“தேவா வருவைப் பின்பக்கம் இருந்து கட்டி அணைத்தவுடன் வரு அவன் பக்கம் திரும்பி அவனது கழுத்தில் தனது கையை மாலையாக போட்டுக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்” ..”ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு தேவா தான் தனது ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் கேட்கவும் அவனை ரசனையாக பார்த்தவள் அவன் மேல் இருக்கும் தன் கையை மெதுவாக எடுத்தாள்”..” தேவா அவளை இருக்கமாக பிடித்துக் கொண்டு அவளையே பார்த்தான் பால்கனியில் நின்று கொண்டிருக்கோம் என்று விட்டு அவனை விட்டு நகர்ந்து நின்றாள்”..”அவளை தன் அருகில் இழுத்து நெருக்கமாக நிற்க வைத்து விட்டு இது கூட நன்றாக தான் இருக்கு என்று விட்டு அதை என் கழுத்தில் மாலையாக கை போடும்போது தெரியவில்லையா மேடம்? இது பால்கனி என்று கேட்டான் சிரித்து முகத்துடன்”..” உங்களுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமோ என்று கேட்டாள் வரு. ஏன் பேச தெரியாமல் என்று அவளது காது மாடல் உரச பேசினான் நகர்ந்து நில்லுங்கள். யாரவது பார்த்தால் என்ன ஆவது பால்கனியில் நின்று கொண்டிருக்கிறோம் என்றாள்”..நான்” என் பொண்டாட்டியுடன் நின்று கொண்டு இருக்கிறேன் யார் பார்த்தாலும் என்ன சொல்வார்கள் என்று கேட்டான் . எது பொண்டாட்டியா ? ” பின்ன இல்லையா? “லைசன்ஸ் வாங்கியாச்சு “என்று “அவளது நெஞ்சில் இருக்கும் மாங்கல்யத்தை எடுத்து காண்பித்தான்”. “தேவா வருவின் நெஞ்சில் கை வைத்தவுடன் அவளுக்கு லேசாக குறுகுறுத்தவுடன் தன் உடம்பை முதுகை பின்பக்கம் சாய்த்து விட்டு இப்படி எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் மேலே கை வைப்பார்களா? இப்படி வைக்காதீர்கள் என்றாள்” ..”ஏன் என்னாச்சு ?என்று கேட்டான். திருமணம் ஆகிவிட்டது உங்களுக்கு லைசன்ஸ் கொடுத்து விட்டால் உங்களை யார் என் மீது கை வைக்க சொன்னார்கள் என்று கேட்டாள். ஏன் வைத்தால் என்ன யார் கேட்பார்கள் இப்பொழுது எனக்கு முழு உன் மீது உரிமையும் இருக்கிறது என்றான்..உரிமையா என்று கேட்டாள் பின்னர் புதிதாக இருக்கிறது உங்கள் உரிமைகள் அனைத்தும் நீங்கள் பேசும் விதமும் என்று அவனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் ..” காது மடல்கள் உரச அவன் பேசிய பிறகு அவ்வாறு பேசியதால் கேட்டாள் . இத்தனை நாட்கள் எதுவாக இருந்தாலும் உரிமையாக செய்ய வேண்டும் என்று எண்ணினேன் என்றான்”..”அனைத்தும் உரிமையாக தான் நடக்க வேண்டுமோ என்று அவள் கேட்டவுடன் அவளை அமைதியாக பார்த்தவன் இப்பொழுது இதை பற்றி பேச வேண்டாமே என்றான் அவளுக்கும் இருக்கும் நல்ல சூழ்நிலையை கெடுத்துக்கொள்ள விருப்பம் இல்லாததால் அதை பற்றி மேற்கொண்டு பேசவில்லை” அமைதியாக இருந்தாள் ..பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள் எதை எதையோ பற்றி பேசினார்கள். தேவா தான் நேரமாவதை உணர்ந்து சரி வா நேரமாகிறது தூங்கலாம் என்றான். தூங்கலாமா? என்று ஒரு அவனை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தாள்…தேவா அவளை அமைதியாக பார்த்துவிட்டு உண்மையாவே தூங்க தான் வா அசதியாக இருக்கு என்றான் அவளுக்குமே அசதியாக இருந்ததால் சிரித்த முகமாக சரி என்று விட்டு பால்கனி கதவை சாற்றி விட்டு அறைக்குள் வந்தார்கள் “..”அறைக்குள் வந்தவுடன் வரு வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இல்லாமல் நான் எங்கு தூங்குவது என்று கேட்டாள். இது என்ன சினிமா வா டி விருப்பமில்லை என்றால் நீ மேலே படு என்று சொல்வதற்கு என்று கேட்டான் “..உனக்கும் சரி எனக்கும் சரி இப்போது தாம்பத்தியத்தில் விருப்பமில்லை. சரியா ? அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.அதன் பிறகு என்ன அதற்காக ஒரே கட்டிலில் படுக்க கூடாது என்று சொல்கிறார்களா இல்லை உன் விருப்பம் இல்லாமல் உன்னிடம் எல்லை மீருவென் என்று எண்ணுகிறாயா? என்று விட்டு அவளை அமைதியாக பார்த்தான்…அவனை முறைத்துவிட்டு பிறகு வேறு எதுவும் பேசாமல் அவனது கட்டிலில் அவனது அருகில் அமைதியாக படுத்தாள் . “அவள் படுத்தவுடன் அவளது தலையை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்” ..”வரு நிமிர்ந்து தேவாவின் முகத்தை பார்த்துவிட்டு உரிமை கிடைத்த பிறகு தான் சாருக்கு எதுவுமே செய்ய தோன்றுமா? பேசத் தோன்றுமோ ?என்றாள்.அப்படியும் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி அவளது நெற்றியில் இதழ் பதித்தான்”..அவள் லேசாக சினுங்கினாள் சும்மா படு டி. எதற்கு எடுத்தாலும் சிணுங்கிக்கொண்டே இருக்க என்றான் அவனை பார்த்து முறைத்துவிட்டு அவனது தாடையில் லேசாக கடித்து விட்டு அவனை கட்டி அணைத்துக் கொண்டு படுத்தாள்..தேவா வரு இருவரும் அசதியாலும் சிறிது நேரம் அமைதியாக பேசிக் கொண்டிருந்த சந்தோஷத்திலும் உறங்கி விட்டார்கள் ஒருவர் இன்னொருவரை கட்டி அணைத்துக் கொண்டும் தூங்கி விட்டார்கள்..ஆனால் தீரன் வரு, தேவா இருவரும் அறைக்குள் சென்ற பிறகு வாசுவின் தாய் தந்தையையும் அனுப்பி வைத்துவிட்டு ஆதுவையும் அவனது அறைக்கு செல்ல சொல்லி விட்டு ஹாலில் சிறிது நேரம் அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருந்தார்…அரசி தான் வெளியில் வந்து இங்கே எதற்காக இப்படி நடந்து கொண்டிருக்கிறீர்கள் தூங்கவில்லையா ? என்று கேட்டார் .”எப்படி தூக்கம் வரும் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லையே என்றவுடன் அரசிக்கு உண்மையாகவே சிரிப்பு வந்து விட்டது.”..அரசி சிரித்துவிட்டு இன்று தான் திருமணமாகி இருக்கு உள்ளே என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்றார் தீரன் அரசியை முறைத்து விட்டு இருவரும் அவ்வளவு அன்னோன்யமாக ஒன்றும் இல்லை சரியா?…ஒரு வேலை தேவா எதுவும் சோதப்பாமல் இருந்திருந்தால் கூட அங்கு ஒன்றும் பெரிதாக நடக்காது என்று எனக்கே தெரியும் என்றார் அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றார் …”சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே அரசி அவன் வாழ்வு இனி மேல் ஆவது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார் அரசிக்கு ஒரு சில நீர் கண்ணீரும் வந்தது. தீரனை அடிபட்ட பார்வையும் பார்த்தார்”…”அரசியின் கையை தீரன் பிடித்துக் கொண்டு அரசி ப்ளீஸ் நான் உன்னை இங்கு குத்தி காட்டவும் இல்லை உன்னை தவறாகவும் சொல்லவில்லை சரியா ? இத்தனை நாட்கள் வேண்டுமானால் நானும் ஆதுவும் உன்னை தவறாக புரிந்து இருக்கலாம்”..”இப்பொழுது தவறாக உன்னை புரிந்து கொள்ளவில்லை உன்னை பற்றி முழுவதாக தெரிந்து கொண்டோம் அதற்கு காரணம் கூட நம் மருமகள் தான் என்று கூட சொல்லலாம் அவள் இல்லை என்றால் நாங்கள் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு சூழ்நிலையில் உன்னை தவறாகவே தான் எண்ணிக்கொண்டு இருந்திருப்போம்”..”இப்பொழுது அவள் எங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் மனது காயப்படும் படியாக புரிய வைத்தாலும் அவள் புரிய வைத்த அனைத்தும் உண்மை என்பதை புரிந்து கொண்டோம்” “எங்களுக்கு வலித்தது போல் தான் உனக்கும் வலித்திருக்கும் என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம் “இப்பொழுது உன்னை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு எல்லாம் சொல்லவில்லை அவன் இனியாவது நம்மைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மட்டும் தான் எண்ணுகிறேன்” என்றார் ..”அரசி லேசாக சிரித்துவிட்டு நீங்கள் எதைப் பற்றியும் யோசிக்க வேண்டியது இல்லை என்ன தான் அவன் மீது வருவிற்கு கோபம் இருந்தாலும் அந்த கோபத்தை அவள் அவனிடம் எப்படி காண்பிக்க வேண்டுமோ அப்படித்தான் காண்பிப்பாளே தவிர”..”அவனது மனது காயம்படும்படியாக எதையும் செய்ய மாட்டாள் அதற்காக அவள் அவளுடைய கோபத்தை காட்டாமல் இருக்க வேண்டும் என்றும் எண்ணாதீர்கள் அவளுக்கு வலிக்கிறது என்றால் அதை அவனிடம் காட்ட தான் செய்வாள் “..”அதனால் உங்கள் மகனுக்கு வலிக்கு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் தவறு நம் மீது இருக்கிறது என்றால் அதற்கான எதிர்வினையும் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்” என்றார்..” தீரனுக்கும் அது புரியும் தெரியும் என்பதால் சரி என்று விட்டு அரசியுடன் அவரது அறைக்கு சென்றார் ஆது தூங்கிக் கொண்டிருந்தால் அரசி ஆதுவின் தலையை கோதினார் ..அது இப்பொழுது ஒரு வார காலமாக தனது அண்ணனுக்கும் அன்னைக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பதற்கு தான் தான் காரணம் என்று இருக்கும் நிலையில் தனது அண்ணன் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தனது தாய் தந்தையின் அறைக்கு தூங்க வந்துவிட்டான்..அப்பொழுது அரசி தான் அவனை இங்கே அழைத்துக் கொண்டு வந்தார் ஆது நான் அங்கே தான் இருப்பேன் என்று சொன்னதற்கு டேய் நீ இன்னும் எத்தனை நாட்களுக்கு அவனுடன் தூங்க செய்வாய். இன்னும் ஒரு வார காலத்திற்குப் பிறகு நீ எங்கள் அறைக்கு தானே வந்தாக வேண்டும் என்றார்.அது தனது தாயே முறைதான் ஏன் உன் அண்ணனுக்கு திருமணமான பிறகும் உன் அண்ணனுடன் இருந்து கொள்ளலாம் என்ற எண்ணமா? என்றவுடன் ஆது தனது அன்னையைப் பார்த்து லேசாக சிரித்து விட்டு ஆனால் இப்பொழுது இந்த ஒரு வாரம் அண்ணனுடன் இருந்து கொள்கிறேனே என்று கேட்டான்..இந்த ஒரு வாரம் அவனுக்கான தனிமையை கொடு அவன் யோசிக்கட்டும் நீ அருகில் இருந்தால் அவனால் முழுவதாக யோசிக்க முடியாது. நீ படித்துக் கொண்டிருந்தால் ஒன்று உன் படிப்பு கெடும் என்று யோசிப்பான். இல்லையென்றாலும் நீ இருப்பதால் அவன் யோசித்தால் நீ அவனைப் பற்றி எண்ணி வருந்துவாய் என்பதால் அவன் எதையும் யோசிக்காமல் உனக்காக அமைதி காப்பான் அவன் அவனுக்காக யோசிக்கட்டும். என்றவுடன் தனது தாயை கட்டிக்கொண்டு அவரது தடையில் முத்தம் வைத்துவிட்டு சரி என்று விட்டு தீரன் அரசி அறைக்கு வந்து தூங்கி விட்டான்…நான் படிக்கும் வரை இன்னொரு அறையில் சென்று படித்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டான் அந்த அறையில் தான் அன்று ஆதுவும் தேவாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் பிறகு தூக்கம் வரும்பொழுது உங்களது அறையில் வந்து தூங்கிக் கொள்கிறேன் என்று அரசியிடம் சொல்லிவிட்டான்.. அவரும் சரி என்று ஒத்துக் கொண்டார். தீரன் அரசி இவனை இத்தனை வருடங்கள் உன்னிடம் இருந்து பிரித்ததற்கு சாரி என்றார் அரசி தீரனை பார்த்து சிரித்துவிட்டு அவன் என்னிடம் இருப்பதை விடை அங்கு சந்தோஷமாக தான் இருந்திருப்பான் என்று எனக்கு தெரியும் என்றார் ..இருந்தாலும் ஒரு தாயாக உனக்கும் நிறைய ஆசைகள், கனவுகள் இருந்திருக்கும் அல்லவா ?அனைத்திலும் நானும் ஆதுவும் மண்ணள்ளி போட்டு விட்டோம் அல்லவா?..” நீ அவனை தாங்க நினைத்து இருக்கும் போதெல்லாம் உன்னால் அவனுடன் இருக்க முடியாது அளவிற்கு செய்துவிட்டோம் அல்லவா? என்றார் அரசி அமைதியாக இருந்தவர் எனக்கு எது கிடைக்க வேண்டுமோ ?அதுதான் கிடைக்கும் என்றார் தீரன் அரசியை எழுப்பி உட்கார வைத்து அரசி எனக்கு ஒன்று உண்மையாக சொல்”..” நான் நீ தேவாவிற்கு காட்ட வேண்டிய பாசத்தை தடுத்தேன் என்பதற்காக தான் நீயாகவே ஆதுவை அவனிடம் விட்டு விட்டாயா ? நீ தேவாவிற்கு கொடுக்காத பாசத்தை ஆதுவிற்கு கொடுக்கக் கூடாது என்று எண்ணினாயா?..தீரன் கேட்டதற்கு அரசியின் பதில் என்ன? தீரன் இப்பொழுது கேட்டது போல் தான் அரசி மனதிற்குள் எண்ணினாரா ?இல்லை அரசி தேவா மீது இருந்த கோபத்தில் ஆதுவை தேவாவிடம் விட்டு விட்டாரா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன் தனிமையின் காதலி கதையின் நகர்வு எப்படி உள்ளது என்பதை படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Interesting papom ena ninaikiranga arasi nunu
Super epi
Sema… Arasi super mom
அநேகமா…. தேவாவுக்கு கொடுக்காத பாசத்தை தீராவுக்கு ஏன் கொடுக்கணும்ன்னு தான்
ஆதுவை தேவா கிட்ட விட்டுக் கொடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன்.