் உயிர்ப்பும் இல்லையே? என்ன என்று கேட்டார் …”வயது முதிர்ந்தவர் ஆயிற்றே அவரது வாழ்க்கை அனுபவமும் அவரை அவ்வாறு  கேட்க செய்தது “.ஒன்றுமில்லை பாட்டி என்று சிரித்துவிட்டு சரி பாட்டி சாப்பிட்டீர்களா? அத்தையை பார்த்தீர்களா என்று பேச்சை மாற்றினாள் ..”அவள் பேச்சை மாற்றி விதமே அவள் இப்போது இதைப்பற்றி பேச விரும்பவில்லை என்று உணர்ந்து விட்டு அதுவும் இல்லாமல் திருமணத்தின் போது இப்போது தாங்கள் ஏதாவது கேட்க போய் அவள் கலங்கி நின்றால் நன்றாக இருக்கிறது” என்று யோசித்து விட்டு சரி உன் நல்ல மனதிற்கும்  தேவாவின் நல்ல மனத்திற்கும் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று விட்டு நகர்ந்தார்கள்” ..”அதன் பிறகு ரிசப்ஷன் கோலாகலமாக ஆரம்பித்தது அப்போதுதான் ஆது வருவிடம் வந்து நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் அண்ணி  என்று கேட்டிருந்தான் “அதன் பிறகு ரிசப்ஷனுக்கு வந்தவர்கள் எல்லாம் சாப்பிட்டுச் சென்று பிறகு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிடுவதற்கு கிளம்பினார்கள் ..அப்போது “ஆது வருவை சாப்பிட கூட விடாமல் மணமகள் அறைக்கு வேகமாக அழைத்துச் சென்றான் அங்கு சென்றவுடன் வரு கையை கட்டிக்கொண்டு ஆதுவை அமைதியாக பார்த்தாள்” ..”அண்ணி ப்ளீஸ் அன்று நான் செய்தது தான் தவறு அண்ணன் மீது ஒரு தவறும் இல்லை ஆனால் அப்போது கூட அண்ணன் என்னை சமாளிப்பதற்காக மட்டும்தான் அவ்வாறு சொல்லி இருப்பாரே தவிர”.” அவருக்கு உங்கள் மீது விருப்பம் இருக்கிறது என்று எனக்கும் தெரியும் எனக்கே தெரிந்திருக்கும்போது உங்களுக்கு தெரியாமல் இருக்குமா? அவர் உங்களை விரும்புகிறார் என்று அண்ணனின் வாழ்க்கையில் இன்னும் வலிகளை கொடுத்து விடாதீர்கள் “..”நீங்கள் அண்ணனின் வாழ்வில் வந்து விட்டாள் இனி எனது அண்ணனின் வாழ்க்கை வசந்த காலமாக மாறும் என்று எண்ணி இருந்தேன் ஆனால் இப்பொழுது இதற்கு முன்பு இருந்ததை விட எனது அண்ணனை இப்போது பார்த்து எனக்கு கஷ்டமாக இருக்கிறது”. என்றான்..”அப்பொழுது நான் உன் அண்ணனின் வாழ்க்கையை பாழக்க  வந்துவிட்டேன் என்று சொல்கிறாயா ?என்று கேட்டாள் .அண்ணி  நான் அப்படி சொல்லவில்லை நீங்கள் ஏதாவது தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நான் சொல்ல வந்தது வேறு என்றான்..”டேய் இது பெரியவர்கள் விஷயம் இதில் உனக்கு என்ன வேலை என்று கேட்டாள் .நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள் நான் ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை என்று ஆமாம் இப்போதும் சொல்கிறேன் நீ ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை தான்”..”  அதற்காக வயதுக்கு மீறிய  பேச்சு வேண்டாம் சரியா இப்போதும் சொல்கிறேன் உனது அண்ணனின் வாழ்க்கையில் நான்  வலி கொடுக்க வந்திருக்கிறேன் என்று சொல்கிறாய் ,நினைக்கிறாய் .”…ஆனால்” எனக்கு உன் அண்ணன் கொடுத்த வலி எந்த அளவிற்கு பெரிது என்று உனக்கும் தெரியும் சரியா? என்று விட்டு அமைதியாக அவனைப் பார்த்தாள் அவன் அமைதியாக இருந்த உடன் நான் உனது அண்ணனுக்கு என்னுடைய வலியை கொடுக்க வரவில்லை ஆது” ..ஆனால் “எனக்கு வலிக்கிறது என்பதை நான் தான் உன் அண்ணனுக்கு  காட்ட வேண்டும் சரியா தவறாக புரிந்து கொள்ள வரவில்லை உனது அண்ணனுக்கு காட்ட வேண்டும் அவராக புரிந்து கொள்வார் என்றெல்லாம் நான் காத்துக் கொண்டிருக்க முடியாது “..” சரியோ தவறோ அவராக எனது உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் அதே போல் தான் நான் அவரது உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் மற்றவரின் உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்ளவில்லை என்றால் இல்லறம் சிறக்காது “..”உனக்கு உன் அண்ணனைப் பற்றிய கவலை வேண்டாம் நான் உனது அண்ணனின் வாழ்க்கையை இருண்டவாழ்வாக  மாற்ற வரவில்லை சரியா .உனது அண்ணனின் வாழ்க்கையில் நான் எந்த ஒரு தவறான செயலையும் செய்ய மாட்டேன்”..” அதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன் அதற்காக உன் அண்ணன் செய்தது அனைத்தும் சரி என்று ஆகிவிடாது அல்லவா எனக்கும் வலிக்கும் அன்று உன் அண்ணன் பேசிய வார்த்தை எந்த அளவிற்கு எனக்கு வலியை கொடுக்கும் என்று நீயே புரிந்து இருப்பாய் “..” இவை அனைத்தையும் தாண்டி ஒன்று இதைப் பற்றிய பேசும் அளவிற்கு உனக்கு அந்த அளவிற்கு வயதாகவில்லை நீ சின்ன பையன் அதையும் நினைவில் வைத்துக்கொள்” என்றாள் …”நீங்கள் தானே நான் பெரிய பையன் என்று சொன்னீர்கள் நீ பெரிய பையன் ஆகி விட்டாய் அதனால் ஒரு சில விஷயங்களை உன் வயதிற்கு மீறிய பேச்சுக்கள் பேசக்கூடாது சரியா என்று விட்டு இன்னொன்று உனக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்”..” கணவன் மனைவி என்று ஆகி பின்பு பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் மூன்றாம் மனிதர்கள் தான் சரியா? அதே போல் தான் உனது அண்ணனின் வாழ்வில் தனிப்பட்ட முறையில் நீ தம்பியாக எதைப் பற்றி வேணாலும் பேசலாம் என்னிடமும் நீ எதைப் பற்றி வேணாலும் பேசலாம் “..”ஆனால் எங்களுக்கு என்று கணவன் மனைவி என்ற உறவில் தனிப்பட்ட விஷயங்களில் நீ மூக்கை நுழைக்காதே நீ மட்டும் இல்லை வீட்டில் உள்ளவர்கள் எனது பெற்றோர்கள் ஆகட்டும் அத்தை மாமா ஆகட்டும் யார் வந்தாலும் அவர்கள் மூன்றாம் மனிதர்கள் தான் அமைதியாக எல்லாம் நான் பேசிக் கொண்டிருக்க மாட்டேன் “..”இதுவரை யாரும் என்னிடம் வந்து இதைப்பற்றி பேசவில்லை அனைவருக்கும் என்ன விஷயம் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தெரியும் இருந்தும் யாரும் என்னிடம் இதுவரை இதைப் பற்றி பேசவில்லை “…”நீ சிறிய பையன் என்பதையும் தாண்டி உனது அண்ணனுக்காக வந்து பேசுகிறாய் உனது அண்ணனின் வாழ்க்கை நன்றாக இருக்கும் ஆனால் இதைப் பற்றி இனிமேல் பேச வேண்டாம் சரியா என்றாள் “..”அவன் அமைதியாக இருந்தான் ஆது கொஞ்சம் தெளிவாகு நீ இப்படி இருந்தால் உனது அண்ணனின் முகமும் வாட்டமாகி விடும் என்று சொன்னாள் ஆது வருவைப் பார்த்து சிரித்துவிட்டு இப்பொழுது கூட எனது அண்ணனின் முகம் கலங்கி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் “..ஆனால் “எனது அண்ணன் இப்பொழுது ஒரு வார காலமாக கலங்கி தான் நிற்கிறார் அதை பார்க்கும் பொழுது எனக்கு வலிக்கிறது” என்றான் ஆது உன் மனதை தேற்றிக்கொள்…”உன் அண்ணனாக தேடிக் கொண்டதற்கு  நான் ஒன்றும் செய்ய முடியாது ஆது நீ என்றும் அதை சரி செய்ய முடியாது அதை  அவர்தான் முயற்சி செய்ய வேண்டும்”..” அண்ணி ஆனால் அண்ணா  உங்களிடம் பேச முயன்றார் தானே என்றான். உன்னிடம் வந்து சொன்னாரா என்று கேட்டாள் இல்லை என்பது போல் மண்டை ஆட்டினான் பிறகு எப்படி சொல்கிறாய் ? “என்று கேட்டாள்..”அவர் மேல் தவறு இருந்தால் ஒத்துக் கொள்வார் அண்ணி அவர் உங்களை உண்மையாக விரும்புகிறார் அவர் வாயிலிருந்து அவரது விருப்பத்தை வர வைக்க வேண்டும் என்று மட்டும் தான் நான் அன்று அவ்வாறு பேசினேன் “..”ஆனால் அதுவே உங்கள் இருவருக்கும் இடையில் மனஸ்தாபத்தை உண்டு பண்ணும் என்று நான் எண்ணவில்லை” என்றான்  டேய் ஒன்றும் இல்லை சரியா எனக்கு உன் அண்ணன் மீது வருத்தம் தான் விரோதம் அல்ல உன் அண்ணனை விட்டு செல்லவும் மாட்டேன் “..”பழி வாங்கவும் மாட்டேன் , உன் அண்ணனை வெறுக்கவும் மாட்டேன் என்று சிரித்தாள் ஆதுவும் சிரித்தான் சரி பா எனக்கு பசிக்கிறது உனக்கு பசிக்க வில்லையா என்று விட்டு ஆதுவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தாள்”..”வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள்  தேவா தான் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றான் ஆது வெளியில் வந்தவுடன் டேய் நேரமாக வில்லையா சாப்பிட வேண்டாமா என்று கத்தினான் “..”பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் அன்றைய இரவு பொழுது அப்படியே முடிந்து மறுநாள் முகூர்த்தமும் வந்தது முகூர்த்தத்திற்கு அனைவரும் கிளம்பி விட்டு திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்று கொண்டு இருந்தார்கள்”..” வருவிற்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்து இருந்தார்கள் அவளுக்கு அலங்கார வேலை நடந்து கொண்டிருந்தது. தேவா அவனது அறையில் பூனை போல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்”..” வாசுவும் ஆதுவும் அவனை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள் தேவா இருவரையும் பார்த்து அவ்வபோது முறைக்க செய்தான் இருவருக்கும் என் மீது உண்மையாகவே பாசம் இருக்கிறதா ? என்று   அவ்வபோது கேட்டான் “..”இருவரிடமும் இருந்தும் ஒரே பதில் தான் நீ செய்ததற்கான தவறை நீதான் சரி செய்ய வேண்டும் “கர்மா இஸ் பூம்மா ராங்” என்றார்கள் இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு இருவரது தோளிலும் ஒன்று போட்டு இருந்தான்” ..”அவனுக்குமே தெரியும் ஆனால் இதை சரி செய்யாமல் அவள் கழுத்தில் தாலி கட்ட முடியாது என்று அமைதியாக இருந்தான் இப்பொழுது இதை எப்படியாவது செய்தாக வேண்டும் அவளது கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பே அவளிடம் எனது மனதை  வெளிப்படுத்த வேண்டும் என்று யோசித்து விட்டு ஒரு முடிவு எடுத்தவனாக வேகமாக மணமகன் அறையில் இருந்து வெளியில் வந்தான் “..”அவன் பின்னாடியே வந்த ஆதுவும் வாசுவும் இவன் இந்த நேரத்தில் எங்கு கிளம்புகிறான் என்று யோசித்தார்கள் அவன் அவனது அறைக்கு எதிராக இருந்த மணமகள் அறைக் கதவைத் தட்டியவுடன் வாசு ,ஆது இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு அமைதியாக மணமகன் அறைக்குள் சென்று விட்டார்கள்”…”அவன் கதவை தட்டியவுடன் வருவிற்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தவர்கள் கதவை திறந்தார்கள் அங்கு மணமகன் நின்று கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு என்ன சார் என்று கேட்டார்கள் “..”நான் கொஞ்சம் பேச வேண்டும் மண பெண்ணிடம் அலங்காரம் முடிந்து விட்டதா? என்று கேட்டான் முடிந்துவிட்டது சார் லைட்டா டச் அப் மட்டும் பண்ண வேண்டும் என்றார்கள் “..”கொஞ்சம் அனைவரும் வெளியே இருக்கிறீர்களா ? நான் கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும் என்றான் சுற்றி இருந்த பெண்கள் அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு வெளியில் வந்தார்கள்”..”வரு அமைதியாக எழுந்து நின்று தேவாவை பார்த்து முறைத்து நின்றாள் தேவா கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு இந்த முறைப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லடி என்றான் “…”அவள் அமைதியாகவே நின்றாள் தேவா சொல்ல வருவதை வரு அமைதியாக கேட்பாளா? தேவா தனது மனதை முழுமையாக அவளிடம் வெளிப்படுத்தி விடுவானா? என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..இருவர் மனதிலும் எந்த வலியும் இல்லாமல் இருவரது திருமணமும் நல்ல முறையில் நடைபெறுமா ?அன்புடன் தனிமையின் காதலி

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 39”

  1. CRVS 2797

    அவனைப் பத்தியும், அவ மேல இருக்கிற தன் காதலை புரிய வைக்கத்தானே அவ கிட்ட மனம் விட்டு பேச வந்திருக்கான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *