“வரு ஆதுவிடம் நீ இன்னும் பள்ளிக்கு கிளம்பவில்லையா? என்று கேட்டவுடன் அண்ணி நேற்று தானே திருமணம் ஆகியது என்றான் டேய் எங்கள் இருவருக்கும் தான் திருமணமாகியது “..
“என்னவோ உனக்கு திருமணமாகியது போல் சொல்கிறாய் “என்றவுடன் ஆது தனது அண்ணியை பாவமாக பார்த்தான் அரசியும், தீரனும் சிரித்து விட்டார்கள் .
தேவா தனது மனைவியை முறைத்து பார்த்தான் வரு அனைவரையும் பார்த்து சிரித்து விட்டு ஆதுவின் தோளில் கை போட்டுக்கொண்டு சிரித்தாள்.
பிறகு நீ 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாய் அதை நினைவில் வைத்துக்கொள். அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியது இல்லை .ஏற்கனவே திருமணத்திற்கு என்று ஒரு வாரம் நிச்சயத்திற்கு என்று ஒரு நாள்.
இப்படி ஒவ்வொரு நாளாக எத்தனையோ நாட்கள் விடுமுறை எடுத்து விட்டாய் உனக்கு தேர்வும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இனி மேல் விடுமுறை அனாவசியமாக எடுக்க வேண்டியது இல்லை திருமணமாகியது எங்கள் இருவருக்கும் நான் இனிமேல் இங்குதான் இருக்கப் போகிறேன்.
நீ மாலை பள்ளி விட்டு வரும்போது நான் இருப்பேன் அப்படி இல்லை என்றாலும் நீ பள்ளி முடிந்து வந்த சிறிது நேரத்திலே நான் வந்து விடுவேன்.
” இரவு 10 மணி வரை நாம் ஒன்றாக தான் இருப்போம் பேசிக் கொள்ளலாம் சரியா அதன் பிறகு நீ அமைதியாக பனிரெண்டு மணி வரை அந்த அறையில் படித்துவிட்டு அதன் பிறகு அத்தை மாமா அறையில் சென்று தூங்கிக் கொள்ளலாம்” என்றாள்..
” தேவா அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன் எங்கு தூங்குகிறான் என்று அதற்குள் தெரிந்து வைத்திருக்கிறாள் என்று எண்ணி விட்டு அமைதியாக தான் இருந்தான்”..
இன்று ஒரு நாள் மட்டும் உங்களுடன் இருந்து கொள்கிறேன் என்றான் அப்பொழுது தீரன் தான் இன்று அவர்கள் வரு வீட்டுக்கு செல்ல வேண்டும் ..
நேற்றே சென்று இருக்க வேண்டும் உன் அண்ணி இங்க இருக்க வேண்டும் என்று எண்ணியதால் தான் இங்கு விட்டுச் சென்றார்கள் என்றார் .
ஆது தனது அண்ணியை பார்த்தவுடன் அவளும் லேசாக தலையாட்டிய உடன் சரி அண்ணி நான் பள்ளி செல்கிறேன் ஆனால் நேரமாகி விட்டதே என்றான் .டேய் ஸ்பெஷல் கிளாஸ் அட்டென்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை..
ரெகுலர் கிளாஸ் அட்டென்ட் பண்ணலாம் அல்லவா? என்றாள் அவனும் சரி என்று தலையாட்டிய உடன் இதற்கு மேல் எப்படி சமைப்பீர்கள் என்று கேட்டான்..
அதைப் பற்றி கவலை உனக்கு வேண்டியதில்லை நீ கிளம்பும் வேலையை மட்டும் பார் என்றாள் அண்ணி அண்ணன் ஒரு ஆளாக எப்படி அதற்குள் சமைக்க செய்வார் என்றான்..
” வரு அவனை முறைத்துவிட்டு உன் அண்ணன் ஒரு ஆளாக சமைக்க மாட்டார். அதற்காக நான் சமைப்பேன் என்று எல்லாம் கனவு கானதே. உன் அண்ணன் சமைக்க செய்தால் அத்தை காய் அறிந்து தருவார்கள் என்றவுடன் அரசி அவளை அமைதியாக பார்த்தார்.”.
“ஆது தனது தாயைப் பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே அப்புறம் என்றான் டேய் நான் என்ன கதையா சொல்கிறேன் என்று விட்டு மாமா உனது துணியை அயன் பண்ணி வைத்துவிட்டு உனக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைப்பார்” ..
அப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றான் டேய் எனக்கும் வேலை இருக்கிறது நான் குளிக்க வேண்டும் வீடு எல்லாம் பெருக்க வேண்டும் எப்படி இருக்கிறது பார் அனைத்தையும் ஒதுங்க வைக்க வேண்டும் என்றாள்..
சரி என்று விட்டு ஆது குளிக்கச் சென்றவுடன் தேவா அனைவரும் டீ குடித்த கிளாசை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் போகும் போது வருவை பார்த்துவிட்டு சமையல் அறைக்குள் புகுந்தான் ..
வருவும் அவனின் பார்வை தன்னை வர சொல்லியது போல் இருந்தவுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள் அதை தீரன் ,அரசி இருவரும் பார்த்துவிட்டு அமைதியாக தான் இருந்தார்கள்..
இருவரும் சந்தோஷமாக இருந்தது அனைத்தும் சீக்கிரம் சரியானால் போதும் என்று மட்டும் தான் யோசித்தார்கள் அவள் சமையல் அறைக்குள் சென்றவுடன் “என்ன டி நினைத்துக் கொண்டிருக்கிறாய்? “என்றான்..
“உங்களை தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல ஆசைதான் ஆனால் அப்படி இல்லையே .! என்றாள் காலையிலேயே ஆரம்பித்து விட்டாயா ?என்று விட்டு அவளது நெற்றியோடு நெற்றி முட்டினான்”..
“போதும் உங்கள் கொஞ்சல் என்றாள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே டி என்றான் போதும் போதும் ஆது பள்ளிக்கு கிளம்ப வேண்டும்” அவனை சீக்கிரம் பள்ளிக்கு கிளம்புவதற்கு சமையல் செய்வதற்கான வேலையை பாருங்கள் என்றாள்..
நான் பார்த்துக்கொள்கிறேன் நீ அமைதியாக போய்க் குளித்துவிட்டு வா என்றான் உங்களுக்கு சொன்ன வேலையை மட்டும் செய்யுங்கள் டீ போட்ட பாத்திரத்தை விளக்குங்கள்.
என்ன சமைக்க வேண்டுமோ அதை முடிவு பண்ணுங்கள் என்று விட்டு காய்கறிகளை எடுத்துக் கொண்டு சென்று உணவு மேசையின் அருகில் உட்கார்ந்து இருக்கும் அரசியின் அருகில் வைத்து விட்டாள் வேறு எதுவும் சொல்லவில்லை..
அவரும் வேறு எதுவும் பேசாமல் காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார் பிறகு தீரனும் எழுந்து ஆது பள்ளிக்கு தேவையான பொருட்கள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார்.
“ஆது குளித்து முடித்து யூனிபார்ம் போட்டுக் கொண்டு வெளியில் வரும் பொழுது அவனுக்கு காலை உணவாக திருமணத்தின்போது மீதமிருந்த மாவை வைத்து பணியாரமும் மதியத்திற்கு அரசி அறிந்து கொடுத்த காய்களை வைத்து வெஜிடபிள் ரைஸ் வைத்தான்”
அப்பொழுது வரு தான் மதியத்திற்கு வெஜிடபிள் ரைஸ் ஆ என்று கேட்டாள் தேவா அமைதியாக இருந்தான் ஆது தான் அண்ணி இதில் என்ன இருக்கு நான் சாப்பிட்டு கொள்வேன் என்றான் ..
டேய் நான் உனக்காக சொல்லவில்லை நீ சாப்பிடுவதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை அத்தையும் ,மாமாவும் இத்தனை நாட்களாக திருமண வேலைகளில் பெரிதாக எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் ..
அது மட்டுமில்லாமல் தினமும் சாம்பார் என்று சாப்பிட்டு இருப்பார்கள் அவர்கள் உடல் நிலைக்கு இப்போது இது ஒத்துக் கொள்ளுமா என்றவுடன் தேவா சிரித்த முகமாகவே அவர்கள் இருவருக்கும் சாதம், ரசம் ,வெண்டைக்காய் பொரியல் செய்து விட்டேன் என்றான் ..
தீரனும் எங்கள் இருவருக்கும் ரசம் மட்டும் போதுமா என்றார் வரு வேறு எதுவும் பேசாமல் உங்களுக்கு ரசம் சாதம் இருக்கிறது என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை மாமா பேசிக்கொண்டே ஆதுவின் அருகில் உட்கார்ந்து அவனுக்கு பணியாரத்தை எடுத்து ஊட்டி விட்டாள் ..
அது மற்ற மூவரும் அமைதியாக பார்த்தார்கள் தேவா சமைத்த உணவு பதார்தங்களை ஆதுவின் லஞ்ச் பேக்குள் எடுத்து வைத்துவிட்டு அவனது புத்தகங்கள் அனைத்தும் பேகில் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்து கொண்டான்..
பிறகு” தீரன் தான் நீங்கள் இருவரும் காலை உணவிற்கு அங்கு செல்ல வேண்டும் என்றார் தேவா வருவைப் பார்த்தான் நான் ஆதுவை பள்ளியில் விட்டுவிட்டு அப்படியே வந்து விடுகிறேன் ,அவரும் அங்கு வந்து விடுவார் என்று உடன் டேய் முதன் முதலில் மறு வீட்டிற்கு வருவின் வீட்டிற்கு செல்கிறீர்கள் தனியாக செல்லக்கூடாது”…
ஒரே வண்டியில் தான் சொல்ல வேண்டும் ஒன்றாக என்றார் தேவா இப்பொழுது வருவை முறைதான் வரு சிரித்த முகமாக சரி மாமா மூவரும் ஒன்றாகவே செல்கிறோம் ஆதுவை பள்ளியில் விட்டுவிட்டு அப்படியே வீட்டிற்கு செல்கிறோம் என்றவுடன் என் வண்டியில்.செல்லலாம் என்றான் தேவா..
” வரு ஏன் என் வண்டியில் வந்தால் வண்டி பள்ளிக்கும் என் வீட்டிற்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறதோ” என்றாள் பிறகு அவனும் வேறு எதுவும் பேசாமல் நேரமா ஆகுவதால் அமைதியாக அவனது அறைக்கு சென்றான் ஏற்கனவே காலையில் குளித்து இருந்ததால் நன்றாக ஒரு உடையை மட்டும் அணிந்து கொண்டு வெளியில் வந்தான் ..
வருவும் எனக்கு இந்த புடவை எல்லாம் செட் ஆகாது என்றாள் ஆது லேசாக சிரித்து விட்டான் வரு ஆதுவின் தலையில் லேசாக தட்டிவிட்டு இந்த ஓவரா சிரிக்கிற வேலை எல்லாம் வச்சுட்டு கொன்றுவேன் எனக்கு என்ன வருமோ அதான் டா வரும் என்றாள்…
ஏன் நான் இப்போது போட்டிருக்கும் சுடிதார் நன்றாக இல்லையா ?என்றவுடன் அரசி முறைத்தார் தீரன் அமைதியாக தான் இருந்தார் . அரசி தான் நீ இவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஒரு நல்ல புடவையாக எடுத்துக் கொண்டு வா நான் கட்டி விடுகிறேன் என்றார்..
தேவா எதுவும் பேசாமல் அறைக்குச் சென்று வருவிற்கு என்று அவன் ஆசையாக எடுத்த புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து உணவு மேசையின் மீது வைத்தான்..
அரசி தேவாவை நின்று ஒரு நிமிடம் பார்த்துவிட்டு அந்த புடவையை எடுத்துக்கொண்டு அவரது அறைக்குள் புகுந்தார் ஆதுவும் சாப்பிட்டவுடன் வருவும் கை கழுவி கொண்டு அரசியின் அறைக்கு சென்றாள்…
பிறகு அவர் நேர்த்தியாக அவளுக்கு அந்த புடவையை கட்டிவிட்டு பிரிட்ஜில் இருக்கும் பூ எடுத்து கொண்டு வந்து வைத்து விட்டார் பிறகு இருவரும் பார்வதி புகைப்படத்தின் முன்பு நின்று விளக்கேற்றி வணங்கிவிட்டு பூஜை அறைக்கும் சென்று வணங்கினார்கள் ..
ஆதுவையும் அழைத்துக்கொண்டு ஆதுவை வருவின் ஸ்கூட்டியிலே அழைத்து சென்று பள்ளியில் விட்டுவிட்டு பிறகு அவர்கள் வரு வீட்டிற்கு செல்லலாம் என்று இருந்தார்கள்..
ஆது நடுவில் உட்கார வந்த பொழுது அரசி தான் நீ பின்னாடி உட்கார்ந்து கொள் என்றார் லன்ச் பேகும் ஸ்கூல் பேகும் நீ முன்னாடி வைத்துக் கொள் என்றவுடன் வருவும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக வண்டியை எடுத்தாள்…
வரு வண்டி ஓட்ட தேவா வருவிற்கு பின்னாடியும் தேவாவிற்கு பின்னாடி ஆதுவும் உட்கார்ந்து ஆதுவின் பள்ளி நோக்கி சென்றார்கள் பிறகு மூவரும் பள்ளி சென்று இறங்கிய பிறகு ஆதுவை பள்ளியில் விட்டுவிட்டு ஒன்றாக பாய் என்று ஒரு சொல்லிவிட்டு தங்களது வீடு நோக்கி வண்டியை விட்டாள் வரு …
“அவள் சிறிது தூரம் சென்று கொண்டிருக்கும் பொழுதே தேவா அமைதியாக இல்லாமல் அவளது தோளில் தனது தாடையை பதித்துக் கொண்டு அவளது காது மடல் உரச பேசிக்கொண்டு அவளது கழுத்தில் ஊதிக்கொண்டே வந்தான்” …
வருவும் நெளிந்து கொண்டே நாம் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறோம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாள் நான் ஒன்றும் செய்யவில்லையே என்றான் ..
ஓ ஒன்றும் செய்ய வில்லையோ என்று விட்டு அமைதியாக வாருங்கள் என்று வண்டியை நிறுத்தி அவனை முறைத்து விட்டு வண்டியை எடுத்தாள் அவன் அதன்பிறகு அவள் தோள்பட்டையில் இருந்து தனது தாடையை எடுத்தவன்..
“தனது கையை அவளது முன்பக்கமாக பிடித்துக் கொண்டு அவள் மேல் தனது பாதி உடம்பை சாய்த்துக் கொண்டு இருந்தான் வரு நெளிந்து கொண்டே வண்டியை ஓட்டியவள் இதற்கு மேல் தாக்கு பிடிக்காது என்று எண்ணி வேறு எதுவும் பேசாமல் நீங்கள் வண்டி ஓட்டுங்கள் என்று விட்டு கீழே இறங்கினாள்”…
சரிஎன்று விட்டு அவன் வண்டி ஓட்ட வரு பின்னாடி உட்கார்ந்து கொண்டாள் அவளுக்குமே ஆசைதான் ஆனால் அவன் செய்த ஒவ்வொன்றும் தனக்கு குறுகுறுத்தவுடன் அதுவும் ரோட்டில் இப்படியே என்று யோசித்தாள் …
பிறகு அவனை வண்டி ஓட்ட சொல்லிவிட்டு அவனது பின்னாடி உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக அவனது முகத்தைப் பார்த்து ரசித்தாள் அவனை பின்பக்கம் இருந்து லேசாக கட்டிக்கொண்டு அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் …
“மேடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று சிரித்து முகமாக கேட்டுக் கொண்டே தன்னை கட்டிக்கொண்டு இருக்கும் அவளது கையில் அழுத்தம் கொடுத்து விட்டு கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து சிரித்தான்.”.
ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுகள் என்று சிரித்து விட்டு அமைதியாக அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் தேவாவும் சிரித்துவிட்டு வருவின் வீட்டிற்கு சென்றார்கள்…
இருவரும் வரு வீட்டிற்கு செல்லும் போது வருவின் அப்பா, அம்மா சித்தி மூவரும் வெளியில் நின்று கொண்டிருந்தார்கள் இருவரும் வருவதை பார்த்து விட்டு சகுந்தலா தான் தனது அக்கா கலையிடம் ஏதோ காதில் பேச செய்தார்..
சகுந்தலாவால் இந்த மறு வீட்டு விருந்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என்பதை நாம் வரும் பதிவுகளை பார்க்கலாம்.
அன்புடன்
தனிமையின் காதலி
Varu deva santhosama irukanga
பிரச்சினை ஏன் வரப் போகுது. அதான், எதுவானாலும் சமாளிக்கவே வரு இருக்கிறாளே…!
Interesting
Good update