நிலா வீட்டிற்குள் ஓடியதும் இந்த ஸ்வீட் பாக்ஸை ஆட்டைய போடுறதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா என்று மகா சொல்லி சிரித்தால் எழிலும் சிரித்தான் இவ்வளவு நேரம் மூன்று பேரும் செய்யும் அலப்பறைகளை மகிழ் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் ….
அவர்களை பார்த்து சிரித்துவிட்டு தனது கண்ணில் வழியில் கண்ணீரை துடைத்து விட்டு திரும்பினான் அங்கு வேணி மகிழையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழை பார்த்து சிரித்துவிட்டு என்ன அண்ணா ஆனந்த கண்ணீரா என்று கேட்டாள் அப்படியும் வைத்துக் கொள்ளலாம் வேணி என்று சிரித்துக் கொண்டே அவளது தோளில் லேசாக தட்டிவிட்டு நீ என்ன இவ்வளவு தூரம் என்று கேட்டான் …..
அண்ணா எழில் அண்ணனுக்கு பிறந்தநாள் என்று எனக்கு இப்பொழுது தான் தெரியும் சரி டா அதற்கு என்ன என்றான் அண்ணா நீங்க அண்ணா பிறந்த நாள்க்கு வேற ஏதாவது செய்வீர்களா என்று கேட்டாள் இதை நீ உன் கணவனிடமே கேட்டிருக்கலாமே என்று கேட்டவுடன் வேணி அவனைப் பார்த்து முறைத்தல் மகிழ் சிரித்து கொண்டே இல்லை வேணி வீட்டில் எல்லோரும் கோவிலுக்கு போயிட்டு வருவோம் மற்றபடி ஒன்றுமில்லை என்றான் ….
அண்ணா ஒன்றுமில்லையா இல்லை உங்களுக்கு தெரியாது என்று சொல்கிறீர்களா என்றால் நான் இந்த வீட்ல நிலாவோட பர்த்டே தவிர வேறு யாருக்கும் பெருசா இருந்தது இல்ல அதான் உண்மை என்று சொன்னான் வேணி சிரித்து விட்டால் அண்ணா மகா அண்ணி பிறந்தநாள் அன்று என்று கேட்டாள் எதுவுமே இல்லை வேணி அண்ணா மகா அண்ணிக்கு நீங்கள் எந்த சர்ப்ரைஸ் செய்ய மாட்டீர்களா என்று கேட்டாள்…
எதுவுமே செய்ய மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மகா மேலே ஏறி வந்தால் என்ன சர்ப்ரைஸ் வேணி என்று கேட்டுக் கொண்டே வேணி வேகமாக மகாவின் அருகில் சென்று உங்களுடைய பிறந்த நாள் அன்று மகிழ் அண்ணா உங்களுக்கு இதுவரை எந்த சர்ப்ரைஸும் செய்தது இல்லையா என்று கேட்டவுடன் மகா மகிழை பார்த்தால் என்ன அண்ணி நான் கேட்கிறேன் நீங்கள் அண்ணனை பார்க்கிறீர்கள்….
வேணி நீ கேட்டதற்கு உன்னுடைய அண்ணன் பதில் சொல்லிருப்பாரே அப்புறம் என்ன திரும்பவும் கேட்கிறாய் என்று கேட்டால் அண்ணி உண்மையாகவே அண்ணன் உங்களுக்கு எந்த சர்ப்ரைசம் செய்ததில்லை நான் கேட்கிறேன் என்பதற்காக அப்படி சொல்கிறீர்களா வேணி உண்மையாகவே அப்படி ஒன்று இருந்தால் தானே உன்னிடம் செல்வதற்கு அப்படி எல்லாம் இல்லை என்றால்…
அண்ணி உங்களுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்ததே இல்லையா எனக்கு மகிழ் மாமா கிட்ட அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்ததா என்று அமைதியாக இருந்தால் அப்போது எழில் தனது கையை தட்டிக் கொண்டே வந்தான் மூவரும் எழிலை பார்த்தார்கள் வேணி வேகமாகச் சென்று எழிலுக்கு கை கொடுத்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என்றாள் தேங்க்ஸ் வேணி என்று விட்டு என்ன வேணி பேச்சு போயிட்டு இருக்கு என்று கேட்டான்….
அண்ணா நான் பேசியதை கேட்டு விட்டு தானே வருகிறீர்கள் உங்களுக்காகவது பதில் தெரியுமா என்றால் எனக்கு தெரிஞ்சு தனிப்பட்ட முறையில் பண்ணி இருக்காங்களா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் மகிழ் நிலாவோட பிறந்தநாள் தவிர வேறு யாரோட பிறந்த. நாளுக்கும் வீட்டில இதுவரை இருந்தது இல்லை வீட்டில் இருக்கிற எல்லாரோட பிறந்த நாளுக்கும் கோவிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு பூஜை பண்ணிட்டு அன்னதான போட்டுட்டு வருவான்…
நிலாவோட பிறந்த நாள்க்கு என்ன செய்வார் ஸ்கூலுக்கு காலேஜ்க்கு போயிட்டு திரும்ப சாயங்கால வந்ததுக்கு அப்புறம் தூங்குற வரைக்கும் நிலா மகிழ் கூட தான் இருப்பா அப்போ நீங்கலாம் என்றால் வீட்டில் இருக்கிற எல்லாரும் தான் டா அப்போ நிலாவுக்கு கேக் வெட்ட மாட்டீங்களா நைட்டு ஒன்பது மணிக்கு நிலாவுக்கு கேக் வெட்டுவோம் ஏன் என்றால் நைட் 9 மணிக்கு தான் மேடம் பிறந்தாங்க என்று சிரித்துக் கொண்டே சொன்னான் …
உங்க பிறந்தநாளுக்கு நீங்க அண்ணி கிட்ட என்ன எதிர் பார்க்கிறிங்க அண்ணி பிறந்தநாள் அன்று அண்ணி உங்க கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க என்றான் தெளிவா சொன்னா அதற்கான பதிலை சொல்லலாமே வேணி அண்ணா யாரோட பிறந்தநாளுக்கு யாரும் விஷ் பண்றது சர்ப்ரைஸ் பண்றது இந்த மாதிரி கேக்குறியா அப்படின்னா இந்த வீட்ல போயிட்டு கீழ சுந்தரி கிட்ட கேளு உனக்கான முழு விளக்கமும் கிடைக்கும் என்றான்…
வேணி வேகமாக கீழே இறங்கினால் பிறகு மகிழ் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு கீழே இறங்கி விட்டான் எழில் மகாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று வந்தான் பிறகு இருவரும் ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள் மகா எழிலுக்கு புதிதாக அவனுக்கு பிடித்தபடியாக ஒரு டிரஸ் வாங்கி கொடுத்தால் வாட்ச் வாங்கி கொடுத்து வீட்டிற்கு வந்தால் …
நிலா வாசலையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தால் எழில் மகா இருவரும் நிலாவை பார்த்து சிரித்தாகள் நிலா இருவரையும் பார்த்து முறைத்தாள் பிறகு ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்கிரீம் எடுத்துக் கொண்டு வந்து நிலாவின் அருகில் வைத்துவிட்டு மகா மொட்டை மாடிக்கு ஏறிவிட்டாள் நிலா இப்பொழுது சிரித்துக் கொண்டே சாப்பிட்டால்…
வேணி சுந்தரியிடம் சென்று கேட்டால் என்ன வேணி என்று கேட்டதற்கு வேணியும் அவளது சந்தேகத்தை கேட்டவுடன் பதில் சொல்ல ஆரம்பித்தார் வீட்டில் உள்ள அனைவரின் பிறந்த நாளும் கொண்டாடுவோம் வேணி அவங்களுக்கு புடிச்சது எல்லாரும் செய்வோம் இதில் அனைத்திலும் மகிழ் அண்ணா கலந்து கொள்வாரா என்று கேட்டாள் வீட்ல கேக் வெட்ட நேரத்துக்கு மட்டும் வருவான் வேணி மத்தபடி வெளியே போகும்போது கோவிலுக்கு தவிர வேற எங்கும் வரமாட்டான் என்றார்…
சரிம்மா நான் ஒன்று கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே ஆனா மகா அண்ணிக்குன்னு அவர் தனியா எதுவும் செஞ்சது இல்லையா என்று கேட்டால் தனியா எதுவும் செஞ்சது இல்லையா என்றவுடன் கோதை சுந்தரியை பார்த்தார் காவேரி சுந்தரியை முறைத்தார் வேணி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அத்தை நான் கேட்டால் எனக்கு பதில் சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு ஒருத்தவர் இன்னொருத்தவரை பார்க்கிறீர்கள் …
ஒருத்தர் சிரிக்கிறீர்கள் ஒருத்தவங்க முறைக்கிறீர்கள் என்ன தான் அர்த்தம் என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவுடன் காவேரி சிரித்து விட்டார் வேணி மூவரையும் பார்த்து கொண்டிருந்தால் ஆனால் காவேரி வேணியை அமைதியாக பார்த்து விட்டு உண்மையாகவே மகிழ் மகாவிற்கு வீட்ல இருக்க எல்லாருக்கும் துணி எடுத்து கொடுக்குற மாதிரி தான் அவளுக்கும் எடுத்துக் கொடுப்பான்…
வீட்டில் எல்லாருக்கும் நகை எடுத்துக் கொடுக்கிற மாதிரி தான் அவளுக்கு எடுத்து கொடுப்பான் எங்களுக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் அவளுக்கு என்று தனியாக எதுவும் செஞ்சதில்லை அவள் பிறந்தநாள் அன்று இரவு 12 மணி வரை எழிலோடு தான் இருப்பா அது வீட்ல இருக்குற எல்லாருக்கும் தெரியும் மகிழ் இது வரை தனிப்பட்ட முறையில் எதுவும் செஞ்சது இல்ல எங்களுக்கு தெரிந்து என்றார் …
வேணிக்கு ஒரு மாதிரியாக இருந்தது அனைவரையும் அமைதியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டால் மாலை 6:00 மணி போல் வேணி மொட்டை மாடிக்கு மகாவை பார்க்கச் சென்றால் அண்ணி நான் ஒன்று கேட்பேன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே உங்களுக்கு மகிழ் அண்ணன் எதுவும் செய்ததில்லை ஆனால் நீங்கள் மகிழ் அண்ணண் இடமிருந்து இதுவரை எதையும் எதிர் பார்த்ததில்லையா என்று கேட்டால்….
மகா சிரித்தால் அண்ணி நீங்கள் சிரிக்கும் சிரிப்பில் சிரிப்புதான் இருக்கிறதா இல்லை வலி இருக்கிறதா என்று கேட்டால் அப்போதுதான் மகிழ் மாடிப்படி ஏறி வந்தான் வேணி பேசிக் கொண்டிருப்பதை கேட்டுவிட்டு வேணி அவ்வாறு சொன்னவுடன் வீட்டுக்குள் போகாமல் அமைதியாக இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டான் ..
அண்ணி உங்களிடம் தான் கேட்கிறேன் ஏன் அமைதியாக இருக்கீர்கள் என்று கேட்டால் என்னுடைய சிரிப்பில் வலி இருப்பது போல் உனக்கு தெரியுதா என்று கேட்டால் எனக்கு அப்படிதான் தோன்றுகிறது அண்ணி நீ நினைப்பது போலும் வைத்துக் கொள்ளலாம் வேணி என்றால் எனக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது வேணி என்றால் வெளியே நின்று கொண்டு இருந்த மகிழுக்கு சிறிது வருத்தமாக இருந்தது …
மகாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் மகா என்னதான் சொல்ல வருகிறாள் என்று கேட்க வேண்டும் என்று அமைதியாக இருந்தான் அண்ணி என்ன சொல்கிறீர்கள் புரியவில்லை என்று கேட்டாள் எனக்கும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கு வேணி நீ சொல்வது போல் மகிழ் மாமாவிடம் இந்த வீட்டில் உள்ள அனைவரும் எனக்கு அனைத்தும் செய்கிறார்கள் தான் நான் இல்லை என்று சொல்ல மாட்டேன் ….
ஏன் மகிழ் மாமாவும் எனக்கு அனைத்தும் செய்கிறார்கள் தான் ஆனால் கணவனாக காதலனாக என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை என்று சொன்னால் வேணிக்கு மூச்சு நின்று விடுவது போல இருந்தது மகிழ் கண்ணில் இருந்து நீர் வழிந்தது நான் இதுவரை இதை பற்றி யாரிடமும் பேசியதில்லை உன்னிடம் தான் முதல் முறையாக சொல்கிறேன் என்று சொன்னால் என்னை அண்ணி சொல்கிறீர்கள்….
இப்பொழுது இந்த மாதிரி நேரத்தில் வேண்டாம் அண்ணி நான் ஏதோ கேட்கப் போய் எங்கோ போய் முடிகிறது என்று சொன்னால் இல்லை வேணி நான் முழுசாக சொல்லி முடித்து விடுகிறேன் இதுவரை நான் என்னுடைய மனதில் இருப்பதை எழிலிடம் கூட சொன்னதில்லை இப்பொழுது உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது என்று சொல்லிவிட்டு அருகில் உள்ள தண்ணீரை எடுத்து குடித்தால் …
அண்ணி என்றால் வேண்டாம் ப்ளீஸ் வேணி சொல்லிவிடுகிறேன் ஆனால் அண்ணி நீங்கள் டென்ஷன் ஆக கூடாது என்றால் எனக்கும் தெரியும் வேணி நான் டென்ஷன் ஆக கூடாது என்று நான் டென்ஷனாகவில்லை அதுமட்டுமில்லாமல் நானும் வீக்காக இருக்கிறேன் என்னுடைய கர்ப்பப்பையும் வீக்காக இருக்கிறது என்றும் எனக்கு தெரியும் என்றால் ….
அப்பொழுதுதான் மகிழ் தோளில் ஒரு கரம் படிந்தது வேணி அதிர்ச்சியாகி மகாவை பார்த்தால் மகிழ் தனது தோளில் படிந்த கரம் யாருடையது என்று திரும்பிப் பார்த்தான் மகிழ் தோளில் கை வைத்தது யார் மகா மனதில் அப்படி எனன வருத்தம் இருக்கிறது எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி ❣️
மகிழ் தோளில் கை வைத்தது யார் என்று உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் இல் சொல்லுங்கள்…
INTERESTING