அப்படியே அவரும் தூங்கிவிட்டார் திரும்பவும் இப்படி வருடங்கள் ஓடியது தேவா நான்காம் வகுப்பில் இருந்ததால் திரும்பவும் ஒரு நாள் தீரனிடம் வந்து தனது தம்பி பாப்பா வேண்டும் என்று கேட்டான் …
அரசிக்கு இப்பொழுது கோபம் வந்துவிட்டது “நான் தான் ஏற்கனவே உன்னிடம் சொல்லி இருந்தேன் தானே அப்பறம் என்ன என்றார் “
அம்மா என்ன உங்களுக்கு உடல்நிலை சரியில்லை நன்றாக தானே இருக்கிறீர்கள் என்றான் “எனக்கு உடல்நிலை சரி இல்லை தான் என்னால் உனக்கு குட்டி தம்பி பாப்பா எல்லாம் பெற்று தர முடியாது என்றார் “
அம்மா அதெல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் நன்றாக தான் இருக்கிறீர்கள் எனக்கு தம்பி பாப்பா வேண்டும் என்றான் அவர் தீரனை பார்த்தார் …
“அவர் கோபமாக இருவரையும் முறைத்து பார்த்தவுடன் தேவாவை எங்கு அடித்து விடுவாரோ “என்று எண்ணி விட்டு அதெல்லாம் “வரும்போது வரும் டா தங்கம் இப்பொழுது எல்லாம் வராது அமைதியாக போ” என்று அனுப்பி வைத்து விட்டார் …
அதன் பிறகு அவன் எதுவும் கேட்கவில்லை “நான் இரவு அங்கு அறையில் தூங்குகிறேன் காலையில் எப்படி உங்கள் அருகில் இருக்கிறேன் என்று கேட்டான் தீரன் சிரிக்க செய்தார்”
அரசி அமைதியாக இருந்தார் அம்மா இனிமேல் நான் உள்ளே அறையில் தான் தூங்குவேன் என்னை இங்கெல்லாம் தூக்கிக் கொண்டு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு அமைதியாக படுத்து விட்டான் …
தீரனுக்கு லேசாக அரசியின் மீது காதல் துளிர் விட ஆரம்பித்தது என்று கூட சொல்லலாம் அரசிடம் அன்று இரவு பேச வந்தார் அரசி நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றார்..
தீரன் அரசியை பார்த்து ஏன் இவ்வாறு தேவா கேட்டுக் கொண்டிருக்கிறான் என்றார் “பள்ளியில் பசங்க ஏதாவது பேசி இருப்பார்கள் இல்லை அவர்கள் தம்பி பாப்பா உடன் விளையாடுகிறோம் என்று கூட சொல்லி இருப்பார்கள் அதனால் கேட்கிறான்” …
நான் அவனை மாற்றி விடுகிறேன் நீங்கள் அவன் மேல் கை வைத்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் இல்லை நான் உன்னிடம் பேச வேண்டும் என்றார் அரசி அமைதியாக நிமிர்ந்து தீரனை பார்த்தார்..
” பார்வதியை பார்த்துவிட்டு நான் பார்வதியை விரும்புவது உண்மைதான் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதும் என்றார் அரசி கை தூக்கி நீங்கள் எதுவும் பேச வேண்டாம் “
“உங்கள் மனதில் இப்பொழுது வரை பார்வதி தான் இருக்கிறாள் என்று எனக்கு தெரியும் நான் இல்லை என்பதும் தெரியும் நீங்கள் என்னை அவளுக்காக தான் திருமணம் செய்து கொண்டீர்கள்” என்றும் எனக்கு தெரியும்..
நான் உங்களை என்னுடைய கணவனாக இருங்கள் என்று சொல்லவில்லை தேவாவின் அம்மாவாக என்னை வாழ விட்டால் போதும் எனக்கு வேறொன்றும் வேண்டாம்” என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்து விட்டார் ..
தீரனுக்கு வருத்தமாகி போனது இதை தனது நண்பர்களிடமும் சொன்னார் அவர்கள் அனைவரும் தீரனை திட்டி தீர்த்து விட்டார்கள் “இத்தனை வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறீர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழவில்லையா” ..
அப்போது எதற்குடா அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தாய் உனது சுயநலத்திற்காகவா உன் மகன் வாழ வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணின் வாழ்க்கையை அழித்து விட்டாயா என்று கேட்டார்கள் ..
“தீரனுக்கு கஷ்டமாக இருந்தது சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதானே உண்மை தன்னை காதலித்தால் என்பதற்காகவும் தன் தோழியை தவறாக எண்ணி விட்டோம் என்பதற்காகவும் அவள் அவள் வாழ்க்கையை இழந்து விட்டு அவள் பெறாத குழந்தையை தன்னுடைய சொந்த குழந்தை போல் வளர்த்துக் கொண்டிருக்கிறாளே” …
அவரது வார்த்தையில் துளி கூட தவறில்லையே என்று எண்ணினார் அந்த வருத்தத்தில் வீட்டிற்கும் சென்றார் “அரசி என்று அழைப்பதற்கு பதில் பாரு ஒரு நிமிடம் என்றார் “….
” அரசி இதனை பார்த்து சிரித்துவிட்டு இப்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் உங்கள் மனதில் யார் இருக்கிறார்கள்” என்று “திரும்பத் திரும்ப இல்லாத ஒன்றை பற்றி பொய்யாக எனக்கு நம்பிக்கை தர முயற்சி செய்யாதீர்கள்”.
உங்கள் மனதில் இப்பொழுது வரை இருப்பது அவள்தான் உங்களால் கூப்பிடும் பொழுது கூட அவளை தான் கூப்பிட்டு முடிகிறது என்னை அல்ல நின்று விட்டு நகர்ந்தார் சிரித்துக் கொண்டே ஆனால் அவரது முகம் தான் சிரிக்க செய்தது மனதில் வலி இருக்கத்தான் செய்தது …
அழுது கொண்டே நகர்ந்தார் நான் உங்களை விரும்பியது உண்மை ஏன் இப்போதும் விரும்பி கொண்டிருப்பது உண்மை நான் அவளுடன் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருந்த போது உங்களை விட்டு ஒதுங்கி தான் இருக்க செய்தேன்….
“அவள் இப்போது இல்லை என்பதற்காக மட்டும்தான் என் மனதில் உங்களுக்கு இடம் கொடுத்து இருக்கிறேன் தவிர உடல் அளவில் ,மனதளவில் இன்னும் நீங்களும் நானும் கணவன் மனைவியாக வாழவில்லை” என்று எனக்கு தெரியும் என்று விட்டு நகர்ந்து விட்டார்…
” தீரன் திரும்பவும் பேச வந்தார் என்னமோ சொல்ல செய்தார் நீங்கள் பார்வதியிடம் வாழ்ந்த இரண்டு வருடங்களில் நான் உங்களை தொல்லை செய்யவில்லையே உங்களைப் பற்றி நான் யோசிக்கவும் இல்லை” என் மனதில் ஏதோ ஒரு மூளையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் …
அவள் இல்லாமல் நான் இந்த வீட்டிற்கு உங்களது மனைவியாக வந்த பிறகு நான் இல்லாதவலை நினைத்து கொண்டு உங்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்னால் உங்களை விட்டு விலகவும் முடியாமல் உங்களை மனதளவில் நேசிக்கிறேன் ..
அதற்காக அவளை நினைத்துக் கொண்டு என்னுடன் நீங்கள் வாழ விரும்பாதீர்கள் என்றார் தீரனுக்கு கோவம் வந்துவிட்டது என்ன டி நான் இப்போது இந்த உலகில் இல்லாதவளை நினைத்துக் கொண்டு உன்னுடன் வாழ நினைக்கிறேன் என்கிறாய் என்றார்…
பின்ன இல்லை என்று சொல்கிறீர்களா “உங்களால் அவளை நினைக்காமல் என்னுடன் இருக்க முடியுமா அவளை நினைத்துக் கொண்டு என்னுடன் உடல் அளவில் வாழ்வீர்களா? “இல்லை உங்களுக்கு உடல் அளவில் நான் தேவைப்படுகிறேனா என்றவுடன் ஓங்கி அறைந்து விட்டார் …
அரசி அமைதியாக தீரனை பார்த்தார் இப்படியே ஒரு மாதம் சென்றது தீரனுக்கு தான் கஷ்டமாகி போனது அவள் தவறாக ஒன்றும் சொல்லவில்லையே என்றும் எண்ணினார்…
தீரன் பார்வதியை புதைத்து இடத்திற்கு சென்று ரொம்ப நேரமாக அழுது கொண்டு இருந்தார் புலம்பி கொண்டிருந்தார் என்னை “நான் உடலில் அளவில் அவளை தேடுகிறேன் என்று சொல்கிறாள் இந்த பத்து வருடங்களில் அவளை நாடாதவன் இப்பொழுது நாடக போகிறேனா” என்ன பேச்சு பேசுகிறாள் என்று புலம்பி அழுதுவிட்டு இரவு ஒன்பதரை மணி போல் வீட்டிற்கு சென்றார்…
அங்கு வீட்டில் அரசி அழுது கொண்டிருந்தார் தீரன் வெகு நேரம் ஆகியும் இன்னும் வீட்டிற்க்கு வரவில்லையா என்று தீரன் வீட்டிற்கு வந்தவுடன் தீரனின் சட்டையை பிடித்துக் கொண்டு அவரை தாடையில் ஓங்கி அறைந்தார் …
எங்கு செல்கிறேன் என்று கூட சொல்ல மாட்டீர்களா எனக்கு எவ்வளவு பயமாக இருக்கிறது என்றார் ஏன் செத்து விடுவேன் என்று எண்ணினாயா என்றவுடன் திரும்பவும் அறைந்து விட்டார்..
மணி என்ன ஆகிறது எத்தனை முறை போன் போடுவேன் என்றார் போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது என்றார் தீரன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது என்றால் அருகில் உள்ளவர்களிடம் போன் வாங்கி கூட பேச முடியாதா என்றார்..
“எனக்கு தான் உங்கள் நம்பரை தவிர வேறு யாருடைய நம்பரும் தெரியாது உங்களுக்கு என்னுடைய நம்பர் தெரியும் தானே இன்று விட்டு அது கூட என்னுடைய நம்பர் தெரியுமா இல்லையா என்றார்” ..
தீரன் அரசியை முறைத்துவிட்டு அதெல்லாம் தெரியும் என்றார் “போய் குளித்துவிட்டு வாருங்கள் சட்டை முழுவதும் மண்ணாக இருக்கிறது என்று அனுப்பி வைத்தார்”
“அரசிக்கு அவர் எங்கு சென்று வருகிறார் என்று தெரிந்து இருந்தாலும் அமைதியாக இருந்தார்”…
தேவா என்றார் இவ்வளவு நேரம் உங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான் இப்போதுதான் போய் படுத்தான் என்றவுடன் குளித்துவிட்டு வந்து தேவவை பார்த்துவிட்டு தேவாவின் அருகில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவனது நெற்றியில் முத்தம் வைத்து விட்டு வரவேற்புரைக்கு வந்தார்..
அரசி சாப்பாடு எடுத்து வைத்தார் சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருந்த அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு அரசி படுக்கப் போகும் நிலையில் அரசி உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றார் அரசி அமைதியாக எழுந்து உட்கார்ந்தார்..
அரசி எழுந்து உட்கார்ந்தவுடன் தீரன் அரசி மடியில் படுத்து கொண்டார் அறைக்கு ஒரு மாதிரியாக இருந்தது அவரது தானாக தீரனின் தலையை கோதியது அரசி என்ன என்று கேட்டார் …
“நான் உடலளவில் தான் உன்னை நாடுகிறேன் என்று நினைக்கிறாயா என்று கேட்டவுடன் அரசிக்கு வருத்தமாக இருந்தது “..
அவருக்கும் தெரியுமே தீரன் அந்த அளவிற்கு மோசமானவர் இல்லை என்று அப்புறம் எப்படி உன்னால் அவ்வாறு என்னை சொல்ல முடிந்தது உண்மையாகவே” நீ என் மனதில் இருக்கிறாய் ஒத்துக்கொள்கிறேன்”
” நான் பார்வதியை நேசித்தது உண்மை இப்போதும் என் மனதில் அவள் ஓரத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள்”..
நீ சொல்வது போல் இல்லாதவளுக்காக நிழலாக இருப்பதை எண்ணி நிஜத்தை விட்டு விடுகிறானோ என்ற பயம் எனக்கு என்றார்…
அரிசி வேறு எதுவும் பேசாமல் சரி படுங்கள் என்றார் இல்லை அரசி என்றார் ஒன்றுமில்லை என்று விட்டு அரசி படுத்து விட்டார் தீரனுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது அவரும் அமைதியாக படுத்தார் …
ஒரு இரண்டு மணி நேரம் சென்றிருக்கும் “தீரனுக்கு தன் அருகில் யாரோ இருப்பது போல் உணர்ந்தவுடன் திரும்பி பார்த்தார் அரசி தன் அருகில் படுத்திருப்பதை பார்த்தவுடன் அவருக்கு லேசாக ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது”…
அமைதியாக அரசியை பார்த்தார் அரசி அமைதியாக படுத்துக்கொண்டு இருந்தார் தீரனும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார் ஆனால் அவரால் ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அமைதியாக இருக்க முடியவில்லை…
” என்ன இருந்தாலும் ஒரு ஆண்மகன் அல்லவா ஒரு பெண்ணின் உடல் தன் மீது உரசி கொண்டிருப்பதை உணர்ந்து விட்டு அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை “
“அவரது ஆண்மை அவரை தூங்கவும் விடவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் அரசி நகர்ந்து படு எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது” அதன் பிறகு நீ என்னை தான் குற்றம் சாட்டுவாய் என்றார் …
அரசி சிரித்து கொண்டே ஏன் நான் இங்கு தூங்குவதற்கு என்ன நான் என்ன உங்களை குற்றச் சாட்டினேன் என்று அமைதியாக படுங்க என்றார்..
” எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது இப்படியே நீ அருகில் உரசி கொண்டு படுத்தால் நான் அதன் பிறகு நமக்குள் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல என்றார்”
“அப்படி என்ன நடந்து விடும் என்று நானும் பார்க்கிறேன் என்று சிரித்து கொண்டே அவரது அருகில் இன்னும் நெருங்கி படுத்தார்”
” அரசி விளையாடாதே எதில் விளையாட வேண்டும் என்று இருக்கிறதே” என்றார்
“உங்கள் மகன் கேட்டான் தம்பி பாப்பா வேண்டும் என்று அது உங்கள் நினைவில் இல்லையா என்றவுடன் தீரன் அதிர்ச்சியாகி அரசியை பார்த்தார்”…
“அரசி கண்மூடி திறந்து தனக்கு சம்மதம் என்று சொன்னவுடன் தீரன் அரசியை கட்டி அணைத்துக் கொண்டு அவரது மடியில் படுத்துக்கொண்டு அழுதார் “
“நான் பாருவை விரும்பியது உண்மைதான் அதற்காக நீ எனது மனைவி இல்லை என்று ஆகி விடாதே” என்றார் “அரசிக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் தன்னையும் மீறி அவரது கைகள் தீரனின் தலையை கோதியது”..
தீரன் நிமிர்த்து அரசியை பார்த்தார் அரசியின் கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது அதன் பிறகு “தீரன் எழுந்து உட்கார்ந்து அரசியை கட்டி அணைத்தார்”
“அரசி தீரன் இருவரும் உடல்ளவில் கணவன் மனைவியாக அன்று முதல் வாழ ஆரம்பித்தார்கள் “
“இப்படியே அவர்கள் வாழ்க்கை சென்று இருக்கலாம் ஆனால் திரும்பவும் அவர்களது வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வர ஆரம்பித்தது அதுதான் அவர்களது வாழ்க்கையை மொத்தமாக அவர்களது வாழ்க்கையில் என்று கூட சொல்ல முடியாது தேவாவின் வாழ்வை மொத்தமாக திருப்பிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும்”…
அந்த நாள் வரும் வரை அப்படி என்ன ஒரு விஷயம் நடந்தது அந்த விஷயத்தால் தேவாவின் வாழ்க்கையே திருப்பி போட்டது என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அப்படி என்ன தான் நடந்ததுன்னு தெரியலையே…???
Apadi ena nadanthuchinu nalaiku sollinga pa
அப்படி என்ன நடந்து இருக்கும்
Nice epi