தீரன் மருத்துவமனை செல்லும் போது அரசிக்கு டிரிப்ஸ் ஏறி கொண்டு இருந்தது..தீரன் அரசியை பார்த்துவிட்டு அவர் மயக்க நிலையில் இருக்கிறார்கள் என்று உடன் மருத்துவரை பார்க்கச் சென்றார் ..தீரன் என்ன இது என்று கேட்டார் மருத்துவர் “தீரனை நன்றாக திட்டி எடுத்து விட்டார் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் மாசமாக இருக்கும் பெண்ணை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூட தெரியாது”…நீங்கள் கடைசியாக வந்து சென்ற பொழுது கூட நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அவர் கொஞ்சம் வீக்காக இருக்கிறார் என்று சொல்லி தானே அனுப்பி இருந்தேன் அது மட்டும் இல்லாமல் இந்த மாதத்திற்கான செக்கபிற்கு ஒரு வாரங்களுக்கு முன்பே வரவேண்டும்..ஒரு வாரம் ஆகியும் வராமல் இருக்கிறார்கள் இப்பொழுது என்றால் அவர் ஒரு வார காலமாக சாப்பிடவில்லை போல சுத்தமாக சத்து இல்லாமல் மயங்கி விழுந்து இருக்கிறார்கள் என்றார்…அரசி ஒரு வார காலமாக சாப்பிடவில்லை என்பதை டாக்டர் சொல்லி தான் தெரிந்து கொள்கிறார் தீரன் ஆனால் அவர் சாப்பிடுகிறார் இந்த ஒரு வார காலம் அவர் பார்க்கவில்லை பேசவில்லை என்றாலும் எப்படியும் சாப்பிட்டு இருப்பாள் என்று எண்ணினார் …ஆனால் அவள் ஒரு வாரமாக சாப்பிடாமல் இருந்திருப்பார் என்று அவர் எண்ணவில்லை அவர் தினமும் சமைத்து வைத்து விடுவார் தீரன் தினமும் சாப்பிட்டு விட்டு தான் அலுவலகம் செல்கிறார் தேவாவையும் தன்னுடன் உட்கார வைத்து சாப்பிட வைப்பார் …தேவா தினமும் சாப்பிடும் வேளையில் அரசி அம்மா இருக்கும் ரூம் கதவையே பார்ப்பான் அவர் சாப்பாடு செய்து வைத்துவிட்டு அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டு கொள்வார் முதல் இரண்டு நாட்கள் தேவா அடம் பிடித்தான் ..அம்மா வரவேண்டும் அம்மா வந்து ஊட்டி விடாமல் சாப்பிட மாட்டேன் என்று இனிமேல் அவளை அம்மா என்று அழைக்க கூடாது என்று சொல்லியிருந்தேன் அதை நினைவில் வைத்துக் கொள் என்று மகனை அடிக்க கை ஓங்கினார் …அவன் அதிர்ச்சியாக ஒரு பார்வை பார்த்த பிறகு அவனை கட்டிக் கொண்டு அழுதார் “நீயாவது என்னை புரிந்து கொள் டா எனக்கு இருப்பது நீ மட்டும் தான் என்னுடைய உலகம் நீதான் நீயும் அவளை நம்பி ஏமாந்து விடாதே என்று அழுதார்”…தனது தந்தையின் மனதை கஷ்ட படுத்த கூடாது என்பதற்காக அமைதியாக சாப்பிட்டான் இவ்வளவு நேரம் தீரனும் தேவாவும் பேசியது அறைக்குள் இருந்த அரசி கேட்க தான் செய்தார் இருவரின் பேச்சும் அவருக்கு கேட்கும் படியாக தான் இருந்தது அவருக்கு உள்ளுக்குள் வலி இருக்கத்தான் செய்தது…தேவாவின் பாசத்தை எண்ணியும் தீரனின் பேச்சை எண்ணியும் ஆனால் வெளியில் வந்து பேச அவருக்கு விருப்பமில்லை அமைதியாக விட்டு விட்டார் இந்த ஒரு வார காலங்களில் அவர் தண்ணீர் குடிப்பதோடு சரி மேற்கொண்டு எந்த உணவும் மேற்கொள்ளவில்லை…”தன் வயிற்றில் ஒரு குழந்தை இருக்கிறது என்ற எண்ணம் கூட அவருக்கு இல்லை ஒரு சில நேரங்களில் அவர் தன் வயிற்றை தடவிக்கொண்டு அழ செய்தார் நீ வேண்டும் என்பதற்காக தான் நான் உன் அப்பாவிடம் பொய்யாக போலியாக நடந்து கொண்டேன்” என்று சொல்கிறார் என்று அழுவார் …இப்படியே ஒரு வார காலம் சென்று இருந்தது தீரன் மருத்துவரை பார்த்துவிட்டு அரசியின் அருகில் வந்து உட்கார்ந்தார் அரசி ஒரு 2 மணி நேரங்களுக்கு பிறகு கண் விழித்தார் நர்ஸ் அவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கி கொண்டு வந்து தாருங்கள் என்றவுடன் முதலில் தேவா வேகமாக ஜூஸ் வாங்கிக்கொண்டு வந்தான் …அருகில் உள்ள ஹாஸ்பிடலில் இருக்கும் கேண்டினில் தீரன் எழுந்து உட்கார உதவி செய்ய போனார் அரசி அவரைக் கையை அமர்த்தி முறைத்து பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசவில்லை அரசி ஏதாவது இருந்தாலும் வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்றார் தீரன் ..அரசி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் தேவா வேகமாக அந்த ஜூசை ஓபன் செய்து தனது அம்மாவின் கையில் திணித்தான் அவர் அவனை அமைதியாக பார்த்துவிட்டு குழந்தை முன்பு எதுவும் பேசக்கூடாது என்பதற்காக அந்த ஜூஸை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தார் …”தம்பி பாப்பாவிற்கு பசிக்கும் இல்ல அம்மா நீங்க ஒரு வாரமாக சாப்பிடவில்லை என்று டாக்டர்கள் சொன்னாங்க ப்ளீஸ் மா என்ன நீங்க திட்டுங்க ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க “எனக்கு நீங்க வேணுமா என்று அவரது தோளில் சாய்ந்து கொண்டு அழுதான்…” அவருக்கும் கண்கள் கலங்கியது இருந்தாலும் அதை வெளி கட்டாமல் தன் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு அவனை பார்த்தார் அவன் அடிபட்ட பார்வை ஒன்றே பார்த்தான் அவனது பார்வை நான் என்ன செய்தேன் என்பது போல் இருந்தது”…அவர் லேசாக அவனைப் பார்த்து சிரித்து விட்டு எதுவும் பேசாமல் அந்த ஜூசை கையில் வைத்துக் கொண்டிருந்தார் தீரன் தான் சரி நீ எங்கள் இருவரிடமும் பேச வேண்டாம் அந்த ஜூசை குடி என்றார் அரசி அமைதியாக இருந்த உடன் வயிற்றில் குழந்தை இருக்கிறது அதையாவது நினைவில் வைத்துக்கொள் என்றார் …”வயிற்றில் குழந்தை இருக்கிறதா அது நான் உங்களை ஏமாற்றி என் வயிற்றில் சுமந்த குழந்தை தானே அதைப் பற்றிய கவலை உங்களுக்கு எதற்கு என்றார் “அந்த ஒரே வார்த்தையை தீரனை சாட்டையால் அடிப்பது போல் இருந்தது தன் உயிரை யாரோ அடித்து எடுப்பது போல் இருந்தது தீரனுக்கு அரசி பள்ளி சென்று வந்த விஷயம் தெரியாமல் இருந்திருந்தால் கூட இந்த வார்த்தை அவரை உயிரோடு கொன்று தான் இருந்திருக்கும் …தான் சொன்ன வார்த்தையே தன்னுடைய மனைவி வாயால் கேட்கும் போது அவருக்கு வலிக்கத்தான் செய்தது தன் கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் அமைதியாக அரசியை பார்த்துக் கொண்டிருந்தார்…அரிசிக்கு தீரனின் கண்ணீரை பார்க்க பிடிக்காமல் அமைதியாக இருவரையும் வெளியே செல்லுங்கள் என்று சொன்னார் தீரன் தேவாவை அழைத்தார் தேவா தனது தந்தையின் கையை உதறிவிட்டு நான் வரமாட்டேன் …”உங்களால் தான் என்னுடைய அம்மா இந்த நிலைமையில் இருக்கிறார்கள் நீங்கள் வேண்டுமானால் வெளியேறுங்கள் என்று விட்டு தனது தாயின் அருகில் அமர்ந்தான்””தீரன் தேவாவின் தலையை கோதி விட்டு தன் மனதிற்குள் எப்படியும் தன் மகன் அவளைக் சரி கட்டுவான் என்று எண்ணி நகர்ந்தார் ஆனால் அவர் நினைப்பது நடந்து விடாது என்பதை அவர் மறந்துவிட்டார் தேவா அமைதியாக அரசியின் கையைப் பற்றிக் கொண்டு அம்மா ப்ளீஸ் குடியுங்கள் என்றான்..” ஏன் உன் தம்பி பாப்பாவிற்காக வா என்றார் அவனை குற்றம் சாற்றும் பார்வையுடன் எனக்கு தம்பி பாப்பா முக்கியம் தான் ஆனால் அதைவிட நீங்கள் தான் எனக்கு முக்கியம் “அப்பா பேசியது சரி என்று நான் சொல்ல மாட்டேன்..ஆனால் எனக்கு இருவரும் தான் வேண்டும் என்னால் ஒருவர் பக்கம் பேசி இன்னொருவரை விட்டுத் தர முடியாது எனக்கு தம்பி பாப்பா கூட நீங்கள் வேண்டும் நீங்கள் சரியாக ஆனால் தான் தம்பி பாப்பாவும் சரியாக இருக்கும் நீங்கள் சாப்பிடுங்கள் நான் தம்பி பாப்பாவிற்காக சொல்லவில்லை என்று அமைதியாக அவரது கையை பிடித்துக் கொண்டு அழுது கொண்டே கூறினான் …அரசிக்கு கண்கள் கலங்கியது என்னதான் நான் வளர்த்த பிள்ளையாக இருந்தாலும் நான் வயிற்றில் பெறாத பிள்ளை தானே இன்று இப்படி இருப்பவன் நாளை தன் அப்பா சொன்ன பேச்சினால் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் …இனி இவன் தன்னை அம்மா என்று அழைப்பது சரியல்ல இன்று இப்படி பேசுகிறவன் நாளை வளர்ந்த பிறகு இல்லை பள்ளியில் அவனுடன் பயிலும் பசங்கள் பேசுவதை வைத்து அவன் மனம் மாறினால் என்னால் இதற்கு மேல் இன்னொரு அடியை தாங்க முடியாது …போதும் அவர் சொன்னது போல் என்னை சித்தி என்று இவன் அழைப்பதுதான் நல்லது அது அவனது எதிர்காலத்திற்கும் சரி என்னுடைய மன உளைச்சலுக்கும் சரி என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு அந்த ஜூசை முழுவதாக குடித்துவிட்டு நான் ஒன்று சொன்னால் கேட்பாயா என்றார் …நீங்கள் எது சொன்னாலும் கேட்பேன் என்றான் என்னை இனிமேல் அம்மா என்று அழைக்காதே அம்மா என்றான் கொஞ்சம் பொறு உங்க அப்பா சொன்னது போல் என்னை சித்தி என்று இனி மேல் சொல் என்றார்… அம்மா அப்பா பேசியது தவறுதான் அவர் கோபத்தில் பேசி விட்டார் உண்மை தெரியாமல் அதற்காக இப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்றான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உன் அப்பா சொன்னதில் பாதி உண்மைதானே..” நான் உன்னை பெற்றவள் அல்ல வளர்த்தவள் தானே உன்னை பெற்றவள் பார்வதி தான் அவள் இந்த உலகத்தில் இல்லை அதற்காக தான் நான் உன் அப்பாவை திருமணம் செய்து கொண்டேன்””அம்மா எனக்கு இந்த உண்மைகள் எல்லாம் ஏற்கனவே தெரியும் அது மட்டும் இல்லாமல் என்ன பெற்றது மட்டும் தான் பார்வதி அம்மா முழுக்க முழுக்க நான் உங்களுடைய வளர்ப்பு தான் என்றுமே நீங்கள் என் அம்மா தான்…”நீங்கள் பார்வதி அம்மா இல்லை என்பதற்காக அப்பாவை திருமணம் செய்து கொள்ளவில்லை நீங்கள் அப்பாவை திருமணம் செய்து கொள்ள முழுக்க முழுக்க காரணம் நான் தான் அதை நீங்களோ அப்பாவோ வேறு எந்த விதத்தில் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை”எனக்கு தெரியும் நீங்கள் அப்பாவை திருமணம் செய்து கொள்ள காரணமே நான் தான் என்று அப்படி இருக்கும் பொழுது இப்போது என்னை உங்களை சித்தி என்று சொல்ல சொல்கிறீர்களே என்றான்”அவருக்கு கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது சொன்னாலும் சொல்ல விட்டாலும் அவன் சொல்வது தானே உண்மை இவனுக்காக தானே நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் அவர் காதல் வேண்டும் என்று எண்ணவில்லையே”…இத்தனை வருடங்களுக்கு பிறகு அந்த மனுஷன் இப்போதுதான் தன்னை ஏற்றுக்கொண்டார் ஆனால் ஏற்றுக் கொண்டு தன் வயிற்றில் அவரது கருவையும் கொடுத்துவிட்டு அதைவிட பேரிடியை தன் தலையில் இறக்கி இருக்கிறார் என்று அஞ்சினார் …அடுத்த நொடி அவர் தேவாவின் கையை உதிரி விட்டு டேய் சொன்னால் உனக்கு புரியாதா பாசமாய் பேசினால் சரிப்பட்டு வர மாட்டாயா? ஒழுங்காக சொன்னதை கேளு இனிமேல் என்னை சித்தி என்று கூப்பிட்டால் கூப்பிடு இல்லை என்றால் என்னிடம் நீ ஒரு வார்த்தை கூட பேச வேண்டியது இல்லை…எனக்கு என்னையும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரியும் உன்னை நம்பியோ உன் அப்பாவை நம்பியோ நான் இல்லை என்று விட்டு திரும்பினார் …இதற்கு மேல் இவருக்கு எப்படி பேசி புரிய வைப்பது என்று தேவாவிற்கு தெரியவில்லை இவர் வழியிலே சென்று இவரை மாற்றுவோம் அவர் மனதில் இருக்கும் வலியால் இவ்வாறு பேசுகிறார் என் மீதான பாசம் அவரை மாற்றிவிடும் என்று எண்ணி சரி நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் என்றான் …அரசி சிரித்தார் இப்பொழுது கூட நீ என்னை எப்படி அழைத்தாய் என்று தெரிகிறதா என்றார் அவன் தன் கண்ணில் வழியும் கண்ணீரை புறங்கையால் தேய்த்துக்கொண்டே சரி சித்தி என்று அவரது அறையில் இருந்து வெளியே சென்றான் …வெளியே செல்லும்போது அவரை இருமுறை திரும்பி பார்த்து கொண்டே “நான் உங்களை மாற்றுவேன் நீங்களே உங்கள் வாயால் என்னை அம்மா என்று அழை டா என்று சொல்லும் வரை நான் உங்களை விட்டு ஒதுங்கி இருப்பேன்” …அதற்கான காலம் வரும்வரை காத்திருப்பேன் என்று எண்ணிக் கொண்டே நகர்ந்தான் ஆனால் சிறு வயதாக இருக்கும் தேவாவிற்கு புரியவில்லை அவர் மனதில் அடிபட்ட ஆழம் ரொம்பவே இருக்கிறது …அதிலிருந்து அவர் வெளியில் உடனடியாக வரமாட்டார் என்று “அவரே அவனை அம்மா என்று அழை என்று சொல்லும் காலம் இப்பொழுது அல்ல எப்பொழுதும் வராது என்பதை அவன் அறியவில்லை”..தேவா மனதிற்குள் எண்ணியது போல் அரசியே அவனை அம்மா என்று சொல் என்று சொல்வாரா இல்லை தேவாவின் கனவு கனவாகவே போய்விடுமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…அன்புடன்❣️ தனிமையின் காதலி❣️
Ivlo varusham achi inum manasu maralaye papom epo arasi manasu marumnu yarukaga marum endru
அப்படின்னா… இத்தனை வருசமாகியும் அரசி, இன்னும் தேவாவை அம்மான்னிு கூப்பிடச்
சொல்லலை போலவே…!!
Nice epi