Skip to content
Home » மகாலட்சுமி 101

மகாலட்சுமி 101

இனி தன்னுடைய அண்ணன் தம்பி இருவரையும் முறைத்து விட்டு அமைதியாக வேணி கையில் இருக்கும் தனது மகனை வாங்கிக் கொண்டு கயல் வீட்டில் இருக்கும் சோபாவில் சென்று அமர்ந்தால் பிறகு அவள் வேறு எதுவும் பேசவில்லை அவளுக்கு இருக்கும் வருத்தம் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கிறது…

ஏன் அவள் வருந்துவது போல் அவளுடன் பிறந்த மற்ற இருவருக்கும் இருக்காதா என்ன இருவருக்கும் இருக்கும் வருத்தத்தை யாருக்கும் தெரியாத அளவிற்கு உள்ளே வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள் பிறகு மகா மகிழ் இருவரும் கயலின் குழந்தையாக வாங்கி கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் ஓரிடத்தில் மறைவாக வைத்தார்கள் பிறகு உதிரன் முகிலன் இருவரும் எடுத்துக் கொண்டு வந்த அனைத்தையும் கயலின் குழந்தைக்கு போட்டு விட்டார்கள் ….

மகா மகிழ் இருவரும் எடுத்துக் கொண்டு வந்தது அதன் பிறகு கூட போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள் பிறகு குழந்தைக்கும் அன்று பெயர் வைத்தார்கள் கயல் நிலாவிடம் பெயரை சொல்ல சொல்லி கேட்டாள் நிலா குழந்தையின் காதில்  அகரன் அகரன் என்று மூன்று முறை சொல்லிவிட்டு சக்கரை தண்ணி வாயில் வைத்து விட்டால்..

பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு நல்ல முறையில் ஏழாங்காப்பும் இட்டு விட்டு அவர்களது வீட்டிற்கு வந்தார்கள் அதன்பிறகு தான் எழில் மகிழ் இருவரும் அவர்களது வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தது கூட இப்பொழுது மகிழ் வந்துவிட்டான் இப்படியே ஐந்து நாட்களும் சென்றது மகிழ் மகா இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள் அதை வீட்டில் உள்ள அனைவரும்  கண் குளிர பார்த்தார்கள்….

ஐந்து நாட்களுக்குப் பிறகு  காலை 6 மணிக்கு மேல் பேப்பர் திருத்தம் இடத்திற்குச் சென்றிருந்தவன் கிளம்புவது நாளை காலை 6 மணிக்கு மேல் இருந்தது அதற்கு முன்னாடி நாள் இரவே கிளம்பி விட்டான் அதிகாலை 3 மணி அளவில் தங்களது வீட்டிற்கு வந்து தனது தாய்க்கு போன் செய்தான் இவன் எதற்கு இந்த நேரத்திற்கு போன் செய்கிறான் என்று எண்ணிக்கொண்டே போன் எடுத்து என்னடா என்று கேட்டார் ….

அம்மா வெளியே வந்து கதவை திற என்றவுடன் அவருக்கு முழு தூக்கமும் கலைந்து விட்டது என்ன இந்த நேரத்தில் என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தார் தனது இளைய மகன் நிற்பதை பார்த்து விட்டு டேய் என்னடா காலை 6 மணிக்கு மேல் தானே கிளம்புகிறாய் என்று சொன்னாய் இப்பொழுது வந்திருக்கிறாய், இரவே கிளம்பி விட்டாயா? அப்படி என்னடா அவசரம் என்று கத்தினார்….


அதுதான் உன்னுடைய அண்ணன் கூட வந்து விட்டானே என்று கேட்டார் அவன் தனது தாயைப் பார்த்து சிரித்துவிட்டு என்ன சுந்தரி உனக்கு உன் தூக்கம் கலைந்து விட்டது என்று என்மேல் கோபமா என்று கேட்டு தனது தாயின் தாடையில் லேசாக தட்டி விட்டு மாடி படி ஏறினான் சுந்தரிக்கு கோபம் கொண்டார் அவளை பார்ப்பதற்கு வந்திருந்தால் அவளையே வந்து கதவு திறக்க சொல்ல வேண்டியது தானே என்று முனகினார் …

அம்மா நீ முனகியது கேட்டது போதும் போய் தூங்குமா என்று சொல்லிவிட்டு மேலே சென்றான் மேலே ஏறி சென்று கதவை தட்டாமல் மகிழுக்கு போன் செய்தான் மகிழும் போன் எடுத்து பார்த்துவிட்டு தனது தம்பி என்றவுடன் சரி இங்கு பேசினால் அவள் எழுந்து விடுவாள் என்று எண்ணி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் அவன் கதவை திறந்தவுடன் தனது தம்பி எழில் நிற்பதை பார்த்து விட்டு டேய் என்னடா இங்கு நிற்கிறாய் என்றான்….

எழில் சிரித்தான் நீ போன் பண்ண அவ தூக்கும் கலைந்து விடக் கூடாதுன்னு வெளியே வந்து பேசலாம் என்று இருந்தா இங்க என்னடா பண்ற இந்த நேரத்துல காலையில் தானே வரேன் என்று  சொன்னாய் என்றான் ஆனா நைட்டே கிளம்பனும்னு தோணுச்சு கிளம்பிட்டேன் என்று தனது அண்ணனிடம் பேசிக்கொண்டே அவனை லேசாக தள்ளிவிட்டு உள்ளே அவர்கள் இருக்கும் அறைக்குள் சென்றான்…

மகிழும் அவளை பார்க்காததால் இப்படி வந்து கொண்டிருக்கிறான் என்று எண்ணி விட்டு எழில் பின்னாடியே சென்றான்  எழில் மகாவின் அருகில் வந்து அவளது காதில் லேசாக ஊதி விட்டு லட்சு உன்னோட பர்த்டே பேபி வந்து இருக்கேன் என்றான் எழில் அவளது காதில் ஊதியதிலே எழுந்து விட்டால் மகா அமைதியாக  எழிலை பார்த்து சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தால் ….

மகிழ் இருவருக்கும் கேட்கும் படியே முனங்கினான் நான் செய்ய வேண்டியது எல்லாம் இந்த நாய் பண்ணிட்டு இருக்கு என்றான்  எழில் மகிழை பார்த்து சிரித்து விட்டு உன்னை யாராவது  பண்ண வேணாம்னு சொன்னாங்களா டா அண்ணா உன்னோட பொண்டாட்டி நீ பண்ண வேண்டியதுதானே நீ பண்றதுக்கும் நான் பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று சிரித்து கொண்டே சொன்னான்…

மகா சிரித்து விட்டால் உனக்கு சிரிப்பு வரும் டி உன்ன வெச்சி தான் இங்க சண்டையே போயிட்டு இருக்கு என்றான் எது காரணமே இல்லாமல்  சண்டை போட்டுக் கொண்டு நான் தான் காரணம் என்ற மாதிரியே பேச வேண்டியது என்று சொல்லிவிட்டு எழில் கண்ணை மூடினால் அமைதியா இருடா என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு இரு என்று சொல்லிவிட்டு அவனை விட்டு விலகி இரண்டு கையிலும் ஒவ்வொரு பொருள் எடுத்துக் கொண்டு வந்தால்…

முதலில் ஒரு கையை காண்பித்தாள் அவள் கண் திறக்க சொன்னால் அவன் கண்ணை திறந்தவுடன் ஒரு கையில் அவனது கையில் போடுவதற்கு கைச்செயின் மற்றும்  கழுத்தில் போடுவதற்கு சிறிய செயினும் இருந்தது அந்த இரண்டு செயினிலும்  வேந்தன் லட்சு என்று எழுதியிருந்தது அதை பார்த்து அவன் அந்த அளவிற்கு எல்லாம் இம்ப்ரஸ் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

மகாவை பார்த்து முறைத்தான் பிறகு இன்னொரு கையை காண்பித்தாள் அதில் சிறிதாக ஒரு நோட்டு போன்று இருந்தது வேகமாக அதை எடுத்து பிரித்தான் முதல் பக்கத்தில் சிறுவயதில் அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடியது குழந்தையிலிருந்து ஒவ்வொரு போட்டோவையும் அவள் தன் கையால் வரைந்த வரைபடம் அது மகாவிற்கு சிறுவயதில் இருந்தே நன்றாக வரைய வரும் ..

ஒவ்வொரு பக்கமாக திருப்பிக் கொண்டே வந்தான் ஒவ்வொரு பக்கத்திலும் இருவரும் இருப்பது போல் இருந்தது பிறகு கொஞ்ச நேரம் ஆக ஆக மகா நிறை மாதமாக இருப்பது போலும் எழில் கீழே அமர்ந்து  அவளது வயிற்றில் முத்தம் வைப்பது போலும் இருந்தது எழில் சிரித்தான் கடைசி பக்கத்தில் நடுவில் இனியும் இரண்டு பக்கமும் மகிழ் எழில் இருவரும் இருப்பது போலும் இனியின் கையில் ஒரு பெண் குழந்தை இருப்பது போலும் வரைந்து இருந்தால் …

அதை பார்த்தவுடன் எழில் கண்கள் கலங்கியது மகிழ் எழிலை பார்த்து விட்டு அப்படி என்ன இருக்கு அதில்  முதலில் அவள் நகை கொடுத்தால் அதை பார்த்து அமைதியாக இருந்து விட்டு இப்போது இந்த நோட்டு பார்த்து அழுகிறான் சந்தோஷப்படுகிறான் என்று தனது தம்பியின் கையில் இருக்கும் நோட்டை வாங்கி பார்த்தான் ….

அவனது கண்களும் லேசாக கலங்கியது டேய் அண்ணா அவ குடுக்குற நகை எனக்கு பெருசு கிடையாது இதுதான் பெருசு என்று சொல்லி தனது அண்ணனின் நெற்றியோடு  நெற்றி முட்டினால் பிறகு சரி நேரம் ஆகிறது தூங்குங்கள் என்று விட்டு வெளியே கிளம்பினான் டேய் எழுப்பி விட்டு விட்டு இப்பொழுது தூங்க  சொல்கிறாயா என்று மகிழ் கேட்டான்…..

எழில் திரும்பப் பார்த்துவிட்டு தூங்கவில்லை என்றால் லைஃப் என்ஜாய் பண்றா அண்ணா இது கூட வா சொல்லித் தருவாங்க இதுல வேர நீ அப்பாவாக போற என்று தனது அண்ணனை பார்த்து கண் அடித்து விட்டுச் சென்றான் டேய் என்று மகிழ் எழிலை அடிக்க வந்தான் எழில் சிரித்துக் கொண்டே இறங்கி விட்டான் …

எழில் இறங்கியவுடன் மகிழ் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு மகாவிடம் வந்தான் அடியே நீ அவனிடம் சொல்லி விட்டாயா என்று கேட்டான் மகா சிரித்தால் நான் தான் அன்னைக்கே சொன்னேனே மாமா அவனுக்கு நான் சொல்லாமலே புரியும் என்று சொன்னால் அவனக்கு இன்று பிறந்தநாள் டி வாழ்த்து சொல்லவில்லையா என்று கேட்டான்…

நாளை காலை சொல்லிக்கலாம் என்றால் எது நாளைக்கு காலையிலா  விடியவே போகுது டி என்றான் சரி விடிந்த பிறகு சொல்லிக்கலாம் என்று சொல்லிவிட்டு மகிழை பார்த்து கண்ணடித்தாள் என்ன டி அவன் சொல்லிட்டு போன உடனே அதை ஃபாலோ பண்ண முடிவு பண்ணிட்டீயா என்று கேட்டுக் கொண்டே மகிழ் அவளது காதில் லேசாக கடித்தான் ….

தோடா தம்பி சொல்லிட்டு போயிட்டாருன்னு இவரு அதை பாலோ பண்றாரு இவர் பேசுறாரு என்று மகிழ் கழுத்தில் கடித்தால் மயிலு என்றான் அவனுக்கு லேசா கிறக்கமாக இருந்தது மகா எழுந்து அவனது தாடையில் லேசாக கடித்து விட்டு மகா கொடுத்த  இரண்டையுமே எழில் இங்கே வைத்துக் கொண்டு சென்றதால் அதை ஒரு பக்கமாக எடுத்து வைத்துவிட்டு அவர்களது கட்டிலில் வந்து படுத்து கொண்டால் …

பிறகு அவர்களுக்குள் நடப்பது எதுவும் நமக்குத் தேவையில்லை காலை 6:00 மணி போல் மகா கீழே இறங்கி இருந்தால் வரவேற்பரையில் நின்று நிலா கத்தி கொண்டு இருந்தாள் சுந்தரி அமைதியாக உட்கார்ந்து இருந்தார் மகா கீழே இறங்கி வரும்போதே சிரித்துக் கொண்டே இறங்கி வந்தால் நிலா மகாவை பார்த்து விட்டு வா டி என்று கத்தினால் …

மகா சிரித்தால் எழில் மாமா நைட்டே வந்துட்டாரமே என்றால் மகா சிரித்துக்கொண்டே சின்ன திருத்தம் உன்னுடைய எழில் மாமா நைட்டு வரல  விடியற்காலையில் தான் வந்தான் என்றால் ஏன் டி என்கிட்ட சொல்லலா என்று கேட்டால் அவன் என்  கிட்டயே வரேன் என்று சொல்லவில்லை  என்ன கேட்டா எனக்கு எப்படி தெரியும் என்றால் நிலா தனது மகாவை பார்த்து திமிரு என்றால் மகா சிரித்து கொண்டே உனக்கா என்றாள் ….

உனக்கு டி என்று நிலா கத்தினால் அப்போது எழில் அவனது அறையில் இருந்து தனது காதை தேய்த்துக்கொண்டே சீ அக்காவும் தங்கச்சி சந்தை கடையில் சண்டை போடுவது போல நடு வீட்டில் நின்று கொண்டு  காலங்காத்தால சண்டை போட்டுட்டு இருக்கீங்க அறிவில்ல என்று கேட்டுக் கொண்டே வந்தான் இருவரும் எழிலை பார்த்து முறைத்துவிட்டு அவனை அடிக்க ஓடி வந்தார்கள் …

எழில் வேகமாக பூந்தோட்டத்திற்கு ஓடினான் பிறகு நிலாவே தனது அக்கா மாசமாக இருப்பதை உணர்ந்து விட்டு அமைதியாக நின்றாள் மகாவும் ஒரு நிமிடம் நிலா நிற்பதை பார்த்துவிட்டு அவள் தனக்காக தான் அப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று உடன் அவளது கையை பிடித்தால் பிறகு இருவரும் மெதுவாகவே வெளியில் வந்தார்கள் எழில் வெளியில் வந்து நிம்மதியாக பூந்தோட்டத்தில் இருக்கும் ஒரு பெஞ்சின் மீது அமர்ந்தான் …

இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் வந்து உட்காந்து அவனது தோலில் சாய்ந்து கொண்டார்கள் இதுக்கு தான் இவ்வளவு அலபறையா என்று கேட்டுக்கொண்டே சுந்தரி வந்தார் நிலா சிரித்துக்கொண்டே வேற என்ன சுந்தரி நினைச்ச மூணு பேரும் அடிச்சிட்டு இருப்பாங்க நாம் சந்தோஷமா போயிட்டு பார்க்கலாம் என்று எண்ணினாயா என்று கேட்டாள்….


ஆமாம் டி நீங்க எப்போ அடித்து கொள்வீர்கள் என்று தான் பார்க்கிறேன் பாரு என்று சொல்லிவிட்டு தனது கையில் எடுத்துக் கொண்டு வந்து ஸ்வீட்டை தனது மகனின் வாயில் திணித்தார் எழில் தனது  தாயைப் பார்த்து சிரித்தான் உனக்கு எனக்கு பிறந்தநாள் என்று காலையில் தெரியாத என்று கேட்டான் எனக்கு இன்று தான் உனக்கு பிறந்தநாள் என்று எனக்கு தெரியும் ஆனால் உனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நான் தான் உனக்கு முதலில் விஷ் பண்ணுகின்றேனா என்று கேட்டார்…

உன்னுடைய பிறந்த நாள் அன்று யாராவது உன்னிடம் பேச வந்தால் கூட அவர்களிடம் பேசாமல் நகர்ந்து விடுவாய் முதல் விஷ் உனக்கு மகா தான் பண்ண வேண்டும் என்று சொல்லிவிட்டு மகாவைப் பார்த்து முறைத்துவிட்டு தான் எடுத்துக் கொண்டு வந்த ஸ்வீட் பாக்ஸை மகாவின் கையில் திணித்து விட்டு மூவரையும் முறைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்…

நிலா வேகமாக எழுந்து மகா கையில் இருக்கும் ஸ்வீட் பாக்ஸில் ஒன்றை எடுத்து எழில்  வாயில் லேசாக திணித்து விட்டு சும்மா லைட்டா சாப்பிடக்கூடாது சரியா என்று சொல்லிவிட்டு மொத்த ஸ்வீட் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்  எப்படி சொல்லிட்டு போறா பாரு என்று மகா சிரித்தால் இவ்வளவு நேரம் நடந்த அலப்பறைகள் அனைத்தையும் மகிழ் மொட்டை மாடியில் இருந்து  பார்த்துக் கொண்டிருந்தான்….

எழில் மகா இருவரும் இருப்பதை  பார்த்து வருத்தம் கொள்வானா இல்லை சந்தோஷமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ….

அன்புடன்

❣️ தனிமையின் காதலி ❣️

1 thought on “மகாலட்சுமி 101”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *