Skip to content
Home » மகாலட்சுமி 103

மகாலட்சுமி 103

மகிழ் தோளில் ஒரு கரம் படிந்த உடன் மகிழ் தனது தோலில் கை வைத்தது யார் என்று திரும்பிப் பார்த்தான் தனது தம்பி எழில் என்றவுடன் அவனது வாயில் கை வைத்து பேசாதே என்பது போல் கை வைத்தான் மெதுவாக டேய் அண்ணா என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டுவிட்டு எட்டிப் பார்த்தான் …

அங்கு வேனியும் மகாவும் பேசிக் கொண்டிருந்தவுடன் என்ன டா என்று கேட்டான் மகிழ் அமைதியாகப் பார் என்று மெதுவாக சொன்னவுடன் தனது அண்ணனின் தோளில் கை போட்டுக்கொண்டு எழிலும் அங்கு என்னதான் நடக்கிறது என்று அமைதியாக பார்த்தான் உங்களுக்கு யார் சொன்னார்கள் உங்கள் கர்ப்பப்பை வீக்காக இருக்கிறது என்று கேட்டால் வேணி…..

மகா சிரித்துக்கொண்டே நான் எப்படி இருக்கிறேன் என்று கூடவா எனக்கு தெரியாமல் போய்விடும் வேணி நான் வேறொரு மருத்துவரை பார்த்துவிட்டு வந்தேன் அவர்கள்தான் சொன்னார்கள் என்றவுடன் எழில் தனது தலையிலே அடித்துக் கொண்டான் மகிழ் எழிலை பார்த்தான் இதுவரை மகிழிடம் கூட சொல்லவில்லை அவள் கர்ப்பப்பை வீக்காக இருக்கிறது என்று தனது அண்ணனின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவுடன் டேய் அண்ணா என்றான் ….

அவன் அமைதியாக இரு என்றவுடன் அமைதியாக இருந்தான் சரி வேணி என்று உடன் சரி அண்ணி அப்படி என்ன உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்று கேட்டால் வேணி நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளாதே நான் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை என்று சொல்லிவிட்டு தன்னுடைய எதிர்பார்ப்புகளை சொல்ல ஆரம்பித்தால் …

எனக்கு மகிழ் மாமாவின் மீது நகை வாங்கி தர வேண்டும் புடவை வாங்கி தர வேண்டும் என்று இதுபோல் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் வாங்கித் தரும்போது எனக்கும் வாங்கி தருவார் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றாலோ இல்லை வெள்ளிக்கிழமையில் வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பூ வாங்கி கொண்டு வந்து தருவார் ….

அதே போல் பெரிதாக ஏதாவது விசேஷம் என்றால் புடவை வாங்கிக் கொண்டு வந்து தருவார் வீட்டில் உள்ள அனைவரின் பிறந்தநாளுக்கும் அவரால் முடிந்த சிறு சிறு பரிசை கொடுப்பார் இதில் நான் தனியாக எனக்கென்று அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் எதிர் பார்த்ததில்லை என்றாள் அப்புறம் என்ன அண்ணி உங்களுக்கு மகிழ் அண்ணனிடம் எதிர்பார்ப்புகள் இருந்திருக்கிறது என்று கேட்டால்….

என்னுடைய முதல் எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது என்றால் மகிழ் அப்படி அவள் என்ன எதிர்பார்த்து அதை நான் செய்யாமல் விட்டுவிட்டேன் என்று எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான் அப்படி என்ன மகா மகிழிடம் எதிர் பார்த்தால் அது கிடைக்கவில்லை என்று எழிலுமே  மகாவையே  பார்த்தான் அவர்கள் இருவரும் யோசித்ததை வேணி கேட்கவும் செய்தால் அப்படி என்ன அண்ணி நீங்க எதிர்பார்த்து அண்ணன் செய்யவில்லை ……

சொல்கிறேன் என்று விட்டு தண்ணீர் எடுத்து பருகிவிட்டு கூற ஆரம்பித்தால் வீட்டில் உள்ள அனைவரும் நினைப்பது போல் என் மகிழ் மாமா நினைப்பது போல் நான் அவரை இந்த குடும்பத்திற்காக விட்டுத் தர வேண்டும் என்று எண்ணவில்லை நான் அவரை யாருக்காகவும் விட்டுத் தர இப்பொழுது அல்ல எப்பொழுதுமே விரும்பவில்லை என்றால் ….

அண்ணி ஆனால் நீங்கள் அண்ணனை விரும்புவதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல வில்லையே என்று கேட்டால் ஆமாம் வேணி ஆனால் யாரும் என்னிடம் வந்து திருமணத்தைப் பற்றி பேசவில்லை அதேபோல் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமா என்று கேட்கவில்லை ஒன்றை நன்றாக நீ மட்டுமல்ல விட்டு உள்ள அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்….

யாராவது இதுவரை என்னிடம் வந்து உனக்கு இந்த திருமணத்தில் அதாவது மகிழ் மாமாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டிருக்கிறார்களா இல்லை உனக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்களா அப்படி ஒன்று எனக்கு நடக்கவில்லை நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே அண்ணி என்றால் ….

நான் உனக்கு புரியும் படியாகவே சொல்கிறேன்  வேணி என்னிடம் அம்மா வந்து  கயலுக்கு திருமணம் செய்யப் போவதாக சொன்னார்கள் அப்போது பெரியம்மா  மகிழ் மாமாவிற்கு முதலில் முடித்துவிட்டு அதன் பிறகு தான் கயலுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் அந்த நேரத்தில் பெரியம்மா கயலுக்கு தான் முதலில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் மகிழையே கயலுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள்…..

மகிழுக்கு கயலை தர வேண்டும் என்ற எண்ணம் தனது பெரியம்மாவிற்கு இருப்பது போல் என்னுடைய அம்மா வந்து என்னிடம் சொன்னார்கள் நானும் சரி என்னுடைய விருப்பத்தை பெரியம்மாவிடம் சொல்லலாம் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ணி அவர்களைப் பார்க்க அவர்களது அறைக்குச் சென்றேன் என்றால் எழில் மகிழ் இருவருமே இப்படி ஒன்று நடந்திருப்பது தெரியாததால் அதிர்ச்சியாகி இருவரது  முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டார்கள் ….

வேணி தான் மகாவிடம் என்ன அண்ணி சொல்கிறீர்கள் நீங்கள் உங்களது விருப்பத்தை சொல்லியுமா அத்தை கயல் அண்ணிவுடன் மகிழ் அண்ணனுக்கு திருமணம் ஏற்பாடு செய்தார்கள் என்று கேட்டால் நான் சொல்வதை முழுதாக கேள் வேணி நான் பெரியம்மாவை பார்க்க அவரது அறைக்குச் சென்றேன் அப்பொழுது பெரியம்மா கந்தன் அப்பாவிடம் அவரது விருப்பத்தை சொல்லிக் கொண்டிருந்தார் ..

அதாவது மகிழ் மாமாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்று மட்டும் தான் அவர் முதலில் எண்ணி இருக்கிறார் வீட்டில் அனைவரும் கயலை வைத்துக்கொண்டு மகிழ் மாமாவிற்கு திருமணம் செய்யக்கூடாது என்றவுடன் தான் கயலை மகிழ் மாமாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்று யோசித்து இருக்கிறார்கள் அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி இருக்கிறார்கள் …..

வீட்டில் உள்ளவர்களும் இதற்கு மகிழ் தான் விருப்பம் சொல்ல வேண்டும் என்றவுடன் மகிழிடம் விருப்பம் கேட்கலாம் என்றும் இருந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் வேலையில் தான் கந்தன் அப்பாவிற்கு கயலை மகிழ் மாமாவிற்கு தர வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருந்து இருக்கும் போல அதாவது தன்னுடைய மகளை தன்னுடனே வைத்துக் கொள்ளலாம்…

அதேபோல் தாங்கள் எடுத்து வளர்த்த மகிழ் தங்களது பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் அதை பெரியம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் பெரியம்மாவும் எனக்கு கூட இப்பொழுது தான் அந்த அதே போல் எண்ணம் வருகிறது என்று கந்தனப்பாவிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அவர்களது விருப்பத்தை கெடுக்க எனக்கு விருப்பமில்லை என்றால் ….

அதற்காக நீங்கள் உங்கள் விருப்பத்தை சொல்லாமல் வந்து விட்டீர்களா அண்ணி என்று கேட்டால் இரு வேணி சரி நான் சொல்லவில்லை என்றால் என்ன பெரியம்மா எப்படியும் மகிழ் மாமாவிடம் கேட்பார்கள் அப்பொழுது மகிழ் மாமா அவரது காதலை சொல்லிவிடுவார் என்ற நம்பிக்கையில் நான் அமைதியாக வந்து விட்டேன் என்றால் ….

இப்பொழுது எழில் மகிழைப் பார்த்தான் மகிழ் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தது பிறகு மகாவே பேச ஆரம்பித்தால் அதன் பிறகு நான் மாமாவை விட்டு லேசாக ஒதுங்க ஆரம்பித்தேன் வேணி ஆனால் நான் அவரை விட்டு ஒதுங்குகிறேன் என்று கூட அவர் உணராமல் இருக்கிறார் அந்த அளவிற்கு தான் நான் அவரை காதலித்தேனா என்று கூட யோசித்து இருக்கிறேன் …


இதைவிட நான் அவரை வற்புறுத்தி தான் அவரை காதலிக்க வைத்தேனோ என்று கூட யோசித்து இருக்கிறேன் இரண்டு மூன்று நாட்களில் மகிழ் மாமாவிடமும் வீட்டில் உள்ள அனைவரும் கேட்டார்கள் அப்போது உதிரன் அண்ணன் தான் வீட்டில் உள்ளவர்களிடம் எங்களது காதலை சொல்வதற்காக வாய் எடுத்தார் நான் அப்பொழுது உதிரன் அண்ணன் சொல்லச் சென்றவரை அவரது கையை பிடித்தேன் ….


அதற்கு காரணம் உதிர் அண்ணன் எனது விருப்பத்தை சொல்லக்கூடாது என்று மட்டும் தானே தவிர மகிழ் மாமா அந்த இடத்தில் எங்களது விருப்பத்தை சொல்வார்கள் என்று எண்ணி அவரையே பார்த்தேன் ஆனால் அவர் என்னை முறைத்து பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார் அப்பொழுதுதான் எனக்கு என்னுடைய முதல்  எதிர்பார்ப்பு பொய் ஆகியது….

நான் மகிழ் மாமாவிடம் எதிர்பார்த்தது அதுதான் என்னுடைய முதல் எதிர்பார்ப்பு மகிழ் மாமாவாக அவரது விருப்பத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல வேண்டும் என்று ஏன்  அண்ணி நீங்களும் உங்களது விருப்பத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி இருக்கலாமே நீ சொல்வது சரிதான் வேணி ஆனால் வீட்டில் உள்ள யாரும் என்னிடம் வந்து எனக்கு வேறொருவரை திருமணம் செய்து வைப்பதற்கோ இல்லை ….



நான் மகிழ் மாமாவை திருமணம் செய்வதற்கா என்னிடமா கேட்டார்கள்  இல்லையே அவரிடம் தானே கயலை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டார்கள்  அப்போது அவர் தானே அவருடைய விருப்பத்தை சொல்ல வேண்டும் அவர் சொல்லாமல் விட்டால் அப்பொழுது நான் அவரை உண்மையாக விரும்பவில்லையா இல்லை நான் அவரை தொந்தரவு செய்து விரும்ப வைத்து விட்டேனா என்று கேட்டால்….

மகிழுக்கு உடல் முழுவதும் நடுங்கியது அவனுக்குமே தெரியும் தன் மேல் தவறு இருக்கிறது என்று எழில் மகிழை இறுக்கி அணைத்துக் கொண்டான் மகிழுக்கும் இந்த அணைப்பு தேவையாக இருந்ததால் அமைதியாக இருந்தான்  வேணி மகா கையை இருக்கி பிடித்தால் ஒன்றும் இல்லை வேணி என்று சொல்லிவிட்டு தனது கண்ணீரை துடைத்துவிட்டு அப்பொழுது அவருக்கு இந்த குடும்பமா நானா என்று வரும் பொழுது இந்த குடும்பம் தானே பெரியதாக இருந்திருக்கிறது …


இந்த குடும்பம் வேண்டும் தான் வேணி நானும் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் அதற்காக என்னை தூக்கி எறிய எண்ணி விட்டார் தானே அது தானே உண்மை என்று சொல்லிவிட்டு தனது கண்ணீரை துடைத்துவிட்டு இது மட்டுமல்ல வேணி எனக்கு இன்னொரு எதிர்பார்ப்பு இருந்தது அதுவும் பொய் ஆகிவிட்டது என்றால் மகிழுக்கு வருத்தமாக இருந்தது….

மகா என்ன தான்  சொல்கிறார் என்று அமைதியாக தனது காதை தீட்டி விட்டு மகா பேசுவதை கேட்க ஆரம்பித்தால் வேணி அமைதியாக மகாவை பார்த்துக் கொண்டிருந்தாள் நீ சின்ன பிள்ளை இல்லை என்று எனக்கு தெரியும் வேணி உனக்கு திருமணமாகிவிட்டது என்பதற்காக நான் சொல்லவில்லை உனக்கும் வயதாகிவிட்டது பக்குவம் வந்துவிட்டது என்பதற்காக மட்டும்தான் சொல்கிறேன் எங்களது இருவரது வாழ்க்கையும் தொடங்கும் நேரத்தில் என்று விட்டு வேணியை பார்த்தால்….

வேணி எனக்கு புரிகிறது என்பது போல் கண் மூடி கண் திறந்தவுடன் அவர் அவரது விருப்பத்தோடு என்னுடன் இணைய வேண்டும் என்று எண்ணியிருந்தேன் என்னை அவர் அப்படி கொஞ்சம் வேண்டும் இப்படி கொஞ்சம் வேண்டும் அப்படி எல்லாம் நான் எண்ணவில்லை  ஆனால் நாங்கள் இருவரும் முதல்முறையாக இணையும் பொழுது அவர் எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக மட்டுமே என் உடன் இணைந்தார்….

அந்த இடத்தில் ஒரு பெண்ணாக என்னைப் பற்றி யோசித்துப் பார் நான் அவருடன் இருக்கும் போது எனக்கு விருப்பமில்லை என்று சொல்ல மாட்டேன் நான் அதன் பிறகு அவரை தப்பாகவும் பேசி இருந்தேன் அந்த வருத்தம் எனக்கு இப்பொழுதும் இருக்கிறது. இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் ஒரு நிமிடம் அவர் எனக்காக என்று அவருடைய விருப்பத்திற்காகவும் என்னுடன் இணையவில்லையே ….


எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்தான் என்னுடன் இணைந்தார் அந்த இடத்தில் கூட நான் அவருக்கு மனைவியாக இல்லையா காதலியாக தான் தோற்றுவிட்டேன் மனைவியாக கூட நான் தோற்று விட்டேனா என்று அழுதால் மகிழுமே  வெளியே அழுதான் தனது அண்ணனை உதறிவிட்டு எழில் வேகமாக உள்ளே வந்தான் மகிழ்  எழில் என்று கத்த கத்த உள்ளே வந்தான்….

மகா வேணி இருவரும் எழிலை பார்த்து விட்டு எழுந்து நின்றார்கள் எழில் வேகமாக மகாவை ஓங்கி அறைந்தான் எழில் அண்ணா என்று  வேணியும் எழில் என்று மகிழும் வேகமாக கத்தினார்கள் எழில் வேணி மகா இருவரையும் பார்த்து முறைத்து விட்டு சீ வாயை மூடி என்ன பேச்சு பேசுற அம்மா சாமி இவ்வளவு நாளும் இவ்வளவும் மனதுக்குள் வைத்துக் கொண்டுதான் அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாயா?


ரொம்ப நன்றி அவனை மொத்தமாக கொன்று விட்டாய் என்று கத்திவிட்டு தனது அண்ணனை பார்த்தான் வேணி மகா இருவரும் மகிழை அங்கு எதிர்பார்க்கவில்லை இருவரும் மகிழைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி மகிழையே பார்த்து கொண்டிருந்தார்கள் மகிழ் சட்டை முழுவதும் வேர்வையில் நனைந்திருந்தது கண்ணில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று வந்து கொண்டிருந்தது….


மகா பேசியதை மகிழ் தவறாக எடுத்துக் கொள்வானா மகா மகிழ் இருவருக்கும் இதனால் பிரிவு ஏற்படுமா எழில் மகா இருவருக்கும் இருக்கும் நட்பில் பிளவு ஏற்படுமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

எழில் தனது தோழிக்கு துணையாக நிற்பனா இல்லை தனது அண்ணனுக்கு துணையாக நிற்பனா ..


அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 103”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *