Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 40

பூவிதழில் பூத்த புன்னகையே 40

“தேவா வருவின் அறை கதவை தட்டி அங்கு வருவிற்கு அலங்கரித்துக் கொண்டிருக்கும் பெண்களை கொஞ்ச நேரம் வெளியே இருக்குமாறு சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வருவிடம் பேச ஆரம்பித்தான்”…அவள் அவனை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த உடன்   “இத்தனை நாட்களில் ஏதோ ஒரு இடத்தில் கூட நான் எனது மனதை உன்னிடம் வெளிப்படுத்தவில்லை” ..”எத்தனையோ சூழ்நிலைகளில் உன்னை நான் திட்டியிருந்தாலும் முறைத்திருந்தாலும் அவ்வப்போது எனது மனதை மறைக்க முடியாமல் உன்னிடம் வெளிப்படுத்த தாண்டி செய்திருக்கிறேன்”..”அப்போது கூட எனது மனது உனக்கு புரியவில்லையா? உன்னிடம் இருந்து விலகி இருக்கிறேன் என்பதற்காக நான் உன்னை வெறுக்கிறேன் என்று ஆகிவிடுமா ?நான் ஒத்துக் கொள்கிறேன்”..” என்னுடைய சூழ்நிலை என்னுடைய மனதை வெளிப்படுத்த முடியாமல் இருந்தது ஆனால் இப்பொழுது இந்த நிமிடம் என் மனது முழுக்க நீ மட்டும் தான் வனி இருக்கிறாய் “..”இன்னும் என்ன தான் சொன்னால் நீ நம்புவாய் உன் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பே என் மனதை முழுவதாக உன்னிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று தான்  உன்னை தேடி வந்திருக்கிறேன்”..”ஆனால் இப்பொழுதும் இந்த நொடி கூட அழுத்தமாக நிற்கிறாயே ?என்று கண்ணீர் மல்க கேட்டான் “அப்பொழுதும் வரு அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் “..”அவளது கையை பிடித்து உலுக்கி என்ன தாண்டி உனக்கு  வேண்டும் இன்னும் எப்படி தான் நான்  உனக்கு என் மனதை வெளிப்படுத்த வேண்டும்” என்றான் ..”வரு அமைதியாக அவனைப் பார்த்து பேசி முடித்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவன் அவளை வேகமாக நிமிர்ந்து பார்த்தான் போதும் உங்கள் மனதை வெளிப்படுத்தி முடித்து விட்டீர்களா ?நானும் புரிந்து கொண்டேன்”..” நீங்கள் வெளிப்படுத்திய வரை போதும் நேரம் ஆகிறது கிளம்புகிறீர்களா? என்றாள் அவன் அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்”..” நீங்கள் வந்து உங்கள் மனதை வெளிபடுத்துகிறீர்கள் என்றால் அதை நான்  ஏற்றுக்கொள்ள வேண்டும் அதுவே நான் உங்கள் முன்பு வந்து என் மனதை வெளிப்படுத்த வந்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசு செய்வீர்கள்” அப்படி தானே ?…”நம்பி விட்டேன் கிளம்புங்கள் நேரம் ஆகிறது என்றாள் இந்த சூழ்நிலையில் என்னால் உன் கழுத்தில் தாலி கட்ட முடியாது டி என்னை கொஞ்சம் புரிந்து கொள்” என்றான் ..அதற்கு இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள் அவனது அவளை லேசாக முறைத்து விட்டு “என் மனதை நான் உனக்கு இந்த நிமிடம் வரை வெளிப்படுத்தவில்லை என்று நீ எண்ணினால் இல்லை என் மனதில் நீ தான் இருக்கிறாய் என்பதை நீ உணரவில்லை என்றாலும் இப்பொழுதே இந்த திருமணத்தை நிறுத்தி விடு .!””இதற்கு மேல் இதை எடுத்துச் செல்ல எனக்கு விருப்பமில்லை என்றான் அவனது தாடையில் ஓங்கி ஒன்று அறைந்து விட்டு வெளியே கிளம்புங்கள் என்றாள் வனி என்றான்”..”போதும் உங்கள் செல்ல பெயரை இங்கு யாரும் கேட்கவில்லை இத்தனை நாட்கள் செத்துப் பிழைத்தேன் அப்பொழுதெல்லாம் நான் யாரோ ஒருவள் அப்படித்தானே  என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த பக்கம் கதவு தட்டப்பட்டது”…” அவன் தனது கண்ணீரை உள் இழுத்துக்கொண்டு அவளை அமைதியாக அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு தாழ்ப்பாளை திறந்தான் சாரி சார் நேரமாகிறது “என்றார்கள் ..அவனும் வேறு எதுவும் பேசாமல் சரி என்று விட்டு கிளம்பி விட்டான் அவளை திரும்பி பார்த்தான். “அவள் இவனை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டாள் நீ எனக்கு வலியை கொடுக்கிறேன் என்று எண்ணி நீ  வலியை சுமந்து கொண்டிருக்கிறாய் டி உன்னை பற்றி எனக்கு தெரியாதா ?”..”நான் உன்னை திட்டும்போதும் இன்னும் அதிகப்படியாக பேசும்பொழுது எல்லாம் நான் வேண்டும் என்று என்னை சுற்றி வந்தவள் நான் பேசிய வார்த்தை உன்னை எந்த அளவிற்கு காயப்படுத்தி இருக்கிறது” என்று புரிகிறது டி…”இதே போல் தான் பேசாமல் இருக்கும் போதெல்லாம் உனக்கு எந்த அளவிற்கு வலித்திருக்கும் என்பதையும் உணருகிறேன்” ஆனால் இதை சரி செய்ய நானும் முயற்சி கொள்கிறேன் ..ஆனால் “எனக்கு இப்போது பயமாக இருக்கிறது இதை சரி செய்யாமல் உன் கழுத்தில் தாலி கட்டுவது எனக்கு சரியாக படவில்லை” ஆனால் இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி உன்னிடம் சொன்னது தவறு தாண்டி சாரி என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு தனது தாடையை தடவிக் கொண்டே மணமகன் அறைக்கு வந்தான்…”அவன் தனது தடையை தடவிக் கொண்டு வருவதை பார்த்த வாசுவும் , ஆதுவும் அடி பலமோ என்றார்கள் இருவரையும் பார்த்து முறைத்தவன் தனது நண்பனையும் தம்பியையும் கட்டிக்கொண்டு அழுதான்”..” இருவருமே தேவா அழட்டும் என்று அமைதியாக இருந்தார்கள் பிறகு நேரமாவதை உணர்ந்து வாசு தான் டேய் நிமிரு நேரமாகிறது இதற்கு மேல் இதை நீ அவளை உன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொண்டு சரி செய்ய முயற்சி செய் “என்றான் ..”இல்லை என்பது போல் தலையாட்டினான் தேவா  பிறகு நான் என் மனதை அவளிடம் முழுமையாக என்னை நிரூபிக்காமல் தாலி கட்ட மாட்டேன்” என்றான்..  “அவள் கழுத்தில் தாலிக்கட்ட மாட்டேன் என்றான் டேய் அதற்கு இப்பொழுது என்ன செய்யப் போகிறாய் இதற்கு மேல் நமக்கு நேரமில்லை “என்றான் அதை நான்  பார்த்துக் கொள்கிறேன் உங்களை எதுவும் செய்ய சொல்லவில்லையே என்றான் தேவா ..”டேய் என்று வாசு கத்தும் பொழுது ஐயர் மணமகனை அழைத்துக் கொண்டு வாருங்கள் நேரமாகிறது என்றவுடன் தீரன் தேவா இருக்கும் அறைக்கு வந்து கதவை திறந்து தேவா நேரம் ஆகிறது “என்று விட்டு வாசு ஆது இருவரையும் பார்த்து அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று விட்டு நகர்ந்தார் ..”தேவா வாசு ,ஆது இருவரையும் பார்த்துவிட்டு வெளியில் வந்தான் இவன் என்ன தனியாக செல்கிறான் என்று விட்டு இருவரும் வேகமாக அவனது இரு பக்க கையையும் பிடித்துக் கொண்டு அழைத்து கொண்டு வந்தார்கள்” …”ஆது தனது அண்ணன் ஏதோ முடிவு எடுத்து விட்டார் என்று அமைதியாக வந்தான் வாசுவிற்கு தான் இங்கு உள்ளுக்குள் பயம் பிடித்தது இவன் திருமணத்தை நிறுத்தி விடுவானோ என்று அஞ்சினான் “…”அவன் எண்ணியதை அவனது முகத்தில் படித்த தேவா நீ நினைப்பது போல் எல்லாம் செய்ய மாட்டேன் ஆனால் என்னை முழுவதாக நிருபிக்காமல் அவள் கழுத்தில் மூன்று முடிச்சு இட மாட்டேன்” என்றான்..”உன் கல்யாணத்தில் எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல என்றான் கொஞ்சம் பொறு டா மச்சான் இவ்வளவு நாள் காத்திருந்து விட்டாய் இன்னும் ஒரு அரை மணி நேரம் காத்திருக்க மாட்டாயா ? “என்றான் ..”வாசு தனது நண்பனை முறைத்துவிட்டு அமைதியாக நின்றான் பிறகு ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல தேவாவும் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தான் நேரங்கள் செல்ல செல்ல அனைத்து உறவினர்களும் வந்து கீழே உட்கார்ந்து இருந்தார்கள் “..அப்பொழுது “ஐயர் பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள் நேரமாகிறது என்று சொன்னவுடன் கலை தான் அரசியை அழைத்து உங்கள் மருமகளை அழைத்துக் கொண்டு வாருங்கள் “என்றார் அரசி சுவாதியை அழைத்துக் கொண்டு வர சொன்னார்…” நீங்கள் அழைத்துக் கொண்டு வர மாட்டீர்களா உங்கள் வீட்டு மருமகள் தானே என்று கலையின் தங்கை வருவின் சித்தி  சகுந்தலா  கேட்டார் இல்லம்மா வயசு பொண்ணுங்களோட வந்தா கொஞ்ச நல்லா இருக்குமே என்று  தான் யோசிச்சேன்”.. என்றார் ..அரசி “அரசி இல்லை நானும் பார்க்கிறேன் திருமண பேச்சுவார்த்தை எடுத்ததிலிருந்து உங்களுக்கும் இந்த திருமணத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறீர்கள் “..” நீங்களும் தேவாவும் பேசிக் கொள்வதில்லை தான்  ஆனால் அதற்காக இப்படி வெளிப்படையாகவா என்றார் அரசி அமைதியாக நின்றார் தேவாவிற்கு தான் இங்கு கோபம் வந்தது ஆனால் இப்போது கோபப்படுவது சரியில்லை என்று அமைதி காத்தான் “…”வாசு தனது நண்பனின் தோளில் தட்டினான் அப்பொழுது மண்டபத்தில் உள்ளவர்கள் லேசாக சலசலக்கமும் ஆரம்பித்து விட்டார்கள் சகுந்தலா பேசிய பேச்சின் வீரியத்தில் கலையும் சகுந்தலா அமைதியாக இரு என்ன பேச்சு இது என்றார்”..” அக்கா நீ கொஞ்சம் அமைதியாக இரு நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் இவர்கள் என்னவென்றால் திருமண பேச்சு எடுத்ததிலிருந்து நிச்சயம் செய்யும்போதும் சரி இப்போதும் சரி பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை”..” கேட்டாலும் நீ அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்கிறாய் என்னதான் உடல்நிலை சரியில்லை என்றாலும் மகனுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால் எடுத்துக்கட்டி செய்ய மாட்டார்களா?”…” செய்ய முடியவில்லை என்றாலும் அருகில் உள்ளவர்களை அழைத்து இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்று வேலை கூட வாங்க மாட்டீர்களா இவர்கள் எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் ஒதுங்கி நிற்கிறார்கள்”…இப்பொழுது “நீ நம் வருவை அழைத்துக் கொண்டு வர சொல்கிறாய் அப்போது கூட அவர் வருவின் தோழி சுவாதியை அனுப்பி வைக்கிறார் சுவாதி முதலில் நம் வீட்டு பெண்  அவர்கள் வீட்டுப் பக்கமில்லை என்று சொன்னார்  சுவாதி லேசாக சிரித்த முதத்துடன் தேவாவை கை காண்பித்து இவர் என்னுடைய அண்ணா அவருடைய தங்கையாக நான் என்னுடைய வருங்கால அண்ணியை அழைத்துக் கொண்டு வர உள்ள செல்லலாம் அல்லவா என்று கேட்டாள் “…இப்பொழுது “தேவா சுவாதி இடம் நேரம் ஆக்கிவிட்டதால்   கண் காண்பித்தான்  சுவாதியும் வருவை அழைத்துக் கொண்டு வரச் சென்றாள் வருவை அழைத்துக் கொண்டு வந்தாள்”அப்போதும் “வரு தனது சித்தியின் கடுகடு முகத்தைப் பார்த்துவிட்டு அரசியை பார்த்தாள் அவர் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பது உணர்ந்து விட்டு இங்கு உள்ளவர்கள் யாரும் எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்கள் என்று தனது சித்தியை கேட்டாள்”..”அவரும் அமைதியாக இருக்க முடியாமல் அனைத்தையும் சொன்னவுடன் சித்தி திருமணத்திற்கு முன்பு உங்களுக்கு ஒன்று தெளிவுபடுத்துக் கொள்ள விரும்புகிறேன் சரியா? இவர் முதலில் எனது வருங்கால கணவரின் சித்தி அல்ல அம்மா தான்”…”இப்பொழுது அல்ல எப்பொழுதும் மற்றொன்று அவர் அவருடைய மகனின் திருமணத்தில் முன் நின்று செய்வதும் செய்யாமல் நிற்பதும் அவருடைய விருப்பம் உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் முன் வந்து நிற்கலாம் இல்லையென்றாலும் விலகி நிற்கலாம் அது உங்களுடைய விருப்பம். “…”இன்னொன்று இதற்கு மேல் எனது அத்தையை பற்றி பேச விரும்பாதீர்கள் பேசாதீர்கள் எனக்கு அதில் உடன்பாடு இல்லை அவர்கள் குடும்ப சூழ்நிலையும் விஷயமும் முழுவதாக தெரியாமல் நீங்களாகவே ஏதாவது பேச செய்யாதீர்கள் “..”அவர்களிடத்தில் நீங்கள் இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பீர்கள் என்று யோசியுங்கள் என்றுடன் நான்  ஏன் டி இப்படி இருக்க வேண்டும் என்றார் புரிகிறதா” இருந்து இருப்பீர்களா என்று கேட்கும் போதே  நான் ஏன் இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்”…” உங்களுக்கு முழுமையாக ஒரு விஷயம் தெரியாமல் பேசக்கூடாது தெரிந்திருந்தால் அதை உணராமல் பேசக்கூடாது இது இனி நான் வாழ போகிற வீடு என்னுடைய குடும்பம் என்னுடைய குடும்பத்தை பற்றி என்னுடைய அத்தை பற்றி பேசினால் எனது அம்மாவாக இருந்தாலும் கேள்வி கேட்க தான் செய்வேன். “..”நீங்களும் எனக்கு இன்னொரு தாய் தான் அதனால் தான் சொல்கிறேன் இனி இதைப் பற்றி பேச வேண்டாம் நேரம் ஆகிறது நீங்கள் என்னை நல்ல முறையில் தாரவார்த்துக் கொடுக்க தானே வந்திருக்கிறீர்கள் “என்றவுடன் சகுந்தலாவின் தலை தானாக ஆடியது …”அவருக்கு பெண் பிள்ளை இல்லை இரண்டும் ஆண் மகன்கள் இவள் தான் தனக்கும் செல்லப்பிள்ளை என்பதால் அமைதியாக தலையாட்டினார் எனது சித்தியின் தாடையை பிடித்து கொஞ்சி விட்டு சிரிச்ச முகமாக ஒரு சித்தி அது தான் உனக்கு நல்லா இருக்கும்”…” இப்ப கூட நீ எனக்காக யோசிக்கிற அதே மாதிரி தான் அவங்க மனசுக்குள்ள நிறைய போராட்டங்கள் இருக்கிறது அவங்க இடத்திலிருந்து உன்னை பார்க்க சொல்லவில்லை ஆனால் அவர்களை புண்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்” என்று  விட்டு சுவாதியுடன் தேவாவின் அருகில் உட்கார்ந்தாள்”…”தேவா வருவை பார்க்கவில்லை வருவும் தேவாவை பார்க்கவில்லை அமைதியாக உட்கார்ந்தார்கள் பிறகு வருவும்  ஒரு சில மந்திரங்கள் சொல்லப்பட்டாள் அப்பொழுது மண்டபத்தில் ஒரு சில சலசலப்பு அடங்கிய பிறகும் ஒரு சிலர் பேசிக்கொள்ள தான் செய்தார்கள் “…”அதாவது ஊருக்கு நால்வர் என்று சொல்வார்களே அதுபோல் ஒரு சிலர் இந்த பெண் திருமணத்திற்கு முன்பே என்ன பேச்சு பேசுகிறது பார் என்றும் சகுந்தலா இவரெல்லாம் பேசி இருக்க கூடாது என்றும் சகுந்தலா பேசியதில் என்ன தவறு என்பது போலும் ஒரு சிலர் பேச தான் செய்தார்கள்”…” அதை காதில் வாங்காமல் ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல வருவும் தேவாவும் மந்திரங்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் தாலி கட்டுவதற்கு முன்பே தேவா வருவை சமாதானம் செய்து விடுவானா? இன்னும் இருக்கும்  ஒரு சில நொடிகளில் நிமிடங்களில் வருவை தேவா எப்படி சமாதானம் செய்வான் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…” நம் கதையின் நாயகன் தேவ மித்ரன் வருணிகா திருமணம் நாளை நடைபெற உள்ளது அனைவரும் வந்து வாழ்த்துவிட்டு திருமண வைபவத்தில் கலந்து கொண்டு அவர்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு பந்தியில் அமர்ந்து உணவு உண்டு விட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்”…யார் யாருக்கு என்னென்ன உணவு பிடிக்கும் என்று சொன்னால் அதை வரு தேவா திருமண வைபவத்தில் செய்து விடலாம் சைலன்ட் லீடர்ஸ் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ரேட்டிங் மற்றும் காயின் தட்டிவிட்டு செல்லுங்கள்..என்னை பாலோ செய்து என்னுடைய அடுத்த அடுத்த பாகங்களை உடனுக்குடன் படியுங்கள் சப்ஸ்கிரைப் செய்து என்னுடைய அனைத்து கதைகளையும் படித்து  மகிழ்ச்சி அடையுங்கள்..மிக்க நன்றி

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 40”

  1. CRVS2797

    அட.. சீக்கிரம் தாலி கட்டச் சொல்லுங்க. சீரியல் மாதிரியே இதுலயும் தொடரும் போட்டு இருக்கிங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *