Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 41

பூவிதழில் பூத்த புன்னகையே 41

“வரு, தேவா இருவரும் ஐயர் மந்திரங்கள் சொல்ல சொல்ல இருவரும் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்”

“தேவா அமைதியாக ஓம குண்டத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான் அவனது மனம் முழுவதாக வருவிடம் தனது மனதை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது”..

“வருவும் அனைத்து மந்திரங்களையும் சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தாள் அவளது மனதிற்குள் வலி இருக்கத்தான் செய்தது” நேரம் ஆக ஆக மாங்கல்யத்தை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வர சொல்லி இருந்தார்”..

” ஒவ்வொரு சடங்காகவும் நடந்தேறி தாலி கட்டுவதற்கான முகூர்த்த நேரமும் நெருங்கி இருந்தது ஐயர் நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என்று தாலியை சாமியை வேண்டி விட்டு தேவாவின் கையில் கொடுத்தார்”…

“தேவா தாலியை வாங்கிக் கொண்டு வருவை ஒரு நிமிடம் முழுவதாக பார்த்தான் சுற்றி இருந்தவர்கள் அவன் அமைதியாக இருந்தவுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தபோது வருவும் கையில் தாலியை வாங்கியும் தேவா தன் கழுத்தில் கட்டாததால் அவனை நிமிர்ந்து பார்த்தாள்”…

“தேவா அந்த ஒரு நிமிடமும் வரு தன்னை பார்க்க வேண்டும் என்று அமைதி காத்தவன் அவள் தன்னை பார்த்தவுடன் தன்னுடைய மொத்த காதலையும் தன் கண்ணில் தேக்கி வைத்து அவளைப் பார்த்துக் கொண்டே தாலி கட்டினான்”..

“அவளது கழுத்தில் மூன்று முடிச்சு இட்டவுடன்  அவனுடைய காதலை முழுவதாக உணர்ந்த வரு அவன் வாய் வழியாக சொல்லாத காதலை தனக்கு கண் வழியாக உணர்த்தியதை எண்ணி சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தாள்”..

“தேவா மூன்று முடிச்சு இட்டு விட்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்” பிறகு “அவளது நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு அவளது நெற்றியில் தனது முதல் முத்திரையை பதித்தான்”.

“சுற்றி இருந்த அனைவரும் அவனை ஆவென்று பார்த்தார்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆனால் அவர்களது ஆபீஸில் வேலை செய்பவர்கள் ஓ என்று வேகமாக கத்தினார்கள் “

“அதன் பிறகு அக்னியை வலம் வர சொல்லி ஐயர் சொன்ன பிறகு அவளது கையில் அழுத்தம் கொடுத்து விட்டு அவளது கையில் தனது இரண்டாவது முத்திரையை பதித்துவிட்டு அவளது கையுடன் தனது கையை பிணைத்துக் கொண்டு அக்னியை மூன்று முறை வலம் வந்தான் “..

பிறகு “மெட்டி அணிவிக்க சொல்லி ஐயர் சொன்னார் அம்மியின் மீது அவளது காலை எடுத்து வைத்து அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவளது காலில் மூன்று முத்துக்கள் வைத்த மெட்டியை அணிந்து விட்டான் “..

“அந்த மெட்டியை தேர்வு செய்ததும் தேவா தான் அவள் நடக்க நடக்க அவளது மெட்டியின் ஓசை கேட்க வேண்டும் என்று எண்ணினான்” ..

“அந்த மெட்டியை அணிவிக்கும் பொழுது தேவாவின் கண்ணில் இருந்தும் நீர் வடிந்தது வருவின் கண்ணில் இருந்தும் நீர் வழிந்தது “..

“வருவின் கண்ணில் இருந்து பட்ட நீர் தேவாவின் கையில் பட்டு தெறித்தது தேவாவின் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் வருவின் காலில் பட்டு தெரித்தது இருவரும் ஒரு சேர நிமிர்ந்து பார்த்தார்கள்”
..

” இருவரின் பார்வையும் ஒரு சில நொடி மோதிக்கொண்டது பிறகு இருவரும் தெளிந்து விட்டு எழுந்து நின்றார்கள் பிறகு ஒவ்வொரு சடங்காக நடந்தேறியது” பிறகு நேரம் ஆவதை உணர்ந்து அனைவரும் பெண் மாப்பிள்ளையை சாப்பிடுவதற்கு அழைத்து சென்றார்கள்”..

“அங்கு சாப்பிட சென்றவுடன் தனது அண்ணனின் செய்கை உணர்ந்து ஆது தனது அண்ணனிடம் அண்ணா நீங்கள் அண்ணிக்கு சாப்பாடு ஊட்டி விடுங்கள் என்றான்”

“நீ எங்களுடன் உக்காரு என்றதற்கு நான் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன் என்றான் சந்தோஷத்தில் அவனுக்கு இப்பொழுது பசி எடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் பிறகு தேவாவின் இந்த பக்கம் வாசுவும் , வருவின்  இந்த பக்கம் சுவாதியும் உட்கார்ந்து இருந்தார்கள்”..

” அவர்களை ஊட்டி விட சொல்லி சொன்னவுடன் வரு தான் முதலில்  ஊட்டி விட்டாள் வரு ஊட்டி விட்ட லட்டுவின் மீதி பகுதியை தான் தேவா வருவிற்கு ஊட்ட வந்தான்”..

“வரு அவனை முறைத்து பார்த்தாள் என்னடி என்றான் அவளின் பார்வை லட்டுவில் இருந்த உடன் திருமணமும் முடிந்துவிட்டது”..

” உன்னில் பாதி நான் என்னில் பாதி நீ என்று ஆகிவிட்டது பிறகு என்னுடைய எச்சில் சாப்பிட்டால் குறைந்து விடுவீர்களோ என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்து விட்டு அவளது வாயில் அந்த லட்டை திணித்தான்”..

” சுற்றி இருந்த ஆது , வாசு ,சுவாதி மூவரும் நம்ப தேவாவா இது  என்று யோசித்தார்கள் பிறகு சுற்றியுள்ள இளவட்டங்கள் கேலி கிண்டலுடன் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள்”..

பிறகு “தேவா வீட்டிற்கு தான் முதலில் செல்ல வேண்டும் என்பதால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு தேவா வீட்டிற்கு அழைத்து சென்றார்கள்”..

” தேவா வீட்டிற்கு சென்றவுடன் அரசி தான் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றார் பிறகு வீட்டிற்குள் வந்தவுடன் வருவின் கையில் தீப்பெட்டியை கொடுத்து சாமியாரையிலும் உன்னுடைய மாமியார் என்ற சொல்ல வந்தவர் வருவின் முறைப்பில் பார்வதி படத்திற்கு முன்பும் விளக்கேற்று என்றார்”..

“வரு வாய் வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் என்ன அத்தை முதல் முறை ஏற்ற போவது போல் சொல்கிறீர்களே என்று விட்டு பார்வதியின் புகைப்படம் முன்பு முதலில் விளக்கேற்றிவிட்டு பிறகு பூஜை அறைக்கு வந்து நல்ல விளக்கு ஏற்றினாள்”..

“சுற்றி இருந்த அனைவரும் அமைதியாக வருவை பார்த்துவிட்டு தங்களுக்குள் பேசி கொண்டார்க்கள் வருவின் சித்தி சகுந்தலா தான் தனது அக்காவை பார்த்து என்ன அக்கா இவள்  சொல்கிறாள் என்று கேட்டார்”..

” கலை லேசாக நெளிந்து கொண்டே அவள் இங்கு அடிக்கடி வருவாள் டி அப்பொழுது விளக்கேற்றுவாள் என்றவுடன் அக்கா நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்”..

” ஒரே பெண் என்பதற்காக இந்த அளவிற்கு செல்லம் கொடுப்பார்களா திருமணத்திற்கு முன்பு இங்கு அனுப்பி வைப்பதே தவறு அவள் விளக்கேற்றி இருக்கிறாள் வேறு சொல்கிறீர்கள் என்றார்”..

“வரு தான்  சிரித்து விட்டு அதெல்லாம் உன்னோட ஜெனரேஷன் சித்தி என்று சொல்லி சிரித்தாள் எதையாச்சும் ஒன்னு சொல்லி  மழுப்பி சிரிச்சு மயக்கிடுவ டி நீ என்று சிரித்தார்”..

பிறகு “அரசி பால்பழம் எடுத்து வந்து கொடுத்தவுடன் வரு அமைதியாக அரசியை பார்த்துக் கொண்டிருந்தவுடன் அவரே தன் கையால் இருவருக்கும் ஊட்டிவிட்டார். பிறகு அங்குள்ள ஒரு சில சடங்குகளை முடித்துக் கொண்டு கிளம்பும்பொழுது சகுந்தலா தான் இரவு இருவரும் அங்கே தங்கி கொள்ளட்டும்”

“இரவு சடங்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார் அரிசி அமைதியாக இருந்தார் வரு தான் வேகமாக எழுந்து நீங்கள் நினைக்கும் சடங்குகளை இங்கு வைத்துக் கொண்டால் என்ன என்று கேட்டாள்”..

“வரு விளையாடுகிறாயா எப்பொழுதும் பெண் வீட்டில் தான் சடங்கு வைப்போம் நம் பக்கம் அது மட்டும் இல்லாமல் இங்கு யார் சடங்குக்கு தேவையானதை எடுத்து செய்வார்கள் என்று கேட்டார் சகுந்தலா”..

” வரு அரசியை அமைதியாக பார்த்தாள் அப்பொழுதும் அரசி அமைதியாக இருந்த உடன் வரு தான் என்னுடைய அத்தை எடுத்து செய்வார்கள் அதை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டியதில்லை சரியா? நான் அங்கு வருவேன் வந்துவிட்டு கொஞ்சம் நேரம் மாலை வரை இருந்துவிட்டு இரவு இங்கு வந்து விடுவேன்” என்றாள்..

” சகுந்தலா தனது அக்கா மகளை முறைத்துவிட்டு யார் செய்கிறார்கள் எப்படி சடங்குக்கு தேவையான அனைத்தும் செய்கிறார்கள் என்று பார்க்கிறேன் என்று விட்டு நகர்ந்தார்”..

“கலை அரசியின் கையைப் பிடித்த உடன் அரசு சிரித்து முகமாக அதான் என்னுடைய மருமகள் சொல்லிவிட்டாளே நான் பார்த்துக்கொள்கிறேன் கலை ஒன்றும் இல்லை சரியா”..

“வாசுவின் அம்மா சுவாதி இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் பிறகு கலையும் சரி என்று விட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் வருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்”..

” அங்கு சென்று இருக்கும் ஒரு சில சம்பிரதாயங்களை சடங்குகளை முடித்துக் கொண்டு மாலை 6 மணிக்குள் தேவா வீட்டிற்கு பெண் மாப்பிள்ளை இருவரும் வந்தார்கள்”..

இருவரும் தேவா வீட்டிற்கு வந்த பிறகு இருவரையும் வரவேற்புரையில் உட்கார வைத்துவிட்டு இரவு உணவும் எட்டு மணி அளவில் இருவருக்கும் கொடுத்தார்கள் இப்போது” மூன்று நாட்களாக அக்கம் பக்கம் இருப்பவர்களும் சமையல்காரர்களும் சமைப்பதால் தேவா சமையல்  அறை பக்கம் செல்வதில்லை”..

இன்று இரவு கூட வாசுவின் தாயியும் சுவாதியும் சேர்ந்து அனைத்து உணவு பதார்த்தங்களும் செய்திருந்தார்கள் அதனால் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் பிறகு இரவு 9:00 மணி போல் இருவருக்கும் இரவு சடங்கிற்க்கு  நல்ல நேரம் குறித்து இருந்ததால் இருவரையும் அவர்கள் அறைக்கு அனுப்பி வைப்பதற்கு சாப்பிட்டு சில நிமிடங்களுக்கு பிறகு இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து  சென்று சாமியை தரிசனம் செய்ய  சொன்னார்கள் ..

“சாமி கும்பிட்டவுடன் அரசி வருவின்  அருகில் வந்தார் வரு சிரித்துக் கொண்டே நடக்காத ஒன்றுக்கு இந்த சடங்கு தேவையா மாமியாரே என்றாள்” அவரும் அவளை பார்த்து முதலில் முறைத்து விட்டு பிறகு சிரித்துக் கொண்டே அது உன்னுடைய விருப்பம் உங்களுடைய விருப்பம் இது செய்ய வேண்டியது எங்களுடைய கடமை என்றார் “”…

மாமியாராக உங்கள் கடமையை பின்பற்றுகிறீர்கள் என்று சொல்லிவிட்டு அரசி தீரன் இருவரது காலிலும் தேவாவுடன் விழுந்து கும்பிட்டு விட்டு தேவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனது (அவர்களது)அறைக்கு சென்று விட்டாள்…

“அனைவரும் சாப்பிட்டவுடன் சுவாதி வயது பெண் என்பதால் அரசி அவளை அனுப்பி வைத்துவிட்டார் வாசுவின் தந்தையுடன் தான் சென்று இருந்தாள் பிறகு தேவா தான் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு மனதிற்குள் வருவை திட்டிக்கொண்டே இவள் தான் பெண் ஆனால் பெண் போல நடந்து கொள்கிறாளா”..

” தனக்கு என்ன என்பது போல் செல்கிறாள் என்று எண்ணிவிட்டு வாசுவின் தாய் கொடுத்த பாலை வாங்கிக்கொண்டு அறைக்கு சென்றான் அவன் அறைக்குள் செல்லும்போது வரு பால்கனியில் நின்று கொண்டு இருந்தாள்”..

” தேவா அவளை பார்த்துவிட்டு பால் கிளாஸை ஓரிடத்தில் வைத்து முடி வைத்துவிட்டு வருவின் பின்பக்கம் சென்று அவளை பின்பக்கமாக நின்று கட்டி அணைத்துக் கொண்டு அவளது காது மடல் உரசும் அளவிற்கு இங்கு எதற்காக நின்று கொண்டிருக்கிறாய்” என்று கேட்டான்…

“வரு தேவா  பக்கம் திரும்பி விட்டு அவனது கழுத்தில் தனது கையை மாலையாக போட்டுக்கொண்டு அவனையே அமைதியாக பார்த்தாள் அவனும் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்”..

“வரு தேவாவை ஏற்றுக் கொண்டாளா தேவாவின் மனதை புரிந்து கொண்டாளா இல்லை அவனை இங்கே வந்த பிறகு வைத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அமைதி காக்கிறளா தேவா, வருவின் வாழ்க்கை எவ்வாறு செல்லும் இருவரது மனதிலும் எந்த குழப்பமும் வலிகளும் இல்லாமல் இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தது போல் கணவன் மனைவியாகவும் இணைவார்களா” என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

தனிமையின் காதலி

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 41”

  1. CRVS2797

    அட.. கல்யாணம் தான் ஆகிடுச்சு இல்லை..
    அப்புறம் என்னங்க…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *